PDA

View Full Version : உலகத்துல எத்தனையோ பேர் இருக்கும் போது நான் ஏன் ஜெஸ்ஸிய லவ் பண்ணினேன்?? - இறுதிப்பாகம்

மதி
10-07-2010, 10:26 AM
வெற்றிகரமா வேலையை ராஜினாமா செஞ்சாச்சு.. வேலையே இல்லை..பார்க்க வேண்டாம்னு சொல்லிட்டாங்க ( ஆரெனுக்கு இப்போ திருப்தியா இருக்குமே?!). என்ன பண்ணலாம்னு யோசிச்சப்போ தோணினது. படம் மட்டும் இப்போது.. கதை எப்போது?? :icon_ush::icon_ush::icon_b::icon_b:

http://www.tamilmantram.com/vb/picture.php?albumid=57&pictureid=230

மேலதிகத் தகவல்களுக்கு இந்த இடத்தையே தினமும் உற்றுப் பார்க்கவும்.. :D:D

அமரன்
10-07-2010, 10:47 AM
ஹஹ்ஹ்ஹ்ஹா.

வர வர உங்க குறும்பு தாங்க முடியலப்பா.

மதியின் லவ் ஸ்டோரி என்று ஆசையில் ஓடோடி வந்தால் இப்படி ஏமாத்திட்டீங்களே.

மதி
10-07-2010, 10:49 AM
ஏமாத்தலாம் இல்லீங்க.. கதை ரெடியாயிட்டு இருக்கு.... கூடிய விரைவில் பதிக்கிறேன்.. ஒரே நேரத்தில் பல கதைகளை யோசிக்கறதால ஏக பிரச்சனை.. ஹிஹி...

பா.ராஜேஷ்
10-07-2010, 11:50 AM
உங்களுக்கு நாங்க எல்லாம் பாவமா தெரியலையா!!? ஒரே சமயத்துல எத்தன கதையை ஞாபகம் வச்சி தொடர்றது!???

மதி
10-07-2010, 11:51 AM
தொடர்றதுக்கே இப்படி அலுத்துக்கறீங்க..? அப்போ நான்... :frown::frown::frown:

கொஞ்ச நாள்ல.. பைத்தியமா தான் அலையப்போறேன்.. :D:D

govindh
10-07-2010, 12:08 PM
வாழ்த்துக்கள் மதி...!
தொடங்குங்கள்...அசத்துங்கள்....
ஆவலுடன் காத்திருக்கிறோம்...

பா.ராஜேஷ்
10-07-2010, 12:16 PM
ஐயோ பாவம், :confused: மதியை காப்பாத்து கடவுளே... :cool:

மதி
10-07-2010, 12:17 PM
வாழ்த்துக்கள் மதி...!
தொடங்குங்கள்...அசத்துங்கள்....
ஆவலுடன் காத்திருக்கிறோம்...
ஹிஹீ..

ஐயோ பாவம், :confused: மதியை காப்பாத்து கடவுளே... :cool:
இப்போ அந்த கடவுளே.. மதிக்கிட்டேர்ந்து என்னைக் காப்பாத்துன்னு புலம்புறாராம்.. :icon_b:

மச்சான்
10-07-2010, 12:19 PM
தொடர்றதுக்கே இப்படி அலுத்துக்கறீங்க..? அப்போ நான்... :frown::frown::frown: கொஞ்ச நாள்ல.. பைத்தியமா தான் அலையப்போறேன்.. :D:D
ஹி..... ஹி...... வாழ்த்துக்கள்.:lachen001:

ஓவியன்
10-07-2010, 12:31 PM
வர வர அங்க லொள்ளு ஓவாராகீது...

இப்படியே போனால், ‘நான் ஏன் அந்த லவ்வ ஏத்துக்கல - இப்படிக்கு ஜெஸ்ஸி’ அப்படினு நான்(!!) ஒரு கதை(:sauer028:) எழுதவேண்டி வரும்...!! :)

மதி
10-07-2010, 12:34 PM
வர வர அங்க லொள்ளு ஓவாராகீது...

இப்படியே போனால், ‘நான் ஏன் அந்த லவ்வ ஏத்துக்கல - இப்படிக்கு ஜெஸ்ஸி’ அப்படினு நான்(!!) ஒரு கதை(:sauer028:) எழுதவேண்டி வரும்...!! :)
இது சூப்பரு.....

ஆரம்பிங்க.... லவ்வுன்னா.. என்னாங்க..???:icon_b::icon_b:

ஓவியன்
10-07-2010, 12:36 PM
இது சூப்பரு.....

ஆரம்பிங்க....

உண்மையாத்தான் சொல்லுறீங்களா, நான் கதை எழுதுவேன்னு பயமுறுத்தியும் நிஜமாலுமே நீங்க பயப்படலையா...?? :traurig001:

சிவா.ஜி
10-07-2010, 12:41 PM
ரவுசு ரொம்ப அதிகமாப்போச்சுப்பா....அதுசரி வேலையை விட்டுட்டீங்களா....?

கூடியசீக்கிரம் வேற வேலையை ஏத்துக்கப்போறீங்க போல....அதாங்க...வெற்றிகரமான எழுத்தாளர்ங்கற வேலையை...ஹி...ஹி...ஒரே சமயத்துல எத்தனைக் கதை வேணுன்னாலும் எழுதுங்க...படிக்க நாங்க ரெடி...!!!

(அப்ப இந்தமுறை ஊருக்கு வந்தா பெங்களூருல பாக்க முடியாதா...??)

மதி
10-07-2010, 12:48 PM

அதான் இவ்ளோ லொள்ளு..

ஆகஸ்ட் 14 வரை பெங்களூரில் இருப்பேன்.. அடுத்த நாள் உண்மையிலேயே சுதந்திர நாளோ..? :):)

அதுக்குள்ள வந்தீங்கன்னா ஒரு மீட்டிங் போட்டுடலாம்.. (இம்முறை முழுக்க என் செலவுல..ஹிஹி.. எவ்ளோ நாளளக்குத் தான் ஏமாத்தறது..? ஏற்கனவே தாமரைக்கிட்ட பேசினேன்.. அப்புறம்.. எங்க போறேன்.. இதோ இருக்கற சென்னைக்குத் தானே.. மூணே மணி நேரத்துல கிருஷ்ணகிரிக்கு வந்துடலாமே?? ஒரு போன் போட்டா ஆஜராயிடுவேன்.. :icon_b:

மதி
10-07-2010, 12:49 PM
உண்மையாத்தான் சொல்லுறீங்களா, நான் கதை எழுதுவேன்னு பயமுறுத்தியும் நிஜமாலுமே நீங்க பயப்படலையா...?? :traurig001:
எவ்வளவோ பாத்துட்டோம்.. இத பாக்க மாட்டோமா..?? ஒரு அளவுக்கு மேல எதையும் பாத்துடலாம்னு துணிவு வரும்.. உங்களுக்கு வரலியா?? :icon_ush::icon_ush:

சிவா.ஜி
10-07-2010, 12:55 PM
இந்தமாதம் 15 ஆம் தேதி ஊருக்கு வரேன். கண்டிப்பா மீட்டிங் போட்டுடலாம். அப்படியே தாமரை சொன்ன அந்த ட்ரெக்கிங் பத்தியும் யோசிக்கலாம்.(காவனூர்...காவலூர்...?)

அமரன்
10-07-2010, 01:04 PM
சிவாஜியாரே சென்னைக்கு ஷிப்டாவப் போறதாப் பட்சி ஒன்று பறைகிறதே..

மதி
10-07-2010, 01:50 PM
சிவாஜியாரே சென்னைக்கு ஷிப்டாவப் போறதாப் பட்சி ஒன்று பறைகிறதே..
எனக்கும் அந்த சந்தேகம் இருக்கிறது...!!

ஆதவா
10-07-2010, 02:10 PM
ஏமாத்தலாம் இல்லீங்க.. கதை ரெடியாயிட்டு இருக்கு.... கூடிய விரைவில் பதிக்கிறேன்.. ஒரே நேரத்தில் பல கதைகளை யோசிக்கறதால ஏக பிரச்சனை.. ஹிஹி...

நாங்கள்லாம் ஒண்ணுக்கே யோசிக்கவேண்டியதா இருக்கு!! (நோ டபுள் மீனிங் ப்லீஸ்)

ம்ம்ம்...

கதை உங்களோட எந்த காதலியைப் பத்தினது?

மதி
10-07-2010, 02:12 PM
நாங்கள்லாம் ஒண்ணுக்கே யோசிக்கவேண்டியதா இருக்கு!! (நோ டபுள் மீனிங் ப்லீஸ்)

ம்ம்ம்...

கதை உங்களோட எந்த காதலியைப் பத்தினது?
ஹாஹா.. நானா எதுவும் யோசிக்கறதில்ல.. சுட்டது.. தான்...:icon_ush::icon_ush::icon_ush::icon_ush:
படிக்கும் போது உங்களுக்கே தெரியும்.. எந்த காதலிய பத்தினதுனு..

ஜெஸிக்கா உங்களுக்கு சொந்தமான பேருங்கறதால.. ஜெஸ்ஸின்னு பேர தேர்வு செஞ்சேன்..:icon_b:

ஆதவா
10-07-2010, 02:20 PM

அப்ப பல காதலிகள் இருக்கிறதை ஒத்துக்கிறீங்க!!! வெல்.. :D

த.ஜார்ஜ்
10-07-2010, 03:42 PM
சும்மா படம் காட்டதிங்க.கதைய சொல்லுங்க.

மதி
10-07-2010, 03:45 PM
அப்ப பல காதலிகள் இருக்கிறதை ஒத்துக்கிறீங்க!!! வெல்.. :D
அட இதெல்லாம் பப்ளிக்கா மேடை போட்டா சொல்ல முடியும்..:eek::eek::eek:

மதி
10-07-2010, 03:46 PM
சும்மா படம் காட்டதிங்க.கதைய சொல்லுங்க.
இனிமே தாங்க கதை பண்ணனும்... :eek::eek::eek::icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout:

ஓவியன்
10-07-2010, 03:51 PM
இனிமே தாங்க கதை பண்ணனும்... :eek::eek::eek::icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout:

ஆமா, இப்பதான் ஹீரோ, ஹீரோயினை ஓகே பண்ணி இருக்காங்க, இனித்தான் ஹீரோக்கு தகுந்த மாதிரி கதை பண்ணணும்...

ஆம் ஐ கரெக்ட்....???

அதுசரி, கதை டிஸ்கஸனுக்கு நானும் வரேட்டா...?? :cool:

மதி
10-07-2010, 03:57 PM
ஆமா, இப்பதான் ஹீரோ, ஹீரோயினை ஓகே பண்ணி இருக்காங்க, இனித்தான் ஹீரோக்கு தகுந்த மாதிரி கதை பண்ணணும்...

ஆம் ஐ கரெக்ட்....???

அதுசரி, கதை டிஸ்கஸனுக்கு நானும் வரேட்டா...?? :cool:
ஓ.. தாராளமா..
எந்த ஹோட்டல்ல ரூம் போடணும்..:icon_b:

த.ஜார்ஜ்
10-07-2010, 04:05 PM
அதுசரி, கதை டிஸ்கஸனுக்கு நானும் வரேட்டா...?? :cool:

நானும்

மதுரை மைந்தன்
10-07-2010, 06:32 PM
கதை மொந்தைக் கள்ளாக இருக்கும்னு நினைச்சு வந்தா தண்ணி காட்டிடீங்களே. அடுத்த வேலை அமோகமா அமைய வாழ்த்துக்கள்

மதி
11-07-2010, 01:47 AM
கதை மொந்தைக் கள்ளாக இருக்கும்னு நினைச்சு வந்தா தண்ணி காட்டிடீங்களே. அடுத்த வேலை அமோகமா அமைய வாழ்த்துக்கள்
ஏமாத்தலாம் இல்லீங்க மைந்தரே.. கதை எழுத வேண்டியது தான்...
உங்க வாழ்த்துக்கு மிக்க நன்றி.. புது வேலை நல்லா இருக்கும்னு தான் நம்பறேன்.

அமரன்
11-07-2010, 06:27 AM
இன்னும் எழுதலையா..

கீதம்
11-07-2010, 06:32 AM
என்ன அநியாயம் இது? தலைப்பை மட்டும் வச்சே ரெண்டு பக்கம் ஓட்டிட்டீங்களே?

ஓவியன்
11-07-2010, 06:34 AM
என்ன அநியாயம் இது? தலைப்பை மட்டும் வச்சே ரெண்டு பக்கம் ஓட்டிட்டீங்களே?

ஹா, ஹா.. !!

அதை நீங்க இப்ப மூன்றாவது பக்கமாக அதிகரிச்சிட்டீங்க... :D:D

மதி
11-07-2010, 08:51 AM
இன்னும் எழுதலையா..
இன்னிக்கு சண்டே.. பிஸி.. அதனால நாளைக்கு எழுதணும்...சிறுகதையா தான் இருக்கும்... போல:cool:

என்ன அநியாயம் இது? தலைப்பை மட்டும் வச்சே ரெண்டு பக்கம் ஓட்டிட்டீங்களே?
ஹஹா... வெட்டிப்பொழுத எப்படியெல்லாம் ஓட்டலாம்னு யோசிச்சதால வந்த வினை..:icon_b:

ஹா, ஹா.. !!

அதை நீங்க இப்ப மூன்றாவது பக்கமாக அதிகரிச்சிட்டீங்க... :D:D
அது..:icon_b:

மதி
11-07-2010, 08:55 AM
உலகத்தில எத்தனையோ பேர் இருக்க நான் ஏன் ஜெஸ்ஸிய லவ் பண்ணினேன்??

ஹலோ.... நான் தான் மார்க்.. இந்த கேள்விக்கான விடை... சத்தியமா தெரியல..! என் கதைய சொல்றேன்.. நாளைக்கு :icon_b:

செல்வா
11-07-2010, 09:10 AM
வர வர யாருக்கும் பயம் இல்லாமப் போச்சு. டிரைலரையே ஒரு வாரத்துக்கு ஓட்டுறத தடை பண்ணுறதுக்கு சட்டம் கொண்டு வாங்கப்பா...!

பாக்க பாக்க வயிறு எரியிதுல்ல... :icon_ush:

பா.ராஜேஷ்
11-07-2010, 10:38 AM
சீக்கிரம் வாப்பா மார்க்... மதி உன்ன வச்சிதான் மார்க் வாங்கணும்... ;)

சுடர்விழி
11-07-2010, 11:08 AM
நாளைக்கா????தலைப்பை போல முன்னோட்டமும் ரொம்ப நீளமாத்தான் போயிட்டிருக்கு..:D
ஆவலுடன் காத்திருக்கிறேன்....

பாலன்
11-07-2010, 11:34 AM
முதன் முதல்ல ஒரு காதல் கதையை படிக்கலாம்ன்னு தேர்ந்தெடுத்து வந்தா இப்பிடியா ஏமாத்துறது?
எனக்கும்கூட இப்ப தோணுது எதுக்குதான் நீங்க ஜெஸ்ஸியை லவ் பண்ணிங்களோன்னு!

கலையரசி
11-07-2010, 02:54 PM
ஏமாத்தலாம் இல்லீங்க.. கதை ரெடியாயிட்டு இருக்கு.... கூடிய விரைவில் பதிக்கிறேன்.. ஒரே நேரத்தில் பல கதைகளை யோசிக்கறதால ஏக பிரச்சனை.. ஹிஹி...

உங்களை யாரு ஒரே நேரத்துல பல கதைகளை யோசிக்கச் சொன்னது? ஒரு கதையை உருப்படியா முடிச்சிட்டு அடுத்த கதைக்குப் போக வேண்டியது தானே?
கதை என்று படிக்க வந்தால், சரியான ஏமாற்றம்.
அது சரி. கதையின் தலைப்பை ஏன் இவ்வளவு சிறியதாக(!) வைத்திருக்கிறீர்கள்? இன்னுங் கொஞ்சம் நீள.........மாக வைக்க*லாமே!

மதி
11-07-2010, 04:04 PM

நான் எங்க யோசிக்கறேன்... அத்தனை பேரு என்கிட்ட கதை சொல்றாங்க.. ஹிஹி...
கதையின் தலைப்பை இன்னும் பெரிதாக யோசித்தேன்.. எதுவும் சிக்கல..:D:D

மதி
11-07-2010, 04:07 PM
வர வர யாருக்கும் பயம் இல்லாமப் போச்சு. டிரைலரையே ஒரு வாரத்துக்கு ஓட்டுறத தடை பண்ணுறதுக்கு சட்டம் கொண்டு வாங்கப்பா...!

பாக்க பாக்க வயிறு எரியிதுல்ல... :icon_ush:
ஹாஹா... அப்படி ஒரு சட்டம் போடுங்க.. அப்புறம் பாத்துக்கலாம்... ரொம்ப போர் அடிக்குது பாஸ்...

சீக்கிரம் வாப்பா மார்க்... மதி உன்ன வச்சிதான் மார்க் வாங்கணும்... ;)
அதானே.. மார்க் என்ன சொல்லப்போறாரு... :confused::confused:

நாளைக்கா????தலைப்பை போல முன்னோட்டமும் ரொம்ப நீளமாத்தான் போயிட்டிருக்கு..:D
ஆவலுடன் காத்திருக்கிறேன்....
கதை அவ்வளவு நீளமா இருக்காது போல..

முதன் முதல்ல ஒரு காதல் கதையை படிக்கலாம்ன்னு தேர்ந்தெடுத்து வந்தா இப்பிடியா ஏமாத்துறது?
எனக்கும்கூட இப்ப தோணுது எதுக்குதான் நீங்க ஜெஸ்ஸியை லவ் பண்ணிங்களோன்னு!
மன்னிச்சிடுங்க அரும்பு.. ஆனா இது என் கதையுமில்ல.. நான் ஜெஸ்ஸிய காதலிக்கவுமில்ல..:icon_b:

தாமரை
11-07-2010, 05:01 PM
ஜெஸ்ஸியை Just See செய்ய நினைத்தது Just She என்னும் அளவுக்கு ஆகும் என மார்க் எதிர்பார்த்தா அவளுக்கு மார்க் போட்டிருப்பான்?

மதி
12-07-2010, 02:07 AM
ஜெஸ்ஸியை Just See செய்ய நினைத்தது Just She என்னும் அளவுக்கு ஆகும் என மார்க் எதிர்பார்த்தா அவளுக்கு மார்க் போட்டிருப்பான்?
அச்சச்சோ.. முழு கதையும் சொல்லிட்டீங்களே...:eek::eek::eek:

Mano.G.
12-07-2010, 03:02 AM
தம்பி மதியோட சிறுகதையான்னு பார்த்தேன், அதுக்கு 43 பின்னூட்டங்கள்,
ஆகா, முன்னமே வாசிக்காம உட்டுடோமேன்னு திரிய திறந்து பார்த்தால் தெரியுது கதையே இப்படி
போய்கிட்டு இருக்குன்னு,

தம்பி மதியின் கதையோடு கல்யாண சாப்பாட்டை எதிர்பார்க்கும்

மனோ.ஜி

Akila.R.D
12-07-2010, 04:19 AM
கதையை சொல்லுவீங்களா இல்ல இப்படியே பேசிட்டு இருப்பீங்களா மதி?..

மதி
12-07-2010, 04:37 AM
தம்பி மதியோட சிறுகதையான்னு பார்த்தேன், அதுக்கு 43 பின்னூட்டங்கள்,
ஆகா, முன்னமே வாசிக்காம உட்டுடோமேன்னு திரிய திறந்து பார்த்தால் தெரியுது கதையே இப்படி
போய்கிட்டு இருக்குன்னு,

தம்பி மதியின் கதையோடு கல்யாண சாப்பாட்டை எதிர்பார்க்கும்

மனோ.ஜி
அடடா... உங்களுக்கு ஏமாற்றத்தைக்கொடுத்திட்டேனே:traurig001::traurig001:

கல்யாண சாப்பாடா..? அப்படின்னா...???:icon_rollout::icon_rollout:

கதையை சொல்லுவீங்களா இல்ல இப்படியே பேசிட்டு இருப்பீங்களா மதி?..
மக்கள் கேக்கற வரைக்கும் இப்படியே பேசிட்டு இருக்கப் போறதா உத்தேசம்... :icon_b::icon_rollout::icon_rollout:
இப்போ தான் ஆபிஸுக்கு வந்திருக்கேன்.. எதாச்சும் பஞ்சாயத்து இருக்குதானு பாத்துட்டு ஆரம்பிக்க வேண்டியது தான்...:icon_b::icon_b:

கீதம்
12-07-2010, 10:44 PM
மதி விரைவில் கதையைத் தொடரவில்லையெனில் இந்தத்திரியை அரட்டைப் பகுதிக்கு மாற்றி ஆவண செய்யுமாறு நிர்வாகத்தை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். :icon_b:

இப்படிக்கு,
தினம் தினம் அதிகமாகும் பின்னூட்ட எண்ணிக்கையைக் கண்டு
கதையை எதிர்பார்த்து ஏமாறும் வாசகர்களில் ஒருத்தி. :)

மதி
13-07-2010, 03:06 AM

நேற்றே எழுதியிருக்க வேண்டியது... அதற்கான ஆராய்ச்சியெல்லாம் கூட முடிச்சாச்சு.. என்ன பண்றது.. ரொம்ப போரடிக்குதுனு.. KNIGHT and DAY படத்துக்கு போயிட்டேன்...:icon_b::icon_b:
அதுவும் தனியா.. :)

இன்னிக்கு எப்படியும் 10 வரிகளாவது போட்டுடுவேன்...:icon_b::icon_b::icon_rollout::icon_rollout:

கீதம்
13-07-2010, 03:07 AM
ஆ.......! உங்க பேரைப் பார்த்து வந்து இப்பவும் ஏமாந்திட்டேன்.

மதி
13-07-2010, 07:09 AM
வணக்கம். நான் தான் மார்க். என்னடா இவன் தமிழ்ல பேசறானேனு பாக்கறீங்களா? எனக்கு தமிழ் தவிர இன்னும் பதினஞ்சு மொழி தெரியும். அது தவிர உங்களால உணர முடியாத இன்னொரு மொழியும் தெரியும். ஆனா உங்கள்ல பல பேருக்கு தமிழ் மட்டுமே தெரியும்ங்கறதால தமிழ்லேயே பேசறேன்.

ஏற்கனவே சொன்ன மாதிரி என் பேர் மார்க், வயசு அஞ்சு, பிறந்த ஊர் ஜெர்மனியிலுள்ள டஸல்டார்ஃப். சொந்த ஊரும் ஜெர்மனி தான். ஆமா. நான் ஜெர்மன் ஷெப்பர்ட் வகையை சேர்ந்தவன். சுருக்கமா சொன்னா பிறப்பால நான் ஒரு நாய். பாருங்க.. இப்ப கூட ‘நாய்’ங்கற வார்த்தைய பயன்படுத்தினதுக்கு அந்த மாமா கோவமா பார்த்தார். என்னவோ அவர திட்டுற மாதிரி. மனுஷங்க திட்ட எங்க பேர பயன்படுத்தறதால ‘நாய்’ன்னு எங்கள நாங்களே கூப்டுக்க முடியல. இனிமே எங்களுக்குள்ள திட்டிக்கணும்னா ‘போடா மனுசப்பயலே’னு தான் திட்டிக்கணும் போல.

சொல்ல வந்ததைத் தவிர என்னன்னவோ பேசிக்கிட்டு இருக்கேன் பாருங்க. உங்ககிட்ட நிறைய சொல்லணும்.. பேசணும்னு தான் வந்தேன். இந்த மாதிரி கதை சொல்றது எனக்கு புதுசு. அதனால கூட தலைப்பை எப்படி வைக்கணும்னு தெரியல.

தலைப்புன்னு சொன்னதும் தான் ஞாபகம் வருது. நான் ஏன் ஜெஸ்ஸிய லவ் பண்ணினேன்? தெரியல. ஆனா அதுக்கு முன்னாடி என்னோட கதையை கொஞ்சம் சொல்றேன். ஏற்கனவே சொன்னமாதிரி என் பிறந்த ஊரு ஜெர்மனியில இருக்கு. உங்களுக்குத் தெரியுமோ தெரியாதோ நீங்க பேசற மொழிகளை எங்களால சீக்கிரமே கத்துக்க முடியும். உங்ககூடவும் பேசுவோம். நீங்க செஞ்ச பாவமோ என்னவோ நாங்க பேசுறத உங்களால் கேட்க முடியாது. ஏதோ நாங்க பேசறதை ‘குரைக்குது’னு சொல்றீங்க. அது சரி. உங்களுக்கு ஒன்னு புரியலேன்னா உங்க மேல தப்பில்ல புரிஞ்சிக்க முடியாதபடி இருக்கறது அந்த விஷயத்தோட தப்புன்னு வாதாடற ஆளு தானே நீங்க.

