PDA

View Full Version : இறந்தகாலத்தின் மீதம்

கீதம்
27-06-2010, 10:32 PM
மறக்கவே விரும்புகிறேன்,
இருப்பினும்.....
என் விருப்பமின்றியே எனது முதுகில்
சவாரி செய்கின்றன, அவை யாவும்,
விக்கிரமாதித்தன் தோளமர்ந்த வேதாளம்போல்!

அவற்றை வெட்டிவிடவும் வழியில்லை;
அவையெழுப்பும் வினாக்களுக்கு
விடை பகரவும் தெரியவில்லை!

இறந்தகாலத்தின் நினைவுகள் மட்டும்
இறவாவரம் பெற்றதைப்போல்
ஆத்மசாந்தியற்று அலைகின்றன,
இப்போதும் என் மண்டையோட்டுக்குள்!

(சிவாஜி அண்ணாவின் 'நினைவுநீர்க்குட்டைகள்' தாக்கத்தால் தோன்றியது. அவர்களுக்கு என் நன்றி.)

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
28-06-2010, 12:42 AM
கழிந்த காலம் என்பது காலாவதியான மாத்திரைகள். கடனென்று உடன் வைத்து அலைவதால் எந்த பயனும் இல்லை. நல்ல கவிதை கீதம் அவர்களே.

ஆதவா
28-06-2010, 12:41 PM
உங்களுக்கு மறதி எனும் வரத்தை ஞாபகப்படுத்துகிறேன். அது செயல்படுத்தப்பட்டால் நீங்கள் “இறந்து போன இறந்த காலம்” என்று கவிதை எழுதுவீர்கள் :)

Artificial Intelligence என்ற படத்தில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு அன்னைக்காக பாசத்திற்காக ஏங்கும் ஒரு உயர்தர ரோபோட் இறந்த காலத்தின் நினைவுகளாலேயே அப்போதைய தொழில்நுட்பங்களைக் கொண்டு மீண்டும் அன்னையையும் அந்த ரோபோ வாழ்ந்த வீட்டையும் கொண்டு வரும். நினைவுகளின் வழியே பயணிப்பதற்காக தொழில்நுட்பம் கண்டுபிடித்துவிட அதிக காலத்தை மனிதம் எடுத்துக் கொள்ளாது. காலங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் இறந்து கொண்டேயிருக்க, அதற்கு உயிர்ப்பூட்டிக் கொண்டே வரும் நினைவுகள்..

அவைகளின் வினாக்களுக்கு விடையளிக்க ஆரம்பித்துவிட்டால் நீங்கள் மனதை வென்றவராவீர்கள்.

வாழ்த்துக்கள்.

அன்புடன்
ஆதவா

சிவா.ஜி
28-06-2010, 03:26 PM
காலம் இறந்துவிட்டது...நினைவுகள் மட்டும் சாகாவரம் பெற்று...அதனை சுமப்பவர்களுக்கு சுமையாக நிற்கிறது. இன்னும் இன்னும் நினைக்கத்தூண்டும் நினைவுகளாய் இருப்பின்...அதன் சாகாவரம் சந்தோஷம். இனி இந்நினைவே கூடாதென நினைப்பவையாயின்...கொலைகாரர்களாய் மாறிவிடுவதே நல்லது.

'நினைவுகளைத் தூக்கிலிடுங்கள்' என்று ஒரு கவிதை முன்பு எழுதியிருக்கிறேன் தங்கையே...அதிலும் இதைப்போன்ற கொலையை அடுத்தவரை செய்யச்சொல்லியிருப்பேன்.

அளவாய் வடிக்கப்பட்ட வார்த்தைகள்....அழகாய் இருக்கிறது. வாழ்த்துக்கள் கீதம்.

(என்னுடைய கவிதை உங்களுக்குள் தாக்கத்தை உண்டாக்கியமைக்கு மிக்க நன்றி தங்கையே.)

கீதம்
28-06-2010, 10:24 PM
கழிந்த காலம் என்பது காலாவதியான மாத்திரைகள். கடனென்று உடன் வைத்து அலைவதால் எந்த பயனும் இல்லை. நல்ல கவிதை கீதம் அவர்களே.

