PDA

View Full Version : பழந்தமிழரும் கணக்கும்



குணமதி
23-06-2010, 04:33 AM
பழந்தமிழரும் கணக்கும்

பழந்தமிழர் கணக்கறிவு பற்றிப் பாவாணர் 'தமிழ் இலக்கிய வரலாறு' என்ற நூலில் பக்கம் 55-இல் குறிப்பிட்டுள்ள செய்திகளைக் கீழே காண்க :

குமரிநாட்டுத் தமிழர் கணக்கில் மிகத்தேர்ச்சி பெற்றிருந்தனர்.

ஒன்றிலிருந்து மேற்பட்டது மேல்வாயிலக்கம் என்றும், ஒன்றிற்குக் கீழ்ப்பட்டது கீழ்வாயிலக்கம் என்றும் சொல்லப்பட்டன.

கும்பம் = நூறு கோடி
சங்கம் (சங்கு) = இலக்கங் கோடி
தாமரை = கோடாகோடி
வாரணம் = நூறு கோடா கோடி

இவற்றின் மதிப்பு வேறுவகையாகவுஞ் சொல்லப்படும். குவளை, வெள்ளம், ஆம்பல், நெய்தல் என்பனவும் அடுக்கிய கோடிகளைக் குறிக்கும் பேரெண்களாகும்.

கீழ்வாயிலக்கம் முக்கால், அரை, கால், அரைக்கால், மாகாணி (வீசம்), மா (1/20), காணி (1/80), முந்திரி(1/320),
என்பன.

சிற்றிலக்கத்திற்கும் பேரிலக்கத்திற்கும் பெருக்கல் வாய்பாடிருந்து போன்றே, சதுர வாய்பாடும் இருந்தது.
அது குழிக்கணக்கு எனப்பட்டது.
சிற்றிலக்கக் குழிப்பு சிறுகுழி என்றும், பேரிலக்கக் குழிப்பு பெருங்குழி என்றும் பெயர் பெற்றன.

nambi
24-06-2010, 03:53 AM
பயனுள்ள பகிர்வு. பகிர்வுக்கு நன்றி!
....................................


தாமரை ''பதுமம்'' என்னும் பேரெண் கொண்டும் பயன்படுத்தப்பட்டு வந்தது....பதுமம்=தாமரை...9 கோடி கோடி

காணி, வீசம் இன்றும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.....கால் அரிக்கா...சென்ட்...பல கிராம மக்களால்...பயன்படுத்தப்பட்டு வருகிறது.

குழியும் பயன்படுத்தப்பட்டு வருகிறது நகரத்திலும்....கருங்கல் ஜல்லிகள் இப்படித்தான் அளக்கப்படுகிறது...ஒரு அடிக்கு ஒரு அடி பெட்டியில் அளக்கப்படும் ஜல்லி ஒரு குழி எனப்படும்...

படி...ஆழாக்கு..8 ஆழாக்கு ஒரு படி...
மரக்கா...... 24 மரக்கா நெல்....ஒரு மூட்டை நெல்

இவையெல்லாம் கிலோ கணக்கில் பார்க்கும் பொழுது கூடுதலானவை.....ஒரு படி நெல் ஒன்னரை கிலோ அல்லது ஒன்னேகால் கிலோ வரும்...

அன்று தமிழர்கள் அளக்கும் பொழுதும் கூடுதலாக, தாராளமாக அளக்கும் முறையை கொண்டு இருந்தனர்... (உணவு பொருள்களை) நெல்லை தட்டி அள்க்க மாட்டார்கள், கோபுரமாக்கி குவித்து அள்ப்பார்கள்...இதெல்லாம் பண்பாடாக பார்த்தனர். இப்படித்தான் கொசுறு என்று கேவலமாக இன்று பார்க்கும் ஒன்று வந்தது....உண்மையில் கேவலமில்லை...அது ஒரு அள்த்தல் பண்பாடு... உணவுப்பொருள்களை அளந்து விட்டு கூடுதலாக ஒரு கை இரண்டு கை (ஒரு கை எனபது இரு கைகள் சேர்த்து எடுப்பது... ஒரு கையால் எடுத்து கொடுப்பதும் பாவம்) அள்ளிப்போடுவார்கள் பண்டமாற்று (விற்பனை) முறையில் இருந்தாலும் அல்லது தானமாக இருந்தாலும் சரி...

