PDA

View Full Version : எஞ்சுநெஞ் சந்தடுப்ப தேன்?



குணமதி
29-06-2010, 04:11 AM
எஞ்சுநெஞ் சந்தடுப்ப தேன்?


வேண்டியவ ரென்றாலோ வேண்டிடும் வா,வந்தே

ஈண்டுக் கடினமாய் ஏழ்தென்னும்! - மாண்மதியே!

கொஞ்சமாய்ச் சிந்தனை கொள்ளவே யாமெழுதின்

எஞ்சுநெஞ் சந்தடுப்ப தேன்?

nambi
29-06-2010, 04:32 AM
குறையுள்ள நெஞ்சு தடுப்பதேன்? என்பதான கவிதையா...? பகிர்வுக்கு நன்றி! செய்யுள் இலக்கண வரிகள் அருமை!.....

முழுதும் புரிந்து கொள்ளமுடியவில்லை.....செய்யுள் இலக்கணமாக பிரித்தறிய முடிந்தவரால் மட்டுமே முழுதும் நுகர முடியும் எனபது என் கருத்து....

சிவா.ஜி
29-06-2010, 06:26 AM
சுத்தமா....புரியல....!!!

muthuvel
29-06-2010, 06:38 AM
எனக்கு தலை சுற்றுகிறது

ஆதவா
29-06-2010, 10:10 AM
இதற்கான விளக்கத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறேன்.

ஆதி
29-06-2010, 10:56 AM
இலக்கிய கோட்பாடுகள் பற்றி சொல்லிருக்கீங்களோ ?

புரிகிற படைப்பு, புரியா படைப்பு..

சரியா ?

பிடித்தவர்கள், சொந்தக்காரர்களை மேடை ஏற்றும் செயல்களை பற்றியதோ ?

பாரதி
29-06-2010, 03:55 PM
நண்பரே,

இக்கவிதையின் கருத்து என நான் விளங்கிக்கொண்டது:

வேண்டியவர்களை மட்டும் அழைத்து, அவர்களை அண்டி பிழைக்க வேண்டும் என்று கூறும் அறிவே, அது சரியா என்று சற்று சிந்திப்பதற்காக எழுத முற்படுகையில், இறுகிப்போன மனது ஏன் தடுக்கிறது?

இது சரியா, பிழையா?

செல்வா
30-06-2010, 05:13 AM
ஆதன் கருவைப் புடிச்சிட்டான்னு நெனக்கிறேன் :D அதேதான் கருவா எனக்கும் தோணுது. குணமதியண்ணா எதுவாயிருந்தாலும் பேசித் தீத்துக்கலாம் :) கவிதை வழியாத் திட்டாதீங்க :) (சும்மா லுலுவாயி...)

சரி நீங்க சொல்றது தமிழ் மன்றத்தையா... மக்கள் மன்றத்தையா... இல்ல ரெண்டையுமா? :eek::eek:

நல்ல கவிதை அண்ணா. கண்டிப்பா தொடர்ந்து எழுதுங்கள். நாம் செய்யும் எல்லச் செயல்களுக்கும் உடனடியான பலன் கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது. இன்னும் கொஞ்சம் கூர்ந்து கவனிங்க உங்களுக்கே நிறைய புரியும்.

தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள். முடிந்தவரை வார்த்தைகளைப் பிரிக்காமல் சீர் எழுதுவது நன்று.