PDA

View Full Version : பசுமைவேட்டை....!!!:(நிறைவுப்பகுதி)Pages : [1] 2

சிவா.ஜி
16-06-2010, 06:40 AM
அத்தியாயம்:1

அண்ணா சாலையின் பரபரப்பிலிருந்து லேசாய் ஒதுங்கி அமைந்திருந்தது அந்தக் கட்டிடம். அண்ணா சாலையின் பரபரப்பை குட்டித் தம்பியாக்கிவிடும் பெரியண்ணன் பரபரப்பை கட்டிடத்தின் மூன்றாம் தளம் மொத்தமாய்க் கொண்டிருந்தது. ஜனநாயகத்தின் நான்காவது தூண். தமிழ்நாட்டின் கரை வேட்டிகளையும்,காவி பார்ட்டிகளையும், காக்கிகளையும், கதர்களையும் கதற வைக்கும் புலனாய்வு நிருபர்கள்...தங்கள் அதிர வைக்கும் கட்டுரைகளைத் தயாரித்துக் கொண்டிருந்தார்கள். வாரமிருமுறை வெளிவரும் இந்த இதழை, அதன் ஆசிரியரைவிட ஆவலாய்....இன்னும் சொல்லப்போனால் அடிமடியில் பயத்தைத் தேக்கிக்கொண்டு அச்சத்துடனும் எதிர்பார்ப்பார்கள் மேலே சொன்ன க...காக்கள்.

பூவிழி தீவிர சிந்தனையுடனும், சற்றேக் கவலையுடனும் அந்த செய்தியைப் படித்துக்கொண்டிருந்தாள். நாளைய இதழுக்காக அச்சுக்குப் போகுமுன் அவளது பார்வைக்கு அனுப்பட்ட அந்த செய்தியை அனுப்பியவன் அதனைத் தயாரித்த பாரி. அந்தப் பத்திரிக்கையின் சிறப்புப் புலனாய்வு நிருபர். பூவிழியின் காதலன். அவளது சற்றேக் கவலைக்கானக் காரணம் அந்த செய்தின் உள்ளிருப்பு விஷயங்கள். சக்திவாய்ந்த பெரியக் குடும்பத்தின் திடீர் கவிதாயினியைப் பற்றிய அதிர வைக்கும் சில உண்மைகளை அதில் சொல்லியிருந்தான் பாரி.

பண்டைய அரசர்களின் வாரிசுகளுக்கு ஆளுக்கொருத் துறையை அரசர் ஒதுக்கியிருந்ததைப் போல இந்த வாரிசுக்கு ஒதுக்கப்பட்ட கலை இலக்கியத் துறையின் மூலமாய், ஆண்டுதோறும் நிகழ்த்தும் கும்மிப்பாட்டுத் திருவிழாவில்...இவரது பங்குக்கு எவ்வளவு கும்மியடிக்கப்பட்டது என்பதை ஆதாரத்துடன் சொல்லியிருந்தான். என்னதான் ஆதாரமிருந்தாலும் அந்த சக்திவாய்ந்தக் குடும்பத்தின் ரத்தப் பின்னனி அவளை பயமுறுத்தியது. எதற்கு இவனுக்கு இந்த ஆபத்தான வேலை...? காதலியின் மனது இப்படி சிந்தித்தாலும், அவனது துணிச்சலை வெகுவாய் மெச்சிக்கொண்டது ஒரு சக நிருபரின் மனது.

சிறுசிறு தடுப்புக்களாகப் பிரிக்கப்பட்டிருந்த அந்த பெரியக் கூடத்தில்...இவளுக்கு நேர் பின்னாலுள்ளத் தடுப்புதான் பாரியின் களம். நல்ல உயரம். சேட்டுப் பையன் என சொல்லவைக்கும் நிறம். சூர்யாவின் உடற்கட்டு, பழைய ரஜினிகாந்தின் தலைமுடி.துடிப்பான இளைஞன். பொறியியலில் பட்டம் பெற்றவன்,எந்திரங்களோடு எந்திரமாக விரும்பாமல் மனம் விரும்பி ஏற்றுக்கொண்ட துறையில் சாதித்துக்கொண்டிருப்பவன். கல்லூரியில் படிக்கும்போதே மாணவர் பத்திரிக்கையாளனாக பணிபுரிந்து, சிறப்பு பரிசைப் பெற்றவன். வேலை வேண்டி வந்து நின்றபோது வாரியணைத்துக் கொண்டார் இந்தக் குழுமத்தின் தலைவர். அவரது நம்பிக்கை வீண்போகவில்லை. பாரியின் கட்டுரைகளின் சூட்டை...படிப்பவர்கள் அனைவரும் தங்கள் நெஞ்சில் உணர்ந்தார்கள். கட்டிப்போடும் எழுத்தாளுமை...கலந்து நிற்கும் எள்ளல் நகைச்சுவை, தெளிவான, உறுதியான வாக்கியங்கள் அவனது எழுத்தை, எண்ணத்தை அனைவரையும் விரும்ப வைத்தது.

படித்துக்கொண்டிருந்த செய்தியிலிருந்து பார்வையை அகற்றி..சிந்தித்துக்கொண்டிருந்ததிலிருந்து மனதை அகற்றி...உடலை அதிகம் வளைக்காமல், உட்கார்ந்த நிலையிலேயே தலையை மட்டும் சில டிகிரிகள் திருப்பி, பாரியை அழைத்தாள். தடுப்புக்குப் பின்னாலிருந்து நிமிர்ந்தால், பலருக்கு மூக்குவரை மட்டுமே தெரியும். பாரிக்கு கழுத்துவரைத் தெரிந்தது. முதல் பொத்தானை கழட்டிவிட்டு...பின்னோக்கி ஏற்றிவிட்டக் காலர் தெரிந்தது. அவனைப் பார்த்ததும் ‘கொல்றடா தடியா” மனசுக்குள் கிறங்கிவிட்டு...

“ஏ தடிமாடே...நீ திருந்தவே மாட்டியா?”

“ஏ...வெள்ள வெண்டக்கா....இப்படிக் கேக்கறத நிறுத்தவே மாட்டியா?”

அவள் என்னக் கேட்கிறாள் என்பதைப் புரிந்துகொண்டு, லேசான புன்முறுவலுடன் அவன் அளித்த பதிலைக் கேட்டதும்...

“ஏற்கனவே சவுத் பார்ட்டிகிட்ட முட்டிக்கிட்ட...பாஸ்தான் சமாதானம் செஞ்சு வெச்சாரு. இப்ப இன்னொரு பெரிய இடமா...? பயமா இருக்குப்பா”

“ஒரு பச்சத் தமிழச்சி...அச்சப்படலாமா....கூல்யா...நாம பாக்காத மிரட்டலா...ஆதாரம் இருக்குன்னு தெரிஞ்சா பம்முவாங்க....சமாதானத்துக்கு ஆள் அனுப்புவாங்க...ஆனா அவங்கப் பத்திரிக்கையில மட்டும்...காராசாரமா ஒரு கடிதம் எழுதி, எல்லாத்தையும் மறுப்பாங்க. நாம சொல்றது சேர வேண்டியவங்களுக்கு மட்டும் சேர்ந்தாப் போதும் பூ...ஸோ...எடிட்டருக்கு அனுப்பிட்டேன்...”

‘படவா...அனுப்பிட்டியா...அப்ப எதுக்குடா என்னோட ஒப்பீனியனைக் கேட்டு அனுப்புன...எனக்கு வர்ற கோவத்துக்கு....பேப்பர்ல இருந்திருந்தா அப்படியேக் கிழிச்சிக் கசக்கித் தூக்கிப் போட்டிருப்பேன்...”

இதை சொல்லி முடிப்பதற்குள் எழுந்து நின்றுவிட்டாள்...

“ஆத்தா...ஆத்தா....மலையெறங்கு....என்னோட எல்லா எழுத்தையும் நீதான் மொதல்லப் படிக்கனும்...அதுக்குத்தான் உனக்கு அனுப்பினேன்...நீ படிச்சி முடிச்சி..என்னைத் திரும்பிப் பாத்த ரெண்டு செகண்டுக்கு அப்புறமாத்தான்...அனுப்புனேன்...ஓக்கேவா...அப்பா...வெள்ளை வெண்டைக்காய்க்கு...சிவப்பு கொண்டை மாதிரி மூஞ்செல்லாம் எப்படி செவந்திருச்சி..”

“எங்கருந்துப்பா இந்தமாதிரி டெக்னிக்கெல்லாம் புடிக்கறீங்க....சரி...சரி...எனக்கென்ன..அடிபட்டு ஆஸ்பத்திரியிலக் கெடந்தா...அரைக்கிலோ ஆப்பிள் வாங்கிட்டு வந்துப் பாக்கறேன்...எப்படியோப் போய்த் தொலை...”

பாரியின் மேசைமேலிருந்த தொலைபேசி சிணுங்கியது. திரையில் தோன்றிய எண்ணைப் பார்த்ததும்...பூவிழியைப் பார்த்து....

“பெரியவர்கிட்டருந்துதான்...”

சொல்லிக்கொண்டே ஒலிப்பானை எடுத்துக் காதில் ஒற்றினான்...

“இதோ வரேன் சார்.....பூ...கூப்ட்றாரு...வந்துர்றேன்....”

போகும் வழியில்...

“மாலினி..நீ நாலரையா...பதினெட்டரையா...”

என்று அக்கவுண்டென்ண்டைக் கலாய்த்தான்.

“என்ன சொல்ற நீ...?”

“ஆரோக்யாவா...ஆவினான்னுக் கேட்டேன்....இவ்ளோ போஷாக்கா இருக்கியே...எந்தப் பாலைக் குடிக்கிறே...?”

“கண்ணு வெக்காத பாரி....சம்பத்துக்கு...இப்படி இருந்தாத்தான் புடிக்குமாம். இன்ஃபேக்ட்...என்னைக் கல்யாணம் செஞ்சிக்கிட்டதே.....நான் குஷ்பூ மாதிரியே இருக்கேன்னுதானாம்...”

கஷ்டம்டா...தலையில் அடித்துக்கொண்டே சென்று ஆசிரியரின் அறைக்கதவைத் தட்டிவிட்டு உள்ளே நுழைந்தான்.

“சார் அந்தக் கட்டுரை...”

“அது இருக்கட்டும்....ஒரு முக்கியமான ஸ்கூப் கெடைச்சிருக்கு, போட்டோகிராபர் வேல்முருகனைக் கூப்ட்டுக்கோ..நாளைக்கே திருப்பத்தூர் கிளம்பு. இந்தா இந்த ஃபைல்ல எல்லா விஷயமும் இருக்கு.”


தொடரும்....

மதி
16-06-2010, 06:55 AM
அதிரடி துப்பறியும் தொடரா...?? கலக்குங்க.. உங்க எழுத்தில இருக்கற அந்த நக்கல், நையாண்டி தான் ரொம்ப புடிச்சது..

Akila.R.D
16-06-2010, 07:33 AM
காதல் , க்ரைம் எல்லாம் கலந்து இருக்கும் போல...

தொடர்ந்து வருவேன்....

செல்வா
16-06-2010, 08:45 AM
ஆரம்பிச்சாச்சா.. அடுத்த சரிவெடி

இப்படி ஒரு நக்கல் காமெடி வாசிச்சு எவ்ளோ நாளாச்சு...

எனக்கென்னமோ அந்தப் பாரிங்கிறது நம்ம சிவா அண்ணனோநு பட்சி சொல்லுது...

(அப்படின்னா பூவிழி யாருனு கேக்ககூடாது..:) )

இன்னும் நிறைய அரசியல் கலக்கல்கள் பாரி பண்ணுவார்னு நெனக்கிறேன். பாக்கலாம்.

நல்லா வந்திருக்குது அண்ணா... தொடருங்கள்.

சிவா.ஜி
16-06-2010, 08:52 AM
அடுத்த தொடர்தான் மதி...ஆனா அதிரடி கதையிலயா...இல்ல எனக்கே கிடைக்குமா தெரியல....பாப்போம்...

(எவ்வளவோ பாத்துட்டோம்...இதைப் பாக்க மாட்டமான்னு நீங்க சொல்றது காதுல விழுது...)

சிவா.ஜி
16-06-2010, 08:53 AM
ஏதோ கலந்து கொடுக்கலான்னு இருக்கேங்க அகிலா...தொடர்ந்து வரேன்னு சொன்னதுக்கு ரொமப நன்றி.

பாரதி
16-06-2010, 08:54 AM
வேட்டைய ஆரம்பிச்சாச்சா...!
அசத்துங்க சிவா.

சிவா.ஜி
16-06-2010, 08:56 AM
ஆரம்பிச்சாச்சு...அது சரிவெடியா...தப்புவெடியான்னு...நீங்கதான் சொல்லனும்....

ஆனா நிச்சயமா பாரி நான் இல்லப்பா....எந்த முல்லைக்கும் தேர் கொடுக்கல....ஹி...ஹி...


நக்கல் காமெடி....பின்னாடி சீரியஸா சொல்லப்போறேனில்ல....அதுக்குத்தான் முன்னாடியே கொடுத்துட்டேன்.

நன்றி செல்வா.

சிவா.ஜி
16-06-2010, 08:57 AM
ரொம்ப நன்றிங்க பாரதி.

கீதம்
16-06-2010, 12:54 PM
புதிய தொடருக்கு என் வாழ்த்துகள் அண்ணா. ஆரம்பமே ஒரு எதிர்பார்ப்பை உண்டாக்கிடுச்சு. அரசியல்னா சும்மாவா? கொஞ்சம் பயத்துடனேயே தொடர்கிறேன்.

சிவா.ஜி
16-06-2010, 01:04 PM
பயப்பட வேண்டாங்க....கீதம். இது முழுக்க அரசியல் கிடையாது....போகப்போக...வேற மாதிரி போகும்.

வாழ்த்துக்களுக்கு ரொம்ப நன்றிம்மா.

govindh
16-06-2010, 10:48 PM
அதிரடி கலக்கல் தொடர்....
அருமையான ஆரம்பம்...
ஆவல் கூட்டும்....எழுத்துக்கள்....
அசத்துங்கள்......

வேட்டையைத் தொடருங்கள்....
தொடர்ந்து வருகிறோம்...

சிவா.ஜி
17-06-2010, 05:22 AM
நன்றி கோவிந்த்.

samuthraselvam
17-06-2010, 06:09 AM
பூவிழி வேற யாரா இருக்கும் நம்ம அண்ணி தான்...:)

ஆனா அந்த திடீர் கவிதாயினியும் அவங்க குடும்பமும் மட்டும் யாருன்னு புரியுது....

*பழபாஷை* தானே சிவா அண்ணா...?:icon_ush:

சிவா.ஜி
17-06-2010, 06:43 AM
ஆஹா...தங்கச்சி...ரொம்ப ஷார்ப்...பழபாஷையேத்தான். ஆனா...அண்ணி பாட்டுக்கு....குடும்பத்த நிர்வகிச்சுக்கிட்டு இருக்காங்க....அவங்களை எதுக்கு ரிப்போர்ட்டராக்கனும்மா....

ஹி..ஹி...பூவிழி...பாரி...இந்தக் கதைக்காக மட்டும் அவதாரமெடுத்தவங்க.

சிவா.ஜி
17-06-2010, 09:58 AM
அத்தியாயம்-2

மாலை அலுவலகம் முடிவதற்குமுன் பாரியிடமிருந்து வந்த அழைப்பைப் பார்த்து, கைப்பேசியை காதோடு அணைத்தாள் பூவிழி.

"செல்லம்...நீ நல்லப் பொண்ணுதான...ஆபீஸ்விட்டதும் நேரா சத்யம் வந்து ரெண்டு டிக்கெட் வாங்கிட்டு வெயிட் பண்ணுவியாம்...நான் நேரா அங்க வந்துடவனாம்...ஓக்கேவா"

அவசரமாய் சொல்லிவிட்டு பட்டென்று இணைப்பைத் துண்டித்துவிட்டான்.

நுழைவுச்சீட்டுக்களை வாங்கிக்கொண்டு, வெளியே இருந்த கடையிலிருந்து பாப்கார்ன் பொட்டலத்தையும் வாங்கிக்கொண்டு...அவனுக்காக காத்திருந்தாள். கொஞ்சமாய்க் குழம்பினாள். அஸைன்மெண்ட்டுக்காகத் திருப்பத்தூர் போனவன்...கிளம்பும்போது அழைத்துச் சொன்னான்...இப்போது திடீரென்று படத்துக்கு டிக்கெட் வாங்கச் சொல்லி ஏன் சொன்னான்....

அவளை அதிகம் குழம்ப விடாமல்...கொஞ்ச நேரத்திலேயே அவள் தோளைத் தட்டி...சில சோளப்பொறிகளை சிதறவைத்தான்.

பாப்கார்னைக் கொறித்துக்கொண்டே, பாரியின் தோளில் சாய்ந்தபடியே

“ரெண்டு நாளாச்சு. வர்றதுக்கு முன்னால மட்டும் ஒரு போன். இதோ கெளம்பிட்டேன்னு...அதுக்கடுத்ததா...ரெண்டு டிக்கெட் எடுத்து வெச்சிக்கிட்டு வெயிட் பண்ணுன்னு ஒரு போன்...பதில் சொல்லக்கூட விடாமக் கட் பண்ணிட்ட....எங்க போய்த் தொலைஞ்சே...ஏன் நடுவுல போனே பண்ணல..?

பூவிழியின் கேள்விக்கு..மெதுவானக் குரலில்....

“அந்தப் பொண்ணு என்னைப் போன் பண்ணவே விடல தெரியுமா...”

முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டு சொன்ன பாரியைப் பார்த்து....

“போதும்...போதும்....மேட்டருக்கு வா...”

“ஏலகிரி மலைமேல இருந்தேன். சிக்னல் லேது...அது மட்டுமில்ல...நடந்தே ஏறி இறங்கி பெண்டு கழண்டுடிச்சி. நம்ம சாப்பாட்டு அமைச்சரோட ஒரு பெரிய தோட்டம் அங்க இருக்கு. மொத்தமும்...கவர்மெண்ட் லேண்ட். நேர்லப் போய்ப் பாத்து, போட்டொ எடுத்துக்கிட்டு, திருப்பத்தூர் ரெஜிஸ்ட்ராஃபீஸுக்குப் போய் கொஞ்சம் எவிடென்ஸ் பேப்பரெல்லாம் சரி பண்ணிக்கிட்டு வரவேண்டியதா போச்சு. இந்த இஷ்யூல வரும். ஆஃபீஸுக்கு வந்தா...ஏதாவது வேலை அது இதுன்னு உக்காந்துடுவேன். சூர்யா படம் அன்னைக்கேப் பாக்கனுன்னு நினைச்சேன்...பெரியவர்தான் திடீர்ன்னு அஸைன்மெண்ட்டைக் கொடுத்துப் போடான்னுட்டார். வேலை முடிஞ்சது...அதான் உன்கூடப் படம் பாக்கலான்னு...."

"சரி சரி...வழியாத....ரிப்போர்ட்ட*...என்கிட்டக் காட்டாம அனுப்பக்கூடாது..."

" ஆஹா...அதெப்பூடி...அனுப்புவேன்....உன்ன இங்க வரச் சொன்னதால...மேட்டரைப் பிரிண்ட் போட்டுட்டு வந்திருக்கேன் பாரு.”

படித்துப் பார்த்துவிட்டு,

“ஏக்கர் கணக்குல வளைச்சுப் போட்டிருக்காரு மனுஷன்....ம்...இதைப் படிச்சிட்டு...அங்கப் பெரியப் போராட்டமே ஆரம்பிக்கப் போறாங்க...கலக்குறேள் சந்துரு...”

“அப்புறமாக் கலக்கிக்கலாம்..படம் போடப்போறாங்க..போலாமா இளவரசி........”

பவ்யமாய் தலை சாய்த்து ஒரு கையை நெஞ்சில் வைத்து மறுகையால் வழிகாட்டினான். பூவிழி சிரித்துக்கொண்டே அவனுடையக் கைக்குள் தன் கையை நுழைத்துக் கோர்த்துக்கொண்டு நடந்தாள்.

அடுத்தநாள் காலை அலுவலகம் வந்ததும், பூவிழியிடம்,

" பூ....எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுவியா...சாயங்காலம் வீட்டுக்குப் போற வழியில ஹிக்கின் பாதம்ஸ்ல ஆண்ட்ரூ ஜென்னிங்ஸ் எழுதுன ஃபௌல் புக் ஒண்ணு வாங்கிடறயா...நாளைக்கு வரும்போது கொண்டு வந்துடு. நான் மூணு மணிக்கெல்லாம் மகாபலிபுரம் போகனும்...சரியாடா..."

சொல்லிவிட்டு தன் கணினிக்குள் நுழைந்து, கூகுளின் மின்னஞ்சல் உள்பெட்டியைத் திறந்தான். ஜெய்ராம் சாஹூவின் மின்னஞ்சல் காத்திருப்பதைப் பார்த்ததும் ஆவலாய்த் திறந்தான்.

இந்திய துணை ராணுவத்தினரின் தாக்குதலில் தன் பள்ளித்தோழன் மறைந்ததைச் சொல்லியிருந்தான். எப்போதுதான் எங்களைப் புரிந்துகொள்வார்களோ என வருந்தியிருந்தான்.

ஜெய்ராம் சாஹூ....ஒரியாவைச் சேர்ந்தவன். பாரியுடன் பொறியியல் கல்லூரியில் ஒன்றாய்ப் படித்தவன் மட்டுமல்ல....நான்கு வருடமும் அறைத்தோழனாய் இருந்தவன். நான்கு வருடத்தில் தமிழை அழகாய்க் கற்றுக்கொண்டு....பாரதியார்க் கவிதையை வாசித்தவன்.

அவனது மின்னஞ்சலைப் படித்து முடித்துவிட்டு நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து அவனைப்பற்றி நினைத்தான் பாரி.

பெரிய பணக்காரன். பாட்டன் முப்பாட்டன் சேர்த்து வைத்த சொத்துக்கள் ஏராளம். ஆனால் அவனுடைய அப்பா...மற்ற எல்லாப் பரம்பரைப் பணக்காரர்களைப் போலில்லாமல்...இவனுக்கு ஆதர்ச அப்பாவாய் வாழ்ந்தவர். மலைவாழ் மக்களுக்காக கடைசிவரைப் போராடி, ஒரு கறைப்பட்ட போலீஸ்காரனின் தோட்டாப்பட்டு உயிரையிழந்தார். அவருக்குப் பின் இவனும் தன்னால் முடிந்த உதவிகளை தண்டகாரண்யாக் காட்டுவாழ் மக்களுக்கு செய்து வந்தான். இப்போது அவர்களுக்கு உதவியாய் இருக்கும் மாவோயிஸ்ட்டுகளுக்கு...உணவு, உடை என உதவிகள் செய்வதால்....கூடுதல் நேரமும் காட்டுக்கும், வீட்டுக்கும் அலைந்துகொண்டிருக்கிறான். அவனது பள்ளித்தோழன் ஒரு மாவோயிஸ்ட். அவனைத்தான் ராணுவத்தினர் சுட்டு விட்டதாய் சொல்கிறான்.

எத்தனையோ முறை இருவருக்குள்ளும் வாக்குவாதங்கள் நடந்திருக்கின்றது. பாரி....மாவோயிஸ்ட்டுகளின் வன்முறைப் போக்கை எதிர்ப்பான். ஆனால் ஜெய்ராம்...அவர்களின் நியாயத்தை வெகு உறுதியாய் வாதத்தில் எடுத்துவைப்பான். இருந்தும் பாரியால் அவர்களது நடவடிக்கைகளை நியாயப்படுத்த இயலவில்லை.அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை எந்தக் காரணத்தைக் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அவனுக்கு ஆறுதல் சொல்லி பதிலனுப்பிவிட்டு,அரசியல் நிருபரின் அந்த இதழின் கட்டுரையை வாசிக்கத் தொடங்கினான். அதே இதழினின் இன்னொரு பக்கத்தில் அவனுடைய கட்டுரையும் வந்திருந்தது. அதிலிருந்த உண்மைகளை பார்த்ததும்...அவன் கல்லூரியில் படிக்கும்போது, மாணவப் பத்திரிக்கையாளராய் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதற்கான அறிமுக கலந்துரையாடலில் அவனது செய்தி நிறுவனத்தின் தலைவர் சொன்னது அவன் மனதில ஓடியது......

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி, லிண்டன்.பி.ஜான்சன் சொன்னதாய் ஒரு மேற்கோளைக் காட்டி அவர் சொன்னது....

“நான் நாளைக்காலை, போட்டோமேக் நதியின் நீரின் மேல் நடந்தாலும், மதியப் பத்திரிக்கைகளில் தலைப்பு இப்படித்தானிருக்கும் “அமெரிக்க ஜனாதிபதிக்கு நீச்சல் தெரியாது”

இப்படிப்பட்ட வெற்று நிருபர்களாய் இருக்காமல், 1877லேயே சே.பா. நரசிம்மலு என்ற பத்திரிக்கையாசிரியர் தனது இதழான சேலம் சுதேசபிமானி என்ற பத்திரிக்கையில், அந்தக் காலத்திலேயே நீதிபதிகள், தாசில்தார்களின் ஊழலை வெளிச்சம் போட்டுக் காட்டியதைப்போல* துணிச்சலான நிருபர்களாய் இருக்க வேண்டும். அந்தப் பத்திரிக்கைதான் தமிழின் முதல் புலனாய்வுப் பத்திரிக்கை. அவரைப் போன்ற நேர்மையுடன், உண்மைகளை வெளிக்கொணர வேண்டுமென்பதால்தான் தனது பத்திரிக்கையைத் தொடங்கியதாகச் சொன்னார்.

அவரது கையாலேயே சிறந்த புலனாய்வு நிருபர் என்ற பரிசை வாங்கிய அந்த சந்தோஷமான நாளை நினைத்துக்கொண்டே பாரி தன் வேலையில் மூழ்கினான்.

அடுத்தநாள் அவன் அலுவலகம் வந்தபோது...எல்லோர் பார்வையும் அவன் மேலேயே நிலைத்தது.

முகத்தில் பிளாஸ்திரியும், உதட்டில் வீக்கமுமாய் இருந்தான்.தொடரும்.....

ஆதி
17-06-2010, 10:47 AM
அண்ணா, கதை விறுவிறுப்பா போகுது..

அரசியல் குடும்பக் கதை னு நெனச்சேன், இப்போ மாவோயிஸ்ட் பற்றி சொல்லி நாட்டு நடப்பை தொட்டிருக்கீங்க..

செல்வா உன்னோட ஆதங்கம் கொஞ்சம் குறைஞ்சிருக்கும் னு நெனக்கிறேன்..

அண்ணா நீங்க கொறிக்க ஒரு லிங்..

http://www.kalachuvadu.com/issue-126/page26.asp

இதுக்கு கதைக்கும் சம்பந்தமில்லை, ஆனா ஒருத்தர்க்கு சம்பந்தம் இருக்கு.. :)

பாராட்டுக்கள் அண்ணா..

Nivas.T
17-06-2010, 11:10 AM
ஐயயோ என்னாச்சு பாரிக்கு? :sprachlos020:

மதி
17-06-2010, 11:15 AM
சில பல தகவல்களோடு கதை விறுவிறுப்பாக போகுது... சீக்கிரம் தொடருங்கோ.. எங்க போய் அடி வாங்கினான் பாரி?

சிவா.ஜி
17-06-2010, 11:51 AM
அடேங்கப்பா....ஆதன் நீங்க கொடுத்த லிங்க்....நாட்டு வெடிகுண்டு இல்லை....ஆர்.டி.எக்ஸ். ஆனாலும் நம்ம பெரியவரும், குடும்பமும் எதற்கும் அசருபவர்களில்லை.

இது முழுவதும் அரசியல்கதை இல்லை ஆதன். சில நடப்பு விஷயங்களை கொஞ்சம் கற்பனையும், கொஞ்சம் என்னுடையக் கருத்தையும் சேர்த்து சொல்லலாமென்றிருக்கிறேன்.

நன்றி ஆதன்.

சிவா.ஜி
17-06-2010, 11:52 AM
கூடிய சீக்கிரம் தெரியவரும் நிவாஸ்.

சிவா.ஜி
17-06-2010, 11:53 AM
ஆமா....இன்னும் ரொம்ப தூரம் பயணிக்கனுமே மதி....பாப்போம்.

பாரி எங்க அடிவாங்கினான்னு தெரியல...கேட்டுச் சொல்றேன்...ஹி...ஹி...!!

பாரதி
17-06-2010, 12:35 PM
அடுத்தடுத்த நிகழ்வுகள் ஆவலைத்தூண்டுகின்றன. இடைச்செருகல்களும் இரசிக்கும்படி இருக்கின்றன.

எழுதுங்க சிவா.பாரி எங்க அடிவாங்கினான்னு தெரியல...கேட்டுச் சொல்றேன்.
எனக்குத் தெரியுமே...!!:lachen001:முகத்தில் பிளாஸ்திரியும், உதட்டில் வீக்கமுமாய் இருந்தான்.

ஆதி
17-06-2010, 12:42 PM
அடுத்தடுத்த நிகழ்வுகள் ஆவலைத்தூண்டுகின்றன. இடைச்செருகல்களும் இரசிக்கும்படி இருக்கின்றன.

எழுதுங்க சிவா.


எனக்குத் தெரியுமே...!!:lachen001:

பாரதி அண்ணா கிட்ட பேசும் போது கவனமா இருக்கனும் னு பலர் சொல்லி கேட்டிருக்கேன்.. இப்ப பார்த்துட்டேன்..

சிவா.ஜி
17-06-2010, 12:42 PM
ஆஹா...பாரதி...நீங்களுமா....எல்லாம் இந்த அக்னி செய்யற வேலை....நல்லா இருக்கிறவங்களையும்...கெடுத்துடறாரு....!!!

ஊக்கப்பின்னூட்டத்திற்கு ரொம்ப நன்றி பாரதி.

govindh
17-06-2010, 01:48 PM
கதை விறுவிறுப்பாகப் போகிறது....
பாராட்டுக்கள்...

சிவா.ஜி
17-06-2010, 03:07 PM
நன்றி கோவிந்த்...!!

அமரன்
17-06-2010, 06:09 PM
எல்லாரும் தங்கள் எதிர்பார்ப்பைச் சொல்லிட்டாங்க.. ஆனால் நாயகனோ இது வேற.. வேற.. வேட்டை.. என்று முழங்குறார்..

அபாய வளைவுகளில் அநாயசமாக ஓட்டுநர் சிவா கதையைத் திருப்ப பயணிகள் எமக்கு பகீர் உணர்வு ஏற்படுகின்றது.

நிகழ் சூழலையும் நிஜங்களையும் மையமாகக் கொண்ட இந்த சுழல் மன்றத்தைக் கலங்கடிக்கும் என்பதில் ஐயமில்லை.

பூவிழி, பாரியின் குணாதிசயங்களை தேவைப்படும் இடத்தில் தக்கபடி தெளிப்பது கதௌக்குப் பலம். இந்தக் காட்சிக்கு இது போதும் என்ற கணிப்பு தீர்க்கமானதாக உங்களிடமிருந்து வெளிப்படுகிறது சிவா.

புலனாய்வு நிருபரான பாரியை பூவிழின் காதலனாக காட்டிய ஒற்றை வரியை இதுக்கு எடுத்துக் காட்டலாம்.

அசத்துங்க.. அசராமல் பின் தொடர்வேன்.

செல்வா
17-06-2010, 08:16 PM
அசத்துங்க.. அசராமல் பின் தொடர்வேன்.

நானும் தான்…:cool:

கீதம்
17-06-2010, 10:02 PM
முதலில் கொஞ்சம்தான் பயந்தேன். இப்ப பாரிக்கு அடிபட்டபின்னால என் பயம் அதிகமாயிடுச்சு.

பெரிய விஷயங்களையெல்லாம் சர்வசாதாரணமா சொல்றீங்க. எதுக்கும் நீங்களும் எச்சரிக்கையாவே இருங்க அண்ணா.

samuthraselvam
18-06-2010, 04:59 AM
சிவா அண்ணாவை யாரும் ஒன்னும் பண்ண முடியாது கீதம் பயப்படாதீங்க.... ஹா ஹா.... இந்தமாதிரி கதைகளைப் படிக்கும் போது ஏற்படும் த்ரில் இருக்கே....! அடடா... சூப்பர்...

பூவிழிதான் பாவம்.. "முகத்தில் பிளாஸ்திரியும், உதட்டில் வீக்கமுமாய் இருந்தான்." இதுக்கு காரணம் பூவிழிதானோ? கல்யாணத்துக்கு முன்னாடியே பூரிக்கட்டையில் ஒத்திகையோ?

சிவா.ஜி
18-06-2010, 05:17 AM
நன்றி பாஸ். பயணிகள்...ஓட்டுநருக்கு உறுதுணையாய் இருக்கும்போது...தன் வாகன செலுத்தலில் ஓட்டுநர் நம்பிக்கையோடு இருப்பார். நீங்களனைவரும் உடன் வரும் பலத்தில்...எல்லா வளைவும் ஆபத்தில்லா வளைவுகளே.

சிவா.ஜி
18-06-2010, 05:20 AM
எல்லாம் தெரிஞ்ச விஷயங்கள் தானே கீதம். இன்னும் எவ்வளவோ இருக்கிறது....திரை மறைவு பகீர்கள் எவ்வளவோ உண்டு...நான் அதிலெல்லாம் நுழைய விரும்பவில்லை....பின்னால் வரும் அத்தியாயங்களுக்கு ஒரு முன்னோட்டமே இவை.

உங்கள் அக்கறைக்கு மிக்க நன்றி தங்கையே.

சிவா.ஜி
18-06-2010, 05:22 AM
அடப்பாவமே...பூவிழி பாட்டுக்கு சிவனேன்னு இருக்கிறா...இதுல பூரிக்கட்டை ஒத்திகைன்னு சொல்லி...பாரியை பூரியாக்கிட்டிங்களே லீலும்மா.....!!!

தொடர்வதற்கு மிக்க நன்றி தங்கச்சி.

கலையரசி
18-06-2010, 01:55 PM
அசத்தலான தொடரைத் துவங்கியிருக்கிறீர்கள். அந்தக் கவிதாயினி யார் என்பதை ஊகிக்க முடிகிறது. தொடரில் நடப்பு செய்தியான மாவோயிஸ்ட் பிரச்சினையையும்
தொட்டுச் செல்கிறீர்கள்.
துணிச்சலான ஹீரோவாக பாரி நல்ல அறிமுகம். இடையிடையே இழையோடும் நகைச்சுவையோடு காதலும் இருக்கிறது. தினமும் என்னால் படிக்க முடியாவிட்டாலும் அவ்வப்போது வந்து சேர்த்துப் படித்து கருத்துக்களைச் சொல்வேன். பாராட்டுக்கள் சிவா.ஜி.

சிவா.ஜி
18-06-2010, 03:07 PM
படித்தமைக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி கலையரசி. சமயம் கிடைக்கும்போது வாருங்கள். நானும் இனி தினமும் ஒரு பாகம் இட இயலாத நிலையில் இருக்கிறேன். அதனால் பிரச்சனையில்லை.

சிவா.ஜி
19-06-2010, 06:14 AM
அத்தியாயம்:3


மாலை மூன்று மணிக்கு புகைப்படக்காரர் வேல்முருகனையும் கூட்டிக்கொண்டு தன் இருசக்கர வாகனத்திலேயே மகாபலிபுரம் புறப்பட்ட பாரி, அவனுக்குக் கிடைத்த தகவலில் குறிப்பிட்டிருந்த இடத்துக்கு வருவதற்கு முன்...வாகனத்தை சற்றுத் தொலைவில் மறைவாய் நிறுத்திவிட்டு...அந்த இடத்துக்கு வந்து சேர்ந்தார்கள்.

"ஃபில்டரை மாத்திக்க வேலு. லைட் கம்மியா இருக்கும். ஸ்ட்ராங்கா எவிடென்ஸ் வேணும். கொஞ்சம் வெயிட் பண்ணுவோம்"

"எனக்கேவா...பாரி...ஆஃபீஸ்லயே நான் தான் பெஸ்ட் தெரியுமில்ல....."

"அண்ணே...வேலன்னே...தெரியும்ண்ணே.....நீங்க யாரு....கே.வி. ஆனந்த்கூட வேலை செஞ்சவிங்கயில்ல....மணிரத்னம்கூட அடுத்தப் படத்துக்கு உங்களைத்தான் ஃபிலிம் கழுவ...கூப்டிருக்காருன்னு கேள்விப்பட்டேன்..."

