PDA

View Full Version : மொத்தமாய் பாரடா!



lenram80
24-06-2010, 05:49 PM
நிறைகளை குரல் வளை மட்டும்
குறைகளை வானம் தொட்டும்
கனப்படுத்தும் என் கணவா!
அருகில் வா! அறிவுரை கூறுகிறேன்!

அருகில் பார்த்தால் குழிகளாய்!
அண்ணாந்து ரசித்தால் வனப்பாய் வட்டமாய் - நிலா!

தனித்துப் பார்த்தால் எழுத்தாய்!
தொகுத்துப் படித்தால் கவியாய்!

சளித்துப் பார்க்காதே!
குவித்துப் பார்!

அணுவாய் பார்க்காதே!
மொத்தமாய் அணைத்துப் பார்!

மாசற்ற மலர் நான்!
குறையற்ற குறள் நான்!
என்று நானா சொன்னேன்?

எனக்கும்
இருமல், தும்மல் வரும்!
இடை, எடை கூடும்!
எப்போதும் சிரித்தாலும்
நானும் சிக்கலானவள் தான்!

நட்சத்திரமாய் பார்ப்பாயா?
பிரபஞ்சமாய் பார்ப்பாயா?

விழி திறந்து விசாலமாய் பாரடா!
உன் அடி முழுதும் என் அன்பு வேரடா!

கீதம்
27-06-2010, 10:49 PM
சிலவற்றை தூரநின்று ரசித்தால் அழகு.
சிலவற்றை அருகிருந்து ரசித்தால் அழகு.
எதை எங்கு, எப்படி ரசிப்பது என்பது ஒரு கலை.
அதைக் கற்றுத்தரும் மனைவியின் கவிதை அழகு.
பாராட்டுகள் லெனின் அவர்களே!

lenram80
01-07-2010, 07:17 PM
படித்தலுக்கும், பதிலுக்கும் நன்றி கீதம் !!!

govindh
01-07-2010, 07:40 PM
மனைவியின் அன்பு அறிவுரை
கணவனின் காதுகளுக்கு எட்டியதா...?

நெஞ்சில் நிறைந்தால்...
இல்லறம் இனிக்கும்.

பாராட்டுக்கள்.

அமரன்
01-07-2010, 08:32 PM
இனி
குறைப்பது கடினம்
எடை.

அதனால் தானோ
மொத்தமாய்ப் பாரடா என்ற
தலை!

குறை இல்லாத எதுவும்
நிறைவே இல்லை.
குறைகளை மட்டும் கண்டால்
நிறையே இல்லை.

இல்லறத்தில் மட்டும்மில்லை
எல்லா இடத்திலும் பொருந்தும் கதை.

பாராட்டுகள் லெனின்.

nambi
01-07-2010, 08:54 PM
எல்லாவற்றையும் அவனே வர்ணித்துவிட்டு பின் அவனே குறை சொன்னால் எப்படி? நானா அப்படி சொல்ல சொன்னேன்! மனைவியின் அங்கலாய்ப்பு சரிதான்!....கவிதை அருமை பகிர்வுக்கு நன்றி!

பா.ராஜேஷ்
01-07-2010, 09:27 PM
அருமையான கவிதை வரிகள், உவமேயங்கள் ... பாராட்டுக்கள் நண்பரே..