PDA

View Full Version : சைக்கிள்.....!!!சிவா.ஜி
18-06-2010, 04:34 PM
அரைக்கால்சட்டை
அவிழ்ந்துவிடாமலிருக்க
அண்ணாக்கயிறுடன்....
அன்வர்பாய் கடையில்
அம்பது பைசாவோடு
அப்போதுதான் போன
வாடகை சைக்கிள்
எப்போது வருமென்று காத்திருந்து,
இம்பாலா கிடைத்த
இன்பத்துடன் குரங்குப் பெடலடித்து
ஆளில்லா இடத்திலும்
ட்ரிங்...ட்ரிங்கை ஒலித்து
பிரேக் பிடிக்கத் தெரியாமல்
பாட்டி மேல் மோதி...
பாட்டு வாங்கிக்கொண்டு...
அவசரமாய் அழுத்தி
தடுமாறி தெருவோரம்
முள்செடியில் விழுந்து...
கற்றுக்கொண்ட சைக்கிளில்,
அக்காவை உட்காரவைத்து,
முதன்முதலாய் டபுள்ஸ் அடித்து
அவளைக் குப்புறத்தள்ளி
அம்மாவிடம் கும்மாங்குத்து வாங்கி....
கற்றுத் தேர்ந்து கை பிடிக்காமல் ஓட்டி
வித்தையெல்லாம் காட்டி
விழுந்து விழுப்புண் வாங்க வைத்த
வீர வாகனம்...!!!!!

nambi
18-06-2010, 05:02 PM
இம்பாலாஅப்பொழுது மிகப்பிரபலமான கார்....பழைய நினைவுகளை திரும்ப வைக்கும் வரிகள்...முக்கியமாக அந்த ''கும்மாங்குத்து'' அருமை.....(நான் வாங்கவில்லை...மாறாக கீழே நான் மட்டும் விழுந்து முட்டி தேய்த்துக் கொண்டேன்.) பகிர்வுக்கு நன்றி சிவா!

அமரன்
18-06-2010, 05:04 PM
ஹஹ்ஹ்ஹா..

நம்ம சைக்கிள் கதையே வேற.. சின்ன வயசுல மூன்று சில்லு.. பிறகு கொஞ்சம் வளர சைக்கிளும் கொஞ்சம் வளந்து ஒரு சில் இழந்து.. பிறகு அரைச்சைக்கிள்.. பிறகு முக்கால் சைக்கிள். கடைசீயா முழுச்சைக்கிள்..

முழுச்சைக்கிள் ஓடப் பழகியது இருக்கே... அலாதியான ஞாபக அலை.. முதலில் சைக்கிள் பாருக்கு கீழாக காலைக் கொடுத்து ஓடி... பிறகு பாரில் இருந்து ஓடி... பிறகு சீட்டில் உக்காந்து ஓடி.. இதுக்குள்ள சைக்கிள் கன பேர் மேல ஏறி...

விடலைப் பருவத்திலும் ஆடகளை இடிப்பதை நான் விடலை. இப்ப...........

கோடை துவங்கிட்டுது.. சைக்கிள் ஓடனும் போல இருக்குச் சிவா..

சிவா.ஜி
26-06-2010, 10:11 AM
மிக்க நன்றி நம்பி. தாமதமான நன்றி நவிலலுக்கு பொறுத்துக்கொள்ளவும்.

சிவா.ஜி
26-06-2010, 10:14 AM
இதற்குள் சைக்கிள் கன பேர் மேல் ஏறி.......

ஹா...ஹா...ஹா....இங்கையும் அதே கதைதான் அமரன். விழுப்புண் வாங்காமல்....சைக்கிள் ஓட்டமா....ம்ஹீம்...அதெல்லாம் சுக நினைவுகள்.

அந்த ஐம்பது பைசாவுக்கு ஏற்பாடு பண்றதுக்கு பட்ட கஷ்டமிருக்கே...அது தனிக்கதை.

நன்றி பாஸ். தாமதத்துக்கு மன்னிக்கவும்.

சசிதரன்
26-06-2010, 10:21 AM
ரொம்ப அருமையா இருக்கு சிவா அண்ணா. ஞாபகங்களை மீட்டெடுக்க வைக்கும் கவிதை. முதல் சைக்கிளை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது...:)

சிவா.ஜி
26-06-2010, 12:28 PM
ரொம்ப நன்றி கவிஞரே....!!!

