PDA

View Full Version : பூக்களின் தேவதை...

சசிதரன்
28-06-2010, 06:42 AM
உன் ரசனைகளை
கிறுக்கி வைக்கிறேன்..
நீ ரசித்த பின்
அது கவிதையாகிறது.

---------------------------------------------------------

நீ நட்டு வைத்த
மஞ்சள் செம்பருத்தியும்...
சிகப்பாகவே பூப்பதாய்
கவலை கொள்ளாதே...
நீ தொட்டு பறிக்கையில்...
பூக்களுக்கும் வெட்கம்
வரதான் செய்யும்.

கூந்தலில் பூவோடு..
கண்ணாடி பார்த்துவிடாதே...
உன் முகத்தோடு
ஒப்பிட்டு பார்த்தால்..
எந்த பூவும்..
வாடிப் போகும்.

நீ பூச்சூடி வந்தாலும்..
உன் கூந்தல்
வாசம் தாண்டி...
பூக்கள் மணப்பதில்லை.

மருதாணியிட ஆசைப்பட்டு...
இலை பறிக்கிறாய்.
சிவந்து போகிறது..
மருதாணி மரம்.

யாருமறியா
காட்டில் பூத்த..
ரகசியப் பூ நீ.

விடியலில் உன்
விரல் படவே..
இரவு முழுதும்
பனித்துளிகளை தன்னுள் ...
சேகரித்து வைக்கிறது
பூக்கள்.

பூச்செடியில் பூக்கும்...
அத்தனை பூக்களிலும்
உந்தன் வாசம்.

நான்..
பூக்களின் ரசிகன்.
நீ...
பூக்களின் தேவதை.

பாரதி
28-06-2010, 06:49 AM
அழகிய குறும்பாக்கள்!
மிகவும் இரசிக்க வைக்கின்றன சசி.
இனிய வாழ்த்து உங்களுக்கு உரித்தாகட்டும்.

சிவா.ஜி
28-06-2010, 09:13 AM
அத்தனையும் அசத்தல். ரசித்து வாசித்தேன் சசி. அழகுணர்வு ததும்பும் வசீகர வரிகள்.

உங்கள் கவிதைகளைத் தொகுத்து புத்தமாய் வெளியிடுங்கள். நிச்சயம் மிகப்பெரிய அங்கீகாரம் கிடைக்கும். மிக மிக அருமையான கவிதைகள்.

வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் சசி.

nambi
28-06-2010, 09:55 AM
கவிதை நன்று...பகிர்வுக்கு நன்றி!

ஆதவா
28-06-2010, 12:28 PM
ஒரே பூக்கள் மழையாக இருக்கிறதே சசி. சரி, ,முதல் கவிதையிலிருந்து வருவோம்.

உன் ரசனைகளை
கிறுக்கி வைக்கிறேன்..
நீ ரசித்த பின்
அது கவிதையாகிறது.

---------------------------------------------------------

நீ நட்டு வைத்த
மஞ்சள் செம்பருத்தியும்...
சிகப்பாகவே பூப்பதாய்
கவலை கொள்ளாதே...
நீ தொட்டு பறிக்கையில்...
பூக்களுக்கும் வெட்கம்
வரதான் செய்யும்.

