PDA

View Full Version : பஞ்சாப்பில் பில் கேட்ஸ் முதலீடு- நகைச்சுவைMano.G.
17-06-2010, 10:07 AM
அண்மையில் உலக பணக்காரர் பில் கேட்ஸ் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் முதலீடு செய்ய தனது ஆலோசகர்களிடம் கூறி விபரங்கள் சேகரிக்க சொன்னார்.

ஆலோசகர்களும் தங்கள் ஆய்வை முடித்து தங்கள் அறிக்கையை சமர்பித்தனர், அதில் பில் கேட்ஸ் முதலீடுசெய்வதற்கு எந்த வித தடங்கல்களும் இல்லை என குறிப்பிட்டிருந்தனர் , பில் கேட்ஸும் அதற்கு சம்மதம் தெரிவித்து ஆயத்த வேலைகளை ஆரம்பிக்க கூறினார்.

சில வாரங்களுக்கு பிறகு பில்லுக்கு பஞ்சாப்பிலிருந்து ஒரு கடிதம் வந்திருந்தது, அதில் ஒரு சர்தார் இப்படி எழுதியிருந்தார்.

உயர் திரு பில் கேட்ஸ் அவர்களே,

உங்கள் நிறுவனம் எங்கள் மாநிலத்தில் முதலீடு செய்யப்போவதாக அறிந்தேன், மிக்க மகிழ்ச்சி, ஆனால் நீங்கள் மைக்ரோ சாப்ட் மென் பொருள் நிறுவனர் என்பது எங்களுக்கு தெரியும்.

நீங்கள் இங்கு வருவதற்கு முன்பு மைக்ரோ சாப்ட் மென் பொருள் மூலம் ஏற்பட்ட சில பிரச்சனைகளை தீர்க்கும்படி வேண்டுகிரேன்.

அண்மையில் நான் எனது வீட்டிற்கு ஒரு கண்ணனி வாங்கினேன் , அதில் நான் கண்ட சில பிரச்சனைகளை இங்கே பதிக்கிரேன் அதற்கான தீர்வை சொல்லவும்.

1) எனது கணணியை ஆன் செய்தவுடன் மானிட்டரின் அடியில் “ஸ்டார்ட்” (START) பட்டனை கண்டேன் ஆனால் “ஸ்டொப்”(STOP) பட்டனை காணவில்லை- அதை முதலில் சரிசெய்யவும்.

2) இன்னொரு சந்தேகம் அந்த கணணியில் “ரி-ஸ்கூட்டரை”(RE-SCOOTER) எங்கும் காணவில்லை ஆனல் “ரி-சைக்கள்” (RE-CYCLE) தான் உள்ளது.

3) அண்மையில் எனது மனைவி தனது வீட்டுசாவிவை தொலைத்து விட்டாள், கணனியை திறந்து “ஃண்ட்” (FIND) பட்டனை தட்டினேன் அந்த சாவி எங்கும் கிடைக்கவில்லை. அதையும் சற்று கவனிக்கவும்.

4) என் பிள்ளைகள் “மைக்ரோசாப்ட் வோர்ட்ஸ்” (MICROSOFT WORDS) கற்று கொண்டார்கள் அவர்கள் மேலும் “மைக்ரோசாப்ட் செண்டன்ஸ்” (MICROSOFT SENTENCE) கற்று கொள்ள வேண்டும் அதை சீக்கிரம் அனுப்பி வைக்கவும்.

5) நான் கணனி வாங்கும் பொழுது , சீப்பியு , மௌஸ், கீபோர்ட் எல்லாம் கொடுத்தார்கள், ஆனல் கணணியை ஆன் செய்தால் “மை கம்ப்யூட்டர்“ (MY COMPUTER) மட்டுமே உள்ளது மற்றவைகளை காணவில்லை அதையும் பெற்று தாருங்கள்.

6) மைக்ரோ சப்ட் விண்டோசில் “மை பிக்சர்ஸ்” (MY PICTURES) என்று இருக்கிரது , ஆனல் எனது படம் எங்கும் இல்லை அதை எப்பொழுது தருவீர்கள்.

