PDA

View Full Version : ஆசிய கோப்பை (2010)-கிரிக்கெட்அறிஞர்
14-06-2010, 09:49 PM
ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி இலங்கையில் நாளை தொடங்குகிறது. முதலாவது ஆட்டத்தில் இலங்கை & பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் மோதும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் (50 ஓவர்), இலங்கையில் நாளை தொடங்கி 24ம் தேதி வரை நடைபெற உள்ளது. நான்கு அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை லீக் ஆட்டத்தில் மோதும். லீக் சுற்றின் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும்.

இன்றைய தொடக்க லீக் ஆட்டத்தில் இலங்கை & பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. காயம் மற்றும் தடை காரணமாக, கடந்த ஓராண்டாக அணியில் இடம் பெறாமல் இருந்த வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ஓராண்டு தடை நீக்கப்பட்ட, முன்னாள் கேப்டன் சோயிப் மாலிக்கும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனால், அப்ரிடி தலைமையிலான பாகிஸ்தான் அணி வலிமையாக உள்ளது. கம்ரன் அக்மல், சல்மான் பட், உமர்குல் ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர்.

சங்ககரா தலைமையிலான இலங்கை அணியும் வலிமையாக உள்ளது. சொந்த மண்ணில் போட்டி நடப்பது கூடுதல் பலம். மூத்த வீரர்கள் ஜெயவர்தனே, முரளிதரன், மலிங்கா, ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளனர். பேட்டிங் பந்து வீச்சு இரண்டிலுமே இலங்கை அணி வலிமையாக உள்ளது. முதல் வெற்றியை பதிவு செய்ய 2 அணிகளும் போராடும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி. எல்லா ஆட்டங்களும் தம்புல்லா சர்வதேச ஸ்டேடியத்தில் பகல்&இரவு ஆட்டமாக நடக்கிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு போட்டிகள் தொடங்கும்.
நேரடி ஒளிபரப்பு: டென் ஸ்போர்ட்ஸ்.

போட்டிகள்

ஜூன் 15 - இலங்கை - பாகிஸ்தான்
ஜூன் 16 - இந்தியா - பங்களாதேஷ்
ஜூன் 18 - இலங்கை - பங்களாதேஷ்
ஜூன் 19 - இந்தியா - பாகிஸ்தான்
ஜூன் 21 - பங்களாதேஷ் - பாகிஸ்தான்
ஜூன் 22 -இலங்கை - இந்தியா

ஜூன் 24 - இறுதிப்போட்டி

அணிகள் விபரம் வருமாறு:

இந்தியா:
டோனி (கேப்டன்), சேவக், கம்பீர், கோஹ்லி, ரெய்னா, ரோகித் ஷர்மா, ஜடேஜா, ஹர்பஜன், பிரவீன் குமார், ஜாகீர்கான், நெஹ்ரா, பிரக்யான் ஓஜா, அசோக் டிண்டா, அஷ்வின், சவுரப் திவாரி.

பாகிஸ்தான்:
ஷாகித் அப்ரிடி (கேப்டன்), சல்மான் பட் (துணை கேப்டன்), இம்ரான் பர்கத், ஷாஷாயிப் ஹசன், உமர் அக்மல், சோயிப் மாலிக், ஆசாத் ஷபிக், உமர் அமின், கம்ரான் அக்மல், அப்துல் ரசாக், முகமது ஆசிப், முகமது ஆமிர், சோயிப் அக்தர், சயீத் அஜ்மல், அப்துல் ரகுமான்.

இலங்கை:
சங்ககரா (கேப்டன்), தில்ஷன், முரளிதரன், ஹெராத், ஜெயவர்தனே, ரந்தீவ், கந்தாம்பி, கபுகேதரா, குலசேகரா, மகரூப், மலிங்கா, மேத்யூஸ், சமரவீரா, தரங்கா, வெலகெடரா.

வங்கதேசம்:
ஷாகிப் அல் ஹசன் (கேப்டன்), முஷ்பிகுர் ரஹிம், அப்துர் ரசாக், இம்ருல் கேய்ஸ், ஜஹுரல் இஸ்லாம், ஜூனியாட் சிந்திக், மகமதுல்லா, மோர்டசா, முகமது அஷ்ராபுல், நயீம் இஸ்லாம், ருபெல் ஹுசேன், சபியுல் இஸ்லாம், சையது ரெசல், சுகரவாடி சுவோ, தமீம் இக்பால்.

