PDA

View Full Version : உலகத் தமிழ் செம்மொழி மாநாடு (‘கிளம்பிற்றுகாண் தமிழ்ச் சிங்கக்கூட்டம்’)– ஒரு ஆதங்கம்ரவிசங்கர்
27-06-2010, 06:15 PM
அனைவருக்கும் வணக்கம்,

உலகத் தமிழ் செம்மொழி மாநாடு கோவையில் நடப்பது நமக்கு தெரிந்ததே, அதில் ‘கிளம்பிற்றுகாண் தமிழ்ச் சிங்கக்கூட்டம்’ என்ற தலைப்பில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், கவியரசர் வைரமுத்து தலைமையில் கவிஞர்கள் பலர் ‘கலைஞர்’ துதி பாடினார்கள்.

இது உலகத் தமிழ் செம்மொழி மாநாடா? அல்லது ‘கலைஞர்’ துதி பாடும் மாநாடா என்று எண்ணுமளவு புகழாரம்.

இந்த நிகழ்ச்சியில் கவிஞர் நா.முத்துக்குமாரின் தமிழ் உச்சரிப்பு நம்மை ‘மெய் சிலிர்க்க’ வைத்ததை மறக்கவே முடியாது.

‘பள்ளி’யை ‘பல்லி’யாக உச்சரிப்பார் போலும். ஏன் இந்த ‘மொழிக்கொலை’.

‘ள’ வாயில் வரவேயில்லை.

தமிழுக்கு ‘ழ’ மட்டுமா அழகு? ஏன் ‘ள’ அழகில்லையா?.

இவர்கள் சினிமாவிற்கு எழுதும் “கருத்துள்ள” பாட்டுக்களோடு நிறுத்திக் கொள்ளலாமே……..

மேடையில் ஏன் கவிதை பாட(சொல்ல) வேண்டும்.

ஒரு பாமரன் தமிழ் பேசுவதற்கும் (உச்சரிப்பு), கவிஞன் தமிழ் பேசுவதற்கும் (உச்சரிப்பு) வித்தியாசம் இல்லையா?.

பாவம் ‘வைரமுத்து’………

‘தமிழ் எப்படி ஐயா வலரும்?......... மன்னிக்கவும்………. ‘வளரும்’.

தமிழ் இனி மெல்லச்சாகுமோ?.............காலம் தான் பதில் கூற வேண்டும்

வாழ்க தமிழ்! வளர்க அதன் புகழ்!

அமரன்
27-06-2010, 08:22 PM
வாலுமில்லை நூலுமில்லை.. ஆனால் பட்டம் விடுங்கோ என்றால் எப்படி..

ஒளிவீச்சையோ ஒலிவீச்சையோ இணைத்து விட்டால் நானும் ஏதாச்சும் சொல்லுவேன். அதுவரை எவரையும் திட்ட மாட்டேன்.

samuthraselvam
28-06-2010, 04:34 AM
ஆமாம்ங்க அமர் அண்ணா... அது தமிழை கெளரவிக்க நடந்த விழா தான் என்றாலும் பெரும்பாலும் மேடையில் பேசிய அனைவரும் கலைஞர் துதி தான் பாடினார்கள்... பட்டி மன்றத்தில் லியோனி மட்டும் சற்றே வாரினார்...(கலைஞரின் தலையை தான்..ஹா ஹா....எனக்கு சிவா அண்ணா தான் நினைவுக்கு வந்தார்) என்னவோ போங்க.. தமிழுக்கு விழான்னா மகிழ்ச்சிதான்.....

எனக்கு ஒரு சின்ன ஆதங்கம்... நம்ம கலாமை விட்டுட்டாங்களே...

nambi
28-06-2010, 04:36 AM
தமிழ் மாநாட்டில் ஒரே ஆறுதலளிக்கக் கூடிய விஷயம் என்று இப்போதைக்கு என்றால் தமிழ் பயின்றவர்களுக்கு ''தமிழக அரசு வேலைகளில் முன்னுரிமை''...தமிழ் பயிற்று மொழியில் பயின்றவர்களுக்கு அரசு வேலைகளில் முன்னுரிமை....என்ற அறிவிப்பு மட்டும் தான் சாமான்யனாக இருப்பவர்கள் நிலையில் யோசித்தோமானால்....எல்லோரும் அறிஞர்கள் நிலையிலேயே யோசிக்க முடியாதே....முதலில் வயிற்றுக்கு உணவு... அதற்கு பின் தான் செவிக்குணவு....(இது பாமரனின் தத்துவம்...யதார்த்தம்)

''தமிழர்கள் இருவர் சந்தித்தால் தமிழில் பேசவேண்டும்....குறைந்த பட்சம் வீட்டிலாவது தமிழ் பேசவேண்டும்''.....

