PDA

View Full Version : உஷ்ண வெளிக்காரன்



M.Rishan Shareef
16-06-2010, 02:41 AM
உஷ்ண வெளிக்காரன்

கொதித்துருகும் வெயிலினை
ஊடுருவிக் காற்றெங்கும்
பரந்திடா வெளி

வியாபித்து
ஊற்றுப் பெருக்கும் புழுக்கம்

வெப்பம் தின்று வளரும்
முள்மரங்கள்
நிலமெங்கிலும்
கனிகளைத் தூவுகின்றன

உச்சிச் சூரியனுக்கும்
வானுக்கும் வெற்றுடல் காட்டி
நிழலேதுமற்று கருகிய புல்வெளியில்
ஆயாசமாகப் படுத்திருக்கும்
சித்தம் பிசகியவன்
புழுதி மூடிய பழங்களைத் தின்று
கானல் நீரைக் குடிக்கிறான்

கோடை
இவனுக்காகத்தான் வருகிறது போலும்

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை.

நன்றி
# காலச்சுவடு இதழ் 123, மார்ச் - 2010
# எங்கள் தேசம், மே 15 - 31 இதழ்
# உயிர்மை
# திண்ணை

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
26-06-2010, 12:58 AM
புழுதி மூடிய பழங்களைத் தின்று
கானல் நீரைக் குடிக்கிறான்

கோடையையும் அதில் உழல்பவனையும் படம்பிடித்திருக்கும் விதம் மிக அருமை ரிஸான். சொக்க வைக்கும் வார்த்தைக் கையாடல்கள். பாராட்டுக்கள்

M.Rishan Shareef
29-06-2010, 01:43 PM
அன்பின் சுனைத் ஹசனீ,

//**புழுதி மூடிய பழங்களைத் தின்று
கானல் நீரைக் குடிக்கிறான்**

கோடையையும் அதில் உழல்பவனையும் படம்பிடித்திருக்கும் விதம் மிக அருமை ரிஸான். சொக்க வைக்கும் வார்த்தைக் கையாடல்கள். பாராட்டுக்கள்//

கருத்துக்கும் அன்பான பாராட்டுக்களுக்கும் நன்றி நண்பரே :-)

M.Rishan Shareef
29-06-2010, 01:47 PM
அன்பின் நண்பர்களுக்கு,

காலச்சுவடு பதிப்பகம் வெளியிடும் எனது 'வீழ்தலின் நிழல்' கவிதைத் தொகுதியின் வெளியீட்டுவிழா எதிர்வரும் சனிக்கிழமை (ஜூலை, 03) மாலை ஆறு மணிக்கு, சென்னை, எழும்பூர், இக்சா மையத்தில் நிகழவிருக்கிறது. அதற்கான அழைப்பிதழை இத்துடன் இணைத்திருக்கிறேன்.

உங்கள் வருகையையும் ஆசிகளையும் பெரிதும் எதிர்பார்க்கிறேன்.

என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்