PDA

View Full Version : நீண்ண்ண்ண்ண்ண்ட நேரம் நடந்த டென்னிஸ் போட்டி



மதி
24-06-2010, 05:21 PM
கடந்த மூன்று நாட்களாக நடந்த ஒரு போட்டி இது.. 11 மணி நேரம் ஐந்து நிமிடங்கள் நடந்த இந்த விம்பிள்டன் போட்டியில் அமெரிக்காவின் இஸ்னெர் வெற்றி பெற்றார்.. இவர் ப்ரான்ஸ் நாட்டின் நிக்கோலா மஹத்தை 6-3, 4-6, 6-7, 7-6, 70-68 என்ற செட்களில் தோற்கடித்தார்.

இத்தனை மணி நேரம் நிலைத்து விளையாடி சரித்திரத்தில் இடம் பெற்ற இரு வீரர்களுக்கும் பாராட்டுக்கள்..!!

http://en.wikipedia.org/wiki/2010_Wimbledon:_Mahut%E2%80%93Isner_match

செல்வா
24-06-2010, 07:07 PM
அடடே... உண்மையிலே ஆச்சரியமான விசயம்தான். உண்மையிலேயே அசாத்தியமான உடல்வலு இருவருக்கும்.

பகிர்வுக்கு நன்றி மதி.

அமரன்
24-06-2010, 07:36 PM
சாதனை நாயகர்களுக்கு வாழ்த்து!

aren
25-06-2010, 05:00 AM
ஆமாம், இது ஒரு செம்ம ரெக்கார்ட். அதுவும் கடைசி செட் ஆடின நேரம் இதுக்கு முந்தின மொத்த மாட்சின் ரெக்கார்ட் நேரத்தைவிட அதிகம்.

ஐயோ பாவம் இவர்கள் இருவருக்கும் இப்போ நல்ல மசாஜ் தேவைபடும் என்றே நினைக்கிறேன்.

பாரதி
25-06-2010, 05:40 AM
நேற்று கிரிக் இன்ஃபோ வலைத்தளத்தில் மட்டைப்பந்து போட்டி வர்ணனையின் போது இடையில் அவர்கள் இருவரின் பெயர்களை மட்டும் குறிப்பிட்டார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. போட்டி முடிந்த பின்னரே விளங்கியது! கடைசியில் என்றாலும் சளைக்காமல் போராடும் மனம் படைத்த அந்த வீரர்கள் இருவரும் பாராட்டுக்குரியவர்கள் என்பதில் ஐயமே இல்லை.

தாமரை
25-06-2010, 06:49 AM
ஜெயிச்ச இஸ்னெர் அடுத்த போட்டியில ஆடணுமே...

அதலயும் ஜெயிக்கட்டும் என வாழ்த்துவோமாக...

ஜெய்ச்ச வாட்டி இஸ்னெர் என்ன செஞ்சாராம்?

இஸ்ஸ்.......ன்னாராம்..

சிவா.ஜி
25-06-2010, 07:02 AM
70:68 ஆஆஆஆஆஆஆ....செமப் போராட்டம். விடாம வெள்ளாண்டிருக்காங்க....

ரெண்டு பேருக்குமே பாராட்டு.