PDA

View Full Version : சின்ன தீபாவளி!!!



poo
02-11-2003, 06:28 PM
வணக்கம்..

போனவாரம் முழுக்க வரமுடியாம போனதால.. தீபாவளியை சின்னத்திரையோட கொண்டாடியதை சொல்ல மறந்துட்டேன்!!


இதைக்கூட பார்க்க மறந்துட்டேன்னா பாருங்களேன்..

http://www.tamilmantram.com/board/viewtopi...=asc&highlight= (http://www.tamilmantram.com/board/viewtopic.php?t=2389&start=0&postdays=0&postorder=asc&highlight=)


சரி இனி என் சின்ன தீவாளி..(சின்ன வயசுல தீவாளிக்கு தீவாளி.. ஒரே ஜாலி :lol: )


தீபாவளியன்னைக்கு காலையில..திண்டுக்கல் லியோனி முகத்துலதான் விழிச்சோம்..மனுஷர் நன்னாவே முழிச்சிக்கிட்டிருந்தார்.. :roll:

காலையில 8 மணிக்கு..(அடப்பாவி .. அப்போதான் எழுந்திருச்சிங்களாவென நீங்கள் கேட்பது தெரிகிறது.. ஆனாலும் கேட்பதற்கும் மேய்ப்பதற்கும் ஒரு மேலாளர் இல்லா வீடு என்னுடையது!!) விஜய் டி.வியில லியோனி பட்டிமன்றம்.. ஆனால் அதிசயம்.. அதிக
விளம்பரமில்லாமல்..அதனால் முழுக்கப் பார்த்தேன்.

தலைப்பு " அதிகம் கவர்ந்தது கதநாயகர்களா கதாநாயகிகளா.."

பாதிபேர் பாடல்களை பாடிக்காட்டியே நொடிகளை சாப்பிட்டுவிட்டார்கள்!! :lol:

ஆனால் இறுதியில் உண்மையான தீர்ப்பு!!!

(ஆண்களே பலமாக ஒருமுறை கைத்தட்டுங்கள்!! :lol: )

அன்னைக்கு காலையில இருந்து மதியம் வரைக்கும் சிம்ஸை(சிம்ரன்) மொத்தமா குத்தகை எடுத்துக்கிச்சு.. அட பின்ன என்னங்க சிம்ஸ்தான் நிகழ்ச்சி தொகுப்பாளர்னா பொறுக்கவா முடியும்?!.. (நம்ம இளசு அண்ணன் ஊருல இருந்திருந்தா இந்த கதி வந்திருக்காது!! :? ) விஜய் டி.வி. நிகழ்ச்சிகளை பார்த்ததைவிட சிம்ஸ்க்கு ஏன் இந்த கதியென நினைத்து நினைத்து நெஞ்சம் நொந்ததே அதிகம்! :(

அப்படியே சன்னை திருப்பினா..

நம்ம.. த்ரிஷா..
(இல்ல.இல்ல.. உங்க.. ஏன் இப்படி உளறறேன்னு யோசிக்காம இதைப்பாருங்க..
http://www.tamilmantram.com/board/posting....e=quote&p=30529 (http://www.tamilmantram.com/board/posting.php?mode=quote&p=30529) )

த்ரிஷா.. மேக்கப் அதிகமில்லைபோலும்.. அம்மணி கொஞ்சம் கருப்புதான்.. (என் மனைவி கொஞ்சமல்ல நிறையவே சந்தோஷப்பட்டா..)

இந்தமுறை வித்தியாசம்னு(?) சொல்லி..சன் டி,.வி நிகழ்ச்சி தொகுப்பாளர்களும் செய்தி வாசிப்பாளர்களும் அவங்க மேக்கப் போட்டுக்கிட்டு இருந்தப்ப கேள்வி கேட்க வைச்சு பதிலை த்ரிஷாகிட்டே வாங்கினாங்க..

ஒரு காலத்துல படத்துல நடிக்கவே மாட்டேன்னு சபதமெல்லாம் போட்டு பேட்டி கொடுத்தாங்களாம்... (நல்லவேளை அம்மணிக்கு மறதி அதிகம்போல....)
:D

மறுபடியும் ஜெயாவுக்கு வந்தேன்..

பேரரசர் சொன்னாப்போல விளம்பரம் பார்த்தேன்.. :D

(இளசு அண்ணாவின் விளம்பரத்தாலே- http://www.tamilmantram.com/board/viewtopi...=asc&highlight= (http://www.tamilmantram.com/board/viewtopic.php?t=1947&start=0&postdays=0&postorder=asc&highlight=) வுக்கு உதவுமே!!)


மறுபடியும் விஜய் பக்கம் எட்டிப்பார்த்தேன்..

சிம்ஸ்.. ராகவ்,ரவிராகவேந்தர்,ஜேம்ஸ் வசந்தன் இப்படி சின்ன(த்திரை) நடிகர்கள்கூட சேர்ந்துக்கிட்டு காளையை அடக்கு அது இதுன்னு பொய்க்கால் ஆட்டம் போட்டு காணச்சகிக்கல.. (சிம்ஸ்க்கு வந்த சோதனை! :cry: ).. நாட்டுப்புற நிகழ்ச்சியாம்....

ராஜு சுந்தரத்தை (காரணமில்லாம...?!) திட்டிக்கிட்டே சன்கிட்ட வந்தேன்..

அங்க நம்ம மின்னல்....... வந்துபோறவரைக்கும் பார்த்துட்டு .., "மாயி" நான் போயி வரேன்னு வந்துட்டேன்..

அப்புறம்.. பக்கத்து வீடு.. பாட்டி வீடுன்னு படையல் முடிஞ்சி வந்த சமாச்சாரங்களை மொத்தமா ஒரு புடி புடிச்சிட்டு.. எழுந்திருக்கமுடியாம சாஞ்சிட்டேன்..


எழுந்தப்போ.. தனுஷ் ஏதோ பேசிக்கிட்டு இருந்தார்.. மன்மத ராசா போடமாட்டானுன்னு காத்து காத்து பூத்துப்போய்ட்டேன்.. :(

லோக்கல் சேனல்ல அந்த பாட்டை மணிக்கு 4 முறை போட்டதை பாக்காம போய்ட்ட வருத்தம் அடுத்த நாளில் அதிகமாகவே அழுத்தியது.. :( :(

(அடப்பாவி நண்பனே.. நீ பெற்ற இன்பத்தை என்னிடம் சொல்லி துன்பத்தில் ஆழ்த்துவிட்டாயே!!!)

நேத்து நைட் கனவில்கூட சாயாசிங் வந்து ஆடிட்டு போனா.. :lol: (என் மனைவிகிட்ட சொல்லாதீங்க தலைவா!!!)


ஜெயாவுல..

லேசா லேசா.. படத்த முழுசா பாக்கிறது லேசா-ன்னு 4 மணி நேரம் படம்... பாக்கவே இல்ல!! :roll:


மறுபடியும் சன்னுக்கு வந்தேன்..

குஷி மூடு... கட்டிப்புடி கட்டிப்புடிடாவுக்காக காத்துக்கிட்டு இருக்க முடிவு பண்ணி..

மத்தாப்பூக்களையும் புஸ்வானங்களையும் பூக்களோடு கொளுத்தி மகிழ்ந்தேன்....

ஒரு சங்குசக்கரம் போட்ட சத்தத்தில் என் குட்டி மகள் பயந்து அலற... அத்துடன் நிறைவு விழா..

மறக்காம எடுத்துவைச்சேன் மீதி வெடிகளை .. அடுத்த தீபாவளிக்கு வெடிக்கலாமேன்னு!!!
:D



மறுபடியும் டி.வி-யை தொடங்கி வழக்கம்போல சன்...

வ.....ணக்க.......ம். இன்றை...ய முக்கிய செய்திக....ள்!!

என் மனைவி நிர்மலா பெரியசாமியின் தீபாவளி புடவையைப் பார்க்கிறாப்போல தெரிஞ்சதும் படக்-னு தூர்தர்ஷன் நேஷனலை திருப்பினேன்..

அட.. அங்கேயும் சிம்ஸ்.. :lol: மேட் இன் இந்தியா -ன்னு ஆடிக்கிட்டு இருந்தா.. இங்க நம்மள எல்லாம் "மேட்"-ன்னு நினைச்சிடுச்சோன்னு மனதை தேத்திக்கிட்டு காணாமபோன மார்க்கெட்டை ஹைதராபாத் வரைக்கும் தேடறயா சொல்லி.. (ஆனா அந்த ஆட்டத்தை முழுசா பார்த்தேனாக்கும்!) ஆசிய-ஆப்ரிக்க விளையாட்டை பார்க்கிறமோ இல்லையோன்னு தொடக்க விழாவை பார்த்தேன்!!

திடீர் ஞாபகம்.. :P

மும்ஸை கவனிச்சிட்டு.. :lol: கடிகாரத்தை பார்த்தா மணி 10.30!!


