PDA

View Full Version : சந்துரு நீயே உனக்கு சத்துரு(இறுதி பாகம்)மதுரை மைந்தன்
14-06-2010, 12:16 PM
முதல் பாகம்

எங்களுடைய அலுவலகத்தில் தபால்களை பட்டுவாடா செய்யும் ஊழியர் (டெஸ்பாட்ச் கிளார்க்) வேலைக்கு ஆளைத் தேர்ந்தெடுக்கும் கடமை பணியாளர்களை நிர்வகிக்கும் அதிகாரியான என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. வேலைக்கு ஆள் வேண்டி பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்தேன். வந்திருந்த நூற்றுக் கணக்கான விண்ணப்பங்களிலிருந்து களைந்தெடுத்து 10 பேரை நேர்முகத் தேர்வுக்கு அழைத்திருந்தோம். தேர்வுக்க் குழுவில் என்னைத் தவிர மேலதிகாரிகள் இருவரும் இருந்தனர். தேர்வு நாள் அன்று ஏற்பாடுகளை மேற்பார்வை இட்டுக் கொண்டிருந்தேன். தேர்வுக்கு அழைக்கப்பட்டிருந்த நபர்களை வரவேற்று அவர்களிடமிருந்த அழைப்பு கடிதத்தை பார்வையிட்டு அவர்களை தேர்வு நடக்கும் அறைக்கு வெளியே அமரச் செய்யும் பொறுப்பை எனது உதவியாளரிடம் ஒப்படைதிருந்தேன். தேர்வு ஆரம்பமாக நேரம் நெருங்கி கொண்டிருக்கையில் அறையின் கதவில் இருந்த கண்ணாடி சாளரத்தின் மூலம் ஒரு நோட்டம் விட்டேன். வந்திருந்த அனைவரும் வரிசையாக அமர்ந்திருந்தார்கள். அப்படி பார்த்துக் கொண்டிருந்த எனக்கு அந்த வரிசையில் அமர்ந்திருந்த சந்துருவை கண்டதும் ஆச்சரியம் அடைந்தேன்.

அறையின் மேசையில் இருந்த விண்ணப்பதாரர்களின் பட்டியலை பார்த்தேன். அதில் சந்துருவின் பெயர் இல்லை. மேலதிகாரிகளிடம் என்னுடைய குழப்பத்தை கூறினேன். அவர்களில் ஒருவர் " ஓ அதுவா, நேற்று நமது தலைமை நிர்வாகி போன் செய்து சந்திர சேகரன் என்ற ஒருவருக்கு மந்திரி ஒருவரின் சிபாரிசு இருப்பதால் அவருக்கு தான் இந்த வேலையைக் கொடுக்க வேன்டும் என்றார். நான் நிர்வாகியிடம் நேர்முகத் தேர்வுக்கு ஏற்கனவே 10 பேருக்கு அழைப்பு கடிதங்கள் அனுப்பபட்டு விட்டதாக கூற அவர் நேர்முகத்தேர்வை நடத்துங்கள். அதற்கு இந்த நபரையும் அழைத்து மற்றவர்களுக்கு ஒரு கண் துடைப்பாக தேர்வை நடத்தி எப்படியாவது அவர்களை நிராகரித்துவிட்டு இவருக்கு வேலையை கொடுங்கள் என்றார்". அவர் சொல்லி முடித்ததும் நான் " சந்துரு நீ யமகாதகன்" என்று முணுமுணுத்தேன். அந்த அதிகாரி என்னிடம் " சந்திர சேகரனை எனக்கு முன்னாடியே தெரியுமா?" என்று கேட்டதும் அவரிடம் ஆமாம் என்று சொல்லி விட்டு என் நினைவுகள் பின்னோக்கி ஓடின.

சந்துருவும் நானும் ஒரே வயதினர். நாங்கள் பக்கத்து பக்கத்து வீடுகளில் வசித்து வந்தோம். சந்துரு அவனுடைய பெற்றோர்களுக்கு ஒரே பிள்ளை. தவமிருந்து அவனைப் பெற்ற*தாக அவர்கள் கூறுவார்கள். அவனுடைய தந்தை கடை ஒன்று வைத்து அதன் மூலம் வசதியாக இருந்தார்கள். அவனை மிகவும் செல்லமாக வளர்த்தார்கள். இரவு சாப்பாட்டு நேரங்களில் அவன் திடீரென்று எனக்கு அல்வா வேணும், மசலா தோசை வேணும் என்பான். அவனுடைய தந்தையும் உடனே சைக்கிளில் சென்று அவைகளை வாங்கி தருவார். என்னுடைய நிலைமை வேறாக இருந்தது. என்னுடைய தந்தை ஒரு ஆசிரியராக பணியாற்றி வந்தார். நான் மூத்த பிள்ளை. எனக்கு நான்கு தங்கைகள் இருந்தனர். என்னுடைய தந்தை என்னிடம் அடிக்கடி சொல்வார் " பசங்க கிட்ட கத்தி கத்தி சொல்லி கொடுத்து களைத்து விட்டேன். நீ நல்லா படிச்சு ஒரு வேலையில் சேர்ந்து விட்டல் நான் ஓய்வு எடுத்துக் கொள்வேன். நீ நல்ல வேலக்கு வந்தால் உன்னோட நாலு தங்கைகளுக்கும் நல்ல இடங்களில் கைபிடித்துக் கொடுத்து விட்டு நிம்மதியாக போய் சேர்ந்துவிடுவேன்". நன்றாக படிக்க வேண்டும், குடும்ப பாரத்தை சுமக்க வேண்டும் என்ற நினைப்புகளில் பள்ளி பருவங்களில் என் வயதொத்தவர்கள் விளயாடிக் கொண்டிருந்த போது நான் புத்தகங்களில் மூழ்கி இருப்பேன்.

