PDA

View Full Version : பயம்



எஸ்.எம். சுனைத் ஹஸனீ
23-06-2010, 03:57 PM
இன்னும் இரவு முடிந்திருக்கவில்லை
அவர்கள் அழுது கொண்டிருந்தார்கள்
அவர்களுடன் சேர்ந்து அவர்களின்
ஒடிசல் கூரையும் அழுதது,
அவர்களுடனான ஒப்பாரிகளுக்கு
சூழ் வாழ் இரவு ஜந்துக்களும்
ஒப்பிசைத்துக் கொண்டிருந்தன
இன்னும் இரவு முடிந்திருக்கவில்லை,
வெளுக்கவிருக்கும் பகல் வெண்மையை
அவிழக்கிடக்கும் அவர்கள் அந்தரங்கங்களை
உச்சுக்கொட்டப்படும்
அவர்கள் மீதான் பச்சாதபங்களை
எண்ணியபடி அவர்கள் ஓலம் நீண்டது
ஆர்ப்பரித்த இரவு அடங்கியது
ஆரவாரமின்றி பகல் விடிந்தது
அவர்கள் பயந்ததெதுவும்
நடந்தேறியிருக்கவில்லை
இனியும் அவர்கள் அழலானார்கள்
வரவிருக்கும் இரவைப் பயந்து.


எஸ்.எம். சுனைத் ஹஸனீ

பாலகன்
23-06-2010, 04:49 PM
இரவை மட்டுமா பார்த்து பயந்தார்கள்?
ஓலை குடிசையில் மழை பெய்து ஒழுகி தூங்க முடியாமல் போனதோ என்று நினைத்தேன்.

குடிசை வாசிகள் இரவை நன்றாக கழிப்பார்கள் என்று தானே கேள்வி... வெளியே கயிற்று கட்டில் நிலை சோறு என இருப்பார்களே..

அருமையான கவிதை பாராட்டுகள்

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
26-06-2010, 01:19 AM
பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி பிரபு.

அமரன்
27-06-2010, 09:47 AM
மும்பையில வேலையா தோழா..

ஆமெனில் வாழ்த்துகள்.

மதுரையில் இருந்த போது வேலை தேடி அங்கலாய்த்த போது நீங்களும் இந்த மாதிரி உணர்ந்திருக்கலாம்.


தாழ்வு மனப்பான்பை, விதண்டாவதப் பயம். வேண்டாத தோற்றச் சிந்தனை வரைவு என நம்மைப் பீடிக்கும் வெங்காயப் புற்றுநோய்ப் பட்டியல் நீ.........................................ண்டது.

பாராட்டுகள் ஜுனைத்.

சிவா.ஜி
27-06-2010, 12:23 PM
தங்கள் மீதான சுயகழிவிரக்கங்களை வெல்லுவதும்...அதன் மெல்லலில் நசுங்குவதும் அவரவர் கையில்தானிருக்கிறது. இதைப்போன்ற அச்சங்கள்....உச்சங்களைத் தொடவிடாத வேலிகள்.

புதுவேலைக்கும், புது இடத்துக்கும்...கவிதைக்கும் வாழ்த்துக்கள் ஜுனைத்.

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
28-06-2010, 12:38 AM
கவிதைக்கு வாழ்த்தியதற்கும் கவிதை எழுதியவனுக்காய் வாழ்த்தியதற்கும் தோழர் அமரனுக்கு மற்றும் அண்ணண் சிவாஜிக்கு உள்ளங்கனிந்த நன்றிகள்.

ஆதவா
29-06-2010, 02:43 AM
அவர்களின் அழுகை - தீராத வறுமை, முடியாமை,
கூரையின் அழுகை - மழை, வறுமை தாளாமை
ஜந்துகள் - பிள்ளைகள்,
பயம் - எதிர்பார்ப்பு,

ஒரு நல்ல பின்நவீனத்துவ கவிதை படித்த திருப்தி. இரண்டு மூன்று விதங்களை அல்லது தளங்களை எடுத்துக் கூறும் விதத்தில் கவிதை எழுதப்பட்டிருக்கிறது. இரவுக்கு பயப்படுதல் என்பது நேரடியான அர்த்தத்தைத் தருவதில்லை.

பயம் தான் கடவுளை உருவாக்கியது. பிறகு கடவுளிடமே பயமும் ஏற்பட்டது. ஒவ்வொரு இரவும் எதைப் பற்றியும் சிந்திக்காமல்தான் உருவாகிறது, எந்த நினைவுகளுமின்றி கழிந்தும் விடுகிறது. பயணிப்பவர்கள்தான் சிக்கிக் கொள்கிறார்கள்.

தொடர்ந்து எழுதுங்கள்
அன்புடன்
ஆதவா

nambi
29-06-2010, 04:18 AM
கவிதை நன்று1 பகிர்வுக்கு நன்றி!

...சூழ் வாழ் இரவு ஜந்துக்கள்...சத்தமிடும் இரவு பூச்சியா.

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
03-07-2010, 08:53 PM
பயம் தான் கடவுளை உருவாக்கியது. பிறகு கடவுளிடமே பயமும் ஏற்பட்டது.

மிகச் சரியாக சொன்னீர்கள் ஆதவா. ஆந்த பயம் மட்டும் மனித உள்ளங்களில் இருந்து அகன்றுவிட்டால்! சிந்திப்பதற்கே கொடூரமாக உள்ளது. நன்றாக கவிதையை பிரித்தாய்ந்ததற்கு கோடி நன்றிகள் ஆதவா.

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
03-07-2010, 08:54 PM
கருத்துக்கு மிக்க நன்றி நம்பி அவர்களே.