PDA

View Full Version : வந்தது தீர்ப்பு!



பாரதி
16-06-2010, 06:15 PM
அன்று....
ஆடு மாடு மந்தை போல்
அடுத்தடுத்து மடிந்தோம்.

நேற்று வந்தது தீர்ப்பு!

நீதான் குற்றவாளி
கட்டு பணத்தை....
போ வீட்டுக்கென....
கூவி நீதியும் நீண்ட தீர்ப்பெழுதும்.

ஆண்டவனே கதியென
ஆண்டிருப்பாத்தாறு காத்திருந்து
கூண்டுப்பறவையென மனிதம் ஆகும்;

ஆண்டாண்டு முடியாததை
அடுத்த பத்து நாளில் செய்ய
அமைச்சரவையும் கூடும்.

அமெரிக்காவானாலும்
ஆண்டர்சனானாலும்
குற்றம் குற்றமேயென
அக்னிப்பிளம்பாய் அறிக்கை வீசும்.

அணு உலை அபாயம் மட்டும்
அமைதியாயிப்போது மூடிவைக்கும்.

ஆண்டர்சனிங்கு வந்தாலும்
அடுத்த இருபதாண்டிற்கு
அரசின் கஜானாதான்
அதற்கும் செலவு செய்யும்.

ஆகவே....

அப்போதைக்கு அழுததற்கு
இப்போதைக்கு வைக்கோலும்
இறந்த பின்னர் வாய்க்கரிசியும்
உண்டுமக்கென்று எழுதி வைக்கும்.

காந்தியின் கைத்தடி இருக்கும் மட்டும்
காவல் கையில் இருக்கும் மட்டும்
வசதி தேடும் வழக்குரைஞர் இருக்கும் மட்டும்
இதுதான் இந்தியாவில் எப்போதும் நடக்கும்.

ஆண்டு பல கடக்கும்;
அடுத்த முறை மீண்டுமிதே தீர்ப்பு வரும்
கையாளாகாத மனிதத்திற்கு
கண்ணீர் மட்டுமே கைகொடுக்கும்.

செல்வா
16-06-2010, 09:13 PM
இந்தியாவில் சாதாரண மனித உயிர்களுக்கு மதிப்பே இல்லை என்பது மீண்டும் மீண்டும் தெளிவாகிக் கொண்டு வருகிறது.
என்றோ இறந்து போன ஒரு இரண்டுங்கெட்ட அரசியல்வாதிக்காக ஒரு இனத்தையேப் பழிவாங்கிய கூட்டம் இன்று கொத்து கொத்தாக செத்து மடிந்த உயிர்களுக்காக
அமெரிக்கப் பேய்களின் அடிவருடிக் கொண்டு சொறிந்து விட்டுக் கொண்டிருக்கிறது.

பணமும் அதிகாரமும் இருப்பவர்களுக்கு மட்டுமே இந்தியா. வேறு எந்த சாதாரண மனிதருக்கும் இடமில்லை.

ஆயிரக்கணக்கில் செத்து மடிந்த சாதாரண மக்களின் உயிரை வாங்குமளவிற்கு அசிரத்தையாக சரியான பாதுகாப்பு ஏற்பாடுகளின்றி தொழிற்சாலை நடத்திய அரக்கர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் தண்டமும் 2 வருட தண்டனையும் இதை வழங்குவதற்கும் 26 வருடங்கள்.
சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கோ அதன் அமெரிக்க நிறுவனருக்கோ வாய்க்கரிசியாத் தூக்கி எறிந்த பணக்கட்டுகளைத் தவிர ஒரு மயிரும் புடுங்க வேண்டிய அவசியமில்லை.
அவர்கள் செய்யவேண்டியதையும் சேர்த்து நமது ஆட்சியாளர்களே நன்றாக மழுங்கச் சிரைத்து விடுகின்றனர்.

இந்தியாவில் வாழ்வதைக் காட்டிலும் சுனாமி வந்து செத்துப்போகலாம். இல்லையென்றால் இப்படி எத்தனை தொழிற்சாலைகளும் அணுஉலைகளும் வெடிக்க இருக்கிறதோ.

இனிதான் யாருக்கும் கவலை இல்லையே... நீ பாதுகாப்பு செய்தால் என்ன செய்யா விட்டால் என்ன கேட்பதற்கு ஒரு நாதியும் கிடையாது. அப்படியே கேட்டாலும் தூக்கி எறிய பணம் இருந்தால் போதும்.

50 வருடமென்ன 500 வருடங்கள் ஆனாலும் வழக்கு மன்றத்திற்கு வராமல் நிறுத்திவைக்க நல்ல நீதித்துறை இருக்கிறது. பிறகென்ன கவலை.

அமரன்
16-06-2010, 10:09 PM
ஒரு மனிதனின் கொதிப்பு. பாரதியின் ரவுத்திரத் தெறிப்பு. என்னத்தைச் சொல்ல. நாட்டு நலன் என்பதே பலரது சப்பைக் கட்டாக இருக்கப் போகுது.

தேவையான பதிவு!

கீதம்
16-06-2010, 11:09 PM
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய தீர்ப்பு!
ஆதங்கத்தை வெளிப்படுத்திய
அனல் பறக்கும் வார்த்தைகள்!

என்று தணியும் இந்த
சுதந்திர தாகம்
என்று பாடினார் அந்த பாரதி!
என்று கிடைக்கும்
நியாயமான தீர்ப்பு என்று
ஏங்குகிறார் இந்த பாரதி!

மனம் கனக்கிறது.

பாரதி
17-06-2010, 08:40 AM
ஊக்கங்களுக்கு நன்றி செல்வா, அமரன், கீதம்.

சிவா.ஜி
17-06-2010, 09:03 AM
வெட்கங்கெட்ட அரசாங்கம்....நேர்மையில்லா நீதித்துறை...எப்படிக் கிடைக்கும் நியாய*த் தீர்ப்பு. காங்கிரஸ் நமது தேசத்தை அமெரிக்காவிடம் அடமானம் வைத்து பல காலமாகிவிட்டது. இன்னும் கொஞ்சநாளில் சல்லிசாக விற்றுவிட்டு அவர்களெல்லாம் அமெரிக்காவிலேயே சென்று நிரந்தரமாய் வெள்ளை மாளிகையின் கழிவறைகளைக் கழுவுவார்கள்.

உங்கள் ஆதங்கமும், கோபமும் நியாயமானதே பாரதி.....இந்தியராய் பிறந்துவிட்டோம்....வேறென்ன சொல்வது?

nambi
17-06-2010, 09:29 AM
தீர்ப்பு என்ற பெயரில் வந்த திகைப்பு!..... பிற நாடுகளுக்கெல்லாம் வந்திருக்கும் ஒரு நமட்டு நகைப்பு!.....

பாரதி
18-06-2010, 04:05 PM
நன்றி சிவா, நம்பி.

இன்றைய அரசியலில் யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் பேசலாம்; உறுதியை காக்க வேண்டிய அவசியம் எல்லாம் ஒன்றும் இல்லை.

இன்றைய அமைச்சர்கள் குழுக்கூட்டத்தில் என்ன சொன்னார்களோ.. தெரியவில்லை.