சந்துருவும் நானும் ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் படிக்க ஆரம்பித்தோம். ஆனால் சந்துரு படிப்பில் அக்கறை காட்டாததால் ஒவ்வொரு வருடமும் இறுதி தேர்வுகளில் அவன் பெயில் ஆவதும் அவனுக்காக அவனது தந்தை தலைமை ஆசிரியரிடம் மன்றாடி அவனை தூக்கி தூக்கி போட்டு எஸ்.எஸ்.எல்.சி வகுப்பு வரைக்கும் தொடர்ந்தோம். எஸ்,எஸ்.எல்.சி. தேர்வும் நடந்து ரிசல்ட்களும் வந்தன. நான் பள்ளியின் முதல் ராங்கில் பாஸ் பண்ணினேன். ரிசல்டைப் பார்த்து விட்டு நான் வேகமாக வீடு நோக்கி வந்து கொண்டிருந்தேன். சந்துருவுன் தந்தை என்னை எதிர் கொண்டு என்னுடைய ரிசல்ட் கேட்டு மகிழ்ந்து " சங்கரா, உங்க அப்பா அம்மா ரொம்ப கொடுத்து வைச்சவங்க. என்னோட தறுதலைப் பையன் என்ன பண்ணியிருக்கானோ தெரியலை" என்றார். சந்துரு தேர்வில் பெயிலாகி விட்ட செய்தியை தயங்கி சொன்னேன். அவர் முகம் இறுகி " வீடு வரட்டும் அந்த கழுதை அவனுக்கு நல்ல பாடம் புகட்டறேன்" என்று சொல்லி சென்றார் அவர். என்னுடைய தந்தயிடம் நான் முதலாவதாக வந்த செய்தியை கூறியதும் அவர் என்னைக் கட்டி பிடித்து ஆனந்த கண்ணீர் விட்டார்.

மறு நாள் காலை எங்கள் வீட்டு கதவு தட்டப்பட்டதும் சென்று கதவை திற்ந்தேன். அங்கே சந்துருவின் தந்தை கையை பிசைந்து கொண்டு நின்றிருந்தார், " ஏண்டா இப்படி இருக்கே, நீ பெயிலாகி எங்க மானத்தை வாங்கிட்டயேடா என்று கோபித்துக் கொண்டேன் சந்துருவை. அவன் நான் பெயிலானதற்கு பக்கத்து வீட்டு சங்கரன் தான் காரணம். பக்கத்து சீட்டில் பரிட்சை எழுதின அவன் எனக்கு தன் பேப்பரைக் காட்ட மறுத்து விட்டான் என்றான். கழுதே நீ ஒழுங்கா படிக்காம அந்த நல்ல பிள்ளையை குறை சொல்லரயே. காபி அடிச்சு எழுத உனக்கு வெக்கமாயில்லை என்று நான் திட்டினேன் அவனை. என்னைக் கண்டால் ஆகலை உனக்கு, பக்கத்து வீட்டு பையன் தான் உசத்தினா நீ அவனையே கட்டிண்டு அழுனு சொல்லிட்டு வீட்டை விட்டு ஓடி விட்டான்" என்றார் அவர்.


தொடரும்...

மதி
14-06-2010, 01:34 PM
ஆரவாரமாக ஆரம்பித்து விட்டீர்கள். சந்துரு மேற்கொண்டு என்ன செய்தான்..?? தொடருங்கள்..

சிவா.ஜி
14-06-2010, 04:30 PM
அட...சந்துரு...பெரிய வில்லனா இருப்பான் போலருக்கே....

நினைச்சதும் கதை எழுதும் உங்கள் ஆற்றலைப் பாராட்டுகிறேன் நண்பரே.

தொடருங்கள்.....தொடர்கிறோம்.

பாரதி
14-06-2010, 04:51 PM
சுற்றி வளைக்காமல் எடுத்த எடுப்பிலேயே கதை!!
நன்றாயிருக்கிறது நண்பரே. தொடருங்கள்.

மதுரை மைந்தன்
15-06-2010, 08:18 PM
ஆரவாரமாக ஆரம்பித்து விட்டீர்கள். சந்துரு மேற்கொண்டு என்ன செய்தான்..?? தொடருங்கள்..

