PDA

View Full Version : கணினி இதழ் - டிஜிட்



பாரதி
26-06-2010, 04:10 PM
அன்பு நண்பர்களே,

நண்பர் தங்கவேல் அவர்களின் பதிவுகள் ஓரளவுக்கு நுகர்வோர் உரிமையைப் பற்றி எடுத்துக்காட்டுகின்றன. எனக்கும் சில அனுபவங்கள் முன்பு நிகழ்ந்திருக்கின்றன. இப்போதைக்கு நடந்தது இது.

நான் டிஜிட் எனப்படும் கணினி மாத இதழுக்கு சந்தா செலுத்தி இருக்கிறேன். முன்பெல்லாம் பிரச்சினை இன்றி இதழைக் கிடைக்கப்பெற்ற நான் கடந்த சில மாதங்களாக சரிவர கிடைக்காமல் அவதிப்பட்டேன். சில முறை நான் பணியில் இருந்த காரணத்தால் என்னாலும் அவர்களை முறையாக கேட்க இயலவில்லை.

இம்மாத இதழ் சிறப்பிதழ் என்பதாகவும் அதனால் தயாரிப்புப் பணிகள் அதிகமானதன் காரணமாக இதழ் அனுப்புவது தாமதமாகும் என முதலில் எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது. பின்னர் 12 ஆம் தேதியன்று 8 ஆம் தேதி பொத்தகம் அஞ்சலில் அனுப்பி வைக்கப்பட்டதாக ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில் பத்து அலுவலக நாட்களுக்குள் பொத்தகம் எனக்கு கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

நானும் பொறுமையாக காத்திருந்தேன். குறிப்பிட்ட நாட்களுக்குள் பொத்தகம் எனக்கு கிடைக்கப்பெறாததால் காரணம் கேட்டு மின்னஞ்சல் அனுப்பினேன். உடனே தானாக பதில் கிடைக்கபெற்றேன் - விரைவில் எனது குறை நீக்கப்படுமென்று பதிலுடன். அது தானியங்கி சேவையாக இருக்க வேண்டும். சில தினங்கள் கடந்தன. பதில் ஒன்றும் இல்லை.

அவர்க்ளே கொடுத்திருந்த அலுவலக தொலைபேசிக்கு அழைப்பு விடுத்தேன். மொத்தம் மூன்று எண்கள்... எத்தனை முறை தொடர்பு கொண்டாலும் யாரும் தொலைபேசியையே எடுக்கக் காணோம்!

மீண்டும் மின்னஞ்சல்.. மீண்டும் தொலைபேசி முயற்சி... என அடுத்தடுத்த தினங்களில் பல முறை முயற்சி செய்து பார்த்தேன். மின்னஞ்சலுக்கும் பதில் இல்லை; அழைப்பிற்கும் பதில் இல்லை.

பொறுத்த நான் கடைசியாக அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பினேன்; உடனடியாக எனது பிரச்சினையை தீர்க்கவும், நான்கு தினங்களுக்கு உட்பட பொத்தகத்தை எனக்கு அனுப்பி வைக்குமாறும், தவறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கத் தயங்க மாட்டேன் என்றும் குறிப்பிட்டேன்.

அடுத்த தினமே மின்னஞ்சலும், அழைப்பும் வந்தன; நான்கு தினங்களுக்குள்ளாக எனக்கு பொத்தகம் கிடைக்குமென்று!! அடுத்த மூன்று தினங்களுக்கு உள்ளாக பொத்தகம் எனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன். பார்ப்போம்.

பாலகன்
26-06-2010, 04:30 PM
நம்ம நாட்டுல யாருமே நுகர்வோர் நீதிமன்றங்களை பற்றி சிந்திப்பது கிடையாது.
அரசியல் வாதிகள் போல புலம்பித்தீ்ர்த்துவிட்டு போவது.. அல்லது சாலை மறியல் செய்வது என்று சென்றுவிடுகின்றனர்.

நீதிமன்றங்களும் அதிக நாட்கள் மாதங்கள் வருடங்கள் எடுப்பதால் தான் இந்த நிலை என்று நினைக்கிறேன்.

பார்ப்போம் மூன்று நாட்கள் கழித்து.

உங்கள் முயற்சி வெற்றியடையவேன்டும்

சிவா.ஜி
26-06-2010, 04:35 PM
என் வீட்டிலும் இந்த புத்தகத்துக்கு சந்தா கட்டியிருக்கிறேன் பாரதி. இந்த மாத இதழ் கிடைத்ததா எனத் தெரியவில்லை. நாளை என் மகனிடம் கேட்க வேண்டும். இல்லையென்றால் உங்கள் வழிமுறையைத்தான் பின் பற்ற வேண்டும்.

விழிப்புணர்வு தரும் பதிவுக்கு நன்றி பாரதி.

பாரதி
27-06-2010, 01:28 PM
கருத்துக்களுக்கு நன்றி பிரபு, சிவா.

பா.ராஜேஷ்
29-06-2010, 02:18 PM
புத்தகம் கிடைத்ததா இல்லையா!!??

