PDA

View Full Version : அழகான முற்கள்...



kulirthazhal
18-06-2010, 11:03 AM
அந்த
அழகான முற்கள்...

ஈர்க்கும் வண்ணங்கள்,...
மினுமினுக்கும்
மெழுகுத்தோற்றம்,.
மெல்லிடையின்
கட்டமைப்புதான்.....

அதன்
எண்ணங்களைப்பற்றி
ஏதும்
புரியா நின்றாலும்
அஞ்சும் நெஞ்சின்
ஆழத்தில்
வதந்திகள்...
ஆழ்துறக்க கனவினில்
கலைந்துகூடும்
எழுத்துக்களின் கவிதைகளில்
முற்களைப்பற்றி
சொன்னதேதோ?....
அதற்கு
ரத்தத்தைப்பற்றி
தெரிந்திருக்கலாம்....

முற்கள்
அழக்கூட எத்தனிக்கலாம்.,
நட்போடு எவரும்
நெருங்காததால்....

எனக்கின்னும்
துணிவில்லை...
அது
அழகாயிருப்பதாலோ.....

-குளிர்தழல்.

சிவா.ஜி
18-06-2010, 11:50 AM
கண்டிப்பும் கடுமையுமாய் இருக்கும் ஒரு அழகானப் பெண்ணை அருகே சென்று காதலுற அஞ்சும் காளையின் வார்த்தைகளா...?

அப்படித்தான் நான் புரிந்துகொண்டேன். வாழ்த்துக்கள் குளிர்தழல்.

பாரதி
19-06-2010, 02:33 AM
ஒன்றைக் காக்க முட்கள் தேவைப்படும் என்பதாலேயே இயற்கை அப்பாதுகாப்பைத் தந்திருக்கிறது. இல்லையா..? முட்செடியில் ரோஜா இருப்பதாலேயே அதன் மதிப்பு கூடுகிறது.

யாரும் சீண்டாப்பொருளை கவனத்தில் கொண்டிருப்பது கவிதையின் அழகைக்கூட்டுகிறது.
கரு முழுமையாக பிடிபடாவிட்டாலும் நன்றாக இருக்கிறது நண்பரே.

குணமதி
19-06-2010, 03:03 AM
முட்கள் என்பதே சரியான வடிவம்.

முற்கள் - என்றால் முற்பட்ட கள் ஆகும்;

குழப்பம் தவிர்க்கவே கூறினேன்.

பாரதி
19-06-2010, 09:14 AM
முட்கள் என்பதே சரியான வடிவம்.
முற்கள் - என்றால் முற்பட்ட கள் ஆகும்;

குழப்பத்தை தீர்த்தமைக்கு நன்றி குணமதி!

nambi
19-06-2010, 09:55 AM
பகிர்வுக்கு நன்றி!