PDA

View Full Version : இதய முற்றத்தில் மலர்ந்த என் இனிய மல்லிகை



jawid_raiz
17-06-2010, 06:37 AM
http://farm3.static.flickr.com/2803/4386755041_9233ff010b.jpg

இதயத்தை நோக்கி ஓட வேண்டிய
என் குருதிக் கலங்கள் எல்லாம்
உன்னை நோக்கியே ஓடி வருகிறது...

செங்குருதி துனிக்கைகளையும்
வெண் குருதி துனிக்கைகளையும் விஞ்சி
உன் நினைவு துணிக்கைகளின் செறிவு
அதிகமாய் இருக்கிறது என் குருதியில்

எல்லா மலரையும் விட்டு விட்டு
உன் கூந்தலை முகரவே துடிக்கிறது
என் நாசி

நீ விழி திறக்கையில் விடியலையும்
விழி மூடுகையில் இரவினையும்
மாறி மாறி அனுபவிக்கிறது
என் உலகம்

உன் புன்னகையினை சேமிக்க
உன் உதடுகளின் கீழே
ஞாபக வங்கியை
அமைத்து வைத்திருக்கிறது என் இதயம்

தத்தித் தத்தி நடக்கும்
உன் பிஞ்சுக் கால் தடங்களை
தித்திப்போடு தொடர்கிறது
என் பாதங்கள்

உடம்பின் ஒவ்வொரு அணுவும்
தனித்தனியாய்
இன்பமடைந்து களிக்கிறது
மழலை மொழியில் நீ
"நானா!" ("சகோதரா") என்று அழைக்கும்
ஒரு நொடியில்

-ஜாவிட் ரயிஸ்

அமரன்
17-06-2010, 04:17 PM
கவிப்பூவில் பாச மலர் மணம் வீசுகிறது.

மகிழ்ச்சி ஜாவித்.

சிவா.ஜி
17-06-2010, 04:23 PM
பாசப்பூவுக்கு....வேசமில்லாத ஒரு நேசக்கவி.

தளிருக்குத் தமயனின் தலைகோதும் தமிழ் கவி.

மிக அருமை. பாராட்டுக்கள் ஜாவித்.

jawid_raiz
17-06-2010, 05:08 PM
கவிப்பூவில் பாச மலர் மணம் வீசுகிறது.

மகிழ்ச்சி ஜாவித்.

நன்றி அமரன் !

jawid_raiz
17-06-2010, 05:09 PM
பாசப்பூவுக்கு....வேசமில்லாத ஒரு நேசக்கவி.

தளிருக்குத் தமயனின் தலைகோதும் தமிழ் கவி.

மிக அருமை. பாராட்டுக்கள் ஜாவித்.

உங்கள் பின்னூட்ட வரிகள் அருமை...

நன்றி சிவா.ஜி!