"டே....படுபாவி...இந்த இண்டஸ்ட்ரியில என் பேரு என்ன....என்னையைப்போய் ஃபிலிம் கழுவ வெச்சிட்டியேடா..."

"கோச்சுக்காத வேலு...ச்சும்மா......"


அவர்களுக்குள் இருக்கும் அந்நியோன்யம் அவர்களின் விளையாட்டுப் பேச்சில் தெரிந்தது. வேல்முருகன் சிறந்த புகைப்படநிபுணர்...இரண்டு மாதம் முன்புவரை...திருமணம் ஆகுவரை...பாரியைப்போலவே தைரியமான ஆளாகத்தானிருந்தான். திருமணத்துக்குப் பிறகு....பிரச்சனைகளில் அதிகம் நுழைவதில்லை....அதுவும் திருமணம் ஆன இரண்டாவது வாரமே காசிமேட்டு ஆட்களிடம் அடி வாங்கியப்பிறகு...தகராறு என்றால் ஜகா வாங்கிவிடுவான்.

காத்திருந்தார்கள். காற்றில் கவிச்சி வாசம் இருந்தது. பாரி சுற்றுமுற்றும் பார்வையை ஓடவிட்டுக்கொண்டிருந்தான். நிறைய பாறைகள். கொஞ்சமாய் புதர்கள். இரண்டு பேருமே...சற்று மறைவாய் நின்றிருந்தார்கள். தூரத்தில் ஒரு ஆள் வருவது தெரிந்தது. அதற்குள் எங்கிருந்து முளைத்தார்கள் என்று கண்டுபிடிப்பதற்குள்...ஒரு பெண்ணும், ஆணும் சற்றே பரபரப்பாய் அங்கே வந்து நின்றார்கள். வெள்ளைக்காரர்கள்.

தூரத்திலிருந்து வருபவன்...இந்த இருவரையும் நோக்கித்தான் வந்துகொண்டிருந்தானென்பது அவனது உடல்மொழியில் தெரிந்தது.

"வரான்...வேலு ரெடியாயிக்கோ...."

தன் கேமராவை எடுத்து, அந்த இருவரையும் குறிவைத்தான் வேலு. தூரத்திலிருந்தவன் இப்போது அருகே வந்துவிட்டான். அவர்கள் பேசுவதுக் கேட்கவில்லை. ஆனால்...கேமராவின் திரையில் முகம் பளிச்செனத் தெரிந்தது.

"ஜூமைக் கம்மிப் பண்ணிக்கோ வேலு...மூணுபேரும் ஃபிரேமுக்குள்ள வர்ற மாதிரி வெச்சுக்க...எடு"

பாரி சொன்ன அந்த வினாடி தூரத்திலிருந்து வந்தவன்...ஒரு பொட்டலத்தை...அந்த வெள்ளைக்காரர்களின் கைகளுக்கு மாற்றிக்கொண்டிருந்தான். வேலு அதற்குள் படபடவென நான்கைந்து படங்களை எடுத்துவிட்டான். பணம் கைமாறும்போது...அதை...வெகு அருகில் ஜூம் செய்து எடுத்து முடித்ததும்...அவனது கழுத்தில் பொடேரென்று ஒரு அடி விழுந்தது. கேமராவைக் கழுத்தில் மாட்டியிருந்ததால்...அவன் கையிலிருந்து தவறிய கேமரா...கீழே விழவில்லை

தடுமாறிவனுக்கு இன்னொரு அடி விழுந்தது. கூட வந்தவர்களில் ஒருவன் பாரியையும் அடிக்க....வேலு ஓட்டமெடுத்தான். ஓடிக்கொண்டே" பாரி வண்டிக்கிட்ட வந்துடு..." என சொன்ன வேலு, காமிராவைக் கப்பாற்ற வேண்டுமென அவனது மூளை இட்டக் கட்டளைக்குக் கீழ் படிந்து கால்களில் விரைவைக் கூட்டினான்..பாரி அந்த மூன்று பேரையும் முடிந்தவரை சமாளித்தான்...

இந்தக் களேபரத்தைப் பார்த்த வெள்ளைக்காரர்கள்...வெகுவிரைவில் அங்கிருந்து மறைந்தார்கள். பொட்டலம் கொடுத்தவனும், அடிப்பவர்களோடு சேர்ந்துகொள்ள* வந்ததும், பாரி...ஓட ஆரம்பித்தான்.

மேலே நடந்ததை பாரி சொல்லி முடித்ததும், திரைச்செய்தி பசுபதி நக்கலடித்தான்....

"அதான் இந்தப் பிளாஸ்த்திரியா...மவனே மாட்டியிருந்தீங்கன்னா சங்குதான்....எங்கயாவது தண்ணியில மொதந்திருப்பீங்க...."

"அது சரி...வேலு எங்க..."

மாலினியின் கேள்விக்கு,

"சாயங்காலமா ஆளுக்கு அரைகிலோ ஆப்பிள் வாங்கிட்டு போய் பாத்துட்டு வரலாம்."

பாரி சொன்னதும்...எல்லோரும் ஒருசேர...

"என்னாச்சு வேலுவுக்கு....?"

"பயப்படறமாதி ஒண்ணுமில்ல...அடிதடி ஆரம்பிச்சதும் அண்ணாத்த...இருபத்திநாலாம் புலிகேசியாயிட்டாரு....ஒரே ஓட்டம். பள்ளம் தெரியாம குப்புற அடிச்சு வுழுந்து... கால்ல ஃபிராக்ச்சர்.. அவனையும் தூக்கிட்டு வண்டி வரைக்கும் ஓடி வர்றதுக்குள்ள தாவு தீந்துடிச்சி. நல்லவேளை... பொட்டலமெல்லாம் கீழ வுழுந்ததால...அவனுங்க அத பொறுக்கிக்கிட்டு ஓடி வர்றதுக்குள்ள வண்டிக்கிட்ட வந்துட்டோம். வேலுவை கே.சி.ஆர்ல அட்மிட் பண்ணியிருக்கேன்.

அப்போதுதான் அச்சுகோர்க்கும் இடமிருக்கும் முதல் தளத்திலிருந்து திரும்பிவந்த பூவிழி, பாரியின் முகத்தைப் பார்த்தாள்.

'அய்யய்யோ...பாரி என்ன ஆச்சுப்பா...?"


"அதுசரி...!!! மச்சி...ரிப்பீட்டு....நாங்க எங்க வேலையப் பாக்கறோம்.."

சிரித்துக்கொண்டே பாரியின் தோளில் கையை வைத்து அழுத்திவிட்டு தன் மேசைக்குப் போனான் பசுபதி. மாலினி அருகில் வந்து...

"டேக் கேர் பாரி...."

சொல்லிவிட்டுப் போனதும், பாரி நடந்ததை மீண்டும் ரிப்பீட்டினான்.

பாரியின் செய்திக்கட்டுரையின் பிரசுரத்துக்குப் பிறகு...மிகப்பெரியக் காவல்துறை வேட்டையில்...போதைமருந்து ஆசாமிகள் கைது செய்யப்பட்டார்கள்.

அன்று அலுவலகத்தில் பணியிலிருக்கும்போது....ஒரு அலைபேசி அழைப்புக்குப் பிறகு தன் இருக்கையிலிருந்து எழுந்த பாரி, பூவிழியின் அருகில் வந்து தோளை இரண்டு கைகளாலும் அழுத்திக்கொண்டு ...

"பூவிழி மேடம், அருந்ததிராய் சென்னைக்கு வந்திருக்காங்க, இன்னைக்கு ஈவினிங் அவங்க ஸ்பீச் இருக்கு. நாம போலாமா...? எனக்கு ரொம்பப்பிடிச்ச ரைட்டர், சமூக ஆர்வலர். நிச்சயமா...பேச்சுக் காராசாரமா இருக்கும். உனக்கு எதுவும் வேலையில்லையே..."

"உன்னைக் காதலிக்க ஆரம்பிச்சப்பிறகு...ரிப்போர்ட்டர் வேலைக்கு அடுத்ததா...உன்னைக் காதலிக்கறதைதவிர வேறெதுவும் செய்யறதில்ல.....அம்மா அப்பா ஊர்ல இருக்கறதால... வேலை முடிஞ்சா நீ...நீ இல்லன்னா...வீடு...ஸோ...பாரி சார்...சாயங்காலமா போலாம்...ரிக்வெஸ்ட் அக்ஸெப்ட்டட்."

"ஓ...மிகவும் நன்றி பாஸ்..."

தலையால்...பூவிழியின் தலையை முட்டிவிட்டுத் தன் இருக்கைக்குத் திரும்பினான்.


மாலையில் அருந்ததிராய் அவர்களின் பேச்சைக் கேட்டுக் குழம்பினான். மாவோயிஸ்டுகளை நேரில் சந்தித்து வந்ததாக அவர் சொன்னதையும், அவர்கள் அரசாங்கம் விவரிக்கும் அளவுக்கு தீவிரமானவர்கள் இல்லையெனவும், ஆனால் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை தானும் ஏற்கவில்லையென்றும், மலைவாழ் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியைப் பற்றியும் சொன்னதைக் கேட்டு...அவன் மனதில் ஆயிரம் கேள்விகள் எழுந்தன.

பூவிழியை அவளது இருப்பிடத்தில் விடும்வரை சிந்தனையிலேயே இருந்தான். எதுவும் பேசாமல் வரும் அவனை ஆச்சர்யமாய்ப் பார்த்தாள் பூவிழி. தன்னோடு இருக்கும் நேரங்களில் எதையாவது லொட லொடவென்று பேசிக்கொண்டிருக்கும் பாரி...இன்று ஒரேயடியாய் அமைதியாக இருப்பது அவளைப் பொருத்தவரை மிகவும் புதிது. அவளை விட்டுவிட்டு திரும்பியவனைப் பார்த்து....

"பாரி...என்ன பலமான சிந்தனை...? அவங்க சொன்னதையே யோசிச்சிக்கிட்டிருக்கியா.... ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு அபிப்பிராயம்...உண்மை என்னன்னு சரியாத் தெரிஞ்சிக்காம... யாரையும் குற்றம் சொல்ல முடியாது....அதிகமா யோசிச்சு...கல்யாணத்துக்கு அப்புறம்...என் கையாலப் பிடிக்க குடுமியில்லாம ஆக்கிடாத....ஒழுங்கா வீட்டுக்குப் போ..."

சூழலின் கனத்தை லேசாக்க...நகைச்சுவையைக் காட்டியவளின் பேச்சுக்கும் அதிக சிரத்தையளிக்காமல்...குட்நைட் மட்டும் சொல்லிவிட்டுத் திரும்பினான்.


வீட்டுக்கு வந்தவன்...இணையத்துக்குள் புகுந்து...மாவோயிஸ்ட்டுகளைப் பற்றியும், தண்டகாரண்யாவைப் பற்றியும்....தேடித்தேடிப் படித்தான். ஜெய்ராம் சாஹூவுக்கும் தனக்கும் நடைபெற்ற பல நேரத்து வாக்குவாதங்கள் நினைவில் வந்தது. இரவு வெகுநேரம்வரை... விழித்திருந்தவன்...களைப்பால்..உறங்கிப்போனான்.

அடுத்தநாள் அலுவலகம் வந்தவன், அவனுக்கு முன்னாலேயே வந்து தன் இருக்கையில் அமர்ந்திருந்த பூவிழியிடம் சென்று..அமைதியான..அதே சமயம் உறுதியானக் குரலில்...

"பூ...நான் மாவோயிஸ்ட்டுங்களை சந்திக்க தண்டகாரண்யா ஃபாரஸ்ட்டுக்குப் போகப்போறேன்"

என்றான்.


தொடரும்....

மதி
19-06-2010, 06:47 AM
அதிரடி ஆரம்பமாயிடுச்சு... எப்படியோ இருக்கும்னு நெனச்சோம்.. இப்போ காட்டுக்குள்ள பயணம் தொடங்கப்போகுதா? கூடவே பூவிழியுமா????

சீக்கிரம் தொடருங்க...

samuthraselvam
19-06-2010, 08:14 AM
பூவும் கூட இருந்தா கொஞ்சம் சுவாரசியமா இருக்கும்...

ஏன்னா பல ஹீரோக்களுக்கு ஹீரோயின்ஸ் தானே பூஸ்ட்... உங்க பூஸ்ட் யாருங்க மதி?

இனி திடீர் திருப்பங்கள் எல்லாம் இல்லை , திடுக்கிடும் திருப்பங்கள் தான்...தொடருங்கள் அண்ணா....

சிவா.ஜி
19-06-2010, 08:52 AM
ஆமா மதி...இனிமேக் காட்டுக்குள்ளதான்...பார்ப்போம்...பாரியோட காட்டு அனுபவத்தை.

தொடர்ந்த ஊக்கத்துக்கு நன்றி மதி.

சிவா.ஜி
19-06-2010, 08:55 AM
பூவக் கூடக் கூட்டிட்டுப் போறது ஆபத்தை மடியிலக் கட்டிக்கிட்டு போறமாதிரிம்மா லீலும்மா. பார்ப்போம் அவ அடம் பிடிச்சா பாரி என்ன பண்னுவான்னு...

(ஆமா....மதியை சீண்டலன்னா உங்களுக்கெல்லாம் தூக்கம் வராதா...எல்லாத்துக்கும் சேத்து வெச்சி...அதிரடி பதிலைக் கொடுக்கப்போறார் மதி...)

பாரதி
19-06-2010, 08:55 AM
நல்லா இருக்கு சிவா..!

சிவா.ஜி
19-06-2010, 09:08 AM
நன்றி பாரதி.

கீதம்
19-06-2010, 09:10 AM
தமிழ்நாட்டில் இருந்து தப்பி தண்டகாருண்யா ஆரண்யத்துக்குப் போகிறாரா, பாரி? தொடரட்டும் அண்ணா, உங்கள் அதிரடி நடவடிக்கைகள்!

சிவா.ஜி
19-06-2010, 09:14 AM
ஆமாங்க தங்கையே...ஆரண்யத்துக்குத் தான் போறான்...என்ன ஆபத்து வருமோ தெரியல....

தொடர் ஊக்கத்திற்கு நன்றிங்க கீதம்.

samuthraselvam
19-06-2010, 09:23 AM
பூவக் கூடக் கூட்டிட்டுப் போறது ஆபத்தை மடியிலக் கட்டிக்கிட்டு போறமாதிரிம்மா லீலும்மா. பார்ப்போம் அவ அடம் பிடிச்சா பாரி என்ன பண்னுவான்னு...

அண்ணா ஹீரோயினுக்கு எதிரில் தான் ஹீரோவுக்கு வீரம் வரும். அதனால பூ கண்டிப்பா பாரிகூட போகணும். பூவிழிகூட ஆபத்தில் பாரிக்கு உதவும் சந்தர்பம் வராமலா போகும்?(ஆமா....மதியை சீண்டலன்னா உங்களுக்கெல்லாம் தூக்கம் வராதா...எல்லாத்துக்கும் சேத்து வெச்சி...அதிரடி பதிலைக் கொடுக்கப்போறார் மதி...)

அப்போ, மதியோட பூஸ்ட் யார்ன்னு மதி சொல்லப்போறாரா? தம்பி மதி வந்து உங்க பொன்னான கைகளால் யான்னு சொல்லுங்க....

சிவா.ஜி
19-06-2010, 09:25 AM
ஏதேது சிபாரிசு பலமா இருக்கே....!!!

மதியோட பூஸ்ட்...அவரோட 'மதி' தான்...ஹா...ஹா...ஹா...!!!

samuthraselvam
19-06-2010, 09:31 AM
ஏதேது சிபாரிசு பலமா இருக்கே....!!!

மதியோட பூஸ்ட்...அவரோட 'மதி' தான்...ஹா...ஹா...ஹா...!!!

பின்ன, பெண்கள்னா ஆபத்து மட்டும் தானா?

அது இல்லாமத்தானே சொல்ல மாட்டேங்குறாரு.... ஹா ஹா...:lachen001:

வஞ்சப்புகழ்ச்சி மதி...:icon_ush: சிவா அண்ணா பேச்சை நம்புனீங்க, மதி மழுங்கிடும்...:icon_nono:

சிவா.ஜி
19-06-2010, 09:33 AM
பார்றா....மதிக்கு மதியிருக்குன்னு சொன்னது வஞ்சப்புகழ்ச்சியாமே....தேவுடா....!!!

அமரன்
19-06-2010, 10:23 AM
மதியின் பூஸ்ட் திருமதிதான்... இதுக்குப் போய் ஏன் பிச்சுக்குறீங்க..

அமரன்
19-06-2010, 10:28 AM
கதை இப்போதான் மையப்பகுதிக்கு வந்ததாகப் படுகிறது.

வாசகர் மனநிலையில் கதாநாயகனை தயார்ப்படுத்த மூன்று அங்கங்களை செலவிட்டுள்ளீர்கள்.

இடையில் வாசிப்போருக்கு குழப்பம் நிச்சயம். தொடக்கத்திலிருந்து படிக்க வைக்க நல்ல யுக்தி.:icon_b:

உரையாடகளில் நகைச்சுவையையும் மீறி எதார்த்தம் தெறிக்கிறது. வேலுவுக்கும் பாரிக்கும் இருக்கும் அன்னியோன்யம் அப்படிங்கிற வரி வீண் செலவு. உரையாடல்கள் கச்சிதமாக உணர்த்தி விடுகின்றன.

இனி டிஷ்யும்ம் டிஷ்யூம் தானே.. அப்படியே காட்டுக்குள்ள ஒரு டூயட்டையும் பாடுங்கோ.

சிவா.ஜி
19-06-2010, 11:46 AM
ஹா...ஹா...ஹா....சி.ஐ.டி சங்கர்ன்னு பேரே கொடுக்கலாம்....பாரீஸ்லருந்து எப்படி பாஸ் நைஜீரியாவுல இருக்கிற ஆளோட பல்ஸைப் பாக்கறீங்க....ஆச்சர்யம்....இல்லவே இல்ல...நீங்க அப்படித்தானே...

சரி இனிமே வீண் செலவு செய்யறதில்ல....இன்னும் ஒரேயொரு அத்தியாயம்....உள்ளூரிலேயே இருக்கப்போறான் பாரி....எல்லார்கிட்டயும் சொல்லிட்டு போகவேணாமா....?

அப்புறம்...இதுல டூயட்டெல்லாம் கிடையாது.....

நன்றி அமரன்.

(அதுசரிதான் மதிக்கு பூஸ்ட் திருமதிதான்....)

govindh
19-06-2010, 01:27 PM
எங்களையும் 'தண்டகாரண்யா'வுக்கு
அழைத்து செல்வதற்கு மிக்க நன்றி...

தொடருங்கள்....கூடவே வருகிறோம்...

சிவா.ஜி
19-06-2010, 02:48 PM
தாராளமா அழைத்துப்போறேன்...கூட வருவதற்கு ரொம்ப நன்றி கோவிந்த்.

மதி
19-06-2010, 03:42 PM
அடடா.. ராவணன் பாத்துட்டு வர்றதுக்குள்ள... என்ன வச்சு கன்னாபின்னானு காமெடி ஆரம்பிச்சாச்சா? நான் பூஸ்டெல்லாம் குடிக்கறதில்லீங்க.. ஆபிஸ்ல மட்டும் டீ இல்லேன்னா காஃபி...ஹிஹி

சிவா.ஜி
20-06-2010, 06:00 AM
அப்ப உங்களுக்கு பூஸ்டே வேணாமா....மதி.....??????

மதி
20-06-2010, 08:37 AM
மால்டோவா..ஹார்லிக்ஸ்.. இப்படி!!!

சிவா.ஜி
20-06-2010, 08:51 AM
ரெண்டா..................................??????????????????

மதி
20-06-2010, 09:53 AM
ஹாஹா...!! ஒன்னுக்கே துப்பில்லையாம்...

பா.ராஜேஷ்
20-06-2010, 12:41 PM
நாலு நாளாய் மன்ற பிரவேசம் செய்ய முடியாத நிலை... இன்றுதான் அனைத்து அத்தியாங்களையும் படித்தேன்... இதுவரை வெறும் பில்டிங் தான்... இதற்கு மேல் தண்டகாருண்யா காட்டு வாசமா!!???... நாங்க ரெடி... நீங்க தொடருங்கள்..

samuthraselvam
21-06-2010, 04:19 AM
மால்டோவா..ஹார்லிக்ஸ்.. இப்படி!!!

உங்களுக்கு பூஸ்ட் பிடிக்காதா?:lachen001: அதனாலதான் காபி அல்லது டீ மட்டும் கிடைக்குது உங்களுக்கு பாவம் நீங்க....ஹா ஹா.....:p

(பூஸ்ட் இஸ் சீக்ரெட் ஆப் மை எனர்ஜி-ன்னு அண்ணன்கள் சொல்லுறது காது கேட்குதா மதி?:icon_ush:)

சிவா.ஜி
21-06-2010, 10:18 AM
அத்தியாயம்:4


நான் மாவோயிஸ்ட்டுக்களை சந்திக்க தண்டகாரண்யாவுக்குப் போகிறேன் என்று சர்வசாதரணமாய் பாரி சொன்னதும், பூவிழிக்குத் தூக்கிவாரிப் போட்டது.

"என்னவோ டிஸ்னிலேண்ட் போறேன்னு சொல்ற மாதிரி சர்வசாதரணமா சொல்ற....மறை கழண்டுடிச்சா...நேத்து ஈவினிங்க்லருந்தே நீ சரியில்ல....மொதல்ல...உனக்கு வேப்பிலை அடிக்கனும்..."

மேற்கொண்டு எதுவும் அங்கே பேசுவதைத் தவிர்க்க, பூவிழியின் கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு, மொட்டை மாடிக்கு வந்ததும்,

"சீரியஸா சொல்றேன் பூ. நேத்து நீதான சொன்ன...உண்மை எதுன்னு தெரிஞ்சிக்காம யாரைப்பத்தியும் குற்றம் சொல்ல முடியாதுன்னு....எனக்கு, உனக்கு...நம்மள மாதிரி இருக்கிற ரிப்போர்ட்டர்ஸுக்கு உண்மைகளைக் தெரிஞ்சிக்கறதுதானே வேலையே...நீ என்ன சொன்னாலும் சரி நான் போகப்போறேன்"

"வேணாம் பாரி...இது எவ்ளோ ஆபத்தானதுன்னு தெரியுமா....ஒரு பக்கம் துணை ராணுவம், இன்னொரு பக்கம் மாவோயிஸ்ட்....அவங்கன்னு நினைச்சு இவங்களும், இவங்கன்னு நினைச்சு அவங்களும்...உன்னைத் தாக்கறதுக்கு சான்ஸ் இருக்கு....எதுக்கு உனக்கு இந்த ரிஸ்க் இப்ப..."

"அருந்ததிராய் ஒரு லேடி...அவங்களே தைரியமா காட்டுக்குள்ளப் போய் அவங்களை சந்திச்சுட்டு வந்திருக்காங்க....நான் பயப்படலாமா?"

"மடையா...அவங்க ஃபேமஸ் ஃபிகர். எல்லாருக்கும் அவங்களைத் தெரியும்...உன்னை யாருக்குத் தெரியும்....மடத்தனமா பேசாத..."

"என்னைத் தெரிஞ்ச ஜெய்ராம் சாஹூ இருக்கான். அவனுக்கு மாவோயிஸ்ட்டுங்களோட நல்ல தொடர்பு இருக்கு. அவன் என்னை ஜாக்கிரதையாக் கூட்டிக்கிட்டுப் போவான். நான் இன்னைக்கே அவனுக்கு மெயில் அனுப்பிக் கேக்கறேன்"

"பாரி...நீ என்ன சொல்றன்னு தெரிஞ்சிதான் சொல்றியா...உன் ஃபிரண்டுகூட ராணுவத்தோட...இல்லன்னா போலீஸோட பார்வையில இருக்கலாம்....அவனை நம்பி போறேங்கிறியே..."

"அவங்களை நெருங்கறதுக்கு அவன் ஒருத்தனாலத்தான் ஹெல்ப் பண்ண முடியும். பூ...நான் முடிவு பண்ணிட்டேன். உனக்கு ராபர்ட்ஸ் ஃபிரைட்மேனைத் தெரியுமா...நியூயார்க் டைம்ஸோட புலனாய்வு நிருபர்... பல வருஷமா...ரஷ்யன் மாஃபியாக் கும்பலுக்குள்ள ஊடுருவி...அவங்களோட பல விஷயங்களை வெளிக்கொண்டு வந்தவர். ரெட் மாஃபியான்னு ஒரு புக் எழுதியிருக்காரு. எந்த நேரத்திலும் உயிருக்கு ஆபத்து. அவங்க மாவோயிஸ்ட்டுக்களைப் போல இல்லை. கொஞ்சம் சந்தேகம் வந்தாலும் பொட்டுன்னு போட்டுடுவாங்க. இருந்தும் உயிரைப் பணயம் வெச்சு...பல உண்மைகளை எக்ஸ்போஸ் பண்ணியிருக்காரு. ப்ளீஸ் என்னைத் தடுக்காத...நான் போய் பெரியவர்க் கிட்டப் பேசிட்டு வரேன்."

"நில்லு...நீ பாட்டுக்கு எதையெதையோ சொல்லிட்டு...கடைசியில முடிவே பண்ணிட்டேன்னு சொல்றே...நான் ஒருத்தி இங்க உனக்காகவே இருக்கேன்...உங்க அப்பா அம்மா, குடும்பம்...இதையெல்லாம் நெனைச்சுப் பாத்தியா...போறாராமில்ல...போ...பெரியவரும் போக வேண்டான்னுதான் சொல்வாரு...இது நமக்குத் தேவையில்லாத விஷயம்"

"பைத்தியம் மாதிரி பேசாத...எது தேவையில்லாத விஷயம். இன்னைக்கு நாடே இந்த விஷயத்தைப் பத்திதான் பேசுது. உண்மைகளைத் தெரிஞ்சிக்கிட்டு வந்து ஒரு ஆர்ட்டிக்கள் எழுதுனா...நம்ம பத்திரிக்கைக்கு எவ்ளோ பேர் கிடைக்கும்....என் மேல நம்பிக்கை வைடா....நிச்சயம் பத்திரமா...கைநிறைய நியூஸோட திரும்பி வருவேன்."

சொல்லிவிட்டு ஆசிரியரைப் பார்க்கப் போனான். அவனுடன் இறங்கி வந்த பூவிழி, அவன் ஆசிரியரின் அறைக்குள்லேப் போவதைப் பார்த்துவிட்டு....தன் இருக்கைக்கு வந்து அமர்ந்தாள். ஆசிரியரின் அறைக்குள் நுழைந்தவன் கிட்டத்தட்ட அரை மணி நேரம் கழித்து முகத்தில் சிரிப்புடன் வந்தவன்...பூவிழியைப் பார்த்துக் கட்டைவிரலை உயர்த்திக் காட்டினான்.

"பெரியவர் ஓக்கே சொல்லிட்டாரா...ம்...அவருக்கென்ன...பத்திரிக்கைக்கு...பரபரப்பான நியூஸ் கிடைக்குதுன்னா ஓக்கே சொல்லியிருப்பாரு...."

"ஷ்.....மெதுவா பேசு...இல்ல பூ...நீ நினைக்கிற மாதிரி இல்ல அவரு. வேண்டவே வேண்டான்னுதான் சொன்னார்...அரை மணிநேரமா பேசி அவரை கன்வின்ஸ் பண்றதுக்குள்ள போதும் போதும்ன்னு ஆயிடிச்சி. உனக்கும், அவருக்கும் தவிர...நான் அங்க போறது வேற யாருக்கும் தெரியக்கூடாது. ஈவன்...எங்கக் குடும்பத்துக்குகூட தெரியக்கூடாது. அவங்களைப் பொருத்தவரைக்கும் நான்...ஒரு ட்ரெயினிங்குக்காக டெல்லி போறதாத்தான் சொல்லப்போறேன். ஒரு வாரத்துல திரும்பி வந்துடுவேன். அங்க போனப்பறம்...சிக்னல் கிடைக்குமான்னு தெரியல...இருந்தாலும்...உள்ள போறதுக்கு முன்னால...உனக்குக் கால் பண்றேன்."

இனி இவனைத் தடுத்து எந்த பிரயோசனமும் இல்லை எனத் தெரிந்துகொண்டு முகத்தில் சோகத்தைத் தேக்கி அவனை காதலுடன் பார்த்தாள்.

"ஹே...என்ன இது....சியரப்மேன்....எந்த சேதாரமும் இல்லாம...உனக்கு திரும்பக் கிடைப்பேன்...போதுமா. சரி இரு நான் உடனே ஜெய்ராமுக்கு மெயில் பண்ணனும். அதை அவன் எப்ப பாப்பானோ தெரியல. கூடிய சீக்கிரம் கிளம்பனும். இன்னைக்கும் நாளைக்கும்...ஆஃபீஸ் முடிஞ்சதும் நீயும் நானும்....வெளியேப் போறோம். பீச், சினிமான்னு...ஒன்லி எஞ்ஜாயிங்தான்....ஓக்கேவா"

ஜெய்ராமுக்கு மெயில் அனுப்பிவிட்டு...சில தகவல்களைத் திரட்டிக்கொண்டான். அந்த இடம் எப்படிப்பட்டது...எந்த மாதிரியான உடைகள் தேவைப்படலாம்...வேறு ஏதாவது...பிரத்தியேகமாய் தேவைப்படுமா என எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு அவற்றை சேகரிக்கத் தொடங்கினான்.

அடுத்த நாளே ஜெய்ராமிடமிருந்து பதில் வந்தது. அவனும் ஆரம்பத்தில் உனக்கு எதற்கு இந்த வேலை எனக் கேட்டுவிட்டு...பாரியின் விளக்கத்துக்குப் பிறகு, உண்மைகளைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் என்றும் அதனால் பாரி அங்கே செல்வது நல்லதுதானென்றும் புரிந்துகொண்டு...எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிடுவதாகவும், இரண்டு நாட்கள் கழித்து அவனுடைய ஊருக்குப் புறப்பட்டு வரும்படியும் சொல்லியிருந்தான்.

இரண்டுநாள் கழித்து....கேமரா, குரலைப் பதிவு செய்யும் கருவி என எல்லா ஏற்பாடுகளுடனும், ஒரேயொரு தோள்பையை இரு கைகளுக்குள்ளும் நுழைத்து, முதுகுப் பக்கமாய் மாட்டிக்கொண்டு...பூவிழிக்கு டாட்டாக் காட்டியபடியே...ஒரிசா வழியே கொல்கத்தாப் போகும் ரயிலில் பயணமானான்.


இனி காட்டில் சந்திக்கலாம்......

ஆதி
21-06-2010, 10:43 AM
விறு விறுப்பா போகுதுங்கண்ணா..

அதென்ன வீரப்பன் மாதிரி "இனி காட்டில் சந்திக்கலாம்...... " சொல்லிருக்கீங்க..

பாராட்டுக்கள் அண்ணா..

மதி
21-06-2010, 10:46 AM
ஒரே வார்த்தையில் சொல்லணும்னா..
அசத்தல்....
கஷ்டப்பட்டு அனுமதி கெடச்சாச்சு.. இனி என்ன பட்டய கெளப்ப வேண்டியது தானே..

(அத்தியாய நம்பரை மாத்துங்கோ)

சிவா.ஜி
21-06-2010, 11:57 AM
ஆஹா....வீரப்பன் அப்படியா சொன்னாரு.....!!!

சரி...சரி...யார் சொன்னா என்ன....இப்ப நான் சொல்லிட்டேன்....காட்டுக்கு வாங்க....ஹி...ஹி...

நன்றி ஆதன்.

சிவா.ஜி
21-06-2010, 12:03 PM
ஆமா...மதி, பெரியவரைக் கூட சமாளிச்சுடலாம்....ஆனா பூவிழியை சம்மதிக்க வெக்கறதுதான் பாரிக்குப் பெரும்பாடாப் போச்சு. கிளம்பியாச்சு...அங்க என்ன ஆகப்போகுதோ....பாப்போம்.

(சாப்பாட்டுக்குப் போற அவசரத்துல அத்தியாய நம்பர மாத்தாமப் போயிட்டேன்....ஆனா...யாரோ நல்ல மனுஷன் மாத்தியிருக்காங்க....அவங்க யாராயிருந்தாலும் நன்றி..)

ஆதி
21-06-2010, 12:07 PM
அந்த நல்ல மனுஷன் நம்ம ரசிகன் தான் அண்ணா.. எல்லாருக்கு முன்னாடி அவர்தான் திரியுள்ள இருந்தார் ஆனா பேயா... சரிதான ரசிகரே :D

மதுரை மைந்தன்
21-06-2010, 12:08 PM
கதை நல்லா விறுவிறுப்பா செல்கிறது . பாராட்டுக்கள் .

Nivas.T
21-06-2010, 12:13 PM
வெற்றிகரமாக முதல் சுற்று முடிந்தது

இரண்டாவது சுற்றுக்கு தயார் :icon_b:

சிவா.ஜி
21-06-2010, 12:15 PM
தொடர்ந்த ஊக்கத்திற்கு மிக்க நன்றி மதுரை மைந்தன் அவர்களே.

சிவா.ஜி
21-06-2010, 12:18 PM
என்ன குத்துசண்டையா நடக்குது....முதல் சுற்று, ரெண்டாவது சுற்றுன்னு பயமுறுத்தாதீங்கப்பா....நிவாஸு....!!!

சிவா.ஜி
21-06-2010, 12:22 PM
அன்புதானா அது....ரொம்ப நன்றி அன்பு.

govindh
21-06-2010, 01:55 PM
நாங்களும் காட்டுக்குள் வர்றோம்....
(நீங்க பாதுகாப்பா கவனித்துக் கொள்வீர்கள் என்ற தைரியத்தில்)

தொடரட்டும் உங்கள் வேட்டை...
வாழ்த்துக்கள்....

சிவா.ஜி
21-06-2010, 02:53 PM
வாங்க வாங்க கோவிந்த். மான் கராத்தே தெரியுமில்ல....தைரியமா வாங்க...!!!

வாழ்த்துக்களுக்கு நன்றி.

செல்வா
21-06-2010, 03:03 PM
பாக்கலாம் காட்டுக்குப் போற மச்சான்... பூவோட வரானா புலியோட வரானா....
முழுசா வரானா இல்ல முள்ளாகிப் போறானானு...

ரொம்ப கனமான கருவை எடுத்துக்கிட்டு ரொம்ப தீவிரமா இறங்கி்ட்டீங்க.. தீவிரமான உழைப்பைக் கொடுக்கக் கூடியவங்க நீங்க அதனால் தாராளமா நிறைய எதிர்பாக்கலாம்.

தொடருங்கள் அண்ணா...!

சிவா.ஜி
21-06-2010, 03:16 PM
கிராமத்துப் பாட்டுமாதிரி ஒண்ணச் சொல்லி பயமுறுத்துறீங்களேப்பு....

அப்படியெல்லாம் கனமா இறங்கமாட்டேன் செல்வா. நம்ம பாணிதான் வித்தியாசமாக் களத்தைக் காட்டில் வைத்தேன் அவ்ளோதான்.

ஊக்கத்திற்கு நன்றி செல்வா.

பா.ராஜேஷ்
21-06-2010, 08:17 PM
நைஜீரியா காட்டுக்குள்ளே தனியா தைர்யமா போயிட்டு வந்த உங்கள நம்பி இந்திய காட்டுக்குள்ள வர்றதுக்கு எங்களுக்கு என்ன பயம்...:D

அமரன்
21-06-2010, 08:36 PM
கிளம்பிட்டாருய்யா ஹீரோ..

முடிவெடுத்துட்டுப் பொண்ணுகளைக் கேட்டால் பொதுவா ஒத்துக்கவே மாட்டாங்க.

அவுங்களக் கேட்டு முடிவெடுக்கிறதா பாவ்லா காட்டினாக் கூட பிகு பண்ணிட்டு ஒத்துக்குவாங்க.

பாரியும் பூவிழியும் கொள்ளும் ஊடலில் காதல் ஒழுகிறது.

காட்டு வாழ்க்கை திரிலானது மட்டுமல்ல ஒரு வித இன்ப மயமானது.

நானும் ரெடியாயிட்டேனுங்கோ..