இப்படி தான் நான் பல மொழிகள்ல பேசுவேன். நான் வளர்ந்தது ஒரு எஞ்சினீயரோட வீட்ல. அவர் வீட்ல என்மேல ரொம்ப பாசமா இருப்பாங்க. எஞ்சினீயருக்கு ஒரு முப்பத்தஞ்சு வயசுக்கு மேல இருக்கும். எஞ்சினீயரம்மா ரொம்ப நல்லவங்க. ரெண்டு பேருமே ஜெர்மன் காரங்க. அவங்க கூட பழகி தான் எனக்கு ஜெர்மன் மொழி தெரியும். அப்போ எனக்கு விளையாட்டுத் துணை பக்கத்து வீட்டில இருந்த டாமி. அவனை சின்ன வயசில தமிழ் நாட்டுல இருந்து தூக்கிட்டு வந்திருந்தாங்க. அவன் மூலமா தான் எனக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரியும். டாமி தமிழ்ல நிறைய கவிதையெல்லாம் எழுதுவான். அவன் தமிழ்ல பாடுறத கேட்க அவ்ளோ நல்லா இருக்கும். தினமும் சாயங்காலம் எஞ்சினீயர் என்னை வாக்கிங் கூட்டிட்டு போவார். வீட்டுக்குப் பக்கத்திலேயே பெரிய பார்க் இருக்கு. அங்க போய் எங்க இனத்துல இருக்கற பல சாதி நாய்ங்களோடயும் விளையாடுவேன். ஒரு நிமிஷம்.. ஏன் இப்படி மொறச்சு பாக்கறீங்க..? சரி உங்க விருப்பத்திற்கு இனி நாய்ன்ங்கற வார்த்தைய பயன்படுத்தல. ‘டாக்’ன்னே பயன்படுத்தறேன். யப்பா என்னா கோவம் வருது? இந்த உரிமை கூட எங்களுக்கு இல்லாம போச்சே.

திரும்ப.. ட்ராக் மாறிட்டேன்.. சாரி. அதான் அங்க பல டாக் வரும். எங்களுக்குள்ள இந்த சாதிப்பிரச்சனையெல்லாம் கிடையாது. எல்லோரும் ரொம்ப சந்தோஷமா விளையாடுவோம். அப்போ தான் மத்த மொழிகளையும் கத்துக்கிட்டேன். நான் ஜெர்மன் ஷெப்பர்ட் வகையை சேர்ந்தவன். ஆணழகன். கம்பீரமா இருப்பேன். அதனாலேயே பல பெண் டாக்களுக்கும் என்னை ரொம்ப பிடிக்கும். என்னவோ தெரியல. அவங்க மேலல்லாம் பெரிசா ஏதும் ஈர்ப்பு வரல. சந்தோஷமா வாழ்க்கை போய்ட்டு இருந்தப்போ தான் இடி மாதிரி அந்த சேதி வந்துச்சு. அந்த எஞ்சினீயருக்கு பக்கத்து நாட்டுல வேலை கிடைச்சிருக்குங்கற சேதி. எனக்கு ஒரே கலக்கமா போயிடுச்சி. அவங்க என் மேல ரொம்ப ரொம்ப பாசமா இருப்பாங்க. என்னை விட்டுப் பிரிய முடியாம என்னையும் அவங்களோட கூட்டிட்டு போறதா முடிவு பண்ணினாங்க. எனக்கு ஓரளவு சந்தோஷமா இருந்தாலும் நண்பர்களை விட்டுட்டு பிரியறதுக்கு ரொம்ப கலக்கமா இருந்துச்சு. என்ன இருந்தாலும் மூழ்காத ஷிப்பு ஃப்ரண்ட்ஷிப் தானே. கிளம்ப இன்னும் ஒரு வாரமே இருந்தது. அந்த ஒரு வாரமும் எனக்கு செண்ட் ஆஃப் கொடுத்தாங்க எங்க நண்பர்கள். எப்படின்னு கேக்கறீங்களா?

முன்னமே சொன்ன மாதிரி எனக்கு ஸ்பெஷலா ஒரு மொழி தெரியும்னு சொன்னேன்ல. அதான் டாக் லாங்குவேஜ். எங்க சொந்த மொழி. நாடு கண்டங்களைத் தாண்டி எங்க இனத்தை இணைக்கற மொழி இது. யாரும் தனியா கத்துக்கறதில்ல.. இது எங்க தாய்மொழி மாதிரி. தானாவே பழகிப்போம். எந்த நாட்டில இருந்து வர்ற எந்த டாக் கூடவும் பேசவும் இந்த மொழி தான். அதனால யாரையும் நாங்க அன்னியனாவே பாக்கறதில்ல. ஆமா. உங்களுக்கு அப்படி ஒரு மொழி இல்லீல்ல.. பாவம் சார் நீங்க.

எங்க மொழியில இரவானா ஒலிபரப்பு எல்லாம் நடக்கும், ஆனா உங்களுக்கு எதுவுமே கேட்காது. என்னமோ சொல்லுவாங்களே கேட்கும் அலைவரிசைன்னு, உங்களவிட அதிக கிலோஹெர்ட்ஸ்ல நாங்க நடத்தற அந்த சானல் பத்தி உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. அதுல தான் எனக்காக ப்ரண்ட்ஷிப் பத்தின பாட்டெல்லாம் டெடிகேட் பண்ணினாங்க. எனக்கு அழுகை அழுகையா வந்தது. போற ஊரில இந்த மாதிரி நட்பெல்லாம் கிடைப்பாங்களான்னு சொல்ல முடியாதே..!!

கிளம்புவதற்கு முன்னாடி அந்த எஞ்சினீயர் என்னை ஒரு ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போனார். அரிசி மாதிரி இருந்த ஏதோ ஒன்ன என் தோள்பட்டையில வச்சு தைச்சாங்க. ஊசிப்போட்டதுனால எனக்கு அப்போ வலிக்கல. ஆனா என் ரத்தம் பாத்து எஞ்சினீயரம்மா அழுதாங்க. அவ்ளோ பாசம் என் மேல. அது ஏதோ மைக்ரோசிப்பாம். நான் தொலைஞ்சு போனாலும் கண்டுபுடிக்க உதவுமாம். அடப்பாவிகளா.. நான் தொலைஞ்சுப் போகணும்னு முடிவு பண்ணிட்டா என்ன பண்ணினாலும் உங்களால கண்டுபுடிக்க முடியாதுன்னு கத்த தோணிச்சு. பேசாம இருந்துட்டேன். அடுத்ததா பாஸ்போர்ட்டாம். உங்களுக்குத் தான் பாஸ்போர்ட்ன்னா எங்களுக்கும் வேணுமாம். என்னக் கொடுமை சார் இது? வெட்டினரி டாக்டர் சர்டிஃபிக்கேட் கொடுத்தார். ராபிஸ்க்கு தடுப்பூசி ஏற்கனவே போட்டிருந்ததால எந்த பிரச்சனையுமில்லை. கிளம்ப வேண்டிய நாள் வந்திச்சு. எங்க சானல்ல எல்லோருக்கும் கடைசியா பை சொல்லிட்டு கிளம்பினேன். ஏர்போர்ட் போனதும் தான் தெரிஞ்சது நாங்க போகப்போறது கோபன்ஹெகன். டென்மார்க். அப்போ எனக்குத் தெரியாது. ஜெஸ்ஸிய அங்க தான் சந்திக்கப்போறேன். அவளை காதலிக்கப்போறேன்னு. அந்தக் காதல் என்னை அப்படியே அடிச்சுப் போடும்னு..

ஆதவா
13-07-2010, 07:18 AM
அடப்பாவமே நான் என்னமோ ஏதோன்னொ ஓடிவந்தா.... மார்க் ஒரு ”டாக்”காம். கவிதை மாதிரி இருக்கில்ல.?

நல்லாத்தான் கதை ஆரம்பிச்சிருக்கீக... பகுதி ஒண்ணுக்கும் ரெண்டுக்கும் இடையில ஏதாச்சும் விளம்ப்ரம் உண்டா? டாக் விளம்பரம்?

ஜெஸ்ஸியும் ”டாக்”ஆக இருக்க மதியை பிரார்த்திக்கிறேன்.

செல்வா
13-07-2010, 07:21 AM
வாவ்.... சூப்பர்.... :)

மதி
13-07-2010, 07:44 AM
அடப்பாவமே நான் என்னமோ ஏதோன்னொ ஓடிவந்தா.... மார்க் ஒரு ”டாக்”காம். கவிதை மாதிரி இருக்கில்ல.?

நல்லாத்தான் கதை ஆரம்பிச்சிருக்கீக... பகுதி ஒண்ணுக்கும் ரெண்டுக்கும் இடையில ஏதாச்சும் விளம்ப்ரம் உண்டா? டாக் விளம்பரம்?

ஜெஸ்ஸியும் ”டாக்”ஆக இருக்க மதியை பிரார்த்திக்கிறேன்.
கண்டிப்பா ஜெஸ்ஸி ஒரு டாக் தான்.. கலப்பின காதல் பத்தி எழுதற அளவுக்கு நான் இன்னும் முன்னேறல..:icon_b::icon_b:

விளம்பரம் பத்தி ஏதும் இன்னும் யோசிக்கல...:icon_b::icon_b:

வாவ்.... சூப்பர்.... :)
நன்றிங்கண்ணே... டாக் பத்தி ஆராய்ச்சி செய்ய ஆரம்பிச்சி.. நிறைய படிக்க வேண்டியதா போச்சி...

தமிழ் மைந்தன்
13-07-2010, 08:40 AM
மார்க் உங்கள் கதைக்கு மார்க் போடா முடியவில்லையே!

மதி
13-07-2010, 09:15 AM
மார்க் உங்கள் கதைக்கு மார்க் போடா முடியவில்லையே!
இங்க தாங்க பிரச்சனையே... படிச்சதும் மார்க் போட நினைக்கறீங்க... பாவம் மார்க்.. :icon_rollout::icon_rollout:

சிவா.ஜி
13-07-2010, 09:33 AM
இது 'வேறயா'....ஜெர்மனியிலருந்து டென்மார்க்...போகும் மார்க்....ஜெஸ்ஸியை எப்படி புடிக்கிறார்ன்னு பாப்போம்...!!!

ரொம்ப சரளமா டாக் மொழி பேசறீங்க....நல்லாருக்கு மதி.

இன்னும் அசத்துங்க....!!!

ஆதவா
13-07-2010, 09:40 AM
நான் தான் மார்க். உங்களால உணர முடியாத இன்னொரு மொழியும் தெரியும். .

உங்களுக்குத் தெரியுமோ தெரியாதோ நீங்க பேசற மொழிகளை எங்களால சீக்கிரமே கத்துக்க முடியும். உங்ககூடவும் பேசுவோம். நீங்க செஞ்ச பாவமோ என்னவோ நாங்க பேசுறத உங்களால் கேட்க முடியாது. ஏதோ நாங்க பேசறதை ‘குரைக்குது’னு சொல்றீங்க.

ரொம்ப சரளமா டாக் மொழி பேசறீங்க....நல்லாருக்கு மதி.

இன்னும் அசத்துங்க....!!!

இது ரெண்டையும் முடிச்சு போட்டா???? :wuerg019:

சிவா.ஜி
13-07-2010, 09:56 AM
ஆஹா....அக்னி இல்லாதக் குறையை ஆதவா தீத்து 'வெக்கிறாரா'(ஆப்பு)...!!!

மதி
13-07-2010, 10:08 AM
இது 'வேறயா'....ஜெர்மனியிலருந்து டென்மார்க்...போகும் மார்க்....ஜெஸ்ஸியை எப்படி புடிக்கிறார்ன்னு பாப்போம்...!!!

ரொம்ப சரளமா டாக் மொழி பேசறீங்க....நல்லாருக்கு மதி.

இன்னும் அசத்துங்க....!!!
வெட்டியா இருந்தா இப்படி தான் ஏதாச்சும் தோணும்..:eek::eek:

இது ரெண்டையும் முடிச்சு போட்டா???? :wuerg019:
தேவையேயில்லை..:sauer028::sauer028::sauer028:

ஆதவா
13-07-2010, 10:17 AM
வெட்டியா இருந்தா இப்படி தான் ஏதாச்சும் தோணும்..:eek::eek:

அப்ப வெட்டாம இருந்தா?

தேவையேயில்லை..:sauer028::sauer028::sauer028:

:D

மதி
13-07-2010, 11:22 AM
அப்ப வெட்டாம இருந்தா?

:D
அடுத்தவங்கள தற்கொலை செய்யத் தோணும்..:icon_rollout::icon_rollout:

சுடர்விழி
13-07-2010, 12:04 PM
ஒரு வழியாக கதைய ஆரம்பிச்சாச்சுனு ஆசையா வந்தால்....மார்க் ’டாக்’ ??? என்ன கொடுமை மதி இது????? மார்க் அறிமுகமே இப்படி???இனி ஜெஸி வேறயா????
இருந்தாலும் உங்க தைரியம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு......வாழ்த்துக்கள்..

பாலன்
13-07-2010, 02:33 PM
இங்கே எத்தனையோ கதைகள் இருக்கும்போது நான் ஏன் இந்த கதையை வாசிக்க* வந்தேன்??

மதி
13-07-2010, 02:46 PM
ஒரு வழியாக கதைய ஆரம்பிச்சாச்சுனு ஆசையா வந்தால்....மார்க் ’டாக்’ ??? என்ன கொடுமை மதி இது????? மார்க் அறிமுகமே இப்படி???இனி ஜெஸி வேறயா????
இருந்தாலும் உங்க தைரியம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு......வாழ்த்துக்கள்..
நன்றி சுடர்விழி... தைரியமா.. இங்க நான் பயந்துட்டு இருக்கறது எனக்குத் தானே தெரியும்... அடியாளெல்லாம் அனுப்பிடுவாங்களோன்னு..

இங்கே எத்தனையோ கதைகள் இருக்கும்போது நான் ஏன் இந்த கதையை வாசிக்க* வந்தேன்??
:D:D:D:Dசில சமயம் விதியே மதியா வந்துச்சுன்னா?? இப்படித் தானாகும்..

அமரன்
13-07-2010, 09:46 PM
நல்லா இருக்குங்க.

வித்தியாசமான களத்தில, மனுசப்பயலுகளின் வெட்டி நியாயங்களை தட்டிக் கேட்டு கொண்டு போயிருக்கீங்க.

கவித.. கவித..

கீதம்
14-07-2010, 12:26 AM
அப்பாடா! ஒரு வழியா முதல் பாகம் பதிச்சிட்டீங்க. உ.த.செ. யில உலகம் சுத்திக்காட்டறது பத்தாதுன்னு உ.எ.பே.இ.நா.ஏ.ஜெ.ல.ப. இதிலயும் ஜெர்மனியிலயிருந்து டென்மார்க்குக்கு மார்க் போயாச்சு. அடுத்து என்ன நடக்குதுன்னு பார்ப்போம்.

வித்தியாசமான கதைமாந்தர்கள்! ஆரம்பமே அசத்தலா இருக்கு.
பாராட்டுகள், மதி. தொடர்ந்து எழுதுவீங்கதானே?

மதி
14-07-2010, 02:55 AM
நல்லா இருக்குங்க.

வித்தியாசமான களத்தில, மனுசப்பயலுகளின் வெட்டி நியாயங்களை தட்டிக் கேட்டு கொண்டு போயிருக்கீங்க.

கவித.. கவித..
ஹாஹா.. நன்றி அமரன்.. எவ்ளோ நாள் தான் மனித காதலையே சொல்றது...:eek::eek::eek:

அப்பாடா! ஒரு வழியா முதல் பாகம் பதிச்சிட்டீங்க. உ.த.செ. யில உலகம் சுத்திக்காட்டறது பத்தாதுன்னு உ.எ.பே.இ.நா.ஏ.ஜெ.ல.ப. இதிலயும் ஜெர்மனியிலயிருந்து டென்மார்க்குக்கு மார்க் போயாச்சு. அடுத்து என்ன நடக்குதுன்னு பார்ப்போம்.

வித்தியாசமான கதைமாந்தர்கள்! ஆரம்பமே அசத்தலா இருக்கு.
பாராட்டுகள், மதி. தொடர்ந்து எழுதுவீங்கதானே?
:D:D:D:D அந்த பழக்கம் இங்கேயும் ஒட்டிக்கிச்சு.. இந்த கதையில மட்டும் தான் ஊர் சுத்தப்போறது. அடுத்த கதையில இருக்காது. இன்னும் ஒன்னு ரெண்டு பாகத்துல முடிச்சிடுவேன், இந்த வாரத்துக்குள்ளேயே..:icon_b::icon_b:

அன்புரசிகன்
14-07-2010, 03:06 AM
ம்.. உங்க இனத்தைப்பற்றி ஏதாச்சும் டவுட் வந்தா ஓவியன அணுகுங்க.. நல்லா சொல்லுவார். :D

தொடருங்கள்.

(இந்த வார இறுதியில் தான் உங்க உ.த.செ ஐ வாசிக்க வேண்டும். காரணம் முதலிலில் இருந்து வரணுமே...)

மதி
14-07-2010, 03:11 AM
மொத்தமா முடிச்சவுடனே உதசெ படிங்க.. எங்க போய் முடியப்போகுதோ?:eek::eek::eek::eek:

samuthraselvam
14-07-2010, 05:01 AM
மதி வர வர மன்றத்துல உங்க அலப்பறைக்கு அளவில்லாம போச்சு.....:wuerg019::wuerg019:

ஆமா நாங்கல்லாம் உங்களுக்கு என்ன குறை வச்சோம்?:traurig001::traurig001:

கதைங்கற பேர்ல, ஊர் சுத்த வச்சோமா? அடுத்த பாகத்தை எதிர்பார்த்து எதிர்பார்த்து திரியை திறந்து பார்த்து ஏமாற வச்சோமா? இல்ல, வேற என்ன தான் குறை வச்சோம்? ஏன் இப்படி?:violent-smiley-010::violent-smiley-010::medium-smiley-100:

கதைய ஆரம்பிச்சு நாலு நாள் ஆச்சே, ஐந்து பக்கம் போயிருக்கு, 68 ரிப்ளை வந்திருக்கு கதை படுவேகமா போயிட்டு இருக்குன்னு நினைச்சு வந்தா .. :icon_shout::icon_shout:

மதி
14-07-2010, 05:07 AM
ஹாஹா.. கஷ்டம் தான் லீலுமா... எத்தனையோ திரி இருக்க இத ஏன் திறந்தீங்க...?? கஷ்டமா இருந்தா சொல்லுங்க.. கதை எழுதறதையே நிறுத்திடறேன்...:eek::eek::eek:

samuthraselvam
14-07-2010, 05:29 AM
சும்மாப்பா.... கோவிச்சு அந்தமாதிரி முடிவுக்கெல்லாம் போய்டாதீங்க.... நாங்க கொஞ்சம் ஓட்டுவோம்... மதி இதுக்கெல்லாம் அசரும் ஆள் கிடையாதே?

ஆனா ஒரு நாயின் காதலை வித்யாசமா சொல்லப்போறீங்க.... ஆரம்பம் அசத்தல் தான்....

நான்கூட ஒரு குட்டி நாய் தன் சந்தேகத்தை கேட்பதைப் போல ஒரு குட்டிக் கதை எழுதியதி நினைவுக்கு வருகிறது....

அடுத்த பாகம் விரைவில் போடவில்லை என்றால் நாங்கள் போட்டு விடுவோம் உங்களை.... இது வாழ்த்தல்ல, எச்சரிக்கை........ஹா ஹா....:lachen001:

ரங்கராஜன்
14-07-2010, 05:34 AM
டேய் எங்கிருந்து தான் இந்த மாதிரி தலைப்பை எல்லாம் யோசிப்பியோ, தலைப்பே ஒரு பக்க முன்னுரை மாதிரி இருக்கு டா, சரி உனக்கு தான் காதல் வரமாட்டுது இல்ல, அப்புறம் என்ன........... எந்த பெண்ணுக்கும் உன்ன பிடிக்கலை .... எந்த பெண்ணையும் உனக்கும் பிடிக்கலை அப்புறம் என்ன.................. என் வாழ்க்கையில் உன்னை விவேகானந்தர் மாதிரி, வாஜ்பாய் மாதிரி, அப்துல் கலாம் மாதிரி உசந்த இடத்துல வச்சி பார்க்கனும்..........:aetsch013::aetsch013::aetsch013:

மதி
14-07-2010, 06:02 AM

கவலையே படவேண்டாம்.. அதிமெல்லாம் இழுக்கப்போறதில்ல.. சிறுகதை எழுதலாம்னு இருந்தேன்.. பழக்க தோஷம்.. இழுத்துடுச்சு.. அடுத்த பகுதி எழுத ஆரம்பிச்சாச்சி.. இன்னிக்கே போட்டுடுவேன்...:icon_b:

மதி
14-07-2010, 06:03 AM
டேய் எங்கிருந்து தான் இந்த மாதிரி தலைப்பை எல்லாம் யோசிப்பியோ, தலைப்பே ஒரு பக்க முன்னுரை மாதிரி இருக்கு டா, சரி உனக்கு தான் காதல் வரமாட்டுது இல்ல, அப்புறம் என்ன........... எந்த பெண்ணுக்கும் உன்ன பிடிக்கலை .... எந்த பெண்ணையும் உனக்கும் பிடிக்கலை அப்புறம் என்ன.................. என் வாழ்க்கையில் உன்னை விவேகானந்தர் மாதிரி, வாஜ்பாய் மாதிரி, அப்துல் கலாம் மாதிரி உசந்த இடத்துல வச்சி பார்க்கனும்..........:aetsch013::aetsch013::aetsch013:
நானா யோசிக்கல.. கௌதம் மேனன்கிட்டேர்ந்து சுட்டது..வித் சம் கரெக்ஷன்..:eek::eek:
மத்தபடி... உசந்த இடத்துக்கு போற தகுதியெல்லாம் எனக்கு கிடையாது...டோய்...

தாமரை
14-07-2010, 06:48 AM
எப்படியும் ஜூலை 24 ஆம் தேதி கௌதம்மோட மீட் பண்ணப் போறேன்..

அவர்கிட்ட சொல்லி வைக்கிறேன்...

(ஜூலை 24 எங்க கல்லூரியோட வெள்ளி விழா. கௌதம் மேனன் எங்க ஜூனியர் ஆச்சா, அதனால் அவர் தான் சிறப்பு விருந்தாளி... நானும் கலந்துக்கறேன்..

கொஞ்சம் அளப்பறைய கொடுத்துதான் பார்ப்பமே!!!)

அப்புறம் த்கஸ்...

மதிக்கு காதல் வரலைன்னு சொல்லாதீங்க.. அவரோட காதலிங்க லிஸ்ட் ரொம்ப பெருசு... அந்தப் பொண்ணுங்களுக்குத் தான் காதலிக்கத் தெரியலை.. காதலும் தெரியலை...

மதி
14-07-2010, 06:50 AM
ஹாஹா.. போய்ட்டு நல்லபடியா வாங்க... காதல்ன்னா.. இன்னாங்கோ??

ரங்கராஜன்
14-07-2010, 07:50 AM
நானா யோசிக்கல.. கௌதம் மேனன்கிட்டேர்ந்து சுட்டது..வித் சம் கரெக்ஷன்..:eek::eek:
மத்தபடி... உசந்த இடத்துக்கு போற தகுதியெல்லாம் எனக்கு கிடையாது...டோய்...

உம் மூச்சி இவங்க எல்லாருக்கும் வேற ஒரு ஒத்துமை இருக்கு அதை மனதில் வைத்து தான் சொன்னேன்,,,,,,,,, மத்தபடி நீ பெரிய ஆளாய் வர வேண்டும் என்றெல்லாம் இல்லை........ இந்த வயசுக்கே பொண்ணு கிடைக்க மாட்டுது.....

தாமரை
14-07-2010, 08:55 AM
ஹாஹா.. போய்ட்டு நல்லபடியா வாங்க... காதல்ன்னா.. இன்னாங்கோ??

காதல்னா நம்மை இன்னாருக்கு ரொம்பப் பிடிக்கணும். நமக்காக இன்னார் கவலைப்படணும், வாழணும்.. சந்தோஷப்படணும் இப்படி அடுத்தவங்களுக்குப் பிடிப்பதற்காக நாம மெனக்கெடறது.:icon_b::icon_b::icon_b:

மதி
14-07-2010, 09:24 AM
முதல்முறையா ஏர்போர்ட்டுக்குப் போறேன். சந்தோஷமா இருந்துச்சு. எங்க சானல்ல பலவகையான டாக்களும் விமானத்துல போன கதைய சொல்லுவாங்க. அவ்ளோ ஆசையா இருக்கும். விமானம் பறக்க ஆரம்பிக்கும் போது காது ஜிவ்வுன்னு அடைச்சுக்குமாம். முதல்ல பயமா இருக்கும். ஆனா போகப் போக சரியாயிடும்னு சொன்னாங்க. ஒருவித திகிலோட தான் நான் ஏர்போர்ட்டுக்கு போனேன்.

