PDA

View Full Version : கற்பித்தலில் சுவையுணர்தல்...



சசிதரன்
07-07-2010, 02:16 PM
அடம்பிடிக்கும் குழந்தைகளின்
கைகால்களை இறுக்கப் பிடித்து
வாயில் திணிக்கப்படும் மருந்து
கசப்பின் உச்சமென உணர்த்தப்படுகிறது.

திமிறிக் கதறும்
குழந்தையின் அழுகை
எல்லாவகையிலும் ரசிக்கப்படுகிறது.

அழுகையை நிறுத்தும் பொருட்டு
தட்டப்படும் கைகளின் ஓசையில்..
மருள மருள விழிக்கிறது குழந்தை.

பின் பால்யம் தொலைத்த பருவத்திலும்
கசப்பின் சுவை உணரப்படுகிறது..
தொடரும் கைதட்டல்கள்
புரிந்து கொள்ளப்படுகிறது
தேற்றுதலெனவும் அவமானங்களெனவும்.

nambi
07-07-2010, 03:17 PM
கைதட்டல்களின வேறுபாட்டை உணர்த்தும் கவிதை! நன்று..பகிர்வுக்கு நன்றி!

சிவா.ஜி
07-07-2010, 04:40 PM
வற்புறுத்தி படிப்பைப் புகட்டும் கசப்பு மருந்து முறை....பிள்ளைகளை...துன்புறுத்துகிறது.

இஷ்டப்பட்டுப் படிக்கப் பழக்காமல், கஷ்டப்படுத்தியே பழகிவிட்டப் பெற்றோர்கள்..

வெற்றிக்கும், தோல்விக்கும் கைத்தட்டல்கள்...

நான் புரிந்துகொண்டவரை பின்னூட்டமிட்டிருக்கிறேன்....வாழ்த்துக்கள் சசி.

ஆதவா
07-07-2010, 04:47 PM
நீங்கள் கசப்பின் சுவையை கடைசி வரையிலும் சுவைத்தே ஆகவேண்டும். அது கட்டாயம். குழந்தையின் அழுகை ரசிக்கப்படுதல் அதன் பால்யத்தின் பொருட்டும் அதன் குரல்வளம் பொருட்டும் நிகழ்கிறது. வாலிபம் அப்படியல்லவே.. (சில குழந்தைகள் மருந்தை வேண்டும் என்று விரும்பி சாப்பிடுகின்றனர்.)

அதுசரி, தேற்றுதலுக்கும் அவமானத்திற்கும் ஒருசேர கைத்தட்டல் எப்படி நிகழும்?

சசிதரன்
11-07-2010, 01:18 PM
நன்றி நம்பி, சிவா அண்ணா மற்றும் ஆதவா... :)

@ஆதவா...

பலதரப்பட்ட வயதினருக்கான சமாதானங்களில் மருள மருள விழிக்கும் குழந்தையெனவே நிலைபிதுங்கி தவிக்கிறோம்... அதனை ஒரு உவமையென எடுத்துள்ளேன்.

ஒரே கைதட்டல் தான் ஆதவா... ஒவ்வொருவருக்கும் வேறுபடுமல்லவா... வெற்றியடைந்தவனுக்கான கைதட்டல்கள் தோல்வியடைந்தவனுக்கு???