அப்படியென்றால் இது என்ன? ஊடகங்களில் தமிழின்மை....
(கீழ்வருபவை தாக்குதல் அல்ல...அவலங்கள்...வருத்த்தங்கள்)

(இசையருவி....(மன்னிக்க தமிங்கல அருவி). சன் மியுச்சிக் (இங்கு குறிப்பிடாதவை தமிழ் தேனை காதில் ஊற்றுவதாக கருதக் கூடாது...எல்லாவற்றிலும் ஒரு வண்டி குப்பை உள்ளது...முன்னேறு சரியாக இல்லாவிட்டால் பின்னேறு சரியாக வராது (அகழாது)...கிராமங்களில், விவசாயிகளின் தத்துவம்)
ஒகே டா...
எனிவே...
நெக்ஸ்ட் காலர்....
சீ யு பா பை....
ஹௌ நைஸ்...
யாருக்காக டெடிக்கேட் பன்றீங்க....
ஹௌ சுவிட் யு நோ.....
மியுட் பண்ணிடுங்க...
ஹலோ குட்மானிங்...
தேங்க்யு பார் காலிங்....

''நெஞ்சு பொறுக்குதில்லையே நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மாந்தரை நினைந்து விட்டால்''

(...தமிழர் என்று ஒரு இனமுண்டு தனியே அவருக்கொரு குணமுண்டு.... ஆமாம் தன்னிநிலை மறக்கிற குணமுண்டு...எல்லோருக்கும் எல்லா காலங்களிலும்....தமிழன் தூங்கினால் கும்பகர்ணன், எழுந்தால் இந்திரஜித்....ஆனால் இப்போது தூங்குகிறானா? தூங்குவது போல் நடிக்கின்றானா? அதுதான் தெரியவில்லை....)

இங்கே யார் யார் சந்திக்கிறார்கள்...யார் யார்? பார்க்கிறார்கள்?

தமிழ் படித்தவர்களை தமிழ் நாட்டை சேர்ந்தவர்களே புறக்கணிக்கிறார்களோ...

எந்த ஆங்கில தொலைக்காட்சியிலாவது....வாருங்கள்...உங்களுக்கு என்ன? பாடல் வேண்டும்? என்று கேட்டு வர்ணணை செய்கிறார்களா?
அப்படி ஒரு மாற்றம் வந்தால் நன்றாக இருக்கும்....? ஆங்கிலம் எல்லாம் தமிழாக மாறவேண்டும்....தமிழெல்லாம் ஆங்கிலமாக மாறினால்....தானிக்கு தீனி சரியாகப்போய்விட்டது என்று எண்ணிக்கொள்ளலாம்....

ஏன் இதைமட்டும்?...வழிகாட்டிமரம் தவறான பாதையை காட்டக்கூடாது அல்லவா? மற்றவைகள் எல்லாம் வழிதவறிய மரங்கள்....? காற்றில் பறந்து வந்து விழுந்த வழிதவறிய விதைகளால் உருவான மரங்கள்....அதற்கு பெயர் தப்புச்செடிகள்...வழிதவறிய செடிகள் அது தவறான பாதையைத்தான் காட்டும். ஆகையால் அவற்றை கணக்கில் எடுத்து கொள்ளவில்லை, எடுத்து கொள்ளவும் கூடாது...தமிழ் பயன்படுத்தினால் வணிகம் குறைந்துவிடும் என்று யார் சொன்னது?