காரிலேர்ந்து துள்ளிக் குதிச்சு இறங்கியதும் எஞ்சினீயரம்மா என்னைக் கூப்பிட்டாங்க. ‘செல்லமே.. என் தங்கமேன்னு’ ஜெர்மன் மொழியில கொஞ்சிக்கிட்டே, ‘செல்லம்.. கொஞ்சம் நேரம் தான் எங்கள விட்டு பிரிஞ்சு இருக்கப்போற. இந்த பெட்டிக்குள்ள இரு. உனக்கு ஒன்னும் ஆகாது. நாங்க இருக்கறோம்னு’ செல்லம் கொஞ்சினாங்க. அவங்க இருக்கறப்போ எனக்கு என்ன பயம். தலையாட்டிக்கிட்டே வாலாட்டினேன். நான் ஆறுகிலோக்கும் மேல இருக்கறதால பயணிகள் உட்கார்ற கேபினுக்குள்ள இருக்கக்கூடாதாம். தனியா வேறொரு இடத்துல இருக்கணுமாம். நாங்கல்லாம் உயிருள்ள ஜீவன்கள் கிடையாதான்னு கத்தத் தோணுச்சு. எஞ்சினீயருக்கு கஷ்டம் கொடுக்கக்கூடாதென்னு அமைதியா இருந்தேன்.

என்னைத் தனியா ஒரு கதவு கிரில் போட்ட பெட்டிக்குள்ள வச்சாங்க. நான் நடக்கறதுக்கும் படுக்கறதுக்கும் வசதியா இருந்துச்சு. அப்போ தான் கவனிச்சேன். என்னைய மாதிரி இன்னும் நாலு டாக் அங்க இருந்துச்சு. எங்கள வசதியா அந்த விமானத்துக்குள்ள ஏத்தினதும் உலகமே அமைதியான மாதிரி இருந்துச்சு. ரொம்ப பயமா போச்சு. கொஞ்ச நேரம் தான். அப்புறம் அங்க இருந்த டாக்-கெல்லாம் ப்ரண்ட் ஆயிட்டோம். என்கூட வந்த இன்னொரு டாக் நிறைய தடவை விமானத்துல போயிருக்காம்.

இப்படி தான் அந்த ஏர்பெர்லின் விமானம் பறக்க ஆரம்பிச்சது. ஆரம்பத்துல வயத்துல யாரோ கிச்சுகிச்சு மூட்டற மாதிரி இருந்துச்சு. அப்புறம் போகப்போக சரியாயிடுச்சு. விமானத்துல ஏறரத்துக்கு முன்னாடி நிறைய தண்ணி குடிச்சிருந்தேன். கொஞ்சம் களைப்பில்லாம் இருந்துச்சு. ஒரு வழியா விமானம் கோபன்ஹேகன் வந்தது. இங்க தான் முதன்முதலா ஜெஸ்ஸிய நான் சந்திச்சேன்.

முதல் விமானப்பயணம்ங்கறதால கொஞ்சம் கிறுகிறுப்பா இருந்துச்சு. தரை இறங்கியதும் எங்கள வெளியே கொண்டு வந்தாங்க. எஞ்சினீயரம்மா ஓடி வந்து என்னை கட்டிப்புடிச்சுக்கிட்டாங்க. ரொம்ப பாசக்காரங்க. அப்புறமா ஏதோ இமிகிரேஷனு சொல்லி கூட்டிட்டு போய் நோய் இருக்கானு செக் பண்ணினாங்க. அங்க தான் ஜெஸ்ஸிய சந்திச்சேன். ஜெஸ்ஸி.. பேச சொல்லும் போதே உடம்புல சின்னதா ஒரு அதிர்வு இருக்கு பாருங்க. அதான் அவ. அவ அழகுன்னு சொல்ல முடியாது.. பேரழகி. ஜெஸ்ஸி…ஷி இஸ் செக்ஸி டூ. நான் என் வாழ்க்கையிலேயே அப்படி ஒரு டாக்-அ சந்திச்சதில்ல. அவ்வளவு அசத்தலா இருந்தா. அவளுக்கும் அது முதல் பயணம் போல. பயந்திருந்தா. உடம்பு நடுங்கிட்டு இருந்துச்சு. மிரள மிரள பாத்துட்டு இருந்தா. இப்போ நினைச்சாலும் சிரிப்பா வருது. நான் ஏதோ பெரிய இவன் மாதிரி வால ஆட்டிக்கிட்டு இருந்தேன். வரிசைல எங்களுக்கு மூணு பேர் முன்னால ஜெஸ்ஸிய கூட்டிட்டு வந்தவங்க நின்னுட்டு இருந்தாங்க. இவ சுத்தி முத்தி தலைய திருப்பிப் பார்க்கும் போது நான் என் முகத்தை வேற பக்கம் திருப்பிக்கிட்டேன். நான் பாக்கறத அவ பாத்துடக்கூடாது பாருங்க.

க்யூ மெதுவா நடந்துட்டு இருந்தப்ப தான் அது நடந்தது. திரும்பி திரும்பி அங்கயும் இங்கயும் பாத்துட்டு இருந்த ஜெஸ்ஸி என்னை நேருக்கு நேரா பாத்தா. இத தான் மனுஷங்க பாத்ததும் காதல்னு சொல்றாங்களோ. அந்த நிமிஷம்… அந்த ஒரு கணம் என் வாழ்க்கையில மறக்க முடியாத நிமிஷம். என்னை அப்படியே புரட்டிப் போட்டுச்சு. உடம்புல என்னன்னவோ நிகழ்ந்துச்சு. சுத்திலும் மக்கள் ரொம்ப சந்தோஷமா இருக்கற மாதிரி இருந்துச்சு. அவ வாயோரமா ஒரு சின்னப் புன்னகை போதும். நாளெல்லாம் பாத்துட்டு இருக்கலாம். அவ.. என் ஜெஸ்ஸி…சார்.. ஜெஸ்ஸி… என் அஞ்சலைங்க..

அவளுக்குள்ளும் ஏதேதோ நடந்திருக்கும் போல. சட்டென திரும்பிக்கிட்டா. அதுக்கப்புறம் திரும்பவே இல்லை. எனக்கு கொஞ்சம் ஏமாத்தமா இருந்துச்சு. இன்னொரு முறை திரும்பேனு கத்தணும் போல இருந்தது. அங்க ஒரு காதல் காவியம் அரங்கேறுவது தெரியாம மனுஷங்கல்லாம் இயந்திரம் மாதிரி தங்களோட வேலைய பாத்துட்டு இருந்தாங்க. ஜெஸ்ஸியோட இமிகிரேஷன் முடிஞ்சு அவ கிளம்பிட்டா. எனக்குள்ள அப்படி ஒரு பதைபதைப்பு. ஒரு தடவை தான் நேருக்கு நேரா பாத்துக்கிட்டோம். ஒரு வார்த்தைக்கூட பேசினதில்ல. ஆனா என் உசுரே போற மாதிரி எனக்குள்ள அப்படி ஒரு தவிப்பு.

போறாளே போறாளே போறாளேனு சோககீதம் வாசிக்கணும் போல இருந்துச்சு. கடவுளுக்கு ஏன் இப்படி ஒரு கல்நெஞ்சம். எங்கிருந்தோ வந்த எனக்கு என் ஜெஸ்ஸிய காமிச்சு, கண்ணோடு கண் நோக்க வச்சு, ஒரு வார்த்தை பேசறதுக்குள்ளேயே எங்கள பிரிக்க வச்சு.. என்ன அமைப்பு இது? புரிஞ்சுக்கவே முடியல. அதோட பெரிய கொடுமை என்னன்னா நமக்கு புடிக்கறவங்களுக்கு நம்ம புடிச்சிருக்கான்னு தெரிஞ்சிக்கறது. ஒருதலையாவே காதலிச்சு வாழ்க்கையில நிறைய மனுஷங்க தோத்ததா நிறைய கேள்விப்பட்டிருக்கேன். என் வாழ்க்கையும் அப்படி ஆயிடுமோ? கடவுளே! ஒரே ஒரு முறை ஜெஸ்ஸி என்னைத் தான் விரும்பறானு தெரிஞ்சிக்கற சந்தர்ப்பத்த கொடு. அத நெனச்சுக்கிட்டே என் காலத்த ஓட்டிடுவேன்னு வேண்டினேன். உடனே கடவுள் கண்ண திறந்துட்டார். தன்னை கூட்டிட்டு வந்த அந்த அம்மாவோட போயிட்டு இருந்த ஜெஸ்ஸி ஒரே ஒரு தடவை என்னை திரும்பிப்பார்த்தா. அதுல ஆயிரம் ஆயிரம் காதல்கதைகள். அப்படி ஒரு காதல்பார்வை பார்த்தா. என்னால நிக்க முடியல. குதிக்க முடியல. ‘என்னைப்பார்த்துட்டா.. என்னைப்பார்த்து சிரிச்சுட்டா’னு கதற வேணும் போல இருந்துச்சு. என் கண்ணில் தாரைத் தாரையா கண்ணீர். என்னையும் என் கண்ணீரையும் பார்த்துக்கிட்டே ஜெஸ்ஸி அந்த கேபில ஏறிப் போனா….!!!

அவ கண்ணிலேயும் கண்ணீர்….!!

மதி
14-07-2010, 09:25 AM
காதல்னா நம்மை இன்னாருக்கு ரொம்பப் பிடிக்கணும். நமக்காக இன்னார் கவலைப்படணும், வாழணும்.. சந்தோஷப்படணும் இப்படி அடுத்தவங்களுக்குப் பிடிப்பதற்காக நாம மெனக்கெடறது.:icon_b::icon_b::icon_b:
ஓ....கஷ்டமா இருக்கும் போல..:icon_b::icon_rollout::icon_rollout:

கீதம்
14-07-2010, 09:30 AM
காதல்னா என்னான்னு கொஞ்சம் முன்னாலதான் கேட்டீங்க. இந்த அத்தியாயத்தில காதலை ரொம்ப அழகா, உணர்வுபூர்வமா எழுதி லயிக்கவச்சிட்டீங்களே! பிரமாதம் மதி.

மதி
14-07-2010, 09:33 AM
காதல்னா என்னான்னு கொஞ்சம் முன்னாலதான் கேட்டீங்க. இந்த அத்தியாயத்தில காதலை ரொம்ப அழகா, உணர்வுபூர்வமா எழுதி லயிக்கவச்சிட்டீங்களே! பிரமாதம் மதி.
இன்னும் காதல் எல்லோருக்கும் புரியாத ஒரு மரபுக் கவிதை..:D:D
எனிஹௌ... நன்றி..!!!

samuthraselvam
14-07-2010, 10:57 AM
மதிக்குள்ள பெரிய காதல் காவியமே எழுதும் அளவுக்கு திறமை இருக்குது.... எதோ படம் பார்க்கும் பீலிங் வருதுப்பா... இதுக்கு தான் இதுக்கு தான் மதி... இப்படி ஒரு பாகம் போட்டுட்டு அடுத்த பாகத்துக்கு தாமதிக்க வச்சா கோவம் வருமா வராதா? நீங்களே சொல்லுங்க...

மனிதனை விட இந்த நாய்களின் காதல் அழகுபா... மனிதர்களை தான் சில சமயம் நாய்க் காதல் செய்றாங்க என்று திட்டுவாங்க... ஆனா இனிமே அப்படி திட்டக்கூடாது....

என்ன இருந்தாலும் இப்படியெல்லாம் திட்டித் தான் அடுத்த பாகத்தை எழுதவைக்க முடியுது....

மதி
14-07-2010, 11:04 AM

ஹாஹா.. காவியமாவது ஒன்னாவது... கண்டிப்பா நாளைக்கு அடுத்தபாகம் வரும்... படம் சொன்னதும் தான் ஞாபகம் வருது.. டிக்கட் புக் பண்ணிருக்கேன்.. போகணும்.. தனியா..:D:D

தொடர்ந்து படிப்பதற்கு நன்றி லீலுமா.. உங்கள மாதிரி ஆளுங்க படிக்கறதால..என்ன வேணா எழுதலாம்னு..தைரியம் வருது..:icon_b::icon_b:

samuthraselvam
14-07-2010, 11:39 AM

இப்படி குறிப்பு சொன்னாலும் நீங்க நினைப்பதை நாங்க மறுப்போம்... ஆமா படம் பார்க்க கூட யார் வரா?

மதி
14-07-2010, 11:42 AM
இப்படி குறிப்பு சொன்னாலும் நீங்க நினைப்பதை நாங்க மறுப்போம்... ஆமா படம் பார்க்க கூட யார் வரா?
உண்மை தான்... தனியா தான் போறேன்...!!:icon_rollout::icon_rollout:

ஆதவா
14-07-2010, 11:55 AM
அதானே பார்த்தேன்... என்னடா ஜெஸ்ஸி மனசுல எதுவும் இல்லையோன்னு நினைச்சேன். நல்லா கதை போகுது. நாய்களுக்குள்ளயும் (சாரி) டாக்குள்ளயும் இப்படியொரு காதலா?

இருந்தாலும் டாக் அழுது நான் இதுவரைக்கும் பார்த்ததேயில்லை!!!

அமரன்
14-07-2010, 02:41 PM
காதலும் பொண்ணுகளும் ஒரே மாதிரிப்பா.

ஒருத்தன் தங்களில் அதிக அன்புடன் இருக்கானு தெரிஞ்சால் அவனை அலைக்கழிச்சு அழ வைக்கிறதில இருவரும் டாக்டர் பட்டம் பெற்றவங்க.

மதீயிக் இரண்டாம் பாகம் அதை வலுப்படுத்துது.

மதி
14-07-2010, 04:55 PM
அதானே பார்த்தேன்... என்னடா ஜெஸ்ஸி மனசுல எதுவும் இல்லையோன்னு நினைச்சேன். நல்லா கதை போகுது. நாய்களுக்குள்ளயும் (சாரி) டாக்குள்ளயும் இப்படியொரு காதலா?

இருந்தாலும் டாக் அழுது நான் இதுவரைக்கும் பார்த்ததேயில்லை!!!
இங்க தான் தப்பு பண்றீங்க... மனுஷங்க நீங்க.. இன்னொரு மனுஷனோட உணர்ச்சிகளையே புரிஞ்சுக்க முடியல.. இதுல எப்படி டாக் சிரிக்குதா.. அழுதான்னு தெரியும்.. அப்படின்னு நான் கேக்கல.. மார்க் கேக்க சொன்னாருங்க.. நான் கேட்டேன்...:icon_b:

மதி
14-07-2010, 04:56 PM
காதலும் பொண்ணுகளும் ஒரே மாதிரிப்பா.

ஒருத்தன் தங்களில் அதிக அன்புடன் இருக்கானு தெரிஞ்சால் அவனை அலைக்கழிச்சு அழ வைக்கிறதில இருவரும் டாக்டர் பட்டம் பெற்றவங்க.

மதீயிக் இரண்டாம் பாகம் அதை வலுப்படுத்துது.
ஹிஹி.. அனுபவம் இருந்தா தெரியும்.. எல்லாம் கேள்விஞானம் தான்.. அத வச்சே காலத்த ஓட்ட வேண்டியதா இருக்கு..:D:D:D

மதி
15-07-2010, 07:04 AM
சொல்ல மறந்துட்டேன். ஜெஸ்ஸி பொமரேனியன் இனத்தை சேர்ந்தவ. நல்லா புசுபுசுனு நிறைய முடி இருக்கும். வெள்ளைக் கலர்ல. பார்க்க தேவதை மாதிரி இருப்பா. அவ வாலாட்டிட்டு போற ஸ்டைலே தனி. அவ அந்த இடத்தை விட்டுப் போனதும் உலகமே இருண்ட மாதிரி இருந்துச்சு. கண்ணை இருட்டிட்டு வர்ற மாதிரி இருந்துச்சு. உண்மையிலேயே நான் மயக்கமாயிட்டேன்.

கண் முழிச்சுப் பார்த்தா ஏதோ ஆஸ்பிடல்ல இருந்தேன். சுத்தி அந்த எஞ்சினீயரம்மாவும் எஞ்சினீயரும் நின்னுக்கிட்டு இருந்தாங்க. எஞ்சினீயரம்மா கண்ணுல கண்ணீர். ‘விமானப்பயணம் ஒத்துக்கலேன்னும் அதனால மயக்கமாயிருக்கலாம்னும்’ டாக்டர் சொல்லிட்டு இருந்தார். ரெண்டு மூணு நாள்லேயே சரியாயிடும்னு சொல்லி கொஞ்சம் மருந்து எழுதிக் கொடுத்தார். எனக்கில்ல தெரியும் உயிர் போனதுக்கு அப்புறம் இங்கிருப்பது வெறும் உடல் தானே. என் ஜெஸ்ஸி எங்க இருக்காளோ.. எப்படி இருக்காளோ? ஆனா அவ இந்த நாட்டில தான் இருக்காங்கற நெனப்பே எனக்கு தெம்ப கொடுத்தது.

ஊருக்கு கொஞ்சம் தள்ளி பெரியவீட்டை எஞ்சினீயர் வாடகைக்கு எடுத்திருந்தார். பெரிய வீடு, நீச்சல்குளம், நான் தங்க தனிவீடுனு அமர்க்களமா இருந்தது. நாங்க போன நேரம் வானிலையும் நல்லா இருந்தது. ரெண்டு நாள் வீட்டில நான் ரெஸ்ட் எடுத்தேன். எஞ்சினீயரம்மா எனக்கு வேளாவேளைக்கு சாப்பாடும் மருந்தும் கொடுத்தாங்க. ரெண்டு நாள் கழிச்சு கார்ல ஊர் சுத்த கிளம்பினோம். அந்த ஊரில இருக்கிய பெரிய பார்க்குக்கு போனோம்.

பார்க்க பார்க்க என் கண்ணு விரிஞ்சுது. யப்பா.. எவ்ளோ பெரிய பார்க். டஸல்டார்ஃப்ல பார்க் இருக்கும். ஆனா இவ்ளோ பெரிசு இல்லே. ஏகப்பட்ட மரங்களும், செடிகளும்.. பச்சைப்பசேல்னு புல்வெளிகளும்னு ஆள அசத்துச்சு. கூட்டமும் அதிகமில்லை. என்னை மாதிரியே நிறைய டாக்குங்க வந்திருந்தாலும் புது இடங்கறதால யார்கிட்டேயும் பேசல. என்னைக் கூட்டிட்டு போன எஞ்சினீயர் கொண்டு வந்திருந்த ஃப்ரீஸ்பிய தூக்கிப் போட்டார். நான் ஓடிப் போய் எடுத்து வந்தேன். இது தான் எங்க ரெண்டு பேருக்கும் பிடிச்ச விளையாட்டு. விளையாடி ரொம்ப நாள் ஆச்சு. எஞ்சினீயரம்மா ஒரு ஓரமா பெஞ்ச்சில உட்கார்ந்து ஸ்வெட்டர் பின்னிட்டு இருந்தாங்க. அன்னிக்கு தான் எனக்கு விஷயமே தெரியும், எங்க வீட்டுல நாலாவதா ஒருத்தர் வரப்போறாங்க. இன்னும் ஏழு மாசத்துலேன்னு. எஞ்சினீயரம்மா ரொம்ப சந்தோஷமா இருந்தாங்க. அவங்க மட்டுமில்ல. அங்க நான் பார்த்த பல பேரு எப்பவுமே சிரிச்ச முகத்தோட சந்தோஷமா இருந்தாங்க. உலகத்துலேயே சந்தோஷமான மக்கள் அதிகமிருக்கற நாடுன்னு சும்மாவா சொன்னாங்க.

விளையாடிக்கிட்டு இருக்கறப்போ அடிச்ச காத்துல ஃப்ரிஸ்பி ஓரமா இருந்த பெரிய புதர்க்குள்ள விழுந்துடுச்சு. இருட்டா இருந்த புதர்க்குள்ள நுழைஞ்ச நான் தேடிக் கண்டிபுடிச்சேன். எடுக்கலாம்னு வாயில கவ்வும் போது எதிர்பக்கமா யாரோ இழுக்கற மாதிரி இருந்துட்டு. எங்க இனத்துக்கே தோக்கற பழக்கம் கிடையாது. நானும் வலுக்கட்டாயமா இழுக்க ஆரம்பிச்சேன். யாரோ ஒரு டாக் இழுக்குது. வெளியில ஃப்ரிஸ்பியோட அந்த டாக்கையும் இழுத்துட்டு வந்துட்டேன். வந்ததுமே என் வாயிலே இருந்த ஃப்ரிஸ்பிய விட்டுட்டேன். நீங்க நினைக்கறது உண்மை தான். சந்தேகமே இல்லாம அது ஜெஸ்ஸி தான். இமைக்க இமைக்க பாத்துட்டு இருந்தேன். ஜெஸ்ஸியும் ஃப்ரிஸ்பிய போட்டுட்டு என்னைப் பார்த்துட்டு இருந்துச்சு. கொஞ்சம் வெட்கப்பட்ட மாதிரி இருந்துச்சு. இருக்காதா பின்ன என்ன மாதிரி ஒரு ஆண் டாக் காதலனா கிடைக்க எத்தனையோ பெண் டாக் தவம் கிடக்கும் போது. ஜெஸ்ஸி பல் அத்தனையும் முத்து போல வெண்மை. அவளை மாதிரியே. ரெண்டு பேரும் பார்த்துட்டே இருக்கும் போது ,’ஜெஸ்ஸி.. ஜெஸ்ஸி’னு கூப்பிட்டுக்கிட்டே அவ அம்மா வந்தாங்க.

அப்போ தான் அவ பேரு ஜெஸ்ஸின்னு எனக்குத் தெரியும். ஒவ்வொரு தடவை அவ பேர அவங்க சொல்ற போதும் அப்படியே அடி வயித்துல ஜிலீர்னு ஒரு உணர்வு வரும். காதலிச்சுப் பாருங்க. அப்ப புரியும். காதுமடல்லாம் துடிக்க துடிக்க வாலை மிக வேகமா ஆட்டினேன். ஜெஸ்ஸியும் வேகமா ஆட்டினா. என்னை அவளுக்கு ரொம்பபிடிச்சுப் போட்டு.

அதே நேரத்துல என்னை தேடிக்கிட்டு எஞ்சினீயர் வர அவர் கூப்பிட்டதுலேர்ந்து தான் என் பேர் மார்க்னு ஜெஸ்ஸி தெரிஞ்சுக்கிட்டா. இன்னும் வேகமா ஆமோதிக்கற மாதிரி வாலாட்டினா. எஞ்சினீயரும், ஜெஸ்ஸியோட அம்மாவும் பரஸ்பரம் அறிமுகப்படுத்திக்கிட்டாங்க..

“ஹாய் நான் டேனியல்..” “நான் க்ளாரா..!”

அவங்க ரெண்டு பேரும் பேசிக்கிட்டே எஞ்சினீயரம்மா இருக்கற இடத்துக்குப் போக நானும் ஜெஸ்ஸியும் பின் தொடர்ந்தோம். எங்க மௌனமே எங்களுக்குள்ள பல உரையாடல்கள நடத்துச்சு. முதல் முறையா என் பக்கத்துல நடந்து வர ஜெஸ்ஸி வெட்கப்பட்டா. அதனால கொஞ்சம் தள்ளித் தள்ளி நடந்தா. பேசலாம்னு பாத்தா…. முகத்தை வேற பக்கம் திருப்பிக்கிட்டா. அப்புறமா சொன்னா.. அன்னிக்கு ரொம்ப வெக்க வெக்கமா இருந்துச்சாம். நானும் விடாம அவ வாலைத் தட்டினேன். அவ கண்டுக்கல.

எஞ்சினீயரம்மாக்கிட்ட போனதும் அவங்க மூணு பேரும் பேச ஆரம்பிக்க என்னையும் ஜெஸ்ஸியையும் தனியே விட்டுட்டாங்க. இதான் சந்தர்ப்பம்னு ஜெஸ்ஸிய பாத்து செல்லமாய் கூப்பிட அவ ஓட ஆரம்பிச்சா. நானும் விடல. துரத்த ஆரம்பிச்சேன். ரெண்டு பேரும் ஓடி ஓடி அந்த பார்க் ஓரத்துல இருந்த ஏரிக்கரைக்கு வந்துட்டோம். ஏரியோரமா காலை நெனச்சுக்கிட்டு ஜெஸ்ஸி நிக்க நானும் பக்கத்துல நின்னேன். சூரியன் அப்போ தான் மறைய ஆரம்பிச்சிருந்தான். அந்த இடமே தகதகன்னு ரம்மியமா இருந்துச்சு. கூடவே என் ஜெஸ்ஸி வேற. கேக்க வேணுமா..? சத்தியமா நான் சொர்க்கத்திலே தான் இருக்கேன்.

மெதுவா பேச ஆரம்பிச்சேன்.

“ஜெஸ்ஸி…”

“ம்ம்..”

“என்கிட்ட பேச மாட்டியா..?”

“அப்படி எல்லாம் இல்லே..”

“பின்ன ஏன் பாத்தும் பாக்காத மாதிரி இருக்க..”

“என்னமோ தெரியல.. வெக்கம் வெக்கமா இருக்கு..”

“என்கிட்ட என்ன வெக்கம்.. உன்னை முத முதலா ஏர்போர்ட்ல பாத்தவுடனே என் மனச பறிகொடுத்துட்டேன்..”

