PDA

View Full Version : பாவேந்தர் உவமை

குணமதி
02-07-2010, 05:00 PM
பாவேந்தர் உவமை

நம் ஒவ்வொருவருக்கும் நண்பர்கள் உறவினர்களின் வீட்டு நிகழ்ச்சிகள், நல்லது கெட்டதிற்கென பல்வேறு இடங்களுக்கு – வீடுகள், மண்டபங்கள் போன்ற இடங்களுக்கு - அடிக்கடி போக வேண்டிய தேவை உள்ளது.

நிகழ்ச்சி ந்டைபெறும் இல்லத்தில் அல்லது மண்டபத்தில் எல்லா இடங்களிலும் செருப்புக் காலுடன் செல்ல முடியாத நிலை உள்ளது.
அங்கே, வாயிற்புறத்தில் நிறைய காலணிகள் கழற்றி விடப்பட்டிருக்கும். நாமும் அங்கேயே நம் காற்செருப்பை வட்டுச் செல்வோம்.

யாராவது நம் செருப்பைக் காலால் தள்ளிவிட, அது கழிவு நீர்ப்பகுதியில் சென்று விழுந்திருந்தது என்றால் செருப்பைத் தள்ளியவர்பால் நாம் சினங் கொள்கிறோம்.

கால் செருப்பைத் தள்ளிவிட்டதற்கே சினம் கொள்ளும் நாம், நம்மால் போற்றிப் பாராட்டப்படும் தீந்தமிழ்ச் செம்மொழியைச் சிலர் திருக்கோயிலில் இருந்து நீக்கி வைத்தால் பொறுத்துக் கொள்ளமுடியுமா? என்ற கருத்தில் பாடிய பாவேந்தர் பாடல் வரிகள் இவை :

காற்செருப்பைப் பிறனொருவன் கழிவிடத்தில் தள்ளிடினும்
பொறாத உள்ளம்
மேற்படுத்தும் எவற்றினுக்கும் மேற்பட்ட தன்மொழியைத்
தமிழைத் தீயோர்
போற்றுவதற் குரியதொரு பொதுவினின்று நீக்கிவைத்தால்
பொறுப்ப துண்டோ?

பாவேந்தர் தம் கருத்தை வலியுறுத்த ஆளும் உவமை மிக அழுத்தமாகவும் ஆழமாகவும் 'சுள்' என உறைத்து உணர்வெழுச்சி ஊட்டுவதாகவும் உள்ளதை அறியமுடிகிறது.

nambi
02-07-2010, 05:39 PM
அருமையான வரிகள்.....பாவேந்தர் காட்டிய உவமை அருமை...தமிழ் அதனினும் ..........? .....இன்னும் இந்த நிலைமை நீடிப்பதை கண்டும் காணாமல் தான் இருந்து வருகிறோம்....பகிர்வுக்கு நன்றி!

குணமதி
03-07-2010, 02:37 AM
அருமையான வரிகள்.....பாவேந்தர் காட்டிய உவமை அருமை...தமிழ் அதனினும் ..........? .....இன்னும் இந்த நிலைமை நீடிப்பதை கண்டும் காணாமல் தான் இருந்து வருகிறோம்....பகிர்வுக்கு நன்றி!

நன்றி நம்பி.

அமரன்
03-07-2010, 09:05 AM
பாவேந்தன் பாடலை எடுத்தாண்டமைக்கு நன்றி அய்யா.

நடைமுறையுடன் ஒப்புமைத்து பாவேந்தன் பாடி இருக்கார்.

என்னைப் பொறுத்தமட்டில் கோவிலில் இருக்கும் சாமியை விட, தலையில் இருக்கும் கிரீடத்தை விடக் காலில் இருக்கும் செருப்பு உயர்ந்தது.

குணமதி
03-07-2010, 12:52 PM

நன்றி அமரன்.

த.ஜார்ஜ்
03-07-2010, 04:59 PM
இப்படி நீங்கள் எடுத்து சொல்லும்போதுதான் மனசுக்குள்ள ஆழமா பதியிது.நமக்கு.... அதாவது எனக்கு படிப்பறிவு குறைவு தாயி.அதனால இன்னும் நிறைய எடுத்துக் சொல்லுங்க.

த.ஜார்ஜ்
03-07-2010, 05:01 PM
அந்த 'தாயி' -சும்மா உங்க பேருக்காக.

பா.ராஜேஷ்
03-07-2010, 06:06 PM
உண்மைதான்... மிக நல்ல பகிர்வு... நன்றி குணமதி..

குணமதி
04-07-2010, 03:33 AM

மிக்க நன்றி.