PDA

View Full Version : இரவல்வண்ணச் சிறகுகள்

கீதம்
29-06-2010, 11:27 PM
அது ஒரு அடர்ந்தவனம்.
வான் தொட விழைந்த
மரங்களின் கிளைகளினூடே
கசிந்து வழிந்தது சூரிய மழை!

அவ்வனத்தில் சரணடைந்திருந்தன,
ஆயிரமாயிரம் பறவைகள்!
அப்பறவைகள் அன்பால் ஒன்றையொன்று
ஆக்கிரமித்திருந்தன.
அவை என்றுமே அடுத்தவர் நலம்நாடின.
அவர்தம் புகழ்பாடின.
அங்கே கரையலும், அலறலும், அகவலும்
இனிதென அங்கீகரிக்கப்பட்டிருந்தன.

பட்சிகளின் கலந்திசையால் ஈர்க்கப்பட்டு
இளைப்பாறிச் செல்லும் எண்ணத்துடன்
வனம் புகுந்தது ஒரு வண்ணப்பறவை!

வந்திறங்கிய புதிய பறவையின்
வசீகரம் கண்டு வாய் பிளந்தன,
பழைய பறவைகள்!

அழகில் அது
அதிகபட்சத்தைக் கொண்டிருந்தது.
அது பாடிய பாடலோ
மனதின் ஆழம் தொட்டுச் சென்றது.

அந்தப்பாடல்
காடெங்கும் எதிரொலிக்கும்வகையில்
ஏதோவொரு யுத்தி செய்தது.
அது போகுமுன்
தன் இறகுவண்ணங்களிலிருந்து துளி எடுத்து
வனமெங்கும் வாரித் தெளித்தது.

பட்சி பறந்து சென்ற பாதை பார்த்தே
பிரமித்து நின்ற அவையாவும்,
சிந்தியிருந்த வண்ணங்களை எடுத்து
சிறகுகளில் பூசிக்கொண்டன.
அன்றிலிருந்து....
கானகத்தின் சொந்தப்பறவைகளுக்கு
தங்கள் கானம் மறந்துபோயிற்று.
எழுப்பிய சிறுவொலியும்
எதிரொலியால் அடிபட்டுப்போனது.

தங்கள் தனித்துவம் தொலைத்து
தலைவனுக்காய் ஏங்கத் தொடங்கின,
அவ்வனத்துப் பறவைகள் யாவும்!

சிவா.ஜி
30-06-2010, 05:56 AM
உள்ளூர் சந்தையில்....உள்ளூரில் செய்தது மட்டுமே கிடைத்துக்கொண்டிருந்த காலம். உருவாக்குபவரும், உபயோகிப்பவரும் சொந்தமாய் சந்தோஷித்தக் காலம். விதேசியின் வரவு...சுதேசிகளை அடையாளம் மறக்க வைத்தது.

தாங்கள், தங்கள் கலாச்சாரமென்று ஒழுக்கமும், கட்டுக்கோப்புமாய்த்தான் எல்லாமிருந்தது.....மேலைக்கலாச்சாரம் வண்னப்பறவையாய் உள்நுழைந்து...வசீகரித்து...வலையில் வீழ்த்தியது. கலாச்சாரம் காணாமல் போனது. சூடு தாங்காமல் பூனைகள் அலறுகின்றன....புலி மட்டும் மர்மமாய் சிரிக்கிறது.

கவிதை சொல்லும் கருத்து சிந்திக்க வேண்டியது. இரவல் வண்ணங்கள் வேண்டாமென ஒதுக்க இந்த உள்ளூர் பறவைகள் முடிவுசெய்ய வேண்டும்.....தலைவன் வருவானா....தவறைத் திருத்துவானா....

நல்லதோர் கவிதைக்கு நல் வாழ்த்துக்கள் தங்கையே.

செல்வா
30-06-2010, 07:35 AM
ம்... ஒண்ணும் சொல்றதுக்கில்லை. குழப்பம் தான் எங்களுக்கு. காலத்தின் கட்டாயம் என்று ஏற்றுக் கொள்வதா? இல்லை சுயமே முக்கியம் என்று முட்டி மோதுவதா?

நல்ல கவிதை.... வாழ்த்துக்கள் கீதம்.

பா.ராஜேஷ்
30-06-2010, 06:46 PM
இரவல் வண்ணத்தால்
இன்பம் கொண்டு
இயற்கையை மாற்ற
இயல்வது தவறென
இனிதே எதுத்துரைத்த கவிதைக்கு
இனிய பாராட்டுக்கள்..

கீதம்
01-07-2010, 10:10 PM
உள்ளூர் சந்தையில்....உள்ளூரில் செய்தது மட்டுமே கிடைத்துக்கொண்டிருந்த காலம். உருவாக்குபவரும், உபயோகிப்பவரும் சொந்தமாய் சந்தோஷித்தக் காலம். விதேசியின் வரவு...சுதேசிகளை அடையாளம் மறக்க வைத்தது.