நினைவுகளுக்கும் காலாவதிக் கணக்கு இருந்திருந்தால்தான் எல்லாமும் நலமாய் இருந்திருக்குமே?

பின்னூட்டத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி, நண்பரே.

கீதம்
28-06-2010, 10:30 PM
உங்களுக்கு மறதி எனும் வரத்தை ஞாபகப்படுத்துகிறேன். அது செயல்படுத்தப்பட்டால் நீங்கள் “இறந்து போன இறந்த காலம்” என்று கவிதை எழுதுவீர்கள் :)

ஆம், அது காலத்தால் வழங்கப்படும் வரமல்லவா? அதற்குதான் இன்னமும் காத்திருக்கிறேன்.

Artificial Intelligence என்ற படத்தில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு அன்னைக்காக பாசத்திற்காக ஏங்கும் ஒரு உயர்தர ரோபோட் இறந்த காலத்தின் நினைவுகளாலேயே அப்போதைய தொழில்நுட்பங்களைக் கொண்டு மீண்டும் அன்னையையும் அந்த ரோபோ வாழ்ந்த வீட்டையும் கொண்டு வரும். நினைவுகளின் வழியே பயணிப்பதற்காக தொழில்நுட்பம் கண்டுபிடித்துவிட அதிக காலத்தை மனிதம் எடுத்துக் கொள்ளாது. காலங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் இறந்து கொண்டேயிருக்க, அதற்கு உயிர்ப்பூட்டிக் கொண்டே வரும் நினைவுகள்..

அவைகளின் வினாக்களுக்கு விடையளிக்க ஆரம்பித்துவிட்டால் நீங்கள் மனதை வென்றவராவீர்கள்.

வாழ்த்துக்கள்.

அன்புடன்
ஆதவா

வெகுநாட்களுக்குப் பிறகு மன்றத்துக்கு வரவு தந்த உங்களை மகிழ்வுடன் வரவேற்கிறேன். ஆழ்ந்த ஆறுதலான பின்னூட்டத்துக்கு என் அன்பான நன்றி, ஆதவா அவர்களே.

கீதம்
28-06-2010, 10:32 PM
காலம் இறந்துவிட்டது...நினைவுகள் மட்டும் சாகாவரம் பெற்று...அதனை சுமப்பவர்களுக்கு சுமையாக நிற்கிறது. இன்னும் இன்னும் நினைக்கத்தூண்டும் நினைவுகளாய் இருப்பின்...அதன் சாகாவரம் சந்தோஷம். இனி இந்நினைவே கூடாதென நினைப்பவையாயின்...கொலைகாரர்களாய் மாறிவிடுவதே நல்லது.

'நினைவுகளைத் தூக்கிலிடுங்கள்' என்று ஒரு கவிதை முன்பு எழுதியிருக்கிறேன் தங்கையே...அதிலும் இதைப்போன்ற கொலையை அடுத்தவரை செய்யச்சொல்லியிருப்பேன்.

அளவாய் வடிக்கப்பட்ட வார்த்தைகள்....அழகாய் இருக்கிறது. வாழ்த்துக்கள் கீதம்.

(என்னுடைய கவிதை உங்களுக்குள் தாக்கத்தை உண்டாக்கியமைக்கு மிக்க நன்றி தங்கையே.)

கவிதையின் நாடியைக் கச்சிதமாய்ப் புரிந்துகொண்டு இடப்பட்ட பின்னூட்டம். மிகவும் நன்றி, அண்ணா.

nambi
29-06-2010, 04:00 AM
கவிதை அருமை...பகிர்வுக்கு நன்றி!

பா.ராஜேஷ்
30-06-2010, 06:49 PM
இறந்தகாலம் இறவாவரம் பெற்றவைத்தான்... ஆனால் அவற்றை கட்டுப் படுத்த உங்கள் மனதால் நிச்சயம் முடியும்... முயலுங்கள்.. கவிதை வரிகள் மிக அருமை. பாராட்டுக்கள்..

சசிதரன்
01-07-2010, 06:26 AM
நினைவுகளின் சுமையை நெடுநாட்கள் சுமப்பது நம்மையே வீழ்த்திவிடும். மறதி காலம் தரும் வரம்தான் எனினும், அதை விரும்பும் உங்கள் தவமும் அவசியம்...:)

நல்ல கவிதை கீதம் அவர்களே...

