PDA

View Full Version : இரும்புக்கோட்டை மர்ம யோகி -நகைச்சுவை தொடர்கதை -நிறைவு பெற்றது



மதுரை மைந்தன்
04-07-2010, 11:10 AM
இரும்புக்கோட்டை மர்ம யோகி

http://img819.imageshack.us/img819/3840/50807515.jpg (http://img819.imageshack.us/i/50807515.jpg/)

பாகம்-1

கி.பி. 12ம் நூற்றாண்டின் இறுதியில் பாண்டிய நாட்டை ஆண்டு வந்தான் பராக்கிரம பாண்டியன். பெயருக்கேற்றவாறு அவன் பராக்கிரமசாலி. படை பலம் பொருந்தியவன். பாண்டிய நாட்டை சுற்றியிருந்த பாளையங்கள் அனைத்தையும் வெற்றி கொண்டு நாட்டின் எல்லையை விரிவு படுத்தினான். எல்லா பாளையங்களும் என்றா சொன்னோம். இல்லை. ஒரு பாளையம் அவன் கட்டுக்குள் வரவில்லை. அதுதான் இரும்புக்கோட்டை. கோட்டையின் மதில் சுவர்கள் இரும்பால் ஆனவை போல் வலுவாக இருந்தது. கோட்டையின் நுழை வாயிலும் இரும்பினால் செய்யப்பட்டதால் எதிரிகளால் கோட்டையை தகர்க்க முடியவில்லை. பராக்கிரம பாண்டியனின் படைகள் இரும்புக்கோட்டையை முற்றுகையிட்டு வெகு நாட்கள் ஆகியும் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆனால் கோட்டைக்குள் மக்கள் வழக்கம்போல் தங்களுடைய வாழ்க்கையை தொடர்ந்தனர். சில நாட்கள் அவர்கள் ஆடல் பாடல்க்ளுடன் கேளிக்கையில் ஈடுபட்டது வெளியே இருந்த பாண்டிய படை வீரர்களுக்கு எரிச்சலைத் தந்தது.

http://img683.imageshack.us/img683/7932/tiru.png (http://img683.imageshack.us/i/tiru.png/)

ஒரு தடவை பான்டிய நாட்டு தளபதி வீரகேசரிக்கு ஒரு யோசனை தோன்றியது.அ தன்படி, பாண்டிய நாட்டு சிப்பாய்கள் ஒரு பெரிய மரத்தின் அடிப்பகுதியை தூக்கிக் கொண்டு வேகமாக வந்து இரும்புக் கோட்டையின் கதவின் மீது மோதினர். பல தடவைகள் அவ்வாறு மோதி இறுதியில் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தனர். படைகளுக்குப் பின்னால் குதிரையின் மீது வீற்றிருந்த வீரகேசரி வெற்றி வெற்றி என்று எக்காளமிட்டான். ஆனால் அவனது எக்காளம் விரைவில் நின்று விட்டது. கோட்டையின் உள்ளிருந்து பாண்டிய நாட்டு சிப்பாய்கள் லாட்படையினர், குதிரை வீரர்கள் எல்லோருமே காலாட்படைகளாகவே வெளியே வீசப்பட்டனர். சிப்பாய்களை வெளியேற்றியபின் இரும்புக் கோட்டையின் கதவுகள் முன் போல் மூடிக் கொண்டன. இரும்புக்கோட்டை மக்கள் கைப்பற்றிய குதிரைகளில் வலம் வரத் தொடங்கினார்கள். அங்காடிகளுக்குள் குதிரையிலேயே சென்று பொருள்களை வாங்கினர். ( இதைத்தான் இக்காலத்தில் டிரைவ்-இன் என்கிறோம்).

இரும்புக்கோட்டையை எப்படி கைப்பற்றுவது என்று பராக்கிரம பாண்டியன் அமைச்சர் முத்துவேலருடன் கலந்தாலோசித்தான். அவர்களுடைய உரையாடல் இதோ:

அமைச்சர்: மன்னா,இரும்புக்கோட்டைக்குள் எத்தனை மனிதர்கள் அதில் எத்தனை இளைஞர்கள் இருக்கிறார்கள் என்று தெரிந்தால் நாம் அதற்கு தகுந்த மாதிரி படை பலத்துடன் மோதலாம்.

மன்னன்: அது எப்படி சாத்தியமாகும்?

அமைச்சர்: நாம் ஒரு ஒற்றனை இரும்புக்கோட்டை நுழை வாயிலிக்கெதிரில் ஒரு நெடிதுர்ந்த மரத்தில் அமர்ந்து இரும்புக்கோட்டைக்குள் நடமாடும் மனிதர்களை கணெக்கெடுக்க
செய்யவேண்டும்?

மன்னன்: இது நல்ல யோசனையாக இருக்கிறது. ஒரு ஒற்றனுக்கு ஏற்பாடு செய்யுங்கள்.

அமைச்சர்: மன்னா, எனக்கு தெரிந்த மருது என்ற இளைஞன் ஒற்றர்களுக்கான பள்ளியில் பயின்று தேர்ச்சி பெற்றவன். நான் அவனை அழைத்து வருகிறேன்.

மன்னன்: சரி, அப்படியே செய்யுங்கள்.

உண்மையில் மருது அமைச்சரின் சகோதரி மகளின் கணவன். அமைச்சர் மருதுவிடம் சென்று மன்னர் உன்னிடம் ஒரு முக்கியமான வேலையை தரப் போகிறார். அதை செய்து முடித்தால் உனக்கு நிறய பொற்காசுகளை நான் வாங்கி தருவேன் என்றார். பொற்காசுகள் கிடைக்கும் என்றவுடன் மருது துள்ளி குதித்துக் கொண்டு அமைச்சருடன் மன்னரவைக்கு
வந்தான். மன்னரவையில்,

அமைச்சர்: மன்னா, இவன் தான் நான் சொன்ன மருது. மருது மன்னனை வண்ங்குகிறான்.

மன்னன்: நல்லது. மருது, நீ இரும்புக்கோட்டையைப் பற்றி வேவு பார்க்க செல்ல வேண்டும்.

இரும்புக்கோட்டை என்றவுடன் மருதுவுக்கு கை கால்கள் உதறத் தொடங்கின. இரும்புக்கோட்டை உள்ளிருந்து வெளியே வீசப்பட்ட அனுபவம் அவனது சிப்பாய் உடையை நனைக்க வைத்தன.

மருது: மன்னா, மன்னிக்கவேண்டும்... என்று குளரினான்.

மன்னன்: ஏன் ஒற்றனாக போய் வர உனக்கு விருப்பம் இல்லையா?

மருது: ஒற்றனாக போவதைப் பற்றியில்லை. ஒற்றையனாக போகவேண்டுமே என்றுதான்...

மன்னன்: என்னது? ஒற்றர்கள் ஒற்றையர்களாகத்தானே செல்வது வழக்கம். வேன்டுமென்றால் பாண்டிய நாட்டு படை முழுவதையும் உன்னுடன் அனுப்பட்டுமா? .

எப்படியாவது இரும்புக்கோட்டை அருகில் கூட செல்லக் கூடாது என்று நினைத்த மருது

" மன்னா, எனக்கு மேலுக்கு சுகமில்லை.. ஆகவே..."

மன்னனுக்கு கோபம் வந்து கைகளைத்தட்டி காவலர்களை அழைத்து " இவனோட ஒற்றை கண்ணைப் பிடுங்கி ஒற்றடைகள் நிறைந்த ஒற்றை சிறையில் அடைத்து வையுங்கள்" என்றான்.

அதைக்கேட்டு பதை பதைத்த மருது மன்னனின் கால்களில் விழுந்து
" கருணை காட்டுங்கள் மன்னா. நான் ஒற்றையனாகவே போகிறேன்" என்றான்.

" அப்படி வா வழிக்கு. இரும்புகோட்டை நுழைவாயில் எதிரே ஒரு நெடிதுர்ந்த மரத்தில் மேலே உன்னை இலை தழைகளால் மறைத்துக் கொண்டு இரும்புக்கோட்டைகுள் நடமாடும் மனிதர்களை கணெக்கெடுக்க வேண்டும்" என்றான் மன்னன்.

மருது (தயங்கியவாறு): எவ்வாறு நான் கணக்கெடுப்பது?

மன்னன்: நீ உன் கால்கள் கைகளில் உள்ள விரல்களைக் கொண்டு கணக்கிடலாம்.

அமைச்சர் குறுக்கிட்டு: மன்னா, மருது கால்கள், கைகளை பயன் படுத்தினால் அவன் தவறி மரத்திலிருந்து கீழே விழக்கூடும். ஆகவே, நீங்கள் அவனிடம் நூறு பொற்காசுகள் கொண்ட கிழி ஒன்றை தாருங்கள். மருது ஒவ்வொரு இரும்புக்கோட்டை மனிதருக்கும் ஒவ்வொரு பொற்காசுகளை மரத்தின் கீழே போட்டால் சுலபமாக கணக்கிட முடியும்.

மன்னன்: இது நல்ல யோசனையாக இருக்கிறது. ஆனால், எனக்கொரு சந்தேகம். மருது திரும்ப திரும்ப ஒரே மனிதரை கணகிட்டால் கணக்கு தவறாகிவிடுமே?

அமச்சர்: மன்னா, சந்தேகம் வேன்டாம், ஒற்றர்கள் பள்ளியில் மருதுவுக்கு ஒரு முகத்தை ஒரு தடவை பார்த்தால் அதை நினைவில் நிறுத்திக் கொள்ள பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது.

ஒற்றர்கள் பள்ளியா அது எங்கிருக்கிறது என்று மருது வியந்தாலும் பயத்தால் அதை வெளிக்காட்டவில்லை.

மன்னர்: அப்படியா, இதோ ஒரு பரீட்சை வைக்கிறேன். மருது, நேற்று அரசவையில் நடனமாடிய குழுவில் இடம் பெற்ற மங்கையர் யார்?

மருது (உற்சாகமாக): திரேசாதேவி, சிரேயாவதி, அசின்மதி, நயனதாராங்கனை, தமண்ணாலினி, நம்ம நமீதா.

மன்னன்: அற்புதம். மருது இந்தா இந்த பொற்கிழியை எடுத்துச் சென்று வா வென்று வா.

பொற்கிழியை பெற்றுக் கொண்டு, சோற்று மூட்டையை ஒரு தோளிலும், நீர் குவளையை மற்றொரு தோளிலும் சுமந்து கொண்டு இரும்புக்கோட்டையை வேவு பார்க்க மருது புறப்பட்டான்.



தொடரும்

Narathar
04-07-2010, 11:22 AM
இரும்புக்கோட்டை மர்மயோகி
ஜோராகத்தான் ஆரம்பித்திருக்கின்றது............
இதே ஜோர் தொடர்ந்து இருக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.....
ஏனெனில் கதையை தருவது நம்ம மதுரை மைந்தனல்லவா?

தொடரட்டும் மைந்தா உங்கள் நகைச்சுவைப்பயணம்

பாரதி
04-07-2010, 11:24 AM
ஆஹா... முரட்டுச்சிங்கம் வெறித்தனமா கெளம்பீருச்சா...?
அசத்துங்கப்பு.

அன்புரசிகன்
04-07-2010, 12:34 PM
மருது (உற்சாகமாக): திரேசாதேவி, சிரேயாவதி, அசின்மதி, நயனதாராங்கனை, தமண்ணாலினி.


நம்ம ஆதவாவுக்கும் மருதுவுக்கும் ஏதோ பூர்வஜென்ம பந்தம் இருக்கிறது போல... :D

அசத்துங்க ...

மச்சான்
04-07-2010, 12:50 PM
மன்னர்: அப்படியா, இதோ ஒரு பரீட்சை வைக்கிறேன். மருது, நேற்று அரசவையில் நடனமாடிய குழுவில் இடம் பெற்ற மங்கையர் யார்?

மருது (உற்சாகமாக): திரேசாதேவி, சிரேயாவதி, அசின்மதி, நயனதாராங்கனை, தமண்ணாலினி.
அண்ணே.....! என்னை ‘மச்சான்’னு செல்லமாக அழைக்கும் நமிதாதேவி பெயரை விட்டுப்புட்டீங்களே அண்ணே.....! அத என்னால தாங்கவே முடியலயே....! சரி போவட்டும்.... அடுத்த பாகத்துலயாவது அவளையும் சேத்துப்புடுங்க....!:lachen001:

அசத்தல் ஆரம்பம் மதுரை மைந்தரே....! இரும்புக்கோட்டை மர்மங்கள் தொடரட்டும். வாழ்த்துக்கள்.



.

மதுரை மைந்தன்
05-07-2010, 11:32 AM
இரும்புக்கோட்டை மர்மயோகி
ஜோராகத்தான் ஆரம்பித்திருக்கின்றது............
இதே ஜோர் தொடர்ந்து இருக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.....
ஏனெனில் கதையை தருவது நம்ம மதுரை மைந்தனல்லவா?

தொடரட்டும் மைந்தா உங்கள் நகைச்சுவைப்பயணம்


வெகு நாட்களுக்கு பிறகு இந்த திரியில் உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.

மதுரை மைந்தன்
05-07-2010, 11:34 AM
ஆஹா... முரட்டுச்சிங்கம் வெறித்தனமா கெளம்பீருச்சா...?
அசத்துங்கப்பு.


இது முரட்டு சிங்கமா இல்லை அசட்டு சிங்கமானு நீங்க தான் சொல்லணும். நன்றி நண்பரே

மதுரை மைந்தன்
05-07-2010, 11:35 AM
நம்ம ஆதவாவுக்கும் மருதுவுக்கும் ஏதோ பூர்வஜென்ம பந்தம் இருக்கிறது போல... :D

அசத்துங்க ...


நன்றி நண்பரே

மதி
05-07-2010, 11:41 AM
மருது (உற்சாகமாக): திரேசாதேவி, சிரேயாவதி, அசின்மதி, நயனதாராங்கனை, தமண்ணாலினி, நம்ம நமீதா.
தொடரும்
இதுல ஏதும் உள்குத்து இல்லியே???!!! :icon_b:

மதுரை மைந்தன்
05-07-2010, 11:43 AM
அண்ணே.....! என்னை ‘மச்சான்’னு செல்லமாக அழைக்கும் நமிதாதேவி பெயரை விட்டுப்புட்டீங்களே அண்ணே.....! அத என்னால தாங்கவே முடியலயே....! சரி போவட்டும்.... அடுத்த பாகத்துலயாவது அவளையும் சேத்துப்புடுங்க....!:lachen001:

அசத்தல் ஆரம்பம் மதுரை மைந்தரே....! இரும்புக்கோட்டை மர்மங்கள் தொடரட்டும். வாழ்த்துக்கள்.



.

உங்க ஆசையை நிறைவேற்றி விட்டேன். பின்னஊட்டத்திற்கு மிக்க நன்றி

மதுரை மைந்தன்
05-07-2010, 11:50 AM
இரும்புக்கோட்டை மர்ம யோகி

http://img819.imageshack.us/img819/3840/50807515.jpg (http://img819.imageshack.us/i/50807515.jpg/)

பாகம்-2

மருது சென்ற சில நிமிடங்கள் கழித்து பாண்டிய மன்னரவையில்

மன்னன்: அப்பாட ஒரு வழியாக ஒற்றனை அனுப்பியாகிவிட்டது. மேற்கொண்டு செய்யவேண்டியதை யோசிப்போம்.

அமைச்சர்: ஆம் மன்னா, மருது கொண்டு வரும் செய்தியை வைத்து நாம் இரும்புக்கோட்டையை தாக்கி கைப்பற்றுவோம்.

இருவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி அவர்கள் முன் நின்றிருந்தான் மருது.

மன்னான்: மருது நீ இன்னமுமா செல்லவில்லை

மருது: மன்னா எனக்கொரு சந்தேகம்.

மன்னன் (கோபமுற்று): இன்னும் என்னடா சந்தேகம் உனக்கு?

மருது: மன்னா, நீங்கள் என்னிடம் நூறு பொற்காசுகளைக் கொடுத்து இரும்புக்கோட்டை மனிதர்களை கணக்கிட சொன்னீர்கள். அங்கு நூறுக்கும் மேற்பட்டவர்கள் இருந்தால் நான் என்ன செய்வேன்?

அமைச்சர்: மன்னா, மருது கூறுவதும் சரிதான். அவனிடம் ஆயிரம் பொற்காசுகளைக் கொடுங்கள். அவன் சரியாக எண்ணிக்கை செய்து மீதியை உங்களிடம் திருப்பி தருவான்.

மன்னன்: அதெல்லாம் வேன்டாம். மருது நீ நான் சொல்கிறபடி செய். நூறு பொற்காசுகளை கணக்கிட்டபின் மரத்திலிருந்து கீழிற்ங்கி காசுகளை கிழியில் போட்டுக் கொண்டு மீண்டும் மரத்தில் ஏறு. மரத்தில் ஏறுமுன் சுண்ணாம்பால் மரத்தில் ஒரு கோடு கிழி. இப்படி எத்தனை கோடுகளை கிழிக்கிறாயோ அதைக் கொண்டு நாம் இரும்புக்கோட்டை மனிதர்களைக் கணக்கிடலாம்.

