PDA

View Full Version : உயிர்க்குழலில் கசியும் மெல்லிசை நீ



shibly591
30-06-2010, 05:41 AM
அதிகாலைக்குளிர்ப்பூவின் மென்முகமே
உன் அழகோடு அலைபாயும் என்மனமே
கண் ரெண்டும் உருள்வதன் பேர் நாட்டியமா?
என் கனவுன்னை தினம் சுற்றும் ராட்டினமா?

நீயின்றி இவ்வுலகில் வனப்பேது?
நின் புன்னகையைப்பார்க்காமல் வாழ்வேது?
பார்வையிலே கவிதை பாடும் தேவதையே
உன் பூமுகத்தில் குடியிருக்கும் மார்கழியே

யாரிடமும் சொல்லாத கவிதையொன்றை
உன் கூந்தல் தொடும் காற்று என்னில் எழுதுதடி
என்னிடமே நிற்காமல் என்னிதயம்
உன்னை கோயில் சுற்றும் பக்தனைப்போல் சுற்றுதடி

என்ன பெயர் உனக்கு என்று எனக்கெதற்கு?
உன் வீடிருக்கும் முகவரியும் எனக்கெதற்கு?
மனம் கனிந்து காதலிக்கும் காதல் மட்டும்
உன்னில் இருக்குமெனில் இருதயத்தில் மேளம் கொட்டும்

ஏழ்பிறவி எடுத்தாலும் நீயின்றேல்-அது
பாழ்பிறவி என்றுதானே அர்த்தமாகும்?
ஓர்பிறவி எடுத்தாலும் உன்னுடனே - அது
சீர்பிறவி மட்டுமன்றி சொர்க்கமாகும்...

-நிந்தவூர் ஷிப்லி-

அமரன்
01-07-2010, 04:57 PM
இடைக்காலச் சினிமாப் பாடலை நினைவூட்டும் வண்ணம் கவிதையில்..

பாராட்டுகள் ஷிப்லி!

govindh
01-07-2010, 07:53 PM
இனிய மெல்லிசை.

வாழ்த்துக்கள் ஷிப்லி.

shibly591
02-07-2010, 05:27 AM
இடைக்காலச் சினிமாப் பாடலை நினைவூட்டும் வண்ணம் கவிதையில்..

பாராட்டுகள் ஷிப்லி!

மிக்க நன்றிகள்

shibly591
02-07-2010, 05:29 AM
இனிய மெல்லிசை.

வாழ்த்துக்கள் ஷிப்லி.

நன்றிகள் கோவிந்த்

lenram80
08-07-2010, 05:30 PM
இப்பிறவி உனக்காக எடுத்த பின்பும்
இக்கவிதை எழுதுவதால் இன்னும் இன்பம்!
கவிதைக்கு மூலமே!
உன்னால் என்னுள் என்றும் தாளமே!!

வாழ்த்துக்கள் ஷிப்லி!!!

பா.ராஜேஷ்
08-07-2010, 05:57 PM
வாழ்த்துக்கள் ஷிப்லி. மிக நல்ல கவிதை..

Nivas.T
27-07-2010, 12:54 PM
/யாரிடமும் சொல்லாத கவிதையொன்றை
உன் கூந்தல் தொடும் காற்று என்னில் எழுதுதடி/

அழகான வரிகள்
நல்ல ஒரு கவிதை
இசை அமைத்து பாடலாம்