PDA

View Full Version : மஞ்சள் அட்டை, சிவப்பு அட்டை.....?



nambi
16-06-2010, 06:59 AM
http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/ae/Rot_und_Gelb_%28Fu%C3%9Fball%29-red_and_yellow_card_%28Soccer%29.jpg/220px-Rot_und_Gelb_%28Fu%C3%9Fball%29-red_and_yellow_card_%28Soccer%29.jpg




கால்பந்து விளையாட்டில் வீரர்களுக்கு நடுவரால் அளிக்கப்படும் மஞ்சள் அட்டையும் சிவப்பு அட்டையும் அப்படி என்னதான் தெரிவிக்கின்றன?


இந்த வண்ண அட்டைகள் கால்பந்தாட்டத்தின் போது வீரர்களால் நடத்தை விதிகள் மீறப்படும் பொழுது வழங்கப்படுவது தான்.
கால்பந்தாட்ட விதி 12 இல் வழங்கப்பட்டுள்ளதின் படி (கேம் அப் லா) இந்த பின்பற்றல்கள் பின்பற்றப்படுகிறது.

ஆடுகளத்தினுள் பந்து இருக்கும் பொழுது பங்கு பெறும் நிரந்தர வீரர்கள் அல்லது பதிலாள் (சப்ஸ்டியுட்) இவர்களால் மேற்கொள்ளப்படும் நடத்தை விதிமீறல்களை தடுப்பதற்காக இந்த அட்டை அவர்களுக்கு வழங்கப்படும்.

இதை முறைதவறிய ஆட்டத்திற்காக (பவுல் பிளே) வழங்கப்படுவதாக எடுத்துக் கொள்ளல் ஆகாது . முறைதவறிய ஆட்டம் (பவுல்) என்பது வேறு...... ஆனால் இது கால்பந்தாட்ட வீரர்களின் நடத்தை விதிகளை மீறுவது குறித்து வழங்கப்படுவது. (மிஸ்கான்டக்ட்)

பொதுவாக மஞ்சள் அட்டை ஒரு எச்சரிக்கையாக முதல் முறை வழங்கப்படும். அந்த வீரரின் எண் மற்றும் பெயரும் நடுவரால் புத்தகத்தில் குறிக்கப்பட்டுவிடும். மறுமுறையும் அந்த தவறையே மீண்டும் அந்த வீரர் செய்தால் மீண்டும் இரண்டாம் முறையாக மஞ்சள் அட்டை வழங்கப்படும் அதனைத் தொடர்ந்து அப்பொழுதே சிவப்பு அட்டையும் வழங்கப்படும். (கேரம் போர்டு விளையாட்டில்.... ரெட் அண்டு பாலோ போன்று). சிவப்பு அட்டை வழங்கப்பட்டவுடன் வீரர் ஆடுகளத்தை விட்டு வெளியேறி விடவேண்டும். அவருக்கு பதிலாளாக (சப்ஸ்டியுட்) வேறொருவர் ஆடுகளத்தில் நுழைய முடியாது. வெளியேறியவர் ஆடுகளத்திற்கு வெளியேயும் (பயிற்சியாளர் இடத்திலும்) அமரக்கூடாது. நேராக உடை மாற்றும் அறைக்கு சென்று விடவேண்டும். அவர் அந்த ஆட்டம் முழுக்க பங்கு பெற அனுமதிக்க படமாட்டார்.

இப்படி வெளியேற்றிக்கொண்டே வந்தால் ஒரு அணியின் வீரர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டு விடுமே? ஆமாம் அதுதான் தண்டனை. இப்படி ஒரணியின் எண்ணிக்கை எவ்வளவு வரை குறைக்கமுடியும்?

ஒரு அணிக்கு குறைந்த படச வீரர்களின் எண்ணிக்கை 7 வீரர்கள் இருக்கவேண்டும். அந்த எண்ணிக்கை வரும் வரை குறைத்துக் கொள்ளலாம். (4 வீரர்கள் வரை....சிவப்பு அட்டை வழங்கப்படும்). அதற்கு மேலும் இருந்தால் அந்த அணியும் போட்டியிலிருந்து விலக்கப்படும்.

இலக்கு காப்பாளர் (கோல் கீப்பர்) இந்த சிவப்பு அட்டையை பெற்றுவிட்டாரென்றால் அவருக்கு பதில் வேறொரு கோல்கீப்பர் பதிலாளாக (சப்ஸ்டிட்) சேர்த்துக்கொள்ளலாம். அல்லது இந்த கோல் கீப்பரை மற்ற வீரரைப்போல் மாற்றிவிட்டு மற்ற ஆட்டக்காரர் ஒருவரை கோல் கீப்பராக நியமித்துக் கொள்ளலாம். (கோல் கீப்பருக்கு பதிலாள் என்று ஒருவரும் அந்த அணியில் இல்லாத சமயத்தில்...பதிலாள் அனைவரும் சிவப்பு அட்டை பெற்றுவிட்டனர் என்கின்ற நிலையிலும் இம்முறை பின்பற்றப்படும்)


மஞ்சள் அட்டை எபொழுதெல்லாம் ஒரு வீரருக்கு வழங்கப்படும்.....

