PDA

View Full Version : எளியவன்எஸ்.எம். சுனைத் ஹஸனீ
26-06-2010, 12:29 AM
சிதிலமடைந்த
என்னுறுப்புகளைப் போலவே
அரைகுறையாய் தொங்கிக் கொண்டிருந்தது
என்னுயிரும
வலக்கையின் மணிக்கை வரை
முழுவதுமாய் அறுத்து விட்டிருந்தார்கள்
ஒரு பாதி முகத் தோல்
முழுவதுமாய் இழக்கப்பட்டிருந்தது
பின்னந்தலையின் வழியினூடாக
குருதி ஒழுகியது
பின் சட்டையை கிழித்து வெளிப்பட்டது
முதுகு வழியான முதுகந்தண்டு
இரு பாத விரல்களும்
முழுவதுமாய் மழிக்கப்பட்டிருந்தன
நானும் நொந்தபடி நடந்தேன்
நாளை நான் ஏய்க்கவிருக்கும்
எனக்குண்டான எளியவனை நினைத்து.


எஸ்.எம். சுனைத் ஹஸனீ.

அமரன்
03-07-2010, 01:06 PM
பட்டாடைக்காக பட்டுப்பூச்சியின் உயிர்பறிப்பது ஒருவகை.
பசியாற வேட்டையாடுவது இன்னொரு வகை.
பொழுதுபோக்க வேட்டையாடுவது கடைவகை.

நீங்கள் சொன்னது எந்தவகை.

எளியவனை நினைத்து என்பதில் கலந்தோடும் மனக்குமுறல் கவிதையின் இதயத்துடிப்பு.

இதுவே எதிர்பார்த்து போன்ற சொர்பிரயோகங்கள் என்றால் குரோதமாக முடிந்திருக்கும்.

வாழ்க்கையில் தவிர்க்க இயலாத
வாழ்க்கையின் தத்துவங்களில் ஒன்றின் தளத்தில் நின்று
வாழும் கலையை வடித்த கவிதை.

நன்று சுனைத்.

சிவா.ஜி
03-07-2010, 03:50 PM
புரியல....

இந்தமாதிரிக் கவிதைகளுக்குன்னு தனியா ஒரு பகுதி தொடங்கனும் போல....அந்தப் பக்கமே போகாம இருந்திடலாம்....

ஏன்னா இதுக்கு மேல நம்ம அறிவை வளர்த்து முடியாது அதனாலத்தான்.

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
03-07-2010, 08:40 PM
அப்படியெல்லாம் வராம இருந்திராதீங்க சிவாஜிண்ணா. உங்களை நம்பித்தான் இந்த கவிதைன்னு சொல்றத கிறுக்குறோம்.

எவ்வளவுதான் உஷாராக இருந்தாலும் சில இடங்களில் ஏய்க்கப்பட்டு விடுகிறோம். அதுவும் குனிபவன் கிடைத்துவிட்டால் குட்டாமல் இருக்குமா உலகு. அன்று குட்டு வாங்கியவன் நாளை இன்னொருவனை குட்டப்போவது நிச்சயம். அந்த எளியவன் புறத்தில் நின்று எழுதிய கவிதை. இப்பொழுது ஒரு முறை படித்து பாருங்கள் சிவாஜிண்ணா. இனியும் விளங்கவில்லையென்றால் கண்டிப்பாக குறை உங்களுடையதல்ல. என்னுடையதே.

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
03-07-2010, 08:44 PM
சரியாக சொன்னீர்கள் அமரா. ஏறக்குறைய பசியாறுவதற்காக வேட்டையாடும் வகைதான் இது. தங்கள் ஆளுமைப்பசிக்காக எளியவர்களை வேட்டையாடித் தின்னும் ஒரு வகையினர். கருத்துக்கு மிக்க நன்றி அமரா.

கீதம்
04-07-2010, 01:29 AM
கவிதையின் வார்த்தைகள் சற்றே கலவரப்படுத்துகின்றன, எனினும் அதிலிருக்கும் உண்மை ஒப்புக்கொள்ளவைக்கிறது. மிகுந்த பாராட்டுகள் சுனைத் ஹஸனீ அவர்களே.

இக்கவிதை ஆதனின் துரோகத்தின் கத்தி கவிதையை எனக்கு நினைவூட்டுகிறது.

சிவா.ஜி
07-07-2010, 01:20 PM
இப்பவும் ஒரு சின்னக் குழப்பம் ஜுனைத்

இந்த வரிகளில்...

"சிதிலமடைந்த
என்னுறுப்புகளைப் போலவே
அரைகுறையாய் தொங்கிக் கொண்டிருந்தது
என்னுயிரும....

நானும் நொந்தபடி நடந்தேன்..."

அரைகுறையாய் தொங்கிக்கொண்டிருப்பது அவனுயிர் என்றால்...அவன் பார்த்த அந்த பாதி தோல் கிழிந்த முகம், முதுகைத் தாண்டி வந்த முதுகுத்தண்டு.....யாருடையது....

அந்த நிலையிலிருக்கும் ஒருவனை பார்த்தவன் நொந்தபடி நடக்கிறானென்றால்....அவனுயிர் ஏன் அரைகுறையாய் தொங்குகிறது....

நீங்கள் சொன்ன விளக்கத்தை கவிதையுடன் பொருத்திப்பார்த்தேன்....எனக்குப் பொருந்தவில்லை...அதனால்தான் சொல்கிறேன்.....நான் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய நிறைய இருக்கிறது என்று. உங்கள் கவிதையில் நிச்சயம் குறையில்லை ஜுனைத். நீங்களெல்லாம் நிஜக் கவிஞர்கள்.

ஆதி
07-07-2010, 01:34 PM
//அரைகுறையாய் தொங்கிக்கொண்டிருப்பது அவனுயிர் என்றால்...அவன் பார்த்த அந்த பாதி தோல் கிழிந்த முகம், முதுகைத் தாண்டி வந்த முதுகுத்தண்டு.....யாருடையது....//

அண்ணா, இது எல்லாம் அவனுடையது, தன் நிலையை விவரிக்கிறான்..

நானும் நொந்தபடி நடந்தேன்
நாளை நான் ஏய்க்கவிருக்கும்
எனக்குண்டான எளியவனை நினைத்து.


இந்த வரிகளை திரும்ப வாசிங்க..

சிவா.ஜி
07-07-2010, 01:42 PM
புரியுது ஆதன். ஆனால் இந்த "இழக்கப்பட்டிருந்தது, மழிக்கப்பட்டிருந்தன" என்ற சொற்பிரயோகங்கள்தான் குழப்பிவிட்டன.

விளக்கத்துக்கு நன்றி ஆதன்.

nambi
07-07-2010, 01:56 PM
எளியவன் பற்றிய கவிதை நன்று. விளக்கியவர்களுக்கும் நன்றி! பகிர்ந்தவருக்கும் நன்றி!

shibly591
07-07-2010, 02:08 PM
நல்ல கவிதை

பாராட்டுக்கள் சுனைத்

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
08-07-2010, 02:10 PM
நீங்களெல்லாம் நிஜக் கவிஞர்கள்.

இப்டி உசுப்பி விட்டு உசுப்பி விட்டே உடம்ப ரண களமாக்கிட்டீங்களே சிவாஜிண்ணா.
பாராட்டுக்களுக்கு மிக்க நன்றிகள்.

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
08-07-2010, 10:25 PM
பின்னூட்டமிட்ட ஆதனுக்கும் ஸிப்லிக்கும் மிக்க நன்றிகள்.