பாரதி
29-06-2010, 03:01 PM
புத்தகம் கிடைத்ததா இல்லையா!!??
இன்னும் கிடைக்கவில்லை..:eek:
கூரியர் மூலம் அனுப்புவதாக எனக்கு உறுதி தந்திருந்தார்கள்... நாளை பார்த்து விட்டு அவர்களை ஒரு பிடி பிடிக்க வேண்டும்.

பா.ராஜேஷ்
29-06-2010, 08:51 PM
என்ன கொடும சார் இது!!?

ஆதவா
30-06-2010, 02:22 AM
சட்டப்படி” என்ற வார்த்தையைக் கண்டு பயந்திருப்பார்களோ என்னவோ,,

அமரன்
30-06-2010, 05:38 AM
சட்டப் படி” என்ற வார்த்தையைக் கண்டு பயந்திருப்பார்களோ என்னவோ,,

சட்டப் படிகளை எத்தனை வருசம் மிதிப்பது என்று பயந்திருப்பார்கள்:lachen001:

பாரதி
30-06-2010, 08:01 AM
இப்போது கேட்டதற்கு ஏற்கனவே 25ஆம் தேதியே புத்தகம் அனுப்பி வைக்கப்பட்டதாக கூறுகிறார்கள். ஆனால் அனுப்பியது கூரியரிலா அல்லது மீண்டும் தபாலிலா என்பது சரியாக தெரியவில்லையாம்! விசாரிக்கிறார்களாம்!!!

ஆதவா
30-06-2010, 08:39 AM
இப்போது கேட்டதற்கு ஏற்கனவே 25ஆம் தேதியே புத்தகம் அனுப்பி வைக்கப்பட்டதாக கூறுகிறார்கள். ஆனால் அனுப்பியது கூரியரிலா அல்லது மீண்டும் தபாலிலா என்பது சரியாக தெரியவில்லையாம்! விசாரிக்கிறார்களாம்!!!

புத்தகத்தின் பெயர் “DIGIT" தானே, கம்பனி விளங்கிடும்.. எதில் அனுப்புகிறோம் என்றே தெரியாமல் ஒரு டிஜிட் கம்பனி? :redface:

பா.ராஜேஷ்
01-07-2010, 09:33 PM
பேசாமல் இ-புத்தகமாய் உங்களுக்கு மின்னஞ்சலிலே அனுப்பி இருக்கலாம்... என்னத்த டிஜிட் !!?

தங்கவேல்
03-07-2010, 07:09 AM
பாரதி சந்தா கட்டியதற்கான ரசீதை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். மேலும் உங்கள் ஊரிலேயே இருக்கும் நுகர்வோர் கோர்ட்டில் 200 ரூபாய் கட்டி வழக்கைத் தொடருங்கள். நானே வாதாடுகிறேன் என்று சொல்லி ஆதாரங்களையும், அனுப்பிய ஈமெயில் மற்றும் தொடர்பான ஆதாரங்களையும் சமர்ப்பியுங்கள். நீங்கள் வரி செலுத்துபவராக இருந்தால் இழப்பீடு அதிகம் கிடைக்கும் என்று நினைக்கிறேன். ஒரு வாரம் ஆகும்.

பாரதி
03-07-2010, 11:26 AM
நன்றி தங்கவேல்.

இன்று எனக்கு புத்தகம் வந்து விட்டது. 25 ஆம் தேதி அலுவலகத்தில் இருந்து அனுப்பி இருக்கிறார்கள். ஆனால் மும்பையில் பதிவுத்தபாலில் பதிவு செய்யப்பட்ட தேதி 28.
52 ரூபாய் அஞ்சல் கட்டணத்தை செலுத்தி பதிவுத்தபாலில் அவர்கள் அனுப்பி இருக்கிறார்கள். ஒரு வழியாக இன்று வந்து விட்டது.

இருப்பினும் நுகர்வோர் விழிப்புணர்வு நம் மன்ற உறவுகளிடம் உண்டாகும் வகையில் இப்பிரச்சினைகளை எதிர்கொண்ட விதத்தைப் பகிர்ந்தால் பலருக்கும் பலனுள்ளதாக இருக்கும்.

சிவா.ஜி
03-07-2010, 11:51 AM
எப்படியோ ஒரு வழியாய் வந்துவிட்டது. ஆனாலும்...காசையும் கொடுத்துவிட்டு....இவ்வளவு பாட்டையும் பட வேண்டியிருந்ததே....பேருதான் பெத்தப் பேரு.....செயலெல்லாம் சுத்த வேஸ்ட்.

பா.ராஜேஷ்
03-07-2010, 06:50 PM
இ-புத்தகமே சிறந்தது... பதிப்பகத்தார் விரைவில் அதை தொடங்கினால் யாருக்கும் இவ்வகையான பிரச்சனையை (இந்த அளவுக்கு) வராது..

vseenu
05-10-2011, 08:47 AM
வடிவேலு ஒரு படத்தில் சொன்ன மாதிரி கிணறு வெட்டின ரசீது என்கிட்ட இருக்குனு எப்பவும் பாக்கெட்ல வச்சிக்கணும் போல இருக்கே