அன்புரசிகன்
21-06-2010, 11:29 PM
நேற்றிரவு ஒரே மூச்சில் 4 பாகங்களையும் படிச்சேன். பத்திரிக்கைக்காரர்களின் வீர தீர செயல்களை வெளிக்கொணரும் கதையாக அமையும் என நினைக்கிறேன். அழகாக வர்ணிக்கிறீர்கள். ஆரம்பத்தில் புரியவில்லை. பிறகு தெளிந்தேன். தொடருங்கள்...

அப்புறம் அத்தியாயம் மாற்றியது... காரணம் முதல் 3ம் ஒவ்வொருபக்கத்திலிருக்க பின் 2 பக்கங்கள் தாண்டியிருக்கு. ஏன் அண்ணர் போடவில்லை என்று தேடினால் கிடக்கு... அதனாலே தான் மாற்றிவிட்டேன். நீங்க என்ன மதியா??6 மாசத்துக்கு ஒரு பாகம் எழுத... :D :D :D

அன்புரசிகன்
21-06-2010, 11:31 PM
முடிவெடுத்துட்டுப் பொண்ணுகளைக் கேட்டால் பொதுவா ஒத்துக்கவே மாட்டாங்க.

அவுங்களக் கேட்டு முடிவெடுக்கிறதா பாவ்லா காட்டினாக் கூட பிகு பண்ணிட்டு ஒத்துக்குவாங்க.

இத ஆரன் அண்ணா சொல்லலாம். சிவா அண்ணா சொல்லலாம். தாமரை அண்ணா சொல்லலாம் ஓவியன் கூட சொல்லலாம். நீங்க எப்படி??? ஏதாச்சும் ஃப்ளாட் வாங்கி கீங்கி வச்சிருக்கிறியளோ???

பாரதி
22-06-2010, 12:33 AM
காட்டில் கதைநாயகன் செய்யப்போகும் சாகசங்களைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.
எழுதுங்க சிவா.

மதி
22-06-2010, 01:26 AM
நீங்க என்ன மதியா??6 மாசத்துக்கு ஒரு பாகம் எழுத... :D :D :D
குத்தம் சொல்லலீன்னா உமக்கு ஆறாதே...!!! என்ன பண்ண..?? இனி ஆறு வருஷத்துக்கு ஒரு பாகம் எழுதலாம்னு இருக்கேன்.. இப்ப என்ன செய்வீக.. இப்ப என்ன செய்வீக..:rolleyes::rolleyes::rolleyes::rolleyes:

samuthraselvam
22-06-2010, 05:11 AM
காட்டுப் பயணம் இடியாக சாரி இனிதாக இருக்க வாழ்த்துகள் பாரி..... கூடவே நம்ம மன்ற மக்கள் வராக அதனால பயப்படாதீங்க.... நம்ம மதிகூட வராங்க....

சிவா.ஜி
22-06-2010, 05:14 AM
வாங்க வாங்க ராஜேஷ். எல்லோரும் கும்பலா போவோம்.

நன்றி ராஜேஷ்.

சிவா.ஜி
22-06-2010, 05:19 AM
அதெப்படி பாஸ் இவ்ளோ சரியாச் சொல்றீங்க...போகப்போறேன்னு சொல்றதுக்கும், போகட்டுமா...நீ சொன்னா சரிங்கற ரீதியில சொல்றதுக்கும் வித்தியாசமிருக்கு. பாரிக்கு உங்க பாரீஸ் அலைபேசி எண் தெரியல போலருக்கு....

ரொம்ப நன்றி அமரன்ஜி...

சிவா.ஜி
22-06-2010, 05:23 AM
அதான...மதியை பாவம் ஏன் வம்புக்கு இழுக்குறீங்க....நான் கதையை எழுதறேன்....அவர் செதுக்குறார். அதுக்கு கொஞ்சம் நேரமெடுத்துக்கறார். தாமதமாத் தந்தாலும்...தரம் உச்சமில்லையா....அதுக்காக....தாராளமா தாமதத்தைப் பொறுத்துக்கலாம்.

நன்றி அன்பு.

சிவா.ஜி
22-06-2010, 05:24 AM
தொடர்ந்த ஊக்க வார்த்தைகளுக்கு மிக்க நன்றி பாரதி.

சிவா.ஜி
22-06-2010, 05:26 AM
ஆமா லீலும்மா....இம்புட்டு பேர் இருக்காக....எதுக்கு பயம்...தாராளமா போகலாம்.

உற்சாகமான உங்க பின்னூட்டத்துக்கு ரொம்ப நன்றிம்மா.

அமரன்
22-06-2010, 05:33 AM
இத ஆரன் அண்ணா சொல்லலாம். சிவா அண்ணா சொல்லலாம். தாமரை அண்ணா சொல்லலாம் ஓவியன் கூட சொல்லலாம். நீங்க எப்படி??? ஏதாச்சும் ஃப்ளாட் வாங்கி கீங்கி வச்சிருக்கிறியளோ???

நீங்கள் எப்படித்தான் போட்டாலும் மதியை மாதிரிச் சலிச்சு மாட்டமாட்டேனே..:icon_ush:

மதி
22-06-2010, 05:56 AM
நீங்கள் எப்படித்தான் போட்டாலும் மதியை மாதிரிச் சலிச்சு மாட்டமாட்டேனே..:icon_ush:
இங்கேயும் நான் தானா...:rolleyes::rolleyes:

சிவா.ஜி
23-06-2010, 06:44 AM
அத்தியாயம்-5


ரயில் அந்த ஊரை அடையும்போது இரவாகியிருந்தது. தோள்பையுடன் இறங்கிய பாரி களைப்பாய் இருந்தான். ரயிலில் கிடைத்த சுகாதாரக் குறைவான, சுவைக் குறைவான, லஞ்சம் கலந்திருந்த உணவைச் சாப்பிட முடியாமல், வெறும் பழங்களையும், ரொட்டி, பிஸ்கட்டுகளையுமே சாப்பிட்டதால் சோர்வடைந்திருந்தான்.

இறங்கி இரண்டடி நடப்பதற்குள் அவனுடையத் தோள் தட்டப்பட்டது. திரும்பியவனைக் கட்டிப் பிடித்துக்கொண்டான் ஜெய்ராம் சாஹூ.

"எவ்ளோ நாளாச்சுடா மச்சான் உன்னப் பாத்து. மெயில்ல உன் எழுத்தைப் பாக்கறதோட சரி...பயணமெல்லாம் எப்டி இருந்திச்சி..”

இரண்டு வருடங்களாக அவனுக்கு தமிழில் பேச வாய்ப்பிருந்திருக்கவில்லையென்பதை...லேசான தடுமாற்றத் தமிழ் காட்டிக்கொடுத்தது. இருந்தாலும் பெரிதாய் தவறு சொல்ல முடியாத உச்சரிப்பாகவே இருந்ததைப் பார்த்து பாரி ஆச்சர்யப்பட்டான்.

“நீ இன்னும் தமிழை மறக்கவேயில்லடா”

“தமிழையும் மறக்கல நீ அறிமுகப்படுத்தின பாரதியையும் மறக்கல. தமிழ்ல பேசத்தான் முடியலையே தவிர...பாரதியை அடிக்கடி படிச்சிக்கிட்டுதான் இருக்கேன். சரி...சரி...வீட்டுக்குப் போய் நிறைய பேசலாம்...ட்ரெயின்ல சரியா சாப்பிட்டிருக்க மாட்ட...வா மொதல்ல போய் எங்கம்மாக் கையால செஞ்ச ஃபுல்கா ரொட்டியச் சாப்பிடலாம்”

வீட்டுக்குப் போய் பேசலாமெனச் சொன்னாலும்...வீட்டுக்கு வரும் வழியெல்லாம் நிறைய பேசிக்கொண்டேதான் வந்தார்கள். பேச்சினிடையில் காரின் கதவுக் கண்ணாடி வழியே ஆயுதம் தாங்கிய எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களை நிறையவே பார்த்தான் பாரி. அந்த நேரத்துக்குக் கடைகள் சில திறந்திருந்தாலும்..மக்கள் நடமாட்டம் வெகு குறைவாகவே இருந்தது. பெரிய ஊர் எனச் சொல்ல முடியாது...வழியில் அவர்கள் கடந்த அந்த இரண்டு தெருக்களில் மட்டும் நிறையக் கடைகள் இருந்தது. மற்றபடி எல்லாம் வீடுகளாகவே, அதுவும்,,,நடுத்தர ரக வீடுகளாகவே இருந்தது.

வீடு வந்து சேர்ந்தவர்களை வாசலிலேயே வரவேற்றார் ஜெய்ராமின் அம்மா. ஹிந்தி சீரியல்களில் வரும் அம்மாக்களைப் போல தலையில் முக்காடிட்டிருந்தார். நீளமான மேலங்கியும் தொளதொளப்பானக் கால்சட்டையும் போட்டுக்கொண்டு, துப்பட்டாவைப் போலிருந்த துணியால் முக்காடு போட்டிருந்தார். ஹிந்தியும் ஒரியாவும் கலந்து வரவேற்றார். அவருடையக் காலைத் தொட்டு தலையில் ஒற்றிக் கொண்டு உள்ளே வந்தப் பாரியை ஆச்சர்யமாய்ப் பார்த்தார்.வீடு, வெளியிலிருந்து தெரிவதைவிடவும் விசாலமாகவும், பழமையும் புதுமையும் கலந்ததாய் இருந்தது.
பாரியை அறைக்குள்ளே அழைத்துச் சென்று,

“இதாண்டா ஒன்னோட ரூம். பையை வெச்சிட்டு வா. கைகால் கழுவிட்டு சாப்பிடலாம்.”

அறைக்குள்ளேயே அமைந்திருந்த குளியலறையைப் பார்த்ததும்,

“ஜெய்ராம்....குளிச்சிட்டு வந்துடறண்டா...ஒரே கசகசன்னு இருக்கு. ஃபைவ் மினிட்ஸ்...இப்ப வந்துடறன்..”

"பசியோட இருப்பியேன்னுதான் சீக்கிரம் சாப்பிடலான்னு சொன்னேன்...சரி...சரி...குளிச்சிட்டே வா. நானும் அம்மாவும் டைனிங்ஹால்ல வெயிட் பண்றோம்”

சப்பாத்தி மிக மிருதுவாக இருந்தது. ரசித்துச் சாப்பிட்டான். பாரிக்காகவே சாம்பார் வைத்திருந்தார்கள். உடனடி சாம்பார்ப் பொடியின் களேபரச் சுவையுடன் இருந்தாலும்...அதில் அக்கறை சேர்ந்திருந்ததால்...நிறைய சுவைத்தது. சாப்பிடும்போது,

“எங்கம்மாவுக்கு உன்ன ரொம்ப பிடிச்சிடுச்சிடா..உன்னப்பத்தி நிறைய சொல்லியிருக்கேன்...பாக்கனுன்னு சொல்லிட்டிருந்தாங்க...இப்ப வந்ததும் அவங்க காலைத் தொட்டது...அவங்களுக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு....இன்ஃபேக்ட்...நானே இப்பல்லாம் அதை மறந்துட்டேன்...”

“எங்க ஊர்லயும் இந்தப் பழக்கம் இருக்குடா...ஆனா...இப்ப இருக்கிறவங்க யாரும் அதை ஃபாலோ பண்றதுமில்ல.....யாரும் எதிர்பாக்கறதுமில்ல....”

“ஜெய்ராம் பையா....இந்தாங்க நீங்க கேட்ட வாழைப்பழமும், இனிப்பு சோம்பும்”

என்று ஒரிய மொழியில் சொல்லிக்கொண்டே வந்தவனைப் பார்த்த பாரியைக் கவனித்துவிட்டு,

“இவன் சோட்டு....சின்ன வயசுலேர்ந்தே எங்க வீட்ல இருக்கான். இவனை வேலக்காரனா நாங்க பாக்கறதேயில்ல...என் தம்பி மாதிரி. 17 வயசு ஆகுது....ஆனா ஆளப்பாரு...12 வயசுப் பையன் மாதிரி இருக்கான்...இதர் லாவ்...”

என சோட்டுவிடமிருந்துப் பையை வாங்கிய ஜெய்ராம்..அதை மேசைமேல் வைத்தான்.

“தும் பி காலோ...”

என்று அவனையும் சாப்பிடச் சொல்லி,

“மாஜி...உஸ்கோபி கானா லகாதீஜியே...”

என்று அவனுடைய அம்மாவிடம் அவனுக்கும் அங்கேயே சாப்பாடு வைக்கும்படி சொன்னான்.

சாப்பிட்டு முடித்துவிட்டு, ஆளுக்குக் கொஞ்சம் சோம்பு எடுத்து வாயில் போட்டுக்கொண்டு, இரண்டு பழத்தையும் பிய்த்துக் கையில் எடுத்துக்கொண்டு பாரியின் அறைக்கு வந்தார்கள்.

“இந்தா பழம் சாப்பிடு....ரூம் வசதியா இருக்கா....”

“டே...நான் என்ன மாசக்கணக்குலயா தங்கப்போறேன். இன்னைக்கு ஒரு நைட்...நாளைக்கு கிளம்பனுமில்ல...”

“நாளைக்கு நைட்டுதாண்டா போக முடியும். இங்கருந்து பதினேழுக் கிலோமீட்டர் போய் அங்கருந்துதான் இந்திராவதி ஆத்தத் தாண்டி காட்டுக்குள்ள போகனும். பகல்ல...மிலிட்டரி, போலீஸ்ன்னு ஏகப்பட்ட தொல்லைங்க.”

இரவு வெகுநேரம் பழையக் கதைகளையும், புதிய நிகழ்வுகளையும் பேசிக்கொண்டிருந்துவிட்டு உறங்கிவிட்டார்கள்.


தந்தையின் கட்டளைப்படி வனவாசம் வந்த ராமனுக்கு அத்ரி முனிவர் காட்டியக் காடுதான் இந்த தண்டக்காரண்யம்.கடல் மட்டத்திலிருந்து 3000 மீட்டர்கள் உயரத்தில், கிட்டத்தட்ட 35,600 சதுர மைல்கள் பரப்பளவில் வடகிழக்கிலிருந்து மேற்கு நோக்கி வந்து, தெற்கில் ஆந்திராவின் சில பகுதிகள் வரை பரந்த காடு. சத்தீஸ்கர், ஒரிசா, மத்தியப்பிரதேசம், மற்றும் ஆந்திர மாநிலங்களில் பரவியிருந்தது.புராணக்காலத்தில் தாடகையை ராமன் வதம் செய்த இடத்தில்...தினசரி வதங்கள் தொடர்கதையாகிவிட்ட நிலையில்....

http://i194.photobucket.com/albums/z250/sivag/dandakaranya3.jpg

ஏற்கனவே உள்ள 35 ஆயிரம் துணை ராணுவத்திற்கு உதவியாக மேலும் 20 ஆயிரம் வீரர்களை மத்திய அரசு அனுப்பியிருந்த நேரம்...எல்லாப் பாதுகாப்புகளையும் தாண்டி அந்த இரவில், சிறிய ஓடத்தில் பாரி, ஜெய்ராம், சோட்டு இவர்களை அமத்தி, ஒரு ஓடக்காரன் இந்திராவதி நதியைக் கடந்து...கரை சேர்த்தான். இது மாவோயிஸ்ட்டுகளின் பிரதேசம். உடலில் ஒரு சிறிய சில்லிப்பை உணர்ந்தான் பாரி. ஜெய்ராமும், சோட்டுவும் சாதாரணமாகவே இருந்தார்கள்.

ஆற்றின் கரையோரமாகவே சற்றுதூரம் நடந்தவர்கள் சற்றுத்தொலைவில் அடர்ந்த மரங்களுக்கிடையில் சலசலப்பையுணர்ந்தார்கள். பாரி சட்டென்று எச்சரிக்கையானான். அவனது அந்த சட்டென்ற மாற்றத்தையுணர்ந்த ஜெய்ராம் மெல்ல அவன் கையைப் பிடித்து...

“நம்ம ஆளுங்கதான் வராங்க...நான் ஏற்கனவே சொல்லி வெச்சிருக்கேன். நம்மளக் கூட்டிக்கிட்டுப் போக வந்திருக்காங்க. இந்த இருட்டுல அவங்களுக்கு மட்டும்தான் சரியான வழி தெரியும். பயப்படாத..”

என்றதும் சிரித்தான் பாரி.

“என்னடா சிரிக்கிற...?”

“முட்டுக்காடு தெரியுந்தான உனக்கு...நாம கூட போயிருந்தோமே...அங்க...இதே மாதிரி ராத்திரியில இதவிட மோசமான ஆளுங்கக்கிட்ட மாட்டியிருக்கேன். அப்பக்கூட பயப்படல....இவங்க உன்னோட ஆளுங்க...நான் எதுக்குப் பயப்படப்போறேன்....”

அதற்குள் அருகில் வந்துவிட்டவர்களை...மெலிதான நிலா வெளிச்சத்தில் முகம் பார்க்க முயன்று தோற்றான் பாரி. கண்கள் மட்டுமேத் தெரியுமாறு துணியை முகத்தில் சுற்றியிருந்தார்கள். ஒரிய மொழியில் ஜெய்ராமிடம் பெசியவனோடு சேர்ந்து மூன்றுபேர் இருந்தார்கள். பேசிக்கொண்டிருப்பவனோடு வந்த இரண்டுபேரும் அந்த இருட்டிலும்...தங்கள் கூரியக் கண்களால்...சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.பேசிக்கொண்டிருந்தவன் நிறுத்தியதும், பாரியைப் பார்த்து...

“மிலிட்டரி அடிஷனல் ஃபோர்ஸக் கொண்டாந்திருக்காங்களாம்...எந்த நேரத்துலயும் அட்டாக் இருக்குமாம். இப்ப இங்க இருக்கிறது ஆபத்துங்கறாங்க. திரும்பிப் போகச் சொல்றாங்க...என்ன சொல்ற?

“நோ....எந்த மாதிரியான ஆபத்தையும் என்னால சமாளிக்க முடியும். நான் திரும்பிப் போறதா இல்ல...காட்டுக்குள்ள போகலாம்”

உறுதியான குரலில் சொன்னப் பாரியை ஆச்சர்யத்துடன் பார்த்த ஜெய்ராம்...பாரி சொன்னதை வந்தவர்களிடம் மொழிமாற்றினான். அவனுடன் பேசிய ஆள்...பாரியின் அருகில் வந்து அவன் தோளைக் கெட்டியாய்ப் பிடித்து அழுத்தி...’சபாஷ்’ என்றான்.


அனைவரும் நடக்கத்தொடங்கினார்கள்.


தொடரும்.....

பாரதி
23-06-2010, 07:14 AM
ம்ம்.... வேகம் ஆரம்பிச்சிருச்சே...!! நல்ல நடையில் படிக்க மிகவும் சுவாரசியமாக கொண்டு செல்கிறீர்கள் சிவா.

மதி
23-06-2010, 07:29 AM
விறுவிறுப்பா போகுது கதை... ஒரு வழியாக காட்டுக்குள் நுழைந்து விட்டான்.. இன்னும் என்னென்ன நடக்கப் போகுதோ..!!

செல்வா
23-06-2010, 07:56 AM
ஜெய் வீட்டு புல்கா ரொட்டியும் சாம்பாரும் தந்த பலத்தில ரொம்ப நல்லாவே பேசறாரு பாரி.... பூரியாயிடாம திரும்ப வந்தாச் சரிதான்....

பாக்கலாம் என்னென்ன நடக்கப் போகுதுண்ணு....

சிவா.ஜி
23-06-2010, 09:19 AM
நன்றி பாரதி. மேலும் மேலும் என்னை கூர்தீட்டிக்கொள்ள உதவும் உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

சிவா.ஜி
23-06-2010, 09:24 AM
தொடர்ந்த ஊக்கத்துக்கு நன்றி மதி.

சிவா.ஜி
23-06-2010, 09:29 AM
பாரி...பூரியாகிறானா...உங்கக்கருத்துலருந்து மாறிப்போகிறானா....போகப்போகப் பார்ப்போம் செல்வா. தொடர்ந்து வருவதற்கு ரொம்ப நன்றி.

Akila.R.D
23-06-2010, 09:44 AM
தமிழ் நாட்டு அரசியலோட நிறுத்திடுவீங்கன்னு பார்த்தா தண்டகாரண்யம் வரைக்கும் கூட்டிட்டு போறீங்க....

பாரி என்ன செய்யப்போறான்?...

நாங்களும் வருகிறோம் ...

சிவா.ஜி
23-06-2010, 10:19 AM
தமிழ்நாட்டு அரசியலை சொல்ல ஆரம்பிச்சா...பெரிய நாவலாவே மாறிடும். அதனால அதை ஜஸ்ட் தொட்டுவிட்டு போகிறேன் அகிலா. மெயின் கதை இந்தக் காடுதான்.

தொடர்ந்த ஊக்கத்துக்கு நன்றிங்க.

govindh
23-06-2010, 12:21 PM
'ஒரு வித பயம் கலந்த உணர்வுடன்...
காட்டுக்குள் நுழைஞ்சாச்சு....'

அற்புதமான எழுத்து நடை...
பாராட்டுக்கள்.

அடுத்து என்ன...?!

தொடருங்கள் அண்ணா.

சிவா.ஜி
23-06-2010, 12:47 PM
நான் கேள்விப்பட்டவரை...மிகவும் அடர்ந்த காடு இந்தக் காடாம் கோவிந்த். பகலிலேயே அச்சமாக இருக்கும் இரவென்றால்...கேட்கனுமா?

ஊக்கமளிக்கும் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி கோவிந்த்.

அமரன்
23-06-2010, 06:09 PM
உங்கள் மினக்கெடலுக்கு முதலில் சிரம் தாழ்த்துகிறேன் தலை.

ஒரு நாவலுக்கு என்ன என்ன தேவையோ அத்தனையும் கொண்டு வந்து கொடுப்பது அசாதாரணமனது.. வாழ்த்துகள்.

புதிதாக ஒரு பாத்திரம் ஜெய்ராமின் வீட்டு வேலைக்காரனாக.. அவனிடம் எதாச்சும் இருக்கனுமே என்று எதிர்பார்க்க வைக்குது.

தொடருங்க சிவாஜி.

பா.ராஜேஷ்
23-06-2010, 06:17 PM
ஆஹா... விறுவிறுப்பு இன்னும் கூடும் போலிருக்கிறதே... வர்ணனைகளும் எழுத்துக்களும் மிக அருமை... தொடருங்கள் அண்ணா...

அன்புரசிகன்
24-06-2010, 12:38 AM
ம்.. சிவா அண்ணாவின் எழுத்தின் வல்லமையை காணும் சந்தர்ப்பம் மீண்டும் வரவுள்ளது. கண்ணுக்குள் காட்சியாய் கதை நகர்கிறது. போராளிகளிடம் வீரத்திற்கு எப்போதும் ஒரு வரவேற்பு இருக்கும் என்பதை உணர்த்துகிறது அவர்களின் சம்பாசணை... தொடருங்கள் அண்ணா...

கீதம்
24-06-2010, 04:04 AM
திகிலுக்குப் பஞ்சமில்லாமல் கதை நகர்கிறது. காடென்றாலே ஒரு பயமிருக்கும். அதிலும் போராளிகள் நிறைந்த வனமென்றால் சொல்லவே வேண்டாம்.காட்டின் அமைப்பை படத்தில் காட்டி எங்களுக்கு நேரிலேயே பார்க்கும் அனுபவத்தை உண்டாக்கிவிட்டீர்கள்.பாராட்டுகள் அண்ணா. மிகுந்த எதிர்பார்ப்புடனும், பயத்துடனும் உங்களையும் பாரியையும் பின் தொடர்கிறேன்.

சிவா.ஜி
24-06-2010, 05:23 AM
என்ன சொல்ல வேண்டுமென தீர்மானித்தபிறகு அதனைப் பற்றிய சில விவரங்களை சேகரித்தேன் பாஸ். அதை...திணிப்பு எனத் தெரியாமல் கதையோடு சொல்வதுதான் சிரமமாக இருக்கிறது. அந்தக் கலையில் மதிதான் எனக்கு குரு. உ.த.செ ஒரு மிகச் சிறந்த உதாரணம்.

உங்க ஊக்கமூட்டலுக்கு ரொம்ப நன்றி அமரன்.

சிவா.ஜி
24-06-2010, 05:24 AM
ரொம்ப நன்றி ராஜேஷ். தொடரும் ஊக்கப் பின்னூட்டங்கள் உற்சாகத்தையளிக்கிறது.

சிவா.ஜி
24-06-2010, 05:25 AM
உண்மைதான் அன்பு. போராளிகள் வீரத்தை மதிப்பவர்கள். பாரியின் தைரியம் சாதிக்கப்போவது என்ன என பார்க்கலாம்.

அன்பான பின்னூட்டத்திற்கு நன்றி அன்பு.

சிவா.ஜி
24-06-2010, 05:27 AM
பிள்ளைகளுடன் செலவழிக்கும் நேரம் போக, தொடர்கதையும் எழுதிக்கொண்டு, தவறாமல் என் கதையைப் படித்துப் பின்னூட்டமிட்டு ஊக்கப்படுத்தும் தங்கைக்கு மிக்க நன்றி.

சிவா.ஜி
25-06-2010, 09:45 AM
அத்தியாயம்:6


அனைவரும் சற்றுத்தொலைவு நகர்ந்ததும், நதியில்....தூரத்தே...ராட்சசனின் இரண்டு கண்களைப் போல இரு ஒளி வீச்சுக்கள், தகாத இடத்துக்குச் செல்லும் சம்சாரியின் கண்கள்...தெரிந்தவரைத்தேடும் எச்சரிக்கையானப் பார்வை போல...இரு பக்கமும் மாறி மாறி அலைந்தது. அழைத்துப் போக வந்த மூன்றுபேரும் அவசரமாய் மற்ற மூன்றுபேரையும் பலவந்தமாய் தள்ளிக்கொண்டு...நதியின் மணற்கரைக்கு பாத்தியமைத்ததைப்போல இருந்த அடர்ந்த காட்டு மரங்களின் அடர்த்திக்குள் தள்ளிக்கொண்டு போனார்கள். எப்போதும் மனிதர்களைக் காக்கும் மரங்கள் அப்போதும் அவர்களைக் காத்தது.

துணை ராணுவத்தினரது ரோந்துப் படகிலிருந்து வீசிய ஒளிச்சாட்டையின் நுனி...இவர்களின் தேகம் தீண்டுவதற்குள்...மரங்கள் அவர்களை..மறைத்தது. சற்றுநேரம் எந்த அசைவுமில்லாமல் இருந்த இடத்திலேயே அமர்ந்தார்கள். சோட்டு பாரியின் கைகளைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டான். பாரி அவனுடைய தலையை பரிவோடு தடவினான்.

சோட்டுவை ஏன் இந்த ஆபத்தான இடத்துக்கு கூட்டி வருகிறாய் என ஜெய்ராமைக் கேட்டதற்கு...அவனுக்கு இது புதிதில்லை....பலமுறை என்னுடன் வந்திருக்கிறான். அது மட்டுமல்ல...அவன் பிறந்ததே இந்தக் காட்டுக்குள்தான். அவனுடைய பெற்றோர்களை ஒரு தாக்குதலில் பறி கொடுத்துவிட்டு, இரண்டு வயதுக் குழந்தையாக அழுது கொண்டிருந்தவனை ஜெய்ராமின் அப்பாதான் தன் வீட்டுக்குக் கொண்டு வந்து வளர்த்ததாகச் சொன்னான். பள்ளிக்கூடம் போகவில்லையே தவிர மிகச் சுட்டியான பையன். ஹிந்தி, ஒரியா இரண்டையும் நன்றாகப் பேசக் கற்றுக்கொண்டான்.

பாரிக்கு ஹிந்தி ஓரளவுக்குத் தெரியும். இந்த சிறுவனுடன்...(அவனைப் பார்த்தால் அப்படித்தான் சொல்லத் தோன்றும்) சமாளிக்க முடிந்தது. ஆழ்ந்த அமைதியில்...ரோந்துப் படகின் நீர் கிழிசலின் சத்தம்.....ஒரு இசைக்கருவியின் ஒலியாகக் கேட்டது.

எச்சரிக்கைக்காக...இரண்டு ஜவான்கள் குத்துமதிப்பாக காட்டை நோக்கி அவ்வப்போது துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு வந்தார்கள். இவர்களின் தலை மேல் சீறிக்கொண்டுப் பாய்ந்த ஒரு தோட்டா அனைவரையும் லேசாக அதிர வைத்தது.

படகு அவர்களைக் கடந்ததும், அந்த மூன்றுபேரும் தங்கள் பைகளிலிருந்து எடுத்த தலை விளக்குகளைப் பொருத்திக்கொண்டார்கள். விளக்கைப் போட்டதும்...ஒவ்வொருவரும் அடுத்தவரைப் பார்க்க முடிந்தது. பாரி ஜெய்ராமைப் பார்த்து...

"நல்லவேளை குண்டு தலைக்குமேல போச்சு...கொஞ்சம் கீழ போயிருந்தா நம்மள்ல யாராவது ஒருத்தர் மேல போயிருக்க வேண்டியதுதான்...கடவுள் காப்பாத்திட்டார்"

பாரி சொன்னது அந்தப் போராளிகளுக்கு
விளங்கவில்லையென்றாலும் கடைசியாய் அவன் மேல் நோக்கிப் பார்த்துச் சொன்னதன் அர்த்தத்தை யூகித்துக்கொண்டவர்களில் ஒருவன்,

"கடவுளல்லக் காப்பாற்றியது...காடு...."

என்றான்.

புன் சிரிப்போடு அதைக் கேட்ட பாரி...லேசாகத் தலையாட்டினான்.

"சரி. நான் முன்னால் போகிறேன் நீங்கள் மூன்று பேரும் என்னைத் தொடருங்கள். எங்கள் தோழர்கள் உங்களுக்குப் பின்னால் வருவார்கள். இன்னும் சற்று தூரத்திலிருந்து பாதை மேல்நோக்கிப் போகும்...கரடுமுரடான பாதைதான். அதனால் கொஞ்சம் சிரமமாக இருக்கும் களைப்பாய் தெரிந்தால் சொல்லுங்கள்"

கடைசி வாக்கியத்தை...பாரியைப் பார்த்து சொன்னவன்...தலைவிளக்கின் வெளிச்சத்தில் முன்னோக்கி நடக்கத் தொடங்கினான்.

http://i194.photobucket.com/albums/z250/sivag/dandakaranya2.jpg

மேலே போகப்போக குளிர் அதிகரித்தது. அதற்குத் தயாராய் கம்பளிக்கோட்டுடன் வந்திருந்ததால்.. பாரிக்கு...பிரச்சனையில்லை. ஆனால், அதேசமயம் மற்றவர்கள் யாருமே குளிரைப் பொருட்படுத்தியதாகவே தெரியவில்லை. கிட்டத்தட்ட...ஒன்றரை மணி நேரப் பயணத்துக்குப் பிறகு...அங்கங்கே பொட்டுப் பொட்டாய் வெளிச்சங்கள் தெரிந்தன. அருகில் செல்லச் செல்ல..வைக்கோல் போர்களைப் போல பல குடிசைகள் தென்பட்டன. அது ஒரு சமவெளியாக இருந்தது. நிலா வெளிச்சம் பிரகாசமாகவே இருந்ததால்...குடிசைகளும், சிறு சிறு புதர்களும்....பி.சி.ஸ்ரீராமின் காமிராக் காட்டும் காட்சியாகத் தெரிந்தது.


ஒரு குடிசைக்குள் மூவரையும் அழைத்துப்போன போராளிகளுள் ஒருவன் மட்டும் வெளியேச் சென்று சற்று நேரத்தில் திரும்பிவந்தான். குடிசைக்குள் நுழைந்த பாரி...அந்த மண் தரையில் காலை நீட்டி அமர்ந்து....ஆசுவாசப்படுத்திக்கொண்டான். ஜெய்ராமும், சோட்டுவும் கொஞ்சங்கூடக் களைப்பைக் காட்டாதது...அவனுக்கு ஆச்சர்யத்தையளித்தது. மணியைப் பார்த்தான். இரவு ஒரு மணியாகியிருந்தது. அவன் பொதுவாய் இரவுகளில் நேரங்கழித்தே உறங்குவது வழக்கமென்றாலும்...களைப்பால் உறக்கம் வருவதைப்போல இருந்தது. லேசாய் கண்கள் மூடிய நேரத்தில்....அந்த குடிசையின் சிறிய வாசல் வழியாக ஒரு பெண் நுழைந்தாள். கையில் சூடான தேநீர் இருந்தப் பாத்திரமும், ஆவி பறக்கும் வேகவைத்தக் கிழங்கும் வைத்திருந்தாள்.


அந்தப் பெண்ணுக்கு 20 அல்லது 21 வயதுதானிருக்கும். கறுப்பான தேகத்தில் தெரிந்த கடினத் தன்மை...அவள் ஒரு கடின உழைப்பாளி எனக் காட்டியது. அவளிடமிருந்து அவள் கொண்டு வந்தவைகளை வாங்கிய அந்த வழிகாட்டிப் போராளி...எல்லோரிடமும், தட்டை நீட்டி....கிழங்கை எடுத்துக்கொள்ளச் சொன்னான். தேநீரையும் கிழங்கையும் கொடுத்துவிட்டு அவள் திரும்பச் சென்றுவிட்டாள். ஆனால் அவளையேப் பார்த்துக்கொண்டிருந்தப் பாரியை தொட்டு அசைத்து...

"கிழங்கு சாப்டுடா...இயற்கையா விளைஞ்சது. ரொம்ப டேஸ்டா இருக்கும். இந்தப் பொண்ணு டோங்கரியா இனப் பொண்ணு. இங்க இன்னொரு இனமும் இருக்காங்க. அவங்களைக் கோண்டுன்னு சொல்வாங்க. இந்தப் பொண்ணு திறமையான வில்லாளி. ஒரே நேரத்துல பத்து பதினைஞ்சுப் பேரை சமாளிப்பா. அவங்க அப்பா அம்மா மட்டும்தான் இப்ப இருக்காங்க. போன வருஷம் நடந்த தாக்குதல்ல...இவளோட ரெண்டு அண்ணங்களும் செத்துட்டாங்க. அப்பதான் இவ தோழர்களோடத் தானா வந்து சேர்ந்தா."

கிழங்கைச் சாப்பிட்டுக்கொண்டே ஜெய்ராம் சொன்னதைக் கேட்டுக்கொண்டிருந்தவனுக்கு....26 ஆயிரமாக இருந்த மாவோயிஸ்ட்டுகளின் எண்ணிக்கை 70 ஆயிரமாக இந்த சமீப வருடங்களில் எப்படி உயர்ந்தது என்பதற்கான விடை கிடைத்தது.

இந்தக் காட்டுக்கு வருவதற்கு முன்னால்...இணையத்தை அலசியதில், இந்த மக்கள் எத்தனை பாதிப்புக்குள்ளாகிறார்களென்று அறிந்திருந்தான். ராணுவம் ஒரு பக்கம், போலீஸ் ஒரு பக்கம், இவர்கள் இனத்தின் இளைஞர்களைக் கொண்டு...அமைக்கப்பட்ட 'சால்வா ஜூடும்' என்ற அழித்தொழிப்புப் படை ஒருபக்கமுமாக...எந்நேரமும் தாக்குதலுக்குள்ளாகிக் கொண்டிருப்பவர்கள் இழந்தது ஏராளம். அந்த இழப்பின் துயரமும், வெறியும் தங்களைப் போராளிகளாக மாற்றிக் கொள்ள வைக்கிறது.
சாப்பாடும், தேநீரும் முடிந்ததும், ஆளுக்கொரு கனத்தக் கம்பளியைக் கொடுத்து,

"வெகு நேரமாகிவிட்டது. உறங்குங்கள் காலையில் பேசிக்கொள்ளலாம்"

எனச் சொன்ன முதல் போராளி....உட்கார்ந்திருந்த இடத்திலேயே, தலைக்கு ஏதும் வைத்துக்கொள்ளாமல் மல்லாந்து படுத்து உறங்கத்தொடங்கினான். பாரி தான் கொண்டுவந்தத் தோள்பையைத் தலைக்கு அணைத்து வைத்துக்கொண்டு படுத்துக்கொண்டான்.


