PDA

View Full Version : உறைந்த இரவு...

சசிதரன்
25-06-2010, 01:05 PM
நெடுநேரம் கேட்டிருந்த...
வழிதவறிய
ஒற்றை பறவையின் குரல்...
நின்று விட்டிருந்தது.

ஓர் பெருமழையினின்று...
சேகரித்த துளிகளை
கண்ணீரென சிந்தி கொண்டிருந்தது...
சாலையோர புங்கமரம்.

நிலவற்ற ஓர்
இரவு நேர வனமென...
அடர்ந்திருந்தது தனிமை.

உலர்ந்த உதடுகளில்...
இரை விழுங்கிய
ஓர் பாம்பென...
வார்த்தைகளை தின்று
அசையாதிருந்தது மௌனம்.

நான் மட்டுமே என்னோடு
உடனிருக்கும் தருணங்களில்...
மெல்ல தோள் தொட்டு
உடனமர்ந்து கொள்கிறது
புறக்கணிப்பின் பயங்கள்....

புறக்கணிப்பின் தடயம்
அழுந்த பதிந்த தருணங்கள்
குளிர் இரவென
சூழ்ந்திருக்கிறது

நீண்டு கொண்டேயிருக்கும்
இந்த இரவு...
அடுத்தடுத்த இரவுகளுக்கான
பயங்களை விதைக்கிறது.

இரவின் குளிர் தாங்காது
எரிக்க தொடங்குகிறேன்
என் கனவுகளை...

கனவுகளை மீட்டெடுக்க
ஆசைப்படும் நாளில்..
பற்றியெரியும் கனவுகளை அணைக்க
கண்ணீர் துளிகள் தேவைப்படலாம்..
அதிகமாகவே.

சிவா.ஜி
25-06-2010, 03:36 PM
அசத்தலானக் கவிதை. தனிமையில் கழிவிரக்கம் கொள்ளும் மனது, புறக்கணிப்பின் பயத்தில்...இரவைக் கழித்தாலும், விடிவதையே அடுத்த இரவுக்கான தொடக்கமாய்க் கருதி...பயம் கொள்ளும் தடுமாற்ற மனது.

இரைவிழுங்கிய பாம்பாக மௌனம், பெருமழைத் துளியை கண்ணீராய் சிந்தும் புங்கமரம்...என கவிதை நெடுகிலும்...முழுமையானக் கவிதை சொல்லும் வார்த்தையாடல்கள்.

மிக அருமை சசி. வாழ்த்துக்கள்.

அமரன்
25-06-2010, 06:05 PM
வெற்றிக் கவிஞனை மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி.

பகற் கனவுகள் தானே எரியூட்டப்படுகின்றன. பயப்படத் தேவை இல்லை.

அழுங்கள்..
கண்ணீரில் கரைந்து
முக்தி அடையட்டும்
கனவுகளின் அஸ்தி!

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
26-06-2010, 12:43 AM
பற்றியெரியும் கனவுகளை அணைக்க
கண்ணீர் துளிகள் தேவைப்படலாம்..
அதிகமாகவே.

மிகச் சரியான கவிதைக்கு அமைந்த சரியான வார்த்தைப் புழங்கல். இறங்க மாட்டேன் என அடம் பிடிக்கும் சில கனவுகள் இறுதியல் கண்ணீர் துளிகளில் காணாமல் போகின்றன. நிதர்சனம் சொல்லும் கவிதை. பாராட்டுக்கள் சசி.

சசிதரன்
26-06-2010, 10:31 AM
அசத்தலானக் கவிதை. தனிமையில் கழிவிரக்கம் கொள்ளும் மனது, புறக்கணிப்பின் பயத்தில்...இரவைக் கழித்தாலும், விடிவதையே அடுத்த இரவுக்கான தொடக்கமாய்க் கருதி...பயம் கொள்ளும் தடுமாற்ற மனது.

இரைவிழுங்கிய பாம்பாக மௌனம், பெருமழைத் துளியை கண்ணீராய் சிந்தும் புங்கமரம்...என கவிதை நெடுகிலும்...முழுமையானக் கவிதை சொல்லும் வார்த்தையாடல்கள்.

மிக அருமை சசி. வாழ்த்துக்கள்.

ரொம்ப நன்றி சிவா அண்ணா.. நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் பாராட்டு பெறுவதில் ரொம்ப சந்தோசம்...:)

சசிதரன்
26-06-2010, 10:32 AM
வெற்றிக் கவிஞனை மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி.

பகற் கனவுகள் தானே எரியூட்டப்படுகின்றன. பயப்படத் தேவை இல்லை.

அழுங்கள்..
கண்ணீரில் கரைந்து
முக்தி அடையட்டும்
கனவுகளின் அஸ்தி!

உங்கள் தனித்துவமான பாராட்டு என்றும் நான் எதிர்ப்பார்க்கும் ஒன்று அமரன்... நன்றி...:)

சசிதரன்
26-06-2010, 10:33 AM
பற்றியெரியும் கனவுகளை அணைக்க
கண்ணீர் துளிகள் தேவைப்படலாம்..
அதிகமாகவே.

மிகச் சரியான கவிதைக்கு அமைந்த சரியான வார்த்தைப் புழங்கல். இறங்க மாட்டேன் என அடம் பிடிக்கும் சில கனவுகள் இறுதியல் கண்ணீர் துளிகளில் காணாமல் போகின்றன. நிதர்சனம் சொல்லும் கவிதை. பாராட்டுக்கள் சசி.

ரொம்ப நன்றி எஸ்.எம். சுனைத் ஹஸனீ..:)

பா.ராஜேஷ்
30-06-2010, 06:54 PM
நன்றாக எழுதி உள்ளீர்கள் சசிதரன். பாராட்டுக்கள்..

சசிதரன்
01-07-2010, 06:05 AM
நன்றி ராஜேஷ்...:)