நன்றி-தினகரன்

aren
15-06-2010, 02:19 AM
உலக இருபது கோப்பையை தொலைத்தாகிவிட்டது, அதன் பிறகு ஜிம்பாப்வேயில் செம்ம அடி, இப்போ இலங்கை வந்து அங்கேயும் வாங்கப்போகிறார்கள்.

என்னுடைய ஓட்டு இலங்கைக்கே. ஓய்வு பெறவேண்டிய சமயத்தில் ஜெயவர்தனே இப்படி வெளுத்து வாங்குவதைப் பார்த்தால் கொஞ்சம் பயமாகவே இருக்கிறது.

அமரன்
15-06-2010, 05:37 AM
தம்புள்ள... மட்டையளர்களுக்குச் சிம்ம சொப்பனம்.

ஸ்ரீலங்காவில் அமைந்த முதலாவது வேகப்பந்துக் களம்..

பிறகு மாற்றி அமைத்ததாகவும் சேதி..

எப்படி இருந்தாலும் நான்குமுனைகளிலும் பலத்த போராட்டத்தை எதிர்பார்க்கலாம். அணிஒருமைப்பாடு மிகுந்த அணியே ஜெயிக்கும்.

சென்ற சுற்றின் வாகைக்கு வித்திட்ட சனத், மெண்டிஸ் போன்றோர் அணியில் இல்லாதது ஸ்ரீலங்கா ரசிகர்களுக்கு சோர்வு..

aren
15-06-2010, 05:43 AM
அஜந்தா மெண்டீஸை உலக கோப்பைக்கு உபயோகித்துக் கொள்ளப் போகிறார்கள். அவருடைய பந்து வீச்சை அனைவரும் அறிந்துகொள்ளக்கூடாது என்பதற்காக அவரை இந்த ஆசிய கோப்பையிலிருந்து விலக்கியிருக்கிறார்கள்.

ஓவியன்
15-06-2010, 05:51 AM
இந்த போட்டிகளில் சவுரவ் திவாரிக்கு துடுப்பெடுத்தாட நல்ல வாய்ப்பு கிடைக்குமா...???

aren
15-06-2010, 05:54 AM
இந்த போட்டிகளில் சவுரவ் திவாரிக்கு துடுப்பெடுத்தாட நல்ல வாய்ப்பு கிடைக்குமா...???

வாய்ப்பு குறைவுதான். விராத் கோலியும் ரோஹித் சர்மாவும் நன்றாக விளையாடியதால் அவர்களில் ஒருவருக்கோ அல்லது இருவருக்குமோ வாய்ப்பு கிடைக்கும்.

சவுரவ் இடது கை ஆட்டக்காரர் அதனால் யுவராஜ் சிங் இல்லாத நிலையில் டீம் மேனேஜ்மெண்ட் இவரை தேர்ந்தெடுக்கவும் வாய்ப்பு இருக்கிறது.

ஓவியன்
15-06-2010, 05:55 AM
அவருடைய பந்து வீச்சை அனைவரும் அறிந்துகொள்ளக்கூடாது என்பதற்காக அவரை இந்த ஆசிய கோப்பையிலிருந்து விலக்கியிருக்கிறார்கள்.

நான் அப்படி நினைக்கவில்லை, சுராஜ் ரண்டிவுக்கு நல்ல வாய்ப்புக்களைக் கொடுத்து அவரை பரிசீலனை செய்யவதற்காக மெண்டிஸை ஓரம் கட்டியுள்ளார்கள் போல உள்ளது...

சிவா.ஜி
15-06-2010, 06:03 AM
இலங்கைக்கு பிரகாசமான வாய்ப்பு இருக்கிறது. பாகிஸ்தானும் மிகக்கடுமையான சவாலாக இருக்கும்.

இந்தியா.......நோ கமெண்ட்ஸ்...!!

மதி
15-06-2010, 06:04 AM
இப்பல்லாம் மேட்ச் எப்போ நடக்கும்ங்கறதே மறந்து போச்சு...!!! இலங்கைக்கு பிரகாசமான வாய்ப்பு இருக்கிறது.

aren
15-06-2010, 06:05 AM
நான் அப்படி நினைக்கவில்லை, சுராஜ் ரண்டிவுக்கு நல்ல வாய்ப்புக்களைக் கொடுத்து அவரை பரிசீலனை செய்யவதற்காக மெண்டிஸை ஓரம் கட்டியுள்ளார்கள் போல உள்ளது...

தேர்வாளர் அரவிந்த டிசில்வா, மெண்டிஸை நீக்கியதற்கு ஒரு யுக்தியே காரணம் என்று சொல்லியிருக்கிறார். அந்த யுக்தியை வெளியே சொல்லமுடியாது, சொன்னால் அனைவருக்கும் தெரிந்துவிடும் என்று சொல்லியிருக்கிறார். அப்படியென்றால் உலகக்கோப்பையில் இவர் ஒரு கீ ப்ளேயராக இருப்பார் என்றே நினைக்கிறேன்.

aren
15-06-2010, 06:06 AM
இலங்கைக்கு பிரகாசமான வாய்ப்பு இருக்கிறது. பாகிஸ்தானும் மிகக்கடுமையான சவாலாக இருக்கும்.

இந்தியா.......நோ கமெண்ட்ஸ்...!!

சரியாக சொல்லியிருக்கிறீர்க்கள். நம் மக்களுக்கு வாய்ப்பு குறைவுதான்.

ஷேவாக் அடித்தால் மட்டுமே வாய்ப்பு உள்ளது. அவரும் சமீப காலங்களாக ரன் குவிக்க முடியாமல் அவதிப்படுகிறார்.

அக்னி
15-06-2010, 07:01 AM
‘மெண்டிஸ்’ இல்லாவிட்டால் ‘குடி’மக்கள் கொந்தளிக்க மாட்டார்களோ... :aetsch013:
(மெண்டிஸ் இலங்கைச் சாராயங்களில் ஒருவகை...)

ஓவியன்
15-06-2010, 11:24 AM
மெண்டிஸ் இலங்கைச் சாராயங்களில் ஒருவகை...

அப்படியா...???? :icon_cool1:

தகவலுக்கு மிக்க நன்றி..!! :cool::cool:

அமரன்
15-06-2010, 08:54 PM
இலங்கையும் பாகிஸ்தானும் இன்று மோதின..

அஃப்ரிடியின் அதிரடி பாகிஸ்தானுக்கு வெற்றியைக் கொடுத்து விடுமே எனும் அளவுக்கு ஆக்ரோசமாக இருந்தது. ஆனாலும் பெருமிழப்புக்கு மத்தியில் முரளி அவரைக் காலி பண்ண , மலிங்க ஐந்துபேரை வேகமாக விரட்ட இலங்கை வென்றது இன்று..

மஹெல, மாத்யூ இருவரும் அரைச்சதம்.. சங்காவும் பரவாயில்லை.

நாளை இந்தியாவும் பங்களாதேஷும் மோதுகின்றன..

aren
16-06-2010, 01:53 AM
நேற்றைய ஆட்டம் கடைசி வரைக்கும் யார் ஜெயிப்பார்கள் என்று தெரியாத நிலையிலேயே அருமையாக இருந்தது. ஆஃப்ரிடியின் அதிரடி ஆட்டத்துக்கு ஈடுகொடுத்து மலிங்காவின் பந்துவீச்சு அபாரமாக இருந்தது.

மொத்தத்தில் நல்ல ஆட்டம், ஆனால் பாகிஸ்தான் மறுபடியும் இப்படி சொதப்பிவிட்டதே என்று நினைக்கையில், இது அவர்களுக்கு பழக்கப்பட்ட ஒன்றுதானே என்று நினைக்கவும் தோன்றுகிறது.

ஆனால் அவர்கள் இந்தியாவுடன் ஆடும்போது மட்டும் எப்படி இத்தனை ஆக்ரோஷத்துடன் ஆடுகிறார்கள். அதையே மற்றவர்களுடனும் ஆடும்போது கடைபிடித்தால் அவர்களுக்கு வெற்றி நிச்சயம்.

அமரன்
16-06-2010, 09:47 PM
சோர்ந்து போயிருந்த இந்தியாவுக்கு இன்றைய வெற்றி புதுத் தெம்பைக் கொடுத்திருக்கும்.

ஷேவாக்கும் காம்பீரும் இன்றைய நாயகர்கள். நாளை மறுநாள் நடக்க இருக்கும் இலங்கை பங்களாதேஷ் அணிகளுக்கிடையா போட்டியில் இலங்கை ஜெயித்தால் இந்தியா-பாகிஸ்தான் போட்டியின் விறுவிறுப்பும் ஆக்ரோஷமும் கூடும்.

அமரன்
18-06-2010, 05:17 PM
டில்ஷான்... டில்ஷான்... டில்ஷான்...
இன்றைய போட்டியில் டில்ஷானின் ஆதிக்கம் அதிகம்.
இலங்கை அபார வெற்றி..

நாளை இந்தியா பாகிஸ்தான்..

ஐரோப்பியச் சிங்களச் சனலான ஸ்ரீ டிவியில் காண்பிப்பங்களோ..

ஸ்ரீதர்
21-06-2010, 07:46 AM
இந்தியா பாகிஸ்தான் போட்டி வழக்கமான விறுவிறுப்புடன் இருந்தது.

கடைசி பந்திற்கு முன் பந்தில் நம்ம ஹர்பஜன் சிக்ஸ் அடித்து இந்திய அணிக்கு வெற்றி தேடித்தந்தார் ....

முன்பு ஜாவேத் மியந்தாத் கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து இந்தியாவை தோல்வி அடைய செய்து இருந்தார்.. நீண்ட நாளாக இருந்த அந்த சோகத்தை இந்த வெற்றியின் முலம் ஹர்பஜன் நீக்கினார் என்றால் அது மிகை ஆகாது.

இறுதிப் போட்டியில் இலங்கையும் இந்தியாவும். வெற்றி பெற இரு அணிகளும் கடுமையாக முயற்சிக்கும் .... பாப்போம் யார் ஜெயிக்கிறார்கள் என்று....

அமரன்
22-06-2010, 09:07 PM
ஸ்ரீலங்கா வென்றது..

இந்தியாவின் ஆட்டம் திருப்தி இல்லை. ஒருவேளை இந்த வெற்றி கொடுக்கும் மிதப்பில் ஸ்ரீலங்கா மெத்தனமா இருக்க இறுதிப் போட்டியில் ஏய்ச்சு கோப்பைத் தூக்கும் யுக்தியோ..

ஆட்ட நாயகன் மஹ்ரூப் ஹட்ரிக்..

aren
23-06-2010, 11:14 AM
இலங்கையின் கோட்டைக்குள் சென்று இந்தியாவால் ஜெயிக்க முடியுமா?

சந்தேகம் தான். வெற்றி வாய்ப்பு இலங்கைக்கே இருக்கிறது.

சிவா.ஜி
23-06-2010, 11:43 AM
இந்தியா பாகிஸ்தானை ஜெயித்ததே...இறுதிப்போட்டி ஜெயித்து கோப்பை வாங்கியதைப்போலத்தான்...

இனி 'அதிர்ஷ்டவசமாக' ஜெயித்தாலும் பெரிதாய் ஏதும் கொண்டாட்டமில்லை....!!!

செல்வா
23-06-2010, 11:49 AM
இந்தியா பாகிஸ்தானை ஜெயித்ததே...இறுதிப்போட்டி ஜெயித்து கோப்பை வாங்கியதைப்போலத்தான்...


அது ஏன் அப்படி?

சிவா.ஜி
23-06-2010, 12:01 PM
பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் நடக்கும் போட்டிகள் எப்போதுமே மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகத்தான் கருதப்பட்டு வருகிறது. எதிரிநாடு என்பதால் இந்த முக்கியத்துவம்.

இந்தியா ஜெயித்த அன்று இங்கு ஒரே கொண்டாட்டம்தான். அனைவரும் சொன்னது...நான் சொன்னதைத்தான்.

shibly591
24-06-2010, 01:14 PM
இறுதிப்போட்டியில் இந்தியா 268 ஓட்டங்களை குவித்துள்ளது..இலங்கைக்கு கடினமான இலக்காகவே தென்படுகிறது.டில்சானின் மட்டையின் வீரியத்திற்கேற்பவே இலங்கையின் வெற்றி வாய்ப்பு இருக்கும் என்று நான் கருதுகிறேன்..

பார்க்கலாம்..

மதி
24-06-2010, 04:54 PM
15 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா ஆசிய கோப்பையை கைப்பற்றியது..
வாழ்த்துகள் இந்திய அணியினருக்கு..

அமரன்
24-06-2010, 07:37 PM
சொன்னம்ல..

இந்தியாவுக்கு வாழ்த்துகள்.

aren
25-06-2010, 04:53 AM
வெற்றி பெற்ற இந்திய அணிக்கு என் பாராட்டுக்கள்.

ஆட்ட நாயகராக தேர்வு செய்யப்பட்ட கார்த்திக்கும் என் பாராட்டுக்கள்.