PDA

View Full Version : அந்த ஏழு நிமிடங்கள்



அமரன்
10-07-2010, 11:08 AM
அந்த ஏழு நிமிடங்கள்

2010 ஆம் ஆண்டு, ஜூன் மாதம், 30 ஆம் நாள், புதன்கிழமை, காலை எட்டு மணி. ரயிலுக்காகக் காத்துக்கொண்டு நின்றேன். அந்த நேரத்தில் பயங்கரச் சனமாக இருக்கும். அதனால ரயில்நிலையத்தில் இருக்கிற இருக்கைகளில் இருக்கவே இயலாது. 8.03 க்கு ரயில் வந்து நிற்கும் என்று ஒளியிலும் ஒலியிலும் சொன்னார்கள். காதில் ஒட்டி இருந்த புளூடுத் இசையையும் தாண்டி அறிவிப்பில் கவனம் செலுத்தினேன். சொன்னபடி ரயிலும் வந்தது.


ஆறுதலாக ரயிலில் நான் ஏறப் போகும் போது அவசரத்தை அணிந்து கொண்ட கணவாய் ஒன்று (கணவாய் ஜோசியத் தாக்கம் ?)… சாரி.. கனவான் ஒருவர் என்னை லேசாக இடித்தார். அவர் இடித்ததில் காதிலிருந்த புளூடுத் கழன்று விழுந்திட்டுது. லேசாக இடித்தத்துக்கே இப்படியா என்று ஏளனச் சிரிப்புச் சிரிக்க வேண்டாம். இடித்தவர் ஆபிரிக்க இனத்தவர்.


கீழே விழுந்த புளூடுத்தைத் தேடி எடுக்கவும் ரயில் கிளம்பவும் சரியாக இருந்தது. அடுத்த ரயில் ஏழு நிமிடங்களில் வரும் என ஏற்கனவே தெரிந்ததால் எந்த விதப் பதட்டமும், கோபமும் அடையாமல் அமைதியாக எதுவும் நடவாதது போல இடிதாங்கியாக காத்திருக்கத் துடங்கினேன் அடுத்து வரும் ஏழு நிமிடங்கள்.

கீதம்
10-07-2010, 11:21 AM
ம்! அப்புறம்?

மதி
10-07-2010, 11:44 AM
அப்போ தான் அவுகள பாத்தீங்களா..??? :D:D

பா.ராஜேஷ்
10-07-2010, 11:47 AM
ஏழு நிமிடங்கள் எப்படி போனது என்று ஹின்டாவது கொடுத்திருக்கலாமே!!? காத்திருக்கிறோம் சீக்கிரம் தொடருங்கள்..

govindh
10-07-2010, 12:48 PM
அந்த ஏழு நிமிடங்கள்....
அடுத்து என்ன நடந்தது...?

விரைவில் வந்து சொல்லுங்கள்...

அமரன்
10-07-2010, 01:19 PM
அப்போ தான் அவுகள பாத்தீங்களா..??? :D:D
எப்படிங்க கரெக்டாக் கண்டு பிடிசீங்க..

அமரன்
10-07-2010, 01:22 PM
கீதம்,ராஜேஷ்,கோவிந்த்..

மூவருக்கும் நன்றி.

இன்றைக்கு என்ன ஆச்சுன்னே தெரியவில்லை. ஏதாவது எழுதியே ஆகவேணும் என்று பிடிவாதமாக நிற்கிறத்து மனசு.

இந்தச் சம்ப்வம், ஒரு கவிதை, ஒரு கதை என்று எழுதத் துவங்கி விட்டேன். வழக்கம் போல கவிதை ஒரே மூச்சில் முடிந்து விட்டது. ஆனாலும் பதிக்கவில்லை. கதையும், நிகழ்வுப் பதிவும் அந்தரத்தில் தொங்குது.

மதி
10-07-2010, 01:51 PM
எப்படிங்க கரெக்டாக் கண்டு பிடிசீங்க..
இதுக்கெல்லாம் ஆள் வரணுமா..???

எல்லாம் வயசுக்கோளாறு தான்.. கடைசியில எப்படியும் வேற மேட்டர எழுதி என்னை மொக்கையாக்கப் போறீங்க..:eek::eek::eek::eek:

மதி
10-07-2010, 01:53 PM
இந்தச் சம்ப்வம், ஒரு கவிதை, ஒரு கதை என்று எழுதத் துவங்கி விட்டேன். வழக்கம் போல கவிதை ஒரே மூச்சில் முடிந்து விட்டது. ஆனாலும் பதிக்கவில்லை. கதையும், நிகழ்வுப் பதிவும் அந்தரத்தில் தொங்குது.
உங்களுக்கு அது தான்..
அதாங்க... அது..
கண்டிப்பா அது தான்... :icon_b:

சிவா.ஜி
10-07-2010, 03:07 PM
ஆமாமா...அதேதான்....!!!

சொல்லுங்க பாஸ்...அப்பால என்னா ஆச்சுன்னு....!!!

ஆதவா
10-07-2010, 03:09 PM
இது ஒரு நல்ல தொடக்கம், இப்படியான விஷயங்களை சில வரிகளிலேயே சொல்ல கொஞ்சம் கஷ்டப்படவேண்டும் ஏனெனில் வாசகன் ஒரு யூகத்தோடே படிக்கவேண்டியிருப்பதால் அந்த யூகங்களை உடைத்தெறிவதைப் போன்று இறுதி முடிவு இருக்கவேண்டும். உண்மையில் எனக்கு இதை வாசித்து முடித்த பிறகு ஒன்றுமே தோன்றவில்லை. ஆனால், இப்படி எழுத தொடங்கிய உங்களைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

மாதவராஜ் (http://mathavaraj.blogspot.com) பக்கங்களில் அவர் எழுதும் சில குறுங்கதைகளைப் பாருங்கள். “நச்” என்று இருக்கும்.

தொடருங்கள்..

த.ஜார்ஜ்
10-07-2010, 03:27 PM
ஏழாவது நிமிசத்தில் அடுத்த ரயில் வந்ததா?

கலையரசி
10-07-2010, 04:31 PM
அந்த ஏழு நிமிடங்களில் என்ன நடந்தது? உடனே எழுதுங்கள். தெரிந்து கொள்ள ஆவலாயிருக்கிறேன்.

அமரன்
10-07-2010, 04:33 PM
ஏழாவது நிமிசத்தில் அடுத்த ரயில் வந்ததா?

ஏழாவது நிமிடத்தில் ரயிலும் வந்தது. நான் காத்திருந்த அந்த ஏழு நிமிடங்கள் எம்மவர் வாழ்க்கையின் சில பக்கங்களைப் புரட்டிப் பார்த்து நகலெடுக்க உதவும் என்று தெரியாமலே ரயிலில் தொற்றிக் கொண்டேன். பதின்னான்கு நிமிடங்களின் பிறகு ரயிலிலிருந்து இறங்கி பஸ் ஸ்டாண்டை நோக்கிச் சென்றேன். பஸ் ஸ்டாண்டுக்கும் எனக்குமான இடைவெளி குறையக் குறைய அதற்கு நேர்மாறு விகிதசமனாக அவளின் முகத்தில் மலர்ச்சி கூடுவதையும் அவதானித்தேன்.