பா.ராஜேஷ்
01-07-2010, 09:58 PM
சைக்கிள் அனுபவம் மனதில் பசுமை... பாராட்டுக்கள் அண்ணா... அப்படியே நீச்சல் அடிக்க கத்துக்கிட்டதை பத்தியும் ஒரு கவிதை எழுதிடுங்க..

ஆதவா
02-07-2010, 01:54 AM
சூப்பர் அண்ணா, சைக்கிள் கத்துகிட்டதையும் கவிதையாக்கியதற்கு..

அரைஞான் கயிறு,
ஐம்பது பைசா வாடகை,
குரங்கு பெடல்,
இல்லாத இடத்தில் ஹாரன்
பாட்டி மேல் மோதல்
டபுள்ஸில் தடுமாற்றம்
இறுதியாக விழுப்புண் (சரியான வார்த்தை பிரயோகம்)
என்று கிட்டத்தட்ட இந்த அனுபவம் எல்லோருக்கும் இருக்கும். இன்றும் நான் சைக்கிள் ஓட்டிக் கொண்டுதான் இருக்கிறேன், ஏனெனில் எனக்கு மற்ற வாகனங்களைக் காட்டிலும் சைக்கிள் இன்னும் பிடிக்கும் என்பதால் (எங்கள் வீட்டில் மூன்று சைக்கிள்கள் உள்ளன.)

ஆதவா
02-07-2010, 01:59 AM
அந்த ஐம்பது பைசாவுக்கு ஏற்பாடு பண்றதுக்கு பட்ட கஷ்டமிருக்கே...அது தனிக்கதை.

.

அதே அதே...

என் அப்பா அப்பொழுது சைக்கிள் தான் வைத்திருந்தார். என்றாலும் எனக்குத் தரமாட்டார். அதனால் நான் சைக்கிள் கடைகளில் வாடகைக்கு எடுத்து ஓட்டியே ஆகவேண்டிய கட்டாயம் (பிரஷ்டீஜ் பிராப்லம்:D) சைக்கில் விழாமல் ஓட்டவேண்டும் என்பது கடைக்காரர் உத்தரவு.. நான் விழாமல் இருக்கணுமே என்பது என் மன உத்தரவு... இரண்டுமே நடக்கவில்லை! :)

சிவா.ஜி
02-07-2010, 05:26 AM
நன்றி ராஜேஷ். நீச்சல் அடிக்கக் கத்துக்கிட்டது...ஒரு கதையா வேணுன்னா எழுதலாம்...அவ்ளோ இருக்கு.

சிவா.ஜி
02-07-2010, 05:28 AM
ஆமா ஆதவா...அநேகமா எல்லோருக்கும் இந்த அனுபவம் இருக்கும். பின்னூட்டத்திற்கு நன்றி ஆதவா.

(உங்க ஆரோக்கியத்தின் ரகசியம் இப்பல்ல தெரியுது....சைக்கிள் ஓட்றது உடலுக்கும் நல்லது...பர்ஸுக்கும் நல்லது)

aren
02-07-2010, 06:56 AM
அக்காவை டபுல்ஸ் என்ற வரியைத் தவிற மற்ற அனைத்தும் எனக்கும் நடந்துள்ளது. எங்கள் தெருவில் நான் கீழே விழாத இடமே கிடையாது. இன்றும் அந்த விழிப்புண்கள் என் உடம்பில் ஆங்காங்கே இருக்கிறது.

இன்னும் எழுதுங்கள்.

சிவா.ஜி
02-07-2010, 07:06 AM
உங்க தெருவையே....விழுந்து விழுந்து அளந்திருக்கீங்கன்னு சொல்லுங்க....

தெருவுக்கு ஒண்ணும் சேதமில்லையே....ஹா..ஹா...ஹா

நன்றி ஆரென்.

govindh
02-07-2010, 09:17 AM
மிக அருமையான நினைவலைகள்...
சைக்கிள்-சளைக்காமல் உழைக்கும் வீர வாகனம்...!

பாராட்டுக்கள் சிவா.ஜி. அண்ணா.

சிவா.ஜி
02-07-2010, 09:21 AM
ரொம்ப நன்றி கோவிந்த். உண்மையிலேயே அந்தக் காலத்தில் அது ஒரு வீர வாகனம்தான் எங்களுக்கு.