காமெடி டைம்னு கரடிமுத்துவும் சின்னத்திரை ரம்பாவும்.. (ஏன் இந்த பட்டமென "கண்ணை" உருட்டிக் கேட்டாலும் சொல்லமாட்டேன்!!! :roll: )

சன்னுக்கு போட்டி ஜெயா..

காமெடி டைமுக்கு போட்டி டைமுக்கு காமெடி (பேரு எப்படியெல்லாம் தோணுதுப்பா?!!!)

கா.டை-யை முடிச்சிட்டு டை.கா-வுக்கு வந்தேன்..

மயில்சாமி நம்ம "அடக்கம் விண்ணை மிஞ்சும் (AVM) சரவணன்" சார்கூட.. கலகலப்பா பேசினார்.. (ஆமாம்..அப்பவும் கைகட்டிக்கிட்டு இருந்தாரான்னு கேக்காதிங்க..அவர் போன்ல பேசிக்கிட்டு இருந்ததால நான் பார்க்கல.. :)

படுக்கப்போகும்போது ஒரு ஏக்கம்... அடடா,, தீபாவளி முடிந்துவிட்டதே!!!

ரொம்ப சின்ன தீபாவளி!!!!

இதுபோன்ற பண்டிகை நாட்களுக்கு மட்டும் நேரங்களை நீட்டினால் என்ன ஆண்டவன் என கிறுக்குத்தனமாய்(அன்றும்) யோசித்துக்கொண்டே.. காலை நீட்டினேன்!!!

முத்து
02-11-2003, 07:00 PM
பூ .. அருமை ... இந்த பதிவைக் கொஞ்சம் அப்படியே உங்க வீட்டுக்கு அனுப்ப ஆசை ....
பூவுக்கு நெறைய பாராட்டுக் கிடைச்சா நமக்குச் சந்தோசம்தானே ... :wink:

suma
02-11-2003, 07:20 PM
உங்களுக்காவது பரவாயில்லை. சின்ன தீபாவளி.. எங்களுக்கு ஏதோ தீபாவளி ஒரு வெள்ளிகிழமை போல் தான்.
பூ வித்தியாசமாய் இருக்கு பாராட்டுக்கள்.

இளசு
02-11-2003, 10:34 PM
சிற(ரி)ப்பான பதிவு தந்த தம்பிக்கு பாராட்டு.
சிம்ஸ் நிகழ்ச்சி எல்லாம் அண்ணனுக்காக கேஸட்ல பதிவு பண்ணியாச்சுல்ல...?

puppy
02-11-2003, 10:38 PM
பூ
எங்களோடு பகிர்ந்தமைக்கு நன்றி........தீபாவளி கொண்டாட வாய்ப்பு இல்லைனாலும் நீங்க கொண்டாடினா நாங்க எல்லாம் கொண்டாடின
மாதிரி தானே

பப்பி

maha
03-11-2003, 03:54 AM
பூ, மிகவும் அருமை. முன் ஒரு காலத்தில் தீபாவளி இப்படி கொண்டாடியது ஞாபகம் வருகிறது.

மஹா.

சேரன்கயல்
03-11-2003, 05:21 AM
பூ...ஆறுதலாய் இருந்தது உங்களது பதிவைப் படித்து...
நம்ம ஊர்ல இருக்கும் உணர்வு...

Emperor
03-11-2003, 08:20 AM
பூ கொடுத்த வைத்த ஆசாமி நீர்
நீங்கள் சொல்ல சொல்ல அதை கற்ப்பனை செய்துகொண்டு மகிழ்கிறேன்

"காலம் ஒரு நாள் மாறும்
நம் கவலைகள் யாவும் தீரும்"
தீர்ந்து நம் தாயகம் வந்து தீபாவளி, கிரிஸ்துமஸ், ரமதான் என்று எல்லா திருநாளையும் கொண்டாடவேண்டும் என்று மனம் அடித்துக்கொள்கிறது.

ஆண்டவனை பிராத்திக்கவேண்டியது தான், இது சீக்கிரம் நடைபெற.

நன்றி பூ.