இந்தியே காலம் முழுவதும் பயன்படுத்தி வந்த அரசு தொலைக்காட்சியில், அனைத்து மக்களின் வரிப்பணத்தில் இயங்கிய ஒரு தொலைக்காட்சியில் ஒரு தமிழ் பெண்? முதன்முதலில் இதோ உங்களுக்கு பிடித்த பாடல்..... என்று அறிவித்தவுடன் மிகப்பிரபலம் ஆனது அந்த வர்ணணையாளரும் பிரபலமானார்...அந்த நிகழ்ச்சியும் மிகப்பிரபலம் ஆனது.....ஒரு 25 வருடங்களுக்கு முன்னால் அன்று இருந்தது தூர்தர்ஷன் என்ற இந்திய அல்ல இந்தி தொலைக்காட்சி மட்டும் தான் ...?

இப்படி மக்களின் வெறுப்பிற்கு, மனவுளைச்சலுக்கு ஆளாகி கொண்டே ஒரு அரசு தொலைக்காட்சி இயங்கி வந்ததால்...... முதன்முதலாக (தனியார் நிறுவன தொலைக்காட்சி).....தமிழில் நிகழ்ச்சிகளை ஆரம்பத்தில் 2 மணிநேரமாக நடத்தி....அதில் தமிழ் நிகழ்ச்சிகளாக ஜோடி பொருத்தம், வார்த்தை விளையாட்டு...என்று பல்வேறு முழுத்தமிழ் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி பல்வேறு தமிழ் பேசும் மக்களின் மனங்களை குளிர்வித்த ஆனந்த கீதன், மாலா...பேன்ற தமிழ் வர்ணணையாளர்களின் மூலம் மக்களின் பேராதரவை பெற்று.....அதன் மூலம் தமிழ் மாலை என்று குறுகிய மாலையாக இருந்த ஒரு தொலைக்காட்சி...உலக தமிழ்மக்களின் ஒரே மாலையாக, ஒரே தொலைக்காட்சியாக மாறி பல்வேறு நாடுகளில் கொடிகட்டிப் பறக்கிற நிலைக்கு மாறிவிட்டதே...அதன் பலனாக இன்று மேற்கூறியவைகளை விட இன்னும் மோசமாக தமிழை பயன்படுத்துகிறதே அதை எப்படி மாற்றப்போகிறீர்கள் என்று ஒரு அறிவிப்பும் வெளியிடவில்லையே!...இனி தமிழில் தான் நாங்கள் ஒளிபரப்புவோம்...தமிழ் மொழியைத்தவிர தமிங்கலங்களுக்கு இங்கு இடமில்லை என்று அறிவிக்கவில்லையே!....அது மாதிரியான் சூளுரைகளை ஏற்கவில்லையே!....இது தான் குறைந்த பட்ச செயல்திட்டம்....இதையெல்லாம் வகுக்காதது வருத்தமளிக்கிறது. இனிமேல் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்ப்போம்....நம்புவோம்!

இம்மாதிரி மாநாட்டில் பேசினால் தான் தமிழ் எங்கே இருக்கிறது, எந்தளவில் இருக்கிறது என்று தெள்ளத்தெளிவாக தெரியும்...தவறுகளை தெரிந்து கொள்வதற்கும், மொழி வளர்ச்சிக்கான திட்டங்களை வகுத்துக்கொள்வதற்கும் இம்மாதிரி மாநாடுகள் தேவை....இவர்கள் எல்லாம் எப்படி தமிழர்களை, தமிழக தக்களை எடை போடுகிறார்கள் என்பதை மக்கள் எடை போட முடியும்.....

பள்ளியில் நடக்கும் ஒப்பித்தல் போட்டி, பேச்சு போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்களே பல முறை எழுதி ஒத்திகை பார்த்து சிறிய திணறுலுடன் ஒப்பித்து விட்டு போகும் குழந்தைகளை, மாணவர்களை தமிழகங்களில் பெருவாரியாக காண முடியும்...

ஒத்திகையே பார்க்காமல் ஒரு தமிழ் மாநாட்டில் வாய்ப்பளித்தாலும், மக்கள் கடலின் நடுவே பேசவே முடியாதவர்களாக வலம் வருவதை நினைத்து அவர்களே வெட்கித்தலைகுனிந்து கொள்ளவேண்டும். இதில் லகரம், ழகரம், ர, ற.... பயிற்சியெல்லாம் எடுப்பதற்கு நாளாகும்....''ஒரு நரி முதுகிலே கிழ நரி''....என்று ஒரு பாடல் ''ழகர'' உச்சரிப்பிற்காக பாடி பயிற்சி எடுக்கவேண்டும்.