“நானும் தான்.. ஏதோ ஷாக் அடிச்ச மாதிரி இருந்துச்சு. உடனே கிளம்பினவுடனே.. அழுகை அழுகையா வந்துச்சு..”

“நானும் பாத்தேன். என் மேல அவ்ளோ ஆசையா..”

ஆமாம் என்பது போல் தலையாட்டினா..

அப்படியே வானத்துல பறக்கற மாதிரி இருந்துச்சு. நாங்க பேசினது எங்க பாஷையில. உங்க வசதிக்காக மொழிபெயர்த்து கொடுத்தேன். கொஞ்ச நேரம் பேசிக்கிட்டே அவங்க மூணு பேரும் இருந்த இடத்துக்கு வந்தோம். கிளம்ப வேண்டிய நேரம் வந்தததும் துக்கம் தொண்டையை அடைக்க பிரியாவிடை பெற்றோம்.

வீட்டுக்கு வந்து சேர்ந்ததும் ரொம்பவே அசதியா இருந்தாலும் ஜெஸ்ஸிய சந்திச்சு பேசினது ரொம்ப புத்துணர்ச்சியா இருந்துச்சு. சாப்டுட்டு சீக்கிரமே படுக்கப் போயிட்டேன். கனவுல ஜெஸ்ஸி… தேவதை மாதிரி. அவளுக்கும் எனக்கும் ரெக்கை முளைச்சிருக்கு. ரெண்டு பேரும் பறந்துக்கிட்டே உலகத்துல இருக்கற அதிசய இடங்கள்ல்லாம் சுத்திப் பார்க்கிறோம். எப்போ தூங்கினேன்னு தெரியல.

அடுத்த நாள் காலையில் ஒரு ஆச்சர்யம் காத்துட்டு இருந்தது.

Akila.R.D
15-07-2010, 07:24 AM
என்ன சொல்றதுன்னே தெரியல மதி...

மனிஷங்க காதல் எல்லாம் எழுதி முடிச்சுட்டு டாக் காதல் எழுதறீங்க...

கதை நல்லாதான் போகுது...

மார்க் ஜெஸ்ஸி காதல் தொடரும்னு நெனைக்கிறேன்...

மதி
15-07-2010, 07:26 AM
என்ன சொல்றதுன்னே தெரியல மதி...

மனிஷங்க காதல் எல்லாம் எழுதி முடிச்சுட்டு டாக் காதல் எழுதறீங்க...

கதை நல்லாதான் போகுது...

மார்க் ஜெஸ்ஸி காதல் தொடரும்னு நெனைக்கிறேன்...
:D:D:D
இப்படி தான் பல பேர் என்ன சொல்றதுன்னே தெரியாம இருக்காங்க... மனுஷங்க காதல்லாம் முழுசா எழுதி முடிக்கல.. மார்க் ஜெஸ்ஸி முடிச்சதும்... அடுத்த காதல் கதை விரைவில்.. அதுல மனுஷங்க தான்.. காதலிக்கறாங்க.. இல்ல.. இல்ல.. அது வேற...:icon_ush::icon_ush::icon_ush:

ஆதவா
15-07-2010, 08:15 AM
ஏர்போர்ட்டுக்கு அப்பறம் வேற எங்க சந்திப்பாங்கன்னு நான் நெனச்சமாதிரியே இருக்கே... அதுசரி... மார்கேதான் ட்ரான்ஸ்லேட்டர் லீயா? :sprachlos020:

ஆனா ஒரே ஒரு விஷயம் மட்டும் ஒத்துக்கவே முடியலை... ஆண் டாக்காக பெண் டாக் தவம் இருப்பதெல்லாம் கொஞ்சம் ஓவர்... :rolleyes:

தொடருங்க...... டாக் காதலை!

சுடர்விழி
15-07-2010, 08:30 AM
டாக் காதல் ரொம்ப நல்லா இருக்கு:mini023:....சட்டுபுட்டுனு கல்யாணத்தைப் பண்ணிடுங்க..டாக்-க்கு இல்ல...உங்களுக்குத் தான் மதி சொன்னேன் :D:D அப்புறம் மங்கி,டாங்கி காதல் கதைனு போகப்போகுது...:D

மதி
15-07-2010, 08:53 AM
ஏர்போர்ட்டுக்கு அப்பறம் வேற எங்க சந்திப்பாங்கன்னு நான் நெனச்சமாதிரியே இருக்கே... அதுசரி... மார்கேதான் ட்ரான்ஸ்லேட்டர் லீயா? :sprachlos020:

ஆனா ஒரே ஒரு விஷயம் மட்டும் ஒத்துக்கவே முடியலை... ஆண் டாக்காக பெண் டாக் தவம் இருப்பதெல்லாம் கொஞ்சம் ஓவர்... :rolleyes:

தொடருங்க...... டாக் காதலை!
காதல்ல என்ன புதுமை இருக்கு... டாக் கெட்டா பார்க் தானே...:icon_b::icon_b:
ஆனா இந்த கதை நான் நெனச்ச மாதிரி போகலியே..:frown::frown: அதுல எனக்கு கொஞ்சம் வருத்தம் தான்...:icon_p:

டாக் காதல் ரொம்ப நல்லா இருக்கு:mini023:....சட்டுபுட்டுனு கல்யாணத்தைப் பண்ணிடுங்க..டாக்-க்கு இல்ல...உங்களுக்குத் தான் மதி சொன்னேன் :D:D அப்புறம் மங்கி,டாங்கி காதல் கதைனு போகப்போகுது...:D
என்ன இப்படி சொல்லிட்டீங்க...? இந்த ஒரு கதை மட்டும் தான்.. அப்புறம் மனுச காதல் தான்.. கல்யாணமா..? அப்படின்னா.....:icon_ush::icon_ush:

ஆதவா
15-07-2010, 11:26 AM

ஏற்கனவே காதல்னா என்னான்னு கேட்டீங்க இப்ப கல்யாணத்தை வேற தாமரை அண்ணா வந்து சொல்லனுமா? இவ்வளவுதானா இல்லை இன்னும் ஏதாச்சும் தெரியாம இருக்கா? ஆனாலும் நீங்க ரொம்பத்தான் என்னை மாதிரி இருக்கீங்க... :)

பேசாம மதிக்கு நானே பொண்ணு பார்த்திடலாம்னு இருக்கேன்..... என்ன சொல்றீங்க? :icon_rollout:

மதி
15-07-2010, 11:31 AM

ஹிஹி.... இந்த மாதிரி ஒரு கதைய எழுதப்போறேன்னு சொன்னப்ப.. அம்மா..ஏன் டா என்னாச்சுனு கேட்டாங்க.. அந்த அளவுக்கு பயந்து போயிருக்காங்க... :eek::eek::eek:

பா.ராஜேஷ்
15-07-2010, 04:03 PM
உங்க ரவுசு தாங்கலபா... இருந்தாலும் ரொம்ப நல்லாருக்கு... என்ன பண்றது!!! எல்லாம் நேரம்... :confused:

கீதம்
16-07-2010, 12:16 AM
பாராட்டுகள் மதி. ஞமலி (நாய்ன்னு சொல்லக்கூடாதுன்னு சொல்லீட்டீங்களே) மொழியை அழகுத் தமிழில் அருமையான மொழிபெயர்ப்பு செய்கிறீர்கள். அப்புறம் கதை அம்மாவுக்குப் பிடித்திருக்கிறதா? நேரடியா சொல்ல முடியாமல் மறைமுகமா சொல்றதா நினைக்கப்போறாங்க.:)

மதி
16-07-2010, 02:38 AM
உங்க ரவுசு தாங்கலபா... இருந்தாலும் ரொம்ப நல்லாருக்கு... என்ன பண்றது!!! எல்லாம் நேரம்... :confused:
அதே தான்... எல்லாம் நேரம்.....:wuerg019::wuerg019::wuerg019:

மதி
16-07-2010, 02:44 AM
பாராட்டுகள் மதி. ஞமலி (நாய்ன்னு சொல்லக்கூடாதுன்னு சொல்லீட்டீங்களே) மொழியை அழகுத் தமிழில் அருமையான மொழிபெயர்ப்பு செய்கிறீர்கள். அப்புறம் கதை அம்மாவுக்குப் பிடித்திருக்கிறதா? நேரடியா சொல்ல முடியாமல் மறைமுகமா சொல்றதா நினைக்கப்போறாங்க.:)
நன்றிங்க கீதம்...

என்னோட பழைய கதைகளே இன்னும் பாக்கி இருக்கு அவங்க படிக்க. ஆனா அதுக்கு முன்னாடியே என்ன கதைன்னு சொல்லிடுவேன். இந்தக் கதையோட தலைப்பையும் காதல்கதைனும் மட்டும் சொன்னேன்.:eek::eek::eek:

அவங்ககிட்ட எப்பவுமே நேரடியா சொல்லித் தான் பழக்கம். அதனால இதெல்லாம் பெரிசா எடுத்துக்க மாட்டாங்க. ஏதோ பையன் எழுதினா சரிதான்ங்கற வரைக்கும்..:icon_b::icon_b::icon_b:

mania
16-07-2010, 04:52 AM
தலைப்பை மாத்துங்கப்பா.......!!!!!!!

உலகத்துல எத்தனையோ பேர் இருக்கும்போது ஜெஸ்ஸி ஏன் என்னை லவ் பண்ணினா.....??????? இது மதிக்கு ரொம்ப பொருத்தமா இருக்குமில்லை......:rolleyes::D:D:D
கரிசனத்துடன்
மணியா....:D:D:D

மதி
16-07-2010, 05:08 AM
தல...................

சத்தியமா நான் எதிர்பாக்கல.... தலைப்பு பொருத்தமா தான் இருக்கும்... ஹிஹி.. அந்த ஜெஸ்ஸி யாருன்னு சொல்லுங்க... லெட் மி ஸீ...:D:D

எப்படி இருக்கீங்க...? சீக்கிரமே உங்களை சந்திக்கறேன்..:D:D

mania
16-07-2010, 05:13 AM
கேள்விப்பட்டேன்......!!!!!!??????? அதான் நானும் அவசரம் அவசரமா கிளம்பிக்கொண்டிருக்கிறேன்.....!!!!!!:rolleyes::D:D
அன்புடன்
மணியா....:D

மதி
16-07-2010, 05:15 AM
கேள்விப்பட்டேன்......!!!!!!??????? அதான் நானும் அவசரம் அவசரமா கிளம்பிக்கொண்டிருக்கிறேன்.....!!!!!!:rolleyes::D:D
அன்புடன்
மணியா....:D
எங்க போனாலும் விட மாட்டோம்ல...!! இங்க இல்லேன்னா அங்க... எல்லாம் எங்க ஊரு தான்...:eek::eek::eek:

mania
16-07-2010, 05:21 AM
காணக்க(அ)ரிய மங்களம் தானே.......!!!!
அன்புடன்
மணியா......:D

samuthraselvam
16-07-2010, 06:19 AM
மதி (டாக்) காதலை இவ்வளவு அழகா யாராலையும் சொல்ல முடியாது.... காதல் பண்ணுறவங்க எப்படியெல்லாம் இருப்பாங்க, அவங்க மனசு எப்படியெல்லாம் அலைபாயும்னு சூப்பரா சொல்லி இருக்கீங்க...

இவ்வளோ அழகா சொல்லணும்னா ஒண்ணு அனுபவம் இருக்கணும் அல்லது அவ்வளோ கற்பனையும் கனவுகளும் மனதில் இருக்கணும். எது இதில் உண்மைன்னு எனக்குப் புரியலை?

எதுவா இருந்தாலும் ஓகே... நல்லது நடந்தாலே சரிப்பா... அம்மா நினைச்சிருப்பாங்க, நம்ம பையனுக்கு இப்பதான் கல்யாண யோகம் வந்திருக்கு போலன்னு... நீங்க இன்னும் வித்யாசமா யோசிச்சு, டைனோசர் காதல், சிட்டுக் குருவி காதல்ன்னு கதை சொல்லலாம், நல்லா இருக்கும்னு நான் நினைக்கிறேன்...

ஆனா ஒண்ணு மதிக்கு என்னமோ ஆகிடுச்சு... இப்பல்லாம் சீக்கிரமே அடுத்த பாகத்தை போட்டுடறார், நிறைய கதையெல்லாம் வித்தயாசமான கருவால் உருவாக்கி கொடுக்கிறார்....

சரி சரி நெஜமாவே கல்யாணம்ன்னா என்னான்னே தெரியாதா? கல்யாணம்னா ஒரு பொண்ணுக்கு ஒரு பையனை கட்டிவச்சி டெய்லி பூரிக்கட்டை, பருப்பு மத்து, கரண்டி, அப்புறம் வசதிக்கு தகுந்தா மாதிரி கைக்கு கிடைப்பதையெல்லாம் வச்சி அந்தப் பையனுக்கு பூஜை நடக்கும்... இதுதான்பா கல்யாணம்...

ஆதவா
16-07-2010, 07:09 AM

இப்படியெல்லாம் சொன்னாக்கா, நாங்களெல்லாம் எப்படிங்க கல்யாணம் பண்றது? என்னதான் உண்மைன்னாலும் இப்படி பப்லிக்காவா சொல்றது?

aren
16-07-2010, 07:39 AM
அதுக்குள்ள வந்தீங்கன்னா ஒரு மீட்டிங் போட்டுடலாம்.. (இம்முறை முழுக்க என் செலவுல..ஹிஹி.. எவ்ளோ நாளளக்குத் தான் ஏமாத்தறது..? .. :icon_b:

மெய்யாலுமேவா. அடப்பாவிங்களா, இப்போ என்னால் பெங்களூர் வரமுடியாமல் போகிறதே.

சென்னைக்குத்தானே வருகிறீர்கள். அங்கே நம்ம ஆள் தக்ஸை வைத்து ஒரு கை பார்த்துவிடச் சொல்லலாம்.

aren
16-07-2010, 07:41 AM
சரி சரி நெஜமாவே கல்யாணம்ன்னா என்னான்னே தெரியாதா? கல்யாணம்னா ஒரு பொண்ணுக்கு ஒரு பையனை கட்டிவச்சி டெய்லி பூரிக்கட்டை, பருப்பு மத்து, கரண்டி, அப்புறம் வசதிக்கு தகுந்தா மாதிரி கைக்கு கிடைப்பதையெல்லாம் வச்சி அந்தப் பையனுக்கு பூஜை நடக்கும்... இதுதான்பா கல்யாணம்...

ஐயோ பாவம், அண்ணன் இப்படியா உங்களிடம் தினமும் வாங்கி கட்டிக்கொள்கிறார்.

samuthraselvam
16-07-2010, 08:22 AM
இப்படியெல்லாம் சொன்னாக்கா, நாங்களெல்லாம் எப்படிங்க கல்யாணம் பண்றது? என்னதான் உண்மைன்னாலும் இப்படி பப்லிக்காவா சொல்றது?

இப்படியெல்லாம் சொன்னா மட்டும் கல்யாணம் பண்ணிவைக்காமையா விடப்போறாங்க, இல்ல, நீங்கதான் பண்ணிக்காமையே இருந்திடப்போறீங்களா? அதெல்லாம் இல்லையில்ல? எல்லாம் உங்கள மாதிரி ஆளுங்களுக்கு ஒரு முன்னெச்சரிக்கை தான்.

அப்ப, உங்களுக்கு கல்யாணம் ஆனா பின்னாடி பூஜை நடந்தால் வெளியே சொல்லாமலேயே இருப்பீங்களா? அவ்ளோ நல்லவரா நீங்க? தமனா......... ச்சீ, ஆதவி சீக்கிரம் வாங்க....(ஆதவனுக்கு பெண்பால் ஆதவி):lachen001:

ஆதவா
16-07-2010, 08:24 AM
மெய்யாலுமேவா. அடப்பாவிங்களா, இப்போ என்னால் பெங்களூர் வரமுடியாமல் போகிறதே.

சென்னைக்குத்தானே வருகிறீர்கள். அங்கே நம்ம ஆள் தக்ஸை வைத்து ஒரு கை பார்த்துவிடச் சொல்லலாம்.

தக்ஸ், கலைஞர் டிவியில் அல்லவா வேலை செய்கிறார்? எப்போ கைரேகை ஜோஸியர் ஆனார்?

(சரி, தக்ஸ் கைரேகை பார்த்து மதிக்கு கல்யாணமோ? :icon_hmm:)

ஆதவா
16-07-2010, 08:28 AM
இப்படியெல்லாம் சொன்னா மட்டும் கல்யாணம் பண்ணிவைக்காமையா விடப்போறாங்க, இல்ல, நீங்கதான் பண்ணிக்காமையே இருந்திடப்போறீங்களா? அதெல்லாம் இல்லையில்ல? எல்லாம் உங்கள மாதிரி ஆளுங்களுக்கு ஒரு முன்னெச்சரிக்கை தான்.

அப்ப, உங்களுக்கு கல்யாணம் ஆனா பின்னாடி பூஜை நடந்தால் வெளியே சொல்லாமலேயே இருப்பீங்களா? அவ்ளோ நல்லவரா நீங்க? தமனா......... ச்சீ, ஆதவி சீக்கிரம் வாங்க....(ஆதவனுக்கு பெண்பால் ஆதவி):lachen001:

இந்த பெண்ணாதிக்க முறையை கண்டித்து, பேச்சிலர்களான மதி, ஆதவா, மற்றும் நண்பர்கள் எல்லோரும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம். :music-smiley-012:

(நாங்கள்லாம் கமுக்கமா இருந்துக்குவோம்.!! வெளிய சொல்லமாட்டோம்ல. :icon_03:)

samuthraselvam
16-07-2010, 08:29 AM
ஐயோ பாவம், அண்ணன் இப்படியா உங்களிடம் தினமும் வாங்கி கட்டிக்கொள்கிறார்.

அண்ணா அரேன் அண்ணா... ! நீங்க பார்க்காத்தையா நான் புதுசா சொல்லுறேன்? எல்லாத்தையும் வாங்கிட்டு இப்படி ஒண்ணுமே தெரியாத மாதிரி அவருக்காக அனுதாபப்படுறீங்களே?

அவர் கண்டிப்பா மன்றம் வரமாட்டார் அப்படிங்கிற தைரியத்தில் மதிக்கும் மதிபோல இன்னுமும் கல்யாண பந்தத்தில் இம்சைப்படாமல் இருப்பவங்களையும் பயமுறுத்த சொல்லும் பொய் தான்...

யாவரும் நலமாக இருக்க விரும்பும் லீலுமா....:icon_rollout:

samuthraselvam
16-07-2010, 08:34 AM
இந்த பெண்ணாதிக்க முறையை கண்டித்து, பேச்சிலர்களான மதி, ஆதவா, மற்றும் நண்பர்கள் எல்லோரும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம். :music-smiley-012:

(நாங்கள்லாம் கமுக்கமா இருந்துக்குவோம்.!! வெளிய சொல்லமாட்டோம்ல. :icon_03:)

ஆமாமா, வெளியே சொன்னால் அதுக்கும் சேர்த்தில்ல, வாங்கணும்...
இது பெண்ணாதிக்கமா? நல்லெண்ணம் தான் ஆதவா.... யாம் பெற்ற இன்பம் பெருக வையகமே..

ஆதவா
16-07-2010, 08:39 AM
யாம் பெற்ற இன்பம் பெருக வையகமே...

யாவரும் நலமாக இருக்க விரும்பும் லீலுமா....

அவ்..... அப்படின்னா எல்லா ஆண்களும் அடிவாங்கணும்... அதை பார்த்துட்டு அவங்ககிட்டயே நலமான்னு கேட்கணும்ங்கிறீங்க!!! :sprachlos020:

இந்த ஆண்களைக் காப்பாத்த யாருமே இல்லையா!!!! :medium-smiley-100:

samuthraselvam
16-07-2010, 08:51 AM
அவ்..... அப்படின்னா எல்லா ஆண்களும் அடிவாங்கணும்... அதை பார்த்துட்டு அவங்ககிட்டயே நலமான்னு கேட்கணும்ங்கிறீங்க!!! :sprachlos020:

இந்த ஆண்களைக் காப்பாத்த யாருமே இல்லையா!!!! :medium-smiley-100:

ஏன் இல்லை? ஆதான் ஆதவி இருக்காங்களே...!! அழுவாதீங்க ஆதவன்..

இன்னிக்கு நான் அப்துல் கலாமை மீட் பண்ண போறேன்... ஏதேனும் யோசனை கேட்கணுமா? தகஸ் வேற உங்களையெல்லாம் அவர்கூட ஒப்பிட்டு சொல்லி இருக்காரே...! (இன்னிக்கு எங்க காலேஜில் புதிதாக் கட்டியிருக்கும் ஏரோ நாட்டிகல் கட்டிடம் திறப்பு விழாவுக்கு மாலை ஐந்து மணிக்கு வரார்பா...)

ஆதவா
16-07-2010, 09:01 AM

அவர் தான் கல்யாணம் பண்ணிக்காம தப்பிச்சுட்டாரே!! என்னத்த கேக்கறது!!

எனிவே,
வாழ்த்துகள்!!! சகோ.
நேரம் கிடைத்தால் பேசுங்கள்!! (என்னைப் பத்தி கொஞ்சம் ஒசத்தியா பேசுங்க!! :D)

தாமரை
16-07-2010, 09:08 AM

ஏரோ நாட்டி கல் னா? உழும் பொழுது ஏர்கிட்ட குறும்பு பண்ணிய கல்லா? ஹி ஹி....அதை வச்சா கட்டிடம் கட்டினீங்க?

samuthraselvam
16-07-2010, 09:18 AM
ஏரோ நாட்டி கல் னா? உழும் பொழுது ஏர்கிட்ட குறும்பு பண்ணிய கல்லா? ஹி ஹி....அதை வச்சா கட்டிடம் கட்டினீங்க?

என்னடா ஆளைக் காணோம்னு பார்த்தேன் வந்துட்டீங்களா வாரிவிட?:cool: ஏரோ நாட்டிக்களுக்கு தமிழில் என்னன்னு சொல்லுங்களேன்...

samuthraselvam
16-07-2010, 09:27 AM
அவர் தான் கல்யாணம் பண்ணிக்காம தப்பிச்சுட்டாரே!! என்னத்த கேக்கறது!!

எனிவே,
வாழ்த்துகள்!!! சகோ.
நேரம் கிடைத்தால் பேசுங்கள்!! (என்னைப் பத்தி கொஞ்சம் ஒசத்தியா பேசுங்க!! :D)

ஓ.... ஒசத்தியா சொல்லுறேன்... உங்களையே மனசுல நினைச்சுட்டு உங்களைமாதிரியே கல்யாணம் பண்ணிக்காம எங்க மன்றத்துல நிறைபேர் இருக்காங்க... ஆனா ஓர் வித்யாசம் நீங்க ஒரு சயின்டிஸ்ட் அவங்கல்லாம் பெரிய டெரரிஸ்ட்ன்னு... :lachen001:

தாமரை
16-07-2010, 10:46 AM
என்னடா ஆளைக் காணோம்னு பார்த்தேன் வந்துட்டீங்களா வாரிவிட?:cool: ஏரோ நாட்டிக்களுக்கு தமிழில் என்னன்னு சொல்லுங்களேன்...

ஏரோநாட்டிகல் - விமானப்பொறியியல்

முதல்ல ஏரோ நாட்டி கல் அப்படின்னீங்க
இப்போ ஏரோ நாட்டிக்கள் அப்படீங்கறீங்க...

இரண்டுக்கும் என்ன வித்தியாசம்..

ஏரோ நாட்டி கல் என்றால் ஏருடன் குறும்பு செய்யற கல்
ஏரோ நாட்டிக்கள் என்றால் குறும்பு செய்யும் ஏர்கள்..

ல - ள வித்தியாசப்படுத்தும் அர்த்தங்களில் இது ஒண்ணு...

samuthraselvam
16-07-2010, 11:09 AM

ஓ அப்படியா நன்றி...

சரி சரி விடுங்க நான் ஒண்ணும் தாமரைசெல்வன் இல்லை. சமுத்ரசெல்வம் அதனால அப்படிதான் இருக்கும் கண்டுக்காதீங்க பாஸ்....

மதி
16-07-2010, 11:31 AM
அடடா... ஊர சுத்திட்டு வர்றதுக்குள்ள இவ்ளோ நடந்துடுச்சா... ஆனா பாருங்க.. யாரோ கண்ணுவச்சுட்டாங்க... போல.. இப்போ தான் லாப்டாப் பக்கமே வர்றேன்.. பழைய டீம் இருக்கற பில்டிங்குக்கு போய் செம மொக்கை. அதனால அடுத்த பாகம் இன்னும் எழுதல.. :(

லீலுமா.. சீக்கிரமா பாகங்கள் போட வேற காரணம் ஒன்னுமில்ல.. நோட்டிஸ் பீரியட்டில் வேலையே இல்லாம இருந்து பாருங்க.. அந்த சுகமே தனி தான்..:icon_ush::icon_ush::icon_ush:

தாமரை
16-07-2010, 11:40 AM
.. அந்த சுகமே தனி தான்..:icon_ush::icon_ush::icon_ush:

அந்தச் சுகம் மட்டுமில்ல.. நீங்களும் ...தனிதான்..:icon_b:

ஆதவா
16-07-2010, 11:42 AM
அடடா... ஊர சுத்திட்டு வர்றதுக்குள்ள இவ்ளோ நடந்துடுச்சா... ஆனா பாருங்க.. யாரோ கண்ணுவச்சுட்டாங்க... போல.. இப்போ தான் லாப்டாப் பக்கமே வர்றேன்.. பழைய டீம் இருக்கற பில்டிங்குக்கு போய் செம மொக்கை.

