PDA

View Full Version : ஐயய்யோ.. புடிங்க ..புடிங்க



த.ஜார்ஜ்
08-07-2010, 08:47 AM
வசதியான நண்பன் ஒருவனின் திருமணம்.
ஆலயத்தில் மூன்று குருவானவர்கள் இணைந்து திருப்பலி நிறைவேற்றிக் கொண்டிருந்தார்கள்.
உறவினர்களும் மப்பு வழியும் நண்பர்களுமாக நல்ல கூட்டம்.
எப்போதும் பான்ட் சட்டை அணியும் நண்பன் அன்று வழுவழுப்பான பட்டு வேட்டி சட்டை போட்டிருந்தான்.

தாலி கட்டும் [அணியும்] நேரம்.
வீடியோ ஒளிப்பதிவாளர்கள், புகைப்படகாரர்கள்,காமிரா இருந்த நண்பர்கள் என் அனைவர் பார்வையும் தாலிகட்டும் வைபவத்தில் நிலைத்திருக்க... [படம் பிடிக்க இடைஞ்சல் என்று மாப்பிள்ளை தோழர் கூட பின் தள்ளப்பட்டார்.].
எல்லா உறுதிமொழியும் வாங்கிய பின் ,தாலியை ஆசிர்வதித்து மணமகன் கையில் கொடுத்த குருவானவர்,அதை பெண் கழுத்தில் அணிவிக்கக் சொன்னார்.
தாலியை கையில் வாங்கிய மணமகன் சிறு குழந்தை எதற்கோ முழிக்குமே அதே மாதிரி முழித்தார்.
பெண்ணின் கழுத்தைக் சுற்றி தாலியை கொண்டு போனவர் "ஐயய்யோ.. புடிங்க ..புடிங்க' என்று கத்தினார்.
முதலில் யாருக்கும் எதுவும் புரிய வில்லை.ஆளாளுக்கு பதற... நல்லவேளை அருகில் நின்ற குருவானவர் நழுவிக்கொண்டிருந்த மாப்பிள்ளையின் வேட்டியை பிடித்துக் கொண்டார்.

ஓவியன்
08-07-2010, 09:11 AM
இப்படியான நேரங்களில் முன்னேற்பாடுகளை கொஞ்சம் பலப்படுத்த வேண்டும், இல்லைனா இப்படித்தான் குரல் கொடுக்க நேரும்...

சம்பவப் பகிர்வுக்கு நன்றி ஜார்ஜ்..!! :)

Mano.G.
08-07-2010, 09:17 AM
நல்ல ஜோக்,
இது தான் பாரம்பரிய உடைய
அப்பப்ப உடுத்துனும்கிரது,
கல்யாணத்துக்கு மட்டும் உடுத்திட்டு
அதற்கு பிறகு வேஸ்டின்னா என்னான்னு கேட்கப்படாது

சிவா.ஜி
08-07-2010, 09:34 AM
நாங்கல்லாம்...ரொம்ப விவரமா...அண்ணாக்கயிறை போட்டு இறுக்கிட்டோமில்ல...

கல்யாணத்துக்குப் பிறகு வீட்டுக் கிரகப்பிரவேசதிற்கு கட்டியதோடு சரி....மற்றபடி வேட்டி...ம்ஹீம்.

நல்ல பகிர்வு ஜார்ஜ்.

தாமரை
08-07-2010, 09:41 AM
வள்ளுவன் வாக்கைப் பொய்யாக்கி காட்டிட்டாரே மாப்பிள்ளை.

உடுக்கை இழந்தான் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு...

இங்கே மணமகனின் கையில் தாலி..... கல்யாணம் ஆகப் போகுது...

மனைவி வரப்போகிறாள் என்றவுடனேயே நட்பு என்னும் கரம் உடுக்கை இழப்பதை கவனிக்கலை...

வாய் மாத்திரம் ஐயோ ஐயய்யோன்னு புலம்புது....

இதனால சகலமானவ்ரும் தெரிஞ்சுக்க வேண்டியது என்னவென்றால்....

சொல்லணுமா என்ன...:lachen001::lachen001::lachen001::lachen001:

சிவா.ஜி
08-07-2010, 09:46 AM
ஹி...ஹி....நவீனநாரதரின்...திருவிளையாடல் ஆரம்பமாகிடிச்சுங்கோ.....!!!

மதி
08-07-2010, 10:02 AM
கோட் சூட்லேயே கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தான்.. ஹிஹி. என் நண்பன் அப்படி தான் தாலி கட்டினான்.

அன்புரசிகன்
08-07-2010, 10:56 AM
தலைப்பை பார்த்தவுடன் ஜார்ஜ் ஐயா தான் எழுதியிருப்பார் என்று நினைத்தேன். அது சரியாகிவிட்டது. இன்னொன்றும் நினைத்தேன். அது நடக்கவில்லை. அதாவது இன்று அலுவலகத்தில் குட்டித்தூக்கம் போடுகையில் (ஓவியன் போல்) திருடனை பிடிப்பது போல் கனவு கண்டு கூச்சலிட்டிருப்பீர்கள் என்று நினைத்தேன்...

உங்கள் நண்பருக்கு சணல் கயிறு கூடவா கிடைக்கவில்லை??? :D


இதனால சகலமானவ்ரும் தெரிஞ்சுக்க வேண்டியது என்னவென்றால்....

சொல்லணுமா என்ன...:lachen001::lachen001::lachen001::lachen001:
அது தான் உதடு வரைக்கும் வந்திட்டுதெல்லோ... சொல்லவேண்டியது தானே...:D

விகடன்
08-07-2010, 11:03 AM
இதற்குத்தான் சொல்லுறது, உள்ளாடை அணியவேண்டும் என்று... :eek:

மச்சான்
08-07-2010, 11:36 AM
நல்லவேளை அருகில் நின்ற குருவானவர் நழுவிக்கொண்டிருந்த மாப்பிள்ளையின் வேட்டியை பிடித்துக் கொண்டார்.
ஹி... ஹி..... நல்லவேளை...... வேட்டியை பிடிச்சாரு....! அவரும் பதற்றத்தில் வேட்டியை பிடிக்கறதுக்கு பதிலா......:medium-smiley-089:

.

த.ஜார்ஜ்
08-07-2010, 02:42 PM
ஓவியன்,மனோ,தாமரை,சிவா,மதி,அன்புரசிகன்,விராடன்,மச்சான்.
நல்லாத்தான் குடுக்கிறீங்க குரலு... கண்டுகினேன்..

த.ஜார்ஜ்
08-07-2010, 02:44 PM
ஏன் மச்சான்... படிச்சிட்டு நமுட்டு சிரிப்போட போவியா.அத வுட்டுட்டு என்னென்னமோ சொல்லிக்கிட்டு..

பா.ராஜேஷ்
08-07-2010, 05:23 PM
ஒரே தமாசுதான் போங்க... அதுக்கப்புறம் தாலிய கட்டினார இல்ல வேட்டிய கட்டினாரா!!?

செல்வா
08-07-2010, 07:57 PM
ஒரே தமாசுதான் போங்க... அதுக்கப்புறம் தாலிய கட்டினார இல்ல வேட்டிய கட்டினாரா!!?

ரெண்டையும்... :)

அமரன்
08-07-2010, 08:16 PM
ரெண்டையும்... :)

பொண்ணைக்கட்டலையா.:lachen001:

govindh
09-07-2010, 12:09 AM
[படம் பிடிக்க இடைஞ்சல் என்று மாப்பிள்ளை தோழர் கூட பின் தள்ளப்பட்டார்.].

மாப்பிள்ளை தோழர்..(நம்ம ஜார்ஜ் தான்.., )
பக்கத்தில் நின்றிருந்தால்....மாப்பிள்ளை இப்படி கத்தியிருக்க மாட்டார்....!:)

அன்புரசிகன்
09-07-2010, 12:20 AM
[படம் பிடிக்க இடைஞ்சல் என்று மாப்பிள்ளை தோழர் கூட பின் தள்ளப்பட்டார்.].

மாப்பிள்ளை தோழர்..(நம்ம ஜார்ஜ் தான்.., )
பக்கத்தில் நின்றிருந்தால்....மாப்பிள்ளை இப்படி கத்தியிருக்க மாட்டார்....!:)
அதெப்படி அவ்வளவு உறுதியாக சொல்றீங்க??
அப்போ அந்த மாப்பு நீங்க தானா???:D

த.ஜார்ஜ்
09-07-2010, 05:02 AM
கலாட்டாவை தொடர்ந்து கொண்டிருக்கும் ராஜேஷ்,அமரன்,செல்வா,கோவிந்த், மற்றும் அன்புவுக்கு...நன்றி.[பங்கு போட்டுகங்க.]

மாப்பிள்ளை தோழர்...சரி சரி.. நான்..,கோவிந்த் எல்லாம் விடுங்க. அந்த சாமியாரு நிலைமையை யோசிச்சி பாத்தீங்களா.

தாமரை
09-07-2010, 05:03 AM
[படம் பிடிக்க இடைஞ்சல் என்று மாப்பிள்ளை தோழர் கூட பின் தள்ளப்பட்டார்.].

மாப்பிள்ளை தோழர்..(நம்ம ஜார்ஜ் தான்.., )
பக்கத்தில் நின்றிருந்தால்....மாப்பிள்ளை இப்படி கத்தியிருக்க மாட்டார்....!:)


அதெப்படி அவ்வளவு உறுதியாக சொல்றீங்க??
அப்போ அந்த மாப்பு நீங்க தானா???:D

சொல்றதைப் பார்த்தா பின்னுக்குத் தள்ளிய கோபத்தில் வேட்டியை உருவி விட்டதே மாப்பிள்ளைத் தோழர்தான் (ஜார்ஜ்தான்) என்கிற மாதிரி தோணுதே!!

நாராயாண... நாராயண...

ஓவியன்
09-07-2010, 05:40 AM
ஆக மொத்தத்திலே என்ன நடந்தது என்று, இப்பத்தான் தெளிவாகியிருக்கு.. :cool:

தாமரை
09-07-2010, 05:43 AM
கலாட்டாவை தொடர்ந்து கொண்டிருக்கும் ராஜேஷ்,அமரன்,செல்வா,கோவிந்த், மற்றும் அன்புவுக்கு...நன்றி.[பங்கு போட்டுகங்க.]

மாப்பிள்ளை தோழர்...சரி சரி.. நான்..,கோவிந்த் எல்லாம் விடுங்க. அந்த சாமியாரு நிலைமையை யோசிச்சி பாத்தீங்களா.

இதென்ன புது குண்டு...

உண்மையைச் சொல்லுங்க, நீங்க மாப்பிள்ளைத் தோழரா இருந்தீங்களா இல்லை சாமியாராவா?:eek::eek::eek:

த.ஜார்ஜ்
09-07-2010, 03:08 PM
எனக்கு எந்த வேஷம் மிகப் பொருத்தம் என்று எண்ணுகிறிர்களோ அதையே போட்டுகொண்டால் போச்சி.

ஆதவா
09-07-2010, 04:49 PM
இதேமாதிரி ஒரு சம்பவம். மாப்பிள்ளை உட்கார்ந்து மந்திரம் சொல்லிட்டு இருந்தாரு அதாவது ஐயர் சொல்றதை ரிப்பிட் பண்ணிட்டு இருந்தாரு. சொல்லச் சொல்ல கீழ கீழ குனிஞ்சுகிட்டே இருந்தாரு. என்னடான்னு பார்த்தா, வேட்டி அவுந்திருச்சு, பக்கத்துல பொண்ணு. (தப்பா ஏதும் நினைக்காதீங்கப்பா.) அப்பறம் எப்படியோ கட்டிகிட்டாரு

வேட்டியையும் பொண்ணையும்.. இதுக்குத்தான் பெல்ட் அணியவேண்டும் என்பது.

எனக்கு எந்த வேஷம் மிகப் பொருத்தம் என்று எண்ணுகிறிர்களோ அதையே போட்டுகொண்டால் போச்சி.

நண்பன்+சாமியாரா இருப்பீங்களோ?

த.ஜார்ஜ்
10-07-2010, 04:14 PM
ஆக என்னை சாமியாராக்கி விடுவதுதான் உங்கள் நோக்க்ம்.

அமரன்
10-07-2010, 05:04 PM
ஆக என்னை சாமியாராக்கி விடுவதுதான் உங்கள் நோக்க்ம்.

உங்கள வைச்சுப் பிசினஸ் பண்ணப் பாக்கிறாங்க. உஷாராகிடுங்க ஜார்ஜ்.

xavier_raja
02-08-2010, 01:47 PM
ஒருவேளை அந்த குரு உதவவில்லை என்றால் அபசகுனமாகி போயிருக்கும்..