அவள் அழகாக இருந்தாள். கலைந்த அவள் கேசத்தைப் போல அவளுடைய அழகு கலைந்திருந்தது. கசங்கிய ஆடைகளைப் போல அவளது மனசு கசக்கப்பட்டிருந்தமையை உணரக் கூடியதாக இருந்தது. உட்குழிந்த அவள் விழிகளில் சோகம் தேங்கியிருந்தது. நான் பார்த்த யாழ்ப்பாணத்துப் பெண்களின் பாணியில் பாவாடை சட்டை அணிந்திருந்தாள். பக்கத்தில் பல இடங்களில் கீறுப்பட்ட பயணப்பெட்டி.

அவளை நான் அண்மித்ததும் அவளது கண்களில் கண்ணீர்த் திவலைகள் திரண்டன. ஆனாலும் அவளால் பேச முடியவில்லை. பேச அவளுடைய வளர்ப்பு இடங்கொடுக்கவில்லை என்றும் சொல்லலாம். ஏனெனில் அனைத்தையும் அவள் கண்கள் காட்டித்தந்தன.

‘என்னக்கா பிரசினை’ என்றேன். அவ்வளவுதான். அலறாத குறையாக அழுதாள். அழுது முடிக்கும் வரை காத்திருந்தேன்.

‘இந்த ஹொட்டலுக்கு எப்படி அண்ணை போறது’ - ஒரு அட்டையைக் காட்டிக் கேட்டாள்.

‘பஸ்ஸில போறதெண்டால் ரண்டு பஸ் எடுக்க வெணும். எப்படியும் அரை மணித்தியாலம் பிடிக்கும்’

திகைத்தாள். அமைதியாக என்னைப் பாத்தாள். எதையோ முன் வைக்க முயன்று தோற்றாள்.

‘ஏன்.. போகத் தெரியாதோ. இல்லாட்டா பஸ்ஸுக்குக் காசில்லையோ’ நான் கேட்டதும் அதற்காகக் காத்திருந்தது போலக் கொட்டினாள்.

‘காசிருக்கண்ணை. ஏஜென்சி போட்டுத்தந்த காசு இருக்கு.’ அவள் அதுக்கு மேல கனக்கச் சொன்னலும் ,அதெல்லாம் எனக்குத் தேவையானதாக இருக்கவில்லை.

‘ஏஜென்சி தந்த காசு’ என்பதே போதுமானதாக இருந்தது, அவள் கிட்டடியில்தான் பிரான்சுக்கு வந்திருக்கிறாள் என்று உறுதி செய்ய. பிறகெப்படி அவளுக்கு பஸ்ஸில் டிக்கெட் எடுக்கத் தெரியும். சரியா ஸ்டாண்டில் இறங்கி மற்ற பஸ் எடுக்க ஏலும். ஹோட்டலடைந்து கதைத்து செட்டிலாகத் தெரியும். இன்னும் பத்து நிமிடத்தில் வேலை இடத்தில் நான் இருந்தே ஆக வேண்டும். அவளை அம்போ என்று விட்டிட்டுப் போகவும் மனமில்லை. சட்டென்று ஒரு முடிவுக்கு வந்து அலைபேசியை எடுத்து விடுப்பு அறிவித்தேன் பணியிடத்துக்கு. தாமத அறிவிப்புக்கு முணுமுணுப்பை பெற்றேன்.

‘வாங்கோ நான் கூட்டிக்கொண்டு போறன்’

‘தாங்க்ஸண்ணை..’

பஸ் வர பத்து நிமிசம் இருந்தது. அவளிடம் பேச்சுக் குடுத்தேன்.

அமரன்
10-07-2010, 04:41 PM
இதுக்கெல்லாம் ஆள் வரணுமா..???

எல்லாம் வயசுக்கோளாறு தான்.. கடைசியில எப்படியும் வேற மேட்டர எழுதி என்னை மொக்கையாக்கப் போறீங்க..:eek::eek::eek::eek:

அனுபவம் நிறையவே பேசுது.:)

அமரன்
10-07-2010, 04:42 PM
உங்களுக்கு அது தான்..
அதாங்க... அது..
கண்டிப்பா அது தான்... :icon_b:

அதாவது..
உங்களுக்கு இருக்கிற அதுவேதான்..
அப்படித்தானே:smilie_abcfra:

அமரன்
10-07-2010, 04:46 PM
ஆமாமா...அதேதான்....!!!

சொல்லுங்க பாஸ்...அப்பால என்னா ஆச்சுன்னு....!!!

சொல்றன் பாஸ்.

ரயிலுக்காகக் காத்திருந்த நேரத்தில நீங்க சொன்னது ஞாபகத்து வந்துச்சுத் தெரியுமா.

நீண்ட நாளா ஏன் ஒன்றும் எழுதலை..

சூழலைக் கூர்ந்து கவனிப்பது குறைஞ்சுட்டுதோன்னு நினைச்சேன். அக்கம் பக்கம் ஆழமாப் பாத்தேன். செமை வெக்கை பாஸ் இங்க. பாத்ததை எழுதினால் ஜொல்லு ஓடும். அதனால குளிர் துவங்கிற வரை அங்கிட்டு இங்கிட்டுப் பாக்குறதில்ல.:frown:

கலையரசி
10-07-2010, 04:50 PM
அடடா! பாவம் அந்தப் பெண்! அவளது நல்ல காலம் உங்களை அவள் சந்தித்தது. அதற்காகத் தான் நீங்கள் அந்த முன் புகைவண்டியைத் தவற விட்டீர்கள் போலும். அதற்காகத் தான் அந்த ஆப்பிரிக்கன் உங்களை வந்து இடித்திருக்கிறான்.
வ*ழியில் பார்த்த முன் பின் தெரியாத ஒரு பெண்ணுக்காக, விடுப்பெடுத்துக் கொண்டு உதவ முன் வந்தது மிகவும் மனித நேயமுள்ள ஒரு செயல்.
உலகில் நல்லவர்கள் சிலரேனும் இருக்கிறார்கள் என்பதை அறியும் போது கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறது. அந்தப் பெண்ணின் கதையை முழுவதும் அறிய ஆவல். விரைவில் தொடருங்கள்.

அமரன்
10-07-2010, 04:50 PM
இது ஒரு நல்ல தொடக்கம், இப்படியான விஷயங்களை சில வரிகளிலேயே சொல்ல கொஞ்சம் கஷ்டப்படவேண்டும் ஏனெனில் வாசகன் ஒரு யூகத்தோடே படிக்கவேண்டியிருப்பதால் அந்த யூகங்களை உடைத்தெறிவதைப் போன்று இறுதி முடிவு இருக்கவேண்டும். உண்மையில் எனக்கு இதை வாசித்து முடித்த பிறகு ஒன்றுமே தோன்றவில்லை. ஆனால், இப்படி எழுத தொடங்கிய உங்களைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

மாதவராஜ் (http://mathavaraj.blogspot.com) பக்கங்களில் அவர் எழுதும் சில குறுங்கதைகளைப் பாருங்கள். “நச்” என்று இருக்கும்.

தொடருங்கள்..

