PDA

View Full Version : எனது கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழா அழைப்பிதழ் Book release



M.Rishan Shareef
29-06-2010, 01:52 PM
அன்பின் நண்பர்களுக்கு,

காலச்சுவடு பதிப்பகம் வெளியிடும் எனது 'வீழ்தலின் நிழல்' கவிதைத் தொகுதியின் வெளியீட்டுவிழா எதிர்வரும் சனிக்கிழமை (ஜூலை, 03) மாலை ஆறு மணிக்கு, சென்னை, எழும்பூர், இக்சா மையத்தில் நிகழவிருக்கிறது.

உங்கள் வருகையையும் ஆசிகளையும் பெரிதும் எதிர்பார்க்கிறேன்.

என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்

பா.ராஜேஷ்
29-06-2010, 02:06 PM
அப்படியா!! நல்லதோர் மகிழ்ச்சிகரமான செய்தி.. உணகளுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் !!!

கலையரசி
29-06-2010, 02:23 PM
உங்கள் அழைப்பிற்கு நன்றி.
என்னால் வருகை தர முடியாவிட்டாலும், என்னுடைய ஆசியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
காலச்சுவடு போன்ற தரமான பதிப்பகத்தால் வெளியிடப்படுகிறது என்பது இன்னும் மகிழ்ச்சியான செய்தி.
தொடர்ந்து உங்களது எழுத்துக்கள் புத்தகங்களாகப் பிரசுரம் ஆக வேண்டும் என வாழ்த்துகிறேன்.

செல்வா
29-06-2010, 02:52 PM
ஆஹா... என்னே இனியச் செய்தி. :)

மன்ற உறவு ஒருவரின் வரிகளைப் புத்தகங்களாக்கிப் பார்ப்பதை எண்ணும் போதே பூரிப்படைகிறது நெஞ்சம்.

அட்டைப் படத்தை இங்கேப் பதியுங்களேன். பாலைவனத்திலிருக்கும் நாங்களும் பார்த்துக் கொள்கிறோம்.

விழா இனிதே நடைபெறவும் உங்கள் எழுத்துக்கள் தமிழகமெங்கும் சென்று சேரவும் இனிய வாழ்த்துக்கள்.

பாரதி
29-06-2010, 02:52 PM
மிக்க மகிழ்ச்சியான செய்தி ரிஷான்!
விழா இனிது நடைபெறவும், கவிதைப்புத்தகம் நல்ல வெற்றியைப் பெறவும் எனது உளப்பூர்வமான வாழ்த்து.
அழைப்புக்கு மிக்க நன்றி.

சிவா.ஜி
29-06-2010, 03:08 PM
மிக்க மகிழ்ச்சிகரமான செய்தி. புத்தக வெளியீட்டு விழா இனிதே நடைபெற வாழ்த்துக்கள் ரிஷான்.

அமரன்
29-06-2010, 08:05 PM
அழைப்புக்கு நன்றி ரிஷான்.

தடையின்றி உங்கள் பயணம் என்றும் தொடரட்டும். உயரங்கள் பலதைத் தொடட்டும்.

கீதம்
29-06-2010, 11:49 PM
இன்னும் பல சிகரங்களைத் தொட என் அன்பான வாழ்த்துகள், ரிஷான் ஷெரிஃப் அவர்களே!

அன்புரசிகன்
29-06-2010, 11:59 PM
இது ஆரம்பமாகி இன்னும் நீங்கள் மிளிரவேண்டும் என்றும் தொட்டதெல்லாம் துலங்கவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

ஆதவா
30-06-2010, 02:16 AM
ஆஹா, வாழ்த்துக்கள் ரிஷான், காலச்சுவடு போன்ற இலக்கிய தரமான பதிப்பகத்திலிருந்து வருவது இன்னும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

தலைப்பும் நன்றாக இருக்கிறது.

இலக்கிய வட்டார ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

உங்கள் புத்தகம் பெறுவதற்கான வழியை கூறினீர்களெனில் நான் வாங்க ஆர்வமாக இருக்கிறேன்.

அன்புடன்
ஆதவா.

குணமதி
30-06-2010, 02:47 AM
பாராட்டும் வாழ்த்தும்.

மதி
30-06-2010, 03:02 AM
வாழ்த்துக்கள் ரிஷான். மிக்க மகிழ்ச்சியான செய்தி. விழா இனிதே நடக்க வாழ்த்துக்கள்.

shibly591
30-06-2010, 05:47 AM
என் மனமார்ந்த வாழ்த்தக்கள் நண்பரே.....