பூக்களோடு தொடர்பற்று இருந்தாலும் மிகவும் பழைய அடிவரி. அவன் கிறுக்குதலும் அவளால் ஒரு படைப்பென உருப்பெறுதலும் புதுமையாக சொல்லப்படவில்லை. ஆனால் அதே சமயம் மருதாணி இலைபறித்து சிவக்கும் மரம் எனும் கவிதையில் கொஞ்சம் வசீகரம் இழுக்கிறது. இரண்டாவதாக இருப்பது மெளன முரண். பூத்திருப்பது சிவப்பா அல்லது மஞ்சளா என்ற தெய்வீக குழப்பத்திற்கிடையே பறிப்பவளைக் காணும் பூக்கள் வெட்கும் என்பது குறும்பு. ஆனால் இந்த இடத்தில் ஒரு அறிவுரை. “மஞ்சள் செம்பருத்தியு” என்ற இடத்திற்குப் பிறகும், “ நீ தொட்டு பறிக்கையில்” எனும் இடத்திற்குப் பிறகும் மூன்று நிறுத்தற் (தொடர்) புள்ளிகள், இச்சிறு கவிதையையும் நிறுத்தி நிறுத்தி படிக்கும்படி இருக்கிறது. “வரதான்” என்பது சரியான வார்த்தை பிரயோகமல்ல.

கூந்தலில் பூவோடு..
கண்ணாடி பார்த்துவிடாதே...
உன் முகத்தோடு
ஒப்பிட்டு பார்த்தால்..
எந்த பூவும்..
வாடிப் போகும்.

மூன்றாவது கவிதை இரண்டாவதன் சிறு சிறு மாற்றங்கள்.. எனினும் நன்று.
---------------------------------------------------------

நீ பூச்சூடி வந்தாலும்..
உன் கூந்தல்
வாசம் தாண்டி...
பூக்கள் மணப்பதில்லை.

கூந்தல் வாசம் குறித்து தாமரை அண்ணாவிடம் கேட்டு (?) விளக்கம் பெற்றுக் கொள்ளலாம் :D சொல்ல வந்த கருத்து எனக்கு பிடித்திருக்கிறது/
---------------------------------------------------------

மருதாணியிட ஆசைப்பட்டு...
இலை பறிக்கிறாய்.
சிவந்து போகிறது..
மருதாணி மரம்.

மருதாணி மரம் பெண்களின் வெட்கத்தை அவர்களிடமிருந்து எடுப்பதற்காகவே இறைவனால் படைக்கப்பட்டது. அப்படிப்பட்ட பெருமைமிக்க அந்த மருதாணி மரமே சிவந்து வெட்கமடைகிறது என்றால் அந்த பெண் எப்படி இருப்பாள்!! அருமை சசி./.
---------------------------------------------------------

யாருமறியா
காட்டில் பூத்த..
ரகசியப் பூ நீ.

யாருமறியா காடு எனில் அதில் இருப்பவைகள் எல்லாமே ரகசிய பூக்கள் தாம். ஆக, இக்கவிதையில் கொஞ்சம் வார்த்தைகளை மாற்றினால் நன்றாக இருக்குமென்று எதிர்பார்க்கிறேன்.
---------------------------------------------------------

விடியலில் உன்
விரல் படவே..
இரவு முழுதும்
பனித்துளிகளை தன்னுள் ...
சேகரித்து வைக்கிறது
பூக்கள்.

அருமை. விடியலில் விரல் படுவது கதிரவனின் கரங்கள். அது பட்டதும் உருகிவிடுவது பனியின் குணம். எனில் நீங்கள் சொல்ல வருவது........ (நான் ஏதும் தவறாக சொல்லிவிடவில்லையே?)
---------------------------------------------------------

நீ நட்டு வைத்த
பூச்செடியில் பூக்கும்...
அத்தனை பூக்களிலும்
உந்தன் வாசம்.

சிக்... நன்றாக இருக்கிறது.

நான்..
பூக்களின் ரசிகன்.
நீ...
பூக்களின் தேவதை

விமர்சனமில்லை.

ஆனால் தொடர்ந்தார்ற்போல் எல்லாவற்றிலும் பூக்கள் என்ற வார்த்தைகளே (பூக்களின் தேவதையாக இருந்தாலும்) ஆக்கிரமித்திருப்பதாக தோணுகிறது. இருப்பினும் உங்கள் கவிதை ரசனை சில இடங்களில் நன்றாகவும் உயர்வாகவும் இருந்தது. தொடர்ந்து எழுதுங்கள் சசி.