உங்கள் கொடியில் காய்ந்ததுதான் எனக்கு அத்திவாரம். அவ்வவ்போது நீங்கள் கொடுக்கும் அடிகளும் எனக்கு ஆதாரம். இப்பவும் அப்படித்தான். நீங்க தந்த தொடுப்பில் போறேன். நீங்க சொன்ன பட்டனில் (தமிழ் என்ன) எழுத முயல்கிறேன்.

பா.ராஜேஷ்
10-07-2010, 04:58 PM
பாவம் அந்த பெண். முன்பின் அறிந்திராதவருக்கு லீவ் போட்டு ஹெல்ப் பண்ணும் உங்களது மனம் பாராட்டிற்குரியது (நிச்சயமா கிண்டல் இல்லீங்க)..

govindh
11-07-2010, 12:03 AM
நீங்க சொன்ன பட்டனில் (தமிழ் என்ன) எழுத முயல்கிறேன்.

'பொத்தான்' என நினைக்கிறேன்.

govindh
11-07-2010, 12:08 AM
நல்ல மனசு...!

அடுத்து என்ன....?
விரைவில் தொடருங்கள்.

மதி
11-07-2010, 02:01 AM
ஆஹா.. இப்போ புரியுது பாஸ்.. எனக்கு விடுப்பெல்லாம் அதிகம் இல்லேன்னு நீங்க சொன்னதன் பின்னணி.. பிறருக்கு உதவுவதற்காக விடுப்பெடுப்பது தப்பே இல்லை.. மேலும் தொடருங்கோண்ணே..

மதி
11-07-2010, 02:02 AM
அதாவது..
உங்களுக்கு இருக்கிற அதுவேதான்..
அப்படித்தானே:smilie_abcfra:
அதே அதே...:icon_ush::icon_ush:

ஓவியன்
11-07-2010, 06:29 AM
நம்மவர்கள் வெளிநாடுகளில் படும் இன்னல்கள் நாமறிந்தது என்பதால் உங்களது சம்பவப் பகிர்வில் சொல்லியும் சொல்லாமலும் விட்ட பல விடயங்கள் தெளிவாகப் புரிகின்றன அமரன். `ஆபிரிக்க இடி`யால் தாமதமான அந்த ஏழு நிமிடங்கள்தான் இந்த சம்பவப் பகிர்வுக்கு காரணமென்பதால், இந்த திரியின் தலைப்பும் சாலப் பொருத்தமானதே...!! :icon_b:

தொடருங்கள் முழு சம்பவத்தையும், நானும் தொடர்ந்து வரக் காத்திருக்கின்றேன்...!! :)

________________________________________________________________________________________________________________

ஒருவகையில் உங்களை நினைத்தால் பொறாமையாகவும் இருக்கிறது அமரன், பின்னே என்ன நினைத்த உடனேயெல்லாம் விடுமுறை எடுக்க முடிகிறதே உங்களது பணியில்.... :cool:

சிவா.ஜி
11-07-2010, 07:00 AM
அழகான எழுத்து...அதைவிட அழகு உங்க மனசு.

"எதையோ முன் வைக்க முயன்று தோற்றாள்"

சான்ஸே இல்லை அமரன்....அபாரம்.

தொடர்ச்சியை வடியுங்கள்.....

த.ஜார்ஜ்
11-07-2010, 08:00 AM
சுவாரசியம்.இனி திடுமென ஒரு திருப்பம் காத்திருக்குமே?

ஓவியன்
11-07-2010, 08:07 AM
இனி திடுமென ஒரு திருப்பம் காத்திருக்குமே?

அமரனும் அந்த பொண்ணும் இன்னும் பஸ்ஸில ஏறவேயில்லை அப்படியிருக்க எப்படி திடுமென ஒரு திருப்பம் வர்ரூம்ம்ம்ம்...?? :confused: :confused: :confused:



பஸ் வர பத்து நிமிசம் இருந்தது. அவளிடம் பேச்சுக் குடுத்தேன்.

த.ஜார்ஜ்
11-07-2010, 08:14 AM
அமரனும் அந்த பொண்ணும் இன்னும் பஸ்ஸில ஏறவேயில்லை அப்படியிருக்க எப்படி திடுமென ஒரு திருப்பம் வர்ரூம்ம்ம்ம்...?? :confused: :confused: :confused:

பஸ் ஏறாமல் இருந்தாலும் திருப்பம் அங்கேயே காத்திருக்கும் மாமூ..

ஓவியன்
11-07-2010, 08:47 AM
பஸ் ஏறாமல் இருந்தாலும் திருப்பம் அங்கேயே காத்திருக்கும் மாமூ..

என்னவோ சொல்லுறீங்க, எனக்கு ஒண்ணுமே புரியலை... :confused:

ஏதோ, அமரனுக்கு புரிஞ்சால் போதும். :D

செல்வா
11-07-2010, 09:15 AM
அமரனும் அந்த பொண்ணும் இன்னும் பஸ்ஸில ஏறவேயில்லை அப்படியிருக்க எப்படி திடுமென ஒரு திருப்பம் வர்ரூம்ம்ம்ம்...?? :confused: :confused: :confused:


பஸ் ஏறாமல் இருந்தாலும் திருப்பம் அங்கேயே காத்திருக்கும் மாமூ..

திருந்த(ம்ப)வே மாட்டீங்களா... ரெண்டு பேரும்?

த.ஜார்ஜ்
11-07-2010, 04:44 PM
ஏதோ, அமரனுக்கு புரிஞ்சால் போதும். :D

அமரன் என்ன சொல்றாருன்னு பார்ப்போம்

பூமகள்
12-07-2010, 07:52 AM
தலைப்பு கவர்ந்தே வந்தேன்.. பார்த்தால் உள்ளமும் கவரும் அமரன் அவர்களின் உள்ளம் சொல்லும் கவிதை எழுத்து. இன்னும் பலர் உள்ளத்தில் விருட்சமாகட்டும்.

அடுத்து என்னவாச்சோ என்ற பதட்டம் எமக்கில்லை.. நல்பாதுகாப்பு தான் கிட்டியாச்சே அங்கு. அவரின் முன் நிலை அறியவே ஆவல். தொடருங்கள். :)

அமரன்
13-07-2010, 10:52 PM
எழுதத் தூண்டும் அனைவருக்கும் நன்றி.

திருப்பம் எதுவும் இல்லை ஜார்ஜ்.

ஒரு நிகழ்வின் பதிவு எனலாம். இன்னும் கொஞ்சம் ஆழமாகச் சொல்வதானால் ஆவணப்பதிவு எனலாம்


தலைப்பு கவர்ந்தே வந்தேன்.. பார்த்தால் உள்ளமும் கவரும் அமரன் அவர்களின் உள்ளம் சொல்லும் கவிதை எழுத்து. இன்னும் பலர் உள்ளத்தில் விருட்சமாகட்டும்.

அடுத்து என்னவாச்சோ என்ற பதட்டம் எமக்கில்லை.. நல்பாதுகாப்பு தான் கிட்டியாச்சே அங்கு. அவரின் முன் நிலை அறியவே ஆவல். தொடருங்கள். :)
என்னது.. புதுசா இருக்கு.

ஆமாம்..

அவருடைய முன்னிலையை முன்னிறுத்தியே எழுதத் துவங்கினேன். சற்று நீட்டி முழக்கி விட்டேன்.