இக்பால்
03-11-2003, 12:11 PM
பூ தம்பி.... தீபாவளி கொண்டாடிய சந்தோசம் எங்களுக்கும்.
நான் சாலமன் பாப்பையாவின் பண்டிகைகள் அதிகம் மகிழ்ச்சி
தருவது பெற்றோர்களுக்கா? குழந்தைகளுக்கா? பார்த்தேன்.
பரவாயில்லை. அப்புறம் விக்ரமின் பேட்டியும், த்ரிசாவின்
பேட்டியும் மாறி மாறி பார்த்தேன். பட்டாசு பார்க்க வாய்ப்பில்லை.
பலகாரமும் ஏனோ வாய்ப்பில்லாமல் போய் விட்டது.
நீங்கள் எதற்கும் மீதி இருந்தால் எடுத்து வையுங்கள்.
அடுத்தமுறை இந்தியா வரும்பொழுது சாப்பிட்டுக் கொள்கிறேன்.
அப்புறம் அந்த இளசு அண்ணாவுக்கு பதிவு பண்ணியதை
எனக்கும் ஒரு நகல் போட்டு வையுங்களேன்.-அன்புடன் அண்ணா.

poo
04-11-2003, 06:51 PM
அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள்..

சாலமன் பாப்பையா பட்டிமன்றம் நானும் பார்த்தேன்.. சிம்ஸ் நினைவில் சொல்ல மறந்துவிட்டேன்!
திரு.ராஜா அசத்தலாய் பேசினார்.. ஆனாலும் இன்னொருவர் சொன்ன பிச்சைக்காரன் அனுபவம் அருமை..

mania
05-11-2003, 04:00 AM
சொல்றதை ஒரு நாள் முன்னாடியே சொன்னா எங்களுக்கு பாக்கிறதுக்கு வசதியா இருக்குமில்லையா ??!!!
அன்புடன்
மணியா
பி.கு: பதிவு அருமை

நிலா
05-11-2003, 05:02 AM
பூ அருமையான பதிவு! நன்றி!

puppy
05-11-2003, 05:14 AM
சொல்றதை ஒரு நாள் முன்னாடியே சொன்னா எங்களுக்கு பாக்கிறதுக்கு வசதியா இருக்குமில்லையா ??!!!
அன்புடன்
மணியா
பி.கு: பதிவு அருமை

ஆமாம் ....என்ன பார்த்தேன்னு முன்னாடியே சொன்னா நாங்க எல்லாம் பார்த்து இருப்போம் இல்லையா......

இக்பால்
05-11-2003, 08:06 AM
சாலமன் பாப்பையா சொன்னாரே...இப்பொழுது தமிழ் நாட்டில் மூன்று
ராஜாக்கள் பிரபலம் என்று. ஒன்று புள்ளி ராஜா. இன்னொன்று மன்மத ராஜா.
இவர் மூன்றாவது ராஜா. வாருங்கள் ராஜா. -அன்புடன் அண்ணா.

இக்பால்
05-11-2003, 08:07 AM
பூ தம்பி...அந்த பிச்சைக்காரன் அனுபவம் நம் மன்றத்தினருக்கு
கொடுங்களேன்.-அன்புடன் அண்ணா.

சேரன்கயல்
05-11-2003, 08:20 AM
சொல்றதை ஒரு நாள் முன்னாடியே சொன்னா எங்களுக்கு பாக்கிறதுக்கு வசதியா இருக்குமில்லையா ??!!!
அன்புடன்
மணியா
பி.கு: பதிவு அருமை

ஆமாம் ....என்ன பார்த்தேன்னு முன்னாடியே சொன்னா நாங்க எல்லாம் பார்த்து இருப்போம் இல்லையா......

தலை...கண்டுகினியா நீ...

இக்பால்
05-11-2003, 08:42 AM
இன்னா கண்ணு...சேரங்கயலு... இந்தாண்டயும் மெட்ராஸ் பாஷை
புட்டுக்கினு போகுது...-அண்ணாத்த.

mania
06-11-2003, 04:53 AM
சொல்றதை ஒரு நாள் முன்னாடியே சொன்னா எங்களுக்கு பாக்கிறதுக்கு வசதியா இருக்குமில்லையா ??!!!
அன்புடன்
மணியா
பி.கு: பதிவு அருமை

ஆமாம் ....என்ன பார்த்தேன்னு முன்னாடியே சொன்னா நாங்க எல்லாம் பார்த்து இருப்போம் இல்லையா......

தலை...கண்டுகினியா நீ...

என்னம்மா கண்ணு.....என்னாதான் சொல்ரே நீ.? படா பேஜாரா கீதுப்பா. கொஞ்சம் வியக்கமாத்தான் சொல்லுபா . சும்மா நம்ம பாஷையை போட்டு இப்படி இஸ்துகினு போயா எப்பிடிம்மா ?
அன்புடன்
மணியா