7)நான் எனது கணனியை வீட்டில் தான் பயன் படுத்துகிரேன் ஆனால் நீங்கள் “மைக்ரோசாப்ட் ஆபிஸ்” (MICROSOFT OFFICE) கொடுத்துள்ளீர்கள் எப்பொழுது “மைக்ரோசாப்ட் ஹோம்” (MICROSOFT HOME) கொடுக்க போகிரீர்கள்.

8)நீங்கள் “மை ரீசண்ட் டாக்குமெண்ட்ஸ்” ( MY RECENT DOCUMENTS) கொடுத்துள்ளீர்கள் எப்பொழுது “மை பாஸ்ட் டாக்குமெண்ட்”(MY PAST DOCUMENTS) கொடுப்பீர்கள்?

9) அதோடு “மை நெட்வொர்க் பிலேசஸ்” (MY NETWORK PLACES) கொடுத்துள்ளீர்கள் நல்ல காலம் “மை சீக்ரட் பிலேசஸ்” (MY SECRET PLACES) கொடுக்கவில்லை, இது என மனைவிக்கு தெரியக்கூடாது, எனது அலுவலக நேரம் முடிந்து நான் போகும் இடம் அவளுக்கு தெரிய கூடாது. அதற்கு நன்றி.

10) இது ஒரு முக்கிய கேள்வி : உங்கள் பெயரோ பில் கேட்ஸ் ஆனால் நீங்கள் விற்பனை செய்வதோ “விண்டோஸ்” இதற்கு பதில் நிச்சயம் வேண்டும்.


இதை கண்டு பில் கேட்ஸ் பஞ்சாப்பில் முதலீடு செய்வாரா தெரியவில்லை.


நான் ஆங்கிலத்தில் (மின் அஞ்சலில் வந்த நகைச்சுவை) படித்து அனுபவித்து தமிழாக்கம் செய்து உங்களோடு பகிர்ந்து கொள்கிரேன்.

சிவா.ஜி
17-06-2010, 10:19 AM
ஹா...ஹா...சர்தார்ஜி சர்தார்ஜிதான். நான்கூட நிஜமாகவே பில்கேட்ஸ் பஞ்சாபில் முதலீடு செய்யப்போகிறாரோ என நினைத்தே திரியைத் திறந்தேன். சிரிக்க வைத்துவிட்டீர்கள்.

பகிர்வுக்கு நன்றி மனோ.ஜி ஐயா.

மதி
17-06-2010, 11:19 AM
அட அட அருமை.. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

அக்னி
17-06-2010, 12:53 PM
மீண்டும் சுழன்று வருகின்றார் பில் கேட்ஸ்...

இதற்கு பிரவீன் பில் கேட்ஸ் சார்பாக, அளித்த பதில்கள்...


நண்பர்களே, இதற்கு எனக்கு தோன்றிய பதிலை நகைச்சுவைக்காக கொடுத்துள்ளேன். நானும் மைக்ரோசாப்ட்டை சில காரணங்களுக்காக வெறுப்பவன் தான் ஆனால் அதை பயன்படுத்துவதால் அதற்கு பதில் சொல்ல நன்றி கடமைப்பட்டுள்ளேன் :) .


உங்களை மாதிரி ஆட்களுக்கு பதில் போடுவதற்காக தமிழ்நாட்டில் இருந்து சிலரை வைத்துள்ளோம். அவர்கள் உங்கள் கேள்விக்கு பதில் தந்திருக்கிறார் பாருங்கள்.


1.இண்டர்நெட் கனெக்ஷன் வாங்கிய பிறகு ஹாட்மெயிலில் அக்கவுண்ட் உருவாக்க எல்லா விவரங்களை கொடுத்த பிறகு பாஸ்வார்ட் பகுதியில் எதை கொடுத்தாலும் ****** என்றெ வருகிறது.வாங்கிய கடையில் கொடுத்த சோதித்தற்கு கீ போர்டில் எதும் குறையில்லை என்று சொல்லிவிட்டார்கள்.


நீங்கள் உங்கள் ஹாட்மெயில் அக்கவுண்டை இண்டர்நெட் பிரவுசரில், செட்டிங்க்ஸ் சென்று உங்கள் பாஸ்வேர்டை ஆறு ஸ்டாராக மாற்றி விடுங்கள். பிரச்சினை தீர்ந்தது.