அங்கயும் மொக்கயா? :aetsch013:

அந்தச் சுகம் மட்டுமில்ல.. நீங்களும் ...தனிதான்..:icon_b:

:medium-smiley-002:

மதி
16-07-2010, 11:50 AM
அந்தச் சுகம் மட்டுமில்ல.. நீங்களும் ...தனிதான்..:icon_b:
சரி தான்...:icon_b:

மதி
16-07-2010, 11:51 AM
அங்கயும் மொக்கயா? :aetsch013:

:medium-smiley-002:
மொக்கைய கத்துக்கிட்டதே இங்க தானே....:icon_b::icon_b::icon_b:

அப்புறம் என்ன சிரிப்பு... சின்னப்புள்ளத்தனமா????

தாமரை
16-07-2010, 11:53 AM
சரி தான்...:icon_b:

இங்க கூடப் பாருங்க சரி தனியா தான் தனியா நிக்குது,.

இப்படி தூரத்தில இருந்தே முரளி லுக்கு விட்டுகிட்டு இருந்தா எப்படி?:aetsch013::aetsch013::aetsch013:

மதி
16-07-2010, 11:54 AM
இங்க கூடப் பாருங்க சரி தனியா தான் தனியா நிக்குது,.

இப்படி தூரத்தில இருந்தே முரளி லுக்கு விட்டுகிட்டு இருந்தா எப்படி?:aetsch013::aetsch013::aetsch013:
தனித்தனி தான்...;)
அட போதும்.. அதுவா நடக்கும் போது நடக்கட்டும்... இதுக்காக.. எவ்ளோ நாள் தான் விசனப்படுவது..?? :icon_b::icon_b:

தாமரை
16-07-2010, 12:03 PM
தனித்தனி தான்...;)
அட போதும்.. அதுவா நடக்கும் போது நடக்கட்டும்... இதுக்காக.. எவ்ளோ நாள் தான் விசனப்படுவது..?? :icon_b::icon_b:

இப்ப பாருங்க... ஒரு தனியும் இன்னொரு தனியும் ஒண்ணு சேர ஒரு மெய் இடையில் பாலமா இருக்குதில்ல.. அப்படி, ஒரு மெய் (அதாங்க உண்மைத் தோழன்/தோழி) இடையில் வந்தா நடக்கும் போல...:lachen001::lachen001::lachen001:

ஆதவா
16-07-2010, 12:06 PM
இப்ப பாருங்க... ஒரு தனியும் இன்னொரு தனியும் ஒண்ணு சேர ஒரு மெய் இடையில் பாலமா இருக்குதில்ல.. அப்படி, ஒரு மெய் (அதாங்க உண்மைத் தோழன்/தோழி) இடையில் வந்தா நடக்கும் போல...:lachen001::lachen001::lachen001:

பாவம் மதி!! இப்படியா ஒரு மனுஷனை போட்டு கொல்றது?? :sauer028:

தாமரை
16-07-2010, 12:09 PM
பாவம் மதி!! இப்படியா ஒரு மனுஷனை போட்டு கொல்றது?? :sauer028:

இந்தத் திரியை பொருத்த வரை மதி மனுஷந்தானா? (மார்க் - என்கிற பேர்ல மார்க்கமா எழுதிகிட்டு இருக்காரே?)

ஆதவா
16-07-2010, 12:14 PM
இந்தத் திரியை பொருத்த வரை மதி மனுஷந்தானா? (மார்க் - என்கிற பேர்ல மார்க்கமா எழுதிகிட்டு இருக்காரே?)

:shutup:

தாமரை
16-07-2010, 12:15 PM
:shutup:

பிளாஸ்திரி வாய்க்கா மூக்குக்கா? :wuerg019:

samuthraselvam
16-07-2010, 12:20 PM
அடடா... ஊர சுத்திட்டு வர்றதுக்குள்ள இவ்ளோ நடந்துடுச்சா... ஆனா பாருங்க.. யாரோ கண்ணுவச்சுட்டாங்க... போல.. இப்போ தான் லாப்டாப் பக்கமே வர்றேன்.. பழைய டீம் இருக்கற பில்டிங்குக்கு போய் செம மொக்கை. அதனால அடுத்த பாகம் இன்னும் எழுதல..

லீலுமா.. சீக்கிரமா பாகங்கள் போட வேற காரணம் ஒன்னுமில்ல.. நோட்டிஸ் பீரியட்டில் வேலையே இல்லாம இருந்து பாருங்க.. அந்த சுகமே தனி தான்..:icon_ush::icon_ush::icon_ush:

மதிக்கே நோட்டீசா? நோ டீஸ் மதி.... பரவாயில்லை விடுங்க...

தமிழ் நாட்டு பெண் தான் கிடைக்கணும் போல இருக்கோ என்னமோ? யார்கண்டது? சென்னை போனா கலீஜ் பாசை பேசற பொண்ணு தான் மாட்டும்....

நம்ம தகஸ் பேசுவது போல வச்சிகினு போயிகினுன்னு பேசி கொல்லும்...

ஆதவா
16-07-2010, 12:25 PM
பிளாஸ்திரி வாய்க்கா மூக்குக்கா? :wuerg019:

ரெண்டுக்கும்தான்.. (ஏதாவது உள்ளர்த்தத்தோடு கேள்வி கேட்கிறீங்களான்னு ஒண்ணும் புரியமாட்டேங்குதே! :traurig001: )

தாமரை
16-07-2010, 12:28 PM
மதிக்கே நோட்டீசா? நோ டீஸ் மதி.... பரவாயில்லை விடுங்க...

தமிழ் நாட்டு பெண் தான் கிடைக்கணும் போல இருக்கோ என்னமோ? யார்கண்டது? சென்னை போனா கலீஜ் பாசை பேசற பொண்ணு தான் மாட்டும்....

நம்ம தகஸ் பேசுவது போல வச்சிகினு போயிகினுன்னு பேசி கொல்லும்...

பாஷயெல்லாம் ஆதி காலத்து ஸ்பெசிஃபிகேசனிலயே இல்லை. மொத்தத்தில மொக்கையைப் பொறுத்துகிட்டுப் போகிற அல்லது பதில் மொக்கை போடுகிற என்கிற தேவையும் காணாமப் போயாச்சு.. இப்போ ஆதன் காலத்தில (ஆதி தான் ஆதன் அப்படீன்னு பேரை மாத்திகிட்டாரே..)
மிச்சமிருக்கிற ஒரே தேவை ஒரு பொண்ணு என்பது மட்டும்தான்..

மதிக்கு நோட்டீஸ் இல்லை.. மதிதான் கொடுத்திருக்கார் நோட்டீஸ்..:icon_b:

தாமரை
16-07-2010, 12:31 PM
ரெண்டுக்கும்தான்.. (ஏதாவது உள்ளர்த்தத்தோடு கேள்வி கேட்கிறீங்களான்னு ஒண்ணும் புரியமாட்டேங்குதே! :traurig001: )

மனுஷங்களைத் திட்டி எழுதிபுட்டு எந்த முகத்தோட அவர் தன்னை மனுஷன்னு சொல்லிக்குவார் சொல்லுங்க..

இனிமே எங்களுக்குள்ள திட்டிக்கணும்னா ‘போடா மனுசப்பயலே’னு தான் திட்டிக்கணும் போல.

நீங்க செஞ்ச பாவமோ என்னவோ நாங்க பேசுறத உங்களால் கேட்க முடியாது. ஏதோ நாங்க பேசறதை ‘குரைக்குது’னு சொல்றீங்க. அது சரி. உங்களுக்கு ஒன்னு புரியலேன்னா உங்க மேல தப்பில்ல புரிஞ்சிக்க முடியாதபடி இருக்கறது அந்த விஷயத்தோட தப்புன்னு வாதாடற ஆளு தானே நீங்க.

மனுஷங்க நீங்க.. இன்னொரு மனுஷனோட உணர்ச்சிகளையே புரிஞ்சுக்க முடியல.. இதுல எப்படி டாக் சிரிக்குதா.. அழுதான்னு தெரியும்..

மூக்குன்னா அடி வாங்கியாச்சின்னு அர்த்தம்.
வாய்ன்னா அடி வாங்காம தப்பிக்க அப்படின்னு அர்த்தம்.

இரண்டும்னா அடிவாங்கி இருக்கற தெம்பெல்லாம் போயிடுச்சின்னு அர்த்தம்..

samuthraselvam
16-07-2010, 12:32 PM
அப்ப, மொக்கைக்கு மொக்கை சரியாகப் போய்டும்னு சொல்ல வரீங்களா? திரு.மொக்கை மதி மற்றும் திருமதி மொக்கை மதி.... நல்ல தான் இருக்கு..

தாமரை
16-07-2010, 12:41 PM
காணக்க(அ)ரிய மங்களம் தானே.......!!!!
அன்புடன்
மணியா......:D

ஆமாம்.. அது யார் மங்களம்?

காணக் கரிய மங்களம் - அதாவது மங்களம் பார்க்க கருப்பா இருப்பாங்க அப்படின்னு சொல்றீங்க...

காண அப்படின்னு சொல்வதால அவர் நிறம் கருப்புன்னாலும் உள்ளே வெள்ளை அப்படின்னு சொல்றீங்க..

ஏன் இப்படிக் கேட்கறேன்னு புரிஞ்சுதா? ஊர் பெரில் வரும் மங்கலம் வேறயாச்சே..

மங்களம் பாடிட்டனோ?

தாமரை
16-07-2010, 12:42 PM
அப்ப, மொக்கைக்கு மொக்கை சரியாகப் போய்டும்னு சொல்ல வரீங்களா? திரு.மொக்கை மதி மற்றும் திருமதி மொக்கை மதி.... நல்ல தான் இருக்கு..

அப்பதான் நாம யாரும் அவங்க வீட்டுக்குச் சாப்பாட்டுக்கு போகமாட்டோம் அப்படின்னு திட்டம் போட்டார் மதி...ஹூம் அது ஒரு காலம்.

samuthraselvam
16-07-2010, 12:51 PM
அப்பதான் நாம யாரும் அவங்க வீட்டுக்குச் சாப்பாட்டுக்கு போகமாட்டோம் அப்படின்னு திட்டம் போட்டார் மதி...ஹூம் அது ஒரு காலம்.

அதனால என்ன? என் வீட்டுக்கு கூப்பிட்டு நானே என் கையால சமைச்சு போறேன் மதி தம்பிக்கு... மதி சாப்பிடலாம் வாங்க.... கூடவே ஆதவாவையும் கூப்பிட்டு வாங்க பாவம்...:)

தாமரை
16-07-2010, 12:53 PM
அதனால என்ன? என் வீட்டுக்கு கூப்பிட்டு நானே என் கையால சமைச்சு போறேன் மதி தம்பிக்கு... மதி சாப்பிடலாம் வாங்க.... கூடவே ஆதவாவையும் கூப்பிட்டு வாங்க பாவம்...:)

சாப்பாடு போடலைன்னா சமைச்சுப் போட்டுத்தான் தண்டிப்பீங்களா?

ஆதவா என்ன செய்தார் பாவம்?

ஆதவா
16-07-2010, 01:01 PM
மூக்குன்னா அடி வாங்கியாச்சின்னு அர்த்தம்.
வாய்ன்னா அடி வாங்காம தப்பிக்க அப்படின்னு அர்த்தம்.

இரண்டும்னா அடிவாங்கி இருக்கற தெம்பெல்லாம் போயிடுச்சின்னு அர்த்தம்..

என்னைச் சொல்லி குத்தமில்ல//// அறிஞரை சொல்லணும்!! அவருதானே இந்த ஸ்மைலிகளை மன்றத்துக்கு கொண்டுவந்தாரு!!

///கூடவே ஆதவாவையும் கூப்பிட்டு வாங்க பாவம்... ////

ஒருவேளை வந்தேன்னா.... அப்ப நான் பாவம் தான்!!!

samuthraselvam
16-07-2010, 01:01 PM
சாப்பாடு போடலைன்னா சமைச்சுப் போட்டுத்தான் தண்டிப்பீங்களா?

ஆதவா என்ன செய்தார் பாவம்?

மதிக்கு துணையாதான்....

samuthraselvam
16-07-2010, 01:03 PM
ஓகே கலாம் வந்திட்டார்.... பாய் நாளைக்கு தொடரலாம் நம்ம மொக்கையை....

ஆதவா
16-07-2010, 01:06 PM
இன்னிக்கு எங்க காலேஜில் புதிதாக் கட்டியிருக்கும் ஏரோ நாட்டிகல் கட்டிடம் திறப்பு விழாவுக்கு மாலை ஐந்து மணிக்கு வரார்பா...

என்னங்க.... வந்தாரா ? போய்ட்டாரா?

தாமரை
16-07-2010, 01:11 PM
மதிக்கு துணையாதான்....

அது சரி.. இப்படி மதிக்கு வாழ்க்கைல வேற துணையே இல்லைன்னு இப்படி வாய்க்கு வாய் சொல்லிகிட்டு இருந்தா அந்த நேரத்தில அஷ்ட வசுக்களில் யாராச்சும் ததாஸ்து சொல்லிடப் போறாங்க...!!!

ஆதவா
16-07-2010, 01:17 PM
அது சரி.. இப்படி மதிக்கு வாழ்க்கைல வேற துணையே இல்லைன்னு இப்படி வாய்க்கு வாய் சொல்லிகிட்டு இருந்தா அந்த நேரத்தில அஷ்ட வசுக்களில் யாராச்சும் ததாஸ்து சொல்லிடப் போறாங்க...!!!

இதுக்கெல்லாம் அசராதீங்க மதி!

நான் இருக்கேன்ல.... உங்களுக்கு பொண்ணு ரெடியாயிட்டு இருக்கு!!!

மதி
16-07-2010, 01:21 PM
யப்பாடி... டீ குடிக்க போன நேரத்துல (அதிகமில்ல ஜெண்டில்மேன் ஒன்னேகால் மணி நேரம் தான்.. வேறென்ன மொக்கைய தவிர) இவ்ளோ பேசி இருக்கீங்க..
ஆக எனக்கு பொண்ணு தேடும் படலம் பலமா இருக்கு போல... சென்னைக்கு போற நேரம் நல்லா அமைஞ்சா சரி.. :):) அந்த பொண்ணுக்கு...:D:D

மதி
16-07-2010, 01:22 PM
இதுக்கெல்லாம் அசராதீங்க மதி!

நான் இருக்கேன்ல.... உங்களுக்கு பொண்ணு ரெடியாயிட்டு இருக்கு!!!
இது தானே குசும்புங்கறது..
உமக்கு பொண்ணு பொறந்து.. நான் கல்யாணம் பண்ணிக்கணும்னா நேரா அறுபதாம் கல்யாணம் தான்... ஆனாலும் டூ மச்..

அது சரி.. சம்பந்தமே இல்லாம ஏன் இந்தத் திரியில கல்யாணத்த பத்தி இவ்ளோ பேச்சு..!!

ஆதவா
16-07-2010, 01:30 PM

அது என்னவோ தெரியலை.... மதி, எதை எழுதினாலும் சிண்டு முடிஞ்சு கடைசியா கல்யாணப் பேச்சிலதான் வந்து நிக்குது!! நீங்க இதுக்காகவே கல்யாணம் பண்ணியே ஆகணும்!!

அப்பறம்... உங்களுக்காக பொண்ணு பார்த்துட்டு இருக்கேன்.... விரைவில் ஒரு மங்கலகரமான திரியில்.....:sprachlos020:

தாமரை
16-07-2010, 01:34 PM
இது தானே குசும்புங்கறது..
உமக்கு பொண்ணு பொறந்து.. நான் கல்யாணம் பண்ணிக்கணும்னா நேரா அறுபதாம் கல்யாணம் தான்... ஆனாலும் டூ மச்..

அது சரி.. சம்பந்தமே இல்லாம ஏன் இந்தத் திரியில கல்யாணத்த பத்தி இவ்ளோ பேச்சு..!!

கல்யாணம்தானே காதலின் முடிவு... அதான்

Nivas.T
16-07-2010, 03:24 PM
:confused: :confused: :confused: :confused: :confused: :confused:
:confused: :confused: :confused: :confused: :confused:

ஓ முதல்ல இருப்பதெல்லாம் பின்னூட்டங்களா என்னடா கதை சரியா புரியல்லன்னு கொஞ்சம் குழம்பிட்டேன்

தாமரை
16-07-2010, 03:53 PM
அதெல்லாம் பின்னூட்டங்கள் அல்ல முன்னூ(னோ)ட்டங்கள்..

Nivas.T
17-07-2010, 12:02 PM
அதெல்லாம் பின்னூட்டங்கள் அல்ல முன்னூ(னோ)ட்டங்கள்..

:icon_rollout: நான் கொஞ்சம் பின்னாடி வந்து சொன்னதால பின்னூட்டம் ஆகிடுச்சு, முன்னாடி சொல்லியிருந்தா முன்னூட்டம்னு போற்றுக்கலாம். :D :D :D

அமரன்
17-07-2010, 02:58 PM
எல்லாமே நல்லாருக்கப்பா.

இந்தளவையும் படிக்கத் துவங்கினப்போ சாமம் ஆச்சு. ஆனலும் முடிக்காமப் போக முடில. அந்தளவுக்கு நல்லாருந்துச்சு.

மதி
17-07-2010, 03:23 PM
எல்லாமே நல்லாருக்கப்பா.

இந்தளவையும் படிக்கத் துவங்கினப்போ சாமம் ஆச்சு. ஆனலும் முடிக்காமப் போக முடில. அந்தளவுக்கு நல்லாருந்துச்சு.
நன்றி.. அமரன்...
என்னமோ தெரியல.. அடுத்த கதைக்கு அடுத்ததா.. இன்னுமொரு காதல் கதை எழுதலாம்னு திடீர்னு தோணுச்சு.. தலைப்பு.. "கதவைத் திற.. காதல் வரட்டும்..!!" எப்பூடி..???:icon_b::icon_b::icon_b:

மதி
19-07-2010, 06:25 AM
காலையில் எழுந்ததும் வாழ்க்கையே புதுசா தோணிச்சு. என்னிக்கும் இல்லாத நாளா உலகம் ரொம்ப ரொம்ப அழகா தெரிஞ்சுது. உலகத்துல எல்லோருமே சந்தோஷமா இருக்கற மாதிரி. பரபரன்னு இருந்துச்சு. சந்தோஷம் தாங்காம வீட்டுக்குள்ளேயும் வெளியேயும் ஓடினேன். சந்தோஷத்தை வெளிப்படுத்தினேன். நேத்து ஜெஸ்ஸி கூட பேசினது இன்னமும் என் காதிலேயே கேட்டுட்டு இருந்துச்சு.

ஏரிக்கரையோரமா நடந்துட்டு வரும் போது

“ஜெஸ்ஸி.. உன்கிட்ட ஒன்னு கேக்கணும்..?”

என்ன என்பது போல் பார்த்தாள்.

“என்னைப் பார்த்ததும் உனக்கு ஏன் அவ்ளோ புடிச்சுப் போச்சு?”

அவள் முகம் அழகாய் வெட்கப்பட்டது.

“சில விஷயங்களுக்கு ஏன்ங்கற கேள்விக்கு பதில் கிடையாது. உங்க அழகா, கம்பீரமா..ஏதோ ஒன்னு என்னை ஈர்க்குது. ஆமா என்னை எப்படி புடிச்சுது?”

“அதே பதில் தான்.. உன்னோட துறுதுறுப்பும்..அங்கங்க அலைபாயற கண்களும்.. யப்பா என்னமா இழுக்குது”

இன்னும் அதிகமாய் வெட்கப்பட்டாள்.

“நீ எங்கிருந்து வர்றே..?” ஜெஸ்ஸியை கேட்டேன்.

“ஸ்விஸ்லேர்ந்து. க்ளாராம்மாக்கு இங்க வேல கிடச்சுதுன்னு மாத்திக்கிட்டு வந்துட்டாங்க.”

“ஓ.. அவங்க தனியாவா இருக்காங்க..”

“ஆமா. எனக்கு தெரிஞ்ச நாள்லேர்ந்து தனியா தான் இருக்காங்க. சொந்தம்னு சொல்லிக்க நான் மட்டும் தான்”.

“ம்ம்..” நான் என் கதையை சொல்ல அவள் ஆர்வமானாள்.

இன்றைக்கு அதை அசை போடுகையில் சுகமாய் இருந்தது. வீட்டுக்கு முன்னிருந்த புல்வெளியில் கனவு கண்டு கொண்டே விளையாடிய போது யாரோ கூப்பிடுவது மாதிரி இருக்க திரும்பினேன். என் கண்ணையே என்னால் நம்ப முடியவில்லை.

பக்கத்து வீட்டு மாடியில் ஜெஸ்ஸி நின்று கொண்டிருந்தாள். கட்டைகளுக்கு நடுவில் இருந்த இடைவெளியில் தலையை வெளியே விட்டு தன் இனிய குரலால் என்னைக் கூப்பிட்டாள். “மார்க்”

என் பேர் இத்தனை இனிமையாக ஒலிக்கும்னு இது வரை நான் நெனச்சத்தில்லை. அவள் கூப்பிடும் போது மட்டும் பாடலாய் ஒலித்தது. அவள் கூப்பிடுவதாலேயே என் பேரை எனக்கு மிகவும் பிடிச்சுப் போனது. கண்ணில் காதல் வழிய ஜெஸ்ஸி என்னைப் பார்க்க நான் அவளைப் பார்க்க ஒரு காதல் அரங்கேறிக் கொண்டிருந்தது.

மனது பலவகைகளில் லேசாய் பறக்க ஆரம்பித்தது. ‘ ஜெஸ்ஸி.. பக்கத்து வீட்டில் தான் இருக்கிறாள்.’ அந்த நினைப்பே உடலை லேசாக்கியது. இதோ கூப்பிடு தூரத்தில் என் ஜெஸ்ஸி. நினைத்த மாத்திரம் பேசிக் கொள்ளலாம். ஆண்டவன் கருணையே கருணை. மனம் நெகிழ்ந்து போயிருந்தது.

அன்று முழுதும் வெளியிலிருந்து ஜெஸ்ஸி கூட பேசிக்கிட்டு இருந்தேன். அர்த்தமில்லா பேச்சு தான். கேக்கறவங்களுக்கு ஒன்னுமே புரியாது. ஆனா ஆயிரம் அர்த்தங்கள் இருக்கும். எல்லாம் என் மேல் அவள் கொண்ட காதலும் அவ மேல் நான் கொண்ட காதலும். அன்னிக்கு சாயங்காலமா க்ளாராம்மா ஜெஸ்ஸிய கூட்டிட்டு எங்க வீட்டுக்கு வந்தாங்க. எனக்கு ஒரே சந்தோஷம். ஜெஸ்ஸி கூட கொஞ்ச நேரம் தனியா இருக்கலாமே.

எங்க வீட்டு புல்வெளியில இரண்டு பேரும் ஓடிப்பிடிச்சு விளையாண்டோம். அப்புறம் எங்க வீட்ட சுத்திக் காமிக்க ஜெஸ்ஸிய கூட்டிட்டு போனேன். நான் சொன்ன கதையெல்லாம் கண்ண விரிச்சு கேட்டா. ஆச்சர்யத்தினால அந்த ரெண்டு நாள்ல அந்த வீட்டில இருந்த எல்லா இடமும் எனக்கு அத்துபடி. மாடியில தொங்கும் தோட்டம் இருந்தது. அங்க ஊஞ்சல் கட்டியிருந்தாங்க. சாயந்திர நேரத்துல அங்க உட்கார்ந்து எதிர்ல மறைய சூரியன பாத்திட்டு இருக்கலாம். நானும் ஜெஸ்ஸியும் அந்த ஊஞ்சல்ல உட்கார்ந்து சூரியன் மறையறத பாத்துட்டே இருந்தோம். நேரம் போனதே தெரியல. என் தோளில் அவள் தலையும் அவள் தலை மீது என் தலையும் வச்சு நிலாவையே பாத்துட்டு இருந்தோம். கொஞ்ச நேரம் கழிச்சு க்ளாராம்மா ஜெஸ்ஸிய கூப்பிட நானும் ஜெஸ்ஸியும் கீழே வந்தோம்.