பாரதி
02-07-2010, 10:27 AM
மிதிவண்டி நினைவுகள்...
வீர விழுப்புண்களை நினைவுகள் தடவிப்பார்க்கும் நேரமா சிவா..!
நேர்த்தியாக வடித்திருக்கிறீர்கள்..
வாடகைக்கு எடுத்து பழகிய கூட்டத்தில் நானும் உண்டு. பழகிய விதத்தில் அமரனைப்போன்றே அனுபவம்.
கீழே விழுந்தாலும், காயம் பட்டாலும் யாரிடமும் கூறக்கூடாதென்ற மன உறுதியைத் தந்த வாகனமல்லவா.. இரண்டு கையையும் விட்டு விட்டு புவியீர்ப்பிற்கேற்ப வண்டியை செலுத்தும் சுகமே தனிதான்..!

எல்லாமே கவிதையாகட்டும்.
நினைவுகள் வாகனமாகட்டும்.
எழுதுங்கள் சிவா.

சிவா.ஜி
02-07-2010, 11:45 AM
கைகளை விட்டுவிட்டு ஓட்டுவது....அந்த வயதுக்கு ஒரு வீரசாகசம்தான்...எக்குத்தப்பாய் ஒரு தெருநாய்...குறுக்கே வந்தால்...போச்......முழங்கால், முழங்கை....சிராய்ப்பு ஏற்படாத நாளேயில்லை.

நினைவுகளின் பகிர்வுக்கு நன்றி பாரதி.

த.ஜார்ஜ்
02-07-2010, 04:41 PM
விழுப்புண் இல்லாமல் சாகசம் ஏது?
[சைக்கிளை எடுத்துகிட்டு ரோட்டுக்கா போற? கார்காரன் வந்து இடிச்சா என்னத்துக்கு ஆகும்? கம்பெடுத்து துரத்திய அப்பா.-எனக்கான அனுபவத்தில் இந்த வரியும் சேர்த்துக் கொள்ளலாம்.]

சிவா.ஜி
02-07-2010, 04:48 PM
அதானே கார்க்காரன் இடிச்சா என்னத்து ஆகும்...காருக்குதானே....ஹா...ஹா...

ஆனா நான் எங்க தெருவிலேயே ஓட்ட மாட்டேன். வாடகை சைக்கிளை எடுத்துக்கிட்டு வேற தெருவுக்குப் போயிடுவேன். அப்பா பயமில்லை...பெரிய அண்ணன் பயம்.

நன்றி ஜார்ஜ்.

சுடர்விழி
03-07-2010, 07:32 AM
சைக்கிள் கற்ற அனுபவத்தை நல்ல கவிதையாக கொடுத்ததுக்கு நன்றி !! ரொம்ப நல்லா இருக்கு கவிதை..எல்லாருக்கும் இந்த அனுபவம் இருக்கும் என்றே நினைக்கிறேன்...நானும் அண்ணன்கிட்ட சைக்கிள் ஓட்ட கத்துகிட்டதெல்லம் ஞாபகம் வந்துடுச்சு.......எத்தனை வாகனம் வந்தாலும் சைக்கிள் ஓட்டும் சுகமே தனி தான்..

பாராட்டுக்கள் சிவா அண்ணா (எல்லாரும் அண்ணா என்று சொல்கிறார்கள்...எனக்கும் ஆசை...சொல்லலாம் தானே???)

அமரன்
03-07-2010, 09:09 AM
சைக்கிள் கற்ற அனுபவத்தை நல்ல கவிதையாக கொடுத்ததுக்கு நன்றி !! ரொம்ப நல்லா இருக்கு கவிதை..எல்லாருக்கும் இந்த அனுபவம் இருக்கும் என்றே நினைக்கிறேன்...நானும் அண்ணன்கிட்ட சைக்கிள் ஓட்ட கத்துகிட்டதெல்லம் ஞாபகம் வந்துடுச்சு.......எத்தனை வாகனம் வந்தாலும் சைக்கிள் ஓட்டும் சுகமே தனி தான்..

பாராட்டுக்கள் சிவா அண்ணா (எல்லாரும் அண்ணா என்று சொல்கிறார்கள்...எனக்கும் ஆசை...சொல்லலாம் தானே???)

அவரை நீங்க தாராளமா அண்ணா என்று சொல்லலாம் சுடர்விழி.

சிவா.ஜி
03-07-2010, 09:14 AM
ஆமாங்க சுடர்விழி...சைக்கிள் மனசுக்கு நெருக்கமான வாகனம்....ஏன்னா அதோடப் பிண்ணிக்கிட்டிருக்கிற சுகமான அனுபவங்கள்தான் காரணம்.

ரொம்ப நன்றிங்க.

அமரன் சொன்ன மாதிரி நீங்க தாராளமா அண்ணான்னே கூப்பிடலாம் தங்கையே.