2.விண்டொஸில் ஸ்டார்ட் பட்டன் உள்ளது.ஆனால் ஸ்டாப் பட்டன் இல்லை.அதையும் சேர்த்து விடுங்கள்


மைக்ரோசாப்ட் விண்டோஸ் எப்போதும் தொடர்ந்து இயங்காது, அது அடிக்கடி தானே ப்ளு ஸ்கீரின் வந்து அனைந்து போகும் படி வடிவமைத்திருப்பதால் தனியாக அந்த பட்டன் தேவை இல்லை என்று விட்டுவிட்டோம். நீங்கள் உடனே ஸ்டாப் செய்ய வேண்டும் என்றால் கம்ப்யூட்டரில் உள்ள பவர் பட்டனை ஸ்டாப் என்று ஒரு முறை சொல்லி விட்டு பின் அழுத்தவும்.

3.ரீசைக்கிள் பின் என்பதை ரீஸ்கூட்டர் என்று மாற்றுங்கள்.எனென்றால் என்னிடம் ஸ்கூட்டர் தான் உள்ளது.

நீங்கள் ஸ்கூட்டர் வாங்கிய விவரத்தை கம்ப்யூட்டர் வாங்கும்முன் எங்களுக்கு சொல்லாததால் சைக்கிள் என்று வைத்து விட்டோம். அடுத்த பதிப்பான விஸ்டாவில் வைத்துள்ளோம் (அதில் ரிசைக்கிள்பின் என்று தான் இருக்கும் அதை நீங்கள் ரைட்கிளிக் ரீநேம் செய்து கொள்ளலாம்.) அதற்கு ரூ.10,000 கூடுதலாக செலுத்தி பெற்றுக்கொள்ளுங்கள்.


4.பைண்டு பட்டன் வேலை செய்யவில்லை.நான் தொலைத்த கார் சாவியை பைண்டு மெனுவில் தேடினேன்.ஆனால் கண்டு பிடிக்க முடியாது என்று கூறிவிட்டது.இது ஒரு ஏரர்ராக இருக்கும்.
நீங்கள் தொலைத்த சாவியை, தொலைக்கும் முன் அந்த சாவியை எங்கே வைத்திருக்கிறீர்கள் என்று ஒரு டெக்ஸ்ட் பைலில் டைப் செய்து அதை டெஸ்க்டாப்பில் வைத்து பின் கம்ப்யூட்டர் முழுதும் தேடினால் அது சிறிது நேரத்தில் தேடி தரும் என்பதை பணிவுடன் தெரிவித்து கொள்கிறோம்.


5.எம்.எஸ் வேர்ட் கற்ற பிறகு,கற்பதற்கு எம்.எஸ்.செண்டேண்ஸ் என்று எதும் உள்ளதா ?

நீங்கள் புரோகிராம்ஸ்ல் அக்ஸரிஸில் வேர்டு பேடு என்று இருப்பதை பார்க்கவில்லை போலும் அதில் சென்று எனது எம்.எஸ் வேர்டை எம்.எஸ் செண்டன்ஸ் பதிப்பாக நாளை மாற்றி விடு என்று டைப் செய்து, தினமும் அதை திறந்து பார்க்கவும். அதில் என்றைக்கு மாறும் என்று போட்டிருக்கிறதோ அன்று அப்படி மாறி விடும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.

இன்னும் ஏதாவது இருந்தால் கேளுங்கள், கேளுங்கள் கேட்டுக்கொண்டே இருங்கள். நாங்கள் இதை அடுத்த பஞ்சாப் மாநிலத்திற்கான ஹெல்ப்-ல் சேர்க்க இருக்கிறோம்.

மீதிக் கேள்விகளுக்கு எப்போ பதிலளிக்கப்போறீங்க பிரவீன் கேட்ஸ்... :cool:

praveen
18-06-2010, 09:51 AM
எனக்கென்னமோ, மீத கேள்விகளை திரி ஆரம்பித்த அண்ணாவே, தலையிலே ஒரு முண்டாசை கட்டிக்கொண்டு டைப் அடித்திருப்பார் என்றே தோனுகிறது, ஒரிஜினலில் இவ்வளவு கேள்வி இல்லையே :).5) நான் கணனி வாங்கும் பொழுது , சீப்பியு , மௌஸ், கீபோர்ட் எல்லாம் கொடுத்தார்கள், ஆனல் கணணியை ஆன் செய்தால் “மை கம்ப்யூட்டர்“ (MY COMPUTER) மட்டுமே உள்ளது மற்றவைகளை காணவில்லை அதையும் பெற்று தாருங்கள்.