க்ளாராம்மா கிளம்ப ஜெஸ்ஸி பிரிய மனமில்லாம போனா. அவ கண்ணில இருந்த ஏக்கம்..அப்பப்பா. எனக்கும் துக்கம் தொண்டைய அடைச்சுது. ஏதோ ரொம்ப நாள் நம்ம கூட இருந்தவங்க பிரிஞ்சு போற மாதிரி. எங்க வீட்டிலேயும் க்ளாராம்மாவும் ரொம்ப ஸ்னேகமாயிட்டாங்க. எஞ்சீனியரும் க்ளாராம்மாவும் ஒரே ஆபிஸில தான் வேலை பாத்தாங்க. அதனால நாங்க அடிக்கடி அவங்க வீட்டுக்குப் போறதும் அவங்க எங்க வீட்டுக்கு வர்றதும்னு வாழ்க்கை போச்சு.

ஒவ்வொரு தடவை ஜெஸ்ஸிய பாக்கற போதும் அன்னிக்கு தான் புதுசா பாக்கற மாதிரி இருக்கும். அவ்ளோ புத்துணர்ச்சியோடு இருப்பா. கண்ணில அந்த காந்தப்பார்வை அப்படியே சுண்டி இழுக்கும். அடிக்கடி எல்லோரும் சேர்ந்து பிக்னிக் போறப்ப எனக்கும் ஜெஸ்ஸிக்கும் ஏக சந்தோஷமா இருக்கும், அவங்க மூணு பேரும் சேர்ந்து உட்கார்ந்து பேசிட்டு இருக்க நாங்க ரெண்டு பேரும் ஓடி விளையாடுவோம். களைச்சுப் போனா அப்படியே நடந்து போயிட்டு வருவோம். அந்த ஊரில நான் ஜெஸ்ஸிய தவிர எந்த டாக் கூடவும் பேசினதில்ல. பேசவும் தோணல. ஜெஸ்ஸி மட்டுமே போதும். அவ கூட பேசிட்டு இருந்தாலே போதும். இந்த உலகத்துல நானும் அவளும் மட்டுமேனு அடிக்கடி தோணும். அந்தளவுக்கு எங்க காதல் நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமா வளர ஆரம்பிச்சுது.

அப்படி இருக்க ஒரு நாள் காலையில நான் எந்திருக்கும் போது இடி விழற மாதிரி அந்த விஷயம் நடந்தது.

- அடுத்த பாகத்தில் முடியும்

கீதம்
19-07-2010, 07:04 AM
அழகான வர்ணனையும், காதல் சிலாகிப்பும் மனதைக் கவர்ந்தன. அடி மேல் அடி வைத்து அழகாய் முன்னேறிக்கொண்டிருந்த காதலுக்கு இடியா? என்னாயிற்று? பதைபதைப்புடன் காத்திருக்கிறேன்.

மதி
19-07-2010, 07:11 AM
அழகான வர்ணனையும், காதல் சிலாகிப்பும் மனதைக் கவர்ந்தன. அடி மேல் அடி வைத்து அழகாய் முன்னேறிக்கொண்டிருந்த காதலுக்கு இடியா? என்னாயிற்று? பதைபதைப்புடன் காத்திருக்கிறேன்.
நன்றிங்க கீதம்... இந்த மாதிரியான பின்னூட்டத்தினால் தான் இந்தக் கதை இவ்ளோ தூரம் வந்துள்ளது..

உண்மையை சொன்னால்.. இதை ஐந்து பாகமாக எழுதும் எண்ணமே கிடையாது.. ஆனால் ஏனோ நன்றாய் வந்திருப்பதாய் தோன்றியதால் முன்னமே நினைத்திருந்த முடிவை சற்றே மாற்றுகிறேன்... கதையின் போக்கை கெடுக்காமல்... நாளை முடித்துவிடுவேன்..

Nivas.T
19-07-2010, 12:22 PM
தயவுசெய்து அந்த இளம் காதலர்களை பிரித்துவிடாதீர்கள் மதி :frown:

டாக் காதலாக இருந்தாலும் பிரிவின் வலி ரொம்ப கொடுமையானது :frown:

பா.ராஜேஷ்
19-07-2010, 09:35 PM
அட! அட!! என்னமா எழுதி இருக்கீங்க.... அடுத்த பாகத்தால முடிய போகுதா!!?? சோகமா முடிக்காதீங்க.. ... பாவம் மார்க்... :redface:

மதி
20-07-2010, 07:33 AM
சீக்கிரமே ஜெஸ்ஸிய நான் பிரிய வேண்டி வரும்னு நினைக்கல. ஆனா நடந்துச்சு. ‘வாழ்க்கையில சந்தோஷமும் துக்கமும் மாறி மாறி வரும்’னு தெரியும். சந்தோஷம் வரும் போது துக்கம் அடுத்து வரும்ங்கற நெனக்கக் கூட மாட்டோம். எப்பவுமே அந்த சந்தோஷம் நிரந்தரமானதுன்னு நெனப்பு இருக்கும். ஆனா துக்கம் வரும் போது எப்போடா சந்தோஷம் வரும்னு இருக்கும். முன்னாடி சந்தோஷமா இருந்த தருணங்கள நெனச்சுப்போம். அதே மாதிரி தான் வாழ்க்கையில அந்த கால கட்டத்துல ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருந்துட்டேன் போல. யார் கண்ணு பட்டுச்சோ.. அன்னிக்கு காலைல அந்த பிரச்சனை ஆரம்பிச்சது.

காலைல கண்முழிக்கும் போதே எஞ்சினீயரம்மாவோட அழுகை சத்தம் தான் கேட்டுது. அவங்க நிறைமாச கர்ப்பிணியா இருந்தாங்க. அப்போ அழக்கூடாதாம். ஆனா அதிகமா அழுதாங்க. கைக்கு கிடைச்சதையெல்லாம் கீழே போட்டு உடைச்சாங்க. என்னமோ பெரிசா தப்பு நடந்திருக்குனு மட்டும் புரிஞ்சுது. ஆனா அதுக்கு மேல தெரியல. எனக்கு ரொம்ப பயமா இருந்துச்சு. ஓடிப் போய் எஞ்சினீயரம்மாகிட்ட நின்னேன். என்னை கட்டிப் புடிச்சிக்கிட்டு ஓன்னு அழுதாங்க. எனக்கும் அழுகை அழுகையா வந்துச்சி. ஏன்னு மட்டும் தெரியல.

எஞ்சினீயர் ஒரு ஓரமா அமைதியா இருந்தார். வாய தொறந்து எதுவும் பேசல. வீடு கொஞ்ச நேரம் அமைதியா இருந்துச்சு. கொஞ்ச நேரத்துல துணியெல்லாம் ஒரு பெட்டியில எடுத்து வச்சுக்கிட்ட எஞ்சினீயரம்மா என்னைக் கூப்பிட்டாங்க. ஓடிப்போய் அவங்க காலை உரசிக்கிட்டு நின்னேன் தலையை தொங்கப்போட்டுக்கிட்டு. அவங்க ஒரு கேப் வர சொல்லி இருந்தாங்க. என்னை கேப்ல ஏற சொல்லும் போது திகீர்னு இருந்துச்சு. ‘எங்க போறோம்?’ ஜெஸ்ஸிய விட்டுட்டு. ‘ஒன்னுமே புரியல’. ஆனாலும் ஏறினேன். ஏறும் போது திரும்பி பார்த்தேன். வீட்டு வாசலில் எஞ்சினீயர் சோகமே உருவாக நின்றிருந்தார். பக்கத்து வீட்டில் அதே மொட்டைமாடியில் ஜெஸ்ஸி கம்பிகளுக்கிடையே தலையை விட்டு வாலை வேகமா ஆட்டினா. அவளுக்கு நான் பிரியப் போவது தெரிஞ்சுடுச்சு. ‘அவள் கதறினா..’ போகாதேனு. எனக்கு வேற வழி தெரியல. ‘ எங்கேயும் போகல. சீக்கிரமே வந்துடுவேன்னு’ சொல்லிட்டு ஏறினேன். ஆனா உள்மனசில ஏதோ ஒன்னு தோணுச்சு. ‘இனிமே எஞ்சினீயரம்மா எஞ்சினீயர் கூட வாழ மாட்டாங்க’னு. ஜெஸ்ஸி பக்கத்துல க்ளாராம்மாவும் சோகமா இருந்தாங்க. ‘என்ன பிரச்சனையோ.. ஆனா என் காதல் இவ்ளோ சீக்கிரம் முடிஞ்சுடுமா?’ நினைக்க நினைக்க பகீரென்றது. ஜெஸ்ஸி இல்லாத வாழ்க்கைய என்னால நெனச்சுப் பார்க்கவே முடியல. ‘நான் ஜெஸ்ஸிய லவ் பண்றேன். என்னையும் அவளையும் சேர்த்து வையுங்க’னு கத்தலாம் போல இருந்துச்சு. ‘என்ன பண்ண.. மனுஷங்க உணர்வை புரிஞ்சுக்கற அறிவை எங்களுக்குப் படைச்ச ஆண்டவன் எங்க உணர்வை புரிஞ்சுக்கற அறிவை அவங்களுக்கு வைக்கலியே’. கண்ணில் நீருடன் நான் ஜெஸ்ஸிய பார்க்க அவளிட பரிதவிப்பை அந்த கண்ணீரில் உணர முடிஞ்சது.

வண்டியில போகும் போது எஞ்சினீயரம்மா என் தலையை வருடி,

“கவலைப்படாத மார்க்.. இனி நாம அங்க போகப்போறதில்ல. இடம் கொடுத்தது என் தப்பு தான். இப்படி டேனியலும் க்ளாராவும் பண்ணுவாங்கன்னு நான் நினைக்கல. இனி எனக்கு நீயும் உனக்கு நானும் தான் துணை.”

கொஞ்சம் கொஞ்சமாக புரிய ஆரம்பித்தது. பக்கத்து வீட்டு பழக்கம், ஒரே கம்பெனியில் சேர்ந்து வேலை பார்த்தது எஞ்சினீயரையும் க்ளாராம்மாவையும் நெருங்கச் செஞ்சிருக்கு. அவங்களுக்குள்ள பழக்கம் எஞ்சினீயரம்மாக்கு தெரிய வர வெடிச்சிருக்காங்க. என் மேல வச்சிருந்த மாதிரி அவங்க எஞ்சினீயர் மேலயும் கண்மூடித்தனமா பாசம் வச்சிருந்தாங்க. அத புரிஞ்சிக்காம எஞ்சினீயர் தப்பு பண்ணிட்டார். ‘ எஞ்சினீயர் மேல பரிதாபமா இருந்தது.’ அவரும் எஞ்சினீயரம்மாவ ரொம்ப காதலிச்சார். ஆனா சூழ்நிலையை மட்டும் குத்தம் சொல்ல முடியாது. அவர் செஞ்சது சரியா தப்பானு சொல்ல நான் ஒன்னும் மேதாவியான ஆறறிவு ஜீவனில்லையே. எல்லாத்தையும் விட ஜெஸ்ஸிய பிரிஞ்ச வலி தான் என்னைப் புரட்டிப் போட்டது. காதல்னு இருந்தா வலியும் சேர்ந்தே இருக்கணும்னு ஆண்டவன் இந்த உலகத்தை படைச்சுட்டான் போல. பிரிவு ரொம்ப ரொம்ப கொடுமையானது. எஞ்சினீயரம்மா இனியும் சமாதானமா போவாங்கன்னு எனக்குத் தோணல.

நினைக்க நினைக்க மனசு வெறுமையா இருந்தது. டென்மார்க்கிலேயே இருந்த தன் தோழி வீட்டுக்கு எஞ்சினீயரம்மா போனாங்க. அவங்க நாங்க தங்க இடத்தை ஏற்பாடு பண்ணிக் கொடுத்தாங்க. ‘எவ்வளவு தான் நினைத்தாலும் மறக்க முடியாது ஜெஸ்ஸியுடன் நான் இருந்த தருணங்களை’. எங்கிருந்தோ வந்த எங்க இரண்டு பேரையும் ஏர்போர்ட்ல பார்க்க வச்சு ஒருத்தருக்கொருத்தர் ஏங்க வச்சு, பக்கத்து பக்கத்து வீட்டில தங்க வச்சு, அழகான நாட்டில காதலிக்க வச்சு.. பின்ன பிரிச்சு பார்க்கிற இந்த ஆண்டவன் எப்பேர்ப்பட்ட சாடிஸ்ட். ‘சாப்பிட பிடிக்கல. தூங்க பிடிக்கல… எதுவுமே பிடிக்கல. அங்க என் ஜெஸ்ஸி என்ன பண்ணிட்டு இருக்காளோ? அவளும் என்னை நெனச்சு சாப்பிடாம இருக்காளோ?’ தெரியல.

நாங்க போன ஊர்ல ஏகப்பட்ட டாக் இருந்துச்சு. ஆனாலும் யார் கூடவும் பேசத் தோணல. தனிமையே எனக்கு சொந்தம் மாதிரி ஆயிடுச்சு. எஞ்சினீயரம்மாக்கு குழந்தை பொறந்துச்சு. செக்கச் செவேல்னு ஆண் குழந்தை. பக்கத்துல நான் போனா இன்ஃபெஷன் ஆயிடும்னு சொன்னாங்க. அதனால நான் இன்னும் தனிமைல வாட ஆரம்பிச்சேன். நாட்கள் இப்படியே போகப் போக என் உடல் மெலிய ஆரம்பிச்சுது. கண்கள் சோர்ந்து போக ஆரம்பிச்சுது. குழந்தை பிறந்த சந்தோஷத்துல இருந்த எஞ்சினீயரம்மா என்னை கொஞ்சம் கொஞ்சமா கவனிக்க ஆரம்பிச்சாங்க.

“ஏன் டா.. ஏன் சரியா சாப்பிட மாட்டேங்கற..?”

நான் மௌனமாய் தலையாட்டினேன். என் செய்கை அவங்களுக்கு எஞ்சினீயர பத்தின நெனப்பை ஏற்படுத்தி இருக்க வேண்டும். அவங்க கண்ணில் மெல்லிதாய் சோகம். என்னை மாதிரி துணையை பிரிஞ்சு இருக்கற வேதனை.

“எஞ்சினீயர பிரிஞ்சு உன்னாலேயே இவ்ளோ நாள் இருக்க முடியலியே.. நான் எப்படி இருந்திருப்பேன் சொல்லு?”

அவங்க வலி எனக்குப் புரிஞ்சுது. காதலிக்கறவங்க வலி பிரிஞ்ச இன்னொரு காதலனாலேயோ காதலியாலேயோ மட்டும் தான் முழுமையா உணர முடியும். என்னால அவங்கள உணர முடிஞ்சுச்சு. ஆனா அவங்களுக்கு… ‘ இந்த உலகத்துல எத்தனையோ பேர் இருக்க நான் ஜெஸ்ஸிய மட்டும் தான் காதலிச்சேன்னு’ என்னால அவங்களுக்குப் புரியற மாதிரி சொல்ல முடியல. பதிலா என்னால கண்ணீர மட்டுமே விட முடிஞ்சுது. குழந்தை பிறந்த நேரம் எஞ்சினீயரம்மாவோட கோவம் கொஞ்சம் கொஞ்சமா குறைய ஆரம்பிச்சது.

என் நிலையையும் பார்க்க அவங்களால முடியல. முடிவா, “குழந்தைய அவர் முகத்துல காட்டணும். வா.. போய் பாத்துட்டு வரலாம்” னு எஞ்சினீயரம்மா சொன்னப்ப எனக்கு சந்தோஷம் தாங்க முடியல. எப்படியாச்சு ஜெஸ்ஸிய பாத்துடலாம்ங்கற நெனப்பே அவ்ளோ சந்தோஷத்தை குடுத்துச்சு. போற வழியெல்லாம் ஜெஸ்ஸிய பத்தின கனவுகள். அவள முத முதலா பாத்தது, பேசினது, சிரிச்சது.. திரும்பவும் என் ஜெஸ்ஸிய பாக்கப் போறேன்.

எங்க வீடு இருக்கற ரோட்டுல திரும்பும் போது அவ வீடு கண்ணுல பட்டுது. வீடு வெளில பூட்டி இருந்துச்சு. மனசுல திக் திக்னு சத்தம். ஜெஸ்ஸி இப்போ அங்க இல்லியா. க்ளாராம்மா எங்க போயிருப்பாங்க….? மனசுல வலியோட ஆயிரம் ஆயிரம் கேள்விகள்.

வீட்டுக்குள்ள நுழைஞ்சவுடனே எஞ்சினீயர் எங்கள எதிர்பார்க்கல. அவர் தனியா தான் வாழ்ந்திட்டு இருக்கார். எஞ்சினீயரம்மாவ பாத்ததும் ஓடி வந்து கட்டிப்புடிச்சிக்கிட்டு ஆயிரம் ஆயிரம் மன்னிப்பு கேட்டார். பிரிவு அவரையும் பாடா படுத்தி இருந்துச்சு. குழந்தையை ஆசைத் தீர கொஞ்சினார். அப்புறமா என்னைப் பார்த்தார்.. அவர்கிட்ட பல விஷயங்கள் கேக்கணும்.. ‘முதல்ல க்ளாராம்மா எங்க.. ஜெஸ்ஸி எங்க’. என் தலையை கோதிக்கிட்டே எஞ்சினீயரம்மாகிட்ட பேச ஆரம்பிச்சார். ‘க்ளாராம்மா வீட்டை காலி பண்ணிக்கிட்டு வேற ஊருக்குப் போயிட்டாங்க. தெரியாம நடந்த தப்பு அவங்கள ரொம்பவே பாதிச்சிடுச்சு. குடும்பத்தை பிரிச்ச பாவம் அவங்கள நோகடிச்சுடுச்சு.’ தலையில் மறுபடியும் இடி. ‘அப்போ என்னால ஜெஸ்ஸிய இனிமே பாக்கவே முடியாதா…?’ ஏன் இந்த சோதனை.

அப்போ தான் அது நடந்துச்சு. வீட்டுக்குள்ளே இருந்து பழக்கப்பட்ட குரல். திரும்பி பாத்தேன். என்னாலேயே என்னை நம்ப முடியவில்லை. இதென்ன கனவா..? ஆம். கதவோரத்தில் ஜெஸ்ஸி நின்னுட்டு இருந்தா..அவ கண்ணுல கண்ணீர். என்னைப்பார்த்ததும்.. ஓடிக்கூட வரமுடியாம கால்கள் பின்னிக்கிட்டு. எப்படி..? எப்படி? இரண்டு பேரும் ஆசைத் தீர ஒருத்தர் மேல் ஒருத்தர் ஏறி விளையாடினோம். மறுபடியும் என் ஜெஸ்ஸிய பார்க்க வச்ச ஆண்டனுக்கு கோடானுகோடி நன்றி சொன்னேன்.

அன்னிக்கு சாயந்திரம் மாடில அதே ஊஞ்சல்ல நானும் ஜெஸ்ஸியும் சூரியன் மறையும் அந்த ரம்மியமான தருணத்தில் பேசிக்கிட்டு இருந்தோம். கீழே ஹாலில் எஞ்சினீயர் தன் குழந்தையோடு கொஞ்சிக் கொண்டிருந்தார். அப்போ ஜெஸ்ஸிக்கிட்ட கேட்டேன்…

“எப்படி.. நீ மட்டும் எப்படி?”

என்னைப் பார்த்து கிறக்கமா சிரிச்சா…

“நீ போனதும் உயிரே போன மாதிரி இருந்துச்சு. ராப்பகலா தூக்கமில்லாம கஷ்டப்பட்டேன். க்ளாராம்மாவும் என்னைவிட நொந்து போயிந்தாங்க. தப்பான சந்தர்ப்பத்துல ஒரு குடும்பம் குலைஞ்சு போயிடுச்சேனு”

“ம்ம்..”

“அப்போ தான் தனியா போறதா முடிவெடுத்தாங்க.. எஞ்சினீயர்கிட்ட சொல்லிட்டு போலாம்னு வந்தப்போ நான் அவர் காலை கட்டிக்கிட்டு விட மாட்டேனுட்டேன். என்னை கூப்பிட்டு கூப்பிட்டு பார்த்தாங்க… நான் விடல.”

“ஏன்?”

“என்னிக்கிருந்தாலும் ஒரு நாள் எஞ்சினீயரம்மா அங்க வருவாங்கன்னு தெரியும். அப்போ நீயும் வருவ. உன்னை ஒரு தடவையாவது பாத்துடலாம்னு தான்…” சிரித்து சிரித்து உள்ளத்த கொள்ளை கொண்டாள்.

“வராமலேயே போயிருந்தா..?”

“கண்டிப்பா வருவன்னு தெரியும்.. அப்புறம் க்ளாராம்மா என்னை இங்கேயே விட்டுட்டு போயிட்டாங்க..”

“ம்ம்..” அவள் மேல் இருந்த காதல் இன்னும் பல மடங்காச்சு. சூரியன் கொஞ்சம் கொஞ்சமாய் மறையும் போது திடீரென்று அந்த கேள்வியை கேட்டாள்..

“மார்க்.. க்ளாராம்மாவையும் சரி.. எஞ்சினீயர் அவர் பொண்டாட்டியையும் சரி.. அவங்க காதலையும் உணர்ச்சியையும் நம்மலால புரிஞ்சுக்க முடியுது. ஆனா நாம் ரெண்டு பேரும் காதலர்கள். நம்மை பிரிக்கறோம்ங்கற உணர்வே அவங்களுக்கு எப்படி தெரியாம போச்சு…?”

சிரித்துக் கொண்டே என் குரல் தூரத்தில் எதிரொலிக்க சொன்னேன்..

“ஏன்னா.. மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல…அல்ல.. அதையும் தாண்டி புனிதமானது.. புனிதமானது…”

மதி
20-07-2010, 07:34 AM
தயவுசெய்து அந்த இளம் காதலர்களை பிரித்துவிடாதீர்கள் மதி :frown:

டாக் காதலாக இருந்தாலும் பிரிவின் வலி ரொம்ப கொடுமையானது :frown:

அட! அட!! என்னமா எழுதி இருக்கீங்க.... அடுத்த பாகத்தால முடிய போகுதா!!?? சோகமா முடிக்காதீங்க.. ... பாவம் மார்க்... :redface:

உண்மைய சொன்னா.. உங்க ரெண்டு பேருக்காகவும் முடிவை மாத்திருக்கேன்...
இத்தனை நாள் தொடர்ந்ததற்கு மிக்க நன்றி நிவாஸ் மற்றும் ராஜேஷ்.

கீதம்
20-07-2010, 07:46 AM
எதிர்பாராத முடிவு. மார்க்கும் ஜெஸியும் தங்கள் காதலை உரிமையாளர்களிடம் சொல்லமுடியாமல் தவிக்குமிடம் மிகவும் நெகிழ்வாக இருந்தது. ஒரே ஒரு இடத்தில்தான் சிறிய சறுக்கல்.காரணம் வலுவாக இருந்தாலும் இத்தனை வருடம் வளர்த்த க்ளாராவை ஜெஸி பிரிய முன்வந்ததைதான் ஏற்கமுடியவில்லை. காதல் எதையும் செய்யத் துணியும் என்பதால் அதுவும் அடிபட்டுப் போய்விடுகிறது. ஆக மொத்தம் எந்த உயிரினத்தைப் பார்த்தாலும் அவற்றுக்குள் இழையோடும் உணர்வுகளைப் பற்றி யோசிக்கவைத்துவிட்டீர்கள். பாராட்டுகள், மதி.

Nivas.T
20-07-2010, 08:01 AM
உண்மைய சொன்னா.. உங்க ரெண்டு பேருக்காகவும் முடிவை மாத்திருக்கேன்...

ஆஹா! ரொம்ப நன்றி மதி! அழகான காதல் கதை நல்ல ஒரு முடிவு, நல்ல ஒரு கரு (காதல் என்பது பொதுஉடமை).

Nivas.T
20-07-2010, 08:05 AM
காரணம் வலுவாக இருந்தாலும் இத்தனை வருடம் வளர்த்த க்ளாராவை ஜெஸி பிரிய முன்வந்ததைதான் ஏற்கமுடியவில்லை.

காதல் எதையும் உடைக்கும் சக்தி பெற்றது, இது தவறில்லை இதுவும் ஒரு இயற்கையின் நீதி, விலங்குகளும் அதற்க்கு விதிவிலக்கில்லை. தாங்கள் கூறியது போலவே.

மதி
20-07-2010, 08:14 AM
எதிர்பாராத முடிவு. மார்க்கும் ஜெஸியும் தங்கள் காதலை உரிமையாளர்களிடம் சொல்லமுடியாமல் தவிக்குமிடம் மிகவும் நெகிழ்வாக இருந்தது. ஒரே ஒரு இடத்தில்தான் சிறிய சறுக்கல்.காரணம் வலுவாக இருந்தாலும் இத்தனை வருடம் வளர்த்த க்ளாராவை ஜெஸி பிரிய முன்வந்ததைதான் ஏற்கமுடியவில்லை. காதல் எதையும் செய்யத் துணியும் என்பதால் அதுவும் அடிபட்டுப் போய்விடுகிறது. ஆக மொத்தம் எந்த உயிரினத்தைப் பார்த்தாலும் அவற்றுக்குள் இழையோடும் உணர்வுகளைப் பற்றி யோசிக்கவைத்துவிட்டீர்கள். பாராட்டுகள், மதி.
நன்றிங்க கீதம்..
கேள்வியும் கேட்டு நீங்களே பதில் சொல்லிட்டீங்க.. சுபமான முடிவுக்காக பலவாறு யோசித்து இதை தேர்ந்தெடுத்தேன்.. எப்படியும் ஒரு நாள் மார்க் அங்க வருவான் என்ற எண்ணமே க்ளாராவை பிரிய காரணம்.. காதல் வலி(மை)யானது..