சசிதரன்
28-06-2010, 06:47 PM
அழகிய குறும்பாக்கள்!
மிகவும் இரசிக்க வைக்கின்றன சசி.
இனிய வாழ்த்து உங்களுக்கு உரித்தாகட்டும்.

நன்றி பாரதி அண்ணா..:)

சசிதரன்
28-06-2010, 06:48 PM
அத்தனையும் அசத்தல். ரசித்து வாசித்தேன் சசி. அழகுணர்வு ததும்பும் வசீகர வரிகள்.

உங்கள் கவிதைகளைத் தொகுத்து புத்தமாய் வெளியிடுங்கள். நிச்சயம் மிகப்பெரிய அங்கீகாரம் கிடைக்கும். மிக மிக அருமையான கவிதைகள்.

வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் சசி.

ரொம்ப நன்றி சிவா அண்ணா... புத்தகம் போடும் அளவுக்கு இன்னும் வரவில்லை அண்ணா... மன்ற உறவுகளின் அங்கீகாரம் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது...:)

சசிதரன்
28-06-2010, 06:59 PM
ஆதவா... எத்தனை நாட்கள் ஆயிற்று உன் விமர்சனம் பெற்று... இது எனக்கு எதிர்பார்க்காத விமர்சனம் ஆதவா... :)

ஒரே பூக்கள் மழையாக இருக்கிறதே சசி. சரி, ,முதல் கவிதையிலிருந்து வருவோம்.

பூக்களோடு தொடர்பற்று இருந்தாலும் மிகவும் பழைய அடிவரி. அவன் கிறுக்குதலும் அவளால் ஒரு படைப்பென உருப்பெறுதலும் புதுமையாக சொல்லப்படவில்லை. ஆனால் அதே சமயம் மருதாணி இலைபறித்து சிவக்கும் மரம் எனும் கவிதையில் கொஞ்சம் வசீகரம் இழுக்கிறது. இரண்டாவதாக இருப்பது மெளன முரண். பூத்திருப்பது சிவப்பா அல்லது மஞ்சளா என்ற தெய்வீக குழப்பத்திற்கிடையே பறிப்பவளைக் காணும் பூக்கள் வெட்கும் என்பது குறும்பு. ஆனால் இந்த இடத்தில் ஒரு அறிவுரை. “மஞ்சள் செம்பருத்தியு” என்ற இடத்திற்குப் பிறகும், “ நீ தொட்டு பறிக்கையில்” எனும் இடத்திற்குப் பிறகும் மூன்று நிறுத்தற் (தொடர்) புள்ளிகள், இச்சிறு கவிதையையும் நிறுத்தி நிறுத்தி படிக்கும்படி இருக்கிறது. “வரதான்” என்பது சரியான வார்த்தை பிரயோகமல்ல.

நீ சொல்கயில்தான் கவனிக்கிறேன் ஆதவா... அந்த தொடர்புள்ளிகள் அவசியமற்றதுதான். இனிவரும் படைப்புகளில் கவனம் கொள்கிறேன்..:)

கூந்தல் வாசம் குறித்து தாமரை அண்ணாவிடம் கேட்டு (?) விளக்கம் பெற்றுக் கொள்ளலாம் :D சொல்ல வந்த கருத்து எனக்கு பிடித்திருக்கிறது/
---------------------------------------------------------
ஆஹா...என்னை வம்புல மாட்டி விட்ருவ போல.... நான் வரல ஆட்டத்துக்கு...:aetsch013:

மருதாணி மரம் பெண்களின் வெட்கத்தை அவர்களிடமிருந்து எடுப்பதற்காகவே இறைவனால் படைக்கப்பட்டது. அப்படிப்பட்ட பெருமைமிக்க அந்த மருதாணி மரமே சிவந்து வெட்கமடைகிறது என்றால் அந்த பெண் எப்படி இருப்பாள்!! அருமை சசி./.
---------------------------------------------------------
:)