அமரன்
02-07-2010, 10:09 PM
மறக்கவே விரும்புகிறேன்,
இருப்பினும்.....
என் விருப்பமின்றியே எனது முதுகில்
சவாரி செய்கின்றன, அவை யாவும்,
விக்கிரமாதித்தன் தோளமர்ந்த வேதாளம்போல்!

ஓ..
வயதாக வயதாக
கூன் விழுவது
இதனால்தானோ..?

அவற்றை வெட்டிவிடவும் வழியில்லை;
அவையெழுப்பும் வினாக்களுக்கு
விடை பகரவும் தெரியவில்லை!

இறந்தகாலத்தின் நினைவுகள் மட்டும்
இறவாவரம் பெற்றதைப்போல்
ஆத்மசாந்தியற்று அலைகின்றன,
இப்போதும் என் மண்டையோட்டுக்குள்

அடடே..
இந்தக் கூனி
வனவாசம் தருபவளா?

நினைவுகள் நிரம்பிய
மனவனவாசத்தின் பிரம்மாவா?

இராமாயணக் கூனியால்
நன்மையா தீமையா?

இதுக்கான பதிலால்
’ஆவி’யான நினைவுகள்
சாந்தியடையுமோ?

பாராட்டுகள் கீதம்.

குணமதி
03-07-2010, 02:33 AM
இறந்த காலத்தில் இனிமைகளும் இருந்திருக்குமே!

அவற்றை நினைத்து அமைதி அடைய முயலலாம்.

ஒன்று நன்று உள்ள, பல துன்பும் கெடும்.

கீதம்
04-07-2010, 01:32 AM
கவிதை அருமை...பகிர்வுக்கு நன்றி!

பின்னூட்டத்துக்கு மிகவும் நன்றி நம்பி அவர்களே.

கீதம்
04-07-2010, 01:33 AM
இறந்தகாலம் இறவாவரம் பெற்றவைத்தான்... ஆனால் அவற்றை கட்டுப் படுத்த உங்கள் மனதால் நிச்சயம் முடியும்... முயலுங்கள்.. கவிதை வரிகள் மிக அருமை. பாராட்டுக்கள்..

மனமார்ந்த நன்றி, ராஜேஷ்.

கீதம்
04-07-2010, 01:34 AM
நினைவுகளின் சுமையை நெடுநாட்கள் சுமப்பது நம்மையே வீழ்த்திவிடும். மறதி காலம் தரும் வரம்தான் எனினும், அதை விரும்பும் உங்கள் தவமும் அவசியம்...:)

நல்ல கவிதை கீதம் அவர்களே...

மிகவும் நன்றி, சசிதரன் அவர்களே.

கீதம்
04-07-2010, 01:38 AM
ஓ..
வயதாக வயதாக
கூன் விழுவது
இதனால்தானோ..?

பாராட்டுகள் கீதம்.

உங்கள் அரிய ஆராய்ச்சி கண்டு அதிசயிக்கிறேன், அமரன்.:icon_b:

இது உண்மையா என்று கூன் விழுந்தவர்களைக் கேட்டால்தான் தெரியும்.:)

பின்னூட்ட அலசலுக்கு மிகவும் நன்றி, அமரன்.

சுடர்விழி
04-07-2010, 02:23 AM
இறந்த காலத்தின் நல்ல நினைவுகளை மட்டும் என்றும் பொக்கிஷமாக்கி விட்டு தேவையில்லாத்தை தூக்கி எறியத் தான் முயல வேண்டும்..உணர்வுகளை இயல்பாக வெளியிட்டதற்கு பாராட்டுக்கள்...

கீதம்
05-07-2010, 10:05 PM
இறந்த காலத்தின் நல்ல நினைவுகளை மட்டும் என்றும் பொக்கிஷமாக்கி விட்டு தேவையில்லாத்தை தூக்கி எறியத் தான் முயல வேண்டும்..உணர்வுகளை இயல்பாக வெளியிட்டதற்கு பாராட்டுக்கள்...

மிகவும் நன்றி, சுடர்விழி.