இப்படி ஒரு கதை எழுதுவேனு நான் யோசித்தே பார்த்தில்லை... :):)

மதி
20-07-2010, 08:15 AM
ஆஹா! ரொம்ப நன்றி மதி! அழகான காதல் கதை நல்ல ஒரு முடிவு, நல்ல ஒரு கரு (காதல் என்பது பொதுஉடமை).
நன்றி நிவாஸ்....!
அடுத்ததா காதலே இல்லாத ஒரு காதல் கதை.. :icon_ush::icon_ush:

பா.ராஜேஷ்
20-07-2010, 09:37 AM
அட, நேயர் விருப்பம் உடனடியாக நிறைவேற்றப் பட்டுள்ளதே... நன்றி ஆசிரியரே.. உண்மையான முடிவு எப்படி வைத்திருந்தீர்கள் என்பதையும் தெரிய படுத்துங்களேன்... யார் யார்க்கு எந்த முடிவு பிடிக்கிறதோ அதை ஏற்றுக் கொள்ளட்டும்.. ஒரு வாக்கெடுப்பு கூட நடத்தலாமே!!!

மதி
20-07-2010, 10:10 AM

வேண்டாம்...! :icon_ush::icon_b:
அதுவும் இதே மாதிரி தான்.. ஆனால் சிற்சில மாற்றங்களுடன்.. :icon_rollout::icon_rollout:
வேற தொனியில்..

செல்வா
20-07-2010, 12:23 PM
அந்த இடி எதுவா இருக்க முடியும்னு கொஞ்சம் ஊகிச்சிருந்தேன். அதனால பிரிச்சிடுவீங்களோனு நெனச்சேன். ரெண்டு பேரும் சேந்திட்டாங்க. (ஒரு வேளை கல்யாணத்துக்கு அப்புறமா இந்தக் கதைய எழுதியிருந்தா பிரிச்சிருப்பீங்களோ? :lachen001:)

ரொம்ப நல்லாருந்துச்சு மதி. மார்க்காக மாறி காதலில் நீங்க உருகுறத வாசிக்கும் போது அந்த முகம் தெரியாதப் பொண்ண நெனச்சு பொறாமையா கூட இருக்கு. :)

தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள் காதலுக்கும் கதைக்கும்..!

மதி
20-07-2010, 12:28 PM

நன்றி.. நான் உருகல.. மார்க் தான் உருகினது...!!!:icon_b:

Nivas.T
20-07-2010, 04:17 PM
அடுத்ததா காதலே இல்லாத ஒரு காதல் கதை.. :icon_ush::icon_ush:

:confused: :confused::confused: :confused:

என்னவச்சு காமெடி கீமெடி பன்னலியே? :mini023:

தாமரை
21-07-2010, 01:37 AM
நன்றி நிவாஸ்....!
அடுத்ததா காதலே இல்லாத ஒரு காதல் கதை.. :icon_ush::icon_ush:

அது சத்தியமா உங்க சொந்தக் கதையாத்தான் இருக்கும்...

அப்படீன்னு சொல்வேன்னு நினைக்காதீங்க....:rolleyes::rolleyes::rolleyes::rolleyes:

தாமரை
21-07-2010, 01:40 AM
வேண்டாம்...! :icon_ush::icon_b:
அதுவும் இதே மாதிரி தான்.. ஆனால் சிற்சில மாற்றங்களுடன்.. :icon_rollout::icon_rollout:
வேற தொனியில்..

மதி, அந்த முடிவுதான் மிகச் சரியான மனதில் அழுத்தமா படியும் ஒன்று,.

நீங்க உங்க கையால எழுத அவகாசம் தருகிறேன்..

இல்லை என்றால் வரும் திங்கள் கிழமை இரவு நானே எழுதி மக்களுக்கு உண்மைகளைத் தெரியப்படுத்த வேண்டி இருக்கும்...

அதனால உடனடியா எழுதிடுங்க...:icon_b::icon_b:

ஆதவா
21-07-2010, 02:00 AM
மிக அருமையாக இருக்கிறது மதி. இந்தமாதிரி புரிந்து கொள்ள முடியாத ஜீவன்களின் காதலை முறித்தவர்கள் எத்தனையோ பேர் இல்லையா?.. சுபமான முடிவு... இன்னுமேதும் முடிவு வைத்திருந்தாலும் தாருங்கள்!!!

மதி
21-07-2010, 03:30 AM
அது சத்தியமா உங்க சொந்தக் கதையாத்தான் இருக்கும்...

அப்படீன்னு சொல்வேன்னு நினைக்காதீங்க....:rolleyes::rolleyes::rolleyes::rolleyes:
என் சொந்த கதையா...??

ஒருவேளை இருந்தாலும் இருக்குமோ?? ச்சே.. எல்லா கதையும் முன்னாடியே உங்ககிட்ட சொன்னது தப்பா போச்சே...:rolleyes::rolleyes::rolleyes:

மதி
21-07-2010, 03:32 AM
மதி, அந்த முடிவுதான் மிகச் சரியான மனதில் அழுத்தமா படியும் ஒன்று,.

நீங்க உங்க கையால எழுத அவகாசம் தருகிறேன்..

இல்லை என்றால் வரும் திங்கள் கிழமை இரவு நானே எழுதி மக்களுக்கு உண்மைகளைத் தெரியப்படுத்த வேண்டி இருக்கும்...

அதனால உடனடியா எழுதிடுங்க...:icon_b::icon_b:
எந்த முடிவு..??:eek::eek::eek:

samuthraselvam
21-07-2010, 03:52 AM
மதி சுபமான முடிவு... நல்லா காதலிக்கிறீங்க.... சீ... காதலை சொல்லி இருக்கீங்க.... கடைசி ரெண்டு பாகத்தை இப்ப தான் படிச்சேன்.... அருமையா எழுதி இருக்கீங்க....

அடுத்து காதலே இல்லாத கதையா? கலக்குங்க...

மதி
21-07-2010, 04:53 AM
மதி சுபமான முடிவு... நல்லா காதலிக்கிறீங்க.... சீ... காதலை சொல்லி இருக்கீங்க.... கடைசி ரெண்டு பாகத்தை இப்ப தான் படிச்சேன்.... அருமையா எழுதி இருக்கீங்க....

அடுத்து காதலே இல்லாத கதையா? கலக்குங்க...
பின்ன காதல்னா சும்மாவா?

தொடர்ந்து படித்ததற்கு நன்றி லீலுமா:icon_b:

சுடர்விழி
21-07-2010, 05:31 AM
கலக்கிட்டீங்க..உண்மையாகவே அருமையாக எழுதி இருக்கீங்க....வாழ்த்துக்கள்(இப்பெல்லாம் எந்த டாக் பார்த்தாலும் உங்க கதை ஞாபகம் வந்துடுது..இதுக்கும் ஏதாவது காதல் கதை இருக்குமோ அப்படினு யோசிக்க ஆரம்பிச்சிட்டேன்...)

அடுத்த கதைக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்...

samuthraselvam
21-07-2010, 05:59 AM

எனக்கும் இது மாதிரி தான் தோணுது சுடர்விழி....

டாக் காதலைவிட அதை மதி சொன்னவிதம்தான் நமக்கெல்லாம் அது மாதிரி வருது....

மதி
21-07-2010, 06:14 AM

உங்க பின்னூட்டத்திற்கு நன்றி சுடர்விழி..

மதி
21-07-2010, 06:18 AM
எனக்கும் இது மாதிரி தான் தோணுது சுடர்விழி....

டாக் காதலைவிட அதை மதி சொன்னவிதம்தான் நமக்கெல்லாம் அது மாதிரி வருது....
:D:D:D
நன்றி.. என்ற வார்த்தைய தவிர வேறென்ன சொல்ல.. என்னையும் மதிச்சு இவ்ளோ சொல்றீங்க.. அதுக்கெல்லாம் நான் தகுதியானவனா??:rolleyes::rolleyes::icon_rollout::icon_rollout:

தாமரை
21-07-2010, 06:33 AM
எந்த முடிவு..??:eek::eek::eek:

அதாங்க தலைப்பைச் சொல்ற அந்த முடிவு...:icon_ush::icon_ush::icon_ush:

மதி
21-07-2010, 06:41 AM
அதாங்க தலைப்பைச் சொல்ற அந்த முடிவு...:icon_ush::icon_ush::icon_ush:
நான் நல்லா இருக்கறது உங்களுக்குப் பிடிக்கலியா..???:eek::eek::eek:

நீங்களே எழுதிடுங்க.. :icon_b:

Akila.R.D
21-07-2010, 07:07 AM
அடடா ஊருக்கு போயிட்டு வர்றதுக்குள்ள நம்ம டாக் காதல் முடிஞ்சு போச்சே...

சந்தோஷமான முடிவு தான்...

அடுத்து எந்தக்காதல் மதி...

மதி
21-07-2010, 08:12 AM
அடடா ஊருக்கு போயிட்டு வர்றதுக்குள்ள நம்ம டாக் காதல் முடிஞ்சு போச்சே...

சந்தோஷமான முடிவு தான்...

அடுத்து எந்தக்காதல் மதி...
நன்றி..அகிலா...
அடுத்த கதை இன்று ஆ......ரம்பம்..!! :icon_b:

samuthraselvam
21-07-2010, 09:33 AM
இன்றேவா? இருங்க என் கண்ணை தேச்சிட்டு பார்க்குறேன்... அட இந்த எழுத்துக்கள் உண்மையா என் கண்ணுக்கு தெரியுதுப்பா....

அசத்துங்க மதி....

நன்றி..அகிலா...
அடுத்த கதை இன்று ஆ......ரம்பம்..!! :icon_b:

மதி
21-07-2010, 09:37 AM
இன்றேவா? இருங்க என் கண்ணை தேச்சிட்டு பார்க்குறேன்... அட இந்த எழுத்துக்கள் உண்மையா என் கண்ணுக்கு தெரியுதுப்பா....

அசத்துங்க மதி....
ஆமா முதல் பாகம் முடிச்சுட்டேன்.. நல்ல நேரம் பாத்துட்டு இருக்கேன்.. பதியறதுக்கு..:icon_b:

Ravee
30-07-2010, 12:48 AM
அடேங்கப்பா முழுசா ஒரு மணிநேரம் ஆச்சு , கதை படிக்க அல்ல , கமெண்ட்ஸ் படிக்க ... ஊரில மொக்கைச்சாமின்னு பேருதான் கேள்வி பட்டு இருக்கேன் . இப்பத்தான் படிக்கிறேன் .

கண்டிப்பா உங்களை சந்திக்கணும் மதி ( வால் இருக்கான்னு பார்க்க ) . சும்மா இருக்கும் போது பழைய வீடியோ எல்லாம் புரட்டி தேவர் பிலிம்ஸ்-ல்ல எடுத்த செல்வி படம் பார்த்திங்கன்னு நினைக்கிறேன் ..... அதுல ஒரு டாக் லவ்ஸ் வரும் பாருங்க இளைய ராஜா இசையில ஒரு சூப்பர் பாட்டு வேற ... இளமனது பல கனவு ... விழிகளிலே வருகிறதே ன்னு ( இந்த பாட்டுதான்னு நினைக்குறேன் ) . ம்ம் கொடுத்து வச்ச டாக்ஸ் .

மதி
30-07-2010, 03:01 AM
ஹிஹீ... தேவர் படமெல்லாம் எப்பயோ பாத்திருக்கேன். ஆனா நீங்க சொன்ன படம் ஞாபகமில்ல...!! நன்றி பாஸ்..

arun
30-07-2010, 12:17 PM
மதி

கதை டாப் டக்கர் கதையை ரொம்ப சுவாரஸ்யமா கொடுத்து இருக்கீங்க

ஆனா உங்க கதைய சொல்லி இருந்தா இன்னும் சுவாரஸ்யமா இருந்து இருக்கும் :)

செல்வா
30-07-2010, 12:50 PM
ஆனா உங்க கதைய சொல்லி இருந்தா இன்னும் சுவாரஸ்யமா இருந்து இருக்கும் :)

அப்போ இது மதியோட கதை இல்லியா...? :confused: :eek: :wuerg019:

Ravee
30-07-2010, 02:52 PM
மதி

கதை டாப் டக்கர் கதையை ரொம்ப சுவாரஸ்யமா கொடுத்து இருக்கீங்க

ஆனா உங்க கதைய சொல்லி இருந்தா இன்னும் சுவாரஸ்யமா இருந்து இருக்கும் :)

அப்போ இது மதியோட கதை இல்லியா...? :confused: :eek: :wuerg019:

அதான் இறுதிபாகம் - ன்னு போட்டாரே, அதுக்கு அப்புறமும் இம்சையா ... போதும் சாமிகளா, எங்க அண்ணாவை அடுத்த கதையை யோசிக்க விடுங்க . அப்புறம் இதுக்கு பதில் போட்டு இங்கயே குத்த வச்சுருவாரு. :D :lachen001: :D

மதி
31-07-2010, 09:16 AM
மதி

கதை டாப் டக்கர் கதையை ரொம்ப சுவாரஸ்யமா கொடுத்து இருக்கீங்க

ஆனா உங்க கதைய சொல்லி இருந்தா இன்னும் சுவாரஸ்யமா இருந்து இருக்கும் :)
சொல்லிக்கற அளவுக்கு என் கதைல ஒன்னுமில்லீங்க..:icon_b:

மதி
31-07-2010, 09:17 AM
அதான் இறுதிபாகம் - ன்னு போட்டாரே, அதுக்கு அப்புறமும் இம்சையா ... போதும் சாமிகளா, எங்க அண்ணாவை அடுத்த கதையை யோசிக்க விடுங்க . அப்புறம் இதுக்கு பதில் போட்டு இங்கயே குத்த வச்சுருவாரு. :D :lachen001: :D
அடுத்த கதையா....:fragend005::fragend005::fragend005::fragend005:

இதுக்கே கண்ணு கட்டுது

பாரதி
05-08-2010, 11:47 AM
வேறுபட்ட சிந்தனை ஓட்டத்தில் படைக்கப்பட்ட படைப்பு - நல்லா இருந்துச்சு மதி.

ஆனா தலைப்பில் இருந்த கேள்விக்கு விடை கிடைச்சுதான்னு தெரியல..

அதே மாதிரி... மன்றத்தில் எத்தனையோ கதை இருக்க..."நான் ஏன் இந்தக்கதையை படிக்க இவ்வளவு கஷ்டப்பட்டேன்.." - இந்தக்கேள்வி மனசுக்குள்ள இருந்து வருதே...!:lachen001::aetsch013:

மதி
05-08-2010, 12:04 PM

நன்றிண்ணா....
இந்த தலைப்புக்கான கதையே வேற... உண்மையான முடிவை செவ்வாயன்று நடந்த சந்திப்பில் சொல்லும் போது தாமரை தவிர எல்லோரும் ஒரு மாதிரியா பாத்தாங்க... (கதை எழுதறதுக்கு முன்னாடியே தாமரைக்கு கதை தெரியும்.. )
ஆனா ஏன் நீங்க படிக்க கஷ்டப்பட்டீங்கன்னு தெரியல..:icon_b:

பாரதி
05-08-2010, 12:30 PM
ஆனா ஏன் நீங்க படிக்க கஷ்டப்பட்டீங்கன்னு தெரியல..:icon_b:

ஹஹஹா... மதி.... கதையை முழுசா படிச்சு முடிக்க எல்லாப்பக்கங்களையும் பொறுமையா தேட வேண்டியதா போச்சு... அதைத்தான் சொன்னேனே தவிர... கதையை படிக்க கஷ்டப்பட்டேன்னு இல்ல...:):icon_b:

தாமரை
17-08-2010, 12:29 PM
http://www.tamilmantram.com/vb/showpost.php?p=481584&postcount=167

இந்தப் பாகத்தில் தான் கதையை திசை திருப்பிட்டார்.. நம்ம மதி!!!

நினைக்க நினைக்க மனசு வெறுமையா இருந்தது. டென்மார்க்கிலேயே இருந்த தன் தோழி வீட்டுக்கு எஞ்சினீயரம்மா போனாங்க. அவங்க நாங்க தங்க இடத்தை ஏற்பாடு பண்ணிக் கொடுத்தாங்க. ‘எவ்வளவு தான் நினைத்தாலும் மறக்க முடியாது ஜெஸ்ஸியுடன் நான் இருந்த தருணங்களை’. எங்கிருந்தோ வந்த எங்க இரண்டு பேரையும் ஏர்போர்ட்ல பார்க்க வச்சு ஒருத்தருக்கொருத்தர் ஏங்க வச்சு, பக்கத்து பக்கத்து வீட்டில தங்க வச்சு, அழகான நாட்டில காதலிக்க வச்சு.. பின்ன பிரிச்சு பார்க்கிற இந்த ஆண்டவன் எப்பேர்ப்பட்ட சாடிஸ்ட். ‘சாப்பிட பிடிக்கல. தூங்க பிடிக்கல… எதுவுமே பிடிக்கல. அங்க என் ஜெஸ்ஸி என்ன பண்ணிட்டு இருக்காளோ? அவளும் என்னை நெனச்சு சாப்பிடாம இருக்காளோ?’ தெரியல.

நாங்க போன ஊர்ல ஏகப்பட்ட டாக் இருந்துச்சு. ஆனாலும் யார் கூடவும் பேசத் தோணல. தனிமையே எனக்கு சொந்தம் மாதிரி ஆயிடுச்சு. எஞ்சினீயரம்மாக்கு குழந்தை பொறந்துச்சு. செக்கச் செவேல்னு ஆண் குழந்தை. பக்கத்துல நான் போனா இன்ஃபெஷன் ஆயிடும்னு சொன்னாங்க. அதனால நான் இன்னும் தனிமைல வாட ஆரம்பிச்சேன். நாட்கள் இப்படியே போகப் போக என் உடல் மெலிய ஆரம்பிச்சுது. கண்கள் சோர்ந்து போக ஆரம்பிச்சுது. குழந்தை பிறந்த சந்தோஷத்துல இருந்த எஞ்சினீயரம்மா என்னை கொஞ்சம் கொஞ்சமா கவனிக்க ஆரம்பிச்சாங்க.

“ஏன் டா.. ஏன் சரியா சாப்பிட மாட்டேங்கற..?”

நான் மௌனமாய் தலையாட்டினேன். என் செய்கை அவங்களுக்கு எஞ்சினீயர பத்தின நெனப்பை ஏற்படுத்தி இருக்க வேண்டும். அவங்க கண்ணில் மெல்லிதாய் சோகம். என்னை மாதிரி துணையை பிரிஞ்சு இருக்கற வேதனை.

“எஞ்சினீயர பிரிஞ்சு உன்னாலேயே இவ்ளோ நாள் இருக்க முடியலியே.. நான் எப்படி இருந்திருப்பேன் சொல்லு?”

எஞ்சினியரம்மா என்னைப் பார்த்து ஆறுதல் அடைவாங்க.. நான் அவரைப் பார்த்து.

ஒரு நாள் அப்படித்தான்.

நான் வாசலோரமா தலையை தரையில் வச்சிகிட்டு சோகமா ஜெஸ்ஸியை நினைச்சு கலங்கிகிட்டு இருந்தேன். கேட்டருகே என்னமோ சத்தம் கேட்டுச்சி.

கேட்டருகே ஒரு முகம் எட்டிப் பார்த்துச்சி. ஒரு வெள்ளை நிற பூடுல் வகை டாக்.

அதை என்னைப் பார்த்த பார்வை விளையாட வர்ரியா அப்படின்னு கேட்கிற மாதிரி இருந்தது. எனக்குப் பார்க்கப் பிடிக்கலை. தலையை தரையோடு வச்சுகிட்டு கண்ணை மூடிகிட்டேன்.

அப்ப எதோ கார் வர்ர சத்தம் கேட்கவே அந்தப் பூடுல் ஓடிப் போனது.

இன்னொரு நாள் அப்படித்தான். வீட்டுக்கு முன்னால் உள்ள புல் தரையில் படுத்திருந்தேன்.

அந்தப் பூடுல் டாக் கேட்டைத் தள்ளி எட்டிப் பார்த்தது..

புற்களைப் பார்த்தவுடன் டென்மார்க்கில் பார்க்குகள் நானும் ஜெஸ்ஸியும் விளையாடியதும், மெல்ல வாக்கிங் போனதும், வாலால் அவளைச் செல்லமாய்ச் சீண்டியதும்.. இப்படி என் ஜெஸ்ஸி.. மட்டுமே நினைவில் இருந்தால்.

அந்தப் பூடுல் மெல்ல உள்ள வந்தது.

என்ன செய்யற என்றது..

எனக்குப் பதில் சொல்ல விருப்பமில்ல.. அங்க இருந்த ஒரு செடியையே உத்து பாத்துகிட்டு இருந்தேன். நெஞ்சோரமா வலிக்கிற மாதிரி இருந்தது..

இவன் என்னடா இப்படி பெரிய தேவதாஸா இருக்கான் என்கிற மாதிரி பூடுல் பார்த்திச்சு.. எனக்கு அது இஷ்டமாவே இல்லை.. கண்ணை மூடிகிட்டேன்.

அப்பதான்

"ஜெஸ்ஸீ" யாரோ அழைக்கும் குரல் கேட்டது..

சிம்பொனி ஆர்க்கெஸ்ட்ரால கடைசியில் எல்லாம் நரம்புகளும் அதிருகிற மாதிரி பல நூறு வயலின்கள் ஒலிக்குமே அப்படி என் உடலின் நரம்புகளை மீட்டிக் கொண்டு இரத்தம் சுறுசுறுவென மீட்டியது.

சட்டென நிமிர்ந்தேன்.. ஓடிக் கொண்டிருந்தாள் ஜெஸ்ஸீ எனும் பூடுல்..

தொடரும்.

மதி
17-08-2010, 02:15 PM
அடடா.. ஆரம்பிச்சாச்சா... ஜெஸ்ஸியோட உண்மைக் கதையை ஆரம்பிச்சாச்சா..? இதற்கான பக்கவிளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல...

அப்புறம்... மன்ற மாமணிகளுக்கு இந்த கதையில் ஒரு பிழை உள்ளது.. சரியாக கண்டுபிடிக்கும் முதல் நபருக்கு 500 ஐகாசு...அன்பளிப்பாக வழக்கப்படும்.. :D:D:D:D

அமரன்
17-08-2010, 02:23 PM

கண்டு பிடிச்சுட்டேன், முரண்டு பிடிக்காமக் காசைக் குடுங்க.

மதி
17-08-2010, 02:40 PM
கண்டு பிடிச்சுட்டேன், முரண்டு பிடிக்காமக் காசைக் குடுங்க.
தனிமடல்ல அனுப்புங்க.. சரியா இருந்தா தான் காசு தருவேன்.. :D:D:D:D
தப்புன்ன உடனே எப்படியெல்லாம் கண்டுபுடிக்கறாங்கப்பா :icon_ush::icon_ush::icon_ush:

ஆதவா
20-08-2010, 04:54 AM
முடிவு கேட்டு வெறுப்பேத்தனுன்னு பத்தாம, இப்ப கதைவேற எழுத ஆரம்பிச்சிட்டீங்களா.... ம் :sprachlos020::sprachlos020:

மக்களே..... இனி உங்களை ஆண்டவனாலும் காப்பாத்த முடியாது!! :cool:

Ravee
20-08-2010, 10:14 AM
முடிவு கேட்டு வெறுப்பேத்தனுன்னு பத்தாம, இப்ப கதைவேற எழுத ஆரம்பிச்சிட்டீங்களா.... ம் :sprachlos020::sprachlos020:

மக்களே..... இனி உங்களை ஆண்டவனாலும் காப்பாத்த முடியாது!! :cool:

ஆதவா நம்ப பொழப்பு நாய் பொழப்பை விட மோசமா போயிடுமோ ???

http://farm4.static.flickr.com/3281/2718143003_4538d5180a.jpg

தாமரை
20-08-2010, 10:38 AM
http://www.i-love-dogs.com/dog-breeds/images/Poodle.jpg

ஜெஸ்ஸி! நினைக்கவே இனித்தது... போகிறாளே போகிறாளே..

ஜெஸ்ஸீ கூப்பிட யத்தனித்தேன்.. காத்துதான் வந்தது.. தன்னுடைய நீண்ட கால்களை மாற்றி மாற்றி வைக்க அந்த சிம்ரன் இடையழகு மாறி மாறி அசைந்தது,,

கேட்டருகே சென்ற ஜெஸ்ஸீ திரும்பினாள்.. டெலிபதின்னு சொல்வாங்களே அதேதான். என் உடலுக்குள் என்னென்னவோ நடந்தது. என் ரோமக்கால்கள் எழுந்து நின்றன.. மெல்ல தலையைக் குனிஞ்சுகிட்டேன். அவள் பார்ப்பதைப் பார்க்க எனக்கு வெட்கமா இருந்தது.