யாருமறியா காடு எனில் அதில் இருப்பவைகள் எல்லாமே ரகசிய பூக்கள் தாம். ஆக, இக்கவிதையில் கொஞ்சம் வார்த்தைகளை மாற்றினால் நன்றாக இருக்குமென்று எதிர்பார்க்கிறேன்.
---------------------------------------------------------

எதிர்ப்பார்ப்பினை பூர்த்தி செய்ய முயல்கிறேன் ஆதவா..:)

அருமை. விடியலில் விரல் படுவது கதிரவனின் கரங்கள். அது பட்டதும் உருகிவிடுவது பனியின் குணம். எனில் நீங்கள் சொல்ல வருவது........ (நான் ஏதும் தவறாக சொல்லிவிடவில்லையே?)
---------------------------------------------------------

ஆஹா... உண்மையில் நீர் மிகப் பெரிய ஆளய்யா...:D

ஆனால் தொடர்ந்தார்ற்போல் எல்லாவற்றிலும் பூக்கள் என்ற வார்த்தைகளே (பூக்களின் தேவதையாக இருந்தாலும்) ஆக்கிரமித்திருப்பதாக தோணுகிறது. இருப்பினும் உங்கள் கவிதை ரசனை சில இடங்களில் நன்றாகவும் உயர்வாகவும் இருந்தது. தொடர்ந்து எழுதுங்கள் சசி.

பொறுமையான உங்கள் விமர்சனத்திற்கு நன்றி ஆதவா...:)

nellai tamilan
28-06-2010, 07:27 PM
நீ நட்டு வைத்த
மஞ்சள் செம்பருத்தியும்...
சிகப்பாகவே பூப்பதாய்
கவலை கொள்ளாதே...
நீ தொட்டு பறிக்கையில்...
பூக்களுக்கும் வெட்கம்
வரதான் செய்யும்.
.

நான் ரசித்த வரிகள்.

உங்களின் எழுத்துகளை பார்க்கும் கணிணி கூட உங்கள் மீது காதல் கொள்ளும் போல....

வாழ்த்துக்கள்.
உங்களின் கவிதை மழையில் நனைய காத்திருக்கும் நண்பன் நான்

அமரன்
28-06-2010, 09:47 PM
இதமான கவிதைகள்.

ஆதவாவின் விமர்சனம் வழக்கம் போலவே கற்கண்டு!

நானும் மகிழ்கிறேன் ஆதவனைக் கண்டு.

முதல் கவிதையில் இன்னொரு பரிமாணம் எனக்குப் புலப்படுகிறது.

காதல் நம்மையே நமக்கு அழகாகக் காட்டுகிறது. அடையாளம் காட்டுகிறது. அதை சொல்லி நிற்கிறது முதற்கவிதை.

முற்றத்துப் பூக்களின் நறுமணம் கவிதைகளின் குணம்.

shibly591
29-06-2010, 06:51 AM
எல்லாமே அழகான வரிகள்...

படிக்கப்படிக்க காதல் உணர்வை தூண்டக்கூடிய எழுத்து நடை..

வளமான கற்பனை..வாழ்த்துக்கள் தோழரே

govindh
01-07-2010, 11:41 AM
பூக்களின் தேவதை-

கவிப் பூங்கொத்துக்கள்...
அத்தனையும் அருமை...

பாராட்டுக்கள் சசிதரன்.

பா.ராஜேஷ்
01-07-2010, 09:59 PM
வசீகரமான வரிகளை தந்த
சசிதரனுக்கு நன்றிகளும் பாராட்டுக்களும்

lenram80
08-07-2010, 05:22 PM
பெண்ணே நீ பூவானாய்!
அதனால் நான் கவிதையானேன்!
-இப்படிக்கு,
பூ

பூத்த கவிதைகளுக்கு வாழ்த்துகள் சசி!