PDA

View Full Version : தமிழ்ப் பெண்ணாகப் பிறக்கவில்லையே என்று ஏங்குகிறேன்



அன்புரசிகன்
25-06-2010, 12:07 PM
தமிழ்ப் பெண்ணாகப் பிறக்கவில்லையே என்று ஏங்குகிறேன் : ஜெர்மன் பேராசிரியர் (http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=24752)_ நன்றி வீரகேசரி இணையம் 6/24/2010 5:21:03 PM http://www.virakesari.lk/news/admin/images/german-professor.jpg தமிழ் இலக்கியங்களைப் படிக்கும் போதெல்லாம், நான் ஏன் தமிழ்ப் பெண்ணாகப் பிறக்கவில்லை என்ற ஏக்கம் எனக்கு வந்ததுண்டு என்று ஜெர்மனிய பல்கலை தமிழ் ஆராய்ச்சித்துறை பேராசிரியை கூறினார்.

உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் இன்று இடம்பெற்ற தமிழ் ஆய்வரங்கத்தில் பங்கேற்ற வெளிநாடு வாழ் தமிழ் அறிஞரும் ஜெர்மனிலுள்ள 'ஜூகொலின்' பல்கலை தமிழ் ஆராய்ச்சித்துறை தலைவருமான வுல்ரிக் நிக்லஸ் என்பவரே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் கூறியதாவது :

"ஜெர்மனிலுள்ள ஜூகொலின் பல்கலை கழகத்தில் நான்கரை ஆண்டுகளாக தமிழ்ஆராய்ச்சித்துறை தலைவராக இருந்து வருகிறேன். தமிழ் இலக்கியத்தில் எனக்கு ஆர்வம் உண்டு. தொல்காப்பியம், திருவாசகம், தேவாரத்தை முற்றிலுமாக படித்து முடித்து அதில் ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளேன்.

கல்கி எழுதிய சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு ஆகியவை எனக்கு அத்துப்படி. தமிழ், பாரம்பரியமான, முதன்மையான, தொன்மையான மொழி என்பதை கடந்த 5 ஆண்டுகால தமிழ் ஆராய்ச்சியின் மூலமாக தெரிந்து கொண்டேன்.

ஆனால் எனக்கு சிறுவயது முதலே தமிழில் ஈடுபாடு அதிகம். ஏனென்றால் நான் நடிகர் சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்களை ஒன்று விடாமல் பார்ப்பேன். நடிகர் சிவாஜி கணேசனின் வீரம் செரிந்த வீரபாண்டிய கட்டபொம்மன் வசனத்தை திரும்ப திரும்ப பார்ப்பதுண்டு.

உ.வே.சா. தமிழுக்கு செய்த தொண்டு மகத்தானது. தமிழ் தனித்துவமான மொழியாக இருப்பதால் தனியானதொரு இலக்கணம் ஏற்படுத்துப்பட்டுள்ளது. இதிலுள்ள இலக்கணம் எந்த ஒரு மொழியிலும் இல்லை. ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல் போன்ற சங்ககால இலக்கியங்களை படித்துள்ளேன்.

அதிலுள்ள வரிகள் அதற்குரிய அர்த்தங்களைப் படித்தால் நான் ஏன் தமிழ்ப் பெண்ணாகப் பிறக்கவில்லை என்ற எண்ணம் எனக்கு அடிக்கடி தோன்றுகிறது. அதனால் நான் பாண்டிச்சேரியை சேர்ந்தவரை என்னுடைய கணவராக ஏற்றுக்கொண்டேன்.

பிறப்பில் ஜெர்மனியை சேர்ந்தவளாக இருந்தாலும், என்னுடைய புகுந்த வீடு தமிழகம். எனக்கு பாண்டிச்சேரியில் சொந்த வீடு உள்ளது. அதனால் ஆண்டுக்கொருமுறை தமிழகம் வருவேன். வரும்போதெல்லாம் தமிழகத்திலுள்ள தமிழறிஞர்களைச் சந்திப்பது வழக்கம்.

தமிழில் ஏற்படுத்தப்பட்டுள்ள புதுமையை பற்றியும் தெரிந்து கொள்வேன். புதிய புத்தகங்கள், புதிய கட்டுரைகளை வாங்கிப் படிப்பேன். எனக்கு நவீன கால கவிதைகள் எனக்கு ரொம்பப் பிடிக்கும், கவிஞர் வைரமுத்து எழுதும் கவிதைகளை ஒன்று விடாமல் படித்துவிடுவேன்.

மேலும் தமிழ் வளர்ச்சி குறித்தும், தமிழ் நிகழ்வுகள் எங்கு நடந்தாலும் அதில் பங்கேற்று பதிவு செய்து கொள்வதோடு, தமிழ் நண்பர்களோடு அடிக்கடி தொடர்பு வைத்துக்கொள்வேன்."

இவ்வாறு பேராசிரியர் வுல்ரிக் நிக்லஸ் கூறினார்.

சிவா.ஜி
25-06-2010, 12:17 PM
இதை நம்ம முத்தமிழ் காவலரின் புத்திரர் பிள்ளைகள் படிக்கட்டும். ரெட்ஜெயண்ட், ராயல் ஏஜன்ஸீஸ், சன் நெட்வொர்க், இதெல்லாம்...முத்தமிழில் உள்ளதா என தெரிந்துகொள்ளட்டும்.

தமிழ்நாட்டு மருமகளுக்கு தலை வணங்குகிறேன்.

கலையரசி
25-06-2010, 03:13 PM
ஹூம். தமிழின் மேன்மை நம்மவரை விட அயல் நாட்டினர்க்கு நன்றாகத் தெரிகிறது. பகிர்வுக்கு நன்றி.

அமரன்
25-06-2010, 05:04 PM
அய்யன் சொல்லை குறிப்பாக விருந்தோம்பலை வேறெந்த மொழியிலும் காணவில்லை என்று வியந்து போற்றியவரும் ஜேர்மனைச் சேர்ந்த ஒருவர்தான். இந்தளவுக்கும் ஜேர்மனியர்கள் அதி துவேசிகள் என்பதும் உண்மை.

மகிழ்ச்சி.

தமிழ்ப்பொண்ணாகப் பிறந்தால் என்னென்ன விபரீதம் என்பதையும் இவருக்கு ஆராவது எடுத்துச் சொல்லுங்கோ.

அன்புரசிகன்
25-06-2010, 11:06 PM
யாருக்குத்தான் துவேசம் இல்லை??? எங்கும் இருக்கிறது. நமக்கில்லையா???

அந்த ஆர்வலரின் கருத்து உண்மையிலேயே தமிழின் மகிமையாலா??? இல்லை அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை என்பதாலா?

aren
26-06-2010, 08:32 AM
வெளியே இருப்பவர்களுக்கும் நம்முடைய தமிழின் அருமை தெரிந்திருக்கிறது, நமக்குத் தெரியவில்லை.

nambi
27-06-2010, 05:12 PM
பயனுள்ள பகிர்வு....பகிர்வுக்கு நன்றி!

செல்வா
28-06-2010, 04:56 AM
தமிழ்ப்பொண்ணாகப் பிறந்தால் என்னென்ன விபரீதம் என்பதையும் இவருக்கு ஆராவது எடுத்துச் சொல்லுங்கோ.


யாருக்குத்தான் துவேசம் இல்லை??? எங்கும் இருக்கிறது. நமக்கில்லையா???

அந்த ஆர்வலரின் கருத்து உண்மையிலேயே தமிழின் மகிமையாலா??? இல்லை அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை என்பதாலா?

சுடவைக்கும் உண்மைகள் அமரன் மற்றும் அன்பு.

உயர்வு நவிற்சியும்
நம்மைப் பற்றிப் பேசும்போது வெறும் நல்லவைகளை மட்டுமே எடுத்துக் காட்டிப் பேசியவர்கள் தான் அதிகம். எல்லா நாட்டு வரலாறுகளிலும் இரத்தக்கறைகள் படிந்துள்ளன.

மிகைப்படுத்திக் கூறுதல் தமிழ் இலக்கியங்களில் மிக அதிகம். இதை கவிதைக்கு அழகு என்று ஏற்றுக் கொண்டுவிட்டோம்.

இத்தகைய பழம் பெருமை இனியும் பேசிக் கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடில்லை.

இவைகள் நடப்பை விடுத்து கனவுநிலையிலாழ்த்தும் விசயங்கள்.

தமிழ் சிறந்த மொழி தமிழின் சொல்வளமும் பொருள் வளமும் கவிவளமும் நிறைந்தது என்ற ஜெர்மானியப் பேராசிரியரின் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.

ஒரு குழந்தையை வீட்டுக்கு வெளியே தான் புகழ வேண்டும் வீட்டுக்குள்ளே அக்குழந்தையிடமிருக்கும் குற்றமும் குறைகளையும் அலசித் திருத்த வேண்டும் அதனால் நமக்கு நாமே பெருமை பேசுவது விட்டுவிட வேண்டியது.

janagan
28-06-2010, 05:30 PM
.

ஒரு குழந்தையை வீட்டுக்கு வெளியே தான் புகழ வேண்டும் வீட்டுக்குள்ளே அக்குழந்தையிடமிருக்கும் குற்றமும் குறைகளையும் அலசித் திருத்த வேண்டும் அதனால் நமக்கு நாமே பெருமை பேசுவது விட்டுவிட வேண்டியது.

தமிழ் உங்களுக்கு குழந்தையா....? என்னைப் பொறுத்தவரை தாயின் பெருமையை வீட்டுக்குள்ளும் பேசலாம்!