அமச்சர்: மன்னா என்னே உங்கள் யோசனை. மருது அவ்வாறே செய்.

மருது தலையசைத்து விடை பெற்று செல்கிறான்.

இரும்புக்கோட்டை நுழை வாயிலுக்கு முன் சென்றடந்த மருது அங்கிருந்த ஒரு நெடிய மரத்தில் ஏறி தன்னை இழை தழைகளால் மூடிக் கொண்டு அமைச்சர் கொடுத்திருந்த தொலை நோக்கு கண்னாடியின் மூலம் இரும்புக்கோட்டை மனிதர்களை கணக்கிடலானான். நூறு காசுகளும் கீழே விழுந்ததும் மரத்திலிருந்து இழை தழைகளுடனேயே கீழிறங்கி காசுகளை பொறுக்கி கிழியில் போட்டுக் கொண்டு மேலே செல்லுமுன் சுண்னாம்பால் மரத்தில் ஒரு கோட்டை கிழித்துவிட்டு மரமேறினான். இவ்வாறு அவன் பல முறை மரத்திலிருந்து கீழிறங்கி பல கோடுகளைப் போட்டதில் களைத்து போனான். இரும்புக்கோட்டைக்குள் இத்தனை மனிதர்களா? என்று வியந்தான்.

அவனுக்கு தெரியாது. இரும்புக்கோட்டை தலைவர் சிம்பு தேவன் தனது ஒற்றர்கள் மூலமாக பாண்டிய மன்னன் தங்களை கணக்கிட வேவு பார்க்க போகிறான் என்றரிந்ததும் அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது. அதன்படி இரும்புக்கோட்டை மனிதர்கள் ஒவ்வொருவரும் குதிரையின் மேலமர்ந்து மீசையுடனும் கால் நடையாக மீசை இல்லாமலும் அடுத்த முறை குதிரை மீதமர்ந்து நெற்றியில் நாமத்துடனும் கால் நடையாக நெற்றியில் விபூதியுடனும் இவ்வாறு பல வேடங்களில் செல்ல வேண்டும் என்று தீர்மானித்தான். அதனால் தான் மருதுவுக்கு பல மனிதர்களை கணக்கிட வேண்டி வந்தது.

கர்மமே கண்ணாக மருது காசுகளை கீழே போட்டுக் கொண்டிருந்த சமயம் இரு வழிப் போக்கர்கள் இளப்பாறுவதற்காக அவனமர்ந்திருந்த மரத்தின் கீழ் நின்றனர். மருது போட்ட காசு ஒருவர் தலையில் விழுந்ததும் அவர் காசை எடுத்து "ஹை தங்க காசு" என்று சொல்லி எங்கிருந்து வந்தது என்று மரத்தை அண்னாந்து பார்த்தார். மரத்தின் மேல் இழை தழைகளைக் கொண்டு தன்னை மறைத்துக் கொண்டிருந்த மருது அவரின் பார்வையில் படவில்லை. அடுத்தவர் தலை மீதும் ஒரு காசு விழுந்ததும் அவரும் " இதைத்தான் பணம் காய்ச்சி மரம்" என்கிறார்களோ" என்று மரத்தின் ஒரு சின்ன கிளையை முறித்து "இந்த மரத்தை நமது வீட்டிலும் நட்டால் நாம் செல்வந்தர்களாகிவிடுவோம்" என்றார். அங்கே கீழே ஏற்கனவே விழுந்திருந்த காசுகளை அவர்கள் பொறுக்கி கொண்டு சென்றபின் நூறு காசுகளையும் கீழே போட்டு விட்ட மருது மரத்திலிருந்து கீழிறங்கி காசுகளை தேடி தேடி மரத்தை சுற்றினான். காசுகளைக் காணாமல் சோகமான மருது " சரி மன்னரிடம் சென்று தான் கிழித்த கோடுகளைக் கூறுவோம்" என்று கோடுகள் கிழித்த இடத்தை பார்த்தான். அவன் கோடுகளை கிழித்த மரத்தின் கிளையை வழிப்போக்கர் ஒடித்துச் சென்றதறியாமல் கோடுகளை காணாமல் பதை பதைத்தான்.

செய்வதறியாமல் மரத்தின் மேலே அமர்ந்து தொலை நோக்கு கண்னாடியின் மூலம் இரும்புக்கோட்டையின் உள்ளே பார்த்தவனுக்கு அங்கே காவியுடையணிந்த ஒரு யோகி தென்பட்டார். அவரை சற்று நேரம் பார்த்த அவனுக்கு ஒரு உபாயம் தோன்றியது. விரைந்து பாண்டிய மன்னின் அரசவைக்கு சென்றான். அங்கே

மன்னன்: வா மருது இரும்புக்கோட்டை மனிதர்களை கணக்கிட்டாயா?

மருது (தயங்கி தயங்கி): இல்லை மன்னா. நான் கணக்கிட்டு முடிதததும் நீங்கள் கொடுதத பொற்காசுகளை எடுக்க கீழிறங்கினேன். அங்கே பொற்காசுகளையும் காணோம் நான் மரத்தில் போட்ட கோடுகளையும் காணோம்.

மன்னன்: என்னது காணோமா? நீ ஏதோ தவறு செய்திருக்கிறாய். உனக்கு சரியான தண்டனை கிடைக்கும்.

மருது மன்னனின் கால்களில் விழுந்து: மன்னா இரும்புக்கோட்டைக்குள் ஒரு மர்ம யோகியை பார்த்தேன். அவர் தான் பொற்காசுகளையும் கோடுகளையும் மாயமாக மறைய செய்து விட்டார். அவர் தான் இரும்புக்கோட்டை மனிதர்களுக்கு அபூர்வ சக்திகளை கொடுக்கிறார்.

தொடரும்

Narathar
05-07-2010, 12:52 PM
முதல் பாகத்தில் இரும்புக்கோட்டை
இரண்டாம் பாகத்தில் மர்ம யோகி
மூன்றாம் பாகத்தில்?????

நமிதா தேவியோ.............

தொடரட்டும் தொடரட்டும்

அன்புரசிகன்
06-07-2010, 01:32 AM
புலிகேசியிடம் ஒற்றர்படை பயிற்சி பெற்றுள்ளான் மருது.. அது தான் இப்படி. :D
தொடருங்கள் மைந்தரே..

தாமரை
06-07-2010, 04:35 AM
மன்னர்: அப்படியா, இதோ ஒரு பரீட்சை வைக்கிறேன். மருது, நேற்று அரசவையில் நடனமாடிய குழுவில் இடம் பெற்ற மங்கையர் யார்?

மருது (உற்சாகமாக): திரேசாதேவி, சிரேயாவதி, அசின்மதி, நயனதாராங்கனை, தமண்ணாலினி, நம்ம நமீதா.



[/COLOR]

[B]தொடரும்


இதுல ஏதும் உள்குத்து இல்லியே???!!! :icon_b:

இருக்கிற மாதிரி தான் இருக்கு. இந்தச் செய்தியைப் படிங்க...

http://www.dailythanthi.com/article.asp?NewsID=578436&disdate=7/6/2010

பணக்கார மாப்பிள்ளை வேண்டாம். "என் வருங்காலக் கணவர் எளிமையாக இருக்க வேண்டும்" அசின் பேட்டி

கன்னி மாடம் கதையில் சாண்டில்யன் கன்னிமாடக் கோட்டையை 2000 பேர் முற்றுகை இட அபராஜிதன் 150 வீரர்களைக் கொண்டு கோட்டையைக் காப்பாற்றிய கதையைச் சொல்லி இருப்பார்.

இரும்புக்கோட்டைத் தலைவனும் அதே போல் மிகத் தந்திர சாலியாக இருக்கிறான்.

கதை இப்பதான் சூடுபிடிக்க ஆரம்பித்து இருக்கு..

இருந்தாலும் அனுஷ்காயினியை விட்டதை மன்னிக்கவே முடியாது...

ஓவியன்
06-07-2010, 05:04 AM
இருந்தாலும் அனுஷ்காயினியை விட்டதை மன்னிக்கவே முடியாது...

இல்லை அண்ணா, சிம்புதேவனின் மகள் அனுஷ்காயினியாக இருப்பாரென நம்புகிறேன்...!! :icon_b::icon_b:

__________________________________________________________________________________________________________

மர்மயோகி `கோட்டைக் கதவைத் திற, குதிரை வரட்டும்` என கட்டுரை எழுதுறவர் தானே மதுரை மைந்தரே...?? ;)

_________________________________________________________________________________________________________

மதுரை மைந்தரே, கதை விறு விறுப்பாக நகருகிறது, வாழ்த்துகள்..!! :icon_b

மதுரை மைந்தன்
07-07-2010, 12:45 PM
முதல் பாகத்தில் இரும்புக்கோட்டை
இரண்டாம் பாகத்தில் மர்ம யோகி
மூன்றாம் பாகத்தில்?????

நமிதா தேவியோ.............

தொடரட்டும் தொடரட்டும்

ஹா ஹா ஹா உங்களுடைய நகைசுவையான பின்னுட்டத்திற்கு மிக்க நன்றி

மதுரை மைந்தன்
07-07-2010, 12:47 PM
புலிகேசியிடம் ஒற்றர்படை பயிற்சி பெற்றுள்ளான் மருது.. அது தான் இப்படி. :D
தொடருங்கள் மைந்தரே..


நன்றி நண்பரே

மதுரை மைந்தன்
07-07-2010, 12:51 PM
இருந்தாலும் அனுஷ்காயினியை விட்டதை மன்னிக்கவே முடியாது...


அடுத்த பாகத்தில் உங்கள் குறையை நிவர்த்தி செய்திருக்கிறேன். நன்றி நண்பரே

மதுரை மைந்தன்
07-07-2010, 12:53 PM
இதுல ஏதும் உள்குத்து இல்லியே???!!! :icon_b:

தாமரை அவர்கள் இதற்கு பதிலளித்து விட்டார். அவருக்கும் உங்களுக்கும் நன்றிகள்

மதுரை மைந்தன்
07-07-2010, 12:57 PM
இல்லை அண்ணா, சிம்புதேவனின் மகள் அனுஷ்காயினியாக இருப்பாரென நம்புகிறேன்...!! :icon_b::icon_b:

__________________________________________________________________________________________________________

மர்மயோகி `கோட்டைக் கதவைத் திற, குதிரை வரட்டும்` என கட்டுரை எழுதுறவர் தானே மதுரை மைந்தரே...?? ;)

_________________________________________________________________________________________________________

மதுரை மைந்தரே, கதை விறு விறுப்பாக நகருகிறது, வாழ்த்துகள்..!! :icon_b

ரொம்ப தமாசா பேசறீங்க . இந்த கதையை படமா எடுத்தா மருது பாத்திரம் உங்களுக்கு தான். நன்றி

ஓவியன்
07-07-2010, 12:59 PM
ரொம்ப தமாசா பேசறீங்க . இந்த கதையை படமா எடுத்தா மருது பாத்திரம் உங்களுக்கு தான். நன்றி

ஒருவழியா வடிவேல் ரேஞ்சுக்கு ஆக்கிட்டீங்க, இப்படி ஆகிப் போச்சே என் நிலமை. :D:D:D

மதுரை மைந்தன்
07-07-2010, 01:12 PM
இரும்புக்கோட்டை மர்ம யோகி

http://img819.imageshack.us/img819/3840/50807515.jpg (http://img819.imageshack.us/i/50807515.jpg/)

பாகம் 3

பாண்டிய மன்னன் அரசவையில்

மன்னன்:மருது, நீ கூறுவது உண்மையா?

மருது:ஆம் மன்னா, நான் என் இரண்டு கண்களாலும் பார்த்தேன். நீண்ட காவி அங்கி அணிந்த ஒரு யோகி செல்வதையும் அவர் பின்னால் சிறுவர்கள் செல்வதையும் பார்த்தேன்.

மன்னன்:என்ன உளறுகிறாய்? யோகிகளின் பின்னால் ரஞ்சித குமாரிகளும் யுவராணிகளும் தானே செல்வது வழக்கம். சிறுவர்கள் ஏன் செல்ல வேண்டும்?

அமைச்சர்:மன்னா இது மாதிரி மேலை நாடுகளில் யோகிகள் சிறுவர்களை தங்கள் ஆசை பாலகர்களாக வைத்திருக்கிறார்கள் என்று மார்க்கோ போலோ என்ற தூதுவர் மூலம் அறிந்தேன். யோகிகளுக்கு இதெல்லாம் சகஜம் மன்னா.

மருது: இல்லை மன்னா அப்படி இருக்காது. நான் பார்த்த சிறுவர்கள் யோகியின் நீண்ட சடை முடியை தரையில் விழா வண்ணம் தாங்கி பிடித்து செல்வதைத் தான் பார்த்தேன்.

மன்னன்:அது போகட்டும். அவர் ஒரு மர்ம யோகி என்றும் அவர் மூலமாகத் தான் இரும்புக்கோட்டை மனிதர்களுக்கு அசாதாரண பலம் வருகிறது என்றாயே ஏன்?

மருது:மன்னா, அவர் ஒரு மர்ம யோகி என்பதில் சந்தேகமே இல்லை. அவர் வாயைத் திறந்தால் பொற் காசுகளாக கொட்டுகிறது. அவர் கையை உயர்த்தினால் விபூதியும் தங்க விக்கிரங்களும் வருகின்றன. இரும்புக்கோடையை சேர்ந்த அபூர்வமான ஒரு நோஞ்சான் பேர்வழிக்கு அவர் தன் கமண்டலத்திலிருந்து நீரைப் பருகத் தந்தார். பருகியவுடன் அவன் ஹா என்று கத்திக் கொண்டு பக்கத்திலிருந்த ஒரு மரத்தை வேறோடு பிடுங்கி எறிந்ததை பார்த்தேன் மன்னா. அதனால் தான் கூறினேன் இரும்புக்கோட்டை மனிதர்களுக்கு அசுர பலத்தை அவர் தான் தருகிறார் என்று.

மன்னன்:நீ சொல்வதை நம்பவும் முடியவில்லை, நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. அமைச்சரே, மருது கூறுவது சரியா என்று எப்படி கண்டு பிடிக்கப்போகிறோம்?

அதே நேரத்தில் கவலாளிகள் ஒரு மனிதனை மன்னன் முன்னால் கொண்டு வந்து நிறுத்தினர்.

" வணக்கம், மன்னா இந்த ஆள் இரும்புக்கோட்டைக்கருகில் உள்ள் நமது படைகளின் முகாம் அருகில் சந்தேகப்படும்படி இருந்தான். இவனைப் பிடித்து கொண்டு வந்துள்ளோம்" என்றார்கள் காவலர்கள்.

அவன் பெயர் சப்பாணி. இரும்புக்கோட்டை தலைவர் சிம்பு தேவனின் ஒற்றர்களில் ஒருவன். பாண்டிய படைகளின் முகாம் அருகே வேவு பார்க்க சென்றவன் உள்ளே பாண்டிய நாட்டு சிப்பாய்கள் அரசவையில் நடந்த அனுஷ்காதேவியின் நடனத்தை விவரிக்க அதை மெய் மறந்து கேட்டுக் கொண்டு நின்றவனை சில சிப்பாய்கள் கோழி அமுக்குவது போல் அமுக்கி பிடித்தனர்.

மன்னன்:யார் நீ? பாண்டிய நாட்டு படை முகாம் அருகே என்ன வேலை உனக்கு?

மருது:மன்னா, ஒற்றையனாக வந்திருக்கும் இவன் ஒரு ஒற்றனாகத்தான் இருக்கவேண்டும்.

மன்னன்:நீ யார் என்று சொல்லாவிட்டால் உன் தலை துண்டிக்கப்படும்.

சப்பாணி மன்னன் கால்களில் விழுந்து:கருணை காட்டுங்கள் மன்னா. என் பெயர் சப்பாணி. நான் இரும்புக்கோட்டை தலைவரின் ஒற்றன்.

அமைச்சர் மன்னன் காதில்:மன்னா இவன் மூலம் நாம் மர்ம யோகியைப் பற்றி முழு விவ்ரங்களையும் தெரிந்து கொள்ளலாம். இவனிடம் நான் பக்குவமாக பேசுகிறேன்.

அமைச்சர் தொண்டையை கனைத்துக் கொண்டு:சப்பாணி, எங்கள் மன்னர் இரும்புக்கோட்டையுடன் சமாதானமாகப் போவதையே விரும்புகிறார். இரும்புக்கோட்டையின் மகத்துவத்தை அறிய ஆவலாக இருக்கிறோம். குறிப்பாக மர்ம யோகி அவர்களைப் பற்றி கூற் முடியுமா?

தொடரும்..

சிவா.ஜி
07-07-2010, 01:36 PM
மூன்று அத்தியாயங்களையும் வாசித்தேன். கதை பரபரவென்று நகர்கிறது. மருது பாத்திரம் நன்றாக அமைத்திருக்கிறீர்கள்....மர்மயோகியும் வந்துட்டாரா.....ஒற்றையன்கிட்டருந்து வேற ஏதாவது தகவல் கிடைக்குதா பாப்போம்....

தொடருங்க மதுரைமைந்தரே....

govindh
07-07-2010, 10:59 PM
நல்லா இருக்கு...நகைச்சுவை தொடர்கதை.
சப்பாணி என்ன சொல்லப் போகிறார்...?
பரட்டையும் இங்கே வருவாரா...?

தொடருங்கள் மதுரை மைந்தரே.

அன்புரசிகன்
09-07-2010, 12:36 AM
:D :D :D
மருது மாட்டியா??? தொடருங்கள்.
(புதிய பாகம் பதிந்ததும் தலையங்கத்தை மாற்ற மறக்காதீர்கள்)

ஓவியன்
09-07-2010, 01:38 PM
விறு, விறுப்பாக கதையினை நகர்த்திச் செல்வதற்கு வாழ்த்துகள் மைந்தரே, சிம்புதேவனின் ஒற்றனின் வார்த்தைகளைக் கேட்க நானும் ஆவலுடன் காத்திருக்கின்றேன்...

கலையரசி
09-07-2010, 03:00 PM
கதை விறுவிறுப்பாக நகர்கிறது. கதையினூடே இழையோடும் நகைச்சுவையும் ரசிக்கும் படி இருக்கிறது. பாராட்டுக்கள்.
தொடருங்கள்.

Mano.G.
10-07-2010, 04:57 AM
ரொம்ப நாளா சினிமா எடுக்கனும்னு நினைச்சு நல்ல கதாசிரியர தேடிகிட்டு இருந்தேன், இப்ப ஆஸ்திரிலேயாவிலிருந்து நம்ம மதுரை மண்ணின் மைந்தனோட கதைய முடிச்சோன புக் பண்ணிர வேண்டியது தான்.கதைய முடிச்சோன அடுத்த கட்ட வேல அதுக்கு இப்பவே தயார்பண்ணனும்.

மதுரை மைந்தன்
10-07-2010, 07:06 AM
இரும்புக்கோட்டை மர்ம யோகி

http://img819.imageshack.us/img819/3840/50807515.jpg (http://img819.imageshack.us/i/50807515.jpg/)

பாகம் 4

பாண்டிய அரசவையில்

மன்னன்: சப்பாணி, இரும்புக்கோட்டை மர்ம யோகியைப் பற்றி மறைக்காமல் எல்லா விவரங்களையும் கூறு. அப்படி கூறாவிடில் உனக்கு என்ன தண்டனை கிடைக்கும் என்று அமைச்சர் கூறுவார்.

அமைச்சர்: சப்பாணி உன்னை கொதிக்கும் எண்ணைக் கொப்புறைக்குள் தள்ளவா, பட்டத்து யானையின் கால்களில் உன் தலையை இடரச் செய்வதா அல்லது வில்லாளிகளைக் கொண்டு உன் உடம்பை சல்லடையாக்குவதா என்று நீயே தீர்மானிக்க வேண்டியிருக்கும்.

மருது: மற்றுமோர் தண்டனை இருக்கிறது. சப்பாணி, நீ இரும்புக்கோட்டை நுழை வாயிலிக்கெதிரில் நெடுதுர்ந்த மரத்தில் அமர்ந்து இரும்புக்கோட்டை மனிதர்களை சரியாக கணக்கிட வேண்டியிருக்கும்.

சப்பாணி மன்னனின் கால்களில் விழுந்து: என்னை ஒன்றும் செய்து விடாதீர்கள் மன்னா. மர்ம யோகியைப் பற்றி எனக்கு தெரிந்த உண்மைகளை கூறுகிறேன்.

மன்னன்: நீ சொல்வதை வைத்து இரும்புக்கோட்டையை கைபற்ற முடிந்தால் உன்னை அதன் தலைவனாக நியமிப்பேன். சொல்லு.

சப்பாணி: பல வருடங்களுக்கு முன்னால் இரும்புக்கோட்டை வலுவற்று இருந்தது. கோட்டை கதவுகள் திறந்தே இருந்தன.அச்சமயம் ஒரு யோகி இரும்புக்கோட்டைக்குள் வந்தார்.இரும்புக்கோட்டை தான் அவருடைய சொந்த ஊர் என்றும் இமய மலைக்கு சென்று தவமிருந்துவிட்டு வந்துள்ளதாகவும் பேசிக்கொண்டார்கள். ஊரின் கோடியில் ஒரு ஆசிரமம் அமைத்து எப்போதும் தியானத்தில் இருந்து வந்தார். வெறும் யோகியாக இருந்தவர் ஒரு நாள் காற்று வரட்டும் என்று சாளரத்தை திறந்தார். அன்றிலிருந்து மர்ம யோகியாக மாறி விட்டார்.

மருது: சாளரத்தை திறந்ததும் பலான காட்சி எதையாவது பார்த்தாரா?

மன்னன்: மருது, வாயை மூடிக்கொண்டிரு. சப்பாணி, யோகி சாளரத்தை திறந்து எப்படி மர்ம யோகியானார்?

சப்பணி: மன்னா, யோகி சாளரத்தை திறந்ததும் அங்கு வெளியே ஒரு மூலிகைகள் நிறந்த காட்டை பார்த்தார். இமய மலையில் மூலிகைகளைப் பற்றி நன்கு அறிந்திருந்ததால் அந்த மூலிகைகளைக் கொண்டு பல அற்புதங்களை நிகழ்த்தலானார். மக்கள் அவரிடம் தங்கள் குறைகளை கூறி நிவர்த்தி அடைந்தார்கள். உதாரணமாக, ஒரு முறை விவசாயி வெள்ளையன் தன் மகனுடன் அவரிடம் சென்றான். அவர்களின் உரையாடல் இப்படி சென்றது.

வெள்ளையன்: சாமி, என் பையனுக்கு யாரும் பொண்ணு தர மாட்டேன்கிறாங்க. நீங்க தான் உங்க மூலிகையைக் கொண்டு ஏதாவது செய்யணும்.

மர்ம யோகி பையனை பார்த்தார். கட்டை குட்டையாக தொந்தி தொப்பையுடன் அண்டம் காக்காய் நிறத்தில் இருந்தான் அவன்.

மர்ம யோகி: வெள்ளையா, உன் பையன் கருப்பாய் இருப்பதைப் பற்றி கவலைப் படாதே. கருப்பு தான் எனக்கு பிடிச்ச நிறம்னு வயக்காட்டில் களை பிடுங்கிற போது பொண்ணுங்க பாடறதை நான் கேட்டிருக்கேன். அவன் உடல் கட்டை தேகப் பயிற்சி சாலைக்கு சென்றால் மாற்றியமைத்து சூரியகுமாரனைப் போல் ஆகலாம். அதற்கப்புறம் ஜோதிமயமான பெண் அவனுக்கு மனைவியாக வருவாள்.

வெள்ளையன்: சாமி, நீங்க தேகப்பயிற்சி சாலை அது இதுன்னு போகாத ஊருக்கு வழி சொல்றீங்க. உங்க கால்ல விழுந்து கும்பிடறேன். நீங்கதான் காப்பாத்தணும்.

மர்ம யோகி சற்று யோசித்துவிட்டு: சரி, நீ விரும்புவதால் நான் என் மூலிகைகளைக் கொண்டு அவனை மாற்றுகிறேன். இந்தா இந்த மூலிகை கஷாயத்தை அருந்தச் சொல். ஒரு வாரத்தில் அவனுடைய தேககட்டு மாறிவிடும். அதோடு அவனுடைய நிறத்திலும் மாறுதல்கள் ஏற்படும். நிற மாறுதல்கள் சூரிய ஒளியைப் பொருத்து இருக்கும். காலையில் மஞ்சள் வெய்யிலில் மஞ்சள் நிறமும், மதியம் வெள்ளை நிறமும் மாலையில் சிவப்பு நிறமுமாக மாறும்.

வெள்ளையன்: அப்போ பொழுது சாய்ந்ததும் அவன் கருத்து விடுவானே?

மர்ம யோகி: பொழுது சாய்ந்ததும் நிறய எண்ணையை ஊற்றி விளக்கேற்றி வை. விளக்கு வெளிச்சத்தில் பிரகாசமாக தெரிவான். விளக்கை அணைத்த பிறகு அவனை நடமாட சொல்லாதே. இருட்டுக்கும் அவனுக்கும் வித்தியாசம் தெரியாது.

வெள்ளையன்: ரொம்ப சந்தோசமுங்க. ஆனா தேககட்டு மாற ஒரு வாரம் ஆகும்போல இருக்கு?

மர்ம யோகி: ஆம். உன் வீட்டருகில் கழிப்பறை இருக்கிறதல்லவா? அவன் ஒரு வாரமும் அடிக்கடி கழிப்பறைக்கு செல்ல வேண்டியிருக்கும்.

சப்பாணி தொடர்ந்தான்: இப்படியாக வெள்ளையன் மகனுக்கு மாறுதல்கள் ஏற்பட்டு திருமணமும் ஆயிற்று. அச்சமயம், இரும்புக்கோட்டை பக்கத்து பாளையத்தினரால் தாக்குதலுகுள்ளாயிற்று. கோட்டை கதவுகளை மூடி விட்டு இரும்புக்கோட்டை தலைவர் செய்வதறியாதிருந்த போது மர்ம யோகியின் நினைவு வந்தது. அவர் மர்ம யோகியிடம் சென்று இரும்புக்கோட்டையை காப்பாற்றுமாறு வேண்டினார். மர்ம யோகி ஒரு அபூர்வ மூலிகையை கொண்டு தயாரித்த கஷாயத்தை இரும்புக்கோட்டை வீரர்களூக்கு பருகத் தந்தார். அதன் பின் படையெடுத்து வந்த பாளையத்தார்களை வீரர்கள் பந்தாடி துரத்தி விட்டார்கள். இரும்புக்கோட்டை கதவுகளும் மூடப்பட்டன.

மன்னன்: ஓ, இரும்புக்கோட்டையின் வலிமையின் ரகசியத்தை அறிந்து கொண்டோம். ஆக இரும்புக்கோட்டையை கைபற்ற வேண்டுமென்றால் நாம் மர்ம யோகியை கடத்திக் கொண்டு வர வேண்டும்.

அமைச்சர்: மர்ம யோகியை கடத்துவதோடு நில்லாமல் எப்படியாவது நாம் அந்த மூலிகை காட்டையும் பிடுங்கி கொண்டு வர வேண்டும். அப்படிச் செய்தால் மர்ம யோகியைக் கொண்டு அந்த கஷாயத்தை நமது படை வீரர்களுக்கு பருகக் கொடுத்தால் நாம் இரும்புக்கோட்டை என்ன சேர, சோழ நாடுகளையும் கைப்பற்ற முடியும்.

மன்னன்: மர்ம யோகியை கடத்துவதற்கு நாம் அவருடைய நடவடிக்கைளை கண்காணிக்க வேண்டும். முடிந்தால் அவரின் நற்மதிப்பை பெற்று அவரை கோட்டைக்கு வெளியே வரச் செய்யவேண்டியிருக்கும். இதற்காக நாம் ஒரு ஒற்றனை இரும்புக்கோட்டைக்குள் அனுப்ப வேண்டும்.

அமைச்சர்: மன்னா, இதோ பாருங்கள். சப்பாணியின் கழுத்தில் ஒரு அடையாள வில்லை தொங்குகிறது. சப்பாணியும் மருதுவும் சாயலில் ஒன்றாக இருப்பது நமக்கு வசதியாக இருக்கிறது. நாம் ஏன் மருதுவை ஒற்றனாக இரும்புக்கோட்டைகுள் அனுப்ப கூடாது?

மருது: அய்யோ, மன்னா என்னை விட்டு விடுங்கள். நான் பிள்ளை குட்டிக்காரன்.

அமைச்சர் மன*துக்குள்: கல்யாணம் ஆகி வருடங்கள் கழிந்தும் ஒரு புழு பூச்சி கூட மருதுவின் மனைவி வயிற்றில் உண்டாகவில்லை என்று அங்கலாய்த்து கொண்டாள் சகோதரி. இங்கு மருது பிள்ளை குட்டிக்காரன் என்கிறான். பிழைக்க தெரிந்தவன் தான்.

மன்னன்: மருது ஏற்கனவே ஒற்றனாக நீ சென்று பொற்காசுகளைத் தொலைத்ததோடல்லாமல் கணக்கையும் தவறவிட்டாடய். அதற்கு பிராயச்சித்தமாக இப்போது நீ தான் சப்பாணியின் உருவில் அவனுடைய அடையாள வில்லையைத் தாங்கி ஒற்றனாக இரும்புக்கோட்டைக்குள் செல்ல வேண்டும்.

மருது வேறு வழியில்லாமல் தலையை ஆட்டிவிட்டு: மன்னா, ஒரு வேளை இருபுக்கோட்டைக்காரர்கள் என்னை கண்டுபிடித்துவிட்டால்?

மன்னன்: கண்டுபிடித்து விட்டல் அவர்களிடம் சொல் பாண்டிய மன்னன் சப்பாணியைக் கொன்று அவர்களுடன் பிண்டமாற்று முறையை பின் பற்ற வேண்டியிருக்கும் என்று.

தொடரும்...

ஓவியன்
10-07-2010, 07:29 AM
அடடே இதுதான் இரும்புக்கோட்டை வீரர்களின் இரகசியமா..??,
ஆக, மர்மயோகியைக் கடத்திட்டு வரப் போறாங்களா இல்லையானு அறிய அடுத்தடுத்த பாகங்களை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றேன்....

அமரன்
10-07-2010, 10:05 AM
ஹஹ்ஹ்ஹ்ஹா.

சரவெடியாக உள்ளது கதை. சிம்புதேவன் கதைகளில் நான் கண்ட தோரணங்கள் இந்தக் கவிதையிலும் ஊஞ்சல் கட்டி ஆடுகின்றன.

சப்பானி கெட்டிக்காரன் போல. நுணலும் தன் வாயால் கெடும் என்பதுக்கேற்ப யோகியைப் பற்றிச் சொல்லி முந்திரிக் காரரகள் அவனுக்கு உதவி புரிந்திருக்கிறார்கள்.

தொடர்ந்து கொளுத்துங்க மதுரயாரே.

சிவா.ஜி
10-07-2010, 10:19 AM
பண்டமாற்று பிண்டமாற்றாகிவிட்டதோ.....மருது சப்பாணியாய் போவதைப்போல....சப்பாணியாகி திரும்பாமலிருந்தால் நலம்.

தொடருங்க மதுரையாரே...

govindh
10-07-2010, 11:16 AM
மர்ம யோகி....மற்றும் மருதுவின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை அறிந்து கொள்ள ஆவலுடன்...காத்திருக்கிறோம்...!

தொடருங்கள் மதுரை மைந்தரே...

பா.ராஜேஷ்
11-07-2010, 10:55 AM
சில நாட்களாகவே இந்த கதையை வேலை பளுவின் காரணத்தால் படிக்க இயலவில்லை... இன்று விடுமுறை ஆதாலால் அனைத்து பாகத்தையும் ஒன்றாக படித்தேன். சும்மா சொல்லக் கூடாது... நல்லா தமாசாகத்தான் போகிறது... பாராட்டுக்கள் மதுரை மைந்தரே. தொடருங்கள்..

மதுரை மைந்தன்
11-07-2010, 11:18 AM
பண்டமாற்று பிண்டமாற்றாகிவிட்டதோ.....மருது சப்பாணியாய் போவதைப்போல....சப்பாணியாகி திரும்பாமலிருந்தால் நலம்.

தொடருங்க மதுரையாரே...



நன்றி நண்பரே

மதுரை மைந்தன்
11-07-2010, 11:19 AM
மர்ம யோகி....மற்றும் மருதுவின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை அறிந்து கொள்ள ஆவலுடன்...காத்திருக்கிறோம்...!

தொடருங்கள் மதுரை மைந்தரே...


நன்றி நண்பரே

மதுரை மைந்தன்
11-07-2010, 11:20 AM
சில நாட்களாகவே இந்த கதையை வேலை பளுவின் காரணத்தால் படிக்க இயலவில்லை... இன்று விடுமுறை ஆதாலால் அனைத்து பாகத்தையும் ஒன்றாக படித்தேன். சும்மா சொல்லக் கூடாது... நல்லா தமாசாகத்தான் போகிறது... பாராட்டுக்கள் மதுரை மைந்தரே. தொடருங்கள்..

நன்றி நண்பரே

மதுரை மைந்தன்
11-07-2010, 11:26 AM
இரும்புக்கோட்டை மர்ம யோகி

http://img819.imageshack.us/img819/3840/50807515.jpg (http://img819.imageshack.us/i/50807515.jpg/)

பாகம் 5

கை கால்கள் நடுங்க மருது இரும்புக்கோட்டையின் நுழைவாயிலை அணுகினான். வாயிலில் இருந்த சாளரத்தை மூன்று முறை சப்பாணி சொல்லிக் கொடுத்தது போல் தட்டினான். சாளரத்தை திறந்து பார்த்த காவலாளியிடம் மருது சப்பாணியின் அடையாள் வில்லையை காட்டினான். காட்டியதும்,

" அடடே சப்பாணியா, வா உள்ளே" என்று அவனை அனுமதித்த காவலாளி " சப்பாணி நீ என்கிட்டே கைமாத்தா வாங்கின நூறு வெள்ளிகளை (வெள்ளி என்பது இரும்புக்கோட்டையின் பணத்தின் பெயர். பாண்டிய நாட்டு பொற்காசுகள் அங்கே செல்லாது) எப்போ திருப்பி தரப்போறே? என்று கேட்கவும் திகைத்தான் மருது. சப்பாணி இந்த விஷயத்தை கூறவில்லையே என்று யோசித்த மருது
" கவலைப் படாதீங்க அண்ணே, ஒற்றன் வேலையை முடிச்சுகிட்டு தலைவரை பார்க்க போறேன். அப்போ அவர் தருகிற சன்மானத்திலிருந்து உங்க நூறு வெள்ளிகளை திருப்பி தந்துடறேன்" என்று கூறி சமாளித்தான்.

இரும்புக்கோட்டைக்குள் நுழைந்து எங்கு செல்வது என்று யோசித்தான் மருது. அச்சமயம் சில காவலர்கள் ஒரு பல்லாக்கில் இரும்புக் கோட்டை தலைவர் சிம்புத்தேவனை சுமந்து கொண்டு செல்வதை பார்த்தான். அவர்கள் அவனை நெருங்கியதும் அவர்களின் தலைவன் " சப்பாணி, நீயும் வந்து ஒரு தோள் கொடு" என்றான். மருது முன்னப்பின்ன பல்லாக்குகளைத் தூக்கையதில்லை. ஆனால் இப்போ அவன் மறுத்தால் அவன் கண்டுபிடில்லப்படலாம் என் பயந்து ஒரு தோளில் பல்லாக்கை சுமந்தான். பல்லாக்கு சுமையோடு சேர்ந்து மற்ற பல்லாக்கு தூக்கிகள் வேகமாக நடக்கவும் அவனால் ஈடு கொடுக்க முடியவில்லை. ஒரு வழியாக பல்லாக்கு இரும்புக்கோட்டை தலைவரின் மாளிகையை அடைந்தது. பல்லாக்கிலிருந்து இறங்கிய சிம்புத்தேவன் " ஓ சப்பாணி உனது வேவு பார்க்கும் வேலை முடிந்ததா? என்ன செய்தி கொண்டு வந்திருக்கிறாய்?" என்று கேட்டான். மருது தனது கையினால் வாயை சற்று பொத்திக்கொண்டு " தலைவரே, பாண்டிய மன்னன் ஒற்றன் ஒருவனைக் கொண்டு நமது எண்ணிக்கையை அறிய முயன்றான். ஆனால் அந்த ஒற்றன் எண்ணிக்கையை தவறவிட்டதால் மேற் கொண்டு என்ன செய்வது என்று திகைத்துக் கொண்டிருக்கிறான்" என்றான்.

" ஆம் அந்த ஒற்றன் ஒரு கோமாளி அவனை அனுப்பிய பாண்டிய மன்னன் அவனை விட பெரிய கோமாளி" என்று சொல்லி பலமாக சிரித்தான் சிம்புத்தேவன். " நல்ல வேலை செய்திருக்கிறாய் சப்பாணி, சென்று ஓய்வெடுத்துக்கொள்" என்று சொல்லி மாளிகைக்குள் சென்றான் அவன்.

தூக்க முடியாமல் பல்லாக்கு தூக்கியதில் உடல் முழுவதும் வலிக்க வியர்வை வெள்ளத்தில் மிதந்தான் மருது. அவனைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு பல்லாக்கு சேவகன் அவனிடம் " சப்பாணி, நீ வலிமை குன்றி காணப்படுகிறாய். நமது மர்ம யோகியிடம் சென்று
" சக்தி தருவினி" ஒளஷதத்தை வாங்கி அருந்து" என்று சொல்லி விரைந்தான் அவன். மர்ம யோகியின் ஆசிரமத்துக்கு எப்படி செல்வது என்று அவனிடம் கேட்க பயந்தான் மருது. ஆசிரமம் கோட்டையின் ஒரு கோடியில் இருப்பதாக சப்பாணி கூறியிருந்ததால் ஒரு ஒற்றையடி பாதை வழியாக செல்லலானான் மருது.

பாதை ஒரு காட்டு வழியாக செல்லவே தான் சரியான பாதையில் செல்கிறோமா என்று யோசித்தான் மருது. அச்சமயம் " என்ன சப்பாணி, எப்படி இருக்கே? பார்த்து ரொம்ப நாளாயிடுச்சு" என்று ஒரு மனித குரல் கேட்கவே சுற்று முற்றும் பார்த்தான். யாரையும் காணோம். குழப்பமடைந்த சப்பாணி கீழே மேலே பார்த்தான். பக்கத்து மரக்கிளையில் ஒரு குரங்கு அமர்ந்திருந்தது. குரங்கு எப்படி மனித குரலில் பேசும் என்று எண்ணிக் கொண்டிருந்தபோது அந்த குரங்கு மரத்தை விட்டு கீழிறங்கி அவனருகில் வந்து " என்ன சப்பாணி என்னை மறந்துட்டயா, நான் தான் மந்தி" என்றதும் ஆச்சரியத்தில் வாயடைத்து போனான் மருது. அவர்களின் உரையாடல் இதோ:

மருது: மந்தி, நீ எப்படி மனிதர்களைப் போல் பேசுகிறாய்?

மந்தி: என்ன நீ என்னை அடியோடு மறந்துவிட்டாயா அல்லது உனக்கு மன்டையில் அடிபட்டு ஞாபக மறதி ஆகிவிட்டதா? இருந்தாலும் கூறுகிறேன் கேள். ஒரு முறை மர்ம யோகி ஒரு மூலிகை கஷாயத்தை தயரித்துவிட்டு வேறு வேலையாக இருந்தபோது நான் சாலரத்தின் வழியே ஆசிரமத்தின் உள்ளே நுழைந்து அந்த கஷாயத்தை குடித்து விட்டேன். திரும்பி பார்த்த மர்ம யோகியிடம் மனித குரலில் "மன்னித்துக்கொள்ளுங்கள் சாமி" என்றது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. மர்ம யோகியும் சிரித்துக் கொண்டே " வாய் பேச முடியாதவர்களை பேச வைக்கும் மூலிகை கஷாயத்தை நீ அருந்தியத்தால் உனக்கு மனிதர்களைப் போல் பேசும் திறன் வந்திருக்கு" என்றார். " என்னை ஏன் ஒரு மனிதனாக நீங்கள் மாற்றக் கூடாது?" என்று கேட்டேன் அவரிடம். அதற்கு அவர் " குரங்குகளை மனிதர்களாக மாற்றும் மூலிகை எங்கிருக்கிறது என்று எனக்கு தெரியாது" என்றார்.

மந்தி கூறியதைக் கேட்ட மருது மர்ம யோகியை இரும்புக்கோட்டையை விட்டு வெளியே அழைத்து சென்று கடத்த இது ஒரு நல்ல தகவல் அதாவது மர்ம யோகியிடம் குரங்குகளை மனிதர்களாக மாற்றக்கூடிய மூலிகைகள் இரும்புக்கோட்டைக்கு வெளியே இருக்ககூடும் என்று அவ்ரிடம் போதிக்க வேண்டும் என்று தீர்மானித்தான்.

மந்தி: என்ன யோசனையில் ஆழ்ந்து விட்டாய்? உனக்கு ஒரு செய்தி கூறப்போகிறேன். நானும் உன்னைப் போல ஒரு ஒற்றன் ஆனதால் தலைவர் என்னை பான்டிய அரசவைக்கு வேவு பார்க்க அனுப்பி வைத்தார். அன்கே பான்டிய ஒற்ரன் ஒருவனை இரும்புக்கோட்டை மனிதர்களை கணக்கிட அனுப்பி வைத்ததை நான் தலைவரிடம் கூற அவர் அந்த ஒற்றனை ஏமாற்ற இரும்புகோட்டை மனிதர்களை பல வேடங்களில் அனுப்பி அவனை நன்றாக ஏமாற்றினார்.

இதைக்கேட்ட மருது மரத்தின் மேலிருந்து களைப்படுமாறு தன்னை எண்ணிக்கை செய்ய வைத்த சிம்புத்தேவன் மீது கோபம் ஏற்பட்டது.

மந்தி: பாண்டிய நாட்டு ஒற்றனாக வந்தவன் பெயரை நான் உனக்கு ஒரு விடுகதையாக கூறுகிறேன். நீ கண்டுபிடி பார்க்கலாம். அவன் பெயர் மூன்று எழுத்துக்களைக் கொண்டது. " மருள மருள முழிக்கும் துரை" என்ற வாசகத்தில் இருக்கிறது.

மருது யோசித்த மாதிரி நடித்து : மருழி

மந்தி: இல்லை

மருது: மருகு

மந்தி: இல்லை

மருது:கண்டுபிடித்து விட்டேன். மருது.

மந்தி: சரியாக சொன்னாய். நீ இப்போது எங்கு சென்று கொண்டிருக்கிறாய்?

மருது: எனக்கு வலிமை குன்றியிருப்பதால் மர்ம யோகியிடம் சென்று " சக்தி தருவினி" ஒள்ஷதத்தை வாங்கி பருகப் போகிறேன்.

மந்தி: மர்ம யோகியின் ஆசிரமம் இருக்கும் இடத்தையும் நீ மரந்துவிட்டாய். வா, நான் கூட்டி செல்கிறேன். நில்லு. ஒற்ரர்கள் பள்ளியில் நாம் பயிலும் போது மரத்துக்கு மரம் தாவி விளையாடுவோமே அது போல் இப்பொதும் அப்படி சென்றால் விரைவில் சென்றடைவோம்.

மருது இது என்ன புது சோதனை மரத்துக்கு மரம் தாவுவதா அது நம்மாலாகாது என்று நினைத்து: மந்தி, நான் தான் கூறினேனே எனக்கு வலிமை குறந்திருக்கிறது என்று. மரத்துக்கு மரம் தாவும்போது கீழே விழுந்து விடுவேன். ஆகவே நாம் நடந்தே செல்வோம்.

மந்தி: அப்படியே ஆகட்டும்.

மந்தியும் மருதுவும் ஆசிரமத்தை நோக்கி சென்றனர்.

தொடரும்....

மதி
12-07-2010, 05:28 AM
திடீரென்று மருதுவிற்கு சமயோசித புத்தி வந்துவிட்டது. ஒட்டுமொத்தமாக இப்போது தான் படித்தேன் மதுரையாரே...அட்டகாசமாகப் போகின்றது கதை.. திரைப்படமாகவே எடுக்கலாம்..!!

அன்புரசிகன்
13-07-2010, 12:31 AM
ஆனாலும் அநியாயத்திற்கு புத்திசாலியாக இருக்கான் மருது. தொடருங்கள் மைந்தரே. வாழ்த்துக்கள்.

அன்புரசிகன்
13-07-2010, 12:32 AM
திரைப்படமாகவே எடுக்கலாம்..!!
ஆமா... ஓவியனக்கூட பேசவைச்சா கிரஃபிக்ஸ் தேவைப்படாது... :D

மதுரை மைந்தன்
14-07-2010, 11:13 AM
இரும்புக்கோட்டை மர்ம யோகி

http://img819.imageshack.us/img819/3840/50807515.jpg (http://img819.imageshack.us/i/50807515.jpg/)

பாகம் 6

மந்தியும் மருதுவும் மர்ம யோகியின் ஆசிரமத்தை நோக்கி செல்கையில் இரும்புக்கோட்டை மனிதர் ஒருவர் குதிரையில் வந்தார். அவ்ர் " என்ன சப்பாணி நலமா இருக்கையா?" என்று கேட்டதும் மருது தன்னையும் அறியாமல் அவர் யாரை கூப்பிட்டார் என்பது போல் சுற்று முற்றும் பார்க்க அவர் " என்ன சப்பாணி நான் தான்பா சங்கலி கருப்பன் உன்கிட்ட பேசறேன்" என்றவுடன் தான் மருதுவுக்கு தான் சப்பாணி என்று நினைவுக்கு வந்தது.

மருது: " நான் நல்லா இருக்கேன். வீட்டில மதினி குழந்தங்க எல்லாம் நலமா?"

சங்கலி கருப்பன் சிரித்துக்கொண்டு: என்ன விளையாடறையா? எனக்கு இன்னும் திருமணமே ஆகலைனு உனக்கு தெரியாதா?"

மந்தி: சப்பாணிக்கு எல்லாம் மறந்து போச்சு. மர்ம யோகிகிட்ட போய் 'சக்தி தருவினி" சாப்பிட்டாதான் எல்லாம் சரியாகும்.

சங்கலி கருப்பன்: ஓ அப்படியா, அப்ப சீக்கிரம் போங்க*

அவர் சென்றவுடன், மருது தானே தன்னை காட்டி கொடுத்துவிடுவேனோ என்று பயம் வந்தது. அதனால் அவன் தனகுள்ளே
" இரும்புக்கோட்டைகுள்ளே சப்பாணி, இரும்புக்கோட்டைக்கு வெளியே மருது
இரும்புக்கோட்டைகுள்ளே சப்பாணி, இரும்புக்கோட்டைக்கு வெளியே மருது" என்று சொல்லிக் கொண்டு வந்தான்.

மந்தி: என்ன சப்பாணி என்ன தனக்குள்ளேயே பேசிக்கிட்டு வறயே

மருது: இரும்புக்க்கோட்டைக்குள்ளே மருது.

மந்தி: என்னது? இரும்புக்கோட்டைகுள்ளே மருது எங்கே?

மருது அப்போது தான் உளறியதை உணர்ந்தான்.

மருது: இல்லை, இரும்புக்கோட்டைக்குள்ளே மருது வந்தால் அவனை நம்ம மக்கள் என்ன செய்வார்கள்?

மந்தி: அட போப்பா நீ ஒண்ணு மருது இரும்புக்கோட்டைக்குள்ளே எப்படி வர முடியும்? அப்படியே வந்தால் மர்ம யோகி அவனை ஒரு கழுதை ஆக்கி வண்ணான்களோட பொதிகளை சுமக்க வைச்சுடுவார்.

மந்தி: சப்பாணி, உனக்கு தெரியுமா? நான் மனிதர்களைப் போல் பேச ஆரம்பித்த சமயம் ஒரு நாள் நம்ம சந்தைக்கு போய் அங்காடி ஒன்றின் அருகில் மரக் கிளையில் அமர்ந்து கொண்டேன். அங்கு பொருட்களை வாங்க வந்தார் ஒருவர். அவர் வாங்கி முடித்ததும் மொத்தம் என்ன விலை ஆச்சு? என்று கேட்டார் கடைக்காரனிடம். நான் கடைக்காரர் குரலில் நூறு வெள்ளிகள் என்றேன். அதற்கு குதிரைக்காரர் என்னது நூறு வெள்ளிகளா? நான் வாங்கிய பொருட்களுக்கு பத்து வெள்ளிகள் தானே ஆகும்? என்றார். நான் அவ்ரின் குரலில் 'நாசமாக போ' என்றேன். கடைக்காராருக்கு கோபம் வந்து குதிரைகாரரை அடித்தார். குதிரைக்காரரும் அவரை அடிக்க அங்கு ஒரு கும்பல் கூடிவிட்டடது. நான் அங்கிருந்து மெதுவாக நழுவி வந்தேன். ஹா ஹா ஹா

மருதுவும் மந்தியுடன் சேர்ந்து சிரித்தான். இருவரும் மர்ம யோகியின் ஆசிரமத்தை அடைந்தனர். உள்ளே மர்ம யோகி மும்முரமாக ஒரு ஒளஷதத்தை தயாரித்துக் கொண்டிருந்தார்.

மந்தி: வணக்கம் சாமி

மருது: கும்பிடறேன் சாமி

மர்ம யோகி அவர்களைப் பார்த்து: ஓ நீங்களா? நலமாக இருக்கிரீர்களா?

மந்தி: சாமி, நம்ம சப்பாணிக்கு வலிமை குன்றிப் போனதோடு பழைய நினைவுகளையும் இழந்திருக்கிறார். நீங்க அவருக்கு உங்க 'சக்தி தருவினி' ஒளஷதத்தை கொடுங்கள். அவர் நலமாகி விடுவார்.

மர்ம யோகி மருதுவை உற்று நோக்கி விட்டு: மந்தி, சப்பாணி சப்பாணியாக இல்லை என்கிறாயா? என்ரு சொல்லி தனது வெண் தாடியை தடவி விட்டுக் கொண்டு சிரிக்கிறார். மருதுவுக்கு மர்ம யோகி தன்னை இனம் கண்டு கொண்டுவிட்டாரோ என்று அச்சம் வந்தது.

மர்ம யோகி:சப்பாணி, இந்தா இந்த ஒளஷதத்தை சாப்பிடு.

மர்ம யோகி கொடுத்த ஒளஷதத்தை வாங்கி பருகினான் மருது. ஒளஷதம் உள்ளே சென்றதும் மிருது வாக இருந்த மருதுவுக்கு எருதுவின் பலம் வந்தது.

மந்தி: சப்பாணி, இப்பொ எப்படி இருக்கு? வா வந்து இந்த மரத்தை வேறோடு பிடுங்கி எறி. பக்கத்தில் இருக்கிற பெரிய கல்லை தூக்கி வீசி எறி.

மந்தி சொன்ன மாதிரி தன்னால் செய்ய முடிந்தது மருதுவுக்கு ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் தந்தது.

மந்தி: வா, நாம இப்போ மரத்துக்கு மரம் தாவி விளையாடலாம்.

மருதுவும் மந்தியும் விளையாடிக் கொண்டிருப்பதை கூர்ந்து கவனித்து விட்டு தான் பாதியில் விட்டிருந்த புது ஒளஷதம் தயரிக்கும் வேலையில் இறங்கினார் மர்ம யோகி.

சிறிது நேரம் கழித்து மந்தி ஆசிரமத்துக்குள் சென்று வேகமாக கையில் ஒரு குவளையுடன் வந்தது. மருதுவிடம் அந்த குவளையைக் கொடுத்து " சப்பாணி, மர்ம யோகிக்கு தெரியாமல் இந்த புது ஒள்ஷதத்தை கொண்டு வந்திருக்கேன். இந்தா நாம் இருவரும் இதை பருகுவோம்" என்று குவளையைலிருந்து சிறிது சாப்பிட்டுவிட்டு மருதுவிடம் கொடுத்தது. மருது ஒளஷதத்தை சாப்பிட்டு முடித்த்தும் ஆசிரமத்தின் உள்ளிருந்து பரபர்ப்பாக வந்த மர்ம யோகி, " என்னை கேட்காமல் ஏன் இந்த ஒளஷதத்தை குடித்தீர்கள்" என்ரு கேட்டுவிட்டு உள்ளிருந்து இரண்டு கயிறுகளைக் கொண்டு வந்து மந்தியின் காலிலும் மருதுவின் காலிலும் அவற்றைக் கட்டி அவ்ற்றின் மறு நுனிகளை பக்கத்து மரத்தில் கட்டினார்.

அவர் கயிறுகளை கட்டி முடிக்கவும் மந்தியும் மருதுவும் உயரே பறக்க தொடங்கினர்.


தொடரும்...

அன்புரசிகன்
14-07-2010, 12:14 PM
அவங்க உடலுக்குள்ள ஐதரசன் வாயு வந்துவிட்டதா??? :D

நகைச்சுவையாக தொடர்கிறீர்கள். அதுசரி நகைச்சுவை தொடர் தானே... தொடருங்கள்...

மதி
15-07-2010, 05:13 AM
அடடே... பறக்கும் மருது..! யோகி அவனை இனம்கண்டு கொண்டாரா இல்லையா?? நன்றாகப் போகின்றது கதை.. தொடருங்கள்.

தூயவன்
15-07-2010, 06:13 AM
அடுத்த பாகம் ப்ளீஸ். கதை சூப்பரா போகுது பாஸ்

பா.ராஜேஷ்
15-07-2010, 04:21 PM
விட்ட இரண்டு அத்தியாயங்களையும் இன்று படித்தேன்... மருதுவின் நிலை நல்ல காமெடிதான்.. தொடருங்கள்..

மதுரை மைந்தன்
17-07-2010, 10:40 AM
இரும்புக்கோட்டை மர்ம யோகி

http://img819.imageshack.us/img819/3840/50807515.jpg (http://img819.imageshack.us/i/50807515.jpg/)

பாகம் 7

உயரே பறக்கத் தொடங்கி சில நேரம் கழித்து மருது கீழே பார்த்தான். அங்கே இரும்புக்கோட்டை மனிதர்கள் தங்கள் குதிரைகளில் நின்று கொண்டு மேலே பறக்கும் அவனையும் மந்தியையும் ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தனர். ஒரு குதிரை மட்டும் தன் முன் கால்களை மேலே தூக்கி அவனை நோக்கி ஒரு உதை விட்டது. அந்த குதிரை மருதுவின் குதிரை தான். ஒரு முறை இரும்புக்கோட்டைக்குள் படையெடுத்த பாண்டிய வீரர்களில் குதிரைப்படையில் மருது இருந்தான். இரும்புக்கோட்டை வீரர்கள் பாண்டிய நாட்டு குதிரைப் படை காலைட் படை இரண்டையும் காலாட் படையாகவே கோட்டைக்கு வெளியே வீசி எறிந்தனர். அப்போது அவனிடமிருந்து கைப்பற்ற*ப் பட்ட குதிரை தான் தற்சமயம் அவ்னை நோகி உதை விட்டது. அதற்கு மந்தியைப் போல் பேச முடிந்தால் அது இதைத்தான் சொல்லியிருக்கும்.
" மருது, என்னை வேகமா போ வேகமா போ என்று கையிலிருந்த தார் குச்சியாலும் காலால் உதைத்தும் பர பர என்று பதைத்தாயே இன்று அந்தரத்தில் நீ பறப்பதை பார்க்க ஆனந்தமாக இருக்கிறது".

பறந்துகொண்டிருந்த மருதுவுக்கு கீழிருந்து ஓர் துர் நாற்றம் வருவதை உண்ர்ந்தான். அது அங்கு குழுமியிருந்த இரும்புக்கோட்டை மகளிரின் கூந்தலில் தடவப்பட்டிருந்த வேப்பெண்ணை, விளக்கெண்ணை இவற்றிலிருந்து வந்தது என்று உணர்ந்தான். பாண்டிய நாட்டில் அழகிகளான திரெசா தேவி போன்றோர் தங்களது கூந்தலில் வாசனாதி திரவியங்களை தடவியும், கண்களில் அஞ்சனம் தீட்டியும் விண்ணைத் தாண்டி வருவாயா என்று கேட்குமளவிற்கு அழகாக இருந்த்தை நினைவு கூர்ந்தான்.

இதனிடையே அங்கு பல்லக்கில் வந்த இரும்புக்கோட்டை தலைவர் சிம்புத்தேவன் மர்ம யோகியிடம் " இவர்கள் எப்படி பறக்கிறார்கள்" என்று கேட்டான்.

மர்ம யோகி: நீங்கள் விரும்பியபடி இரும்புக்கோட்டை வீரர்கள் மெலே பறந்து சன்டையிடும் வலிமை தரும் ஒளஷதத்தை தயாரித்துக் கொண்டிருந்தேன். நான் தயரித்து முடிப்பதற்குள் மந்தி சப்பாணிக்கு அதை அருந்தக் கொடுத்து தானும் அருந்தி விட்டது. மேலே பற்ந்து செல்வது போல் கீழே மெதுவாக இறங்குவதற்கு நான் இன்னும் மாற்று மருந்தை தயாரிக்கவில்லை. அதனால் அவர்களின் கால்களை கயிறுகளால் கட்டி வைத்திருக்கிறேன். ஒள்ஷதத்தின் வீர்யம் இன்னும் எத்தனை நேரம் இருக்கும் என்று தெரியாது. நாம் உடனே பறவைகளைப் பிடிக்க பயன் படுத்தும் பெரிய வலைகளை மந்தி, சப்பாணி இவர்களின் கீழே கட்டினால் வீர்யம் குறையும் போது அவர்கள் அதில் விழுந்து அடி படாமல் இருப்பார்கள்.

சிம்புத்தேவன்: ஓ, இந்த ஒளஷதத்தைக் கொண்டு நாம் ஒரு பறக்கும் படையை உருவாக்க முடியும் என்று தோன்றுகிறது. உங்களுக்கு இரும்புக்கோட்டை மக்கள் மிகவும் கடமைப்பட்டிருக்கிறார்கள்.

மருது பறப்பதை பாண்டிய நாட்டில் அமைச்சர் முத்துவேலர் தனது தொலை நோக்கி கண்னாடி மூலம் பார்த்து மன்ன*னிடம் பரபரப்பாக அறிவிக்கிறார்.

மன்னன்: அப்படியா, மருது இந்த மாதிரி பறக்கும் ரகசியத்தை அறிந்து வந்தால் நாம் என்ன செய்யலாம் தளபதியாரே.

தளபதி வீரகேசரி: பறக்கும் சக்தி நமது வீரர்களுக்கு கிடைத்தால் நாம் எளிதில் இரும்புக்கோட்டை வீரர்களிடமிருந்து தப்பிக்கலாம்.

மன்னன்: நமது வீரர்கள் இரும்புக்கோட்டை வீரர்கள் மீது பறந்து தாக்குதல்கள் செய்வார்கள் என எதிர்பார்த்தேன்.

தளபதி: மன்னா, நாம் எட்டடி பாய்ந்தால் இரும்புக்கோட்டை வீரர்கள் பதினாறடி பாய்கிறார்கள். ஏனெனில் அவர்கள் பின்னால் அந்த மர்ம யோகி இருக்கிறார்.

மன்னன்: நீர் சொல்வதும் சரிதான். மருது பறக்கும் சக்தியை கொண்டுவருவதைவிட மர்ம யோகியை கடத்திக் கொண்டு வந்தால் தான் நல்லது.

பாண்டிய அரசைவையில் இவ்வாறு மருது பறப்பதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கையில், இரும்புக்கோட்டை வீரர்கள் ஒரு வலையை கீழே கட்ட ஒள்ஷதத்தின் வீர்யம் குறந்து மந்தியும் மருதுவும் அதில் வீழ்கிறார்கள். சிம்புத்தேவன் மர்ம யோகியிடம் மேலே சென்றபின் கீழே பத்திரமாக இறங்குவதற்கான மாற்று மருந்தை தயாரிக்க்குமாறு கூறிவிட்டு தனது மாளிகைக்கு திரும்புகிறான். அங்கு,

ஒரு வீரன்: தலைவரே, எனகென்னவோ பறந்தது சப்பாணி தானா என்று சந்தேகமாக இருக்கிறது.

சிம்புத்தேவன்: ஏன் அப்படி சொல்கிறாய். அது சப்பாணிதான் என்று அவன் தோற்றமும் கழுத்தில் தொங்கும் நமது அடையாள வில்லையும் கூறுகின்றனவே.

வீரன்: அவன் சப்பாணிதான் என்றால் நான் அமர்ந்திருந்த குதிரை அவனை நோக்கி தனது முன்னங்கால்களால் ஒரு உதை விட்டதே. அந்த குதிரை நாம் பாண்டிய நாட்டு படை வீரர்களிடமிருந்து கைப்பற்றியது. ஒரு வேளை பறந்தது சப்பாணியாக இல்லாமல் பாண்டிய நாட்டு ஒற்றன் சப்பாணியின் உருவில் வந்திருந்தால் தான் குதிரை அவ்வாறு செய்திருக்க முடியும்.

சிம்புத்தேவன்: நீ சொலவ்து போல் அவன் சப்பாணி இல்லை என்றால் நாம் அதை எப்படி கண்டுபிடிப்பது?

இரும்புக்கோட்டையின் அமைச்சர் சப்பாணியின் விவ்ரங்கள் அடங்கிய ஓலைச் சுருளை எடுத்து பார்க்கிறார்.

அமைச்சர்: தலைவரே, சப்பாணியின் கழுத்தில் ஓர் மச்சம் இருப்பதாக இந்த ஓலையில் கூற*ப்பட்டிருக்கிறது. நாம் அந்த ஆளின் கழுத்தில் மச்சம் இருக்கிறதா என்று பார்த்தால் உண்மை வெளியாகும்.

சிம்புத்தேவன்: எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. நாம் அந்த ஆளை இங்கு வரவழைத்து நமது ஆஸ்தான நடன மங்கையான சினேக ராணியை நடனமாட வைத்து ஆடிக்கொண்டே சினேகத்துடன் அவள் அந்த ஆளின் கழுத்தை தடவி மச்சம் இருக்கிறதா என்று கண்டுபிடிக்க சொல்லலாம்.

அமைச்சர்: நல்ல யோசனை தலைவரே. நாம் அவ்வாறே செய்வோம்.

ஆசிரமத்தின் வெளியே மருதுவும் மந்தியும் இளப்பாறிக் கொண்டிருந்தார்கள். இளப்பாறி முடிந்ததும் மந்தி மருதுவிடம் நாம் பழையபடி மரத்துக்கு மரம் த்ஹவி விளையாடுவோமா? என்று கேட்டத்து. மருது அதற்கு மறுத்துவிட்டு நீ விளையாடு நான் மர்ம யோகியிடம் உரையாடப் போகிறேன் என்று சொல்லி ஆசிரமத்தின் வாயிலை அடைந்தான். உள்ளே, மர்ம யோகி தனது சீடர்களிடம் 'சக்தி தருவினி' இத்யாதி ஒளஷதங்களை தயரிப்பது எப்படி என்று விளக்கிக் கொண்டிருந்தார். மருது உற்சாகமடைந்து, மறைந்திருந்து அவர் கூறியவைகளை ஒட்டுக் கேட்டு ஓலைச் சுவடிகளில் குறிப்பெடுக்கலானான்.

தொடரும்....

மதி
17-07-2010, 12:46 PM
சுவாரஸ்யமா போகுது கதை.. தொடருங்கள் மைந்தரே!

த.ஜார்ஜ்
18-07-2010, 08:30 AM
எங்கே சிநேக ராணி... ஆட்டம் தொடங்கட்டும்..

அன்புரசிகன்
18-07-2010, 02:31 PM
எங்கே சிநேக ராணி... ஆட்டம் தொடங்கட்டும்..
அதே..

பா.ராஜேஷ்
18-07-2010, 05:04 PM
மிகவும் சுவாரசியமாக செல்கிறது... சினேக ராணியின் ஆட்டம் காண காத்திருக்கிறோம்

மதுரை மைந்தன்
19-07-2010, 10:50 AM
இரும்புக்கோட்டை மர்ம யோகி

http://img819.imageshack.us/img819/3840/50807515.jpg (http://img819.imageshack.us/i/50807515.jpg/)

பாகம் 8

மர்ம யோகி தனது சீடர்களிடம்: சிலர் என்னை ஒரு மந்திரவாதி என்றும் வேறு சிலர் நான் சித்து வேலைகளில் கை வந்தவன் என்றும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மை அதுவல்ல. நான் இமய மலையில் தவமிருந்து மூலிகைகளின் அரிய குணங்களை அறிந்தேன். மூலிககளைக் கொண்டுதான் நான் சக்தி தருவினி போன்ற ஒள்ஷதங்களை உருவாக்குகிறேன். நான் அறிந்த மூலிககைகளைப் பற்றி சொல்லப்போகிறேன்.


தூதுவளை- இதற்கு தூதுவளை, சிங்கவல்லி, அளர்க்கம் என்று பல பெயர்கள்உண்டு.

"தூதுவே ளையையுணத் தொக்கினிற் றொக்கிய

வேதையா நொயெலா மெய்யைவிட் டகலுமே" என்று பாடலாம்.

வில்வம்= இதற்கு சிவத்துருமம், குசாபி, கூவிளம், கூவிளை, மாதுரம், நின்மலி என பல பெயர்கள் உண்டு.

ஓரிதழ் தாமரை, கற்பூரவள்ளி இவை உடம்பிற்கு அழகை தருகின்றன.

"கற்பூர வள்ளியின் கழறிலை யைத்தின
நற்பாலர் நோயெலா நாசமா யகலுமே" என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

கீழாநெல்லி - கீழ்காய் நெல்லி சிறுநீரகத்தைக் காக்கும்.

சிறுநீரகத்துக்கு ஏற்ற சிறுபீளை, நெருஞ்சில், அதியமான் நெடுநாள் வாழ ஒளவை வழங்கிய ஆயுள் காக்கும் நெல்லி மற்றும் அதன் வகைகள், ஆண்மைக் குறைவைப் போக்கும் பூனைக்காலி, கருப்பைக் கோளாறுகளைத் தீர்க்கப் பயன்படும் அசோக மரம், புற்று நோயைப் புறக்கணிக்க உதவும் கொடிவேலியும், நித்திய கல்யாணியும், இதயத்திற்கு செம்பருத்தி, மூளைக்கு வல்லாரை என இவ்வாறு வகைப்படுத்தி உள்ளனர் .இதில் முக்கிய உறுப்பான கல்லீரலுக்கு கீழாநெல்லிதான் காக்கும் நண்பன்

வல்லாரை- "வல்லார உண்டோரிடம் மல்லாடாதே' இரும்புக்கோட்டை வீரர்கள் வல்லாரையை உண்டவர்கள்.

குப்பை மேனி= வேறு பெயர்கள்: அரிமஞ்சிரி, அண்டகம், அக்கினிச் சிவன், பூனை வணங்கி, அனந்தம், கொழிப் பூண்டு, சங்கரபுஷ்பி, மேனி. இதை யாரும் வளர்ப்பதில்லை, காடுமேட்டில்தானே தானே வளரும் தன்மை உடையது. குப்பை மேனியை மார் ஜாலமோகினி என்பர். வசீகரப்படுத்தும்இயலடையது. இது ஒரு வசிகர சாதனம். மாந்திரீக மூலிகையாகும். .

கரிசலாங்கண்ணி

"தின்ற கரிசாலை தேகம் திரை போக்கும்
தின்ற கரிசாலை சிறந்த நரை போக்கும்
தின்ற கரிசாலை தேகம் சிறுபிள்ளை
தின்ற கரிசாலை சிதையாது இவ் வாக்கையே" என்று நான் பாடுவேன்.

ஆவாரை - ஆவரசு- ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ !

நாயுருவி- சதை, நரம்புகளைச் சுருங்கவும் செய்யும் மருத்துவக் குணம் உண்டு.

இததகைய மூலிககளைக் கொண்டு தான் நான் ஒளஷதங்களை தயரிக்கிறேன். இரும்புக்கோட்டையில் எனது ஆசிரமத்தின் சாளரத்துக்கு வெளியே உள்ள காட்டில் இந்த மூலிககள் இயற்கையாக வளர்ந்திருக்கின்றன. அறியாதார் கண்களுக்கு இவை காட்டு செடிகளாக தெரியும்.

ஓலைச் சுவடிகளில் குறிப்பெடுத்து அவற்றை தனது இடுப்பில் சொருகிக்கொண்டிருந்த மருதுவை இரண்டு இரும்புக்கோட்டை வீரர்கள் தங்கள் குதிரைகளில் அணுகினர். குதிரைகளில் ஒன்று மருதுவை நக்கத் தொடங்கியது. அந்தக் குதிரை வீரன் மற்றவனைப் பார்த்து அர்த்த புஷ்டியுடன் சிரித்தான். " நான் சொல்லலை, இந்த குதிரை இவனோடதுதான், இன்னும் கொஞ்ச நேரத்தில இவன் குட்டு வெளிப்பட்டு விடும்" என்று சொல்லாமல் சொன்னது அந்த சிரிப்பு.

மருது: இந்த குதிரை என்னிடம் அன்பாக ஏன் இருக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம். தலைவர் என்னை பாண்டிய நாட்டு வீர்ரகளின் முகாமுக்கு வேவு பார்க்க அனுப்பிய போது அங்கிருந்த இந்த குதிரைக்கு நான் கொஞ்சம் புல்லை சாப்பிட கொடுத்தேன். அன்றிலிருந்து இந்த குதிரை என்னிடம் ஒட்டிக் கொண்டு விட்டது.

மருதுவின் குதிரையில் அம்ர்ந்திருந்த வீரனுக்கு தான் சந்தேகப்பட்டது தவறோ என்று தோன்றியது. இருந்தாலும் அவன் மருதுவிடம் " தலைவர் உன்னைப் பாராட்ட வேண்டி ஒரு நடன் விருந்துக்கு உன்னை அழைத்து வரச் சொன்னார்" என்றான்.

மருது: ஓ, அப்படியா, நல்லது. நான் மர்ம யோகியைப் பார்த்து சொல்லி விட்டு வருகிறேன். பின் நாம் செல்லலாம்.

மருது மர்ம யோகியை ஆசிரமத்துக்குள் சென்று சந்தித்து பேசிவிட்டு அவர்களுடன் சிம்புத்தேவர் மாளிகைக்கு சென்றான்.

சிம்புத்தேவர் அவனை வர வேற்று தன் பக்கத்தில் ஒரு இருக்கையில் அமரச் செய்தார். பின் கையைத்தட்டி " நாட்டியம் ஆரம்பமாகட்டும்" என்றார்.

" மச்சக்காரன் மச்சக்காரன் எவனோ
எனது இச்சைக்காரன் இச்சைக்கரன் அவனே"

என்று பாடிக்கொண்டு அழகாக நடன்மாடினாள் சினேக ராணி. சிம்புத்தேவர், அமைச்சர் மற்றும் வீரர்கள் மருதுவுடன் அதைக் கண்டு களித்தனர்.

திட்டமிட்டபடி, ஆடிக்கொண்டே மருதுவை சினேகமாக அணுகிய சினேக ராணி அவன் தோளில் கையைப் போட்டு கழுத்தை தடவினாள்.

"மச்சக்காரன் மச்சக்காரன்
இவன் ஒரு மச்சக்காரனே" என்று அவள் பாடியதும் சிம்புத்தேவரும் அமைச்சரும் இவன் சப்பாணி தான் என்று நிம்மதி அடைந்தார்கள்.

ஆனால், சினேக ராணி மருதுவின் கழுத்தை தடவிக் கொண்டே தொடர்ந்து

" மச்சக்காரன் மச்சக்காரன்
இவன் இரு மச்சக்காரனே
மச்சக்காரன் மச்சக்காரன்
இவன் மூணு மச்சக்காரனே
மச்சக்காரன் மச்சக்காரன்
இவன் நாலு மச்சக்காரனே"

என்று பாடவும் சிம்புத்தேவரும் அமைச்சரும் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.

தொடரும்..

மதி
19-07-2010, 11:14 AM
ஹாஹா... எத்தனை எத்தனை மச்சம்.. இன்னும் இருக்குதா மிச்சம்..? அசாத்திய நடை... பல்வேறு மூலிகைகளைப் பற்றிய குறிப்புகள் பயனுள்ளதாக இருந்தது...

அடுத்து என்ன நடந்தது என்பது அறிய ஆவல்.. தொடருங்கள் மைந்தரே..!

தாமரை
19-07-2010, 11:22 AM
கதை சூப்பராப் போகுது மதுரை மைந்தன் அவர்களே.. வீட்டில எல்லாம் அடுத்து என்ன அடுத்து என்னன்னு கேட்கிறாங்க...

ஆவாரம்பூவை உணவில் சேர்த்துக்கொண்டால் தங்க பஸ்பம் உண்ணும் பலன் கிடைக்குமாம்... நீங்க சொல்லியிருக்கிற கதை கற்பனைன்னாலும் இப்படி பல உண்மைகளையும் சேர்த்துக் கொடுப்பதால் குழந்தைகளுக்கு கீரை உண்ணும் ஆர்வத்தை உண்டாக்கவும் முடியுது...

ரொம்ப நன்றி!!!

அன்புரசிகன்
19-07-2010, 11:56 AM
இவர் படுபயங்கர மச்சக்காரன் போல..

உங்களால் இந்த மூலிகைகளின் நற்குணங்கள் அறிந்தேன். நன்றி. தொடருங்கள்.

குப்பை மேனி குறிஞ்சா செடி போன்றவற்றை சொதியில் போட்டு சாப்பிட்டிருக்கிறொம். தேங்காய் துருவலுடன் வறுத்தும் சாப்பிட்டிருக்கிறேன். சுவையாக இருக்கும்.

புளியம் மர குருத்து இலை , கீழ் நெல்லியை பச்சையாகவே விளையாட்டாக இலையுடன் சாப்பிட்டிருக்கிறேன்.

மதி
19-07-2010, 12:17 PM
குப்பை மேனி குறிஞ்சா செடி போன்றவற்றை சொதியில் போட்டு சாப்பிட்டிருக்கிறொம். தேங்காய் துருவலுடன் வறுத்தும் சாப்பிட்டிருக்கிறேன். சுவையாக இருக்கும்..
உமது வசீகரத்திற்கு காரணம் புரிகிறது.. அவுஸில் ஒரே மகளிர் தொல்லை போல..:eek::eek:

த.ஜார்ஜ்
19-07-2010, 04:07 PM
ஏதேது. டி.ஆர் போல பாடலும் தங்கள் கைவண்ணமா.. பலே..பலே..

அமரன்
19-07-2010, 09:08 PM
அட்டகாசமாகப் போகுது கதை.

இப்படியான கதைகளை எழுத அசாத்தியத் திறமை வேணும்.

உங்களிடம் அது நிரம்பவே உள்ளது.

தொடருங்கள்.

சிவா.ஜி
19-07-2010, 09:09 PM
விடுபட்ட அனைத்து அத்தியாயங்களையும் வாசித்தேன். அருமையாய் இருக்கிறது. பறக்கும் மருது, மச்சம் தேடும் சினேகராணி....மூலிகைகளின் பயன் என அட்டகாசமாய் கொண்டுபோகிறீர்கள்.

தொடருங்கள் மதுரையாரே....

பா.ராஜேஷ்
19-07-2010, 09:28 PM
மூலிகைகளின் பயன்களை அருமையாக தொகுத்துள்ளீர்கள்... மருதுவிற்கு இத்துனை மச்சம் வர காரணம் என்ன!!?? தொடருங்கள்...

மதுரை மைந்தன்
21-07-2010, 12:58 PM
இரும்புக்கோட்டை மர்ம யோகி

http://img819.imageshack.us/img819/3840/50807515.jpg (http://img819.imageshack.us/i/50807515.jpg/)

பாகம் 9

சினேக ராணி மருதுவின் மச்சங்களைத் தொடர்ந்து எண்ணியதும் சிம்புத்தேவருக்கும் அமைச்சருக்கும் குழப்பம் தோன்றியது. அமைச்சர் சப்பாணியின் விவர்ங்கள் அடங்கிய ஓலைச் சுவடிகளைப் புரட்டி பார்த்து அவ்ற்றில் சப்பாணி கழுத்தில் ஒரு மச்சம் தான் இருக்கிறது என்பதை சிம்புத்தேவரிடம் காண்பித்தார்.

நடந்தது என்னவென்றால், இரும்புக்கோட்டை வீரர்கள் மருதுவை அழைத்து போக வருவதற்கு முன் அவனுக்கு ஒரு புறா மூலம் பான்டிய நாட்டிலிருந்து ஒரு செய்தி வந்தது. அந்த செய்தியில் " சப்பாணியின் கழுத்தில் ஒரு மச்சம் இருப்பதைப் பார்த்தோம். உன் கழுத்தில் அது இல்லாததால் இரும்புக்கோட்டைக் காரர்கள் உன்னை கண்டுபிடித்து விடுவார்கள். எச்சரிக்கையாக இரு" என்றிருந்தது. ஆசிரமத்துக்கருகில் இருந்த பம்பரக்காய் மரத்திலிருந்து விழுந்திருந்த பமபரக்காய்களைப் பார்த்ததும் அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது. பம்பரக்காய் உடலில் ஒட்டிக் கொள்ளிம் என்று கேள்விப்பட்டிருந்தான். ஆகவே அந்த காய்களை சிறு வட்ட்ங்களாக கிள்ளி தன்னுடைய கழுத்தில் ஒட்டிக் கொண்டான். ஒரு காயை மட்டும் ஒட்டிக்கொள்ளவே முதலில் எண்ணினான். ஆனால், பல காய்களை ஒட்டிக்கொண்டால் இரும்புக்கோட்டைக்காரகள் குழம்பி விடுவார்கள், தான் அதை வேடிக்கை பார்க்கலாம் என்று குறும்பாக ஒட்டிக் கொண்டான்.

சிம்புத்தேவர், அமைச்சர் இவர்களின் குழப்பத்தை அங்கு வந்த மந்தி போக்கியது. "தலைவரே, ஆசிரமத்தருகில் இந்த ஓலைச் சுவடி கிடைத்தத" என்று மருதுவுக்கு பாண்டிய மன்னனிடமிருந்து புறா மூலமாக வந்த ஓலைச்சுவடியை கொடுத்தது. அதைப் படித்த சிம்புத்தேவர் மருதுவிடம் " ஓ நீ பாண்டிய நாட்டு ஒற்றனோ? என்ன சாகசம் உனக்கு? எங்களுடைய இரும்புக்கோட்டையில் நுழைந்து எங்களில் ஒருவனாக மாறி உளவறிய வந்தாயோ? உன் தலையை சீவுகிறேன் இதோ" என்று தன் இடையிலிருந்த வாளை உருவினான்.

அமச்சர் குறுக்கிட்டு " தலைவரே, இவன் பாண்டிய நாட்டு ஒற்றன் என்றால் நமது சப்பாணி எங்கே? அவனை பான்டிய மன்னன் சிறை பிடித்திருந்தால் நாம் முதலில் சப்பாணியை மீட்டாக வேண்டும்" என்றார்.

மருது சிம்புத்தேவர் கால்களில் விழுந்து " தலைவரே, என்னை நீங்கள் கொன்றால் பாண்டிய மன்னன் பிண்ட மாற்று முறையை பின் பற்றுவேன் என்று சொன்னார்" என்றான்.

சிம்புத்தேவர்: ஓ அப்படியா சொன்னான் பாண்டிய மன்னன்? அப்படியென்றால் நாம் உடன் படையெடுத்துச் சென்று சப்பாணியை மீட்டு பான்டிய மன்னனுக்கு நல்ல பாடம் கற்பிக்க வேன்டும். அமைச்சரே, நமது வீரர்கள் அனைவரையும் மர்ம யோகியிடம் சென்று சக்தி தருவினி ஒளஷதத்தை பருகி போருக்கு ஆயத்தமாகுமாறு சொல்லுங்கள். நானும் ஆசிரமம் சென்று ஒ:ஷதத்தை பருகி புறப்படுகிறேன்.

அமைச்சர்: தலைவரே, இந்த பான்டிய நாட்டு ஒற்றனை என்ன செய்வது?

சிம்புத்தேவர்: அவனை ஒரு மரத்தில் கட்டி வையுங்கள். சப்பாணியை மீட்டு வந்ததும் அவனை கவனித்துக் கொள்வோம்.

இரும்புக்கோடை வீரர்கள் பான்டிய நாட்டு மீது படையெடுத்து வருகிரார்கள் என்ற செய்தி கிடைத்ததும் பாண்டிய மன்னன் தளபதி வீரகேசரியிடம் " நாமும் போருக்கு ஆயத்தம் ஆவோம்" என்றார். வீரகேசரி தயங்கியவாறு " இரும்புக்கோட்டை வீரர்களுடன் சண்டை என்றால் நமது வீரர்கள் பின் வாங்குகிறார்களே. என்ன செய்யலாம்?"

பான்டிய மன்னன்: மருது புறா மூலம் அனுப்பிய மூலிகைகலைப் பற்றிய குறிப்புகளை நமது ராஜ குருவிடம் காண்பித்து அவரைக் கொண்டு அந்த சக்தி தருவினி ஒளஷத்ததை தயாரித்து வீரர்களுக்கு கொடுப்பொம். இரும்புக்கோட்டை வீரர்களுக்கிணையாக சக்தி பெற்று சண்டையிட்டால் நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம். ஏனெனில் நமது படை இரும்புக்கோட்டை படையை விட பெரியது.

போருக்கு பாண்டிய வீரர்கள் ஆயத்தமாகும்போது எல்லா வீரர்களின் மனைவிகளும் " போகாதே போகாதே என் கணவா" என்று பாடலாயினர்.

எப்படி வீரர்களை போருக்கு தயார் படுத்துவது என்று யோசித்த வீரகேசரி அதை உபதளபதி மதியரசுவிடம் ஒப்படைத்தார். மதியரசு வீரர்களிடம் கேட்டார் "உன்னை தற்கொலை செய்வாயா?"


தொடரும்....

மதி
21-07-2010, 01:44 PM
ஹாஹா...
இதுல பிடிச்சதே.. நீங்க எழுதி இருந்த கடைசி வரி தான்... :)

பா.ராஜேஷ்
21-07-2010, 07:58 PM
ஆஹா, போட்டி தொடங்க ஆரம்பித்து விட்டதா.. இதுல "உன்னை தற்கொலை செய்யவா!?" வேறா??

அன்புரசிகன்
21-07-2010, 11:51 PM
தமிழ் படம் பார்த்தது போல இருக்கிறது. “பச்சை யெலோ பிங்கு தமிழன்டா” என்று மதியரசர் பாடாதவரைக்கும் பரவாயில்லை... :D :D :D

தொடருங்கள் மருது மைந்தரே... ச்சீ... மதுரை மைந்தரே...

மதுரை மைந்தன்
23-07-2010, 10:50 AM
இரும்புக்கோட்டை மர்ம யோகி

http://img819.imageshack.us/img819/3840/50807515.jpg (http://img819.imageshack.us/i/50807515.jpg/)

பாகம் 10

பான்டிய மன்னன் ராஜ குரு வீரப்பரை அழைத்து அவரிடம் மருது அனுப்பியிருந்த மூலிகைகளைப் பற்றிய விவரங்கள் அடங்கிய ஓலைச் சுருள்களை கொடுத்து

மன்னன்: குருவே, இந்த ஓலைச்சுருள்களில் இரும்புக்கோட்டை மர்ம யோகி தயரிக்கும் சக்தி தருவுனி ஒளஷதத்தை தயாரிக்க வேண்டிய மூலிககளைப் பற்றிய விவ்ரங்கள் இருக்கின்றன. நம் மீது படையெடுத்து வரும் இரும்புக்கோட்டை படையை வெல்வதற்கு நீங்கள் அதே ஒளஷதத்தை பல மடங்கு அதிக சக்தி தருமாறு தயாரியுங்கள். நமது வீரர்கள் அனைவரும் அதைப் பருகி போருக்கு தயாராக வேண்டும்.