காலையில் சூரியன் தன் முகத்தைக் காட்டுமுன்னமே....சால்வா ஜூடும் தங்கள் கோரமுகத்தைக் காட்டினார்கள். அந்தக் குடிசைகள் அவர்களின் தாக்குதலுக்குள்ளானது. தடதடவென்ற சத்தம் கேட்டு துள்ளியெழுந்தப் போராளிகள் உடனடியாய் அந்தக் குடிசையின் மூலையில் வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகளை எடுத்துக்கொடு...மற்ற மூன்று பேரையும் பார்த்து,

"உள்ளேயே இருங்கள் வெளியே வரவேண்டாம் சால்வா ஜூடும் வந்திருக்கிறார்கள் நாங்கள் சமாளித்துக்கொள்கிறோம் ஜாக்கிரதையாய் இருங்கள்"

எனச் சொல்லிவிட்டு, குடிசையின் கதவைத் திறந்ததும்...ஒரு மலைஜாதி இளைஞன் தொபீரென்று முன்னால் விழுவதைப் பார்த்தார்கள். அவனது மார்பில் அம்பு தைத்திருந்தது. அவனைத் தாண்டி போராளிகள் சுட்டுக்கொண்டே வெளியேப் பாய்ந்தார்கள். அவர்கள் போனதும் இரவு குடிசைக்கு வந்தப் பெண், தோளில் அம்புகளை மாட்டிக்கொண்டு, கையில் வில்லுடன் குடிசைக்குள் நுழைந்தாள்.

http://i194.photobucket.com/albums/z250/sivag/revolution_in_india_lalgarh2.png

அவள் அவசரமாய்ப் பேசியதை, சோட்டு மொழிபெயர்த்தான்.

"குடிசைக்குள்ள இருக்கிறது ஆபத்து. அவங்க தீ வெக்கிறாங்க...வெளியேப் போய் இடது பக்கம் ஒரு பள்ளம் இருக்கிறது அங்கிருக்கும் மரங்களுக்குப் பின்னால் மறைந்துகொள்ளச் சொல்கிறாள்"

என்றதும், அவள் தொடர்ந்து என்னவோ சொன்னாள்.

"நான் முதலில் வெளியே போகிறேன் என் பின்னாலேயே வாருங்கள். என்னை முன்னிறுத்தி...நீங்கள் ஓடிவிடுங்கள்"

இப்படிச் சொன்னதாய் சோட்டு மொழிமாற்றியதும், மூவரும் அவள் சொன்னபடி சென்று பள்ளத்துக்குள் வேகமாக இறங்கினார்கள். கடைசியாய் இறங்கியப் பாரியின் கெண்டைக்காலின் பின்புறச் சதையை ஒரு தோட்டா பிய்த்துக்கொண்டு போனது. தடுமாறி உருண்டு விழுந்த பாரியை...கீழேயிருந்துப் பார்த்த ஜெய்ராமும் சோட்டுவும்...மேலேறி வந்து அவனை அள்ளி எடுத்துக்கொண்டு வேகமாய் கீழ்நோக்கி இறங்கினார்கள்.தொடரும்....

மதி
25-06-2010, 09:59 AM
காட்டுக்குள் நுழைந்ததுமே ஆபத்து வந்துடுச்சா..?? நீங்கள் தகவல்கள் திரட்டிய விதம் தெரிகிறது...!!!
தொடருங்கள்

சிவா.ஜி
25-06-2010, 10:11 AM
ரொம்ப நன்றி மதி. உங்களுக்குத் தெரியாததா....!!!

தாமரை
25-06-2010, 10:36 AM
அசத்துங்க.. அசராமல் பின் தொடர்வேன்.

அவர் அசத்தினா நீங்க அசராம இருக்க முடியாது..

ஏன்னா அ - சத்து - நீங்க சத்து இல்லாதவராகி விடுவீங்க..

தாமரை
25-06-2010, 10:37 AM
சிவா அண்ணாவை யாரும் ஒன்னும் பண்ண முடியாது கீதம் பயப்படாதீங்க.... ஹா ஹா.... இந்தமாதிரி கதைகளைப் படிக்கும் போது ஏற்படும் த்ரில் இருக்கே....! அடடா... சூப்பர்...

பூவிழிதான் பாவம்.. "முகத்தில் பிளாஸ்திரியும், உதட்டில் வீக்கமுமாய் இருந்தான்." இதுக்கு காரணம் பூவிழிதானோ? கல்யாணத்துக்கு முன்னாடியே பூரிக்கட்டையில் ஒத்திகையோ?

அனுபவம் பேசுது...

தாமரை
25-06-2010, 10:44 AM
அப்ப உங்களுக்கு பூஸ்டே வேணாமா....மதி.....??????

பூஸ்டைக் கொஞ்சம் மாத்திப் போட்டா பூட்ஸ் வருதாம்.. அதான் மதி கொஞ்சம் தடுமாறுகிறார்..:icon_ush:

தாமரை
25-06-2010, 11:02 AM
முடிச்சதும் படிக்கலாம்னு நினைச்சேன்.. என்னவோ முன்னாடியே உள்ள வந்துட்டேன்...

பேரையெல்லாம் நினைவு வச்சுக்கிறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடும் போல இருக்கு,,,

அருந்ததி ராயின் உரைச் சுருக்கத்தைக் கூட சொல்லாம அதை பின்னால கதையில பாத்துக்கலாம்னு சொல்லிட்டீங்க... அங்கயே நாட் விழுந்தாச்சி...

வேக வேகமா காட்டுக்குள்ள கூட்டிகிட்டு போயிட்டீங்க.. உடனே ஓடவும் வச்சாச்சி...

உங்க கதைகளில் இது கொஞ்சம் வித்தியாசமா இருக்கு.. மத்தவங்க மாதிரி எனக்கு சஸ்பென்ஸ் எல்லாம் தெரியலை.. ஆனால் என்னென்ன விஷயங்களை எங்கெங்க எப்படி எப்படி வெளிப்படுத்தப் போறீங்க என்ற ஆர்வம்தான் அதிகமா இருக்கு,

அதுசரி மதி, மால்டோவா, (டாவடிக்க மால்), அப்பறம் வேற ஒண்ணு சொன்னாரே ஹர் லைக்ஸ் (அதாங்க ஹார்லிக்ஸ்) அதெல்லாம் வேணும்னு சொன்னதை இன்னுமா புரிஞ்சிக்கலை.. அக்னி / அமரன் கூட ஒண்ணுமே சொல்லலியே. டியூஷன் பத்தலியோ?:icon_p::icon_p::icon_p:

அதாவது பார்த்தாலே டாவடிக்கத் தோணுற மாலோட ஹெர் லைக்ஸ் வேணுமாம்... அதாவது அழகான பொண்னை காதலிக்க வச்சுதான் கல்யாணம் பண்ணுவாராம்.

மதி இப்ப எல்லாம் இப்படித்தான் சூசகமாகவே பேசறார்.

govindh
25-06-2010, 11:07 AM
ஆ...பாரிக்கு ஆபத்தா...?
அடுத்து என்ன ஆனது....?
பாதுகாப்பாகத் தப்பி விட்டார்களா...?

உங்களின் அபாரமான உழைப்பு....
எங்களால் உணர முடிகிறது...!

வாழ்த்துக்கள்...தொடருங்கள்...

சிவா.ஜி
25-06-2010, 11:45 AM
வாங்க தாமரை....எப்ப மதி...பூஸ்ட் பிடிக்காது, மால்டோவா, ஹார்லிக்ஸுன்னு சொன்னாரே அப்பவே உங்க என்ட்ரியை எதிர்பாத்தேன்....ஆனா...கரெக்டா வந்து ஹெர் லைக்ஸ புடிச்சிட்டீங்க.

நீங்க சொல்றது ரொம்பச் சரி...இது வழக்கமான சஸ்பென்ஸ் கதையில்ல. அதே மாதிரி நீங்க எதிர்பாக்கிற வெளிப்படுத்தலை...சரியா காமிக்கனுமேன்னுதான்...காட்டுக்குள்ள நுழைஞ்சதும் இந்த சல்வா ஜுடும் தாக்குதலைக் காமிச்சேன்.

ஏன்னா அடுத்தடுத்து வரபோற அத்தியாயங்கள்...கொஞ்சம் இல்ல இல்ல...ரொம்ப பேசுவாங்க. அதுக்குத்தான் இப்படி பரபரன்னு கூட்டிக்கிட்டுப் போய் உக்கார வெக்கறேன்.

ரொம்ப நன்றி தாமரை. இப்பக் கொஞ்சம் பயம் அதிகமாகியிருக்கு.....(எனக்குத்தான்...)

சிவா.ஜி
25-06-2010, 11:46 AM
எப்போதும்போல உங்க தொடர்ந்த ஊக்கத்துக்கு ரொம்ப நன்றி கோவிந்த்.

மதி
25-06-2010, 11:49 AM
அதாவது பார்த்தாலே டாவடிக்கத் தோணுற மாலோட ஹெர் லைக்ஸ் வேணுமாம்... அதாவது அழகான பொண்னை காதலிக்க வச்சுதான் கல்யாணம் பண்ணுவாராம்.

மதி இப்ப எல்லாம் இப்படித்தான் சூசகமாகவே பேசறார்.
நான் எப்போ இதெல்லாம் சொன்னேன்... இனிமே பொண்ண பாத்து காதலிக்க வச்சு.... கல்யாணம் பண்ணி... சரி... நேரடியா இமயமலைக்கு டிக்கட் போட்டுட வேண்டியது தான்..
நேரா சொன்னாலே தெரியாது.. இதுல சூசகமா வேற பேசுறேனாம்..

பாரதி
25-06-2010, 11:51 AM
விறுவிறுப்பாக கொண்டு செல்கிறீர்கள் சிவா.
பாரியை இப்போதே பாரம் ஆக்கியாச்சே... சுமப்பது சிரமம் அல்லவா..?
தொடருங்கள் சிவா.

சிவா.ஜி
25-06-2010, 12:08 PM
பாரிய...பாரம்தான்....பாரதி....சமாளிச்சுக்கலாம்.

நன்றி பாரதி.

Nivas.T
25-06-2010, 02:35 PM
அப்பா! என்ன ஒரு விறுவிறுப்பு?
அற்புதமான காட்சி அமைப்புகள்.
குத்து சண்டைன்னு நெனச்சா
"ரஸ்லிங்"ல நடக்குது

சிவா.ஜி
25-06-2010, 02:59 PM
ரொம்ப நன்றி நிவாஸ். தொடர்ந்து வாங்க.

அமரன்
25-06-2010, 05:54 PM
ஒரு சில உரையாடல்கள் தலைப்பை தொட்டுச் செல்வதாகப் படுகிறது.

மாவோயிஸ்டுகள் சொல்லுக்கு உங்கள் கதையில் எனக்கு விவரம் கிடைக்கும்..

அமரன்
25-06-2010, 05:56 PM
அதுசரி மதி, மால்டோவா, (டாவடிக்க மால்), அப்பறம் வேற ஒண்ணு சொன்னாரே ஹர் லைக்ஸ் (அதாங்க ஹார்லிக்ஸ்) அதெல்லாம் வேணும்னு சொன்னதை இன்னுமா புரிஞ்சிக்கலை.. அக்னி / அமரன் கூட ஒண்ணுமே சொல்லலியே. டியூஷன் பத்தலியோ?:icon_p::icon_p::icon_p:கொஞ்சம் டச் விட்டுப் போச்சுங்கண்ணா. அதை விட மதி வேறு எல்லா இடத்திலயும் சலிச்சுக்குறார் புலம்பலோட.. பாவம்ல புள்ள..

தாமரை
25-06-2010, 05:57 PM
நான் எப்போ இதெல்லாம் சொன்னேன்... இனிமே பொண்ண பாத்து காதலிக்க வச்சு.... கல்யாணம் பண்ணி... சரி... நேரடியா இமயமலைக்கு டிக்கட் போட்டுட வேண்டியது தான்..
நேரா சொன்னாலே தெரியாது.. இதுல சூசகமா வேற பேசுறேனாம்..

சொன்னேன் பார்த்தீங்களா... நித்யானந்தா கூட இமயமலையில்தான் தீட்சை வாங்கினாராம்.. தெரியுமோ...:icon_ush::icon_ush::icon_ush:

அமரன்
25-06-2010, 06:06 PM
சொன்னேன் பார்த்தீங்களா... நித்யானந்தா கூட இமயமலையில்தான் தீட்சை வாங்கினாராம்.. தெரியுமோ...:icon_ush::icon_ush::icon_ush:

ஹி...ஹி.... அப்பவும் உங்களுக்கு அம்பலப்படுத்தும் பதவிதான்..:lachen001:

செல்வா
25-06-2010, 07:37 PM
என்ன நுழைந்ததுமே... குண்டடியா?

பாவம் பாரி.. அடுத்து என்ன நடக்கப்போகுது அப்படிங்கிறதை எதிர்பார்க்க வச்சிட்டீங்க...

சீக்கிரம் கொடுங்க அடுத்த பாகத்தை.

தாமரை
26-06-2010, 01:23 AM
ஹி...ஹி.... அப்பவும் உங்களுக்கு அம்பலப்படுத்தும் பதவிதான்..:lachen001:

பலப்படுத்துவதும் "அம்"பலப்படுத்துவதும் சிஷ்ய கோ(கே)டிகள்தான்...

நான் அவனில்லை:icon_rollout:

சிவா.ஜி
26-06-2010, 05:37 AM
ஒரு சில உரையாடல்கள் தலைப்பை தொட்டுச் செல்வதாகப் படுகிறது.

மாவோயிஸ்டுகள் சொல்லுக்கு உங்கள் கதையில் எனக்கு விவரம் கிடைக்கும்..

கிடைக்கலாம் பாஸ். ரொம்ப நன்றி.

சிவா.ஜி
26-06-2010, 05:39 AM
என்ன செய்யறது செல்வா...நுழைஞ்சதுமே இப்படியாகிடிச்சே....

தொடர்ந்து வாங்க...தொடர்ந்து தாரேன்....நன்றி செல்வா.

கலையரசி
26-06-2010, 10:44 AM
கதை விறுவிறுப்பாகப் போகிறது. மாவோயிஸ்டுகளை வெறும் தீவிரவாதிகளாக அறிமுகப்படுத்தாமல் போராளிகளாக அறிமுகப்படுத்துவதற்கு என் முதல் பாராட்டு.
அவர்களது பிரச்சினைகளை விலாவாரியாக அலசாவிட்டாலும், ஓரளவுக்காகவது கதையின் மூலம் வெளிப்படுத்தினால், மாவோயிஸ்டுகளைத் தீவிரவாதிகளாக நினைப்பவர்க்குக் கொஞ்சம் விளக்கம் கிடைக்கும்.
காட்டு வழியே பயணம் துவங்குவதற்குள் பாரிக்குக் குண்டடி பட்டு விட்டது. சுவாரசியமாகவும் விறுவிறுப்பாகவும் கொண்டு செல்கிறீர்கள். நிறைய தகவல்களைச் சேகரித்திருக்கிறீர்கள். மிக்க பாராட்டு சிவா.ஜி. தொடருங்கள்.

கீதம்
26-06-2010, 11:25 AM
இந்த அத்தியாயத்தின் முதல் பத்தியே உங்கள் எழுத்தாளுமைக்கு சான்று. பயங்கரமான பயணத்தின் துவக்கத்திலேயே நம்ம கதாநாயகனுக்கு காலில் குண்டடி, மிகவும் கவலைப்படச் செய்கிறது. அந்தப் பெண்ணின் படம் அருமை. கண்முன்னே காட்சிகளைக் கொண்டுவருகிறீர்கள். மிகுந்த பாராட்டுகள் அண்ணா.

சிவா.ஜி
26-06-2010, 11:52 AM
ஆயுதமேந்திய போராளிகளெல்லாம் தீவிரவாதிகளாகத்தானே சித்தரிக்கப்படுகிறார்கள். அவர்களும் போராளிகள்தான் என்பதை நல்லமுறையில் வெளிப்படுத்தினால்...அனைவரும் அவர்களை ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் அவர்களது சூழ்நிலை...எப்படியோ...கொஞ்சமாய் உள்நுழைந்து பார்க்கவே இந்தக் கதை.

தங்கள் தொடர்ந்த ஊக்கத்திற்கு மிக்க நன்றி கலையரசி.

சிவா.ஜி
26-06-2010, 11:54 AM
பிடித்து எழுதியதை ரசித்து சொன்ன தங்கைக்கு மிக்க நன்றி. உள்ளே நுழைந்ததுமே குண்டடி பட வைத்ததற்கு காரணம் இருக்கிறது.

தொடர்ந்து வருவதற்கு நன்றி தங்கையே.

Nivas.T
26-06-2010, 11:54 AM
ஐயா!!!!!!! பசுமைவேட்டை....!!! அத்தியாயம் 7 உடனே போடுக்கையா????

சிவா.ஜி
26-06-2010, 12:09 PM
அய்யா நிவாஸய்யா....போட்டுடறோமய்யா....கொஞ்சம் பொறுத்துக்கோங்கய்யா...!!!

சிவா.ஜி
26-06-2010, 01:20 PM
அத்தியாயம்:7எதற்காகவாவது, யாராவது, யாரையாவது அவசரப்படுத்திக் கிளம்பச்சொன்னால், செய்துகொண்டிருக்கும், செய்யவேண்டிய, செய்ய நினைத்த எல்லாக் காரியங்களையும் செய்ய முடியாமலோ...அரைகுறையாகவோ செய்துவிட்டுக் கிளம்பிவிடுவதுதான் பெரும்பாலும் நடக்கும்.

வில்லாளிப்பெண் அவசரப்படுத்தியதில்...அங்கிருந்து ஓடி வந்துவிட்டானேத் தவிர, குண்டடியில் சதை பிய்ந்து கீழே விழுந்தவனை தூக்கிக்கொண்டு பள்ளத்துக்குள் இறங்கிய பிறகுதான் வலியையும் பொருட்படுத்தாமல், தான் செய்யவேண்டியதை செய்யாமலிருப்பதை உணர்ந்து, தன் பையிலிருந்து துணியை எடுத்து அடி பட்டிருந்த இடத்தை இறுக்கமாய்க் கட்டிக்கொண்டு...தன் காமிராவை எடுத்தான் பாரி. அவனது நோக்கம் தெரிந்ததும், ஜெய்ராம் தடுத்தான். ஆனால் பாரி...

"என்னத் தடுக்காத ஜெய்ராம்....நடக்கிற கொடுமையை படமெடுக்கனும்....ஒரு பத்திரிக்கையாளனா என் கடமையை செய்யவிடு. நான் வந்ததோட நோக்கமே இங்க என்ன நடக்குதுன்னு தெரிஞ்சிக்கறதுதான். என் கண்ணு முன்னால ஒரு தாக்குதல் நடக்குது...அப்பாவி மக்களோட குடிசையை எரிக்கறாங்க, கொல்றாங்க...இதை படமெடுக்கலைன்னா....என்னோட தொழிலுக்கு சரியில்லை. பயப்படாத...மேலேபோய்...ஒரு ஓரமா நின்னுப் படமெடுத்துட்டு வரேன்."

என்று சொல்லிவிட்டு, பையிலிருந்து வலிநிவாரணி மாத்திரை ஒன்றை எடுத்து விழுங்கிவிட்டு, ஜெய்ராம் தடுக்கத் தடுக்கக் கேட்காமல், காலைத் தாங்கியபடி மீண்டும் மேலேறினான்.

"பைய்னா...நானும் உங்களோட வரேன்"

என்று அவனுடன் சோட்டுவும் சேர்ந்துகொண்டான். பாரி தடுத்தும் கேட்காமல் அவனுக்கு முன்னால் வேகமாக மேலேறி நிலவரத்தைப் பார்த்தான். தன்னை முழுவதுமாக அந்த பள்ளத்திலிருந்து வெளிப்படுத்திக்கொள்ளாமல்..லேசாக தலையை மட்டும் தூக்கிப் பார்த்தான். அதற்குள் பாரியும் அங்கே வந்துவிட்டான். சோட்டுவின் பக்கத்தில் படுத்துக்கொண்டு அவனைப்போலவேப் பார்த்தான்.

அந்த சமவெளி புகைமயமாக இருந்தது. மலைவாழ் மக்கள் அலறிக்கொண்டு அங்குமிங்கும் ஓடினார்கள்.குடிசைகள் தீப்பற்றி எரிந்துகொண்டிருந்தன. இவர்கள் இருந்த திசை நோக்கி ஓடிவந்த ஒரு இளைஞன் பாதி வழியிலேயே குண்டு பட்டு சுருண்டு விழுந்தான். அவன் விழுந்ததும்தான்... அவனைப் போலவே பலரும் பள்ளத்தில் இறங்க வந்து குண்டடிப் பட்டு அங்கங்கே விழுந்திருந்தது தெரிந்தது. அம்புகளும், துப்பாக்கித் தோட்டாக்களும்...சீறிப் பாய்ந்து கொண்டிருந்தது. கிட்டத்தட்ட...25 பேர் இருந்த சல்வா ஜுடும் படையின் ஆட்களில் பாதிக்கு மேல் தரையில் விழுந்து கிடந்தார்கள்.

ஆனால்...மீதமுள்ளவர்கள் ஆக்ரோஷமாய் சுட்டுக்கொண்டிருந்தார்கள். சில புகைப்படங்களை எடுத்துக்கொண்ட பாரி, கேமராவை...அசைபடம் எடுக்கும் நிலைக்கு மாற்றி அங்கு நடப்பதை பதிவு செய்துகொண்டிருந்தான். போராளிகளின் துப்பாக்கிகளும் சீறிக்கொண்டிருந்தன. போராளிகளும் எண்ணிக்கையில் அதிகமாய் இருந்தார்கள். வில்லுடன் சில பெண்களும், மலைவாழ் இளைஞர்களும் பதில் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தார்கள்.

இதற்குள் வெளிச்சம் அதிகமாகிவிட்டிருந்தது. சூரியனின் ஒளியில் பாரியுடைய கேமராவின் கண்ணாடி பிரதிபலித்ததைப் பார்த்த யாரோ ஒரு சல்வா ஜூடும் படையைச் சேர்ந்தவன், அங்கிருந்து சரமாரியாகச் சுட்டான். சட்டென்று தலையை கீழே இழுத்துக்கொண்டதால் பாரியும், சோட்டுவும் தப்பினார்கள். அதே நேரம் ஒரு அலறலுடன் அந்தக் குண்டுமழை நின்றது. நிமிர்ந்துப் பார்த்தவர்களின் பார்வையில் அவர்களிருக்கும் இடத்துக்கு வெகு அருகில் வந்து, இறந்து விழுந்தவன் தெரிந்தான். அவனுக்குப் பின்னால் வில்லுடன் அந்தப் பெண் நின்று கொண்டிருந்தாள். இன்னும் சற்று தூரம் அவன் வந்திருந்தால் தங்கள் கதி என்னாகியிருக்குமென்று நினைத்த பாரி நன்றியோடு அந்தப் பெண்ணைப் பார்த்தான். அவள் சட்டென்று திரும்பி வில்லின் நாணை......விசையோடு இழுத்தாள். தூரத்தில் ஒருவன் சாய்வது தெரிந்தது. வெகு வேகமாக வலதுபுறம் திரும்பி, எரிந்து கொண்டிருந்த ஒரு குடிசையின் பக்கவாட்டு சுவருக்கு அருகில் போய் நின்றாள்.

சற்று நேரத்தில் அந்த இடத்தில், சடசடவென ஓலைகள் எரியும் சத்தமும், மூங்கில்கள் பிளக்கும் சடார்ச் சடாரென்ற சத்தமும், குழந்தைகளின் அழுகைச் சத்தமும், பெண்களின் கதறல் சத்தமும் மட்டுமேக் கேட்டது. மறைவிலிருந்து வெளியே வந்த அந்த வில்லாளிப் பெண், சுற்றிலும் பார்த்துவிட்டு, திருப்தியாய் தலையசைத்துக் கொண்டு இவர்களை நோக்கி வந்தாள். சோட்டுவை மேலே வரும்படி சொன்னாள். அவனிடம் எதையோ பேசினாள். சோட்டு பாரியிடம் வந்து,

"கீழேயே இருக்க வேண்டியதுதானே ஏன் மேலே வந்தீர்கள்...ஆபத்து இருக்கும்போது...என்ன வேண்டுமானாலும் நடந்திருக்குமே... என்று சொன்னாள்"

என்றான். இப்போது ஆபத்து நீங்கிவிட்டது தெரிந்ததும் பாரி மெள்ள கையை ஊன்றி மேலே வந்து..சமவெளியில் நின்று அந்த இடத்தையேப் பார்த்துக்கொண்டிருந்தான். அவர்கள் பின்னாலேயே இருந்த ஜெய்ராமும், சோட்டுவை அழைத்துக்கொண்டு வந்து பாரியுடன் நின்றான். மிஞ்சிய போராளிகளும், மலைவாழ் மக்களும் சற்று தொலைவில் ஒன்றாய்க் கூடினார்கள். அவர்களைச் சுற்றி இறந்தவர்களும், அடி பட்டவர்களும் கீழே கிடந்தார்கள். அவர்களை நோக்கி மூன்று பேரும் போனார்கள். அதற்குள் சிலர் அடி பட்டவர்களை அள்ளியெடுத்து ஓரமாய் கொண்டுபோய் எரியாமல் இருந்த சில குடிசைகளுக்குள் படுக்க வைத்தார்கள்.

முதல்முறையாக இந்த அழித்தொழிப்புப் படையினர் முழுவதுமாக கொல்லப்பட்டதாகச் சொன்னார்கள். அதற்கு பாரிக்கு நன்றி சொன்னார்கள். காரணம்...இவனை அழைத்துப்போகத் தான் 12 போராளிகளும் அங்கே வந்ததாகவும், தாக்குதல் நடக்க சாத்தியமிருப்பதாகத் தெரிந்ததால்தான் அத்தனைப்பேர் வந்ததாகவும் சொன்னார்கள். அவர்கள் வராமல் இருந்திருந்தால்...இங்கே யாரையும் உயிரோடோ.. அல்லது ஊனமில்லாமலோ பார்த்திருக்க முடியாது என்றும், புலியா(Buliya) தன் கிராமத்தில் இருக்கும் பெற்றோரைப் பார்க்க தங்களுடன் வந்ததாகவும், இப்போது அவளுடைய பெற்றோரும் இறந்துவிட்டதாகவும், குடிசைகள் பெரும்பாலும் தீக்கிரையாகிவிட்டதால்...மீண்டும் குடிசைகளைக் கட்ட வேண்டும் என்றும், அதுவரை சில போராளிகள் அங்கேயே தங்கியிருப்பார்கள் என்றும் அவர்கள் தெரிவித்ததைக் கேட்டதும், இத்தனை இழப்பிலும்...உறுதியாய் நின்று, அடுத்தக் கட்ட நடவடிக்கையை திட்டமிடும் அவர்களைப் பார்த்து வியந்தான். இந்த வில் வீராங்கனையின் பெயர் புலியாவா....நன்றி கலந்த பார்வையால் அவளைப் பார்த்தான்.

புலியா தன் பெற்றோர் இறந்த துக்கத்தைக் கொஞ்சமும் காட்டிக்கொள்ளாமல்....கண்களில் ஒரு சொட்டுக் கண்ணீரைக்கூட வழியவிடாமல் கம்பீரமாக நின்றிருந்தாள். அவளுக்கு ஏற்பட்ட இழப்புகளும், வலிகளும், வேதனைகளுமே அவளுக்கு இந்த உறுதியைக் கொடுத்திருக்க வேண்டும் என நினைத்துக்கொண்ட பாரி, அங்கிருந்த போராளிகளைப் பார்த்தான். அத்தனைப்பேரும்...இறுக்கமாய் இருந்தார்கள். அவர்களிடம் ஒரு கட்டுக்கோப்பு தெரிந்தது.

புலியா, பாரி தன்னைப் பார்ப்பதை கண்டதும் சட்டென்று பார்வையைக் கீழிறக்கியவள் பாரியின் கால் கட்டைப் பார்த்தாள். உடனே அதைக் காட்டி போராளிகளின் குழுத்தலைவனிடன் ஏதோ சொன்னாள். அவன்...தேபான்ஷூ பாசு, பாரியின் அருகே வந்து...கட்டை அவிழ்த்துப்பார்த்தான். துப்பாக்கித் தோட்டாவால்தான் அந்த சேதமென்று தெரிந்துகொண்டு,

"நல்லவேளை குண்டு உள்ளே இறங்கவில்லை..சதையை மட்டும் பிய்த்துக்கொண்டு போயிருக்கிறது. இவரை ஒரு குடிசைக்குக் கொண்டு போய் படுக்க வையுங்கள் நான் கொஞ்ச நேரத்தில் வருகிறேன்"

எனச் சொல்லிவிட்டு தன்னுடன் சில மலைவாழ் மக்களை அழைத்துக்கொண்டு அந்தப் பள்ளத்தில் இறங்கினான். கூடியிருந்தவர்களில் சிலர் பாரியை கைத்தாங்கலாக அழைத்துக்கொண்டு ஒரு குடிசைக்கு கொண்டுவந்தார்கள். அங்கிருந்த பழைய துணிகளையெல்லாம் சேர்த்து ஒரு படுக்கையாக்கி அதில் படுக்க வைத்தார்கள். கால்சட்டையை சுருட்டி தொடை வரை ஏற்றிவிட்டு காயத்தை ஆராய்ந்து...வெந்நீர் தயாரிக்கும்படி சொன்னார் ஒரு மூதாட்டி.

வெந்நீர் தயாரிக்கப்பட்டு, காயத்தை சுத்தப்படுத்தும்போது...வலிநிவாரணியால் கட்டுக்குள் இருந்த வலி...அந்த மாத்திரையின் வீரியத்தையும் தாண்டி வெளி வந்தது. பாரி லேசாய் முனகினான். அப்போது கையில் கொஞ்சம் பச்சிலைகளுடன் உள்ளே நுழைந்த தேபான்ஷூ, பாரிக்கு அருகில் வந்து அமர்ந்து...பச்சிலைகளைக் கசக்கிப் பிழிந்து சாற்றை காயத்தின் மேல் சொட்டுச் சொட்டாய் ஊற்றினான். எரிச்சலில் பாரி, காலை இழுத்துக்கொண்டான். தேபான்ஷூ காலை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு...அதே பச்சிலைகளை அந்தக் காயத்தின் மேல் வைத்து துணியால் கட்டினான்.

தேபான்ஷூக்கு நன்றி சொன்ன பாரி, ஜெய்ராமை அழைத்து, மலைவாழ் மக்களும், போராளிகளும் எத்தனைப்பேர் இறந்திருப்பார்கள் எனக் கேட்டான். ஜெய்ராம் சொல்வதற்குள் அவனை இடைமறித்து, போராளிகள் நான்கு பேரும், மலைவாழ் மக்கள் 16 பேரும் இறந்துவிட்டதாய் தேபான்ஷூ சொன்னான். சொல்லிவிட்டுத் தொடர்ந்து...

"கடந்த நான்கு வருடத்தில் முன்னூறுக்கும் மேற்பட்டக் கிராமங்கள் இந்தப் படையினரால் அழிக்கப்பட்டு...மூன்று லட்சத்துக்கும் அதிகமான மலைவாழ் மக்கள்...காடுகளுக்குள்ளே வெகு தொலைவுக்குத் துரத்தப்பட்டிருக்கிறார்கள். மாநில அரசுகளும், போலீஸுமே இந்தப் படையை உருவாக்கினார்கள். மலைவாழ் மக்களிடையே இருக்கும் இன வேறுபாடுகளைப் பயண்படுத்தி...அவர்களிலிருந்தே பலரைத் தேர்ந்தெடுத்து இந்தப் படையை உருவாக்கியிருக்கிறார்கள். ராணுவமும், போலீஸும்தான் இவர்களுக்குப் பயிற்சியளிக்கிறார்கள். இங்கேயுள்ள கனிமங்களை வெட்டியெடுக்கும் ஒப்பந்தம் போட்ட மிகப்பெரிய நிறுவனங்கள்தான் இவர்களுக்கு சம்பளம் கொடுக்கிறார்கள்...இவர்களை வைத்தே இவர்களை அழிக்கும் உத்தியைக் கையாளுகிறார்கள்.

இந்த அரசாங்கத்துக்கும், ஆங்கிலேய அரசாங்கத்துக்கும் என்ன வேறுபாடு...? நாம் சுதந்திரம் அடைந்துவிட்டோமா....இதோ இந்த மக்களும் இந்தியர்கள்தானே....இவர்கள் என்ன கேட்கிறார்கள்... தனிநாடா...இல்லையே....இருக்கும் இடத்திலேயே வாழவையுங்கள் என்றுதானே....அடிப்படை வசதிகளைக் கூட செய்து கொடுக்காதது மட்டுமல்லாமல், இந்தியா என்ற ஒரு நாடு உருவாதற்கு முன்பிருந்தே இந்த மண்ணில் இருக்கும் இவர்களை விரட்டப் பார்க்கிறார்கள். இந்தக் காட்டையும், மலையையும் தவிர வேறெதையும் அறியாத இவர்கள்...பாட்டன் முப்பாட்டன் வாழ்ந்த பூமியிலேயே எங்களையும் இருக்க அனுமதியுங்கள் எனக் கேட்கிறார்கள்....அது குற்றமா...?"

மெதுவாகப் பேச ஆரம்பித்து ஆவேசமாய் முடித்தான்.

பாரி லேசான மயக்கநிலையில் இருந்தான். தேபான்ஷூக்கு பதில் சொல்ல தலையை உயர்த்தி,

"நீங்கள் காட்டுக்குள் நடப்பதைப் பார்த்து, அனுபவித்து, ஆத்திரப்படுகிறீர்கள். உங்கள் கோபம் நியாயமானதுதான். ஆனால் நாட்டுக்குள் இருப்பவர்கள் என்ன நினைக்கிறார்கள் தெ...தெ..ரி...யு...மா......

கடைசி வார்த்தை சொல்வதற்குள் முழுக்க மயக்கமானான்.தொடரும்...

மதி
26-06-2010, 01:32 PM
அழிப்பு படையினரின் அட்டகாசத்தை கண்முன் கொண்டு வந்துவிட்டீர்கள். அந்த அளவுக்கு தத்றுபமான எழுத்து. மேற்கொண்டு என்னெல்லாம் நடக்குமோ என மனம் பதைக்கிறது.

மேலும் தொடருங்கள் அண்ணா..

பாரதி
26-06-2010, 02:34 PM
ஆயுதக்குழுக்களுக்கும் அரசிற்கும் இடையில் நடக்கும் மறைமுக/நேரடிப்போரை உருவகப்படுத்தி இருந்தது நன்று. காட்டில் இருப்பவர்கள் படும் இன்னல்கள் நாட்டிலிருப்போருக்கு தெரிவதில்லை; நாட்டிலிருப்போர் காட்டிலிருப்போரைப்பற்றி கவலை கொள்வதில்லை...ம்ம்... நிகழ்வும் நிஜமும் கதையின் போக்கை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பது தெளிவாகிறது.

எழுதுங்கள் சிவா.

Nivas.T
26-06-2010, 02:49 PM
காட்சிகள் அனைத்தும் கண்முன்னால்

தொடரட்டும் வேட்டை :icon_b:

சிவா.ஜி
26-06-2010, 03:15 PM
ரொம்ப நன்றி மதி.

சிவா.ஜி
26-06-2010, 03:18 PM
மிகச் சரியான கருத்து பாரதி. தொடர்ந்த உங்கள் ஊக்கத்துக்கும், கருத்துகளுக்கும் மிக்க நன்றி.

சிவா.ஜி
26-06-2010, 03:19 PM
நன்றி நிவாஸ்.

பா.ராஜேஷ்
26-06-2010, 06:03 PM
இரண்டு அத்தியாங்களையும் ஒன்றாக இன்று படித்தேன்... மிக நன்றாக எழுதி உள்ளீர்கள்... ஆங்கிலேயர்களை விட கொடுமையாக நடந்து கொள்வது வருத்தம் அளிக்கிறது... அடுத்து என்ன..??

அமரன்
26-06-2010, 07:06 PM
இன்னா இஸ்பீட்டு..

விரல்களை வைத்துக் கண்ணைக் குத்தும் சணக்கியம் (!!!!) வல்லாதிக்க அரசுகளின் கல்லாயுதம்.

