PDA

View Full Version : ஜெனி என்கிற ஜெனிபர் மரியா...



சசிதரன்
25-06-2010, 01:08 PM
அறிமுகம் அவளுக்கு
அவசியமில்லை...

சின்ன புன்னகையில்
உங்கள் இதயம் நுழைபவளை...
யாரென்று கேட்டு
தடுப்பீர்களா என்ன...

ஓர் நாளில்
ஓராயிரம் முறை..
பெயர் சொல்லி மிரட்டுவாள்..

அவள் உதடுகள்
உங்கள் பெயர் சொல்ல
உங்கள் இதயம்...
ஏங்க தொடங்கும்..

ஏதேனும் பேசிக் கொண்டே..
உங்கள் நேரம் முழுதும்
தின்று தீர்ப்பாள்...

கேள்விகளால் துளைத்தெடுப்பாள்..
விடை தேடி சொல்லும் முன்னே..
அடுத்த கேள்வி
வீசிப் போவாள்..

பதில்கள் யாவும் தேவைப்படாத
கேள்விகளால் நிரம்பி போகும்
உங்கள் உலகம்..

கோபம் வந்தால்..
மௌனம் உடுத்தி கொள்வாள்..
நீண்ட நேரம் கெஞ்சுவீர்களானால்...
மிக அழகாய் ஓர்
புன்னகை வீசுவாள்.

உங்களை சிறுகுழந்தையாய்
உணர்ந்திருக்கிறீர்களா...
உணர வைப்பாள்...
ஒரு நாள் போதும் அவளுக்கு..

கண்களில் கண்ணீர் வர
எப்பொழுது கடைசியாய் சிரித்தீர்கள்...
சிரிக்க வைப்பாள்...
ஒரு நிமிடம் போதும் அவளுக்கு..

எதிர்பாரா முத்தம் தந்து...
உங்கள் மூச்சையே
நிறுத்தி வைப்பாள்...
ஒரு நொடி போதும் அவளுக்கு...

அவளை
"ஜெனி" என்றழைத்தால்
பிடிக்காது அவளுக்கு...

அவளே சொல்வதானால்..
"ஜெனி இல்ல...
ஜெனிபர் மரியா... 1st standard"

அறிமுகம் அவளுக்கு
அவசியமில்லை...

சின்ன புன்னகையில்
உங்கள் இதயம் நுழைபவளை
தடுப்பீர்களா என்ன...

சிவா.ஜி
25-06-2010, 03:20 PM
கலக்கிட்டீங்க சசி....ஹேட்ஸ் ஆஃப். கண்முன்னால் வந்து செல்லம் கொஞ்சுகிறாள் ஜெனி...இல்லையில்லை ஜெனிஃபர் மரியா. வார்த்தைகள் வெகு இயல்பாய்...உற்சாகமாய்....வந்து விழுந்திருக்கின்றன.

ஜெனி...சின்னப் புன்னகையோடு என் இதயத்தில் நுழைந்துவிட்டாள்.

வாழ்த்துக்கள் சசி.

அமரன்
25-06-2010, 06:09 PM
ஜெனி என்கிற ஜெனிபர் மரியா...

வசீகரித்து விட்டாள்..

பிஞ்சுகள் எப்போதும் புதிதாய் ஓருலகை உருவாக்கி விடுகிறார்கள்.

கொஞ்சும் கவிதை சசி.

பூமகள்
26-06-2010, 02:53 AM
குழந்தையை இதை விட அழகாய் யாரும் சுட்ட முடியாது. அவர்களின் ஒவ்வொரு அசைவும் அழகு. வரிகளில் என்னைக் கட்டிப் போட்டுவிட்டீர்கள்.

ஜெனி - விண்ணைத் தாண்டி வருவாயா பாதிப்போ சசி..

இறுதி வரி வரும் வரையில் காதலியைச் சொல்வது போலவே இருந்தது. பாராட்டுகள் சசி. கலக்கிட்டீங்க.

த.ஜார்ஜ்
26-06-2010, 05:32 AM
கவிதைகள் புரிந்து கொள்ளும் அறிவு என்னிடம் இல்லாததால் இந்த பக்கம் அதிகம் வந்ததில்லை.உங்கள் தலைப்பு என்னை வரவைத்தது. செல்ல சிணுங்கலோடு ஜெனியும் ... சாரி... கவிதையும் என் கழுத்தில் கை போட்டு தோளில் தலை சாய்த்துக கொண்டது. செல்ல குட்டி..புஜ்ஜு குட்டி...

kulirthazhal
26-06-2010, 06:23 AM
அழகு! அழகு! இயல்பான உணர்வுகள் வரிகளுடனே பயணப்படும்போது குழந்தை கண் முன்னே தெரிகிறது... அது என் வீட்டு குழந்தைதான்..... பெயர் ஜெனி என்று சொல்கிறது கவிதை.... இனிமை! இனிமை!

சசிதரன்
26-06-2010, 10:37 AM
வாழ்த்திய அணைத்து சொந்தங்களுக்கும் நன்றிகள்...:)

@பூமகள்..
//ஜெனி - விண்ணைத் தாண்டி வருவாயா பாதிப்போ சசி.//

ஹா ஹா ஹா... இவள் என் நண்பனுடைய அண்ணன் மகள்.. இதில் எழுதியிருப்பவை நான் உணர்வுப்பூர்வமாய் அனுபவித்தவை...:) :):)

பாலகன்
26-06-2010, 10:52 AM
என்னாது ஜென்னியா? நல்லவேளை சின்ன பெண்
நான் நம்ம ஆளோன்னு நினைச்சேன் :)

இன்பா
26-06-2010, 11:26 AM
மிகவும் அழகாய், ஆழமாய் சொல்லியிருக்கிறீர்கள்.

பாராட்டுக்கள்...


என்னாது ஜென்னியா? நல்லவேளை சின்ன பெண்
நான் நம்ம ஆளோன்னு நினைச்சேன் :)

பேரக் கேட்டாலே அதிருதுல்ல... :lachen001:

shibly591
30-06-2010, 10:41 AM
அழகான கொஞ்சும் கவிதை...பாராட்டுக்கள்

ஆதவா
30-06-2010, 04:09 PM
அறிமுகமற்ற அறிமுகமே இவ்வளவு இனிமையா ஜெனிக்கு, ஓ மன்னிக்கவும், ஜெனிபர் மரியாவுக்கு...

நன்றாக இருக்கிறது சசி. இயல்பாக, நேர்த்தியாக, எளிமையாக,....

பா.ராஜேஷ்
30-06-2010, 06:34 PM
மிக அருமை சசிதரன்.. கலக்கீட்டீங்க...

சசிதரன்
01-07-2010, 06:19 AM
நன்றி நண்பர்களே...:)