சில விசயங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் இந்தச் சம்பவம் என்னை அசைத்துப் பார்த்தது. ஆபிரிக்கன் இடி, தாமதமான அந்த ஏழு நிமிடம், சந்திப்பு... எதையோ எனக்குச் சொன்னதாகத் தோன்றியது. எது எனக் கண்டறியவும் முனைந்ததால் நீட்டி முழக்க வேண்டியதாயிட்டுது.

அமரன்
13-07-2010, 11:43 PM
`சாப்பிட்டீங்களா`

ஒரு கணம் இப்பவா கேக்கிறாய் என்ற மாதிரிப் பார்ப்பதாக எனக்குத் தோன்றியது. மறுகணம் அந்தத் தோற்றம் மறைந்தது. கணத்தில் அவள் மனபாவம் மாற்றினாளா? அல்லது அவளின் பசியை அதுவரை கவனிக்காததை அப்போதுதான் உணர்ந்து குறுகுறுத்தேனா என்று இன்றுவரை தெரியவில்லை.

`இல்லை.. வேண்டாம். முதல் ஹொட்டலுக்குப் போவம்` அவள் மறுக்க நான் உறுதியாய் நின்று அவளை பக்கத்தில் இருந்த கொஃபி பாருக்குக் கூட்டிக்கொண்டு போனேன். போனதும்தான் தாமதம் `பாத்ரூம் எங்கே இருக்கு` என்று கேட்டாள். அந்தக் கேள்வியில் அவளுடைய நிர்க்கதி நிலைமை எனக்கு நன்றாகவே புலப்பட்டது.

இலங்கையிலிருந்து பிரான்சுக்கு வந்த கதையை, அந்தக் கொஃபி பாரில் இருந்துதான் எனக்குச் சொல்லத் துவங்கினாள். அவள் சொல்லச் சொல்ல, இயற்கையாகவே எச்சரிக்கை உணர்வு அதிகம் பொருந்திய பெண்ணினத்தவள் முன் பின் தெரியாத என்னை எப்படி நம்பினாள்? அதுவும் அச்சரேகை துளியும் இல்லாமல் எப்படி..?!!என்ற கேள்விக் குறியும் ஆச்சரியக் குறியும் என்னை விட்டுப் பிரிந்து போயின.

2008 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்டுக் கொழும்பு வந்து ஐந்து மாதங்கள் தங்கி உள்ளாள். அவளுக்குப் பேசிய மாப்பிள்ளை அவளை ஒரு ஏஜென்சி மூலம் இலண்டனுக்குக் கூப்பிட ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார். அந்த ஏஜென்சி அவளை இந்தியா கொண்டு சென்று அங்கிருந்து கம்பியாவுக்குக் கூட்டிச் சென்றுள்ளார்.

கம்பியாவில் ஓரறை கொண்ட வீட்டில், ஏற்கனவே தங்கி இருந்த நான்கு ஆண்களுடன் அவள் தங்க வைக்கப்பட்டிருக்கிறாள். அந்த இளைஞர்கள் நல்லவர்களாம். அவளை அறையில் தங்க விட்டு தாம் ஹோலிலும் வெளியிலுமாக காலத்தைப் போக்கினார்களாம்.

ஆறேழு மாதங்கள் கடந்த நிலையில் மேலும் ஐந்து இளைஞர்கள் அந்த வீட்டுக்கு வர இவள் ஏஜென்சி தங்கி இருந்த வீட்டுக்கு மாற்றப்பட்டுள்ளாள். அவள் வீடு மாறிய தருணம் மாப்பிளையும் ஏஜென்சியும் முட்டிக் கொண்டு விட்டார்கள் காசுப் பிரச்சினையில். அவர்கள் சண்டையில் அவளுடைய பயணம் பணயம் வைக்கப்பட்டு ஊசலாடியிருக்கிறது. கூடவே அவள் உயிரும் மானமும்..


ஒரு கட்டத்தில் மாப்பிளை முடிவு எடுத்து பிரச்சினையை முடித்து வைச்சாராம். `உன்னோட அன்பா இருந்திட்டு அதை அம்மாட்டச் சொல்லிப் போட்டான் ஏஜென்சி. உன்னைக் கட்ட அம்மா சம்மதிக்கிறா இல்லை. என்னால ஒண்டும் செய்ய ஏலாது. வேணுமெண்டால் உன்னைப் பிரான்சுக்குக் கூப்பிட்டு விடுறன்` என்றாராம் அந்த ஆண்மகன்.

அவளும் அழுது, புலம்பி, அல்லற்பட்டு கடையில் சம்மதிச்சு பிரான்சுக்கு வந்து சேர்ந்திருக்கிறாள்.

பிரான்சில் தங்க இடமும் இல்லை. தாங்க எவருமில்லை.. திண்டாடி இருக்கிறாள். போலீசில் பிடிபட்டு, அவர்கள் அவளை அகதி முகாமில் ஒப்படைத்திருக்கிறார்கள். அகதி முகாமில் இரு ஆபிரிக்கப் பெண்களுடன் தங்க வைக்கப்பட்டிருக்கிறாள்.

அந்தப் பெண்களோ சித்திரவதைத் தேவதைகளாக இருந்துள்ளார்கள். படுக்கைக்கு இடம் கொடாதது மட்டுமல்லாமல் இயற்கை உபாதை ஆற்றக் கூட விடவில்லையாம்.

விடியலைத் தேடி வந்த அவளோ, விடிஞ்சும் விடியாத வேளையில் முகாம் முகாமையாளரிடம் போய் முறையிட்டுக் கதற அவரும் சில டெலிபோன் கோல்களுக்குப் பிறகு ஒரு ஹோட்டலின் விலாதைத்தைக் குடுத்து, நாளைக்குக் காலைல அங்க போகச் சொல்லி இருக்கிறார்.

முழுசாக ஒருநாளை எப்படிக் கழிப்பது என்று தெரியாமல் பேந்தப் பேந்த முழிச்சுக் கொண்டிருந்த போதுதான் என்னைச் சந்திச்சு இருக்கிறாள்.

ஆசுவாசமாக அவள் சொல்லி முடித்த போது, மேசையில் இருந்த மெல்லிய காலை உணவும் இரண்டு குவளை கொஃபியும் காலியாகக் கிடந்தது. என்னை ஏழரை பிடித்தது. `ஒரு நாள் முழுக்க எங்க, என்ன செய்யிறதெண்டு தெரியேல. ஹோட்டலுக்குப் போய்க் கேட்டால் ரூம் தருவாங்கள்தானே` என அவள் சுலபமாகச் சொல்லி விட்டாள். ஆனால் தருவாங்கள் என்பது ஒரு வீத நம்பிக்கைதான்.

கீதம்
14-07-2010, 12:55 AM
அக்னியின் 'பசுமை நாடிய பயணங்கள்' படித்திருந்ததால் அப்பெண்ணின் நிலை துல்லியமாய்ப் புரிந்தது. ஒரு ஆணைக்காட்டிலும் பெண்ணுக்கு கூடுதல் சங்கடங்கள்தான்!(இயற்கைப் பிரச்சனைகள் உட்பட)

அந்தப்பெண் சரியான ஆளைத்தான் இனம் கண்டுகொண்டிருக்கிறாள். நடந்த சம்பவத்தை அதன் விறுவிறுப்பு குறையாமல் பதிக்கும் அமரனுக்கு என் பாராட்டுகள்.