அப்பாவி இளைஞர்களை மூளைச்சலவை செய்து நாசமாக்கும் தீவிர வாதிகளுக்கும் இப்படியான அரசுகளுக்கும் என்ன வேறுபாடு..? தீவிரவாதிகள் ஆக்கப்பட்ட போராளிகள்தான் அதிகம் உலகில்..

போராளிகள் ஆகாதவர்கள் ஆகிவிட்டனர். ஏன்.. எதுக்கு... என்று சிந்திக்கக் கூட நேரமில்லாமல் பொதுச்சேவையில் ஊறி விட்டார்கள் அரசியல் வாதிகள்.. எதிரித்துப் பாத்தாலே பெட்டிக்குள் கட்டும் கூட்டம் நம்மில் பெருகி விட்ட நிலையில் இதை விட வேறென்ன எதிர்பார்க்க முடியும் நம்மால்....

கத்தி விளிம்பு கருத்தியல் கோட்பாட்டில் கதையின் இடையான தூவல்கள்.

காட்சி வர்ணிப்புகள் கச்சிதம்..

தொடருங்கள் சிவா...

நாட்டுல ஒருத்தி.... காட்டுல ஒருத்தி... கொடுத்து வைச்சன்பா பாரி... இல்லையா மதி...

govindh
26-06-2010, 11:43 PM
போராளிகளின் ஆதங்கத்தைப் புரிய வைத்து விட்டீர்கள்....!
தொடரட்டும் உங்கள் வேட்டை...!

கீதம்
27-06-2010, 01:30 AM
போராளிகளுடன் எங்களையும் பயணிக்கவைத்து அவர்களுடைய போராட்ட வாழ்க்கையை அறியச்செய்யும் உங்கள் முயற்சி பாராட்டுக்குரியது. புலியா ஒரு வீரப்பெண் என்பதை நிருபித்துவிட்டாள். தொடரட்டும் உங்கள் பயணம். தொடர்வோம் நாங்களும்.

கலையரசி
27-06-2010, 05:14 AM
புலியா தீரத்துடன் போரிட்டு ஒரு பெண் புலியாக படிப்போர் மனதில் உயர்ந்து நிற்கிறாள். பொருத்தமான பெயரைச் சூட்டியுள்ளீர்கள். அடுத்தடுத்து வரும் சோகங்களும், இழப்புக்களும், வேதனைகளும் எதையும் தாங்கும் இதயத்தை அவளுக்கு அளித்து விட்டது போலும்.

தாராளமயமாக்கல் என்ற பெயரில் பன்னாட்டு கம்பெனிகளை நாட்டுக்குள் அனுமதித்து அவைகள் பூர்வீக மக்களின் வாழ்வாதாரங்களைச் சுரண்டும் பணி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது. வெள்ளையர்கள் கையாண்ட பிரித்தாளும் சூழ்ச்சியையே நம் அரசும் கையாள்கிறது.
"இந்த அரசாங்கத்துக்கும், ஆங்கிலேய அரசாங்கத்துக்கும் என்ன வேறுபாடு...?" சிந்திக்க வைக்கும் கேள்வி.

குண்டடி பட்ட போதிலும் தான் நினைத்த காரியத்தில் கண்ணுங்கருத்துமாக இருந்து தான் கண்ட காட்சிகளைப் புகைப்படம் எடுத்து விட்டான் பாரி.
கதை அருமையாகப் போகிறது. தொடருங்கள் சிவா.ஜி.

சிவா.ஜி
27-06-2010, 05:36 AM
நன்றி ராஜேஷ். அடுத்து...எட்டாவது அத்தியாயம்தான்....ஹி...ஹி...

சிவா.ஜி
27-06-2010, 05:40 AM
உண்மைதான் பாஸ். ஏன் போராளிகள் உருவாகிறார்கள்.....என்னைப் பொருத்தவரை போராளிகள் உருவாவதில்லை....உருவாக்கப்படுகிறார்கள். சுதந்திரம் வேண்டிப் போராடியவர்களும் போராளிகள்தான்...அவர்கள் அஹிம்சையை கையிலெடுத்ததால் தலைவர்கள்...ஆயுதத்தைக் கையிலெடுத்தால் தீவிரவாதிகள்.

அவர்களின் கையில் ஆயுதத்தை திணித்தவர்கள் யார்...?

நியாயப்படுத்த விரும்பாமல்...இருபக்கத்தையும் பார்ப்பதே கதையின் நோக்கம்.
உடன் வருவதற்கு மிக்க நன்றி அமரன்ஜி

சிவா.ஜி
27-06-2010, 05:42 AM
மிக்க நன்றி கோவிந்த்.

சிவா.ஜி
27-06-2010, 05:45 AM
புலியாவைப் போல தீரத்துடன் இருக்கும் பல பெண்கள் அங்கே போராடுகிறார்கள் கீதம். கேரளத்தில் ஒரு அஜிதாவைப் போல தன் சொந்த வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டவர்கள் அநேகம் பேர்.

தொடர்ந்த ஊக்கத்திற்கு மிக்க நன்றி தங்கையே.

சிவா.ஜி
27-06-2010, 05:48 AM
ஆமாங்க கலையரசி....இழப்புகளும் சோதனைகளும் மென்மையான பெண்ணிதயத்தைக் கூட பாறாங்கல்லாக்கிவிடும்.

நமக்குச் சொந்தமான வளங்கள்...நமக்குப் பயணளிக்காமல்...யாருக்கோ சென்று சேர்வதை...1947க்கு முன்னால் நம்மால் தடுக்க முடியவில்லை. ஆனால் இப்போது தடுக்க உரிமையிருக்கிறது என்றாலும்....இடைத்தரகர்களாய்..நாம் தேர்ந்தெடுத்த அரசாங்கமே இருக்கும்போது....எதையும் செய்ய இயலா நிலையில் இருக்கிறோம்.

பின்னூட்டக் கருத்துக்கு மிக்க நன்றிங்க சகோதரி.

செல்வா
27-06-2010, 07:32 AM
அதிரடியா ஒரு சண்டைய முடிச்சிட்டீங்க. குண்டடி பட்டிருந்தாலும் கவலைப்படாம வந்த வேலையை கவனிக்கிற பாரி பாவம் மயங்கி விழுந்துட்டானே. சரி சரி மயக்கம் தானே... தெளிஞ்சப்புறம் இன்னும் என்னென்ன நடக்கப்போகுதோ.. பாக்கலாம். புலியா புலியய்யா.... :)

தொடருங்கள் அண்ணா....

செல்வா
27-06-2010, 07:34 AM
எதிரித்துப்
வைச்சன்பா

என்ன இதெல்லாம் :confused:

சிவா.ஜி
27-06-2010, 09:04 AM
மயக்கம்தான்...பின்ன அவ்ளோ சீக்கிரம் நாயகனை காலியாக்கிடுவமா....பாரி செய்ய வேண்டிய பாரியக் காரியங்கள் இன்னும் எவ்வளவோ இருக்கு...!!!

தொடரூக்கத்துக்கு நன்றி செல்வா.

அன்புரசிகன்
28-06-2010, 04:59 AM
கதையில் வரும் பாத்திரங்களை நன்றாகவே உணரமுடிகிறது. ஒரு போராளி எப்படி உருவாக்கப்படுகிறான் என்பதை உங்கள் எழுத்து திறம்பட சித்தரிக்கிறது. தொடருங்கள் அண்ணா... அங்கு நடக்கவிருக்கும் வீர சாகசங்களை காவியமாக உங்கள் எழுத்தினூடு காண ஆவல்.

சிவா.ஜி
28-06-2010, 05:44 AM
ஆமாம் அன்பு...போராளிகள் உருவாவதில்லை...உருவாக்கப்ப்டுகிறார்கள் என்பதுதான் நிஜம். அதற்குப் பின்னால் பல காரணங்களும், மனிதர்களும் இருக்கிறார்கள்.

உடன் வருவதற்கு மிக்க நன்றிகள்.

சிவா.ஜி
28-06-2010, 04:56 PM
அத்தியாயம்:8


பெருங்கூட்டமொன்றில் சிக்கிக் கொண்டதும், திடீரென்று ஏற்பட்ட அமளியில்...கூட்டம் தாறுமாறாய் அங்குமிங்கும் ஓடுகிறது. பாரியை சடாரென்று சிலபேர் தூக்கி தலைக்கு மேல் பந்தாடுகிறார்கள். உடல் மேலும் கீழுமாய், சர்க்கஸில் கட்டப்பட்ட பெரிய வலையில் விழுந்த பபூனைப்போல துள்ளுகிறது...இதே துள்ளலுடன்...அந்த மனிதக்கூட்டத்தின் மேலாகவே அவனது நகர்தல் நிகழ்கிறது...சட்டென்று கண்களை விழித்துப்பார்த்த பாரி...ஒரு கட்டிலின் மேல் படுத்திருந்தான்.

நான்கு பேர் அதனை சுமந்துகொண்டு மேடு பள்ளங்களில் ஏறியிறங்கி நடந்துகொண்டிருந்தார்கள். தலையை உயர்த்திப் பார்த்தவனின் மங்கலான பார்வையில் வலது புறமாய் நடந்து வந்துகொண்டிருந்த ஜெய்ராம் தெரிந்தான். கண்களைக் கசக்கிக்கொண்டு பார்த்தான். சுற்றிலும், போராளிகளும், மலைவாழ் மக்களும் தலையிலும், கையிலும் மூட்டை முடிச்சுக்களுடன், நடந்து வந்துகொண்டிருந்தார்கள். படுத்திருந்த நிலையிலேயே கையை நீட்டி ஜெய்ராமைத் தொட்டான். திடுக்கிட்டுத் திரும்பிப்பார்த்த ஜெய்ராம், பாரியைப் பார்த்ததும் புன்னகைத்தான்.

"அப்படியே படுத்துக்க...இன்னும் கொஞ்ச தூரம்தான் நாம இன்னொரு கிராமத்துக்குப் போயிடலாம்."

என்றதும்,

"ச்சே என்னடா இது...எறக்கிவிடச் சொல்லுடா...நான் நடந்தே வரேன்...எனக்கு என்னமோ மாதிரி இருக்கு....கிருஷ்ணாம்பேட்டைக்குப் போற மாதிரியே இருக்குடா...ப்ளீஸ் இவங்களை நிக்கச் சொல்லு.."

என்று சொல்லிவிட்டு...எழ முயன்றவன்..சுரீரென்று காலில் தோன்றிய வலி மூளையைத் தாக்கியதும்...'அம்மா' என்று முனகினான்.

"பாத்தியா...வலி இன்னும் குறையல. இந்த நெலைமையில நடந்து வராறாமாம்...பேசாம படுடா...இன்னும் கொஞ்சதூரம்தான்...போயிடலாம்...இவங்க எல்லாம் உறுதியானவங்க...இதைவிட பெரிய பாரத்தைத் தூக்கிட்டு அசால்ட்டா...இந்த மலைப்பாதையில நடப்பாங்க."

பாரிக்கும் தன்னால் அப்போது நடக்க இயலாது எனத் தெரிந்ததால்...ஒருக்களித்துப் படுத்துக்கொண்டு...ஜெய்ராமோடு பேசிக்கொண்டே வரலாமென தலையை அவன் பக்கமாய் வைத்துக்கொண்டான். கையை தலைக்கு முட்டுக்கொடுத்து சற்ரு உயர்த்தி வைத்துக்கொண்டான். இவன் எழுந்துவிட்டதைப் பார்த்ததும்...சோட்டு ஓடி வந்து....

"பைய்னா வலி எப்படி இருக்கு?'

என ஹிந்தியில் கேட்டதும், இன்னும் குறையவில்லை என்று சொன்னான். சோட்டுவின் உயரத்துக்கு பாரியின் முகத்தை, அருகிலிருந்து பார்க்க முடியவில்லை எம்பி எம்பிப் பார்த்தவன்...ஜெய்ராமுக்கு பக்கத்தில் போய் நின்று கொண்டு அங்கிருந்து பாரியைப் பார்த்து,

"ஃபிகர் மத் கரோ பைய்னா...அந்தக் கிராமத்துக்குப் போய் ஓய்வெடுத்துக்கிட்டா...ரெண்டுநாள்ல சரியாயிடும்"

என்றதும், ஜெய்ராம் அவனுடைய தலையைச் செல்லமாய் தட்டி,

"சோட்டு எம்.பி.பி எஸ் சொல்றாரு...சரியாப்போயிடும்...."

சிரித்துக்கொண்டே அவனையறியாமல் ஹிந்தியில் சொன்ன ஜெய்ராமைப் பார்த்து,

"நொன்னா( ஒரிய வழக்கு மொழியில் அண்ணா) நான் டாக்டருக்குப் படிச்சிருந்தா....இங்கையே இருந்து இவங்களுக்கெல்லாம் வைத்தியம் பாத்திருப்பேன்..."

கேட்டதும் ஜெய்ராம்...அமைதியானான். பாரிக்கு அவர்கள் பேசிய

ஒரியமொழி விளங்கவில்லை. ஜெய்ராமைப் பார்த்து,

"நான் மயக்கமாயிட்டேனா....தெளிஞ்சப்பறம் கூட்டிக்கிட்டு வந்திருக்கலாமில்ல...இப்ப நாம போகப்போற கிராமம் எங்க இருக்கு...இவங்க எல்லாம் ஏன் நம்மக் கூடவே வராங்க...தேபான்ஷூ சொன்னாரே அவங்க ஆளுங்களும் கொஞ்சம் பேர் அங்கேயே இருந்து குடிசையெல்லாம் கட்டிக் குடுக்கறதுக்கு உதவப் போறதா...?"

"மொதல்ல அப்படித்தான் நெனைச்சாங்க. ஆனா...இந்தத் தாக்குதல்ல சல்வா ஜூடும் ஆளுங்களுக்கு நிறைய சேதமாயிட்டதால...அவங்க இன்னொரு பெரிய தாக்குதலைக் கண்டிப்பா நடத்துவாங்க...அதனால...அந்த மக்களெல்லாம் அங்க இருக்க விருப்பப்படல....மிச்சம் இருக்கிற உயிர்களையாவது காப்பாத்திக்கனுன்னுதான் எங்களோடவே இன்னொரு கிராமத்துக்கு வராங்க....இப்படி பொழச்ச இடத்தை விட்டுட்டு நாடோடிகளா திரியுறது இந்த எட்டு பத்து வருஷமா...இவங்களோட தலைவிதி...என்ன செய்யறது"

அவனோடு பேசிக்கொண்டே வந்த பாரியின் கண்களில் அந்த இடம் தென்பட்டது. சமவெளியாய் இருந்தது. அங்கிருந்த மரங்களெல்லாம் எரிக்கப்பட்டு, அந்த பகுதி முழுவதும் சாம்பல் நிறைந்திருந்தது...

"என்னடா ஜெய்ராம்...இது...இவ்ளோ மரங்களை எரிச்சிருக்காங்க...யார் செஞ்சது இதை...?"

கேட்டப் பாரியைப் பார்த்து,

"இங்க இருக்கிற சில* மலைவாழ் மக்கள்தான் இதை எரிச்சிருக்காங்க..."

"என்னடா சொல்ற....மரங்களையும், மலையையும் காப்பாத்தறதுக்குத்தானே இவங்க இவ்வளவு பாடு படறாங்க...அவங்களே எரிச்சிருக்காங்களா...ஏண்டா"

சிரித்துக்கொண்டே...

"இது ஜுவாங்கா, பரியான், சவேரா, துருவா, போன்டா அப்படீங்கற
பழங்குடி இனத்துக்காரங்க விவசாயம் செய்யுற முறைடா. இதுக்கு "போடுசாஸ்" அப்படீன்னு பேரு. இது இவங்களோட பழைய விவசாய முறை. மரங்களை எரிச்சு, அந்த சாம்பலிலேயே விவசாயம் செய்வாங்க. ஒரு மழை வந்ததும்...இந்த சாம்பலெல்லாம்..மண்ணோடக் கரைஞ்சி..உரமாயிடும்"

"அப்ப இவங்க மட்டும் இவங்க தேவைகளுக்காக மரங்களை வெட்டலாமா..."

"என்னடா பேசற நீ...இது இயற்கை முறை...இதனால காடு அழியாது. அதுவுமில்லாம...காலங்காலமா இப்படித்தான் செஞ்சுக்கிட்டு வராங்க...இருந்தும் இந்தக் காட்டோட அடர்த்தியைப் பாத்தியா....குறைஞ்சிருக்கா...ஆனா....ஃபேக்டரி கட்டறதுக்காக காட்டையழிச்சி, ரோடு போடறதுக்காக...மரங்களை வெட்டி...அவங்க ஏற்படுத்தியிருக்கிற இடங்களைப் போய் பாரு...கண்ணீர் வரும். கோழி மிதிச்சி குஞ்சு சாகாது...ஆனா...பருந்து வந்தா என்ன ஆகும்....?"

பாரி மறக்காமல்...தன் கேமிராவில் அந்த பகுதியை சுட்டுக்கொண்டான்.


பேசிக்கொண்டே வந்தவர்கள்...ஒரு மேட்டில் ஏறி சமவெளிக்கு வந்ததும்...அங்கே பல குடிசைகளுடன் ஒரு கிராமம் தெரிந்தது. அது முன்பு பார்த்தக் கிராமத்தைவிட பெரிதாய் இருந்தது. காட்டு ஆடுகளும், கோழி, சேவல்களும் இருந்தது. இவர்களைப் பார்த்ததும்...சிலர்...ஓடி வந்தார்கள்..ஒருவரையொருவர் விசாரித்துக்கொண்டார்கள்...அதற்குள் பலர் ஓடி வந்து...தலைச் சுமையையும், கைச்சுமையையும் வாங்கிக்கொண்டார்கள்.

பாரியை ஒரு குடிசைக்கு முன் சென்று இறக்கி வைத்து..கைத்தாங்கலாகப் பிடித்துக் குடிசைக்குள் சென்று ஒரு பாயில் படுக்க வைத்தார்கள். புலியா கையில் சின்னத் துணி மூட்டையை எடுத்துக்கொண்டு வந்து பாரியின் அடிபட்டக் காலை லேசாய்த் தூக்கி..துணிமூட்டையைக் கீழே வைத்து...மெள்ள காலை அதன் மீது படுக்க வைத்தாள்.

அவளுக்கு ஹிந்தி தெரியுமா...தெரியாதா எனக் குழம்பி...பின் ஹிந்தியிலேயே...

"ரொம்ப நன்றி புலியா" என்றான்.

மெல்ல அவனை நிமிர்ந்துப் பார்த்த புலியா...

"பரவால்லண்ணா....நீங்க எங்க விருந்தினர். எங்களைப் பாக்க வந்து..இப்படியாகிடிச்சேன்னு வருத்தமா இருக்கு. ஓய்வெடுத்துக்குங்க...நான் உங்களுக்கு டீ போட்டு எடுத்துக்கிட்டு வரேன்"

என்று ஹிந்தியில் சொல்லிவிட்டு குடிசையிலிருந்து வெளியேறினாள்.
தொடரும்...

பாரதி
28-06-2010, 05:34 PM
சிவா.... இக்கதையின் தலைப்பு ஏன் என்று இன்று காலை எனக்கு விளங்கிற்று. அரசாங்கம் வெறுமனே பணம் படைத்தவர்களின் வேலையாள் என்பது ஓரளவு உண்மைதான் எனத் தோன்றுகிறது. பல பழங்குடியினரின் பெயர்கள், வாழ்க்கை நடத்தும் முறை ஆகியவற்றிற்காக நீங்கள் சேகரம் செய்ய எடுத்திருக்கும் சிரமம் புலனாகிறது. கதையிலும், உண்மையிலும் நல்லது நடக்கட்டும். தொடருங்கள் சிவா.

பா.ராஜேஷ்
28-06-2010, 09:13 PM
எவ்ளோ செய்திகள் சேகரம் செய்திருக்கிறீர்கள்... எங்களுக்கு தெரியப் படுத்த நீங்க மேற்கொண்ட முயற்சிகளுக்கு மிக்க நன்றி அண்ணா... பசுமை வேட்டை தொடரட்டும்...

அமரன்
28-06-2010, 09:35 PM
கதையை உணர முடிகிறது சிவா.

தொடருங்க.

கீதம்
28-06-2010, 09:50 PM
குண்டடிபட்ட நிலையிலும் தன் காரியத்தில் கண்ணாயிருந்து அவ்வப்போது கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி புகைப்படம் எடுக்கும் பாரியை நினைத்து வியக்காமல் இருக்கமுடியவில்லை. அந்தப் போராளிகளுக்குள்ளிருக்கும் மனிதாபிமானம் மெய்சிலிர்க்கச் செய்கிறது. விரைவில் குணமாகித் தொடரட்டும், பாரியின் பயணம். இதற்கான உங்கள் உழைப்பை பெரிதும் பாராட்டுகிறேன், அண்ணா.

govindh
28-06-2010, 11:46 PM
பாரியின் பயணம் வெற்றி பெறட்டும்...
தொடருங்கள்.....தொடர்ந்து வருகிறோம்....

அன்புரசிகன்
29-06-2010, 12:35 AM
இந்த அத்தியாயத்தினை படித்ததும் நம் பழைய நினைவுகள் பல நிழலாடுகின்றன... 1987 இலிருந்து 1998 வரை நாம் அங்குமிங்கும் இடம்பெயர்ந்த நினைவுகள்... அதிலும் மோசமாக இருந்திருக்கும் அண்மைய வன்னி மக்களின் இடம்பெயர்வுகள். எதிரிக்குக்கூட இப்படியான வலிகள் வரக்கூடாதென்று சிலநேரங்களில் நினைப்பேன்... உண்மையில் அந்த மக்களின் மனம் மரத்துப்போயிருக்கும்.
தொடருங்கள் அண்ணா... நிச்சயம் பாரிக்கு இது புது அனுபவமாகவே இருக்கும்.

மதி
29-06-2010, 02:59 AM
அழகாய் பயணிக்கிறது கதை..பாரியின் கூடவே நாங்களும் பயணிக்கிற உணர்வு.. மலைவாழ்மக்களின் வாழ்வு முறையைத் தந்தவிதமும் அருமை.. உழைப்பு தெரிகிறது.. சீக்கிரம் தொடருங்கள்..!

சிவா.ஜி
29-06-2010, 05:23 AM
எப்போதும்போல பின்னூட்டமிட்டு ஊக்குவிக்கும் அன்பு பாரதி, அன்புத்தம்பி ராஜேஷ், அன்பு அமரன், அன்புத்தங்கை கீதம், அன்பு கோவிந்த், அன்பின் ரசிகன், அன்பான தம்பி மதி அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றிகள்.

அன்பு உங்கள் உணர்வுகளை புரிந்துகொள்ள முடிகிறது. நாட்டின் நிலைமை சரியில்லாதபோது, உயிருக்கே உத்திரவாதமில்லாத போது...ஏற்படும் பதட்ட*ச்சூழலில் அங்குமிங்கும் அலைந்து உயிர் காப்பாற்றிக்கொள்ளும் அவலத்தை நினைத்து மனம் வலிக்கிறது.

பாரதி சொன்னதைப் போல நல்லதே நடக்கட்டும்.

அமரன்
29-06-2010, 05:38 AM
அன்பு...

நீங்கள் சொல்வதைத்தான் உணரமுடிகிறது என்ற ஒரு சொல்லில் சொன்னேன்.

செல்வா
29-06-2010, 07:04 AM
மனதைக் கீறிப் பயணிக்கிறது கதை... நிகழ்வையும் புனைவையும் இணைத்து.

தொடருங்கள் அண்ணா....!

செல்வா
29-06-2010, 07:07 AM
அன்பு...

நீங்கள் சொல்வதைத்தான் உணரமுடிகிறது என்ற ஒரு சொல்லில் சொன்னேன்.

உணரமுடிவதைப் புரிஞ்சுக்க முடியாமச் சொல்லி என்ன பிரயோசனம்... நல்லா யோசிச்சுப்பாரு.

சிவா.ஜி
29-06-2010, 09:12 AM
ரொம்ப நன்றி செல்வா.

சிவா.ஜி
29-06-2010, 09:14 AM
உணரமுடிவதைப் புரிஞ்சுக்க முடியாமச் சொல்லி என்ன பிரயோசனம்... நல்லா யோசிச்சுப்பாரு.

ஏன்....ஏன்....இப்புடி....????:sauer028:

தாமரை
29-06-2010, 12:55 PM
எப்போதும்போல பின்னூட்டமிட்டு ஊக்குவிக்கும்.


உணரமுடிவதைப் புரிஞ்சுக்க முடியாமச் சொல்லி என்ன பிரயோசனம்... நல்லா யோசிச்சுப்பாரு.


ஏன்....ஏன்....இப்புடி....????:sauer028:

கொஞ்சம் மாத்தி எப்போதும் போல இல்லாமல் புதுசா பின்னூட்டமிட்டு இருக்காரு...

அதான் இப்பூடி....

(என்ன இருந்தாலும் பாதிப் பேர் இருக்குல்ல...)

பாவம்பா பாரி.. இப்படி ஓட ஓட அடிக்கிறாரே சிவா.ஜி...

சிவா.ஜி
29-06-2010, 02:29 PM
பின்ன காட்டுக்குள்ள...அதுவும் பத்தி எரியுற பிரச்சனைகள் இருக்கும்போது போனா...அப்படித்தான்....

அம'ரன்' மாத்தி யோசிச்சுப் போட்ட பின்னூட்டத்துக்கு....செல்வா கேட்டக் கேள்வி...உங்கப் பழையப் பதிவை நினைவு படுத்திருச்சு தாமரை.

Nivas.T
30-06-2010, 09:44 AM
இயற்கை விவசாய முறைக்கும் செயர்க்கை விவசாய முறைக்கும் உள்ள வித்தியாசம் வானத்துக்கும் பூமிக்கும் உள்ள தொலைவு ஆகும்

வேட்டை தொடர்கிறது! கதையோடு அற்புதமான விஷயங்கள் ! நன்றி அண்ணா

சிவா.ஜி
30-06-2010, 10:04 AM
பின்னூட்ட ஊக்கத்திற்கு ரொம்ப நன்றி நிவாஸ்.

சுடர்விழி
30-06-2010, 01:28 PM
8 அத்தியாயத்தையும் இன்று தான் படித்தேன்....என்ன வேகம்!!!!! காட்டுக்குள் நானும் பயணிப்பது போல் உணர்ந்தேன்.கனமான கதைக்களம்....விறுவிறுப்புடன் போகிறது கதை....வாழ்த்துக்கள்..

கலையரசி
30-06-2010, 01:30 PM
மலை வாழ் மக்களின் வேளாண் முறை நான் இதுவரை கேள்விப்படாத செய்தி.
போராளிகளைப்பற்றியும் அம்மக்களின் புலம் பெயர்தல் பற்றியும் படிக்கும் போது நம் ஈழச் ச்கோதரர்களின் வலியையும் வேதனையையும் நினைத்து மனம் கனக்கத் தான் செய்கிறது.
பசுமை வேட்டை மிகவும் சரியான தலைப்பு. பாரி விரைவில் நலம் பெறட்டும். பாரியை நாங்களும் தொடர்கிறோம்.

சிவா.ஜி
30-06-2010, 02:42 PM
எட்டு அத்தியாயங்களையும் ஒருசேரப் படித்து, ஊக்கமளிக்கும் பின்னூட்டமிட்டமைக்கு மிக்க நன்றி சுடர்விழி. தொடர்ந்து வாருங்கள்.

சிவா.ஜி
30-06-2010, 02:44 PM
எனக்கும் அந்த வேளான்முறை புதிதுதாங்க கலையரசி. மலைவாழ் மக்களின் வாழ்வியல் முறைகளைத் தேடிப் படித்துக்கொண்டிருக்கும்போது கிடைத்தது. இன்னும் சில சுவாரசியமான தகவல்கள் இருக்கின்றன....கதையோடு அவற்றையும் தருகிறேன்.

தொடர்ந்த உங்கள் ஊக்கத்துக்கு மிக்க நன்றி சகோதரி.

சிவா.ஜி
02-07-2010, 03:59 PM
அத்தியாயம்:9


புலியா குடிசையை விட்டுப் போனதும் சற்று நேரத்தில் சோட்டுவும், ஜெய்ராமும்...பாரியின் அருகில் வந்து அமர்ந்தார்கள்.

"பசிக்குதா பாரி?"

"ஆமாடா....என்கிட்டக் கொஞ்சம் பிஸ்கட் இருக்கு...இரு சாப்பிடலாம்"

"கொஞ்சம் வெயிட் பண்ணு....சாப்பாடு ரெடியாகிடிச்சு...கொண்டு வருவாங்க"
பாரியைத்தடுத்து ஜெய்ராம் சொன்னதும்,

"நாமெல்லாம் வரப்போறோம்ன்னு இவங்களுக்கு எப்படி தெரிஞ்சுது...? எப்படி தகவல் சொல்லிக்கிறீங்க"

"இங்க என்ன செல்போனா இருக்கு. எல்லாம் ஆளுங்கதான். நாம அங்கருந்து கிளம்பறதுக்கு முன்னாலேயே ஒரு ஆள் கிட்ட சொல்லியனுப்பிட்டோம். அவன் இங்க வந்து சொன்னதும்...இங்கருந்து ஒருத்தன் இன்னொரு கிராமத்துக்குப் போவான்...அங்கருந்து இன்னொருத்தன் அடுத்த கிராமம்...இப்படித்தான் ஒரு இடத்துல தாக்குதல் நடந்தாலோ...வேற ஏதாவது செய்தியை பரிமாறிக்கறதுன்னாவோ..தகவல் போகும்."

"அப்ப நான் இங்க வந்திருக்கறதுகூட எல்லாருக்கும் தெரியுமா?"

"ம்..தெரியும். உனக்கு கால்ல அடி பட்டிருக்கலன்னா..இந்நேரம் நாம அடுத்த கிராமத்துல இருந்திருப்போம். இந்த ஏரியாவோட கமாண்டர் அங்க இருக்காரு. உனக்கு வெச்சுக் கட்டியிருக்கிற மருந்து ரொம்ப பவர்ஃபுல். நாளைக்கே உனக்கு வித்தியாசம் தெரியும் பாரு. நாளான்னைக்கு அந்தக் கிராமத்துக்குப் போலாம். அங்க நீ பேட்டியெடுக்க வேண்டியதை எடுத்துக்கிட்டு...அந்தப் பக்கமா இறங்கினா....துணை ராணுவத்தோட நடமாட்டம் அதிகமில்லாத ஒரு பகுதிக்குப் போயி...பஸ்ஸுல பக்கத்து ரயில்வே ஸ்டேஷனுக்குப் போயிடலாம்."

"இல்லடா...எனக்கு அவ்ளோ சீக்கிரமா போக வேணாம்...இன்னும் கொஞ்சநாள் உங்களோட இருக்கனும்...நிறைய தெரிஞ்சிக்கனும்...."

"மத்த சமயமா இருந்தா பரவால்லடா....இப்ப பத்திக்கிட்டு எரியுது. நாம இருக்கிற இந்த நியம்கிரி மலைதான் இன்னைக்கு நம்ம மத்திய அரசாங்கத்தோட முக்கியமான டார்கெட். ஏற்கனவே வேதாந்தா கம்பெனி கூட புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டாச்சு. நாலு லட்சம் கோடிக்கு. அதனாலத்தால் கூடுதல் ஃபோர்ஸை அனுப்பியிருக்காங்க...சல்வாஜூடும் குரூப்லயும் நிறைய பேரை அவசர அவசரமா சேக்கறதா தகவல் வந்திருக்கு...அவங்களோட ஆக்ரோஷமான தாக்குதல் நிறைய நடக்க சான்ஸ் இருக்கு...எனக்கு உன்னையும் இந்த ஆபத்துல சிக்க வைக்க விருப்பமில்ல..."

"இத்தனை அப்பாவி மக்களும் அதே ஆபத்துலதான தினமும் வாழ்ந்துகிட்டும், செத்துக்கிட்டும் இருக்காங்க...எனக்கு ஒண்ணும் ஆகாதுடா...அதான் நீங்கள்ளாம் இருக்கீங்களே....பாத்துக்கலாம்"

அப்போது உள்ளே நுழைந்த தேபான்ஷு....ஜெய்ராமை பார்த்து,

"என்ன சொல்றார் உங்க பத்திரிக்கையாளர் நண்பர்?"

என்றதும், சுருக்கமாய் அவர்கள் பேசியதை சொன்னான். அமைதியாய் கேட்டுக்கொண்டிருந்த தேபான்ஷூ...பாரியைப் பார்த்து ஆங்கிலத்தில்,

"உங்கள் தைரியத்தைப் பாராட்டுகிறேன். ஆனால்...ஜெய்ராம் சொன்னதைப் போல இது தகுந்த சமயமில்லை. உங்களைப் பாதுகாக்க நாங்கள் கூடுதலாய் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். காலையில் பார்த்தீர்களே தாக்குதல்...அதைவிடக் கொடுமையானத் தாக்குதல்கள் நடைபெறும். சமாளிப்பது சிரமம். சோட்டு....சொந்தியை கூட்டிக்கிட்டு வா...(ஹிந்தியில் அவனிடம் சொல்லிவிட்டு) இதோ சோட்டு அழைத்துக் கொண்டு வரும் சிறுமியைப் பாருங்கள்....சல்வாஜூடும் ஆட்களின் மிருகத்தனத்தை தெரிந்துகொள்வீர்கள்"

சில நிமிடக் காத்திருத்தலுக்குப் பிறகு அந்தச் சின்னப் பெண்ணை அழைத்துக்கொண்டு வந்தான் சோட்டு. அவளை அருகில் அழைத்து இடது கையைக் காட்டினார் தேபான்ஷூ. பாரி அதிர்ந்தான். கட்டை விரலைத் தவிர அனைத்து விரல்களும் துண்டிக்கப்பட்டிருந்தன.

http://i194.photobucket.com/albums/z250/sivag/salvajudum.jpg

"பார்த்தீர்களா...இதைவிடக் கொடுமைகளெல்லாம் செய்திருக்கிறார்கள். பல பெண்களின் கற்பைச் சூறையாடியிருக்கிறார்கள். இந்தப் பெண்ணின் அம்மாவைக் கற்பழித்துக் கொன்றுவிட்டார்கள். பலரை வெட்டிச் சாய்த்திருக்கிறார்கள். மிச்சம் மீதியானவர்களை...அவர்கள் உருவாக்கிய முகாம்களுக்குக் கொண்டு சென்று கொடுமைப்படுத்துகிறார்கள். நீங்கள் இங்கே இருந்தால் கொல்லப்படுவீர்கள் அல்லது...அந்த முகாம்களில் ஒன்றுக்குக் கொண்டு செல்லப்படுவீர்கள்....அவையும் ஒரு முள்வேலிதான்...தமிழரான உங்களுக்குத் தெரியும்...முள்வேலி முகாமைப் பற்றி...அங்கு தமிழர்கள் இங்கு மலைவாழ் மக்கள்...அங்கு சிங்களர்கள்...இங்கு இதே இனத்தவர்கள் இவைதான் வித்தியாசம்....ஆனால் போராட்டம் என்னவோ அவரவர் உரிமைக்காகத்தான்."

அந்தப் பெண்ணையே பார்த்துக்கொண்டிருந்த பாரி சங்கடத்துடன்...தனக்குத் தெரிந்த ஹிந்தியை வைத்துக்கொண்டு தான் நினைப்பதை சரியாய் சொல்ல முடியாது என நினைத்து...ஆங்கிலத்திலேயே பேசினான்....

"இரு பக்கமும் ஆயுதமேந்தினால்...இரு பக்கமும் இழப்பிருக்கத்தானே செய்யும். உங்களை...அதாவது மாவோயிஸ்ட்டுக்களை தங்கள் காவலர்களாகப் பார்க்கிறார்கள் இந்த மக்கள். ஆனால் உங்களை தீவிரவாதிகளாகப் பார்க்கும் அரசாங்கம்...உங்களை அழிக்க நினைக்கிறார்கள். அந்த அழித்தலில்...இந்த அப்பாவி மக்களுமல்லவா அழிக்கப்படுகிறார்கள்...ஏன் நீங்கள் ஆயுதத்தை எறிந்துவிட்டு அமைதி முறையைக் கடைபிடிக்கக்கூடாது...?"