ராஜ குரு ஓலைச்சுருள்களில் விவரிக்கப்பட்டிருந்த மூலிகைகளப் பற்றி ஒன்றும் தெரியாததால் கைகளைப் பிசைந்து கொண்டிருந்தார்.

மன்னன்: ஏன் தயங்குகிரீர்கள் குருவே?

ராஜ குரு: தயக்கம் ஒன்றும் இல்லை மன்னா. நான் பல வருடங்களாக மூலிகைகளைக் கொண்டு ஒளஷதங்களை தயரித்திருக்கிறேன். எனக்கு ஒளஷத சிரோண்மணி என்ற பட்டம் கூட இருக்கிறது. இந்த ஒளஷதத்தை நமது படை வீரர்களுக்கு பருகத்தர வேண்டுமானால் பெரிய அளவில் தயாரிக்க வேண்டுமே என்று யோசிக்கிறேன்.

மன்னன்: நாம் தண்டனை கொடுக்க உபயோகிக்கும் எண்ணைக் கொப்பறைகளைப் பயன் படுத்தலாமே?

சக்தி தருவினி ஒளஷதம் தயாரிப்பதிலிருந்து தப்பிக்கலாம் என நினைத்த குரு வேறு வழியின்றி " அப்படியே ஆகட்டும் மன்னா" என்று கூறிச் சென்றார்.

ஓலைச் சுருள்களில் கூறப் பட்டிருந்த மூலிகைகள் எப்படி இருக்கும் எங்கு கிடைக்கும் என்று தெரியாமல் முழித்த ராஜ குரு தனது சீடனிடம்,

ராஜ குரு: நீ நமது தோட்டத்திற்கு சென்று தூது வளை, வல்லாரை, நாக வல்லி, ஓரிதழ் தாமரை ஆகிய மூலிகைகளைக் கொண்டு வா.

சீடன்: குருவே, நான் சென்று அவைகளைக் கொண்டு வருவேன். ஆனால் அவை எப்படி இருக்கும் என்று தாங்கள் கூறினால் நலமாக இருக்கும்.

ராஜ குரு: அடே முட்டாள், தூது வளை என்பது வளைந்திருக்கும், நாக வல்லி என்பது நாகத்தைப் போல் சுருண்டிருக்கும், ஓரிதழ் தாமரை என்பது ஒரு இதழை மட்டுமே கொண்ட தாமரைப் பூ. இவை யாவும் நிறைய வேண்டும். உடன் அவைகளைக் கொண்டு வா.

சீடன் மவுனமாக தலையாட்டி விட்டு தோட்டத்திற்கு சென்றான். அவனுக்கும் அந்த மூலிகைகளைப் பற்றி ஒன்றும் தெரியாததால் அங்கு முளைத்திருந்த சில காட்டு செடிகளை வேருடன் பிடுங்கி தனது தலையில் கொஞ்சம், தோள்களில் கொஞ்சம், கழுத்தைச் சுற்றி கொஞ்சம், இடுப்பில் கொஞ்சம் என்று நகரும் மூலிகைத் தோட்டமாக ராஜ குருவின் மாளிகைக்கு திரும்பினான். வரும் வழியில் அவனிடமிருந்த செடிகளைச் சாப்பிட்டுக் கொண்டே ஆடு மாடுகளும் பின் தொடர்ந்தன. தான் கொண்டு வரும் மூலிகைகளின் சுமை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருவதைக் கண்டு பயந்தான். அவனை ஒன்றும் செய்ய விடாமல் கால் நடைகள் அவனைச் சுற்றி வந்தன. மாளிகைக் குள் நுழைந்து ராஜ குருவிடம் " குருவே, நான் மூலிகைகளைக் கொண்டு வந்திருக்கிறேன் என்று அவன் சொன்ன போது அவனிடம் சில இலை தழைகளே மீதம் இருந்தன.

ராஜ குருவுக்கு கோபம் வந்தாலும் அவன் கொண்டு வந்த மூலிகைச் செடிகளை ஆடு மாடுகள் தின்று விட்டதைப் பார்த்து அவனுக்கு பாதுகாப்பாக இரண்டு வீரர்களை கூட அனுப்பி மூலிகைகளைக் கொண்டு வரச் செய்தார்.

சீடன் கொண்டு வந்த காட்டு செடிகளின் இலைகளைக் கிள்ளி கொப்பறையில் கொதிக்கும் தண்ணீரில் போட்டார் ராஜ குரு. மூலிகைகள் கொதித்துக் கொண்டிருந்த போது சிறிது தூரம் தள்ளி அமர்ந்து கொப்பறையிலிருந்து வந்த ஆவியை உள்ளுக்கிழுத்து ஒளஷதத்தில் வாசனை போதாது என்று சீடனிடம் பெருங்காயத்தை கொப்புறைக்குள் போடச் சொன்னார். பிறகு, கொதிக்கும் ஒளஷதத்தை நாக்கில் ஊற்றி அதில் சுவை போதாது என்று கொப்பறைக்குள் தேனைக் கொட்ட சொன்னார். இப்படியாக ஒளஷதம் கொதித்து முடிந்ததும் அதை சாப்பிட்டு " ஆஹா, காரம் மணம் குணம் நிறைந்த ஒளஷதம் தயார்" என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.

தொடரும்...

மதி
23-07-2010, 11:06 AM
அடடா.. என்ன சுவையான சமையலா.. செய்யறாங்க...? பாண்டிய நாட்டு வீரர்கள் நிலை என்னவாச்சோ?? தொடருங்க மைந்தரே..!

பாலமுரளி
23-07-2010, 12:55 PM
தங்கள் வார்த்தைகள் பழங்கால பாண்டிய நாட்டை கண் முன் கொண்டுவருகிறது. தங்கள் படைப்புகள் தொடர வாழ்த்துகள்.

ஆதவா
23-07-2010, 01:22 PM
கலக்கல்... பத்துபாகத்தையும் ஒட்டா படிச்சு முட்டிச்சுட்டேன். ரொம்ப அருமையாக நகைச்சுவையாக எழுதுகிறீர்கள்!!!

தொடர்ந்து எழுதுங்கள் மதுரை அண்ணா.

அமரன்
23-07-2010, 11:18 PM
குரங்குப் புத்தியை காட்டிட்டுதே..

பாண்டி நாட்டு ராஜகுரு தயாரித்த ஔஷதம் வீரியம் கூடியதாக இருக்குமோ.. இல்லை பேதியை வாரி வழங்கும் வள்ளலாக இருக்குமோ.

தொடர்ந்து அசத்துங்க மதுரைமைந்தரே.

சிவா.ஜி
26-07-2010, 05:34 PM
அசத்தலா போகுது....ஔஷதம் இன்னும் என்னென்ன பண்ணுமோ....தொடருங்க மதுரைமைந்தரே....

மதுரை மைந்தன்
27-07-2010, 11:30 AM
இரும்புக்கோட்டை மர்ம யோகி

http://img819.imageshack.us/img819/3840/50807515.jpg (http://img819.imageshack.us/i/50807515.jpg/)

பாகம் 11

ராஜ குரு: ஒளஷதத்தை முதலில் மன்னர் தான் அருந்த வேண்டும். ஒரு கிண்ணத்தில் அதை நான் மன்னரிடம் கொடுக்கிறேன். நான் திரும்பி வரும் வரை இந்த கொப்பறையை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்.
http://img824.imageshack.us/img824/5031/belly.jpg (http://img824.imageshack.us/i/belly.jpg/)

சீடர்களிடம் இவ்வறு சொல்லிவிட்டு ராஜ குரு மன்னரிடம் சென்று கிண்னத்தில் இருக்கும் ஒளஷதத்தை கொடுக்கிறார்.

ராஜ குரு: மன்னா, நீங்கள் கேட்ட ஒளஷதம் இதோ.

http://img295.imageshack.us/img295/6610/paandiyan.jpg (http://img295.imageshack.us/i/paandiyan.jpg/)
மன்னர் ஆவலுடன் அதை அருந்த முற்படும் முன் " அருந்தாதீர்கள், மன்னா" என்று கத்திக் கொண்டு காவலாளிகளை விலக்கிக் கொண்டு ஒரு சீடன் ஓடி வருகிறான். அவன் சொன்னதைக் கேட்டு கோபமடைந்த ராஜ குரு

ராஜ குரு: அற்ப பதரே, ஏன் இவ்வாறு தடுக்கிறாய்? இது ராஜக் குற்றம் என்று உனக்கு தெரியாதா?

சீடன்: குருவே, உங்கள் சொல்லை மீறி ஆவலில் நான் இந்த ஒளஷதத்தை அருந்தி விட்டேன்.

ராஜ குரு: என்ன என் சொல்லை மீறினாயா? போகட்டும். ஒளஷதத்தை அருந்தி உனக்கு பலம் வந்திருக்குமே?

சீடன்: குருவே எனக்கு பலம் வரவில்லை, மலம் தான் வந்தது.

மன்னன்: என்னது? குருவே இவன் சொல்வது உண்மையென்றால் உங்களைத் தண்டிக்க வேன்டியிருக்கும்,

ராஜ குரு: மன்னியுங்கள் மன்னா, ஒளஷதத்தில் வாசனை குறைவாக இருக்கிறது என்று சிறிது பெருங்காயத்தை சேர்க்க சொன்னேன். இந்த மூடர்கள் பெருங்காயத்தை அளவிற்கு அதிகமாக சேர்த்து விட்டார்கள். நான் சென்று வேறு ஒரு ஒளஷதத்தை தயாரித்துக் கொண்டு வருகிறேன்.

ராஜ குரு தானே தோட்டத்திற்கு சென்று வேறு சில மூலிகைகளைக் கொண்டு ஒளஷதத்தை தயாரிக்கிறார். இந்த முறை மன்னன் தான் முதலில் அருந்தாமல் ஒரு காவலாளியை அருந்தச் சொல்கிறான். பின் அவனிடம் பக்கத்து மரத்தை பிடுங்க கட்டளையிட அந்த காவலாளி மரத்தை வேறோடு பிடுங்கி மன்னனின் கை தட்டலைப் பெறுகிறான். மன்னன் தனது படை வீரர்களை வரிசையாக வந்து ஒளஷதத்தை அருந்தி போருக்கு தயாராக சொல்கிறான்.

இரும்புக்கோட்டையில் மரத்தில் கட்டப்பட்டிருந்த மருது அந்த மரத்தின் கிளையில் அம்ர்ந்திருந்த மந்தியிடம்

மருது: துரோகி, உன்னை நண்பன் என்று நினைத்து உன்னுடன் மரத்துக்கு மரம் தாவி விளையாடினேன். நீ என்னைக் காட்டிக் கொடுத்து விட்டாய்.

மந்தி: நான் அவ்வறு செய்யாவிட்டால் சிம்புத்தேவர் உன்னிடம் சப்பாணியின் இருப்பிடம் கேட்டு உன்னை சித்திரவதை செய்திருப்பார். நீயோ சப்பாணியைப் பற்றி மூச்சு விடமாட்டேன் என்று பான்டிய மன்னனுக்கு வாக்கு கொடுத்திருக்கிறாய்.

மருது: ஆனால் நீ செய்த காரியத்தால் இரும்புக்கோட்டை பான்டிய நாட்டு மீது படையெடித்துச் செல்லவிருக்கிறது. பாண்டிய வீரர்களை இரும்புக்கோட்டை வீரர்கள் பந்தாடிவிடுவார்கள்.

மந்தி: அதைப் பற்றி நீ கவலைப் படாதே. நான் ஒரு திட்டம் வைத்திருக்கிறேன். உன் கட்டுக்களை நான் அவிழ்த்து விடுகிறேன். நாம் இருவரும் மரத்துக்கு மரம் தாவிச் செல்வோம். இரும்புக்கோட்டைக் காரர்கள் போருக்கு ஆயத்தமாகிக் கொண்டிருப்பதால் நம்மை கவனிக்க மாட்டார்கள்.

மந்தி மரத்தை விட்டு கீழிறங்கி மருதுவின் கட்டுக்களை அவிழ்த்து விட்டு தன்னுடன் மரத்தில் ஏற்ச் சொன்னது. நாம் எங்கு செல்கிறோம் என்று கேட்ட மருதுவை பேசாமல் வா என்று கூறி மரத்துக்கு மரம் தாவி மர்ம யோகியின் ஆசிரமத்தருகில் சென்றது. அங்கு ஒரு மரத்தின் கீழே ஒரு பெரிய கொப்பறையில் மர்ம யோகி சக்தி தருவினி ஒளஷதத்தை தயாரித்துக் கொண்டிருந்தார். மருதுவை அந்த மரத்தில் ஒளிந்திருக்கச் சொல்லி விட்டு மந்தி பக்கத்து காட்டில் சென்று ஒரு மூலிகைச் செடியை கொண்டு வந்தது.

மருது: இந்த மூலைகையை வைத்து என்ன செய்யப் போகிறாய்?

மந்தி: பேசாமல் பார்த்துக் கொண்டிரு. மர்ம யோகிக்கு தெரியாமல் கொதிக்கும் ஒளஷதத்தில் இந்த மூலிகையை போடப் போகிறேன்.

மருது: ஓ அப்படியா, இந்த மூலிகை சக்தி தருவினியை சக்தி தளரினியாக்கப் போகிறதா?

மந்தி: இந்த மூலிகை செய்யப் போகும் வேடிக்கையை நீ பார்க்க போகிறாய்.

மந்தியும் மருதுவும் மரத்தில் இருப்பதை அறிந்தும் மந்தி ஒளஷதத்தில் கலக்கப் போகும் மூலிகையைப் பற்றித் தெரிந்திருந்தும் மர்மமாக புன்னகைத்தார் மர்ம யோகி.

தொடரும்...

மதி
27-07-2010, 11:36 AM
அடடா.. மந்திக்கு ஏன் இந்த புத்தி...
மர்ம சித்தர் அடுத்து என்ன மாயம் செய்யப்போகிறார்..??? ஆவலுடன் அடுத்த பாகம் நோக்கி

muthuvel
27-07-2010, 12:16 PM
அருமை

மதுரை மைந்தன்
03-08-2010, 12:02 PM
இரும்புக்கோட்டை மர்ம யோகி

http://img819.imageshack.us/img819/3840/50807515.jpg (http://img819.imageshack.us/i/50807515.jpg/)


பாகம் 12

ராஜ குரு தயாரித்த ஒளஷததை வீரர்கள் அனைவரும் அருந்தி போருக்கு ஆயத்தமாக உத்தரவிட்ட மன்னர் போர் குறித்து தனது தளபதிகளுடன் மந்திர ஆலோசனை நடத்துகிறார்.

மன்னர்: தளபதி வீரகேசரி அவர்களே போரில் நாம் அமைக்கவிருக்கும் வியூகங்கள் என்ன?

வீரகேசரி: மன்னா, வியூகங்களைப் பற்றி எனது யூகங்கள் என்னவென்றால், நாம் பூ மாலை வியூகம் அமைத்தால் அது இரும்புக்கோட்டை வீர்ர்களின் கையில் சிக்கி குரங்கு கையில் பூ மாலை என்றாகிவிடும். நாம் குவிந்த தாமரை (பத்ம கமலம்) வியூகம் அமைத்தால் அவர்கள் ஆதவன்களாகி கமலத்தை விரியச் செய்து வாட விட்டுவிடிவார்கள். நாம் வில்லைப் போல் வியூகம் அமைத்தால் அம்பு விடுவது என்னவோ அவர்கள் தான்.

மன்னர்: தளபதியாரே, உமது மன நிலை எனக்கு புரிகிறது. சரி, நாம் வியூகம் எதுவும் அமைக்காமல் அணி அணியாகச் சென்று போரிடுவோம். முதலில் காலாட் படையை அனுப்புவோம். அடுத்து குதிரைப் படையை அனுப்புவோம்.

வீரகேசரி: மன்னியுங்கள் மன்னா, நம்மிடம் காலாட் படை மட்டுமே உள்ளது. முன்பொரு முறை இரும்புக்கோட்டைக்குள் நமது படை நுழைந்த போது குதிரைப்படையிலிருந்த குதிரைகளை அவர்கள் கைப்பற்றி விட்டதால் இந்த நிலை.

மன்னர்: சரி, நாம் நமது காலாட் படையை முதலில் அனுப்புவோம்.

வீரகேசரி: மன்னியுங்கள் மன்னா, நமது காலாட் படை வீரர்கள் இரும்புக்கோட்டை வீரர்களை நினைத்து பயத்தில் கை கால்கள் வேகமாக உதற தயாராக மறுக்கிறார்கள். அவர்கள் கால்கள் ஆடும் வேகத்தில் கத்திகளைச் சுழற்றினால் அவர்கள் தங்களையே காயப்படுத்திக் கொள்வார்கள் என் அஞ்சுகிறேன்.

ராஜ குரு: என்னுடைய ஒளஷதத்தை அருந்திய பின் அவர்களின் நடுக்கங்கள் நின்று விடும். மன்னா, முதல் அணியில் நிற்கப் போகும் காலாட் படையினருக்கு என்னிடம் ஒரு விசேட ஒளஷதம் உள்ளது. அதை சாப்பிட்ட பின் அவர்கள் உண்ர்ச்சியற்ற ஜடமாக ஆகிவிடுவார்கள். இரும்புக்கோட்டை வீரர்கள் அவர்களை ஒன்றும் செய்ய முடியாது. ஏனென்றால் அவர்களை எதிர்க்காத போராளிகளுடன் போரிடுவது யுத்த தர்மம் ஆகாது.

மன்னர்: எங்கே போயிற்று பாண்டிய நாட்டு வீரம்? எனது பராக்கிரமத்தால் உலகையே வெல்வேன் என்றிருந்தேன். என்ன செய்வது?

காவலன் ஒருவன் மன்னனை வணங்கி " மன்னா தங்களைக் காண ஒரு புலவர் வந்திருக்கிறார்."

மன்னர்: புலவர் எதற்காக இந்த நேரம் கெட்ட நேரத்தில் வந்திருக்கிறார்.

காவலன்: போருக்கு தயாராகும் உங்களைப் புகழ்ந்து பாடி பரிசு வாங்க வந்திருக்கிறார்.

மன்னர்: சரி, வரச்சொல். அவருடைய பாட்டாவது எனக்கு உற்சாகத்தை தரட்டும்.

புலவர்: வணக்கம் மன்னா. போருக்கு கிளம்பும் உங்களை புகழ்ந்து பாட வந்துள்ளேன். இதோ அந்த பாடல்

பார் மன்னா உன்னை புகழ்ந்து பாட*
வந்திருக்கும் என்னை பார் மன்னா

போர் மன்னா நீ புரியப் போகும்
பார் புகழப் போகும் போர் மன்னா

உனது பராக்கிரமத்தால் இன்று இரும்புக்கோட்டை
நாளை ஆகப்போகிறது துரும்புக்கோட்டை

சோழ நாடு சோறுடைத்து என்பர்
பாண்டிய நாடு இரும்புடைத்து என்பேன்

அகிலத்தை வென்றிடு உனது பொற்பாதத்தால்
அளித்திடு பொற்கிழி எனக்கு பொற்கரத்தால்

மன்னர்: புலவரே, உமது பாடல் எமக்கு உற்சாகத்தை தருகிறது. யாரங்கே, பொற்கிழி எடுத்து வாருங்கள்.

ராஜ குரு: மன்னா, சற்று பொறுங்கள். புலவரே, இரும்புக்கோட்டை பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து வருவது உமக்கு எப்படி தெரியும்?

புலவர்: நான் சில மணி நேரங்களுக்கு முன்பாக இரும்புக்கோட்டை அருகே வந்து கொண்டிருந்த போது ஒரு குதிரை வீரன் " இரும்புக்கோட்டை படை வருகிறது" என்று கத்திக் கொண்டு பாண்டிய நாட்டை நோக்கி சென்று கொண்டிருந்ததை பார்த்துவிட்டு தான் நான் இங்கு வந்தேன்.

" இரும்புக்கோட்டை படை வருகிறது" என்று கத்திக் கொண்டு தனது குதிரையில் வந்த மருது, குதிரை பாண்டிய நாட்டுக்கு வர மறுத்து 10 காத தூரம் முன் சென்றால் 12 காத தூரம் பின் நோக்கி சென்றததைப் பார்த்து சலிப்புற்றான்.

http://img401.imageshack.us/img401/9383/66950185.png (http://img401.imageshack.us/i/66950185.png/)

மருதுவும் அவன் குதிரையும்

தொடரும்

அன்புரசிகன்
03-08-2010, 09:56 PM
புதிய குருசிஷ்யனில் அவரை கால் என்று வித்தியாகமாக அழைப்பது போல் வியூகம் அமைக்காது விடுவது புதிய வியூகம் என்றிருக்கும் பாண்டிய படை 2வது விஷேட ஔஷதத்தினாலாவது விடிவு பிறக்குமா... அந்த குதிரைக்கு பக்கத்தில் இருப்பது மருதுவா இல்ல நம்ம மதியாரா???:D

தொடருங்கள்.

மதி
04-08-2010, 02:58 AM
நன்றாகப்போகுது கதை.. தொடருங்க..

ரசிகரே.. நான் இவ்ளோ பர்சனாலிட்டியெல்லாம் கெடயாதுங்கோ!

பா.ராஜேஷ்
04-08-2010, 04:50 AM
கடைசியாக விட்ட மூன்று பாகங்களையும் இன்று படித்தேன்... மிக அருமை... பாராட்டுக்கள்... தொடர்ந்து எழுதுங்கள் மதுரையாரே ...

ஆதவா
04-08-2010, 12:53 PM
அடடே... ரொம்ப சிறப்பா போகுது.. மர்மயோகியா ராஜகுருவா யாருன்னு பார்த்திடலாம்!!
தொடருங்கள்

மதுரை மைந்தன்
07-08-2010, 12:20 PM
பாகம் 13

பாண்டிய நாட்டு வீரர்கள் ராஜகுரு தயாரித்திருந்த ஒளஷதத்தை அருந்தி போருக்கு ஆயத்தமானார்கள்.

அதே மாதிரி இரும்புக்கோட்டை வீரர்களும் மர்ம யோகியின் சக்தி தருவினி அருந்தி போருக்கு ஆயத்தமானார்கள். சிம்புத்தேவர் போருக்கு செல்லுமுன் இரும்பேசுவரர் கோயிலுக்கு சென்று வழி பட்டு கிள்ம்பினார்.

இரும்புக்கோட்டைக்கும் பாண்டிய நாட்டு எல்லைக்கும் இடையில் இரு படைகளும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டன.

சிம்புத்தேவர் தனது வாளை உயர்த்தி "போர்" என்று முழக்கமிட்டவுடன் இரும்புக்கோட்டை படைவீரர்கள் பான்டிய நாட்டு படையை நோக்கி முன்னேறினர். ஆனால் அவர்கள் தங்களுடைய முன்னேற்றத்தை நிறுத்த வேண்டியதாயிற்று. ஏனென்றால் பாண்டிய நாட்டு முன்னணி படை வீரர்கள் அசையாது சிலை போல் நின்றனர். ராஜ குரு அவர்களுக்களித்த ஒளஷதம் தன் வேலையை செய்ய ஆரம்பித்திருந்தது.

இரும்புக்கோட்டை தளபதி: என்ன ஆச்சரியமாக இருக்கிறது. இவர்கள் மனிதர்களா அல்லது எந்திரர்களா?
இவ்வறு கேட்டு விட்டு தளபதி சிரிக்க ஆரம்பித்தார். அவருடன் சேர்ந்து மற்ற இரும்புக்கோட்டை வீரர்களும் சிம்புத்தேவர் உட்பட அனைவரும் பலமாக சிரிக்கலானார்கள். எதிர் புறத்தில் பாண்டிய நாட்டு வீரர்களும் மன்னர், தளப்தி வீரகேசரி அனைவரும் சிரிக்கலானார்கள். அவர்களின் சிரிப்பால் அந்த பிரதேசமே அதிர்ந்த்தது.

http://img237.imageshack.us/img237/1631/porxd.jpg (http://img237.imageshack.us/i/porxd.jpg/)

அங்கு வந்த மந்தியும் அவர்களுடன் சேர்ந்து சிரித்தது.

http://img706.imageshack.us/img706/6864/excledcomogliomarbatchi.jpg (http://img706.imageshack.us/i/excledcomogliomarbatchi.jpg/)

வெகு நேரம் சிரித்து களைத்து போயினர் இரு படையினரும். அப்போது, பாண்டிய நாட்டு தளபதி வீரகேசரி மன்னரிடம் " மன்னா, அதோ பாருங்கள். இரும்புக்கோட்டை சமாதானம் பேச வெள்ளைக் கொடி காட்டுகிறார்கள்". அவர் பார்த்தது வெள்ளைக் கொடியல்ல வெள்ளை அங்கி அணிந்து வெள்ளைத் தாடியுடன் மர்ம யோகி இரு படையினருக்கும் நடுவில் வந்து நின்றார்.

மர்ம யோகி: வணக்கம், பாண்டிய மன்னா. நான் இங்கு வந்ததின் காரணம் இரு நாட்டுக்கும் நட்பை ஏற்படுத்தி போரில் அனாவசியமாக தங்களது நேரத்தையும் செல்வத்தையும் வீணடிக்க கூடாது என்று வேண்டத்தான். முதலில், அனைத்து படை வீரர்களும் நீயும் சிம்புத்தேவர் உட்பட அனைவரும் ஏன் சிரித்தீர்கள் என்பதை விளக்குகிறேன். நான் மூலைகைகளைப் பற்றி நன்கறிந்தவன். இரும்புக்கோட்டை பாண்டிய நாட்டின் மீது படை எடுப்பதை எப்படி தடுப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தேன். அப்போது எங்கள் நாட்டின் சக்தி வாய்ந்த மந்தி என்ற குரங்கு சக்தி தருவினி ஒளஷதம் கொதித்துக் கொண்டிருந்த போது அதை கெடுக்க ஒரு மூலிகையை அதனுள் போட்டது. அது போட்ட மூலைகையிலிருந்து ஒரு வித கந்தக வாயு உண்டாகி அனைவரையும் அது சிரிக்க வைத்தது. ( The gas is Nitrous Oxide also known as laughing gas). பாண்டிய நாட்டு ராஜ குருவும் அதே மூலிகையை அவருடைய ஒளஷதத்தில் கலந்தது நல்லதுக்குத் தான்.

பாண்டிய நாடு பல சிறப்புக்களைப் பெற்றிருக்கிறது. மாடு கட்டி போரடித்தால் மாளாது என்று ஆனை கட்டி போரடிக்கும் தென் மதுரை, சங்கம் வைத்து தமிழ் வளர்க்கும் மதுரை, பல வளங்களுக்கு பெயர் போன தென் பான்டி சீமை என்று சொல்லிக் கொண்டே போகலாம். நீ உட்பட பல பாண்டிய மன்னர்கள் வீரத்திலும், கொடையிலும் பக்தியிலும் சிறந்து விளங்குகிறீர்கள். ஆகவே, எனது வேண்டுகோள் என்னவென்றால், நீ உன் நாட்டு எல்லைகளை விரிது படுத்துவதை விடுத்து உனது மனதின் எல்லைகளை விரிது படுத்தி இந்த போரை நிறுத்த வேண்டும். நான் அளிக்கும் ஒளஷதங்கள் இரும்புக்கோட்டை வீரர்களிடம் ஒரு தனி சக்தியை அளிக்கின்றது. அதற்கு காரணம் அவர்கள் கடவுள் பக்தியுடன் ஒழுக்க சீலர்களாக இருப்பதுதான். நீயும் ஒரு சிறந்த பக்தி மான் என்பதால் உனது கூடல்மா நகரில் கோயில்கள் பல எழுப்பி அதை ஒரு கோயில் நகரமாக மாற்று. உனக்கும் பாண்டிய நாட்டு மக்களுக்கும் எல்ல நன்மைகளும் உண்டாகட்டும்.

பாண்டிய மன்னர்: மர்ம யோகி அவர்களே, உங்கள் பேச்சு எனது அறிவுக் கண்ணைத் திறந்தது. இனி எந்த நாட்டுடனும் போரிடாமல் எங்கள் நாட்டு வளங்களைப் பெருக்குவதில் ஈடுபடுவோம். இரும்புக்கோட்டை பாண்டிய நாட்டின் ஒரு அங்கமாக மாறினால் நான் மகிழ்ச்சி அடைவேன். அவர்கள் எங்களுடைய எல்ல வளங்களையும் பகிர்ந்து கொள்ளலாம். மற்ற பாளையங்களைப் போல் இல்லாமல் இரும்புக்கோட்டை பாண்டிய நாட்டிற்கு கப்பம் செலுத்த வேண்டாம்.

சிம்புத்தேவர்: பாண்டிய மன்னா, உங்களுடைய பேச்சு எங்களுக்கு காதில் தேன் வார்த்தது போலிருக்கிறது. பாண்டிய நாட்டு மக்களுடன் எங்களுக்கு விரோதம் எதுவும் கிடையாது. இனி அவர்கள் இரும்புக்கோட்டைக்குள் தங்கு தடையின்றி வந்து போக ஏதுவாக கோட்டைக் கதவுகள் எப்போதும் திற்ந்திருக்கும். நாங்கள் போர் தொடுத்து எங்கள் நாட்டு ஒற்றன் சப்பாணியை விடுவிக்கதான்.

பாண்டிய மன்னர்: நாங்கள் உடனே சப்பாணியை விடுவிக்கிறோம். அதே மாதிரி நீங்களும் எங்களுடைய ஒற்றன் மருதுவை விடுவிக்க வேண்டும்.

அப்போது " இரும்புக்கோட்டை படை வருகிறது" என்று கத்திக் கொண்டே மருது தனது குதிரையில் அங்கு வருகிறான். சமாதானமாகி விட்ட இரு படையினரும் அதைக்கேட்டு சிரிக்கிறார்கள்.

பாண்டிய மன்னனிடம் பாடி பரிசு பெற்ற புலவர் அங்கு வருகிறார். அவர் சிம்புத்தேவரிடம் சென்று, " தலைவரே, நான் உங்களைப் புகழ்ந்து ஒரு பாடல் இயற்றியிருக்கிறேன் கேளுங்கள்". என்று பாடலை கூறுகிறார்.

" இரும்பிலே ஒரு இதயம் முளைத்ததோ
முதல் முறை ஒரு நட்பு மலர்ந்ததோ
விண்மீன்கள் உன்னோடு
உன் பொற்காசுகள் என்னோடு"

( இந்த புலவர் தான் பல நூற்றாண்டுகளுக்கு பிறகு தமிழ் நாட்டில் பாடலாசிரியர் வைரமுத்துவாக பிறந்து "எந்திரன்" படத்திற்காக* இதே பாடலை எழுதினார் என்று சரித்திர ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்).

சிம்புத்தேவர்: புலவரே உமது பாடல் என்னை மகிழ்விக்கின்றது. எனது பரிசாக இந்த தங்க சங்கிலியைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

அதே நேரத்தில் சப்பாணி அங்கு வர சப்பாணியும் மருதுவும் ஒருவரை ஒருவர் கட்டி தழுவிக் கொள்கின்றனர். சப்பாணியை அழைத்துக் கொண்டு இரும்புக்கோட்டை படையும் மருதுவை அழைத்துக் கொண்டு பான்டிய நாட்டு படையும் தங்கள் நாடு நோக்கி செல்கின்றனர். இரும்புக்கோட்டை படையுடன் செல்வது சப்பாணி என்றா சொன்னோம். இல்லை, அது மருது. ஒரே மாதிரி இருக்கும் இருவரும் திரும்பி பார்த்து கண்ணடித்துக் கொள்கின்றனர்.

நிறைவு பெற்றது.

அன்புரசிகன்
07-08-2010, 02:42 PM
இந்த சந்தோச தருணத்தில் ரகசியாயினியின் குத்தாட்டம் ஒன்று போட்டிருக்கலாமே... :D :D :D

நல்லதொரு நகைச்சுவைத்தொடர் தந்ததற்கும் இடையிடையே மூலிகைகளின் சிறப்பினை தந்த மைந்தருக்கு வாழ்த்துக்கள். தொடருங்கள் உங்கள் பயணத்தை...

பா.ராஜேஷ்
07-08-2010, 04:20 PM
நல்லதொரு முடிவு.. பாராட்டுக்கள் மதுரை மைந்தரே.. அன்பு ரசிகன் சொன்ன மாதிரி ஒரு குத்தாட்டம் போட்டிருந்தால் நன்றாகவிருந்திருக்கும்..

மதி
08-08-2010, 01:57 PM
சந்தடி சாக்கில் புதுப்பட பாடலையும் விட்டு வைக்கவில்ல.. நல்லா இருந்துச்சு மைந்தரே...

பாரதி
09-08-2010, 06:54 AM
இடைவெளிக்கு பின்னர் இன்று முழுமையாக இரசித்துப்படித்தேன். நன்றாக இருந்தது. இருப்பினும் முடிவு மட்டும்தான் கொஞ்சம் ஏமாற்றத்தைத் தந்தது.
தொடர்ந்து கதைகளில் அசத்த இனிய வாழ்த்து நண்பரே.

மதுரை மைந்தன்
09-08-2010, 09:11 PM
இந்த கதையை பாராட்டி பின்னுட்டங்கள் அளித்து என்னை ஊக்குவித்த அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்