தட்டி அளப்பது பாவகரமான செயல்...நமக்கே உணவு கிடைக்காது என்பது போல்...இன்று அரிசியை கூட தங்கம் போல் நிறுத்து அளக்கின்றனர்.....இரப்பவர்க்கு கூட பழைய சாதங்களை, நேற்றைய மீந்த சோறுகளை வழங்குவதை பாவகரமான செயலாக பார்த்தனர். இப்போழுதும் பின்பற்றபட்டு வருகிறது. இரப்பவர்கள் குரல் கொடுத்து விட்டு, பாத்திரத்தை வைத்து விட்டு சென்று விடுவார்கள் இன்றும் அப்படித்தான்....அதில் எல்லா சாதங்களும் அவர்கள் சாப்பிட்ட அனைத்தும் தனி பாகமாக அவர்கள் கொடுக்கும் பாத்திரத்தில் வைத்து விட்டு வேறு வேலைகளை பார்க்க சென்று விடுவார்கள். அவர்கள் வந்து எடுத்து செல்வதை கூட யாரும் பார்க்க முடியாது.

சிவா.ஜி
24-06-2010, 06:25 AM
அளக்கும் முறையிலும், பிச்சையிடும் முறையிலும் பழந்தமிழரின் வணங்கத்தக்க* பழக்கத்தைப் பார்க்கும்போது பெருமையாய் இருக்கிறது.

குணமதி அளித்த பதிவின் மூலம்...அன்றைய தமிழர்கள் கணக்கில் மிகுந்த திறமைசாலிகளாய் இருந்ததைக் காண முடிகிறது.

இருவரின் பங்களிப்புக்கும் மிக்க நன்றி.

Akila.R.D
24-06-2010, 07:04 AM
பகிர்வுக்கு நன்றி குணமதி....

கோபுரமாக்கி அளப்பதில் இவ்வளவு அர்த்தம் உள்ளதா?...இன்றுதான் தெரிந்தது...

நன்றி நம்பி...

செல்வா
24-06-2010, 07:46 AM
தெரியாத பலவற்றைத் தெரிந்து கொண்டேன். பகிர்வுக்கு நன்றி குணமதி மற்றும் நம்பி.

xavier_raja
24-06-2010, 08:59 AM
பிச்சை இடுதலில் இவ்வளவு விஷியங்கள் இருபது இப்பொழுதுதான் தெரிகிறது.. கேட்பதற்கு வியப்பாக இருக்கிறது.. நம் முன்னோர்கள் எவ்வளவு பெருந்தன்மையாக இருந்திருகிறார்கள்..

குணமதி
24-06-2010, 05:00 PM
பின்னூட்டமிட்ட
நம்பி
சிவா
அகிலா
செல்வா
சேவியர்
ஆகியோர்க்கு மனமார்ந்த நன்றி.

பாலகன்
25-06-2010, 05:02 AM
பிச்சை எடுக்கும் முறை தமிழகத்தில் எப்போது ஆரம்பித்தது என்ற வரலாறு தெரிந்தால் சொல்லுங்களேன்.

குணமதி
25-06-2010, 09:27 AM
பிச்சை எடுக்கும் முறை தமிழகத்தில் எப்போது ஆரம்பித்தது என்ற வரலாறு தெரிந்தால் சொல்லுங்களேன்.

மன்னிக்க வேண்டும்.
தொடர்பில்லாமல் இழிவு படுத்தி எழுதியது வருத்தம் தருகிறது.
பிச்சை எடுப்பதே வாழ்வாவாக உடையவர்கள் வரலாற்றை நீங்களே எழுதுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

பா.ராஜேஷ்
03-07-2010, 06:21 PM
பயன்மிகு தகவல்கள். பகிர்ந்தமைக்கு நன்றிகள் குணமதி மற்றும் நம்பி..

குணமதி
04-07-2010, 03:30 AM
பயன்மிகு தகவல்கள். பகிர்ந்தமைக்கு நன்றிகள் குணமதி மற்றும் நம்பி..

நன்றி.

கலையரசி
04-07-2010, 05:08 AM
பழந்தமிழர் கணக்கு பற்றிய புதிய தகவல்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி குணவதி.

குணமதி
04-07-2010, 04:32 PM
பழந்தமிழர் கணக்கு பற்றிய புதிய தகவல்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி குணமதி.


நன்றி.