இது பொதுவாக நெல்லை, மதுரை வாசிகளுக்கு ஒரு சில நில வட்டார வழக்கு உள்ளவர்களுக்கு ழகரம் வராது...அதற்கு மேற்கண்ட பயிற்சிகள் அவசியம்...அதை விட்டுத் தள்ளிவிடலாம்...போனால் போகட்டும்....ஆனால் பொது மாநாட்டில் என்ன பேசப்போகிறோம், என்ன சொல்ல வேண்டும், என்று பயிற்சியே எடுத்துக்கொள்ளமல் ஒரு பத்திரிகையாளரே பயிற்சி எடுத்துக்கொள்ளாமல், ஒத்திகை பார்க்காமல் வந்து கலந்து கொள்வது என்னத்தை தமிழ் படித்தார்கள் என்று தான் பலருக்கும் தோன்றுகிறது....இவர்களை பற்றி இவர்களே இவர்கள் பத்திரிகையில் விமர்சனம் எழுதிக்கொள்ளவேண்டும்.

''என் இனிய தமிழ் மக்களே'' என்ற ஒரு வாக்கியம் மட்டும் தான் ஒருவரால் பேசமுடியும் போலிருக்கிறது...அதை விட்டால் ''சிச்சுவேசன்'' எல்லாவற்றிற்கும் 'ஸ்டார்ட்'' ''கிளாப்'' ''கேமரா ரன்னிங்'' என்று சொல்லிக்கொண்டிருக்க முடியுமா? அதான் மக்கள் ''ரன்னிங்'' எடுத்துவிட்டார்கள்.

இது போன்ற குறைகள் பல இருக்கிறது....நிறைகளும் இருக்கிறது....இப்படி குறைகளையும், நிறைகளையும் எழுதி எழுதி இன்புருவோம்...அதை தவிர வேறு என்ன செய்யமுடியும்? இப்போதைக்கு இந்த அளவுடன்....

ஆதி
28-06-2010, 10:54 AM
அமர் செம்மொழி மாநாடு இல்லை, அது மாறு வேடம் போட்ட கழக மாநாடு.. பார்த்து நொந்து போகவேண்டாம்..

ஓவியன்
28-06-2010, 11:00 AM
அமர் செம்மொழி மாநாடு இல்லை, அது மாறு வேடம் போட்ட கழக மாநாடு.. பார்த்து நொந்து போகவேண்டாம்..

பார்த்தேன், ஆனால் நொந்து போகவில்லை ஆதன்..

எதிர்பார்த்ததுதானே..!! :)

____________________________________________________________________________________________________

இனியவை நாற்பது என்ற ஊர்வலத்திற்காக அமைத்திருந்த திருவள்ளுவர் சிலையின் பீடத்தில் ஒரு படம் மாட்டியிருந்தது,
அதனை திருவள்ளுவர் பார்த்திருந்தால் (கால இயந்திரம் மூலமாகத்தான்.. :D) ஒருவேளை திருக்குறளையே எழுதியிருக்க மாட்டார்...!! :D

ஏன் இந்தக் கொடுமை என்று... :icon_ush:

திருவள்ளுவரும், பாரதியாரும் இனி பேசமாட்டாங்கனு நம்மாளுங்களுக்கு நன்றாகவே தெரியுது. :lachen001:

ஆதி
28-06-2010, 11:39 AM
என்ன சொலவது ஓவியன், குறைந்தப்பட்சமாய் சில விஷயங்களை எதிர்ப்பார்த்தேன், ஆனால் நாட்டுப்புற பாடல்கள் பாடவந்தவர்களை "சந்திரமுகி புகழ் சின்னபொண்ணு" சுப்ரமணியபுரம் புகழ் வேல் முருகன் என்று அறிமுக செய்தபோது கொஞ்சம் நெருடலாக இருந்தது.. நான் பார்த்து பெரும்பாலான மேடைகளில் சினிமாக்காரர்கள் இருந்தார்கள்.. இது மக்களை கட்டிப்போடும் முயற்சி என்று சொல்ல இது ஒன்றும் கலைவிழா அல்ல..