1. சச்சரவுக்குரிய வார்த்தை பிரயோகம் அல்லது செயலில் ஈடுபடுதல்...
2. பிடிவாதாமாக ஆட்ட விதிகளை மீறுவது....
3. ஆட்ட மறுதுவக்கத்திற்கு காலந்தாழ்த்துவது...அல்லது வேண்டுமென்றே காலந்தாழ்த்துவது...
4. போதிய இடைவெளி விடாமல் தடுத்து நிற்பது...(கார்னர் கிக், எறிவது (துரோ இன்), பிரி கிக்.....)
5. ஆடுகளத்தை விட்டு நடுவரின் (ரெப்ரி) அனுமதியில்லாமல் வெளியேறுவது மற்றும் உள்நுழைவது....
6. வேண்டுமென்றே ஆடுகளத்தை விட்டு நடுவரின் அனுமதியில்லாமல் வெளியேறுவது....
(இது மட்டுமில்லாமல் தலையால் இடிப்பது.... கால்பந்தாட்ட வீரரின் ஆடை (ஜெர்சியை) பிடித்து இழுப்பது.....நடுவரின் கவனத்தை திசை திருப்புவதாக செய்யப்படும் செயல்கள் ....பெனால்ட்டி கிக்.....பந்தை உதைப்பது சென்று உதைக்காமல் ஏமாற்றுவது போன்றவகளும் நடத்தை விதி மீறும் செயல்களாக தற்போதய உலக கோப்பையில் சேர்க்கப்பட்டுள்ளது....)


சிவப்பு அட்டையின் மூலம் வீரரை வெளியேற்றுவது......எப்பொழுது...?

1. மிக மோசமான முறை தவறிய ஆட்டம்...(பவுல் பிளே).
2. மூர்க்கத்தனம் கொண்ட நடத்தை.....
3. மிக மோசமான வார்த்தை பிரயோகம்....கைகலப்பு
4. எதிரணி வீரரின் மேல் உமிழ்நீர் உமிழ்தல்...(ஸ்பிட்டிங்)
5. எதிரணி அடித்த இலக்கை (கோல்) ஏற்க மறுத்தல்....மறுதலித்தல்....எப்படியாவது இலக்கு அடிக்க குறுக்கு வழிகளில், முறையற்ற வழிகளில் பந்தை வேண்டுமென்றே கையாள்வது....
6. பெனால்டி, பிரி கிக் போன்ற நேரங்களில் ஆட்ட விதிக்கு மாறாக குற்ற செயல்களில் ஈடுபடுவது.....
7. இரண்டாம் முறையாக மஞ்சள் அட்டை பெற்றவுடன் உடனடியாக சிவப்பு அட்டையும் கொடுக்கப்பட்டு விடும். (வெளியேற்றப்பட்டு விடுவார்)
(சிவப்பு அட்டை கொடுத்தாலே வெளியேற்றம் தான்)

மேற்கூறிய விஷயங்களில் சந்தேகம் எனக்கு இருந்தது...அதை தெரிந்தும் கொண்டேன் அப்படியே பகிர்ந்தும் கொண்டேன்.

.....ஆதாரங்கள் திரட்டியது.... விளையாட்டு இணையதளம் மற்றும் விக்கிப்பீடியா களஞ்சியம்.....

செல்வா
16-06-2010, 08:31 AM
கால்பந்தாட்ட மஞ்சள் சிவப்பு அட்டைகள் பற்றிய விபரத்தை உங்களால் அறிந்து கொண்டேன் பகிர்தலுக்கு நன்றிகள் நம்பியவர்களே.

சிவா.ஜி
16-06-2010, 09:25 AM
எனக்கும் நீண்டநாளாகத் தெரிந்துகொள்ளவேண்டுமென்ற ஆர்வம் இருந்தது. சந்தேகத்தை தீர்த்துவைத்த நம்பியின் பகிர்வுக்கு நன்றி.

அமரன்
16-06-2010, 10:15 PM
சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட வீரர் அடுத்த போட்டியில் விளையாடத் தடையினையும் பெறுகிறார். இது அண்மையில் ஏற்படுத்தப்பட்ட மாற்றம். முன்பு மூன்று போட்டிகளில் விளையாடத் தடை என நினைக்கிறேன்.

தேடிக்கிடைத்ததை அறியத் தந்தமைக்கு நன்றி நம்பி.

govindh
16-06-2010, 10:23 PM
விதிகளை அறிந்து கொள்ள முடிந்தது....
பகிர்வுக்கு மிக்க நன்றி....

arun
30-07-2010, 12:31 PM
நல்ல விளக்கம் பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே