PDA

View Full Version : ஒளவையார் யார் யார்?

குணமதி
20-06-2010, 05:33 PM
ஒளவையார் யார் யார்?

கடைக்கழகக் (கடைச்சங்க) காலத்திலிருந்து 16-ஆம் நூற்றாண்டு வரை தமிழ்நாட்டில் தோன்றிய ஒளவையார் எழுவர்.

1. கடைக்கழக ஒளவையார் (கி.பி. 2-ஆம் நூற்றாண்டினர்) அதிகமானால் தொண்டைமானிடம் தூதுபோக்கப் பட்டவர்.

2. அங்கவை சங்கவை கால ஒளவையார்.

3.சேரமான் பெருமாள் நாயனார் கால ஒளவையார் (8-ஆம் நூற்றாண்டினர்)

4.கம்பர் கால ஒளவையார் (12-ஆம் நூற்றாண்டினர்)

5. அறிவைக்குறள் ஒளவையார் (14-ஆம் நூற்றாண்டினர்)

6. ஆத்திசூடி ஒளவையார் (16-ஆம் நூற்றாண்டினர்)

7. பந்தனத்தாதி ஒளவையார் (17-ஆம் நூற்றாண்டு)

ஆறாம் ஒளவையார் இயற்றியவை, ஆத்திசூடி, கொன்றைவேந்தன், நல்வழி, மூதுரை முதலிய நன்னெறிய சுவடிகள்.

வான்கோழி துருக்கி நாட்டினின்று இந்தியாவிற்குக் கொண்டு வரப்பட்டது 16-ஆம் நூற்றாண்டாதலால், அதைப்பாடிய ஒளவையார் அறநூல் அதன் வரவிற்குப் பிற்பட்டது என்பது கால்டுவெல்லார் கருத்து.

-தமிழ் இலக்கிய வரலாறு, ஞா.தே. பாவாணர், பக்கம் 284.

ஒளவையார் வான்கோழியைப் பாடிய பாடல் இது என்று நான் கருதுகிறேன் :

கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
தானு மதுவாகப் பாவித்துத் - தானுந்தன்
பொல்லாச் சிறகைவிரித் தாடினாற் போலுமே
கல்லாதான் கற்ற கவி.

nambi
20-06-2010, 05:57 PM
தமிழ் புலவர்களாக விளஙிகிய ஔவையார்களை பற்றி வரிசை படுத்தி விளக்கிய குணமதிக்கு நன்றி! நல்ல பயனுள்ள தகவல்.....பகிர்வுக்கு மீண்டும் நன்றி!

16 ஆம் நூற்றாண்டு ஔவையாரைத்தான் எஸ் எஸ் வாசன் தயாரித்த ஔவையார் படத்தில் பாரிவள்ளல்
(அங்கவை சங்கவை) மகள்களை ஔவையார் தலையிட்டு மணமுடித்து வைப்பதாக தவறுதலாக காட்டியிருப்பார்களோ? அந்த படத்தை காணுகையில் அதில் வரும் கதாபாத்திரங்களின் காலங்களை ஒப்பிடுகையில் நிறைய சந்தேகங்கள் இருந்தன....

அமரன்
20-06-2010, 06:07 PM
இருபதாம் நூற்றாண்டு ஔவையார் கேபி. சுந்தராம்பாளை விட்டுட்டீங்களே..:lachen001:

ஆயப் பதிவு குணமதி அவர்களே!

நன்றி

samuthraselvam
21-06-2010, 04:09 AM
ஒளவையாரைப் பற்றி காலவாரியாக தகவல் தந்த குணமதிக்கு நன்றி....

இருபதாம் நூற்றாண்டு ஔவையார் கேபி. சுந்தராம்பாளை விட்டுட்டீங்களே..:lachen001:

ஆயப் பதிவு குணமதி அவர்களே!

நன்றி

அமர் அண்ணா குசும்புண்ணா உங்களுக்கு.... எல்லாம் இப்படிதான், தலையில் கொட்ட ஆளில்லைன்ன இப்படிதான். தாறுமாறா கேள்வி கேட்குறது...:sport-smiley-019:

அமரன்
21-06-2010, 05:37 AM
ஒளவையாரைப் பற்றி காலவாரியாக தகவல் தந்த குணமதிக்கு நன்றி....

அமர் அண்ணா குசும்புண்ணா உங்களுக்கு.... எல்லாம் இப்படிதான், தலையில் கொட்ட ஆளில்லைன்ன இப்படிதான். தாறுமாறா கேள்வி கேட்குறது...:sport-smiley-019:

மோதிரக்கையால் குட்டு வாங்கினால் பெருமையாம். நீங்க என்னடான்னா ரத்தினக்கல்லால் குட்டுறீங்க. அப்போ எந்தளவு சந்தோசமாக இருக்கும் எனக்கு.. குட்டுங்க... குட்டுங்க.. குட்டிக்கொண்டே இருங்க..:)

சிவா.ஜி
21-06-2010, 06:03 AM
ஓ...இத்தனை ஔவையார்கள் இருக்கிறார்களா....நான் ஒரே ஔவையார்தானென்று இதுவரை நினைத்திருந்தேன். அதுவும் அதியமானிடம் நெல்லிக்கனி பெற்ற ஔவையாரை மட்டுமே அறிவேன்.

தெளிவான பதிவுக்கு நன்றி குணமதி.

aren
21-06-2010, 06:13 AM
இது உண்மையா என்று எனக்குத் தெரியவில்லை. நான் படிக்கும் காலத்தில் ஒரு ஒளவையார் என்றே நினைத்திருந்தேன்.

புதிய தகவலுக்கு நன்றி.

nambi
21-06-2010, 07:33 PM
இப்போதைய பாடப்புத்தங்களில் ''ஔவையார் என்ற பெயர்களில் பல புலவர்கள் இருந்தனர்''.... என்று ஆறாம் வகுப்பில் வரும் தமிழ் பாடப்புத்தகங்களின் செய்யுள் பகுதியில்..... ஆசிரியர் குறிப்பில் சேர்த்துள்ளனர்.

குணமதி
24-06-2010, 04:51 PM
பின்னூட்டமிட்ட
நம்பி
அமரன்
சமுத்திரசெல்வம்
சிவா
ஆரென்
ஆகியோர்க்கு மனமார்ந்த நன்றி.

பா.ராஜேஷ்
03-07-2010, 06:19 PM
ஔவையார்கள் பற்றி அறிந்து கொள்ள செய்திகள் தந்தமைக்கு நன்றிகள் குணமதி..

குணமதி
04-07-2010, 03:31 AM
ஔவையார்கள் பற்றி அறிந்து கொள்ள செய்திகள் தந்தமைக்கு நன்றிகள் குணமதி..

நன்றி.

kavinele
04-07-2010, 08:35 AM
ஒளவையாரைப் பற்றி காலவாரியாக தகவல் தந்த குணமதிக்கு நன்றி....

குணமதி
04-07-2010, 04:30 PM
ஒளவையாரைப் பற்றி காலவாரியாக தகவல் தந்த குணமதிக்கு நன்றி....

நன்றி.

Narathar
04-07-2010, 05:53 PM
நாராயணா!!!!!!! :D

பாலகன்
04-07-2010, 06:09 PM
நாராயணா!!!!!!! :D

ஒரு ஒளவையாரையே சமாளிக்க முடியலையே ஏழான்னு திகைச்சிட்டீங்களா நாராயணா :D

ஸ்ரீதர்
05-07-2010, 01:41 PM
நானும் இதுவரையில் ஒளவையார் என்பவர் ஒருவர்தான் என நினைத்திருந்தேன் ... இது புதுசா இருக்கே !!!

த.ஜார்ஜ்
05-07-2010, 01:58 PM
இதுக்குதான் இனிஷியல் போட்டு பேரு வைக்கனும்னு சொல்றது

shibly591
06-07-2010, 08:53 AM
ஒளவையார் பற்றிய தகவல் அறிவுக்கு விருந்தாக அமைந்தது..

பகிர்வுக்கு நன்றிகள்

குணமதி
08-07-2010, 01:09 AM
நானும் இதுவரையில் ஒளவையார் என்பவர் ஒருவர்தான் என நினைத்திருந்தேன் ... இது புதுசா இருக்கே !!!

இதுக்குதான் இனிஷியல் போட்டு பேரு வைக்கனும்னு சொல்றது

ஒளவையார் பற்றிய தகவல் அறிவுக்கு விருந்தாக அமைந்தது..

பகிர்வுக்கு நன்றிகள்

பின்னூட்டத்திற்கு நன்றி.

குணமதி
08-07-2010, 01:11 AM
நாராயணா!!!!!!! :D

ஒரு ஒளவையாரையே சமாளிக்க முடியலையே ஏழான்னு திகைச்சிட்டீங்களா நாராயணா :D

பின்னூட்டமிட்டமைக்கு நன்றி.

பாலன்
10-07-2010, 04:57 PM
எனக்கு இது முற்றிலும் புதிய தகவல். அறிய தந்தமைக்கு நன்றி குணமதி.

குணமதி
11-07-2010, 03:35 PM
எனக்கு இது முற்றிலும் புதிய தகவல். அறிய தந்தமைக்கு நன்றி குணமதி.

நன்றிக்கு நன்றி.