அமரன்
03-07-2010, 09:18 AM
சரி.... சரி...

அடுத்த கட்டத்துக்குச் சைக்கிளை ஒட்டுங்களேன்பா. கலக்கலா இருக்கும்.

விடல... விடல...

சிவா.ஜி
03-07-2010, 09:33 AM
ஆமா அமரன்...விடலயில...அது ஒரு தனி அனுபவம்....பள்ளிக் கல்லூரியிலும்...சைக்கிளை நான் விடல....லாரி மோதி ஒரு சிராய்ப்புக் கூட இல்லாம....மாட்டு வண்டி மோதி கை உடைஞ்சக் கதையும் நடந்திருக்கு....

shibly591
03-07-2010, 10:14 AM
ம்மம்ம்..

சிறுவயதில் எல்லோரும் சைக்கிள் ஓடிய போது - அப்பாவிடம் அடம்பிடித்து சைக்கிள் வாங்கியதும்..

விழந்து விழுந்து சைக்கிள் ஓடப்பழகி பின் நண்பர்களுடன் சைக்கிள் ஓட்டப்பந்தயத்தில் ஜெயித்ததும்...

காதலிக்கின்ற நாட்களில் பாடசாலையும் டியூசன் வகுப்பும் முடிந்த பின்னால் சைக்கிளில் காதலியை சைட் அடித்து பின்தொடர்ந்ததையும்..

பின்னொரு நாளில் சைக்கிளை களவுகொடுத்து விட்டு அப்பாவிடம் அழுது நின்றதையும்..மறக்க முடியுமா?????

நினைவுகளை கிளறிய அழகான கவிதைக்கு வாழ்த்துக்கள் சிவா.ஜி

சிவா.ஜி
03-07-2010, 11:42 AM
ஆஹா....சைக்கிளோடான உங்கள் பந்தம் மிகவும் சுவையானதாக இருக்கிறது ஷிப்லி.

மிக்க நன்றி.

செல்வா
03-07-2010, 12:19 PM
ரொம்பத் தாமதமா வந்திட்டன் போலருக்கு - நான்
மிதிவண்டி பழகியதும் ரொம்பத் தாமதமாகத் தான்.

பழைய பல நினைவுகளைக் கிளறியக் கவிதை
வாழ்த்துக்கள் அண்ணா...!

சிவா.ஜி
03-07-2010, 12:31 PM
ஓ நீங்க அந்த கோஷ்டியா...???

(காரோட்ட, மோட்டார் சைக்கிள் ஓட்ட...எல்லாம் கத்துக்கிட்டு...அதுக்கப்புறமா சைக்கிள் ஓட்டக் கத்துக்குற கோஷ்டியான்னு கேட்டேன்...ஹி...ஹி...)

நன்றி செல்வா. எப்ப வந்தா என்ன...வந்தா போதும்....எப்பக் கத்துக்கிட்டா என்ன....கத்துக்கிட்டா போதும்.....!!

பாலன்
11-07-2010, 04:49 PM
இந்த அனுபவம் வாடகைக்கு சைக்கிள் எடுத்து ஓட்டி பழகின எல்லோருக்கும் இருக்கும்.எனக்கும் இருக்கு. நான் ஒன்பதாப்பு படிக்கையில எங்கப்பா எனக்கு ஒரு சைக்கிள் வாங்கி கொடுத்தாரு. அது எனக்கு அப்புறம் என் தங்கச்சி, அவளுக்கு அப்புறம் எங்க அக்கா பையன் பெரியவன், அப்புறம் இப்ப சின்னவன்னு கைமாறி உருண்டுக்கிட்டே இருக்குது. காலத்தோட பதிவா அதை எப்பவும் வச்சிருக்கனும்கிறது என்னோட சின்ன ஆசை.

வெற்றி மகிழன்
15-07-2010, 05:15 PM
சிறப்பான கவிதை சிவா.ஜி.
சைக்கிள் ஒட்டிய கதையை இவ்வளவு அருமையாக சொல்ல உங்களால் மட்டும் தான் முடியும் என்று நினைகிறேன்.

நீங்கள் எழுதிய வரிகளில் குறைந்தபட்சம் இரு வரிகளாவது எல்லோர் நினைவுகளையும் கிள்ளி வைத்திருக்கும். அவரவர்களின் பொருத்தமான வரிகள் எந்த அளவுக்கு இப்பொழுது உற்சாகத்தை அளிக்கும் என்பதை என் நினைவலைகளை கொண்டு உணர்கிறேன்.