சிவா.ஜி
28-06-2010, 12:14 PM
எதிர்பார்த்ததுதான்...ஜூனியர் விகடனில் கழக்குடும்ப விழாவாகவே இதை நடத்தியிருக்கிறார்கலென்று பெரியக் கட்டுரையே போட்டிருக்கிறார்கள். அத்தனைப் பெரிய மேடையில் தமிழறிஞர்கள், வயதானவர்கள் பாவம் நிறக முடியாமல் நிற்கிறார்கள்...தலைவர் குடும்பத்து நண்டு சிண்டுகளெல்லாம் கம்பீரமாய் அமர்ந்திருக்கிறார்கள்.

நம்பி சொன்னதைப்போல தமிழ்வழிக் கல்வி பயின்றவர்களுக்கு அரசுவேலையில் முன்னுரிமை என்ற அறிவிப்புக்காக் வேண்டுமானால் செம்மொழி மாநாடு நடந்ததன் பயனாகக் கருதலாம்.

தலைவருக்கு வயதாகிவிட்டது...இப்போதெல்லம் சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டு...ஜால்ரா சத்தங்களை ரசிப்பதில் சுகம் காண ஆரம்பித்துவிட்டார். ஜால்ராக்களும் அதை செவ்வனே பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

என்னவோ பொங்க....!!!

ஆதி
28-06-2010, 01:33 PM
நா.முத்துக்குமாரின் கவிதையில் ஒரு பொருட்குற்றமும் இருந்தது..

பகுத்தறிவு கடலில்
பெரியார் சிப்பி
அண்ணா மழை
கலைஞர் முத்து

என்று சொல்லி இருந்தார்..

அண்ணா பெரியாரை உள்வாங்கினாரே தவிர, பெரியார் அண்ணாவை உள்வாங்கவில்லை, அப்படி இருக்க..

பெரியார் மழை
அண்ணா சிப்பி
கலைஞர் முத்து

என்று எழுதி இருக்க வேண்டும்..

சிவா.ஜி
28-06-2010, 02:56 PM
மழையும், சிப்பியும் மாறினாலும்...'முத்து' எப்போதும் கருணாநிதியின் சொத்துதானே....

ரவிசங்கர்
28-06-2010, 06:43 PM
அனைவருக்கும் வணக்கம்,

அது மட்டுமல்ல கவிஞர் வாலி தலைமையில் நடந்த கவியரங்கத்தில் (தமிழுக்கும் அமுதென்று பேர்) ஒரு கவிஞர் (தணிகாசலம்) வீணாக, கவியரங்கத்திற்கு சம்மந்தமே இல்லாமல் அயோத்தி இராமன் ஒரு அயோக்கிய இராமன் என்பது சீதைக்கும், பெரியாருக்கும் மட்டுமே தெரியும் எனக்கூறியது நிகழ்ச்சியின் உச்சகட்டம்.

தமிழைப் பற்றி கவிதை பாடச்சொன்னால் ..........கொடுமை ஐயா!...

நண்பர் கூறியது போல்.....

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டிற்கு, நமது முன்னாள் ஜனாதிபதி திரு. அப்துல் கலாம் அவர்கள் ஏன் வரவில்லை?

அழைப்பிதழ் இல்லையா? அல்லது

புறக்கணிக்கப்பட்டாரா?


நன்றி.......

nambi
29-06-2010, 04:50 AM
புறக்கணிப்பு எல்லாம் இல்லை? அழைப்பிதழ் என்பது முன்னாள் குடியரசுத் தலைவர் என்றாலும் அனுப்பப்படும்....கலைஞர் அந்த பண்பாட்டை எல்லாம் மதிப்பவர்...? இந்த நேரத்தில் அப்துல் கலாம் குடியரசுத்தலைவராக இல்லையே? என்ற எண்ணமும் பலருக்கு இருந்திருக்க வாய்ப்பு உள்ளது....முன்னாள் குடியரசுத் தலைவராக இருந்தாலும் அவருக்கு பாதுகாப்பு, கவுரவம் எல்லாம் உண்டு....கமல் கூட கலந்து கொள்ளவில்லை...மரபு பாதிக்கப்படும் (புரோட்டோக்கால்) என்று தவிர்த்திருக்கலாம்....