தாங்கள், தங்கள் கலாச்சாரமென்று ஒழுக்கமும், கட்டுக்கோப்புமாய்த்தான் எல்லாமிருந்தது.....மேலைக்கலாச்சாரம் வண்னப்பறவையாய் உள்நுழைந்து...வசீகரித்து...வலையில் வீழ்த்தியது. கலாச்சாரம் காணாமல் போனது. சூடு தாங்காமல் பூனைகள் அலறுகின்றன....புலி மட்டும் மர்மமாய் சிரிக்கிறது.

கவிதை சொல்லும் கருத்து சிந்திக்க வேண்டியது. இரவல் வண்ணங்கள் வேண்டாமென ஒதுக்க இந்த உள்ளூர் பறவைகள் முடிவுசெய்ய வேண்டும்.....தலைவன் வருவானா....தவறைத் திருத்துவானா....

நல்லதோர் கவிதைக்கு நல் வாழ்த்துக்கள் தங்கையே.

கவிதையின் கருவை கனகச்சிதமாய் சொல்லிவிட்டீர்கள். உங்கள் கூரிய அவதானிப்பு என்னை வியக்கவைக்கிறது. முதற்பின்னூட்டமிட்டு ஊக்கம் கொடுத்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி, அண்ணா.

கீதம்
01-07-2010, 10:15 PM
ம்... ஒண்ணும் சொல்றதுக்கில்லை. குழப்பம் தான் எங்களுக்கு. காலத்தின் கட்டாயம் என்று ஏற்றுக் கொள்வதா? இல்லை சுயமே முக்கியம் என்று முட்டி மோதுவதா?

நல்ல கவிதை.... வாழ்த்துக்கள் கீதம்.

இது காலத்தின் கட்டாயம்தான்.ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். யாரையும் குறைகூறுவதற்கில்லை. மனதின் ஆதங்கத்துக்கு இது ஒரு மாற்றுவழி. அவ்வளவே.

பின்னூட்டத்துக்கு நன்றி, செல்வா.

கீதம்
01-07-2010, 10:18 PM
இரவல் வண்ணத்தால்
இன்பம் கொண்டு
இயற்கையை மாற்ற
இயல்வது தவறென
இனிதே எதுத்துரைத்த கவிதைக்கு
இனிய பாராட்டுக்கள்..

அழகுப் பின்னூட்டம் தந்த உமக்கு
அன்பான நன்றி, ராஜேஷ்.

அமரன்
02-07-2010, 09:50 PM
வெளித்தெரிவதில்லை வேர்கள்!

நம் வேர்களின் மேல் வெளி மண் படர்ந்து
பூத்துக் குலுங்க வைக்கிறது.
பூக்கள் காயாகிக் கனியாகி விதையாக விழாமல்
காய்ந்து மண்ணோடு மண்ணாவது வேதனை.

சாதனையும் இல்லாமல் இல்லை.

இதுதான் நிலமை.

தேவையா இல்லையா என்பது
போர்வையில் இல்லை..
காலத்தின் கைகளில் அது இருக்கு.

கொம்பியூனிசம் நம்மில் பெரியளவில் தாக்கங்களை ஏற்படுத்தாமைக்குக் காரணம்
எதுக்காக அது போர்க்கோலம் பூண்கிறது என்று தெளிவுறுத்தத் தவறியமைதான்.

கோபத்தில் சிவந்தால் மட்டும் புரட்சி இல்லை.
செந்நிறத்தில் போரெழுதினாலும் புரட்சிதான்..

இந்தக் கவிதையும் அந்த ரகம்தான்.

பறவையை எடுத்தாண்டது பொருத்தமான சிறப்பு!

கவிதையின் கரு மட்டுமல்ல
கவலைக்கு மருந்தும் அதிலுண்டு.

பாராட்டுகள் கீதம்.

govindh
02-07-2010, 10:27 PM
கலாச்சாரம் காணாமல் போவதை
கச்சிதமாகச் சொல்லி விட்டீர்கள்...

தனித்துவம் மறந்த வண்ணப் பறவைகள்-
தங்கள் எண்ணங்களால்
தன்னிலை உணர வேண்டும்.

பாராட்டுக்கள்.

கீதம்
04-07-2010, 01:17 AM
கவிதையின் கரு மட்டுமல்ல
கவலைக்கு மருந்தும் அதிலுண்டு.

பாராட்டுகள் கீதம்.

நீண்ட அலசலுக்கு மிகவும் நன்றி, அமரன்.

கீதம்
04-07-2010, 01:19 AM
கலாச்சாரம் காணாமல் போவதை
கச்சிதமாகச் சொல்லி விட்டீர்கள்...

தனித்துவம் மறந்த வண்ணப் பறவைகள்-
தங்கள் எண்ணங்களால்
தன்னிலை உணர வேண்டும்.

பாராட்டுக்கள்.

பின்னூட்டத்துக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி, கோவிந்த்.