மைகம்ப்யூட்டரிலே அது எல்லாம் முதலிலே இனைத்து விட்டதால் தனியாக தெரியவில்லை, எல்லாவற்றையும் குறிப்பாக மவுஸ் கீபோர்ட் இரண்டையும் கம்ப்யூட்டரை ஆன் செய்யும் முன் கழட்டி விட்டு பின் இயக்கிப்பார்த்தால் அது எல்லாம் எங்கே உள்ளது என்று தெரியும்.6) மைக்ரோ சப்ட் விண்டோசில் “மை பிக்சர்ஸ்” (MY PICTURES) என்று இருக்கிரது , ஆனல் எனது படம் எங்கும் இல்லை அதை எப்பொழுது தருவீர்கள்.

கம்ப்யூட்டர் வாங்கும் போது நீங்கள் அதனுடன் கொடுத்த விண்ணப்படிவத்தை நிரப்பாமல் சென்று விட்டீர்கள், அதனை நிரப்பி அதில் ஒரு போட்டோ ஒட்டியிருந்தால் மை பிக்சரில் உங்கள் படத்தை இனைத்து தந்திருப்போம்.

இன்னொரு பதில்.
மை பிக்சரில் உங்கள் படம் தெரிய வேண்டும் என்றால் வெப்கேமரா வாங்க வேண்டும், அதுவும் மைக்ரோசாப்ட் ப்ராண்ட் வெப்கேமரா தான் வாங்க வேண்டும், அப்போது தான் நீங்கள் மை பிக்சரில் தெரிவீர்கள்.


7)நான் எனது கணனியை வீட்டில் தான் பயன் படுத்துகிரேன் ஆனால் நீங்கள் “மைக்ரோசாப்ட் ஆபிஸ்” (MICROSOFT OFFICE) கொடுத்துள்ளீர்கள் எப்பொழுது “மைக்ரோசாப்ட் ஹோம்” (MICROSOFT HOME) கொடுக்க போகிரீர்கள்.

நீங்கள் கம்ப்யூட்டரை கம்ப்யூட்டர் விற்கும் ஆபிஸில் வாங்கியதால் அப்படி கொடுத்து விட்டோம், எங்கள் வீட்டில் வந்து வாங்கினால் மைக்ரோசாப்ட் ஹோம் கொடுத்திருப்போம்.8)நீங்கள் “மை ரீசண்ட் டாக்குமெண்ட்ஸ்” ( MY RECENT DOCUMENTS) கொடுத்துள்ளீர்கள் எப்பொழுது “மை பாஸ்ட் டாக்குமெண்ட்”(MY PAST DOCUMENTS) கொடுப்பீர்கள்?

அப்படி ஒன்றும் இல்லை என்றால் இதுவரை நீங்கள் எந்த டாக்குமெண்டையும் இதற்கு முன் எப்போதும் உருவாக்கவில்லை என்று அர்த்தம்.9) அதோடு “மை நெட்வொர்க் பிலேசஸ்” (MY NETWORK PLACES) கொடுத்துள்ளீர்கள் நல்ல காலம் “மை சீக்ரட் பிலேசஸ்” (MY SECRET PLACES) கொடுக்கவில்லை, இது என மனைவிக்கு தெரியக்கூடாது, எனது அலுவலக நேரம் முடிந்து நான் போகும் இடம் அவளுக்கு தெரிய கூடாது. அதற்கு நன்றி.

கவலைப்படாதீர்கள் மைநெட்வொர்க் பிளேஸில் கூட நீங்கள் எளிதில் தெரிய மாட்டீர்கள். அப்படி வடிவமைத்திருக்கிறோம்.10) இது ஒரு முக்கிய கேள்வி : உங்கள் பெயரோ பில் கேட்ஸ் ஆனால் நீங்கள் விற்பனை செய்வதோ “விண்டோஸ்” இதற்கு பதில் நிச்சயம் வேண்டும்.