"புளித்துப்போன அறிவுரை. என்னுடைய இந்த கடுமையான சொல்லுக்கு மன்னிக்கவும். பலமுறை பலரால் சொல்லப்பட்ட அறிவுரைதான்...ஆனால்...நாங்கள் ஆயுதத்தை எறிந்துவிட்டால்...இந்த மக்கள் இடமாற்ற*ம் செய்யப்படமாட்டார்களென்ற உத்திரவாதத்தைத் தருவார்களா உங்கள் அரசாங்கத்தினர்? புரிந்துணர்வு ஒப்பந்தங்களைக் கிழித்துப் போட்டுவிடுவார்களா? உறுதிமொழித் தரச் சொல்லுங்கள் நாங்கள் ஆயுதங்களை தூக்கிப் போட்டுவிடுகிறோம்."

"எல்லாவற்றுக்கும் ஒரு ஆரம்பம் இருக்கிறது. அவனை விடச் சொல், நான் விடுகிறேன் என்று இரண்டுபேரும் பிடிவாதம் காட்டினால்...எதுவுமே நிகழாது. மக்களுக்காக நீங்கள் போராட வந்தவர்கள்....அதே மக்களுக்காக நீங்களே முதலில் இறங்கி வந்து ஒரு உதாரண*த்தைக் காட்டுங்கள். துப்பாக்கிக்கு நண்பனென்றும் தெரியாது...எதிரி என்றும் தெரியாது...அது யாரை வேண்டுமானாலும் சுடும்...உயிரை எடுக்கும்..."

வேகமாய் பதில் சொல்ல வாயைத்திறந்த தேபான்ஷூ...கையில் பாத்திரங்களுடன் உள்ளே நுழைந்த புலியாவையும், இன்னும் இரண்டு மலைவாழ் பெண்களையும் பார்த்ததும் அமைதியானான்.

"முதலில் சாப்பிடுங்கள். காலையிலிருந்தே எதுவும் சாப்பிடவில்லை. பசியாய் இருப்பீர்கள்"

என்று பாரியிடம் சொல்லிவிட்டு...புலியாவிடமிருந்து பாத்திரங்களை வாங்கித் தரையில் வைத்தான். சோட்டுவும் உதவி செய்ய...அனைவரும் அமர்ந்தார்கள். பாரியால் சப்பணமிட்டு அமர முடியாததால்..காலை நீட்டியபடியே சற்று உடலை உயர்த்தி சாய்ந்து அமர்ந்து கொண்டான். அலுமினியத்தட்டுக்களில் சாமச் சோறும், ராகிக் களியும் போட்டு, கோழிக்குழம்பை ஊற்றினார்கள்.
தட்டைக் கையில் எடுத்துக்கொண்டு, சாமச் சோற்றில் கோழிக்குழம்பை ஊற்றிப் பிசைந்து கொஞ்சம் வாயில் வைத்ததும்...அதன் சுவையால்...ஆச்சர்யத்தில் தலையாட்டினான்.

"ஏன்டா பிடிக்கலையா?"

"அருமையா இருக்கு. இது அரிசி மாதிரி இல்லியே....என்ன இது?"

"இதுவா சாமைன்னு சொல்வாங்களே அதுதான்...."

"ஓ..இதான் சாமையா...எங்கப்பா அம்மாவெல்லாம் சொல்லியிருக்காங்க....ஒரு காலத்துல எங்க கிராமத்துல இதுதான் அவங்களோட முக்கியமான சாப்பாடு...சென்னைக்கு வந்து செட்டிலானதுக்கப்புறம் அதையெல்லாம் மறந்துட்டாங்க.....எங்க கிராமத்துலேயே இப்ப யாரும் இதை சாப்பிடறதில்ல....ரொம்ப நல்லாருக்குடா"

சொன்ன பாரியைப் பார்த்து ஒரு அர்த்தமுள்ள சிரிப்பை சிந்திவிட்டு,

"இந்தப் பெருமையுள்ள பழமையைக் காப்பாத்ததாண்டா நாங்க போராடுறோம்"

"உங்கப் போராட்டத்தைத் தப்புன்னு சொல்லல...ஆனா வழிமுறையைத்தான்...ஏத்துக்க முடியல."

"அதே வழிமுறைதான்....இன்னைக்கு நம்மக்கூட உயிரோட திரும்பி வந்தவங்களைக் காப்பாத்தியிருக்கு...அந்த அரக்க கும்பலுக்கு முன்னால் அமைதி காட்டியிருந்தால்...யாராவது உயிர் பிழைத்திருக்க முடியுமா....அது மட்டுமில்லை...அவர்கள் தாக்கி அழிக்கும் கிராமத்திலிருப்பவர்கள்.... கொஞ்சம்கூட எதிர்ப்புக் காட்டமுடியாமல், ஆயுதமில்லாமல்தானே செத்து விழுகிறார்கள். அவர்களின் இலக்கு ஆயுதமேந்திய நாங்கள்தானென்றால் எங்களை அழிக்கட்டும்...ஏன் இந்த அப்பாவி மக்களைக் கொல்கிறார்கள்....அவர்களுக்குத் தேவை...இந்த மலையில் கொட்டிக்கிடக்கும் லட்சக்கணக்கான கோடி மதிப்புள்ள* கனிமவளம்தானேத் தவிர....தங்கள் சொந்த நாட்டின் பிரஜைகளின் நல வாழ்வில்லை."

"விவாதத்தை பிறகு வைத்துக்கொள்ளலாம்...முதலில் சாப்பிடுங்கள்"

தேபான்ஷூ குறுக்கிட்டு சொன்னதும் அமைதியாய் சாப்பிட்டார்கள்.

சிந்தனைகளின் தாக்கம் மூளை முழுதும் நிறைந்திருந்ததால் பாரியால்...ஆரம்பத்தில் உணர்ந்த சுவையை அப்போது உணர முடியவில்லை. எந்திரமாய் சாப்பிட்டான். முடித்ததும், சோட்டு ஒரு சொம்பில் தண்ணீரைக் கொடுத்து...அந்தத் தட்டிலேயேக் கையைக் கழுவிக்கொள்ளச் சொன்னான்.

"கொஞ்சம் ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள்....மாலையில் இங்கிருக்கும் ஒருவரை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்"

எனச் சொல்லிவிட்டு தேபான்ஷூ வெளியே போய்விட்டார். அதே குடிசையில், ஜெய்ராமும், சோட்டுவும்...ஆளுக்கொரு பாயை விரித்துப் படுத்துக்கொண்டார்கள்.

பாரி...தூக்கம் வராமல்...சிந்தித்துக்கொண்டிருந்தான். அந்த சிறியப் பெண்ணின் வெட்டுப்பட்டக் கையே மாறி மாறி அவன் கண்ணுக்குள் ஆடியது.

தொடரும்....

பாரதி
02-07-2010, 04:12 PM
உண்மையான நிகழ்வு இங்கு கதையாகிறது!
வேதாந்தா நிறுவனத்தின் பங்குதாரராக உள்துறை அமைச்சர் முன்பு இருந்தாராமே..! அப்படி இருக்கையில் , பண முதலைகளை எதிர்த்து மக்கள் பலம் ஒன்றை மட்டுமே நம்பி எவ்வளவு காலம் போராட முடியும் தெரியவில்லையே..!
உண்மை சுடுகிறது; கதை போக்கு அடுத்து என்ன நடக்கும் என்று எதிர்பார்க்க வைக்கிறது.
தொடருங்கள் சிவா.

மதி
02-07-2010, 04:28 PM
கண்முன் நடப்பது போல் எழுதி இருக்கிறீர்கள்.. உண்மையான தகவல்களுடன்.. அந்த கமாண்டரை பாரி சந்தித்தானா? வேறென்ன சிக்கல்லாம் வந்தது.. அரிய ஆவலாய்..

சிவா.ஜி
02-07-2010, 04:32 PM
பதவியேற்புக்கு முதல்நாள்தான் அந்த நிறுவனத்தின் பதவியை ராஜினாமா செய்தார் உள்துறை அமைச்சர். பழைய நிறுவனத்தின் மேல் இன்னமும் விசுவாசமாய்த்தானிருக்கிறார்.

உடனுக்குடனான பின்னூட்டத்திற்கும் ஊக்கத்திற்கும் நன்றி பாரதி.

சிவா.ஜி
02-07-2010, 04:33 PM
நன்றி மதி...அதிகம் பேசினால்....தொய்வாகத் தெரிந்துவிடுமா என சிறிய அச்சத்துடனே எழுதினேன். ஆனாலும் சொல்ல வேண்டியதை சொல்லியாக வேண்டுமே....

உங்கள் ஊக்கமளிக்கும் பின்னூட்டம் பார்த்து நிம்மதியடைந்தேன். ரொம்ப நன்றி மதி.

அமரன்
02-07-2010, 09:00 PM
அவனை நிறுத்தல் சொல்லு.. நான் நிறுத்திறேன் கதைதானா எங்கும். மூன்றாம் தரப்பினர் தந்த கறுப்புக் காயங்களும் இப்போது நம்மவர்களுக்கு நல்ல படிப்பினை. இதற்கெல்லாம் முடிவு கட்ட இதய சுத்தியுடன் களமிறங்கும் ஆரசுகளால்தான் முடியும். ‘இவங்களுக்கு இரங்கி இறங்கினால், அவனவன் ஆயுதமேந்தி அழிச்சாட்டியம் பண்ணுவான். அவனுக்கும் பணிய வேண்டி வரும்’ என்பதெல்லாம் சப்பைக் கட்டு. உண்மையாக நோக்கும் ஒருவனுக்கு நியாயத்தன்மை புரியும்.

பார்க்கலாம் ஆசிரியர் பார்வை எப்படி என்று?

இந்த நினைப்பு தவறுதான். ஆனால் அந்த மாதிரி எதிர்பார்க்க வைக்கும் அளவுக்கு எழுத்துலகில் நீங்கள் வளந்து விட்டீர்கள் சிவா.

சமகால நிஜங்களை கற்பனை கலந்து பட்டையைக் கிளப்பும் பசுமை வேட்டையின் நவாத்தியாயமும் இனிமையான தாளவாத்தியக் கச்சேரி.

களை கட்டட்டும் இன்னும்.

செல்வா
02-07-2010, 09:19 PM
தொய்வு பற்றிய கவலையே வேண்டாம். இப்போது தான் கதை தீப்பிடிக்கத் துவங்கியிருக்கிறது. அனல்பறக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.
தொடருங்கள் அண்ணா. தெரியாத பலதகவல்கள் பாரியின் வாயிலாக உலகுக்குத் தெரியவரும் என எண்ணுகிறேன்.

பா.ராஜேஷ்
02-07-2010, 09:51 PM
அருமையான தொடர்ச்சி... இவர் சொல்வது சரி, அவர் சொல்வதும் சரி எனில் உண்மையதான் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டும்... தொடருங்கள் அறிந்து கொள்ள தொடர்கிறோம்...

govindh
02-07-2010, 09:57 PM
நல்ல விறுவிறுப்பு...
உண்மைகள் வெளி வரட்டும்....

தொடருங்கள்....தொடர்ந்து வருகிறோம்....

சிவா.ஜி
03-07-2010, 06:15 AM
இருபக்க பிடிவாதம் எல்லோருக்கும் பாதிப்பு. இருவருமே இதை உணர்ந்தவர்கள்தான்...ஆனால் அவரவர் செயலுக்கு அவரவருக்கானக் காரணங்கள்.

இப்படி நிகழ்ந்தால் நன்று என்றே நாம் நினைக்க முடியும் பாஸ்....முடிவு அவர்கள் கைகளில். என் பார்வையை பதிகிறேன். ஒரு பக்க சார்பாக எதையும் கொண்டுபோக விரும்பவில்லை. நடப்பதை சொல்லி...செல்கிறேன். பார்ப்போம் அமரன்.

ஊக்கமளிக்கும் பின்னூட்டத்திற்கு நன்றி பாஸ்.

சிவா.ஜி
03-07-2010, 06:16 AM
முடிந்த அளவு முயற்சிக்கிறேன் செல்வா....உங்கள் பின்னூட்டம் தைரியமளிக்கிறது. ரொம்ப நன்றி

சிவா.ஜி
03-07-2010, 06:17 AM
தெரிந்த உண்மைகளை மட்டுமே எழுதுகிறேன் ராஜேஷ். ஆனால்...உண்மையான உண்மை என்ன...நானும் உங்களைப் போன்றே பார்வையாளன். ரொம்ப நன்றி.

சிவா.ஜி
03-07-2010, 06:18 AM
தொடரூக்கத்திற்கு மிக்க நன்றி கோவிந்த்.

சுடர்விழி
03-07-2010, 07:08 AM
தொய்வில்லாமல் விறுவிறுப்பாக போகுது கதை....உண்மைகள் நிறைய வெளிவருகின்றன.....கண்முன் காட்சிகளை நிறுத்தும் நடை அருமை...தொடருங்கள்..வாழ்த்துக்கள்.

சிவா.ஜி
03-07-2010, 09:58 AM
உங்கப் பாராட்டுக்கு ரொம்ப நன்றிம்மா சுடர்விழி.

கீதம்
04-07-2010, 12:47 AM
வெட்டுப்பட்ட அந்தக் குழந்தையின் கையைப் பார்த்ததும் பகீரென்றது. இதுபோல் எத்தனை கொடுமைகளோ?

ஒரு சவாலான கருவைக் கையில் எடுத்திருக்கிறீர்கள் என்பது புரிகிறது. உறைந்துபோன உண்மைகளை வெளிக்கொணரும் உங்கள் முயற்சியை பெரிதும் பாராட்டுகிறேன், அண்ணா. தொடரட்டும் உங்கள் வேட்டைப்பயணம்.

கலையரசி
04-07-2010, 05:28 AM
அந்தக் குழந்தையின் புகைப்படம் மனதைப் பதைக்க வைத்து விட்டது. ஒரு குழந்தையின் விரல்களைத் துண்டிக்க அந்த மகா பாவிகளுக்கு எப்படி மனது வந்தது?

குழந்தையின் கை துண்டிப்பு, முள்வேலி போன்ற நிகழ்வுகளைப் படிக்கும் போது ஈழத் தமிழரின் துயரங்கள் கண்முன் தெரிந்து சோகம் அப்பிக் கொள்கிறது. இது போல் அங்கும் எத்தனை எத்தனை கொலைகள், பாலியல் பலாத்காரங்கள்?

ஆயதமேந்துபவர்கள் எடுத்த எடுப்பில் துப்பாக்கிகளைத் தூக்கி விடுவதில்லை. சொல்லொணாத் துயரங்களை அடுத்தடுத்து அனுபவித்து, வேறு வழியில்லை என்கிற போது தான் ஆயுதமேந்தும் முடிவுக்குத் தள்ளப்படுகிறார்கள்.
இதைத் தான் தேபான்ஷுவும் புளித்துப் போன அறிவுரை என்று சொல்கிறார். வெளியிலிருந்து அறிவுரை சொல்வது எளிது. அனுபவித்துப் பார்க்கும் போது தான் சித்ரவதைகள் புரியும்.
தேபான்ஷுவுடன் பாரி நடத்தும் உரையாடல்கள் வெகு யதார்த்தம். நடையும் அருமை. தொடருங்கள் சிவா.

சிவா.ஜி
04-07-2010, 06:38 AM
ரொம்ப நன்றிங்க கீதம்.

சிவா.ஜி
04-07-2010, 06:41 AM
ஆமாங்க கலையரசி....ஆயுதமேந்தும் சூழலுக்குத் தள்ள*ப்பட்டு..அதை தொடர்பவர்கள்தான் அதிகம். சில அரசியல்வாதிகளும், அரசாங்க அதிகாரிகளும் பிரச்சனையின் வேரை உணராது...மேலோட்டமாய் தற்காலிகத் தீர்வுக்குத்தான் முயல்கிறார்கள்.

பல அமைப்புகளும் இதை வலியுறுத்திச் சொன்னாலும்....காதில் போட்டுக்கொள்வதில்லை.

உங்கள் பாராட்டுக்கும், பின்னூட்டக் கருத்துக்கும் நன்றிங்க.

ஆதி
05-07-2010, 03:33 AM
சமீப காலமாக மாவோஸ்ட்கள் மேல் அதிக தாக்குதல் நடத்தப்படுகிறதுக்கு முகாந்திரம் புரிகிறது..

காங்கிரஸ் அரசு பணக்காரர்களின் அரசு என்று மேலும் மேலும் ஊர்ஜிதம் செய்கிறது..

தொடருங்கள் அண்ணா..

அன்புரசிகன்
05-07-2010, 06:08 AM
அவர்களுக்காவது துரோகிகள் இல்லாது உரிமைகளை வெல்லட்டும். என்னால் கதையை ரசிக்க முடியவில்லை. காரணம் இதில் கதை என்பதிலும் உண்மை தான் எங்கும் தெரிகிறது. ரசிப்புக்கு பதில் கவலையும் சோகமும் தான் வருகிறது. நாம் மற்றும் நம் உறவுகள் அனுபவித்தவற்றை இன்னொரு உறவுகளும் அனுபவிப்பதை நினைக்கும் போது கடவுள் என்பவன் எங்கும் இல்லை என்றே தோன்றுகிறது. உந்த அம்மா சாமி , பாபா மார் எல்லாம் என்ன பண்ணி கிழிக்கிறார்கள்???

சிவா.ஜி
05-07-2010, 08:57 AM
உண்மைதான் ஆதன்....அமெரிக்காவின் எடுபிடியாகவே மாறிவிட்ட காங்கிரஸ் அரசு....பெரும் பணக்காரர்களில் புரோக்கராகவும் இருக்கிறது.

தொடர்ந்து வருவதற்கு நன்றி ஆதன்.

சிவா.ஜி
05-07-2010, 09:02 AM
உண்மைதான் அன்பு....அவர்களுக்குள் துரோகிகள் இல்லையென்பது ஆறுதலளிக்கிறது(இப்போதைக்கு)

அம்மா சாமிகளும், பாபாக்களும்....பணத்தின் பின்னால்தான் அலைகிறார்கள்....அந்த நிஜக்கடவுளுக்கே...இவர்களைக் காக்க நேரமில்லை...இந்தப் போலிகள் என்ன செய்வார்கள்...?

நன்றி அன்பு.

Nivas.T
05-07-2010, 04:32 PM
மாவோயிஸ்டுகளும் மக்களுக்கான ஒரு ஆயுத போரட்டகுழுதான் என்பது பலருக்கு தெரிய வாய்ப்பில்லைதான் ஆனாலும்.... இது எங்கோ உருவான முதற்கோணல்... இப்பொழுது முற்றிலும் கோணலாய்.....

கதையோட்டம் தீபொறி ஓட்டம்

தொடருங்கள் அண்ணா

samuthraselvam
06-07-2010, 06:54 AM
ஐந்தாம் அத்தியாயத்திலிருந்து ஒம்பது அத்தியாயத்தையும் இப்போதுதான் படித்து முடித்தேன்.... அப்படியே உண்மை நிகழ்வை நேரில் பார்த்தவர்கள் சொல்வதுபோல உள்ளது உங்களின் எழுத்து நடை..... மனதை உறைய வைக்கும் படங்களுடன்..... அந்தப் பிஞ்சு கைகள் விரல்கள் இல்லாமல் பார்க்க...ஐயோ.... எத்தனை கொடூர மனம் படைத்தவர்கள்....

ஒருவரின் உரிமைகளைப் பறித்துவிட்டு அவர்கள் அதைத் திருப்பிக் கேட்டால் அவர்களை தீவிரவாதிகள் என்று முத்திரை குத்துவது தானே எப்போதும் நடந்துகொண்டிருக்கும் கொடுமை...

அவர்களுக்குள் சென்று நாமும் அவர்களுள் ஒருவராக இருந்து பார்த்தால் மட்டுமே அவர்கள் ஏன் அப்படி இருக்கிறார்கள் அவர்களின் நோக்கம் என்ன என்பது புரியும்....

உங்களின் கதைக்காக நீங்கள் எவ்வளவு மெனக்கெடுகிறீர்கள் என்பது படிக்கும் எங்களுக்கு புரிகிறது அண்ணா... வனத்துக்குள் செய்யும் வேளாண்முறை இதுவரை அறிந்திராத புதுமுறை.. சாம்பல் சத்துக்காக விளைநிலங்களை உழுவதற்கு முன் சாம்பல் கொட்டி உழுவார்கள்... ஆனால் பெரிய மரங்களை ஏறித்தா? புதுமைதான்... தொடருங்கள் சிவா அண்ணா....

சிவா.ஜி
06-07-2010, 10:08 AM
அத்தியாயம்-10


மனம் ஒரு நிலையில் இல்லாமல் தவித்தது. பூவிழியின் நினைவு வந்தது. அவளிடம் சொல்ல....ஏராளம் இருக்கிறது. பையிலிருந்து கைப்பேசியை எடுத்தான். உயிர்ப்பித்தான். ஒரு நப்பாசையில் சிக்னல் இருக்கிறதா எனப் பார்த்தான்.கொஞ்சம்கூட இல்லை. கைப்பேசியின் சேமிப்பிலிருந்த பூவிழியின் படங்களைப் பார்க்கலாமென்று ஒவ்வொன்றாய் திறந்தான். ஒவ்வொரு படத்துடனும் இணைந்திருந்த அதன் நிகழ்வுகளோடு....மனது ஓடி ஒடி திரும்பியது. என்ன செய்துகொண்டிருப்பாள் இப்போது...இன்றைக்கு திங்கட்கிழமை...நாளைய பதிப்புக்காக...பரபரப்பாய் வேலை செய்துகொண்டிருப்பாள். கைப்பேசியை அணைத்துவிட்டு, பைக்குள் வைக்கும்போது அந்த எம்.பி3 கருவியைப் பார்த்தான். எடுத்து, ஒலிப்பான்களைக் காதுகளுக்குள் செருகிக்கொண்டு, இயக்கினான். எண்பதுகளில் எல்லோரையும் கட்டிப்போட்ட ராஜாவின் மெலடியில் ஒன்றான..”நான் தேடும் செவ்வந்திப் பூவிது...” பாந்தமாய் காதுகளில் ஒலித்தது.

கண்களை மூடிக்கொண்டு பாடல்களுக்குள் ஐக்கியமாகியிருந்த பாரி, அவனருகில் ஏற்பட்ட அசைவையுணர்ந்து கண்களைத் திறந்தான். சோட்டு எழுந்து அமர்ந்து அவனையே பார்த்துக்கொண்டிருந்தான். தன் காதுகளிலிருந்த ஒலிப்பானைக் கழற்றி சோட்டுவின் காதுகளில் பொருத்தினான். வார்த்தைகள் புரியவில்லையானாலும்... இசையை ரசிப்பது அவனது முக மாறுதலிலேயே தெரிந்தது.அவனை கேட்க விட்டுவிட்டு அப்படியே சாய்ந்து கண்களை மூடினான்.கொஞ்ச நேரம் கழித்து, புலியாவும், இன்னொரு மலைநாட்டு பெண்ணும் கையில் ஒரு சின்னப்பொதியுடன் உள்ளே வந்தார்கள்.புலியா பாரியை தொட்டு அசைத்தாள். அவளைப் பார்த்தவனிடம்,

"அண்ணா....கட்டைப் பிரித்து...புதிய மருந்தை வைத்துக் கட்டவேண்டும். கொஞ்சம் வலிக்கும் பொறுத்துக்கொள்ளுங்கள் இன்னும் இரண்டு நாட்களில் சரியாகிவிடும்”

எனச் சொன்னதும், பாரி எழுந்து அமர்ந்தான். கட்டைப் பிரிக்கும்போது, காய்ந்த பச்சிலைகள் தோலைப் பிய்த்துக்கொண்டு வந்ததில் வலி ஏற்பட்டது.கொண்டுவந்த வெந்நீரில் துணியை நனைத்து மிதமான அழுத்தத்தில் காயத்தைச் சுற்றித் துடைத்தாள். சுத்தம் செய்ததும் எட்டிப் பர்த்த பாரி ஆச்சர்யப்பட்டான். ஓரளவுக்கு..நன்றாகவே காயம் ஆறியிருந்தது. இன்னும் இரண்டு நாளில் சுத்தமாய் ஆறிவிடுமென்று அவர்கள் சொன்னது சரிதானென நினைத்தான். பச்சிலையை வைத்துக் கட்டுப் போட்டுவிட்டு அவர்கள் போனதும், சோட்டுவிடம் கொஞ்சம் குடிக்கத் தண்ணீர் கொண்டுவரச் சொன்னான். காதிலிருந்து கழட்ட முயன்றவனை தடுத்து, அந்தக் கருவியை அவனது சட்டையின் பொத்தானிருக்குமிடத்தில் செருகிவிட்டு,

“இப்ப கீழ விழாது...இப்படியே பாட்டுக் கேட்டுக்கிட்டே போய்ட்டுவா”
என்றதும்,சத்தமாக

“சரி அண்ணா...இதோ இப்ப வரேன்...”

அவன் கத்தியதைக் கேட்டதும் சிரித்துக்கொண்டே, பக்கத்தில்,சிதறியிருந்த காய்ந்த பச்சிலைகளை கையால் சேர்த்து ஒரு இடத்தில் குவித்து வைத்தான். சோட்டுப் போட்ட சத்தத்தில் எழுந்துகொண்ட ஜெய்ராம், பாரியின் காலைப் பார்த்துவிட்டு,

“ஓ...கட்டப் பிரிச்சிக் கட்டிட்டாங்களா. இன்னும் ரெண்டுநாள்ல ரெடியாயிடுவே. ஒரு நிமிஷம் இரு...”

வெளியே போக எழுந்தவனைப் பார்த்து,

“எங்கடா...?”

இடதுகையின் சுண்டுவிரலைக் காட்டினான்.

“என்னையும் கூட்டிக்கிட்டுப் போடா முட்டுது..”

கைத்தாங்கலாய் பாரியை அழைத்துக்கொண்டு குடிசையைவிட்டு வெளியே வந்தவனின் மேல் மோதிக்கொண்ட சோட்டுவைப் பார்த்து,

“டே...டே...டே...மெதுவாடா...ஏன் இப்படி ஓடிவர..?”
அவனுடையக் கேள்வியே காதில் விழாதவனைப் போல, கையிலிருந்து தவறி விழுந்த சொம்பை எடுத்துக்கொண்டு மீண்டும் வெளியே ஓடினான் சோட்டு.

“நீ குடுத்தியா. காதுல மாட்டிக்கிட்டு நாம பேசறதைக் கூடக் கேக்காம ஓடறான் பாரு...சரி வா. மெதுவா..கொஞ்சம் மேடு பள்ளமா இருக்கும்...காலை அதிகம் ஊணாத...”

பக்கத்திலிருந்த பள்ளத்துக்குச் சென்று திரும்பும் வழியில், ஒரு தொட்டியில் இருந்த தண்ணீரில் முகம் கழுவிக்கொண்டு குடிசைக்கு வந்தார்கள். சோட்டுத் தண்ணீர் சொம்புடன் அங்கே உட்கார்ந்திருந்தான். அவனுடையக் காதிலிருந்து, ஒலிப்பானை எடுத்த ஜெய்ராம்,

“எடுத்து வெச்சுட்டு, போய் ஏதாவது வேலையிருந்தா பாரு.”

“இருக்கட்டுண்டா....தமிழ்ப்பாட்டை இவ்ளோ ஆர்வமா கேக்கறான்....”

“டே அவனுக்கு பாட்டு முக்கியமில்லடா...இதைமாதிரி ஒரு பிளேயரை இப்பதான் பாக்கறான்...காதுக்குள்ளயே பாட்டு கேக்கறது அவனுக்குப் புதுசு.”

தேபான்ஷூ கையில் தேநீர்க் குவளையுடன் வந்து அமர்ந்துகொண்டான். அனைவரும் குடித்து முடித்ததும்,

“உங்களால் இப்போது நடக்கமுடியுமென்று நினைக்கிறேன் நண்பரே. என்னுடன் வருகிறீர்களா...”

தேபான்ஷூ கேட்டதும்,

“போகலாம் வாருங்கள்”

தயாரான பாரியை அழைத்துக்கொண்டு ஒரு குடிசையின் முன்னால் சென்று நின்றார்கள். அங்கிருந்தே,

“சாச்சா...கொஞ்சம் வெளியே வருகிறீர்களா?”

என்று கேட்டதும், கதவைப் பிடித்துக்கொண்டு நின்ற அந்த பெண்ணின் பின்னாலிருந்து, வந்தவருக்கு 45வயது இருக்கும். தீர்க்கமான பார்வை. உடல் தளர்ந்திருந்தது. அது நிச்சயம் உழைப்பால் அல்ல எனத் தெரிந்தது. கை கூப்பி வணங்கினார்.
கைகூப்பிய பாரியிடம்,

“இவர் சுந்தரா கட்ராக்கா, தேபாபாடாவோட தலைவர். தேபாபாடா இலாக்காவுல மொத்தம் 23 கிராமங்கள் இருக்கு. அங்க இருக்கிறவங்க எல்லாருக்கும் இவர்தான் தலைவர். இப்ப அந்த கிராமங்கள்ல ஒருத்தர்கூட இல்லை. போக்குவரத்து இருக்கும் சாலைக்கு அதிக தொலைவில்லாத கிராமங்கள். விவசாயத்தில் நல்ல சம்பாத்தியமிருந்ததால்...அரசாங்கத்துக்கு மனு எழுதி, தங்கள் கிராமத்தில் பள்ளிக்கூடம், அங்கன்வாடி, சிறிய சுகாதார நிலையமென்று சில வசதிகளைப் பெற்று தங்கள் மக்களையும் படிப்பறிவுள்ளவர்களாக மாற்ற பல முயற்சிகளை மேற்கொண்டவர். கடந்தவாரம் நிகழ்ந்த தாக்குதலில்...அனைத்தையும் இழந்து, தன் மனைவியுடன்...இந்தக் கிராமத்துக்குத் தப்பி வந்திருக்கிறார். காரணம்...அந்த கிராமங்களிலிருந்து இவர்களை வெளியேறச் சொல்லி அரசாங்கம் கொடுத்த நெருக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால்...சல்வாஜூடுமை விட்டுத் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள்”

தேபான்ஷூ..பாரியிடம் சொல்லிவிட்டு, சுந்தராவிடம் எதையோக் கேட்டார். அதற்கு அவர் அமைதியாய் சொன்ன பதிலை,

“எந்தக் காரணத்தைக் கொண்டும் இந்த மலையைவிட்டு நாங்கள் போவதாயில்லை. இந்த மலை எங்களுக்குக் கடவுள். இன்னும் தூரத்துக்குப் போய்....காட்டுக்குள் இருந்துகொண்டு, இந்த மலையின் வெறும் தண்ணீரைக் குடித்துக்கூட வாழ்ந்துவிடுவோம்...ஆனால்...அரசாங்கம் சொல்வதைப்போல...நாட்டுக்குள் போக மாட்டோம்”

பாரியிடம் சொன்னார்.

“இது உங்களுக்கு ஒரு உதாரணம்தான். இதைப்போல பல கிராமங்களின் அழிவை என்னால் காட்ட முடியும்.வீச்சப்பால் என்பது தண்டேவாடாவின் சிறு கிராமம். கிராமத்திலுள்ளவர்களை தங்களுடன் சேரும்படி சல்வாஜூடும் ஆட்கள் கேட்டதை மறுத்ததற்காக 12 முறை அந்த கிராமம் தாக்கி அழிக்கப்பட்டிருக்கிறது. அத்தனைமுறையும் இழந்த வீடுகளை திரும்பக்கட்டிக்கொண்டார்கள். ஆனால் அடுத்த முறையும் முடியாமல், காடுகளின் அடர்ந்த பகுதிகளுக்குள் தங்கள் வாழ்க்கையைத் தொடர்கிறார்கள். நீங்கள் அதிக நேரம் நிற்க முடியாது.....வாருங்கள் குடிசைக்குப் போகலாம்....”

“எனக்கென்னவோ நீங்கள் அதிகம் உணர்வு வயப்பட்டிருப்பதாய் தோன்றுகிறது. மாற்று இடம் கொடுப்பதாய் சொல்கிறார்களென்றால்...நாட்டின் வளர்ச்சிக்காக அதை ஏற்றுக்கொள்வதில் என்ன தவறு...?”

“ஏன் எங்களையும் நாட்டிலுள்ள மற்றவர்களைப் போல உணர்வற்றவர்களாவே இருக்கச் சொல்கிறீர்களா...சரி..நீங்கள் சொல்லும் விஷயத்துக்கு வருவோம். அரசாங்கம் கொடுத்த எந்த வாக்குறுதியை அவர்கள் நியாயமாய் நிறைவேற்றியிருக்கிறார்கள்? ஆலை அமைப்பதாய், ஒரு ஊரிலிருந்து நிலங்களை எடுத்துக்கொண்டு, பதிலாய் வேறு நிலத்தைத் தருவதாகவும், நில உரிமையாளர்களின் வீட்டுக்கு ஒருவருக்கு அந்த ஆலையில் வேலை தருவதாகவும் சொல்லி...அதை எதையுமே நிறைவேற்றாமல்...இன்றளவும் தங்கள் வேலைக்காகவும், மாற்று நிலத்துக்காகவும் போராடிக்கொண்டிருப்பவர்கள் உங்கள் தமிழ்நாட்டிலேயே ஏராளமாய் இருக்கிறார்கள். படித்தவர்கள் அதிகமுள்ள உங்கள் மாநில மக்களையே ஏமாற்றும் அரசாங்கம்...இந்த காட்டிலுள்ளவர்களை ஏமாற்றாது என எப்படி நீங்கள் சொல்லலாம்?”

“முதலில் மாற்று ஏற்பாடுகள் செய்யுங்கள், பிறகு நாங்கள் இடத்தைக் காலி செய்து கொடுக்கிறோம் எனச் சொல்லலாமே...நாட்டின் கனிம வளங்கள் அரசுக்குத்தானே சொந்தம். அவற்றை எடுப்பதால்..அதிக வருமானமும், வளர்ச்சியும் ஏற்படுமல்லவா?”

“எதையும் உரிமையுடன், சொல்லும் நிலையிலோ, கேட்கும் நிலையிலோ எங்கள் மக்கள் இல்லை.கட்டளைக்குக் கீழ்படியும் அடிமைகளாகத்தான் இவர்களை உங்கள் அரசாங்கம் பார்க்கிறது. நீங்கள் சொல்லும் கருத்து சரிதான். நெய்வேலியில் நிலக்கரி வெட்டியெடுக்கப்படுவதற்கும், கோலாரில் தங்கம் வெட்டியெடுக்கப்படுவதற்கும்...நியம்கிரியில் பாக்ஸைட் வெட்டியெடுக்கப்படுவதற்கும் மிகப்பெரிய வித்தியாசமிருக்கிறது.”

“என்ன வித்தியாசம்...அந்த இடங்கள் நாட்டிலிருக்கின்றன...இது காட்டிலிருக்கிறது அதுதானே வித்தியாசம்”

“சாதாரணமாய் சொல்லிவிட்டீர்கள்...இந்தக் காடு இத்தனை வளமுடன் இருக்கக் காரணமே இந்த பாக்ஸைட் படிமங்கள்தான். ஒரு ஸ்பாஞ்சைப் போல செயல்பட்டு, மழைநீரை உள்ளுக்குள் இழுத்து, வளமான நீராய் வெளியிடுகிறது. அதன் காரணமாய்...சுறியுள்ள நிலங்கள் செயற்கை உரங்களேத் தேவைப்படாத மிகவும் வளமையான நிலங்களாய் மாறுகிறது. அப்படிப்பட்ட பாக்ஸைட்டை வெட்டியெடுத்துவிட்டால்...சில வருடங்களில் இந்த மலையிருக்காது, காடு இருக்காது...பாலவனமாகிவிடும். ராமர் பிறந்த பூமிக்காகப் போராடும் உங்கள் இந்துத்துவா கட்சிகளும், அமைப்புகளும் ராமர் வாழ்ந்த இந்தக் காட்டை மட்டும் காப்பாற்ற ஏன் வரவில்லை...ஏன் போராடவில்லை....அவர்களது வியாபார நோக்கம்....ராமரைக் கூட மறக்க வைத்துவிட்டது”

“இதற்கு அவர்கள் என்ன செய்வார்கள்...பல வன ஆர்வலர்களும், மனிதநேய அமைப்புகளும்தான் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை எதிர்த்து நடைப்பயணமெல்லாம் போகிறார்களே..”

“நீங்கள் சொன்ன அந்த மனிதநேய அமைப்புகளையும், வன ஆர்வலர்களும்..நடைப்பயணம் நடத்தினார்கள். ஆனால் அவர்களுக்கு எதிராக 'மாவோயிஸ்ட்டுகளின் ஆதரவாளர்களே திரும்பிப்போய்விடுங்கள்' என கோஷம் போட்டவர்கள் யார் தெரியுமா...எப்போதுமே எதிரெதிராய் முட்டிக்கொண்டிருக்கும் ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும்தான். இந்த விஷயத்தில் அவர்களின் ஒற்றுமையைப் பாருங்கள். காரணம் தெரியுமா...அவர்கள் அனைவரும் இந்த மலையடிவாரத்தில் வியாபாரம் செய்யும் வியாபாரிகள். வருடத்திற்கு 2000 கோடி ரூபாய்க்கு உணவுப்பொருட்களையும், மற்ற பண்டங்களையும் பாதுகாப்புப் படையினருக்கு சப்ளை செய்யும் வர்த்தகர்கள்...அவர்களைப் பொருத்தவரை...நாங்களும் மொத்தமாய் அழியக்கூடாது...அரசாங்க தாக்குதலும் நிற்கக்கூடாது...எல்லாமே பணம்தான்...ச்சே...”

அமைதியாய் இருந்தப் பாரியைப் பார்த்து,

“இந்த மலையை நியாயராஜாவாக பார்க்கும் இந்த மக்கள் டோங்கிரியா என ஏன் அழைக்கப்படுகிறார்கள் தெரியுமா...டோங்கர் என்றால் ஒரிய மொழியில் மலை. அந்த மலையின் பிள்ளைகளாக இருப்பதால்...இந்தப் பெயரில் அழைக்கப்படுவதையே விரும்புகிறார்கள். அது மட்டுமல்ல...இங்கிருக்கும் இன்னொரு பிரிவினர் ஜார்னியாக்கள் ஜார்னி என்றால்...நீர்சுனை...இந்த மலையின் பல பாகங்களிலும் நீங்கள் அந்த சுனைகளைப் பார்க்கலாம்...மற்றொரு பிரிவினர் கோண்டு...இங்கிருந்து எடுக்கப்படும் கற்களைக் கூட கோண்டலைட் என்றுதான் சொல்கிறார்கள். இப்படி...இந்த மலையோடும், காட்டோடும் பிண்ணிப்பிணைந்துவிட்ட இவர்களை வேரோடு பிடுங்கி வேறு எங்கு நட்டாலும்...உயிரோடு இருப்பார்களா....?அவர்கள் அவர்களாய் வாழ முடியுமா”

பதில் சொல்ல முடியாமல்..தவித்தான் பாரி.
நண்பனின் நிலையை உணர்ந்த ஜெய்ராம்...அவனை அமைதியாக்கிவிட்டு,

“தோழரே...இவன் கொஞ்சம் ஓய்வெடுக்கட்டும்..இன்னும் இவன் நம்முடன் இருக்கப்போகும் நாட்களில் உண்மை அறிவான்”

என்றதும்,

“உண்மை அறிவேன் ஜெய்ராம்....உங்களை ஒட்டுமொத்தமாக இழக்க விருப்பமில்லாததால்தான் இத்தனையும் பேசுகிறேன்...அரசாங்கம்...மிக வலிமையானது.”

“எங்கள் மக்களும் நாங்களும் அதனினும் வலிமையானவர்கள்...அதனினும் வலிமையானது எங்கள் கொள்கை”

தொடரும்.....

சிவா.ஜி
06-07-2010, 10:12 AM
ரொம்ப நன்றி நிவாஸ்.

சிவா.ஜி
06-07-2010, 10:14 AM
ஆமா லீலும்மா. நோக்கம் சரியானதாய் இருந்தாலும்..வழிமுறை வன்முறையென்றால்...தீவிரவாதிகளாகத்தான் பார்க்கப்படுகிறார்கள். அவர்கள் தங்கள் வழிமுறையை மாற்றிக்கொள்ல வேண்டுமென்பதுதான் அனைவரின் விருப்பமும்.

ஊக்கமளிக்கும் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றிம்மா.

samuthraselvam
06-07-2010, 11:04 AM
சோட்டு காதில் பாட்டுக்கேட்டுகொண்டே பக்கத்தில் நடப்பது தெரியாமல் ஆபத்தில் மாட்டிக்கொள்வான் என நினைத்தேன்....
பத்தாவது அத்தியாயத்தில் நெறைய விஷயம் இருக்கு தெரிந்துகொள்ள..... மேலும் தொடருங்கள் அண்ணா....

செல்வா
06-07-2010, 11:32 AM
வாசித்து முடித்தால் பெருமூச்சு விடுவதைத் தவிர வேறு ஏதும் செய்யும் வழி தெரியவில்லை. நீங்கள் கொடுக்கும் தகவல்கள் அத்தனையும் புதிது.
ஒவ்வொரு பாகத்திற்கும் உங்கள் உழைப்புத் தெரிகிறது.
தொடருங்கள் அண்ணா.

சிவா.ஜி
06-07-2010, 12:08 PM
ஆஹா...லீலும்மா...கற்பனை பலமா இருக்கே....முதல்முதலா காதுக்குள்ள பாட்டுக் கேக்கறானில்ல அதான் ஆர்வமா இருக்கான். உடனடி பின்னூட்ட ஊக்கத்திற்கு மிக்க நன்றிம்மா.

சிவா.ஜி
06-07-2010, 12:09 PM
என்ன செய்ய முடியும் செல்வா. நம் ஆதங்கத்தைப் பெருமூச்சில் வெளியேற்றுவதைத் தவிர.

தொடர்ந்த ஊக்கத்திற்கு மிக்க நன்றி செல்வா.

Akila.R.D
06-07-2010, 12:51 PM
இந்தக்கதையின் மூலம் நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிகின்றது...

தொடருங்கள் சிவா.ஜி...

சிவா.ஜி
06-07-2010, 12:55 PM
ரொம்ப நன்றி அகிலா.

கலையரசி
06-07-2010, 02:23 PM
நிறைய உழைத்து அதிக விபரங்கள் தந்திருக்கிறீர்கள். உரையாடல் மூலம் மலைவாழ் மக்களின் பிரச்சினைகளை அலசியிருக்கும் விதம் நன்று.
ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சிக்கும் பண விஷயத்தில் மட்டும் ஒன்று சேர்ந்து விடுவார்கள். எல்லோருமே ஒரு விதத்தில் சுயநலவாதிகள் தாம்.
தொடருங்கள். கூடவே வருகிறோம்.

மதி
06-07-2010, 02:31 PM
மன்னிக்கவும்.. ஏனோ இந்த அத்தியாயத்தில் கொஞ்சம் திருப்தியில்லை.. :) ஒருவேளை என் மனநிலையும் கூட காரணமாயிருக்கலாம்.

நிறைய தகவல்களை சேகரித்திருக்கிறீர்கள்.. ஆனால் எல்லாவற்றையும் ஒரே அத்தியாயத்தில் கொடுக்க முயற்சித்திருப்பது ஏனோ உறுத்துகிறது.. கதையின் ஓட்டத்திற்கும் சிறிது தொய்பு கொடுக்கிறது... இத்தனை விஷயங்களை வெவ்வேறு தருணங்களில் வெளிப்படுத்தியிருக்கலாம். மேலும் அவ்வளவாக சம்பவங்கள் இந்தப்பகுதியில் இல்லாத்ததும் சின்ன ஏமாற்றம்... ஒரு கமெர்சியல் படத்தில் இடையில் ஆர்ட் பிலிம் தொனி இருப்பது போல்.. இன்னும் கமர்சியலாக.. எதிர்பார்க்கிறேன்..:icon_b:

பரபரவென்று இத்தனை பாகங்கள் இருந்ததும் இதற்கு காரணமாய் இருக்கலாம்.
தவறாயிருந்தால் மன்னிக்கவும்..

ஆனால் கதையென்று பார்த்தால் எடுத்த கருவை அலச நேர்கோடில் பயணித்திருக்கிறீர்கள்.. பயணித்துக்கொண்டிருக்கிறீர்கள்.. அடுத்து என்னவாகும் என்று எதிர்பார்ப்புடன் இருக்கிறோம்.

சிவா.ஜி
06-07-2010, 02:48 PM
பணவிஷயத்தில் அனைத்து அரசியல்வாதிகளும் ஒன்றாகிவிடுவதைத்தான் நாம் பார்க்கிறோமேங்க கலையரசி.

தொடர்ந்த உங்கள் ஊக்கத்திற்கு மிக்க நன்றிங்க.

சிவா.ஜி
06-07-2010, 02:54 PM
மதி....இந்த அத்தியாயம் சம்பவங்கள் இல்லாத அத்தியாயம்தான். இது நான் ஏற்கனவே தீர்மாணித்ததுதான். எல்லா விஷயங்களையும் சொல்ல வேண்டுமஎன்பதற்காக சொல்லவில்லை. தங்கள் தரப்பை நியாயப்படுத்தவும், பலருக்குத் தெரியாத உண்மைகளை...இவனாவது போய் சொல்லட்டுமே என்ற ஆதங்கத்திலும் தேபான்ஷூ ஆவேசமாய் கொட்டுகிறான்.

அதை தடை செய்ய முடியுமா....எழுதும்போது என்னால் முடியவில்லை. நான் ஏற்கனவே சொன்னதுதான் மதி. கொஞ்சம் பேசுவார்கள் என்று...அந்தக் கொஞ்சம்...அதிகமாகியிருந்தால்...அடுத்த அத்தியாயத்தில் கொஞ்சம் குறைத்துக்கொள்கிறேன்...சரியா...?

நல்லதோர் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி மதி.

(உங்களோட த.கொ.செ...ஏழுலேயே நிக்குது....கொஞ்சம் என்னன்னு பாருங்க....சீட்டு நுனிக்குக் கொண்டுவந்து உக்கார வெச்சுட்டுப் போயிட்டீங்களே.....)

மதி
06-07-2010, 03:08 PM
அதை தடை செய்ய முடியுமா....எழுதும்போது என்னால் முடியவில்லை. நான் ஏற்கனவே சொன்னதுதான் மதி. கொஞ்சம் பேசுவார்கள் என்று...அந்தக் கொஞ்சம்...அதிகமாகியிருந்தால்...அடுத்த அத்தியாயத்தில் கொஞ்சம் குறைத்துக்கொள்கிறேன்...சரியா...?

நல்லதோர் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி மதி.

(உங்களோட த.கொ.செ...ஏழுலேயே நிக்குது....கொஞ்சம் என்னன்னு பாருங்க....சீட்டு நுனிக்குக் கொண்டுவந்து உக்கார வெச்சுட்டுப் போயிட்டீங்களே.....)
அட நீங்க உங்க விருப்பத்திற்கு எழுதுங்க... நீங்க மாத்தி எழுதணும்னு சொல்லல.. என் விருப்பத்த சொன்னேன்.. :)

உதசெ..கு ஏழரை போல..ஹிஹி.. சில குழப்பத்தில இருந்தேன். இப்போ தெளிஞ்சுடுச்சு.. இனி அடுத்தடுத்து எழுத வேண்டியது தான்..:icon_b:

சிவா.ஜி
06-07-2010, 03:24 PM
ஆஹா...சந்தோஷமான செய்தி. சீக்கிரம் வாங்கப்பு.....வேட்டையை சீக்கிரம் முடிச்சிட்டு...வந்து வேட்டியைப் போட்டு உக்காந்துக்கறேன்.

த.ஜார்ஜ்
06-07-2010, 04:09 PM
சிவா முதல் இரண்டு அத்தியாயங்கள் மட்டும்தான் படித்தேன்.[தொடர்கதை படிப்பதில் எனது சோம்பெறிதனத்துக்கு இணையில்லை]
மர்ம முடிச்சுகளோடு நகர்கிறது கதை.. அரசியல் களத்த்தினுடே பயணிக்குமோ? விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.. சாவகாசமாக முழுதும் படிக்கிறேன்.வாழ்த்துக்கள்.

Nivas.T
06-07-2010, 04:49 PM
உண்மைதான் அரசாங்கம் நினைத்தால் ஒரு கிராமத்தை என்ன ஒரு இனத்தையே அழிக்கலாம்

கதை உண்மை நிகழ்வுகளை மட்டுமே சுற்றுவதால் மிகவும் இயல்பாய் இருக்கிறது கதை ஓட்டம், இனி ஓட்டம் அதிகரிக்கும்...............

அமரன்
06-07-2010, 06:32 PM
வாதப்பிரதிவாதங்களை உரையாடல் முலாம் பூசிக் காட்டியுள்ளிர்கள். லீலுமா நினைத்ததைப் போல நானும் நினைச்சேன். தப்பீட்டான் சோட்டு.

தொடருங்க சிவா.

govindh
06-07-2010, 07:00 PM
அதி வேக உரையாடல்கள்...
அர்த்தம் பொதிந்த கருத்துக்கள்...
பணத்துக்காக கூடிக் கொள்ளும் கட்சிகள்..
என்று நிறையத் தகவல்களை புரிய வைத்து
தொடர்கிறது வேட்டை...

தொடருங்கள் அண்ணா...

பா.ராஜேஷ்
06-07-2010, 09:12 PM
அனல் பறக்கும் விவாதங்கள்... அருமையான் தகவல்கள்... நன்றாக வந்துள்ளது இந்த அத்தியாயம்... தொடருங்கள் அண்ணா..

கீதம்
06-07-2010, 11:25 PM
இயற்கையோடு இணைந்து வாழும் அந்த மலைவாழ்மக்களின் வாழ்வையும், அவர்களது மனக்குமுறலையும் அழகாக எங்களிடம் சொல்லிவிட்டீர்கள். ஆனால் அரசாங்கத்துக்கு எடுத்துச் சொல்வது யார்? அப்பாவி மக்களின் மீதான தாக்குதல்கள் தொடர்வதை நிறுத்த முனைவது எப்போது?

மிகவும் சிரத்தையுடன் பயணிக்கும் உங்களுக்கு என் மனமுவந்த பாராட்டுகள் அண்ணா.

சிவா.ஜி
07-07-2010, 05:58 AM
சிவா முதல் இரண்டு அத்தியாயங்கள் மட்டும்தான் படித்தேன்.[தொடர்கதை படிப்பதில் எனது சோம்பெறிதனத்துக்கு இணையில்லை]
மர்ம முடிச்சுகளோடு நகர்கிறது கதை.. அரசியல் களத்த்தினுடே பயணிக்குமோ? விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.. சாவகாசமாக முழுதும் படிக்கிறேன்.வாழ்த்துக்கள்.

மெதுவா வாங்க ஜார்ஜ். இங்கதானே இருக்கப்போகுது. ரொம்ப நன்றி.


உண்மைதான் அரசாங்கம் நினைத்தால் ஒரு கிராமத்தை என்ன ஒரு இனத்தையே அழிக்கலாம்
கதை உண்மை நிகழ்வுகளை மட்டுமே சுற்றுவதால் மிகவும் இயல்பாய் இருக்கிறது கதை ஓட்டம், இனி ஓட்டம் அதிகரிக்கும்...............

உண்மைதான் அதான் பார்த்திருக்கிறோமே... நன்றி நிவாஸ்.


வாதப்பிரதிவாதங்களை உரையாடல் முலாம் பூசிக் காட்டியுள்ளிர்கள். லீலுமா நினைத்ததைப் போல நானும் நினைச்சேன். தப்பீட்டான் சோட்டு.
தொடருங்க சிவா.

ஆஹா...நீங்களுமா பாஸ்....!! தொடர்ந்த ஊக்கத்திற்கு நன்றி பாஸ்.


அதி வேக உரையாடல்கள்...
அர்த்தம் பொதிந்த கருத்துக்கள்...
பணத்துக்காக கூடிக் கொள்ளும் கட்சிகள்..
என்று நிறையத் தகவல்களை புரிய வைத்து
தொடர்கிறது வேட்டை...

தொடருங்கள் அண்ணா...

மிக்க நன்றி கோவிந்த்.


அனல் பறக்கும் விவாதங்கள்... அருமையான் தகவல்கள்... நன்றாக வந்துள்ளது இந்த அத்தியாயம்... தொடருங்கள் அண்ணா..

எப்போதும்போல ஊக்கமூட்டும் பின்னூட்டத்திற்கு நன்றி ராஜேஷ்.


இயற்கையோடு இணைந்து வாழும் அந்த மலைவாழ்மக்களின் வாழ்வையும், அவர்களது மனக்குமுறலையும் அழகாக எங்களிடம் சொல்லிவிட்டீர்கள். ஆனால் அரசாங்கத்துக்கு எடுத்துச் சொல்வது யார்? அப்பாவி மக்களின் மீதான தாக்குதல்கள் தொடர்வதை நிறுத்த முனைவது எப்போது?

மிகவும் சிரத்தையுடன் பயணிக்கும் உங்களுக்கு என் மனமுவந்த பாராட்டுகள் அண்ணா.

அரசாங்கம்...தூங்கிக்கொண்டிருப்பதாய் நடித்துக்கொண்டிருக்கிறது. இத்தனை துப்பாக்கி வேட்டுச் சத்தத்திலும் விழித்துக்கொள்ள முயற்சிக்காமல்...வேடிக்கை பார்க்கிறது. பிரச்சனையின் வேரை நாடாமல்...விழுதுகளை வெட்டிக்கொண்டிருக்கிறது....பார்ப்போம்மா...என்ன நடக்கப்போகிறதென்று.

தொடர் ஊக்கத்திற்கு மிக்க நன்றி தங்கையே.

அன்புரசிகன்
07-07-2010, 06:32 AM
உங்க ரேஞ்சுக்கு இந்த பாகம் அவ்வளவாக சோபிக்கவில்லை. ஆனாலும் அதை தவிர்க்கமுடியாதென்றே நினைக்கிறேன். வெளியிலிருந்து பார்ப்பவர்களின் மனதில் அநேகமாக பாரியைப்போல் தான் நினைப்பதால் அவ்வாறே யதார்த்தத்தையும் காட்டவேண்டிவரும். அவர்கள் பக்க நியாயம் இவர்கள் பக்க விவாதம் என்ற வழமையான பாணியிலிருந்து தப்புவது கடினமே... ஆனாலும் நிறைய தகவல்கள் சேகரித்து தருகிறீர்கள். அசராது தொடருங்கள். வாழ்த்துக்கள் அண்ணா...

சிவா.ஜி
07-07-2010, 06:39 AM
புரிந்து இட்ட பின்னூட்டக் கருத்துக்கு மிக்க நன்றி அன்பு. தொடர்ந்து வருவதற்கும் ரொம்ப நன்றி.

சிவா.ஜி
08-07-2010, 04:48 PM
அத்தியாயம்:11


இரவு உணவுக்குப் பின், சோட்டு தான் பார்த்த ஹிந்திப்படங்களைப்பற்றி வாய் ஓயாமல் பேசிக்கொண்டிருந்தான். அதில் பாதிக்குமேல் பாரிக்குப் புரியவில்லை...இருந்தும் அவன் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தான். அவன் சொன்னவற்றில் தான் பார்த்தப் படங்களைப் பற்றி மட்டும் அவ்வப்பொது ஏதாவது சொல்லிக்கொண்டிருந்தான். ஏழு மணிக்கெல்லாம் இரவு உணவை முடித்துக்கொண்டு அந்தக் கிராமமே அடங்கிவிட்டது. ஆனாலும், சில ஆண்களும், பெண்களும் கையில் வில்லுடனும், ஈட்டியுடனும் சுற்றி வந்துகொண்டிருந்தார்கள். முன்பெல்லாம், காட்டு மிருகங்களுக்காக காவலிருந்தவர்கள்...இப்போது நாட்டு மனிதர்களிடமிருந்து காப்பாற்றிக்கொள்ளக் காவலிருக்கிறார்கள்.

ஜெய்ராம், சாப்பிட்டப் பிறகு வெளியே போனவன்...ஒரு மணி நேரம் கழித்து திரும்பி வந்தான். பாரியைப் பார்த்து,

“சீக்கிரமா தூங்குடா....டயர்ட்டா இருப்ப...டே சோட்டு...சும்மா தொணத்தொணன்னு பேசிக்கிட்டிருக்காம அவனை தூங்கவிடு”

என்றதும்,

“பரவால்லடா ஜெய்ராம். எனக்கும் தூக்கம் வரல...பேசிக்கிட்டிருக்கட்டும்.”

“என்கிட்ட இவ்ளோ பேசமாட்டாண்டா...அதென்னவோ உன்கிட்ட ரொம்ப பேசறான்...”

“நீ இவனோட முதலாளிடா...அந்த லிமிட்டேஷன் கொஞ்சமாவது இருக்குமில்ல...”

“நான் எப்பவுமே இவனைப் பொருத்தவரைக்கும் அப்படி நினக்கறதே இல்லடா...என் தம்பி மாதிரிதான் நினைக்கிறேன்...”

“இருந்தாலும்...அவன்கிட்ட அந்த தயக்கம் இருக்கத்தானே செய்யும்..”

இருவரும் தன்னைப் பார்த்துப் பேசியதால்...அவர்கள் தன்னைப் பற்றித்தான் பேசுகிறார்கள் என்பதைப் புரிந்துகொண்ட சோட்டு லேசான வெட்கத்துடன் இளித்தான்.

சடசடவென சத்தம் கேட்டது. மழை பெய்யத்தொடங்கிவிட்டது. பாரிக்கு மிகவும் பிடித்த வாசனைக் காற்றில் பரவியது. ஆழ்ந்து உள்ளிழுத்தான். ஏனோ ஒரு இனம்புரியாத உணர்ச்சி மனதில் தோன்றியது. அம்மா, அப்பா...தன் சிறுவயது தெருவிளையாட்டு என அரை நொடிக்குள் அத்தனையும் அவன் சிந்தனையில் தோன்றி மறைந்தது. மழை வலுத்ததும் பாரி தன்னிச்சையாய் கூரையைப் பார்த்தான்.

“எவ்வளவு மழை பெஞ்சாலும் ஒரு சொட்டுக்கூட ஒழுகாதுடா. வெறும் புல்லுதான்...ஆனா செம ஸ்ட்ராங். அதுமட்டுமில்ல...இப்ப வெளியே குளிர் அதிகமாயிடும். குடிசைக்குள்ள மட்டும் கதகதப்பாவே இருக்கும். நம்ம ஏ.சி எல்லாம் எதுக்கு...?”

ஜெய்ராம் சொன்னதும்தான் பாரியும் அந்தக் கதகதப்பை உணர்ந்தான். ஏனோ மனது சந்தோஷமாய் இருந்தது. நடந்த நிகழ்ச்சிகள், தேபான்ஷூவோடான வாக்குவாதங்கள், கால் வலி என கனமானவைகளுக்குப் பிறகான இந்த மழைநேரம், போக்குவரத்தில் மாட்டி, அடிக்கடி கடிகாரத்தைப் பார்த்து ரயில் கிளம்பும் நெரத்தை நினைத்து பரபரப்பாகி, ஸ்டேஷனுக்குள் நுழைந்து...கிளம்பிவிட்ட ரயிலில், திறந்திருந்த ஏதோ ஒரு வாசல் வழியாக தன்னையும், தன் பெட்டிகளையும் நுழைத்து, தனக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் வந்து அமர்ந்ததும் ஏற்படுமே ஒரு நிம்மதி...அந்த நிம்மதி ஏற்பட்டதைப் போல உணர்ந்தான். மழைக்கு இருக்கும் எத்தனையோ சக்திகளில் இதுவும் ஒன்றோ என ஆச்சர்யப்பட்டான்.

சூடாய் தேநீர் அருந்தினால் நன்றாக இருக்குமே என மனம் நினைத்தது. தலையில் ஒரு சாக்கை கவிழ்த்துக்கொண்டு, கையில் வைத்திருந்த பாத்திரத்தை, இலைகளால் பிண்ணப்பட்ட பெரிய தட்டைப் போன்ற ஒன்றால் மூடிக் கொண்டு உள்ளே நுழைந்த புலியாவைப் பார்த்ததும் ஆச்சர்யப்பட்டான். அவள் கீழே வைத்த ஆவி பறக்கும், வேர்கடலையையும், தேநீரையும் பார்த்து,இவளுக்கு மனதைப் படிக்கும் சக்தி இருக்குமோ என நினைத்துக்கொண்டே,

“வாவ்...எப்படி புலியா...தேநீர் இருந்தால் நன்றாக இருக்குமே என நான் மனதில் நினைத்தவுடன் தேநீரோடு வந்து நிற்கிறாய்.”

அவன் அப்படிச் சொன்னதும், வெட்கப்பட்டுக்கொண்டே...

“நீங்க நினைச்சது தெரியாதுண்ணா...இந்தக் குடிசையில இன்னும் விளக்கு எரிஞ்சிக்கிட்டிருந்தது. முழிச்சிட்டிருப்பீங்க, உங்களுக்கு மழைக்கு சூடா தேநீர் குடிச்சா நல்லாருக்குமேன்னு நினைச்சேன்...அப்படியே கொஞ்சம் வேர்கடலையையும் வேக வெச்சு எடுத்துக்கிட்டு வந்தேன். ஜெய்ராம் அண்ணன் இங்க வரும்போதெல்லாம்...மழை நேரத்துல என் கிட்ட தேநீரும், கடலையும் கேப்பாங்க.அதாண்ணா”

சொல்லிவிட்டு கிளம்பியவளைப் பார்த்து,

“மழை ரொம்ப அதிகமா இருக்கே புலியா...நீயும் உக்காரு டீ சாப்பிட்டுட்டு மழை விட்டப்பறம் போகலாமே”

என்ற பாரியைப் பார்த்து,

“பரவால்லன்னா....நான் டீ சாப்பிடமாட்டேன். அதுவுமில்லாம...மழை இப்போதைக்கு நிக்காது. நான் அந்த எதிர்ல இருக்கிற குடிசையிலத்தான் இருக்கேன். போயிடுவேன் வரேண்ணா”

விறுவிறுவென்று நடந்து மறைந்தாள்.

அவள் சொன்னதைப் போலவே மழை காலைவரைக் கொட்டியது. தூங்கி எழுந்து, வெளியே வந்தப் பாரி, மழையில் நனைந்து..மிச்ச நீரைச் சொட்டுச் சொட்டாகக் கொட்டிக்கொண்டிருந்த குடிசைக் கூரைகளின் விளிம்புகளையும், மரத்தின் இலைகளையும் பார்த்ததும்...உற்சாகமாய் உணர்ந்தான்..கைத்தாங்கலில்லாமல் நடக்க முடிந்தது. இருந்தாலும் லேசாய் வலியிருந்தது.அன்று முழுவதும் அந்தக் கிராமத்திலேயே தங்கியிருந்தார்கள். மெல்ல நடந்து அக்கம் பக்கத்தை சுற்றிப் பார்த்தான். நேற்றைய மழையின் காரணமாய் ஆங்காங்கே...உருவாகியிருந்த அருவிகள்...அந்தக் காட்டை ஒரேநாளில் வயோதிகமடைய வைத்துவிட்டதைப் போல வெள்ளை நரைகளாகத் தென்பட்டன. காற்றிலிருந்த ஈரப்பதம் புத்துணர்ச்சியை அளித்தது. ஓரத்து மரத்தில் பூத்திருந்த செங்கொன்றைப் பூக்களின் கொத்து...ரத்தத்தீற்றலாய் தெரிந்தது. சட்டென்று உற்சாகம் வடிந்தது. இந்தப் பசுமையானக் காட்டில்தான் எவ்வளவு ரத்தம்....ஏன்...இத்தனை வன்முறை...எதற்கு இவ்வளவு கொலைகள்....எப்போது இந்தக் கொடுமைகள் தீரும்....?

சிந்தித்துக்கொண்டே நடந்தவன் கண்களில் அந்தப் பள்ளத்தாக்குத் தெரிந்தது. வெற்றிலையில் சுண்ணாம்புத் தடவியதைப் போல பால் வெள்ளையாய் விழுந்துகொண்டிருந்த பெரிய அருவி ஒன்று பச்சை மரங்களுக்கு நடுவே தெரிந்தது...மரங்களில் லங்கூர் இனக் குரங்குகள்...சத்தம் போட்டுக்கொண்டே...தாவிக்கொண்டிருந்தன....மழைக்காக ஒடுங்கி, ஒதுங்கியிருந்த பறவைகள் சந்தோஷமாய் சிறகடித்துப் பறக்கத் தொடங்கியிருந்தன...மீண்டும் உற்சாகமானான்.

அடுத்தநாளும் அங்கேயே இருந்ததில்...அங்கிருந்த பெரும்பாலான மலைவாழ் மக்களை சந்தித்து, அவர்களைப் புகைப்படமெடுத்து, அதை காமிராவின் சின்னத்திரையில் காட்டினான். பெண்கள் வெட்கத்துடன் சிரித்தார்கள். ஆண்களும் குழந்தைகளும்...மீண்டும், மீண்டும் காட்டச்சொல்லி சந்தோஷித்தார்கள். புலியாவும், சோட்டுவும் மொழிபெயர்ப்பாளர்களானார்கள். கால்வலியும் ரொம்பவே குறைந்துவிட்டிருந்தது. நாளைக் காலை அடுத்தக் கிராமத்துக்குப் புறப்படலாம் என்றும், தேபான்ஷூவும், அவருடன் மற்ற போராளிகள் ஆறுபேரும், புலியா, சோட்டு, ஜெய்ராம் பாரி என அனைவரும் விடியற்காலையிலேயேக் கிளம்ப வேண்டுமென்றும் ஏற்பாடானது.

அடுத்தநாள் பதினாலுக் கிலோமீட்டருக்கானப் பயணம் விடியற்காலையிலேயேத் தொடங்கியது. கிராமத்து மக்கள் கூடி நின்று வழியனுப்பினார்கள். காட்டுப் பாதையில் நடக்கத் தொடங்கினார்கள். உயரமான மரங்களை ஆச்சர்யமாய் பார்த்துக்கொண்டே வந்தான் பாரி. சட்டென்று அவனுக்குள் அந்த எண்ணம் தோன்றியது. இதே பாதையில் ராமரும், லட்சுமணரும் துணையாக நடக்க சீதையும் நடந்திருந்திருக்கலாம்....பக்கத்தில் எங்காவது பர்ணசாலை அமைத்திருக்கலாம்...சீதை அங்கே பொன்மானைக் கண்டிருக்கலாம்...ராமரும் அதைக் கொன்றிருக்கலாம்...சூர்ப்பனகையின் மூக்கறுத்ததில் ரத்தம் சிந்தியிருக்கலாம்....பல யுகங்களுக்கு முன்பே ரத்தம் பார்த்தக்காடு என்பதால்...இப்போதும் அது தொடர வேண்டுமா....

அவன் சிந்தனையைக் கலைத்தது சோட்டுவின் சுரண்டல். பாரியின் கையைச் சுரண்டினான். என்ன என்பதுபோல பாரி அவனைப் பார்க்க, காதுகளுக்குள் இரண்டு விரல்களை வைத்து சைகைக் காட்டினான். பாரி சிரித்துக்கொண்டே, பையிலிருந்து பாட்டுக் கருவியை எடுத்து அவன் சட்டையில் சொருகி, ஒலிப்பான்களை அவனுடையக் காதுகளில் சொருகினான். இயக்கினான். சோட்டு சந்தோஷமாய் தலையாட்டிக்கொண்டே துள்ளலான நடையில் வேகமாய் நடந்தான்.

ஆளுக்கொரு கம்பை கையில் வைத்துக்கொண்டு ஊன்றி, ஊன்றிப் பார்த்துக்கொண்டே நடந்தார்கள். யாரும் யாருடனும் பேசாமல் நட்ந்தார்கள். நடக்கும்போது பாதையிலிருந்த சருகுகளின் சர சர சத்தத்தையும்...சின்னச் சின்ன பறவைகளின் சத்தத்தையும் தவிர அமைதியைப் போர்த்திக்கொண்டிருந்தக் காட்டின் அந்த அமைதியைக் குலைத்தது டுமீல் என்ற சத்தமும், ஒரு போராளி மண்ணில் சரிந்த சத்தமும்.

துணை ராணுவத்தினரது தாக்குதலை தேபான்ஷூ எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும் நொடியில் சுதாரித்துக்கொண்டு, அனைவரையும் பதையை விட்டு விலகி மறைவுக்குப் போகும்படி சொன்னார். வெகு வேகமாய் அனைவரும் பக்கத்து அடர்ந்தப் பகுதிக்குள் நுழைந்து முன்னேறினார்கள். தோட்டாக்கள் தொடர்ந்து சீறிக்கொண்டிருந்தன. போராளிகளும் எதிர் தாக்குதலில் ஈடுபட்டார்கள்...சுட்டுக்கொண்டே முன்னேறியவர்கள் சட்டென்று ஒரு வெட்ட வெளிக்குள் நுழைந்துவிட்டார்கள். அடுத்த மறைவானப் பகுதிக்கு இன்னும் சில மீட்டர்கள் தொலைவிருந்தது. பாரியையும் சோட்டுவையும், ஜெய்ராமையும் முன்னால் போகச் சொல்லிவிட்டு, அவர்களை மறைத்தபடி பின்னால் திரும்பி நின்றுகொண்டு துப்பாக்கியால் சுட்டபடி...பின்புறமாகவே நகர்ந்தார்கள்.
அனைவரும் மறைவானப் பகுதிக்குள் நுழைவதற்குள் மற்றொரு போராளி சாய்ந்தார். அவரை கவனிக்கக்கூட நேரமில்லாமல் ஓடினார்கள். அனைவரும் மறைவுக்குள் நுழைந்ததும், சோட்டு திடீரென்று திரும்ப வெட்டவெளிக்கு ஓடி வந்து, தவறி விழுந்திருந்த பாட்டுக் கருவியை குனிந்து எடுத்தான். திரும்ப நிமிரவும், போராளிகளில் ஒருவர் துணை ராணுவத்தினரைப் பார்த்து சுட்டதில் பாய்ந்த தோட்டா சீறிக்கொண்டு வரவும் சரியாய் இருந்தது. தோட்டா சோட்டுவின் நெஞ்சைத் துளைத்துக்கொண்டு போனது. அவன் கீழே சரிவதைப் பார்த்தப் பாரி அலறுவதற்காகத் திறந்த வாயை, அவசரமாய்ப் பொத்திய ஜெய்ராம்...கண்களில் வழிந்த கண்ணீரோடு....பாரியின் கைகளைப் பிடித்துக்கொண்டு வேகமாய் புதர்களுக்குள் மறந்தான். அதிர்ச்சியில் நின்ற புலியாவை உலுக்கி, இழுத்துக்கொண்டு ஓடினார் தேபான்ஷு. மிச்சமிருந்த நான்கு போராளிகளும் சுடுவதை நிறுத்திவிட்டு கூடவே ஓடினார்கள்.

ஆவேசமாய், வேகத்தைக் கொஞ்சங்கூடக் குறைக்காமல் ஓடி வந்தவர்கள் ஒரு பாறைக்குப் பின்னால் வந்து நின்றார்கள். அனைவரது நுரையீரல்களும் காற்றுக்காகத் தவித்தன. மூக்காலும், வாயாலும், காற்றை வேகமாக உள்ளிழுத்துக்கொண்டார்கள். கொஞ்சம் ஆசுவாசமானவுடன். அமைதியாய் உற்றுக் கேட்டார்கள். எந்த சத்தமும் இல்லாததில் நிம்மதியடைந்து...அங்கேயே சற்று நேரம் அமர்ந்தார்கள். பாரியின் காலில் போட்டிருந்தக் கட்டு நழுவிட்டிருந்தது. ஆறிக்கொண்டுவந்தக் காயத்திலிருந்து ரத்தம் வழிந்துகொண்டிருந்தது. சட்டென்று ஒரு துணியைக் கிழித்துக் கட்டினாள் புலியா. பாரிக்கு வலிகூட உறைக்கவில்லை. சோட்டு சரிந்துவிழுந்ததே கண்களில் உறைந்துவிட்டிருந்தது. பாட்டைக் கேட்டுக்கொண்டே தலையாட்டிக்கொண்டு உற்சாகத் துள்ளலாய் அவன் நடந்து வந்தக் காட்சி...கண்ணுக்கு முன்னால் தெரிந்தது. ஜெய்ராமின் கைகளைப் பிடித்துக்கொண்டு,

“ஜெய்ராம்...சோட்டு....பாவண்டா...அனாதையாக் கெடக்கறாண்டா...கடவுளே...”

அரற்றினான். ஜெய்ராமின் கண்களிலும் கண்ணீர். புலியா...அழுதாள். தேபான்ஷு ...மனதின் வலியை முகத்தில் காட்டினார். வைத்திருந்தத் தண்ணீரை எடுத்து ஆளுக்குக் கொஞ்சம் குடித்தார்கள். யாருக்கும் என்ன பேசுவதென்றே தெரியவில்லை. தேபான்ஷூ...

“இங்கே அதிகநேரம் தாமதிக்க முடியாது. உடனடியாய் மாற்றுவழியில் நாம் கிராமத்தைச் சென்று அடையவேண்டும். ராணுவத்தினர் பின் தொடர்வதாய் தெரியவில்லை. இருந்தாலும் நாம் இங்கே இருப்பது ஆபத்து உடனே கிளம்பலாம்..”

எனச் சொல்லிவிட்டு, துப்பாக்கியை தோளில் மாட்டிக்கொண்டு நடக்கத் தொடங்க அனைவரும் அவரை பின் தொடர்ந்தார்கள்.

தொடரும்....

மதி
08-07-2010, 04:56 PM
அதிர்ச்சியான பாகம்.. சோட்டுவுக்கு இப்படி நேர வேண்டுமா? நம் மனமும் பதைபதைக்கிறதே...

தொடருங்கள்.. அடுத்து நடக்கும் அட்டூழியங்களை..

பா.ராஜேஷ்
08-07-2010, 05:36 PM
பாவம் சோட்டு... இப்படி அநியாயமாக சோட்டுவை கொன்னுட்டீங்களே!! ஏன் இந்த கொலை வெறி!!:D போன அத்தியாயத்துல மத்தவங்க சொன்னத இந்த அத்தியாயத்துல நிறைவேற்றிட்டீங்களாக்கும்...

நன்றாகவே வந்துள்ளது... பாராட்டுக்கள் அண்ணா !!

அமரன்
08-07-2010, 05:49 PM
கவித்துவம் கலந்து வீசும் பாகத்தில், செங்கொன்றை மலர்களில் வண்ணத்திலும் வர்ணணையிலும் அங்கத்தின் சாரத்தை குறிப்புணர்த்தி, சுறு சுறுப்பாகக் கதையை நகர்த்திய விதம் விரும்ப வைக்குது.

கதையின் ஆரம்பத்தில் சோட்டுவை அறுமுகஞ் செய்யும் போது கதையில் ஏதாவது தாக்கத்தை ஏற்படுத்துவான் என்று நினைத்தேன். அதன் பின்னர் அவனுடைய பாத்திரப் படைப்பு அவனுக்கு ஏதோ ஆகப்போவதாவும், அதன் மூலம் வாசகர் மனங்களைக் கனக்க வைக்கப் போவதகவும் நினைவு அவ்வப்போது வந்து போனது. ஆக சோட்டு எனக்குக் குழப்பத்தையே தந்து கொண்டிருந்தான். இப்ப பரவாயில்ல.

தொடருங்கள் சிவா.

கீதம்
08-07-2010, 10:19 PM
இந்த அத்தியாயம் உணர்ச்சிகளின் கலவை.

புலியாவின் பாசமான கவனிப்பு, மண்வாசனை கிளப்பும் மனவோட்டங்கள், மழைக்கால வர்ணனை, சோட்டுவின் பிரிவு அத்தனையும் உள்ளடக்கி மனதை வசமிழக்கச் செய்தன.

கண்முன்னே போராளிகள் உயிர்விடுவதையும், அதைப் பார்த்துக்கொண்டிருப்பதைத் தவிர வேறேதும் செய்ய இயலாத கையாலாகாத்தனத்தையும் சொல்லி நிதர்சனத்தை உணர்த்திவிட்டீர்கள். கனத்த மனதுடன் பாராட்டுகிறேன், அண்ணா. தொடரட்டும் பசுமைப்புரட்சி.

govindh
08-07-2010, 10:56 PM
மனம் கனக்க வைக்கும் அத்தியாயம்...
எத்தனை... எத்தனை இழப்புகள்...
எதற்காக...?!
எப்போது இந்தக் கொடுமைகள் தீரும்....?

தொடருங்கள்.

அன்புரசிகன்
09-07-2010, 12:18 AM
இந்திய அரசை பாராட்டவேண்டும். தமிழருக்கு மட்டும் பாசம் காட்டாம வேறு இனத்தவருக்கும் தம் பாச மழை பொழிகிறார்கள். தொடருங்கள்.

சிவா.ஜி
09-07-2010, 06:16 AM
பாவம் சோட்டு... இப்படி அநியாயமாக சோட்டுவை கொன்னுட்டீங்களே!! ஏன் இந்த கொலை வெறி!!:D போன அத்தியாயத்துல மத்தவங்க சொன்னத இந்த அத்தியாயத்துல நிறைவேற்றிட்டீங்களாக்கும்...

நன்றாகவே வந்துள்ளது... பாராட்டுக்கள் அண்ணா !!

கதையோட முடிவுக்கு நெருங்கிக்கிட்டிருகோமில்ல....அதுக்கான நிகழ்வுகள்தான் இப்ப நடக்கறது ராஜேஷ். தொடர்ந்த ஊக்கத்துக்கு நன்றி.கதையின் ஆரம்பத்தில் சோட்டுவை அறுமுகஞ் செய்யும் போது கதையில் ஏதாவது தாக்கத்தை ஏற்படுத்துவான் என்று நினைத்தேன். அதன் பின்னர் அவனுடைய பாத்திரப் படைப்பு அவனுக்கு ஏதோ ஆகப்போவதாவும், அதன் மூலம் வாசகர் மனங்களைக் கனக்க வைக்கப் போவதகவும் நினைவு அவ்வப்போது வந்து போனது. ஆக சோட்டு எனக்குக் குழப்பத்தையே தந்து கொண்டிருந்தான். இப்ப பரவாயில்ல.
தொடருங்கள் சிவா.

எழுத்தாளனின் எழுத்தை வைத்தே அவனுடைய நாடி பிடிப்பதில் கில்லாடியாச்சே நீங்க...சோட்டுவின் மரணம்...எதிர்பார்த்த எதிர்பாராதது. நன்றி பாஸ்.
கண்முன்னே போராளிகள் உயிர்விடுவதையும், அதைப் பார்த்துக்கொண்டிருப்பதைத் தவிர வேறேதும் செய்ய இயலாத கையாலாகாத்தனத்தையும் சொல்லி நிதர்சனத்தை உணர்த்திவிட்டீர்கள். .

உண்மைதாங்க கீதம்...எதுவுமே செய்ய இயலாத நிலை...தொடர வேண்டியக் கட்டாயம்...உயிர் பிழைத்திருக்க வேண்டிய அவசியம்...போராளிகளின் நிலை இதுதாம்மா....நன்றி தங்கையே.


எப்போது இந்தக் கொடுமைகள் தீரும்....?
தொடருங்கள்.

அனைவருக்குள்ளும் எதிரொலிக்கும் கேள்வி...பதில் எங்கே, யாரிடத்தில் இருக்கிறது....??? நன்றி கோவிந்த்.


இந்திய அரசை பாராட்டவேண்டும். தமிழருக்கு மட்டும் பாசம் காட்டாம வேறு இனத்தவருக்கும் தம் பாச மழை பொழிகிறார்கள். தொடருங்கள்.

ஆமா..அன்பு...ரொம்பப் பாசக்காரங்க....ஆனா அளவுக்கு மீறிடுது....அதான் பிரச்சனை. நன்றி அன்பு.


அதிர்ச்சியான பாகம்.. சோட்டுவுக்கு இப்படி நேர வேண்டுமா? நம் மனமும் பதைபதைக்கிறதே...

தொடருங்கள்.. அடுத்து நடக்கும் அட்டூழியங்களை..
சோட்டுவுக்கு நேர்ந்தது...அங்கு வழக்கமாய் நிகழ்வது மதி....என்ன செய்வது...தொடரத்தான் வேண்டும்... தொடர்ந்த ஊக்கத்துக்கு நன்றி மதி.

Nivas.T
09-07-2010, 11:39 AM
"காட்டு மிருகங்களுக்காக காவலிருந்தவர்கள்...இப்போது நாட்டு மனிதர்களிடமிருந்து காப்பாற்றிக்கொள்ளக் காவலிருக்கிறார்கள்."

உண்மை வரிகள்

பாவம்ன அந்த பையன் அநியாயமா செத்துட்டான்

தீப்பொரிகளுடன் கண்ணீர் துளிகள்

சிவா.ஜி
09-07-2010, 11:55 AM
ஆமா நிவாஸ் அந்தப் பைய'னும்' பாவம்தான். தொடர்ந்த ஊக்கத்துக்கு நன்றிப்பா.

கலையரசி
09-07-2010, 02:46 PM
இயற்கை வர்ணனை மிகவும் அருமை. நாமே நேரில் மலைப்பிரதேசத்தில் பயணிப்பது போன்ற ஓர் உணர்வு.
பாவம் சோட்டு! அவனுக்கேற்பட்ட முடிவு தான் மனதைப் பாதித்தது. கதையின் முக்கிய நிகழ்வுகள் துவங்கிவிட்டன. இனிமேல் மிகவும் விறுவிறுப்பாக கதை நகரும். தொடருங்கள்.

சிவா.ஜி
09-07-2010, 03:23 PM
மிக்க நன்றிங்க கலையரசி. ஆமாம்...இனி...பல நிகழ்வுகள் நிகழ இருக்கிறது.

சிவா.ஜி
10-07-2010, 04:48 PM
அத்தியாயம்:12


குறுக்கு வழி என்று தேபான்ஷு சொன்ன வழி மிகக் கரடுமுரடாய் இருந்தது. முதல்நாள் பெய்த மழையின் காரணமாக...பல இடங்களில் தண்ணீர்த்தாரைகள் ஒழுகிக்கொண்டிருந்ததால்...வேகமாக நடக்க முடியாமல் தடுமாறினார்கள். சில இடங்களில் அடர்ந்த புதர்களுக்குள் நுழைந்து போக வேண்டியிருந்தது. புதரைவிட்டு வெளியே வந்ததும், உடலில் ஒட்டிக்கொண்ட அட்டைப் பூச்சிகளை அகற்ற சிரமப்பட்டார்கள். யாருடனும் யாரும் பேசாமல் மிக அமைதியாக நடந்துகொண்டிருந்தார்கள். ஒவ்வொருவர் மனதிலும் ஒவ்வொருவிதமான எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்ததை...இறுக்கமான முகபாவங்கள் காட்டிக்கொடுத்துக்கொண்டிருந்தது.

ஜெய்ராம், வெளியில் உறுதியாய் இருப்பதாய் காட்டிக்கொண்டாலும்...உள்ளுக்குள் சோட்டுவுக்காக அழுதுகொண்டிருந்தான். சின்னப் பையனாய் இருக்கும்போதிலிருந்தே அவனுடன் வளர்ந்தவன். கூடப்பிறந்த தம்பியைப்போல பாசம் வைத்திருந்தவன். அவனுடையத் தேவைகளை...குறிப்பறிந்து நிறைவேற்றுவான். சுறுசுறுப்பான பையன்....கடைசிக் காரியங்கள்கூட செய்யமுடியாமல்...அனாதைப் பிணமாக அவனை அங்கேயே விட்டுவிட்டு வரவேண்டிய சூழ்நிலையை எண்ணி வருந்தினான்.

பாரிக்கு...இன்னும் அவன் கையைச் சுரண்டி அந்த சாதனத்தைக் கேட்டதை மறக்க முடியவில்லை. பாவி....அது போனால் ஆயிரம் வாங்கிக்கொள்ளலாம்....நீயே போய்விட்டாயேடா....இனி எப்போது உன்னைப் பார்க்க முடியும்.....பாவம் என்னிடமிருந்து வாங்கியதை என்னிடம் திருப்பிக்கொடுக்க வேண்டுமே என நினைத்திருப்பான்....அதை அப்படியே விட்டுட்டு வந்திருக்கலாமே...கடவுளே....மனதுக்குள் புலம்பினான்.

புலியா...அழுதுகொண்டே வந்தாள். தன் தாய் தந்தை இறந்தபோதே உறுதியாய் இருந்தவள்...இந்தச் சின்னப்பையனின் சாவுக்கு அழுதது...இதயம் இரும்பாய் மாறிவிட்டாலும்...உள்ளுக்குள் இன்னும் மென்மையும், பெண்மையும் ஒட்டிக்கொண்டிருப்பதைக் காட்டியது.

எல்லோருக்கும் முன்னால் போய்க்கொண்டிருந்த தேபான்ஷூ, இறந்த தோழர்களைப் பற்றிக் கவலைப்படுவதிலும், கூடுதலாய்...பாரியையும், ஜெய்ராமையும்...பத்திரமாய் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டுமே என அதிகமாய்க் கவலைப் பட்டார். மிகுந்த எச்சரிக்கையோடு சுற்றிலும் பார்த்துக்கொண்டே...காதைக் கூர்மையாக்கிக்கொண்டு...நடந்தார்.

நல்லவேளையாய் வழியில் எந்த ஆபத்துமில்லாமல் அந்தக் கிராமத்துக்கு வந்து சேர்ந்தார்கள். நான்கு குடிசைகளை ஒன்றாய் இணைத்ததைப்போல இருந்த ஒரு இடத்துக்கு வந்தார்கள். தேபான்ஷூ அதை இந்தக் கிராமத்து மக்களின் சமுதாயக்கூடம் எனச் சொன்னார். அதற்கு அருகிலிருந்த குடிசை திறந்திருந்தது. இவர்கள் வருவதைப் பார்த்தவுடன் உள்ளிருந்து மூன்றுபேர் வெளியே வந்து வரவேற்றார்கள். உள்ளே சென்று அமர்ந்ததும்...ஆயாசமாய்..அப்படியே வெறுந்தரையில் சாய்ந்தான் பாரி. உடலைவிட, மனது மிகவும் களைத்துவிட்டிருந்தது. எப்போதும் சுறுசுறுப்பாய் இருக்கும் புலியாக்கூட சுவரின் மூலையில் குத்துக்காலிட்டு அமர்ந்துகொண்டாள். ஜெய்ராம், பாரிக்கு அருகில் வந்து அமர்ந்துகொண்டு...அவனுடையக் கையைப் பிடித்துக்கொண்டான்.

“என்னென்னவோ ஆகிப்போச்சுடா...நான் எதிர்பார்க்கவேயில்ல...வீட்டுக்குப் போனா சோட்டு எங்கன்னு எங்கம்மா கேப்பாங்களே...என்ன பதில் சொல்லப்போறேன். அதுமட்டுமில்ல...இனி என்னையும் பழைய மாதிரி காட்டுக்குள்ளப் போக விட மாட்டாங்க....ரொம்பக் கஷ்டமா இருக்குடா...நான் இன்னும் கொஞ்சநாளைக்கு வீட்டுக்குப் போக மாட்டேன். நீ இன்னைக்கே இங்கருந்து கிளம்பி பக்கத்து டவுனுக்குப் போயிடு. அங்கருந்து பஸ் புடிச்சா...ஸ்டேஷன் இருக்கிற ஊருக்குப் போயிடலாம். டவுன் வரைக்கும் இங்கருந்து யாராவது கூட வருவாங்க...கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கிட்டுக் கிளம்புடா...பேட்டியும் வேணாம்...ஒண்ணும் வேணாம்...”

மெள்ளக் கையை ஊன்றி எழுந்து அமர்ந்துகொண்ட பாரி, ஜெய்ராமை உணர்ச்சியேயில்லாத ஒரு வெற்றுப் பார்வைப் பார்த்து,

“கொஞ்சநாள் பழகின என்னாலேயே சோட்டுவோட இழப்பைத் தாங்க முடியல...உன்னால எப்படிடா....ஆனா தேபான்ஷூவைப் பாரு...சாதாரணமா இருக்கார். இவங்களுக்கெல்லாம்...இது சகஜமாகிடிச்சுன்னு நினைக்கிறேன். ம்...சரி...அதுக்காக...பேட்டி வேணான்னு நீ சொல்றதை நான் கேக்கப் போறதில்ல. உங்க கமாண்டர் இங்கதான இருக்கார்...கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கிட்டு அவரையும், இன்னும் சில பேரையும் பாத்து பேட்டியெடுத்துக்கிட்டுக் கிளம்பறேன்”

“நீ சொன்னக் கேக்க மாட்டே...சரி இரு நான் போய் அவரைப் பாத்துட்டு வரேன்”

அவனோடு புலியாவும் எழுந்து போனாள். பாரி தனிமையில் இருந்தான். மதியமாகிவிட்டிருந்தது. கிளம்பும்போது ராகியும், கம்பும் சேர்த்துக் காய்ச்சியக் கூழைக் குடித்துவிட்டு வந்ததோடு சரி. காட்டில் நடந்து வந்ததில்...வயிறு எப்போதோ காலியாகியிருக்கும். ஆனால்...பசிப்பதான உணர்வே இல்லாமலிருந்தான். உணவைப் பற்றியும் நினைக்கவில்லை. பலவித எண்ணங்களால் சூழப்பட்ட மூளை...சோர்வடைந்திருந்தது. அந்த சோர்வில் உறக்கம் வந்தது. அப்படியே படுத்து உறங்கிவிட்டான்.

எவ்வளவுநேரம் தூங்கினானென அவன் எழுந்திருக்கும்போது அவனுக்கேத் தெரியவில்லை. புலியாவும், ஜெய்ராமும் பேசிக்கொண்டிருந்தார்கள். இவன் விழித்ததைப் பார்த்ததும், ஜெய்ராம் இவன் பக்கமாய்த் திரும்பி,

“இப்ப எப்படிடா இருக்கு...? தூக்கத்துல ரொம்ப அனத்தினியே...ஃபீவர் இருக்கா...?”

கிட்டே வந்து தொட்டுப் பார்த்தான். சூடாக இருந்தது.

“ஃபீவர் இருக்கிற மாதிரிதான் தெரியுது. கஷாயம் வெச்சுக் குடுக்கச் சொல்றேன். வெறும் வயித்துலக் குடிக்க வேணாம்...இந்தா இந்த சாப்பாட்டைச் சாப்பிடு.”

பாரிக்கு முன்னால் நகர்த்தி வைத்த தட்டில் சாதமும், அதன் மேல் ஊற்றப்பட்டக் குழம்பும், கூடவே சில துண்டுகள் மாமிசமும் இருந்தது. பாரிக்கும் பசிப்பதைப்போல இருந்ததால்...பக்கத்திலிருந்த சொம்புத் தண்ணீரை எடுத்துக்கொண்டு கைகழுவ வெளியேப் போக எழ முயற்சித்தான். அவனை அப்படியே பிடித்து உட்கார வைத்து, வேறொரு தட்டை எடுத்துக் கொடுத்து கைகழுவச் சொன்னான் ஜெய்ராம். சாதத்தைத் தொட்டதும், சில்லென்றிருந்தது..

‘அப்பவே சூடா எடுத்துட்டு வந்தேண்டா...நீ நல்லாத் தூங்கிகிட்டிருந்த...அதான் அப்படியே மூடி வெச்சிட்டேன். வேணுன்னா...குழம்பை சூடு பண்ணி எடுத்துட்டு வரச் சொல்லட்டுமா....புலியா..”

“வேணாண்டா....இதே இருக்கட்டும்...”

அவனைத் தடுத்துவிட்டு, சாப்பிடத் தொடங்கியவன்...

“நீங்கள்லாம் சாப்டீங்களா..”

“ஆச்சு...நீ சாப்பிடு..”

அரை மணி நேரம் கழித்து, கால் காயத்துக்கு வேறு பச்சிலை வைத்துக் கட்டிவிட்டு, பாரியை அழைத்துக்கொண்டு அந்த சமுதாயக் கூடத்துக்குப் போனான் ஜெய்ராம். அங்கே அவனைப் பார்த்ததும் எழுந்துவந்து அழைத்துக்கொண்டுப் போய் ஒரு கட்டிலின் மேல் உட்கார வைத்தார் தேபான்ஷூ. சற்று நேரத்தில் ஒரு மனிதர் உள்ளே நுழைந்தார். கூடவே ஐந்தாறு பேரும் வந்தார்கள். பாரிக்கு எதிராய் போட்டிருந்த கட்டிலில் அவர் மட்டும் அமர்ந்துகொண்டார். மற்றவர்கள் தரையில் அமர்ந்துகொண்டார்கள். தேபான்ஷுவை அழைத்துப் பக்கத்தில் உட்கார வைத்துக்கொண்ட அந்த புதிய மனிதர்..எழுந்து பாரியின் கைகளைப் பிடித்துக் குலுக்கிவிட்டு,

“நான்..கிருஷ்ண சந்திர சாகா...உங்களைப் பற்றி ஜெய்ராம் சொல்லியிருக்கிறார். உட்காருங்க”

“நன்றி. தொடங்கலாமா..”

அத்தனைநேரமும் சோர்வாயிருந்த அவனது பத்திரிக்கையாளனின் மூளை, தன் தொழில் என வந்ததும் சுறுசுறுப்பானது. ஒலிப்பதிவுக் கருவியை உயிர்ப்பித்தான்.

“கேளுங்க...”

“ஏன் இந்த வழிமுறை...இதனால் நீங்கள் எதிர்பார்ப்பது கிடைக்குமென்று நினைக்கிறீர்களா?”

“வேறு என்ன வழியை கையிலெடுக்கச் சொல்கிறீர்கள்? சாத்வீகமா..இப்போதிருக்கும் பணத்தாசை பிடித்த அரசியல்வாதிகள் நடத்தும் அரசாங்கத்தின் முன்னால் எடுபடுமா? இந்தக் காட்டை சூழ்ந்திருக்கும் அபாயத்தைப் பற்றி நான் அதிகம் சொல்ல வேண்டியதில்லை...உங்களுக்கே தெரியும்..அனுபவித்துமிருக்கிறீர்கள். இப்படிப்பட்ட சூழலிலிருந்து இந்த மக்களைக் காப்பாற்ற ஆயுதங்களைத் தவிர வேறு வழியில்லை.”

“காட்டை மட்டுமே நினைக்கும் நீங்கள்...நாட்டிலும் உங்கள் கொள்கைகளை நிலைநிறுத்தி, ஒரு அரசியல் இயக்கமாக இயங்கினால்...நேபாளத்தைப் போல...ஜனநாயகமுறையில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றலாமே...பிறகு நீங்கள் நினைக்கும் சீர்த்திருத்தத்தை தைரியமாகச் செய்யலாமே...?”

“இப்போதைக்கு பற்றியெரியும் பிரச்சனை இந்த நியம்கிரி பிரச்சனை. இதிலிருந்து இந்த மக்களைக் காப்பற்ற வேண்டும்..”

“சரி அப்படிக் காப்பாற்றி...அவர்களை எந்த வழியில் முன்னேற்றுவது என்பதற்கான சரியான அஜெண்டா உங்களிடமிருப்பதாகத் தெரியவில்லையே. இங்கிருக்கும் பழங்குடியினரைப்போலத்தான் 40 வருடங்களுக்கு முன்னால், மிசோராம்,நாகாலாந்து, மேகாலயா மற்றும் மணிப்பூர் மாநில பழங்குடிகளும், படிப்பறிவில்லாமலிருந்தார்கள்...ஆனால் பல நலச்சேவை இயக்கங்களின் தொடர்ந்த சேவையில் இன்று மிசோராமில் 95 சதவீதம், மணிப்பூரில் 68.87 சதவீதம், மேகாலயாவில் 63 சதவீதம், நாகாலாந்தில் 66 சதவீதம் படிப்பறிவுள்ளவர்களாகியிருக்கிறார்கள்...அப்படி ஏதாவது திட்டத்தை நீங்கள் முன் வைத்ததாகவே தெரியவில்லையே?”

“பத்திரிக்கையாளர் என்பதை நிரூபிக்கிறீர்கள். நான் ஏற்கனவே சொன்னதைப்போல, முதலில் இந்தப் பிரச்சனை தீர வேண்டும்...பிறகுதான்..எங்களின் மற்ற திட்டங்களை அமல் படுத்த முடியும்”

“வன உரிமைகள், நிலங்களைக் கையகப்படுத்துதல், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைப்பது தொடர்பான பிரச்சினைகள் குறித்து உங்களுடன் பேச்சு நடத்த உள்துறை அமைச்சர் ஒப்புக்கொண்டிருக்கிறார். அவரது அழைப்பை ஏன் நிராகரித்தீர்கள்? அவர் உங்களை வன்முறையை நிறுத்திவைக்குமாறுதானே கேட்கிறார்.”

“அரசுப் படைகளைத் திரும்ப அழைத்துக் கொள்ளும்பட்சத்தில் பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயாராகவே இருக்கிறோம். வன்முறை எங்கள் செயல் திட்டத்தின் பகுதி அல்ல. நாங்கள் நடத்துவது எதிர்த் தாக்குதல் மட்டுமே. சிறப்புப் படை எங்கள் மக்களை நாள்தோறும் தாக்கிக்கொண்டிருக்கிறது. சென்ற மாதம் மட்டும் பாஸ்த்தரில் கோப்ரா படையினர் அப்பாவிப் பழங்குடியினரில் 18 பேரையும் 12 மாவோயிஸ்ட்டுகளையும் கொன்றிருக்கிறார்கள். சத்தீஷ்கரில் நாங்கள் மேற்கொண்டுள்ள வளர்ச்சிப் பணிகளுக்கு உதவுபவர்கள் கைதுசெய்யப்படுகிறார்கள். இதை நிறுத்துங்கள், வன்முறையும் நின்றுவிடும். சமீபத்தில் சத்தீஷ்கர் மாநிலக் காவல் துறைத் தலைவர் சால்வா ஜூடும் அமைப்புக்காக 6000 பேரைப் புதிதாகப் பணியில் சேர்த்திருக்கிறார். அந்த அமைப்புக்குப் புதிய ஆட்ளைத் தேர்வுசெய்யும் பணி தொடர்ந்துகொண்டிருக்கிறது. அந்த அமைப்பினர் பழங்குடியினரைக் கொலைசெய்கின்றனர், பாலியல் வன்முறைகளில் ஈடுபடுகின்றனர், அவர்களைச் சூறையாடுகின்றனர். பல பழங்குடிக் கிராமங்களை அந்த அமைப்பினர் சிதைத்துவிட்டிருக்கின்றனர். அரசு தான் விரும்புவதுபோல் என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கொண்டிருக்கட்டும். அவர்களை நாங்கள் நம்ப முடியாது.”

“எத்தகைய நிபந்தனையின் கீழ் நீங்கள் வன்முறையைக் கைவிடுவீர்கள்?”

“பழங்குடி மக்களிடம் பிரதமர் மன்னிப்புக் கேட்க வேண்டும், எங்களுடைய பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள படைகளை விலக்கிக்கொள்ள வேண்டும். கைதுசெய்யப்பட்டவர்கள் அனைவரையும் விடுவிக்க வேண்டும். படைகளை விலக்கிக்கொள்வதற்குத் தேவையான அவகாசத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அதுவரை தாக்குதல் நிறுத்தப்படுவதற்கான உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும். அரசு இதை ஒப்புக்கொள்ளுமானால் வன்முறையைக் கைவிடுவதற்கு நாங்கள் தயாராகவே இருக்கிறோம்.”

“அரசுப் படைகளைத் திரும்ப அழைத்துக்கொள்வதற்கு ஒப்புக்கொள்ளும் முன்பாகவே தாக்குதலை ஒரு மாதம்வரை நிறுத்திவைப்பதாக ஒரு உத்தரவாதத்தை உங்களால் அளிக்க முடியாதா?”

“நாங்கள் அதைப் பரிசீலிப்போம். நான் எங்கள் அமைப்பின் பொதுச்செயலாளரோடு பேச வேண்டும். அந்த ஒரு மாதத்தில் படையினர் தாக்குதலில் ஈடுபட மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? அரசு முறையாக அதை அறிவித்துவிட்டுப் படைகளைத் திரும்ப அழைத்துக்கொள்ளும் பணியைத் தொடங்கட்டும். அது வெறும் நாடகமாக இருந்துவிடக் கூடாது, ஆந்திரப் பிரதேசத்தில் நடந்ததுபோல. அங்கு அவர்கள் பேச்சுவார்த்தையைத் தொடங்கினார்கள், பிறகு நிறுத்திவிட்டார்கள். எமது மத்தியக் கமிட்டி உறுப்பினர் அரசுச் செயலரைச் சந்திப்பதற்காகச் சென்றார். பேச்சு வார்த்தைக்கு முன்வந்த அவரைக் காவல் துறை சுட்டுக்கொன்றது.”

“மக்கள் நலன் உங்களது செயல்திட்டம் என்றால் நீங்கள் ஏன் ஆயுதங்களை வைத்துக்கொண்டிருக்க வேண்டும்? உங்களுடைய இலக்கு பழங்குடியினர் நலனா அரசு அதிகாரமா?”
“அரசு அதிகாரம்தான். பழங்குடியினர் நலனுக்கு நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம். ஆனால் அரசு அதிகாரம் இல்லாமல் எங்களால் எதையும் சாதிக்க முடியாது. ராணுவமோ ஆயுதமோ இல்லாமல் யாராலும் அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ள முடியாது. அரசியல் அதிகாரம் இல்லாததன் காரணமாகவே பழங்குடியினர் சுரண்டப்படுகின்றனர், விளிம்புநிலைக்குத் தள்ளப்படுகின்றனர். அவர்களது சொந்த நிலங்களின் மீது இப்போது அவர்களுக்கு எந்த உரிமையுமில்லை. எனினும் எங்கள் தத்துவம் ஆயுதங்களைக் கோருவது அல்ல. ஆயுதங்களை நாங்கள் இரண்டாம்பட்சமானதாகவே வைத்திருக்கிறோம்.”

“முதலில் வன்முறையைக் கைவிடுமாறு அரசு உங்களைக் கோருகிறது. முதலில் படைகளைத் திரும்ப அழைத்துக்கொள்ளுங்கள் என நீங்கள் அவர்களைக் கேட்கிறீர்கள். இத்தகைய அபத்தமான சூழலில் நீங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் பழங்குடியினரே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.”

“அப்படியானால் சர்வதேச அளவிலான நடுநிலையாளர்களை அழையுங்கள். ஆந்திரப் பிரதேசத்திலாகட்டும், மேற்கு வங்காளத்திலாகட்டும் அல்லது மராட்டியத்திலாகட்டும் நாங்கள் ஒருபோதும் வன்முறையைத் தொடங்கவில்லை. முதல் தாக்குதல் அரசிடமிருந்து தான் வந்தது. மேற்கு வங்காளத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் கட்சித் தொண்டர்கள் தமது செல்வாக்குக்குட்பட்ட பகுதிகளுக்குள் யாரும் நுழையக் கூடாது என்கிறார்கள். லால்கரில் 1998இலிருந்து காவல் துறைத் தாக்குதல் நடந்துகொண்டிருக்கிறது.”

“வன்முறை உங்கள் செயல்திட்டத்தில் இல்லை என்கிறீர்கள். ஆனால் கடந்த நான்காண்டுகளில் நீங்கள் 900 காவல் துறையினரைக் கொன்றிருக்கிறீர்கள். அவர்களில் பலர் ஏழைப் பழங்குடிக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். அது பதில் வன்முறையாகவே இருக்கட்டும். அதன் மூலம் எப்படி நீங்கள் உங்கள் இலக்கை எட்ட முடியும்?”

“எங்கள் போராட்டம் அரசுடனானது, காவல் துறையுடனானது அல்ல. காவல் துறை மரணங்களை எங்களால் முடிந்த அளவுக்குக் குறைக்கிறோம். மேற்கு வங்காளத்தில் உள்ள பல காவல் துறைக் குடும்பத்தினர் எங்கள் அனுதாபிகள். கடந்த 28 ஆண்டுகளில் மார்க்சிஸ்ட் கட்சியினர் 51000 அரசியல் கொலைகளை நிகழ்த்தியிருக்கிறார்கள். நாங்கள் கடந்த ஏழு மாதங்களில் அவர்களில் 52 பேரைக் கொன்றிருக்கிறோம். அரசு, மார்க்சிஸ்ட்டுகளின் அராஜகங்களுக்குப் பதிலடியாகவே நாங்கள் இதைச் செய்தோம்.”

பேட்டி நடந்துகொண்டிருக்கும்போதே வெளியில் துப்பாக்கிச் சத்தம் கேட்டது. சடக்கென்று கட்டிலிலிருந்து எழுந்த தேபான்ஷு..வெளியே ஓடினார். உடனே திரும்ப வந்து...'சல்வா ஜூடும்’ எனக் கத்திவிட்டு ஓடினார். உள்ளேயிருந்த மற்ற போராளிகளும் ஆயுதங்களைத் தூக்கிக்கொண்டு ஓடினார்கள். ஒலிப்பதிவு சாதனனத்தைப் பத்திரப்படுத்திக்கொண்டு, கையோடு கொண்டு வந்த தோள்பையை மாட்டிக்கொண்டு, வெளியே வந்த பாரி...பயங்கர சத்தத்தோடு வெடித்துக்கொண்டிருந்த துப்பாக்கிகளின் சத்தத்டையும், செத்து விழுந்துகொண்டிருந்தவர்களையும் பார்த்து அதிர்ந்து...குடிசைக்குப் பின்னால் ஓடினான்.


தொடரும்.

(குறிப்பு: பச்சை எழுத்துக்களில் இருக்கும் உரையாடல்...இந்தியக் கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்) கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கிஷேன்ஜி என அழைக்கப்படும் மல்லோஜுலா கோட்டீஸ்வராவுடன், தெகல்க்காவுக்காக பத்திரிக்கையாளர் துஷா மிட்டல் தொலைபேசியில் எடுத்தப் பேட்டி.)

அமரன்
10-07-2010, 05:01 PM
ம்..ம்..

ஒவ்வொருவரும் கடமையில் எப்படிக் கண்ணாய் இருக்கி்றார்கள் என்று சொல்லி உள்ளீர்கள்.

புலியா அழுதது, தேபான்சின் அப்போதைய குறிக்கோள் என ஒவ்வொன்றும் அழுத்தம்.

பத்திரிகையாளர்களைப் பலருக்குப் பிடிப்பதில்லை. ஏன் என்றால், ஒருவரைப் பேட்டி எடுக்கும் போது பத்திரிகையாளர் எதிர்தரப்பாக நின்று கேள்விகளைத் தொடுப்பார். அப்போதுதான் செவ்வியில் சாய்வுத் தன்மை அற்றுப் போக வாய்ப்புண்டு. தரப்பு நியாயங்களை அளந்து பார்க்க வாசகர்களுக்கு உதவியாகவும் இருக்கும்.

வேட்டை தொடரட்டும் பாஸ்.

பா.ராஜேஷ்
10-07-2010, 05:10 PM
அண்ணா, வழக்கம் போலவே இந்த அத்தியாயமும் வெகு சிறப்பாக எழுதப் பட்டுள்ளது. உண்மை பேட்டியை சேர்த்திருப்பது இன்னும் மெருகேற்றுகிறது. முடிவு எப்படி இருக்கப் போகிறது என்ற ஆவல் கூடுகிறது.. பாராட்டுக்கள், தொடருங்கள்..

செல்வா
10-07-2010, 06:57 PM
ஒவ்வொரு அத்தியாயத்திலும் இதயத்துள் ஏதோ ஒடிந்து விழுந்து கொண்டே இருக்கிறது.
தொடருங்கள் அண்ணா...!
மன்றத்தை அடித்தட்டு மக்களோடு நேரடியாக இணைக்கும் படைப்பு இது...

govindh
10-07-2010, 10:51 PM
அருமையாக எழுதுகிறீர்கள்...!
தொடருங்கள்....அண்ணா...

மதி
11-07-2010, 01:56 AM
வழக்கம் போல விறுவிறுப்பு... உண்மையான பேட்டியை பயன்படுத்தி இருப்பது சிறப்பு..
தொடருங்கள்..

கீதம்
11-07-2010, 06:26 AM
அப்பாவி மக்களின் வாழ்க்கைதான் எங்குமே கேள்விக்குறியாகிறது. இந்தக் கதைக்கு ஒரு முடிவு கிடைக்கலாம். அந்த மக்களின் போராட்டத்துக்கு?

உண்மைத்தகவல்களை இணைத்து கதைக்கு விறுவிறுப்பு கூட்டுகிறீர்கள். அடுத்தது என்னவென்று ஆவலைத்தூண்டுகிறது, உங்கள் எழுத்து. தொடருங்கள் அண்ணா. நாங்களும் பின் தொடர்கிறோம்.