அன்புரசிகன்
14-07-2010, 01:46 AM
ஆ.............................ஹ்.......... அப்புறம்? என்ன நடந்தது? அவளுக்கு விசா கிடைச்சுட்டுதா???
நீர் ஒரு உத்தமபுருசரையா...

மதி
14-07-2010, 03:08 AM
கஷ்டமான நிலை தான்.. இப்படி அலைக்கழிக்கப்பட்டப் பெண் இறுதியில் உங்களிடம் வந்து கதை சொல்லியதில் ஆச்சர்யமில்லை. சரியான நபரைத் தான் சந்தித்திருக்கிறாள் வழிகாட்ட.. ஹோட்டலில் இடம் கிடைத்ததா?

பூமகள்
14-07-2010, 03:31 AM
அக்னி அண்ணா பட்ட இன்னல் கண் முன் வந்து போனது.. ஆயினும், ஒரு பெண்ணாய், பெண் பட்டிருக்கும் பாட்டை உணர முடிந்தது..

மாப்பிள்ளை தன்னையே நம்பி தனியே வரும் அபலையை இப்படி நட்டாற்றில் விட்டு செல்வது முறையோ என்ற கேள்வி நெஞ்சில் ஏறி நிற்கிறது.. பிரான்சில் யாருமற்ற ஊரில் இறக்கிவிட்டு அப்பெண் படும் பாடு... :( கடவுளாகவே அமர் அண்ணாவை சில கணம் அவர் நினைத்திருப்பார் என்று தோன்றுகிறது..

வேதனை நிரம்பிய கணம் எல்லாம், உங்களைச் சந்தித்த பின்னேனும் விலகியிருக்கும் என்று நம்புகிறேன். அடுத்து என்ன தான் செய்தீர்கள்.. அவர்களை திரும்ப தாயகம் அனுப்பினீர்களா?

அன்புரசிகன்
14-07-2010, 03:52 AM
மாப்பிள்ளை தன்னையே நம்பி தனியே வரும் அபலையை இப்படி நட்டாற்றில் விட்டு செல்வது முறையோ என்ற கேள்வி நெஞ்சில் ஏறி நிற்கிறது.. பிரான்சில் யாருமற்ற ஊரில் இறக்கிவிட்டு அப்பெண் படும் பாடு... :( கடவுளாகவே அமர் அண்ணாவை சில கணம் அவர் நினைத்திருப்பார் என்று தோன்றுகிறது..

எல்லாம் பேராசை தான். யோசித்துப்பாருங்கள். சட்டபூர்வமற்ற வகையில் தான் மாப்பிள்ளை இருக்கார். இந்த லட்சணத்தில் இவரும் போவது உசிதமற்ற செயல். இல்லாவிட்டால் அவருக்கு சட்டபூர்வ அனுமதி இருந்திருந்தால் மனைவியாக்கி சட்டபூர்வமாகவே அழைத்திருக்கலாம்.
---------------
எனது நண்பனின் தங்கை இவ்வாறு தான் பிரான்ஸ் போனார் அவரது கணவருக்கு விசா கிடைக்கும் முன் அவருக்கு கிடைத்துவிட பின்னர் அவரது கணவர் அவளின் ஸ்பௌஸ் விசாவில் இருக்கார். :lachen001:

எல்லாம் விதியின் விளையாட்டோ???:)

கலையரசி
14-07-2010, 02:59 PM
அக்னியின் பிரச்சினைகளைப் படித்த போது தான் இப்படியெல்லாம் கூட* நடக்கும் என்று தெரிந்து கொண்டேன். ஆனால் ஒரு பெண் இப்படிப்பட்ட சஙகடங்களில் மாட்டிக் கொள்வது எவ்வளவு ஆபத்து?
யாரும் இல்லாமல் பிரான்சு வந்து இறங்கி அவர் என்ன செய்வார்? உங்களைப் பார்த்திரா விட்டால் அவர் என்ன செய்திருப்பார்?
படிக்கவே மிகவும் வேதனையாக இருக்கிறது. தொடருங்கள் அமரன்.

பா.ராஜேஷ்
15-07-2010, 05:31 PM
ஒவ்வொருக்கும்தான் எத்தனை துன்பங்கள்.. நல்லவேளையாக நீங்கள் ரயிலை தவற விட்டர்கள்.. இல்லையெனில் அந்த பெண்ணுக்கு என்ன ஆகி இருக்கும்.. பாவம்.. உங்கள் இருவருக்கும் ஒருவரை மற்றவர் சந்திக்க வேண்டும் என்று விதி போலும்.. நன்றாக எழுதி உள்ளீர்கள்.. பாராட்டுக்கள்..

அமரன்
17-07-2010, 05:01 PM
ஹொட்டலில் விட்டதோடு இந்த விசயம் முடிந்திடாது என திட்டவட்டமாத் தெரிந்தது. அடுத்த கட்டங்களை உள்ளுக்குள் ஒழுங்குபடுத்தத் தொடங்கினேன். அவள் அதை வேறு விதமாகப் புரிந்து கொண்டாள் போல “ஏனண்ணை.. தரமாட்டினமா.. நாங்கள் காசு கட்டினாள் தருவினைதானே” என்றாள். “ சீச்சீ.. தருவினம். நீங்கள் ஏன் பயப்பிடுறீங்கள்” எனச் சொன்னாலும் எனக்குள் வேறு ஓட்டங்கள் நிகழாமல் இல்லை. “தராட்டால் வேற ஏதாவது செய்வம்” என அவளுக்குச் சொல்வது மாதிரி எனக்கே நான் சொல்லிக் கொண்டேன்.

நான் வெளிநாடு வந்த புதிதில் எதைப் பற்றியும் அலட்டிக்கொண்டதில்லை. அடுத்த கட்டம் என்ன என்பதே என் சிந்தையில் ஆர்பரித்ததில்லை. இயற்கை அழகுற அமைத்த கரைகளின் நடுவில் பாய்ந்து கொண்டிருக்கும் நதியினைப் போன்று சென்று கொண்டிருந்தேன் நான். ஆனால் அவள் அப்படி இல்லை. நிமிர்ந்து நின்ற கட்டடக் காடுகளை அண்ணாந்து பார்ப்பாள். அப்பாடா இயல்பு நிலைக்கு வந்து விட்டாள் என்று சந்தோசித்தால் அடுத்த நொடி “எப்பிடி அண்ணை விசா எடுக்கிறது” என்பாள். வாகனக்களைக் கண்டு வியப்பாள். சட்டென மாறி “தங்கைச்சியவையைக் கல்யாணம் பேசித்தான் கூப்பிட வேணும், ஏஜென்சி மூலம் கூப்பிடவே கூடாது” என்று நிம்மதியைக் கலைப்பாள். அந்தமாதிரியான மனநிலையை சாவு நடந்த வீடுகளில் முன்பு கண்டிருந்தேன்.


கோடைக்காலம் ஆதலால் ஹோட்டல் நிரம்பி வழிந்தது. ஸ்டார் அந்தஷ்த்து இல்லாத அந்தக் ஹோட்டலில் அந்தளவுக்கு சன நெருக்கடி இருக்கும் என்று கொஞ்சமும் நான் நினைக்கவில்லை. ஹொட்டல் முகாமைத்துவத்துடன் எவ்வளவு கதைச்சும் பயனளிக்கவில்லை.

ஒரு நாளைக்கு ஒரு வீட்டில் தங்க வைப்பது அப்படி ஒன்றும் கஷ்டமான காரியமில்லை. தவிர, பஸ்ஸில் அவள் கதைத்தலிலிருந்து ஹோட்டலில் தனிமையாக இருப்பதைக் காட்டிலும் பேச்சுத் துணையுடன் இருப்பது நல்லதெனவும் பட்டது. வீட்டில் தங்க வைப்பதுக்கான ஏற்பாடுகளைச் செய்யவோ என்றும் யோசித்தேன். அதில் ஒரு சிக்கல் இருந்தது.

அரச அகதி முகாம்களில் தங்காமல் வீடுகளில் இருப்போருக்கு, இலவச மருத்துவம், இலவசப் போக்குவரத்து போன்ற அத்தியாவசியமான மனிதாபிமான ரீதி உதவிகளையும், அகதி அந்தஷ்துக் கோரிகளுக்கான உதவித்தொகையும் வழங்கப்பட மாட்டாது.

அது மட்டுமில்லாமல் இல்லாமல் அகதி அந்தஷ்துப் பெறாத ஒருவர் இங்கே வாழ்வதென்றால் ஆகக் குறைந்தது 450 யூரோக்கள் தேவை. அகதி அந்தஷ்தைப் பெறுவதுக்கான நடவடிக்கைகளுக்கும் கட்டணம் செலுத்த வேண்டும். எனவே அரசாங்க முகாமில் இருப்பதுதான் அவளுக்கு உகந்தது. ஒரு நாள் வெளியே தங்கினால் எங்கே தங்கினாய் என்ற கேள்வி வரும். தொடர்ந்து அங்கேயே தங்கு என்ற கட்டளையும் வரும். சலுகைகளுக்கு தடா போடப்படும்.

அதனால் வீட்டில் அவளைத் தங்கவைக்கும் எண்ணத்தை வேரோடு பிடுங்கினேன். ஹொட்டலிலும் இடமில்லை. அப்போ அவளை எங்கேதான் தங்க வைப்பது...

நான் அந்த நினைப்பில் இருக்க அவள் பழையபடி உச்சத்தில் ஏறினாள். ஒப்பாரி வைக்காத குறை. போற வாற எல்லாரும் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள். பெண்கள் மீதான வன்முறைக்குக் கடுமையான தண்டனைகள் உள்ள நாட்டில் தெரு ஓரத்தில் அழுகையுடன் உள்ள பெண்ணுடன் என்னைப் காண்பவர்கள் எவராவது போலீசுக்கு தகவல் தெரிவித்தால் என்ற பயம் கவிந்தது.

ஒரு நொடி அவள் மேல் எரிச்சல் வந்தாலும் மறு நொடி அது காணாமல் போய் விட்டது. அவளைக் கூட்டிக் கொண்டு அவளுக்கு ஹோட்டல் ஏற்பாடு செய்த அகதிகள் நலன் கவனிக்கும் அலுவலகத்துக்குச் சென்றேன்.

எனக்குத் தெரிந்த அரை குறைப் பிரெஞ்சுப் பாசையில் அங்கிருந்தவர்களை அணுகுவது பெரும்பாடாக இருந்தது. ஆங்கிலத்தில் பேசலாம் என்றால் ஆங்கிலம் கிலோ என்ன விலை என்றார்கள். அகதிகள் நல வாரியத்தில் சர்வதேச மொழி தெரிந்தோரைப் வேலைக்கு நியமிக்காத அரசின் மீது ஆத்திரம் பீறிட்டது. ஒருவாறு பேசினால், “வேறு எந்த ஏற்பாடும் செய்ய முடியாது, முன்பு விட்ட முகாமில் அன்று தங்குமாறு பணித்தார்கள். முடியாவிட்டால் உங்களுடன் இன்று தங்க வையுங்கள் என்றார்கள்.

ஆஹா... அடிக்கிறாங்கப்பா ஆப்பு என்று எண்ணியவாறு, அவள் எனக்கு சொந்த பந்தமில்லை, வீதியில் அநாதராவாக்ல நின்றதால் உதவினேன், என்று என் மறுப்பை வலுவாகச் சொன்னேன். அவர்களோ எதுக்கும் மசியவில்லை.

கடைசியில் வேறு ஒரு பிராந்தியப் பிரிவுக்கு அவளுடைய கோப்பை மாற்றித் தருமாறு கேட்டேன்.. தட்டிக் கழிப்பதுக்குப் பல் சாக்குப் போக்குகளைச் சொன்னார்கள். அவர்களையும் குறை சொல்ல முடியாது. அந்தப் பெண்ணை என்னுடன் அனுப்ப முழுமூச்சாக முயல வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு. தெரிஞ்ச ஒருவருடன் எந்த அகதியாவது வந்தால் அவ்த அகதியை அந்தத் தெரிந்தவருடன் எப்படியாவது அனுப்பி விடுங்கள் என்பதுதான் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் கட்டளையாக இருக்கும். அப்படி இல்லாவிட்டால் தங்குமிடமில்லாத அகதிகள் விவகாரங்களைச் சமாளிக்க முடியாது. ஏகப்ப இழுபறிக்கு பிறகு நான் கேட்ட பிராந்தியத்துக்கு அவளுடைய பைலை மாற்றித் தந்தார்கள். எனக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.

அந்தப் பிராந்தியத்தில் உள்ள முகாமில் எனக்குத் தெரிந்த பெண்ணொருவர் உள்ளார். அவரிடம் இவளை ஒப்படைத்து விட்டால், தங்குமிடம், அகதி அந்தஷ்துக் கோரிக்கை நடைமுறைகள், இன்னபிற எல்லாமே சுமுகமாகி விடும்.

இன்று வரை என் அந்த எண்ண` ஈடேறிக் கொண்டே உள்ளது.

மதி
17-07-2010, 05:49 PM
உண்மையிலேயே நெகிழ்ச்சியாக உள்ளது அமரன். சட்டென யாருக்கும் உதவ மனம் வராது. அதுவும் பரபரப்பான காலைவேளையில் அலுவலகத்திற்கு செல்லும் போது யாரேனும் அடிபட்டு கிடந்தால் கூட கடந்து செல்லும் காலகட்டத்தில் அந்த பெண்ணுக்காக இத்தனை தூரம் அலைந்து முகாமில் தங்க வைக்க பாடுபட்டிருக்கிறீர்கள்.. உண்மையிலேயே அந்த பெண் உங்களை சந்தித்திருக்கா விட்டால் என்னன்ன நடந்திருக்குமோ? உங்களை இடித்து முன் சென்ற ரயிலில் ஏறவிடாமல் தடுத்தவருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்..!!

பா.ராஜேஷ்
17-07-2010, 06:40 PM
இன்னும் ஈடேறி கொண்டே உள்ளதா!! என்னத்த சொல்ல!!! எல்லா நாட்டு அரசாங்க அதிகாரிகளும் இப்படித்தானா!!? அவர்கள் கையூட்டு பெற மாட்டார்களா!!?? நீங்கள் கூறுவதிலிருந்து அவர்கள் கையூட்டு பெறுவதில்லை என்றே தோனுகிறது..

அமரன்
17-07-2010, 09:13 PM
உண்மையிலேயே நெகிழ்ச்சியாக உள்ளது அமரன். சட்டென யாருக்கும் உதவ மனம் வராது. அதுவும் பரபரப்பான காலைவேளையில் அலுவலகத்திற்கு செல்லும் போது யாரேனும் அடிபட்டு கிடந்தால் கூட கடந்து செல்லும் காலகட்டத்தில் அந்த பெண்ணுக்காக இத்தனை தூரம் அலைந்து முகாமில் தங்க வைக்க பாடுபட்டிருக்கிறீர்கள்.. உண்மையிலேயே அந்த பெண் உங்களை சந்தித்திருக்கா விட்டால் என்னன்ன நடந்திருக்குமோ? உங்களை இடித்து முன் சென்ற ரயிலில் ஏறவிடாமல் தடுத்தவருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்..!!

மதி..

இதில் என் பெருந்தன்மை, இரக்கக்குணம், உதவுங்குணம் என்று எதுவுமில்லை. அந்தளவுக்கு நல்லவனோ, பெரியவனோ இல்லை நான்.

எங்கள் வீட்டை முன்னேற்ற, எங்கள் வீட்டிலிருந்து முதன் முதலாக வெளிநாடு வந்தது ஒரு பெண். அவங்க எந்த|ளவு கஷ்டப்பட்டிருப்பாங்க என்று இங்கே வந்த பிறகு எனக்கும் தெரிந்தது. அத்துடன் ஈழத்தவர் ஒவ்வொருவரும் இந்த மாதிரி ஏதாவது ஒன்றைச் சந்திக்காமல் வெளிநாடு கண்டிருக்க மாட்டோம்.

இதனாலேயே இப்படி எல்லாம் செய்யத் தூண்டியதே தவிர நல்ல மனசுக்காரன், தங்கமனசுக்காரன் இல்லை நான்.

அமரன்
17-07-2010, 09:20 PM
இன்னும் ஈடேறி கொண்டே உள்ளதா!! என்னத்த சொல்ல!!! எல்லா நாட்டு அரசாங்க அதிகாரிகளும் இப்படித்தானா!!? அவர்கள் கையூட்டு பெற மாட்டார்களா!!?? நீங்கள் கூறுவதிலிருந்து அவர்கள் கையூட்டு பெறுவதில்லை என்றே தோனுகிறது..

இல்லை ராஜேஷ். இங்குள் லஞ்சம் உள்ளது மிகவும் குறைந்தளவில், ஆனால் அதிக தொகையில். நம் நாடுகளைப் போல் சில்லறை லஞ்சங்கள் இல்லை. அவ்வளவுதான்.

அந்த அரச அதிகாரிகளைத்ந்தப்புச் சொல்ல முடியாது. ஒருத்தருமே இல்லாமல் நடுத்தெருவில் நிற்பர்வர்களுக்கு உதவவே அந்த அமைப்பு இயங்குகிறது. அங்கே உதவி கேட்போர் பட்டியல் நீளமானது. அங்கு தங்கி இருக்கும் ஒருவரை, தெரிந்தவர் வீட்டுக்கு அனுப்பினால் இன்னொருவருக்கு நல்வாய்ப்பாக அமைந்திடும். அதனாலேயே கடுமை காட்டுகிறார்கள். மற்றப்படி அவர்களைக் குறை சொல்ல இயலாது.

கலையரசி
18-07-2010, 03:50 AM
உலகில் நல்லவர்கள் சிலர் இன்னும் இருக்கிறார்கள் என்ற உண்மையை உணர்த்திய உண்மை பதிவு.
மதி கூறுவது போல் காலையில் அலுவலகம் போகும் அவசரத்தில் அடிபட்டுக் கிடந்தாலும் பாராமுகமாகச் செல்வது தான் பெரும்பாலோரின் பழக்கம். அப்படியிருக்கையில் விடுப்பெடுத்துக் கொண்டு இந்தளவுக்கு அப்பெண்ணுக்கு உதவியது, மிக*வும் மனித நேயமுள்ள ஒரு செயல். தொடருங்கள் அமரன்.

த.ஜார்ஜ்
18-07-2010, 07:57 AM
அமரன் இது மிக நெகிழ்சியான அனுபவம்.சொந்த மண்ணிலே தனியாக பெண்கள் நடமாடுவது தவிப்புக்குரியதாக இருக்கிறது.ஒரு அந்நிய நாட்டில் உதவிக்கு யாருமில்லாமல் அந்த பெண் என்ன பாடு பட்டிருக்கக் கூடும் என்று உணர முடிகிறது.வீழ்ந்து கொண்டிருக்கும் பாதாளத்திலிருந்து ஏதாவது ஒரு கரம் தூக்கி பிடிக்காதா ... என்ற நிலையில் நீங்கள் போய் சேர்ந்திருக்கிறீர்கள். துயருற்றோரே துயரம் போக்க முனைவர்.

த.ஜார்ஜ்
18-07-2010, 08:00 AM
இயற்கை அழகுற அமைத்த கரைகளின் நடுவில் பாய்ந்து கொண்டிருக்கும் நதியினைப் போன்று சென்று கொண்டிருந்தேன் நான். ஆனால் அவள் அப்படி இல்லை. நிமிர்ந்து நின்ற கட்டடக் காடுகளை அண்ணாந்து பார்ப்பாள்.


ரசிக்க முடிந்த வரிகள்.

கீதம்
19-07-2010, 03:22 AM
படித்துமுடித்ததும் நிம்மதிப்பெருமூச்சு விட்டேன். அந்த ஆதரவற்ற பெண்ணின் சார்பில் உங்களுக்கு ஆயிரமாயிரம் நன்றிகள், அமரன்.

அன்புரசிகன்
19-07-2010, 05:05 AM
எல்லாத்தையும் விடுங்கோ.. அவாவுக்கு விசா கிடைக்குமா இல்லையா???

த.ஜார்ஜ்
20-07-2010, 02:20 PM
ம்...... அப்புறம்.... ?

அமரன்
20-07-2010, 09:07 PM
நன்றி நண்பர்களே...!

எல்லாத்தையும் விடுங்கோ.. அவாவுக்கு விசா கிடைக்குமா இல்லையா???

கிடைக்க வேண்டும் என்று நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம்.

அமரன்
20-07-2010, 09:08 PM
ம்...... அப்புறம்.... ?


ஏதேது.. அவருடைய நாட்குறிப்பை என்னை எழுதச் சொல்வீங்கப் போல.

அரச உதவியுடன் முகாமில் ஒரு தமிழ் யுவதியின் துணையுடன் உள்ளார்.

samuthraselvam
21-07-2010, 05:33 AM
முன்னே பின்ன தெரியாதவர்கள் ஒரு முகவரி கேட்டால் கூட திரும்பிப் பார்த்து முறைத்துவிட்டு தெரியும் தெரியாது என்று கூட சொல்லாமல் ஏதோ வேற்று கிரக வாசியை பார்ப்பது போல பார்த்துவிட்டுச் செல்லும் இந்தக் காலத்தில் ஒரு நாள் முழுக்க அவருக்காக அலைந்து ஒரு பாதுகாப்பான இடத்தில் தமிழின் துணையுடன் விட்டு வந்த உங்களை என்னவென்று பாராட்டுவதென்றே தெரியவில்லை அமர் அண்ணா...

உண்மையிலுமே நீங்க கிரேட்...:icon_b:

கடவுளின் ஆசி எப்போதும் உங்களை நல்வழியில் மேன்மை அடைய அழைத்துச்செல்லும்....

பாரதி
07-08-2010, 02:28 PM
:icon_03:

:aktion033:

:)

உங்களின் இளகிய மனதைக் கண்டு நெகிழ்கிறேன் அமரன்.
நன்றாக இருங்கள்.

சுகந்தப்ரீதன்
12-08-2010, 08:51 PM
அமரா உண்மையில் 'அண்ணன்' என்று அழைக்க அத்தனை தகுதியும் உள்ளவன்தான் நீ..!!

இயல்பானதென்று நீ கூறினாலும் அந்த ஏழுநிமிடங்கள் மூலம் நீ கற்றதும் கற்பித்ததும் ஏராளம்..!!

அமரன்
12-08-2010, 08:54 PM
என்னப்பா இன்றைக்கு ராக்கோழியாட்டம் மன்றத்தில சுத்துறாய்.

சுகந்தப்ரீதன்
12-08-2010, 08:57 PM
என்னப்பா இன்றைக்கு ராக்கோழியாட்டம் மன்றத்தில சுத்துறாய். நாளைக்கு நமக்கு லீவுல்ல... இன்னிக்கு சுத்தறதுக்கு கூட யாரும் கிடைக்கல... அதான் இங்க சுத்துனேன்... நீ கண்ணு வச்சிட்டீல்ல... இப்ப எனக்கு கண்ணுறக்கம் வருது பாரு..!!:sprachlos020:

அன்புரசிகன்
12-08-2010, 10:06 PM
ராக்கோழி சுத்துமா???

சுகந்தப்ரீதன்
13-08-2010, 08:07 AM
ராக்கோழி சுத்துமா???ராக்கோழி ரெண்டும் சுத்தும்..:sprachlos020:

Ravee
13-08-2010, 09:22 AM
மொழி தெரியாத நாட்டில் முகம் தெரியாத மனிதர்களுடன் கொஞ்சம் கஷ்டம்தான் அமரன் .

என் வெளிநாட்டு முதல் அனுபவத்தில் கத்தாரில் நடந்த கொடுமை . விமான நிலையத்தில் ஒவ்வொரு சோதனைகள் முடிந்து வரும் பொது ஒரு அரபி கூப்பிட்டான் . அவனை பார்க்கும் போது மன்னர் திருமலை நாயக்கர் மகால் தூண் நினைவுக்கு வந்தது. அரபியில் மூச்சு விடாமல் என்னை பார்த்து கத்தினான். மனதில் இஷ்ட தெய்வங்களை வேண்டிக்கொண்டேன்.

நண்பர்கள் எனக்கு முன் சோதனைகள் கடந்து போய்விட்டார்கள். கையில் பெட்டிகளுடன் திரு , திரு என்று ( மரியாதையாகத்தான் ) முழித்தேன். பொறுமை இழந்தவனாக அருகில் வந்தான். அங்கே இருந்த ஒரு மேசை போல இருந்த மரப்பலகை காண்பித்து கத்தினான் ( அவன் பேசி இருக்கலாம் ... எனக்கு கத்துவதாகப்பட்டது ) கையில் இருந்த பெட்டி, பைகளை எல்லாம் அதன் மேல் வைத்து விட்டு அவன் முன்னே போய் நின்றேன்.

தலையில் அடித்துக்கொண்டான் . திரும்பவும் மேசையை காட்டி கத்தினான். எதோ புரிந்தவன் போல வேகமாக போய் பெட்டிகளை இறக்கி வைத்துவிட்டு மேசையை தூக்கி வந்தேன் . அவன் பொறுமை முழுதும் போய் என் தோள்களை இரண்டு கைகளால் பிடித்து அப்பிடியே அலாக்காகத்தூக்கி மேசை மேல் நிறுத்தி கைகளை தூக்கச்சொல்லி சோதனை போட்டான் .

முட்டாள் அரபி .... " ஸ்டான்ட் அப் ஆன் தி பெஞ்ச் " என்று சொல்லி இருக்கலாம் . எத்தனை முறை படிக்கும் போது நின்று இருக்கிறேன் .... :D :D :D

அன்புரசிகன்
13-08-2010, 12:17 PM
முட்டாள் அரபி .... " ஸ்டான்ட் அப் ஆன் தி பெஞ்ச் " என்று சொல்லி இருக்கலாம் . எத்தனை முறை படிக்கும் போது நின்று இருக்கிறேன் .... :D :D :D
Sthanth ub on thar benz என்று தான் சொல்லியிருப்பான்.:lachen001: அப்பவாவது புரியணுமே.... அவங்களுக்கு d, p s சத்தம் சரியா வராது. ஒருநாள் பெரிய பிரச்சனை என்பதை bigi brableem. என்றான். எனக்கு புரிய ரொம்ப நேரமாச்சு... மூன்றை sthree என்பான்... :D

ஒருநாள் வங்கி சென்று (கத்தாரில் தான்) எனது அண்ணனுக்கு பணம் அனுப்ப எல்லாம் நிரப்பி சென்ற போது melbourne என்பதை மெ இல் பேர் னி என்று வாசித்தான். சரி நமக்கென்ன என்று இருந்தால் இது எங்கே இருக்கு என்றான். நான் சொன்னேன் அவுஸ்திரேலியாவில் என்று. அது எங்கு இருக்கு என்றான். யப்பானுக்கு கீழ இருக்கு என்றேன். யப்பான் என்று யோசிக்க நான் சொன்னேன். உனக்கு தெரியுமா ரொயோட்டா கார். அதெல்லாம் அங்க தான் உருவாக்கிறாங்கள் என்றேன். Oh... Bigi kanthri என்றான்... அப்பாடா என்று பெருமூச்சோடு வந்தது. :lachen001:

இப்படி பல... இவங்கள் ஒழுங்கா இருந்தா வெள்ளைக்காரன் ஏன் இவங்கள இப்படி ஏமாத்துறாங்கள்...:D

Ravee
13-08-2010, 12:43 PM
சமிபத்தில் அவள் விகடனில் ஒரு ஜோக் படித்தேன் , ஒரு குழந்தை ஓடி வந்து அம்மாவிடம் அம்மா அம்மா ... தம்பி மேல தாத்தா உக்காந்து இருக்குன்னு சொல்ல எல்லோரும் பதறிப் போய் பார்த்தால் அங்கே கம்பி மேல காக்கா உட்க்காந்து இருந்தது . குழந்தை கா வை தா என்று மழலையில் சொல்லும் என்பதை எல்லோரும் பதட்டத்தில் மறந்துவிட்டார்கள் :lachen001: :lachen001: :lachen001:

வியாசன்
13-08-2010, 12:50 PM
நல்ல ஜோக்குகள் நல்லாக இருக்கின்றது.