ஆரம்பத்திலே நான் ஒரு கம்ப்யூட்டர் கம்பெனியில் கேட் ஒரமாக நின்றே (வாட்ச்மேன்) வேலை பார்க்கும் போது அந்த பெயர் கிடைத்தது, இப்போ புரமோசன் ஆகி ஜன்னல் ஓரமாக கம்ப்யூட்டர் விற்பதால் என் பெயரை மாற்ற முடியாதாகையால், நான் விற்கும் பொருளை மட்டும் மாற்றி வைத்து விட்டேன்.

சிவா.ஜி
18-06-2010, 09:56 AM
ஆஹா...அசத்தலான பதில்கள் பிரவீன். மைக்ரோசாஃப்ட் ஆளுங்களே மயக்கம் போட்டுடுவாங்க.

அக்னி
18-06-2010, 10:01 AM
ஆரம்பத்திலே நான் ஒரு கம்ப்யூட்டர் கம்பெனியில் கேட் ஒரமாக நின்றே (வாட்ச்மேன்) வேலை பார்க்கும் போது அந்த பெயர் கிடைத்தது, இப்போ புரமோசன் ஆகி ஜன்னல் ஓரமாக கம்ப்யூட்டர் விற்பதால் என் பெயரை மாற்ற முடியாதாகையால், நான் விற்கும் பொருளை மட்டும் மாற்றி வைத்து விட்டேன்.


உங்க பதில்களிலேயே இதான் ஹைலைட்... :icon_b:

அண்ணா முண்டாசக் கட்டி நின்னு யோசிச்சாரோ இல்லையோ,
நீங்க விண்டோச திறந்து வச்சுட்டு நன்னாவே யோசிக்கிறீக... :cool:

அக்னி
18-06-2010, 10:03 AM
மைக்ரோசாஃப்ட் ஆளுங்களே மயக்கம் போட்டுடுவாங்க.
அதான் சாஃப்ட் ஆளுங்கன்னு நீங்களே சொல்லிட்டீங்களே...

ஆனால் ஒரு சந்தேகம் சிவா.ஜி...

மைக்ரோசாஃப்ட் என்றால் ரொம்பஹார்ட் டோ...
(செல்வர் வந்துதான் தீர்த்து வைக்கணுமோ?)

பாரதி
18-06-2010, 03:22 PM
அண்ணாவின் மொழியாக்கம் இரசிக்க வைக்கிறது.
பிரவீணின் பதில்கள் அசத்துகிறது.
இருவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

ஓவியன்
20-06-2010, 03:46 AM
[B]எனக்கென்னமோ, மீத கேள்விகளை திரி ஆரம்பித்த அண்ணாவே, தலையிலே ஒரு முண்டாசை கட்டிக்கொண்டு டைப் அடித்திருப்பார் என்றே தோனுகிறது, ஒரிஜினலில் இவ்வளவு கேள்வி இல்லையே :).

:icon_b: :icon_b: :icon_b: :icon_b:

__________________________________________________________________________________________________________

சிரித்து, சிரித்து கண்களால நீர் வருகுது..!! :):):icon_b:

அன்புரசிகன்
20-06-2010, 03:55 AM
படிக்கிற காலத்தில ஓவியன் செய்த சில விடையங்கள் இங்கு நகைச்சுவையாக பகிரப்பட்டுள்ளன என்று சொன்னால் நம்பவா போறீங்க... (மொபைல் , திறப்பு, தும்புத்தடி தேடினவர்)

ஓவியன்
20-06-2010, 04:07 AM
படிக்கிற காலத்தில ஓவியன் செய்த சில விடையங்கள் இங்கு நகைச்சுவையாக பகிரப்பட்டுள்ளன என்று சொன்னால் நம்பவா போறீங்க... (மொபைல் , திறப்பு, தும்புத்தடி தேடினவர்)

இது அப்பட்டமான பொய் யுவர் ஆனார்..!! :sauer028:

அன்புரசிகன்
20-06-2010, 04:10 AM
இது அப்பட்டமான பொய் யுவர் ஆனார்..!! :sauer028:

ஆனா இத மட்டும் எல்லாரும் நம்புங்கப்பா...

விகடன்
20-06-2010, 12:19 PM
இந்த நகைச்சுவையை சர்தாஜி ஜோக்காக இல்லாது பொதுவான தொகுக்கப்பட்ட கேள்விகளாக படித்திருக்கிறேன்.

மீண்டும் ஞாபகப்படுத்தியமைக்கு நன்றி ஜீ.