M.Rishan Shareef
02-07-2010, 04:01 AM
அன்பின் நண்பர்கள்

பா.ராஜேஷ், கலையரசி, செல்வா, பாரதி, சிவா.ஜி, அமரன், கீதம், அன்புரசிகன், ஆதவா, குணமதி, மதி, ஷிப்லி

உங்களது அனைவரது வாழ்த்துக்களிலும் பிரார்த்தனைகளிலும் பெரிதும் மகிழ்கிறேன்.

'வீழ்தலின் நிழல்' தொகுப்பின் இந்திய விலை 60/=
இந்தியப் புத்தகநிலையங்கள் மற்றும் புத்தகக் கண்காட்சிகளில் வாங்கலாம்.
இணையத்தில் இன்னும் சில நாட்களில் வாங்கலாம்.

இவ் விழாவுக்கான அழைப்பிதழையும், வானொலியில் இடம்பெற்ற அறிமுகத்தையும் இங்கே (http://mrishanshareef.blogspot.com/2010/07/blog-post.html) பார்த்தும் கேட்டும் ரசிக்கலாம்.

மிகவும் நன்றி நண்பர்களே !

என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்

aren
02-07-2010, 04:05 AM
என் மனமார்ந்த பாராட்டுக்கள் ரிஷான். நீங்கள் இன்னும் பல புத்தகங்களை வெளியிட்டு இலக்கிய உலகில் பேர் வாங்கிட என் வாழ்த்துக்கள்.

நம் சென்னை நண்பர்கள் யாராவது இந்த விழாவில் கலந்துகொண்டால் நல்லது. நம் நண்பர்கள் யாராவது அதை செய்தால் ரிஷான் அவர்களுக்கும் மகிழ்ச்சியாக இருக்கும்.

M.Rishan Shareef
05-07-2010, 02:19 AM
அன்பின் Aren,

உங்கள் அன்பான வாழ்த்துக்களில் மகிழ்கிறேன். மிகவும் நன்றி நண்பரே :-)

M.Rishan Shareef
05-07-2010, 02:21 AM
அன்பின் நண்பர்களுக்கு,

காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட எனது புத்தகவெளியீட்டு விழா சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்ட மற்றும் கலந்துகொண்டு சிறப்பித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி !

என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்

ஆதவா
05-07-2010, 07:29 AM
அன்பின் நண்பர்களுக்கு,

காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட எனது புத்தகவெளியீட்டு விழா சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்ட மற்றும் கலந்துகொண்டு சிறப்பித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி !

என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்

ரிஷான், வரமுடியாத (வெட்கம்) வருத்தம் இருப்பினும், அன்று நான் நினைத்துக் கொண்டேன். தங்களது அலையெண் என்னிடம் இருந்திருந்தால் அழைத்திருப்பேன்.!!
'=
சிறப்பாக முடிந்த விழாவை குறித்த உங்கள் பதிவை எதிர்பார்க்கிறேன்> (அல்லது வேறு யாராவது எழுதியிருந்தாலும் அதன் தொடுப்பை இங்கே தரவும்!)

govindh
05-07-2010, 08:39 AM
வாழ்த்துக்கள் ரிஷான்...
மென்மேலும் பல வெற்றிகள் பெருகட்டும்...
எழுத்துப் பயணம் தொடரட்டும்...

வாழ்க வளமுடன்...

பா.சங்கீதா
10-07-2010, 12:28 PM
என் அன்பான வாழ்த்துகள், ரிஷான் ஷெரிஃப் அவர்களே! :)

M.Rishan Shareef
15-07-2010, 03:45 AM
அன்பின் ஆதவா,

ஒரு நாள் நிச்சயம் சந்திப்போம் நண்பரே :-)

M.Rishan Shareef
15-07-2010, 03:46 AM
அன்பின் கோவிந்த், பா.சங்கீதா,

அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பர்களே :-)

ஆர்.ஈஸ்வரன்
14-08-2010, 10:46 AM
வாழ்த்துக்கள் ரிஷான்

M.Rishan Shareef
17-08-2010, 03:17 PM
அன்பின் ஆர்.ஈஸ்வரன்,

அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே :-)

அனுராகவன்
20-09-2010, 08:23 PM
என் வாழ்த்துக்களும்..

தாமரை
21-09-2010, 06:18 AM
என் மனமார்ந்த பாராட்டுக்கள் ரிஷான். நீங்கள் இன்னும் பல புத்தகங்களை வெளியிட்டு இலக்கிய உலகில் பேர் வாங்கிட என் வாழ்த்துக்கள்.

M.Rishan Shareef
01-10-2010, 06:15 AM
அன்பின் அனு,

அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி சகோதரி :-)

யவனிகா
11-10-2010, 08:50 AM
வாழ்த்துக்கள் ரிஷான் செரிப்.

M.Rishan Shareef
12-10-2010, 05:19 AM
அன்பின் யவனிகா,

அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி சகோதரி :-)