ஜெஸ்ஸீ திரும்ப வந்தாள்.. எனக்கு குறுகுறுன்னு மனசில் ஏதோ பட்டாம்பூச்சி பறக்கற மாதிரி இருந்தது.. நெஞ்சில் தடக் தடக் என்று அந்தக் கால ரெயில் ஓடியது..

உன் பேரென்ன ஜெஸ்ஸிதான் கேட்டா.. அதுவும் ஜெர்மனி பாஷையில்..

ம்ம்ம்மார்க்.. சொல்றதுக்குள்ள நான் ஒரு மார்க்கமாகி விட்டிருந்தேன்.

மார்க்.. அவள் குரலில் என் பேர் எவ்வளவு இனிப்பா இருக்கு!.. ஜெஸ்ஸீ..

ஜெஸ்ஸீ.. ஜஸ்ட் ஸீ மீ ஜெஸ்ஸீ..

இதயம் மைக்கேல் ஜாக்ஸனாய் மாறிக் கதற ஆரம்பித்தது..

இதயத்தில் ஒலித்த இசை அவளுக்குக் கேட்டு விட்டதோ அல்லது நாந்தான் என்னை மறந்து வாய்திறந்து பாடிட்டனோ தெரியலை...

அவள் முகம் சிவக்கத் தொடங்கியது. ஆஹா என்ன வெட்கம்..!!!

தொடரும்...

மதி
20-08-2010, 01:47 PM
என் பேரும் இத்தனை
தித்திக்கிறதே...
அவள் வாய் மொழியில்..!

(கவித..கவித....:lachen001::lachen001::lachen001:)

தாமரை
07-09-2010, 12:08 PM
நீண்ட நாள் கழித்து எனக்கு ஓடணும் போல இருந்தது.. எழுந்து மூச்சிரைக்க ஓடினேன். ஜெஸ்ஸிக்கு நான் செய்தது வினோதமா இருந்திருக்கலாம். ஆனால் என் சந்தோஷம் அவளுக்கும் தொத்திகிட்டது. மண்ணில் இந்தக் காதலின்றி அப்படின்னு மூச்சு விடாம பாடிட்டி எஸ்.பி.பி மூச்சிரைச்சு நிற்பாரே அப்படித்தான் ஜெஸ்ஸி பக்கம் போய் நின்னேன். ஜெஸ்ஸிக்கு வெட்கமா இருதிருக்கும் தலையைக் குனிஞ்சுகிட்டா..

சுறுசுறுவென வேகமா இரத்தம் உடலில் பாயும் உணர்வு.. அவளோட கண்ணைப் பார்க்க முயற்சி செய்தேன். கண்ணுக்கும் கண்ணுக்கும் பாலம் போட்டதில அவளோட வெட்கம் எனக்கும் பாய்ந்தது.. தலையைக் குனிஞ்சுகிட்டேன். அவள் என்னைத் திரும்பித் திரும்பிப் பார்த்துகிட்டே ஓடிட்டா..

உலகமே எனக்கு இப்ப வண்ணமயமா தெரிஞ்சது. அப்படியே புல்வெளியில் உட்கார்ந்தேன். ஒவ்வொரு புல்லும் என் உரோமங்களைப் போல சிலிர்த்திருப்பது தெரிஞ்சது. அவள் காலடி பட்ட புல்லையெல்லாம் முகர்ந்தேன்.. முத்தமிட்டேன்.

எதைச் செய்தாலும் எனக்குச் சந்தோஷமா இருந்தது. இதயம் இரண்டங்குலம் விரிந்து போனது போல எனக்கு இருந்தது. படபடன்னு துடிக்கறச் சத்தம் எனக்கே கேட்குது. புஸ் புஸ்னு இரைக்கும் மூச்சு கூட ஜெஸ் ஜெஸ் அப்படின்னு மாறிப்போச்சி.

மீண்டும் அவளை ஒரு முறை பார்க்க ஆசையா இருந்தது. மெல்ல எழுந்து அவள் வீட்டுப் பக்கம் நடந்தேன். கேட் எங்கோ தொலைவில் இருப்பது மாதிரி இருந்தது.. வேகமா நடக்கும்போது..

மார்க்...

எஞ்சினியரம்மாதான் கூப்பிட்டாங்க. எனக்குப் புரியலை. இவ்வளவு நாள் இங்கியேதான் இருந்தேன். யுகத்திற்கு ஒரு முறை என்னைப் பார்க்கும் எஞ்சினியரம்மா இப்பக் கூப்பிட்டதில் எனக்குக் கோபம் கோபமாத்தான் இருந்தது. ஆனாலும் மறுக்க மனமில்லை.

தலையைத் தொங்கப் போட்டுகிட்டு அவங்க பக்கம் போனேன்.

என் பக்கம் மண்டியிட்டு என் தலையைப் பிடிச்சி வருடி, எஞ்சினியரம்மா பக்கத்தில உட்கார்ந்துகிட்டாங்க.. அவங்க கண்ணில் தண்ணீர். எனக்கும் அழுகையா வந்திச்சி.. முக்கிய விஷயமா போறப்ப இப்படிப் பிடிச்சி வச்சு அறுக்கறாங்களேன்னு..

ஜெஸ்ஸி எங்கியோ இருந்து எட்டிப் பார்க்கிற மாதிரி ஒரு ஃபீலிங்.. திரும்பிப் பார்க்க முடியல. கடவுள் எவ்வளவுக் கொடுமையானவன் பாருங்க. காதலைக் கண்னருகே காட்டி எடுத்து கண்ணாமூச்சி ஆடறான்.

நான் எஞ்சினியரம்மா முகத்தையே ஏக்கமா பார்த்தேன்.

சரி வா ஒரு வாக்கிங் போயிட்டு வரலாம்..

எஞ்ஜினியரம்மா என் கழுத்துப் பட்டையில் கயிறு மாட்டிக் கையில் பிடித்துக் கொண்டு நடக்க ஆரம்பிச்சாங்க.

கேட்டிற்கு வெளியே வந்ததும் திரும்பிப் பார்த்தேன். ஜெஸ்ஸி அவள் வீட்டுக் கேட்டில் இருந்து எட்டிப் பார்த்துகிட்டு இருந்தா.

அவள் பார்வையில் இருந்த ஏக்கம் எனக்குப் புரிந்தது, ஆனால் என்னால் ஒண்ணும் செய்ய முடியலை. உடலை பிடிச்சு எஞ்சினியரம்மா இழுத்துகிட்டுப் போக.. உசிர் உரிஞ்சு அங்கேயே நின்னுருச்சி..

திரும்பித் திரும்பிப் பார்த்தவாறே போனேன்..

மெல்ல் அந்த வீடு கேட் எல்லாம் கண்ணில் இருந்து மறைந்தது. தலையைத் தொங்கப் போட்டுகிட்டு நடந்தேன்.

பார்க்.. இங்கேயும் ஏராளமான டாக்குகள் விளையாடிகிட்டு இருந்தன. எஞ்சினியரம்மா நடை பாதையில் நடக்க நானும் மெல்ல நடந்தேன்..

ஆயிரக்கணக்கான மைல்கள் நடப்பது போல அப்படி ஒரு ஆயாசம் எனக்குள் வந்திருச்சி.. தலை கிறுகிறுன்னு சுத்த ஆரம்பிச்சது..

தடால்னு விழுந்தேன்....

தொடரும்.

மதி
07-09-2010, 01:59 PM
ஹிஹி... ஆக சந்திப்புல இப்போவே பலிக்கு ஆடு இல்லேலே டாக் தயாராயிடுச்சு.
:eek::eek::eek::eek:

கீதம்
07-09-2010, 10:28 PM
ஹும்! காதலிடமும் காதலிகளிடமும் மாட்டிகிட்டு (அங்க மட்டுமா? கதையிலயும்தான்!) மார்க் படுற பாட்டைப் பார்த்தா ரொம்பப் பாவமா இருக்கு!

தாமரை
08-09-2010, 02:32 AM
இப்போ என் உடல் சற்றுத் தேற ஆரம்பிச்சிருச்சி. ஜெஸ்ஸியும் நானும் கனவுகளில் எப்பவுமே பிணைந்திருந்தோம். எஞ்சினீரம்மா மேல எனக்குக் கோபம்தான். பின்ன பக்கத்து வீட்டுக்காரம்மா கூட அவங்க பழகவே இல்லை. ஜெஸ்ஸிக்கும் எனக்கும் பார்க் போகும் வாய்ப்புகளே கிடைக்கலை. ஆனால் நல்ல மதிய வேளைகளில் வீட்டுக்கு முன்புறம் இருந்த மரத்தடிதான் எங்களோட பார்க்கா இருந்தது.

ஜெஸ்ஸீ அருகே இருக்கும் போது வெயில் கோட்டையில் உள்ள மகாராஜா மாதிரி எனக்கு ஒரு பெருமிதம் இருக்கும்.

“ஜெஸ்ஸி.. உன்கிட்ட ஒன்னு கேக்கணும்..?”

என்ன என்பது போல் பார்த்தாள்.

“என்னைப் பார்த்ததும் உனக்கு ஏன் அவ்ளோ புடிச்சுப் போச்சு?”

அவள் முகம் அழகாய் வெட்கப்பட்டது.

“சில விஷயங்களுக்கு ஏன்ங்கற கேள்விக்கு பதில் கிடையாது. உங்க அழகா, கம்பீரமா..ஏதோ ஒன்னு என்னை ஈர்க்குது. ஆமா என்னை எப்படி புடிச்சுது?”

“தெரியலை ஆனா என்னவோ எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு..”

இன்னும் அதிகமாய் வெட்கப்பட்டாள்.

ம்ம்ம் தெரியுமே.. ஆரம்பத்தில் நீங்க என்னை தலைதூக்கிக் கூடப் பார்க்க மாட்டீங்க....ஏதோ தொலைச்ச மாதிரி எங்கயோ புதைந்து கிடக்கிற மாதிரி நீங்களும் உங்க முகமும் கலகலவென சிரித்தாள் ஜெஸ்ஸி..

ஆமாம் ஜெஸ்ஸி தொலைஞ்சுதான் போயிருந்தேன்... தொலைச்சுமிருந்தேன்.. அப்புறம்தான் உனக்குள் நான் இழந்த எல்லாம் இருக்கறதைக் கண்டேன்..

என்ன சொல்றீங்க பதறினாள் ஜெஸ்ஸி..

டாக்குகளுக்கு பொய் சொல்லப் பிடிக்காது. நானும் பொய் சொல்ல விரும்பலை. என்னுடைய முதல்காதலையும் அது பிரிந்த விதத்தையும் மூச்சு விடாம சொல்லி முடிச்சேன்.

ஜெஸ்ஸி வைத்த கண் வாங்கம பார்த்துகிட்டு இருந்தாள்..

நீ ரொம்பப் பாவம் என்றாள். அப்படி காதல் புதைகுழிக்குள் தொலைஞ்சு போன உங்களை வெளிய கொண்டு வந்தது எது? அப்படி என்ன என்கிட்ட இருக்கு? ஜெஸ்ஸி குறும்பா பார்த்துகிட்டே கேட்டாள்.

உன் பேரு என்றேன் நான்

ஹலோ என்ன முறைக்கிறீங்க. வேணும்னா முதப் பக்கம் போய் கதையோட தலைப்பை நல்லாப் படிங்க. உலகத்தில எத்தனையோ பேர் இருக்கும்போது ஜெஸ்ஸியை நான் ஏன் லவ் பண்ணினேன் - இதாங்க தலைப்பு.

ஜெஸ்ஸிங்கற பேர் மேல எனக்குக் காதல். ஜெஸ்ஸின்னு பேர் இருந்தா காதலிப்பேன். அது எந்த நாயா இருந்தா என்ன?

ஏன் கல்லை எடுக்கறீங்க.. உங்க குறுகிய இந்திய மனப்பான்மையை விட மாட்டீங்களா..

வவ் வவ்... லொள்.. லொள்...உர்ர்ர்....

மதி
08-09-2010, 03:14 AM
முடிஞ்சே போச்சு. :D:D:D:eek::eek::eek:

கீதம்
08-09-2010, 07:19 AM
செம லொ(ள்)ல்லுதான்.:lachen001::lachen001:

தாமரை
08-09-2010, 08:02 AM
எந்த முடிவு நல்லா இருக்கு நீங்களே லொள்ளுங்க...(சொல்லுங்க)

கீதம்
08-09-2010, 09:00 AM
எந்த முடிவு நல்லா இருக்கு நீங்களே லொள்ளுங்க...(சொல்லுங்க)

மதி எழுதிய முடிவில் யதார்த்தம் இல்லை என்றாலும் மனதுக்கு இதமாக இருந்தது. உங்கள் முடிவு மனதிற்கு இதமளிக்காவிட்டாலும் யதார்த்தம் நிரம்பியுள்ளது. இரண்டுமே நன்றாக உள்ளது.:icon_b::icon_b:

தாமரை
08-09-2010, 09:05 AM
மதி எழுதிய முடிவில் யதார்த்தம் இல்லை என்றாலும் மனதுக்கு இதமாக இருந்தது. உங்கள் முடிவு மனதிற்கு இதமளிக்காவிட்டாலும் யதார்த்தம் நிரம்பியுள்ளது. இரண்டுமே நன்றாக உள்ளது.:icon_b::icon_b:

ஆனால் பாருங்க இரண்டு முடிவுகளுமே மதியோடதுதான். இதில் எனக்கு ஒரு சம்பந்தமும் இல்லை. அவரோட ஒரிஜினல் முடிவை வெளிப்படுத்தியதைத் தவிர..

உங்க பின்னூட்டங்களைப் பார்த்து, இந்த முடிவை எழுதினா கல்லெடுத்து அடிச்சிருவீங்கன்னு பயந்து அவருதான் முடிவை மாத்தினாரு...

நான் ஆதவா, ஆதன், சிவா.ஜி, அகிலா எல்லோருமே சொன்னோம். இப்ப எழுதி இருக்கிற முடிவுதான் சரின்னு.. அடிக்கு பயந்து அவர் எழுதல,, அதான் நான் எழுதவேண்டியதா போச்சி...

அதனால் தைரியமா உங்களுக்குப் புடிச்ச முடிவை சொல்லலாம். பட்டி மன்ற முடிவு மாதிரி அது அப்படி.. இது இப்படின்னு சொல்லத் தேவையில்லை.

கீதம்
08-09-2010, 09:11 AM
எனக்கு யதார்த்தம்தான் பிடிக்கும், சோகமானதாய் இருந்தாலும். என் கதைகளில்கூட கவனித்திருப்பீர்கள். எனவே எனது ஓட்டு இரண்டாவது முடிவுக்குதான்.

மதி
08-09-2010, 09:17 AM
எனக்கு யதார்த்தம்தான் பிடிக்கும், சோகமானதாய் இருந்தாலும். என் கதைகளில்கூட கவனித்திருப்பீர்கள். எனவே எனது ஓட்டு இரண்டாவது முடிவுக்குதான்.
:D:D:D
கதைக்கு பேர் வச்சதே.. இந்த முடிவுக்காக தான்.. ஆனா பாருங்க... எப்படியெல்லாமோ போய்டுச்சு..

இதிலே பாருங்க சோகம் கொஞ்ச நேரம் தான்.. அடுத்த ஜெஸ்ஸி வரும் வரை...

தாமரைக்கு மிக்க நன்றி..
:D:D:D

கீதம்
08-09-2010, 09:22 AM
தொடர்கதையில் இந்தப் பிரச்சனை இருக்கு மதி. நாம் ஒரு முடிவை மனத்தில் இருத்தி கதையைக் கொண்டுபோவோம். வாசகர்கள் வேறுமாதிரியான முடிவை எதிர்பார்க்கிறார்கள் என்று தெரியவந்ததும் முடிவை மாற்றி சொதப்பிவிடுவோம். என் தொடர்கதை அனுபவத்திலிருந்து கற்றது. சிறுகதையில் இந்தப் பிரச்சனை கிடையாது. இப்ப உங்கள் கதை இரண்டு முடிவுகளைக் கொண்டு இருதரப்பட்ட வாசகர்களையும் திருப்திப்படுத்தும்விதமாய் அமைந்துவிட்டது.

உங்கள் முடிவை வெளிக்கொணர உதவிய தாமரை அவர்களுக்கு நன்றி.

தாமரை
08-09-2010, 09:26 AM
உங்கள் முடிவை வெளிக்கொணர உதவிய தாமரை அவர்களுக்கு நன்றி.

என்னை தாதா ரேஞ்சுக்கு கொண்டு வந்துட்டீங்க... :eek::eek::eek:

மதி
08-09-2010, 09:32 AM
தொடர்கதையில் இந்தப் பிரச்சனை இருக்கு மதி. நாம் ஒரு முடிவை மனத்தில் இருத்தி கதையைக் கொண்டுபோவோம். வாசகர்கள் வேறுமாதிரியான முடிவை எதிர்பார்க்கிறார்கள் என்று தெரியவந்ததும் முடிவை மாற்றி சொதப்பிவிடுவோம். என் தொடர்கதை அனுபவத்திலிருந்து கற்றது. சிறுகதையில் இந்தப் பிரச்சனை கிடையாது. இப்ப உங்கள் கதை இரண்டு முடிவுகளைக் கொண்டு இருதரப்பட்ட வாசகர்களையும் திருப்திப்படுத்தும்விதமாய் அமைந்துவிட்டது.

உங்கள் முடிவை வெளிக்கொணர உதவிய தாமரை அவர்களுக்கு நன்றி.
அது மட்டும் காரணம் இல்லே.. ஆரம்பத்துலேயே ஒரு இடத்தில் சறுக்கிட்டேன். அதுவும் ஒரு காரணம். அதனால மனம் போன போக்கில எழுதியாச்சு. அப்புறமா வந்தது தான் வலுக்கட்டாயமான முடிவு... சோக முடிவு வேணாம்னு மக்கள் சொன்னதால.. அவங்க விருப்பத்தையாவது நிறைவேத்தலாம்னு. மத்த கதைகள்ல இந்த காம்ப்ரொமைஸ் இருக்காது..

Ravee
08-09-2010, 09:50 AM
நானும் இப்பத்தான் கவனிச்சேன் ... கல்லால் அடிக்கிறது நம்ம அனிருத் .. அடி வாங்கிட்டு ஓடுறது ..... மார்க் அண்டு மதி http://www.hi2web.com/forum/images/smilies/animal0019.gifhttp://www.hi2web.com/forum/images/smilies/animal0019.gif

அடக் கொடுமையே மன்றத்தில எத்தனையோ கதை இருக்க இந்த கதையை நான் ஏன் படிச்சேன் .... ஜேசி ..... இந்த பேரு தான் காரணமோ ? :lachen001: :lachen001: :lachen001:

மதி
01-07-2011, 05:15 AM
இந்த கதைக்கு சம்பந்தப்பட்ட செய்தி:

http://thatstamil.oneindia.in/art-culture/essays/2011/dogs-do-understand-human-emotions-aid0091.html

:D:D:D:D:D

Ravee
01-07-2011, 06:15 AM
இந்த கதைக்கு சம்பந்தப்பட்ட செய்தி:

http://thatstamil.oneindia.in/art-culture/essays/2011/dogs-do-understand-human-emotions-aid0091.html

:D:D:D:D:D

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் திமுக கவுன்சிலரை ஓட ஓட நாய்கள் துரத்தியதில், அவரது கைகளில் எலும்பு முறிந்தது.

புதுக்கோட்டை நகராட்சி 1-வது வார்ட் திமுக கவுன்சிலராக இருப்பவர் நாகராஜ். இவரது வார்டில் தெரு நாய்கள் அதிகம் உள்ளது.

இந்த நாய்கள் பொது மக்களை அடிக்கடி அச்சுருத்தி வந்தன. இதனால் இந்த நாய்களை உடனே பிடிக்க வேண்டும் என்று கவுன்சிலர் நாகராஜன் நகராட்சி கூட்டத்தில் பல முறை வலியுத்தி வந்தார்.

இந் நிலையில் கடை வீதிக்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிந்த நாகராஜனை தெரு நாய்கள் சேர்ந்து துரத்தின.

நாய்களிடம் இருந்து தப்பிக்க வேகமாக ஒடியபோது தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவரது கை எழும்பு முறிந்தது.

இந்த செய்திய படிச்சுட்டா இப்படி ஒரு அருமையான கதை எழுதினீங்க ...... சின்க் ஆகமாடீங்குதே மதி ....:lachen001: :D :lachen001:

மதி
01-07-2011, 06:43 AM
இதுலேர்ந்து என்ன தெரியுது.. நாகராஜ் மேல இருக்கற அன்பினால அவரை நோக்கி அவை ஓடி வந்ததைக்கூட புரிஞ்சுக்காமல் அவர் தறிகெட்டு ஓடி கீழே விழுந்து காலை ஒடிச்சுக்கிட்டார். மார்க்-களுக்கும் ஜெஸ்ஸிக்களுக்கும் இருக்கும் புரிந்து கொள்ளும் திறமை மனுஷங்களுக்கு இல்லியே..!!

innamburan
01-07-2011, 06:44 AM
ஏன் என்னால் கதையை படிக்கமுடியவில்லை?

Ravee
01-07-2011, 06:46 AM
இதுலேர்ந்து என்ன தெரியுது.. நாகராஜ் மேல இருக்கற அன்பினால அவரை நோக்கி அவை ஓடி வந்ததைக்கூட புரிஞ்சுக்காமல் அவர் தறிகெட்டு ஓடி கீழே விழுந்து காலை ஒடிச்சுக்கிட்டார். மார்க்-களுக்கும் ஜெஸ்ஸிக்களுக்கும் இருக்கும் புரிந்து கொள்ளும் திறமை மனுஷங்களுக்கு இல்லியே..!!

ஏற்கனவே வீட்டில ஒண்ணுக்கு ரெண்டு இருக்கும் போது இன்னமும் இத்தனை பேரா என்று ஓடி இருப்பார் மதி ... :lachen001:

மதி
01-07-2011, 06:46 AM
கதை நாலாம் பக்கத்திலிருந்து தான் ஆரம்பிக்கிறது..:eek::eek::eek:

மதி
01-07-2011, 06:47 AM
ஏற்கனவே வீட்டில ஒண்ணுக்கு ரெண்டு இருக்கும் போது இன்னமும் இத்தனை பேரா என்று ஓடி இருப்பார் மதி ... :lachen001:
உங்க அனுபவம் அப்படின்னா நான் என்ன பண்றது..:icon_b:
அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு... :eek::eek::eek:

Ravee
01-07-2011, 06:50 AM
உங்க அனுபவம் அப்படின்னா நான் என்ன பண்றது..:icon_b:
அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு... :eek::eek::eek:

நல்லா பார்க்கணும் அவர் பேரு நாகராஜ் ......... நான் ரவீ ........... நானா இருந்தா அதுக்கு இது தேவலைன்னு நாய்களோட ஓடி போய் இருப்பேன்......:D

தாமரை
01-07-2011, 07:44 AM
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் திமுக கவுன்சிலரை ஓட ஓட நாய்கள் துரத்தியதில், அவரது கைகளில் எலும்பு முறிந்தது.

புதுக்கோட்டை நகராட்சி 1-வது வார்ட் திமுக கவுன்சிலராக இருப்பவர் நாகராஜ். இவரது வார்டில் தெரு நாய்கள் அதிகம் உள்ளது.

இந்த நாய்கள் பொது மக்களை அடிக்கடி அச்சுருத்தி வந்தன. இதனால் இந்த நாய்களை உடனே பிடிக்க வேண்டும் என்று கவுன்சிலர் நாகராஜன் நகராட்சி கூட்டத்தில் பல முறை வலியுத்தி வந்தார்.

இந் நிலையில் கடை வீதிக்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிந்த நாகராஜனை தெரு நாய்கள் சேர்ந்து துரத்தின.

நாய்களிடம் இருந்து தப்பிக்க வேகமாக ஒடியபோது தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவரது கை எழும்பு முறிந்தது.

இந்த செய்திய படிச்சுட்டா இப்படி ஒரு அருமையான கதை எழுதினீங்க ...... சின்க் ஆகமாடீங்குதே மதி ....:lachen001: :D :lachen001:

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6598

நாய் - நாகராஜ் இதைப் படிச்ச உடனே சிங்க் ஆகி இருக்குமே.. 3 வது பதிவில் பதிலைப் படிச்சீங்களா?

Ravee
01-07-2011, 11:38 AM
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6598

நாய் - நாகராஜ் இதைப் படிச்ச உடனே சிங்க் ஆகி இருக்குமே.. 3 வது பதிவில் பதிலைப் படிச்சீங்களா?

ஹா ஹா ஹா நாய்க்கும் நாகராஜுக்கும் போன பிறவியில் ஏதோ தொடர்பு இருக்கும் போல .... :lachen001: