PDA

View Full Version : யாசித்து பெறாத நாணயம்...



சசிதரன்
30-06-2010, 07:40 AM
பச்சை விளக்கெரிய
பதினைந்து நொடிகளிருக்கும்போது
இடுப்பிலிருக்கும் குழந்தையின்
கைகளை கொண்டு யாசகம் கேட்டிருந்தவள்
எனை நோக்கி நடக்க தொடங்கியிருந்தாள்.

அவசரத்தில் ஒரு நாணயம்
கைவிட்டு உருண்டோடி
மறைந்து போக..
கையிலிருந்த நாணயத்தை
தயக்கமாய் தந்து நகர்ந்தேன்.

வீடு வந்து சேரும்வரை
நினைவை விட்டு அகலவேயில்லை
உருண்டோடிய நாணயம்.

ஆதவா
30-06-2010, 08:33 AM
கவலைப் படாதீர்கள், அந்த நாணயமும் அந்த பெண்ணிடமே தஞ்சமடைந்திருக்கும்.

ஆனால், கவிதையில் சூழ்நிலை சரியில்லையே, அதென்ன பிச்சைகாரர் என்றாலே சிக்னல்தானா? வேறிடமே இல்லையா? ஒருமுறை பீக்காடுகளுக்குள் அதிகாலையில் பிச்சைக்காரர்கள் (சில காரிகளும் உண்டு) வந்து பிச்சையெடுப்பதைப் பார்த்திருக்கிறேன்.

கவிதை நன்று, இறுப்பினும் முடிவு அல்லது முழுக்கவிதையும் ஏதோ ஒன்றை இழப்பதாக எனக்குப் படுகிறது.

அன்புடன்
ஆதவா.

shibly591
30-06-2010, 09:26 AM
கவிதையில் உங்கள் மனிதாபிமானம் தெரிகிறது..

ஒரு காட்சியை கவிதைப்படுத்துவதில் வெற்றி பெற்றிருக்கறீர்கள்..

வாழ்த்துக்கள் நண்பரே........

nambi
30-06-2010, 11:36 AM
உருண்டோடிய நாணயத்தின் ''மதிப்பு'' தானம் கொடுத்ததை விட அதிகமாக இருக்குமோ?..........கவிதை வரிகள் நன்று! அன்றாட நிகழ்வுகளை நினைபடுத்துகிற வரிகள்...பகிர்வுக்கு நன்றி!

சிவா.ஜி
30-06-2010, 12:35 PM
இரண்டையும் கொடுக்கத்தான் நினைத்தானா...ஒன்றை தனக்கென வைத்தானா...தொலைந்தது மட்டுமே சங்கடத்தைத் தந்ததில்...அவனது மிச்சமிருக்கும் மனிதம் தெரிகிறது.

வாழ்த்துக்கள் சசி.

பா.ராஜேஷ்
30-06-2010, 06:36 PM
மனிதனின் மனதை அழகாக வெளிப் படுத்தி உள்ளீர்கள். பாராட்டுக்கள் அன்பரே.

சசிதரன்
01-07-2010, 06:18 AM
நன்றி ஷிப்லி, நம்பி, ராஜேஷ் மற்றும் சிவா அண்ணா...:)

@ஆதவா...
நான் பெரும்பாலும் பிச்சைக்காரர்களை சந்தித்தது சிக்னலில்தான் என்பதாலோ என்னவோ அது கவிதையில் உட்புகுந்திருக்கலாம். ஒரு காட்சி, அதை தொடர்ந்த மன ஓட்டம் என்பதையே வெளிக்கொணர விரும்பினேன். என்ன குறைவென்று கவனிக்கிறேன்...:)

பாரதி
01-07-2010, 01:26 PM
ஷிப்லி கூறியதைப் போல ஒரு நகரக் காட்சியைக் கவிதைப்படுத்தியது நன்று.
ஆனால் கவிதையின் தலைப்பில் இருக்கும் "பெறாத" என்ற சொல் கவிதை பாடப்படும் நோக்கில் சரியாக வருகிறதா..?
பல வேளைகளில் அதில் இடம்பெற்ற மாந்தர்களின் நினைவுகள்தான் நம்மை ஆட்டி வைக்கும். இங்கு சற்றே வேறுபட்டு நாணயம் மனதை உரசிப்பார்க்கிறது!
பல தளங்களில் கவிதை படைக்கும் கவிஞருக்கு பாராட்டு.

அமரன்
02-07-2010, 10:28 PM
கவிதையில் நாணயம் அநியாயமாகப் போச்சே, எண்ணாமல் அதையும் அவளுக்கே கொடுத்திருக்கலாம் என்ற அங்கலாய்ப்பு என் கண்ணுக்கு நன்றாகத் தெரிகிறது..

பாராட்டுகள் சசி

சசிதரன்
07-07-2010, 01:42 PM
நன்றி பாரதி அண்ணா மற்றும் அமரன்...:)