PDA

View Full Version : நட்பின் வெளிப்பாடு



rafeek37
06-07-2010, 12:48 PM
அமைதியான இரவு..
அலைகளின் தாளம்..
படகு மறைவில் காதல் ஜோடிகள்..
இருவர் மட்டும் வெட்டவெளியில்..
அவன் தோளில் அவள் தலை சாய்ந்து
விசும்பி கொண்டு இருக்கிறாள்..
சமூகம் அவர்களை கேலி செய்தது
கள்ளக்காதல் என்று..
எத்தனை பேருக்கு புரியும் அவளின் கண்ணீர்
ஆழமான நட்பின் வெளிப்பாடு என்று??!!!

rafeek37
06-07-2010, 12:55 PM
பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ணரின் அருள் துளிகள்!

பாரத நாட்டின் ஆன்மீக வழிகாட்டியாய் திகழ்ந்த ஸ்ரீ இராமகிருஷ்ணரின் அருளுரைகளில் இருந்து சில துளிகளை உங்களின் சிந்தனைக்கு...........

1. ஆகாயத்தில் மேகங்கள் தோன்றிச் சூரியனை மறைக்குமானால் அதன் பிரகாசமும் மறைந்து போகும். அது போல மனத்தில் அகங்காரம் இருக்கும் வரையில் அதில் ஈசுவர ஜோதி பிரகாசிக்காது.

2. அகங்காரம் இருக்கும் வரையில் ஞானமும் முக்தியும் கை கூடாது. பிறப்பும் இறப்பும் இருந்தே தீரும்.

3. மழைத் தண்ணீர் மேட்டு நிலத்தில் தங்கி நிற்பதில்லை. பள்ளமான இடத்துக்கு ஒடி வந்து விடுகிறது. அது போல் இறையருள், தற்பெருமையும், கர்வமும் உள்ளவர்களுடைய உள்ளத்தில் தங்கி நிற்பதில்லை; பணிவுள்ளவர்களின் உள்ளத்தில் தான் தங்கி நிற்கும்.

4.கொள்கை மனத்தில் உறுதியாக நிலைக்குமானால், மனிதனுக்கு இந்தப் பிறவியிலேயே முக்தி உண்டாகும். அதன் பிறகு அவனுக்கு வேறொரு பயமுமில்லை.

5. இனிப்புத் தின்பண்டங்களால் ஏற்படும் தீங்கு கற்கண்டால் விளைவதில்லை. அது போல் ‘நான் இறைவனின் அடிமை, இறைவனின் பக்தன்‘ என்னும் அகங்காரம் இருப்பதில் தீங்கொன்றும் இல்லை. அவை ஒருவனை இறைவனுக்கு அருகில் கொண்டு சேர்க்கும். இதுதான் பக்தி யோகம் எனப்படும்.

6. இரவில் வானில் பல விண்மீன்களைக் காண்கிறாய். ஆனால் சூரியன் உதித்ததும் அவை தென்படுவதில்லை. ஆதலால் பகற்பொழுதில் ஆகாயத்தில் நட்சத்திரங்களே இல்லை என்று சொல்லலாமா? மனிதனே! உனது அஞ்ஞான காலத்தில் நீ இறைவனைக் காண முடியாததனால், இறைவனே இல்லை என்று சாதிக்காதே!

7. பெறுதற்கரிய இந்த மானிடப் பிறவியைப் பெற்றவன் இப்பிறவியிலேயே இறைவனை அறிய முயலாது போனால் அவன் வானில் பிறந்தவனே ஆவான்.

8. முதலில் இறைவனைத் தேடு; பிறகு உலகப் பொருளைத் தேடு. இதற்கு மாறாகச் செய்யாதே. ஆத்ம ஞானத்தை அடைந்த பிறகு நீ உலக வாழ்க்கையில் நுழைந்தால் உனக்கு மனச் சஞ்சலமே இராது.
9. எண்ணெய் இல்லாது போனால் விளக்கு எரியாது, அது போல், இறைவனில்லாமல் போனால் மனிதன் உயிர் வாழ முடியாது.

10. வேக வைத்த நெல்லை, பூமியில் விதைத்தால் அது மறுபடியும் முளைக்காது; வேக வைக்காத நெல் தான் முளை விடும். அதுபோல உண்மை ஞானமாகிய தீயால் வெந்த ஒருவன் பரிபூரணனாக இறப்பானானால் அவனுக்கு மறுபிறவி கிடையாது. அஞ்ஞானத்துடன் மரணமடைந்தால் மீண்டும் பிறக்க வேண்டியது தான்.

11. நெருப்புக்கும், அதன் எரிக்கும் சக்திக்கும் உள்ள தொடர்பு போன்றது பிரம்மத்துக்கும் சக்திக்குமுள்ள தொடர்பு.

12. தசைத் தட்டில் கனமான பக்கத்தில் தராசு முள் மையத்தை விட்டுச் சாய்ந்து விலகியிருக்கும். அது போல் பெண்ணாசை, பொன்னாசைகளில் கனத்த மனம் இறைவனை விட்டு விலகித் தடுமாறுகிறது.

13. இறைவனது சன்னிதானத்தில் தர்க்க புத்தி, படிப்பு இவைகளில் எதுவும் பயன்படாது. அங்கே ஊமை பேசும். குருடு காணும். செவிடு கேட்கும்.

14. சர்வ சக்தி வாய்ந்த கடவுளுடைய அருள் வந்தடையும் போது ஒவ்வொருவனும் தன் குற்றத்தைக் காண்பான். இதனை அறிந்து நீ வீணாகத் தர்க்கம் செய்யாதே.

15. இறைவன் திருநாமத்தைக் கேட்ட மாத்திரத்தில் எவனுக்கு மயிர்க்கூச்செடுத்து கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகுமோ அவனுக்கு அது தான் கடைசிப் பிறவி.

16. படகு தண்ணீரில் இருக்கலாம். ஆனால் தண்ணீர் படகினுள் நுழையக் கூடாது. மனிதன் உலகத்தில் வாழலாம். ஆனால் உலக ஆசை அவனிடத்தில் இருக்கக் கூடாது.

17. சம்சார வாழ்க்கையில் இருந்தால் என்ன? அனைத்தையும் அவனுக்கே அர்ப்பணம் செய்து அவனிடம் சரணமடைந்து விடு. அதன் பிறகு உனக்கு எவ்விதக் கஷ்டமும் இருக்காது. யாவும் அவனது அருளாலே நடை பெறுகிறது என்பதை அறிவாய்.

18. காந்த ஊசி எப்போதும் வடக்குத் திசையையே காட்டுமாதலால், கடலில் செல்லும் கப்பல்கள் திசை தவறிப் போவதில்லை. மனிதனுடைய மனம் இறைவனை நாடியிருக்கும் வரையில் அவன் உலக வாழ்க்கையாகிய கடலில் திசை தப்பிப் போக மாட்டான்.

19. வீடு கட்டும் போது சாரம் அவசியம். ஆனால் வீடு கட்டி முடித்து விட்டால் சாரத்தைத் தேடுபவர் யாருமில்லை. அது போல ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது. பின்னர் அவசியமில்லை.

20. ஒருவர் சிரமப்பட்டு விறகும், பிறவும் தேடி நெருப்பு உண்டாக்குகின்றார். அதன் உதவியால் பலர் குளிர் காய்கின்றனர். அது போல மிகவும் சிரமப்பட்டுத் தவம் செய்து இறைவனை அடைந்த மகான்களோடு பழகுவதால் பலர் இறைவனிடத்தில் சுலபமாக மனத்தை வைக்க முடிகிறது.
"என் செயலாவது யாதென்று மில்லை"

nambi
06-07-2010, 01:25 PM
தோழர் ரபீக்...தமிழ் மன்ற வழிகாட்டி (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12198) இதை சுட்டினால் நிறையத்தகவல்கல் கிடைக்கும் அது தரும் வழிகாட்டுதலின் படி திரிகள் தொடங்கலாம். அதே போன்று அறிமுகம் பகுதியில் ''எனது அறிமுகம்'' என்று தனியாக திரி தொடங்கி உங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளலாம். நீங்கள் வேறொரு தோழரின் அறிமுகத்திரியில் உங்களுடைய அறிமுகத்தையும் இணைத்துள்ளீர்கள். இந்த சுட்டியின் வழியே சென்றால் வழிகாட்டுதல்கள் கிடைக்கும். அதேபோன்று இந்த திரிக்கு கீழே இன்னொரு திரியும் தொடர்ந்து வருகிறது. திரிக்கு கீழே பின்னூட்டங்கள், மறுமொழிகள் தொடரும். அனைத்தும் இந்த பகுதியில் தெளிவாக கொடுக்கப்பட்டிருக்கும்.

தங்களை வருக வருக என வரவேற்கிறேன்.

நன்றி!

ஆதவா
06-07-2010, 01:49 PM
அடடே.. இதே போன்று பல நாட்களுக்கு முன்னர் நான் எழுதிய கவிதையை படித்துப் பாருங்களேன்.!!

http://www.tamilmantram.com/vb/showpost.php?p=169937&postcount=1

உனக்கென ஆயுள் முடிந்துவிட்டது;
எனக்கும்தான்.
இருவரும் சொர்க்கத்தில்.
உன் கன்னத்தில் என் கைகள்
என் கன்னத்தில் உன் கைகள்
நினைக்கிறார்கள் முத்தமிடுவோமென்று
நட்புக்கென்றுதான் சந்தேகத் தீர்வோ?

பா.ராஜேஷ்
12-07-2010, 06:53 PM
நன்று ரபீக்... பகிர்விற்கு நன்றிகள்... உரிய பகுதியில் பதிந்தால் இன்னும் சிறப்புற இருக்கும் என்பது எனது எண்ணமும் கூட...