PDA

View Full Version : எனையொத்த சாயலில் கடவுள்...

சசிதரன்
30-06-2010, 07:44 AM
கவனிப்பாரற்றுக் கிடக்கும் கோவிலின்
உள்ளே செல்வதற்கான பாதையெங்கும்
முட்புதர்களால் சூழ்ந்திருக்கிறது.
சமீபத்தில் யாரும் வந்துபோனதற்குத்
தடமேதும் இருக்கவில்லை.

நிறைவேற்ற ஏதும் பிரார்த்தனைகளின்றி
வெறித்தபடி இருக்கிறார் கடவுள்.
சுவரெங்கும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது
முன்னொரு காலத்தின் பிரார்த்தனைகள்..

புறக்கணிக்கப்பட்ட கோவிலினுள்
பசியோடிருக்கும் கடவுளை நோக்கி..
உதட்டில் புன்னகையோடும்
கையில் ஆப்பிளோடும்
நடக்கத் தொடங்குகிறது சாத்தான்.

ஆதவா
30-06-2010, 08:13 AM
எத்தனையோ நாட்கள் எத்தனையோ மனிதர்கள் கவனிப்பாரற்று போயிருப்பதுண்டு, கடவுள்??

கவனிப்பாரற்ற கடவுள்

ஒரு நல்ல வரி இது சசி, கடவுள் பிரார்த்தனைகளின்றி முட்புதர் கோவிலியே வெறித்துக் கிடந்தால், அது கடவுளென எண்ணப்படுமா? கடவுள் கூடவா நிலத்தை ஆக்கிரமித்து ஓரிடத்திலேயே அமர்ந்திருப்பது? முன்னொரு காலத்தின் பிரார்த்தனைகள் என்பது அது நிறைவேறாமல் கிடப்பது இல்லையா? ஆக புறக்கணிக்கப்படுவதற்கான காரணம் விளங்கிவிட்டது.

சிலசமயம் வேலையில்லாதவனைக் கூட கடவுள் என்று சொல்லிவிடலாம், பிரார்த்தனைகளைக் கடமைகளாக எண்ணினால், வேலையில்லாத கடவுளர்களை நோக்கி சாத்தான்கள் நடப்பதில் வியப்பில்லை. கவிதை படிக்கையில் இந்து மற்றும் கிறித்தவ மத இறைவன்களே மாறி மாறி வருகிறார்கள், அதற்கு இரு காரணங்கள், ஒன்று : நான் மதவிகாரங்களை விட்டு விலகாமலிருப்பது, இரண்டாவது, கவிதையைப் படிக்கும்பொழுது இந்து கோவிலுக்குள் ஆப்பிள் சாத்தான் (ஆப்பிள்+சாத்தான் என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது கிறித்தவ மதம்தான்.)

அதுசரி, இது கடவுளைப் பற்றிய கவிதையல்ல என்னைப் பொறுத்தவரையிலும்.....

உங்கள் கவிதைகளை ஒரு நல்ல இலக்கிய சிற்றிதழ்களுக்கு எழுதி அனுப்புங்கள்.

அன்புடன்
ஆதவா.

சிவா.ஜி
30-06-2010, 09:36 AM
ஆதவா சொன்னதைப்போல...வேலையற்றவனைக் கடவுளின் இடத்தில் வைத்துப் பார்த்தால்...கவிதை வரிகள் மிகப் பொருத்தமாய் இருக்கிறது.

ஆப்பிளோடு நெருங்கும் சாத்தானை அண்டவிடாமலிருக்க வேண்டுமே அந்த பட்டினிக் கடவுள்.

வாழ்த்துக்கள் சசி.

பா.ராஜேஷ்
30-06-2010, 06:43 PM
வேலையற்றவன் அந்த கோவிலின் கடவுளை தன்னுடன் ஒப்பிடுகின்றானா.. அப்படியானால் சாத்தான் நெருங்குவது கடவுளை அல்ல, அவனைத்தான்..
அந்த கடவுளே அவனை காப்பாற்றட்டும்..

சசிதரன்
01-07-2010, 06:08 AM

உங்கள் அர்த்தம் பொதிந்த விமர்சனத்திற்கு நன்றி ஆதவா. உண்மையில் உங்கள் விமர்சனம் வெகுவாக கவர்ந்தது. உங்கள் பார்வை கோணத்தில் சில என் கவிதைகளோடு ஒப்பவில்லை எனினும் உங்கள் பார்வை ஒருவித மகிழ்ச்சியை தருகிறது.

//அதுசரி, இது கடவுளைப் பற்றிய கவிதையல்ல என்னைப் பொறுத்தவரையிலும்.....// :)

சசிதரன்
01-07-2010, 06:09 AM
ஆதவா சொன்னதைப்போல...வேலையற்றவனைக் கடவுளின் இடத்தில் வைத்துப் பார்த்தால்...கவிதை வரிகள் மிகப் பொருத்தமாய் இருக்கிறது.

ஆப்பிளோடு நெருங்கும் சாத்தானை அண்டவிடாமலிருக்க வேண்டுமே அந்த பட்டினிக் கடவுள்.

வாழ்த்துக்கள் சசி.

நன்றி சிவா அண்ணா...:)

சசிதரன்
01-07-2010, 06:10 AM
வேலையற்றவன் அந்த கோவிலின் கடவுளை தன்னுடன் ஒப்பிடுகின்றானா.. அப்படியானால் சாத்தான் நெருங்குவது கடவுளை அல்ல, அவனைத்தான்..
அந்த கடவுளே அவனை காப்பாற்றட்டும்..

நன்றி ராஜேஷ்...:)

அமரன்
03-07-2010, 12:57 PM
நீ
சும்மாதான் பார்த்தாய்.
ஆனால்
பலதை கிளறிச் சென்றாய்
உன்னை அறியாமலே..

அப்படித்தான் உள்ளது
கவிதையும்
கவிதையைத் தொடர்ந்த பின் ஓட்டங்களும்.

எது கடவுள்
என்ன தொழில் கடவுளுக்கு..

இந்த இரண்டின் தேடலுக்குள் கவிதையின் கரு சிக்கும்.

என்னைக்கேட்டால்
பாழடைந்த எதற்குள்ளும்
பல இரகசியங்கள்
புதைந்து கிடக்கும் என்பேன்.

அவ்வளவு ஏனுங்க
பாழடைந்தவற்றின் பயன்களை நினைச்சுப் பாருங்க.

கோவில் என்றால் பக்தன் இருக்கனும். ஆனால்
பக்தன் என்றால் கோவில் போகனும் என்பதில்லை.

சரிதானுங்களே,

பாராட்டுகள் சசி.

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
03-07-2010, 09:01 PM
கவிதையின் ஆதரவு கடவுளுக்கா? சாத்தானுக்கா? சற்று நாத்தீகம் கலந்த சாயலிடிகிறது இந்தக் கவிதை. எதுவாயினும் வார்த்தைகள் கனக்கச்சிதம் மற்றம் உயர்ந்த சொல்லாடல்கள். பாராட்டுக்கள்

சசிதரன்
07-07-2010, 01:41 PM
நன்றி அமரன்...:)

நன்றி எஸ்.எம். சுனைத் ஹஸனீ...:) உண்மையில் கவிதை நாத்திகம் ஆத்திகம் பற்றி இல்லை நண்பரே... ஆதவாவின் கடைசி வரிகளை கவனித்தீர்களா...:)