நன்றி நண்பரே

மதுரை மைந்தன்
15-06-2010, 08:20 PM
அட...சந்துரு...பெரிய வில்லனா இருப்பான் போலருக்கே....

நினைச்சதும் கதை எழுதும் உங்கள் ஆற்றலைப் பாராட்டுகிறேன் நண்பரே.

தொடருங்கள்.....தொடர்கிறோம்.


உங்கள் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி நண்பரே

மதுரை மைந்தன்
15-06-2010, 08:21 PM
சுற்றி வளைக்காமல் எடுத்த எடுப்பிலேயே கதை!!
நன்றாயிருக்கிறது நண்பரே. தொடருங்கள்.உங்கள் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி நண்பரே

மதுரை மைந்தன்
15-06-2010, 08:23 PM
பாகம் 2

" அவனை இப்போ நான் எங்கே சென்று தேடுவேன்" என்று பதைபதைத்தார் சந்துருவின் அப்பா. " கவலைப் படாதீங்க சார், நானும் உங்க கூட வறேன். நாம இருவருமா போய் தேடுவோம். ஆனால் நாம் இப்படியே போனால் ஒருவேளை அவன் நம்மை பார்த்து மீண்டும் ஓடி விடுவான். ஆகவே நாம மாறு வேடங்களில் செல்லவேண்டும்" என்று சொல்லி இருவரும் தலையில் முண்டாசுகளைக்கட்டி முகத்தில் கொஞ்சம் கரியையும் பூசிக்கொண்டு புறப்பட்டோம்.

மதுரையில் நாங்கள் இருந்த வடக்கு மாசி வீதியிலிருந்து கிளம்பி ஒவ்வொரு தெருவிலும் பெட்டிக கடைகளில் சந்துருவின் வர்ணணயைக் கூறி அவனை யாராவது பார்த்தார்களா என்று விசாரித்தோம். பழங்கானத்தம் பக்கம் பைபாஸ் ரோட்டில் ஒரு கடைகாரர் அவனைப் பார்த்ததாக கூறினார். அது சென்னை வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை. நாங்கள் திண்டுக்கல் செல்லும் பஸ்ஸில் ஏறி வழியில் சமய நல்லூர், சோழவந்தான் ஆகிய ஊர்களில் விசாரித்ததில் அவன் அந்த வழியாக சென்றிருப்பதை அறிந்து பயணத்தை தொடர்ந்தோம்.

திண்டுக்கல் சேர்ந்து பசியாற ஓட்டல் ஒன்றில் சென்று அமர்ந்தோம். என்ன சாப்பிடலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த போது நான் தற்செயலாக சந்துரு பக்கத்து டேபிளில் அமர்ந்திருந்தவர்களிடம் சர்வராக காதில் ஒரு சின்ன பென்சிலை வைத்துக் கொண்டு கையில் ஒரு சின்ன நோட்டயும் வைத்து பேசிக் கொண்டிருந்த்தைப் பார்த்தேன். அவனுக்கு எங்களை அடையாளம் தெரியாதது நல்லதாக போயிற்று. நான் சந்துருவுன் அப்பாவின் காதில் சந்துரு அங்கு இருப்பதையும் அவனை நான் பிடிக்கிறேன் என்றும் சொல்லிவிட்டு முண்டாசு துண்டைக் கையிலெடுத்து அவன் பின்னால் சென்ரு அவன் கைகளைக் கட்டினேன். அவன் திமிரிக் கொன்டு " ஏய் யார் என்னை கட்டியது?" என்று கத்தி திரும்பினான். என்னைப் பார்த்ததும் அதிர்ச்சியில் உறைந்தான்.

ஓட்டலில் சாப்பிடிருந்தவர்கள் இந்த களேபரத்தில் சந்துருவுன் அப்பாவிடம் " என்ன ஆச்சு சார்?" என்று கேட்டார்கள். அவர்களிடம் அவர் கை கூப்பி சந்துருவைக் காட்டி " இவன் என் பையன். வீட்டை விட்டு கோபிச்சுக்கிட்டு வந்துட்டான். வேற ஒண்ணுமில்லை. நீங்க சாப்பிடுங்க" என்று சொல்லி விட்டு தன் முண்டாசை அவிழ்த்து விட்டு எங்களருகே வந்தார். சந்துருவுடம் கை கூப்பி " ஏண்டா இப்படி பண்ணினே. அங்கே உன்னைக் காணாம உங்க அம்மா மூணு நாளா பட்டினியா கிடக்கிறா. அவளுக்கு ஏதாவது ஆயிடுச்சினா நான் உயிரோடு இருக்க மாட்டேன். தயவு செஞ்சு திரும்ப வந்துடு." என்றார் கண்களில் நீர் மல்க. " நான் வரமாட்டேன். அங்கே வந்தா என்னை படி படினு உயிரை வாங்குவீங்க" என்றான் சந்துரு. என்னிடம் கோபமாக " நான் பாட்டுக்கு இங்கே வேணுங்கற அல்வாவும் மசாலா தோசையும் சாப்பிட்டுகிட்டு இருக்கென். அதைக் கெடுத்திடேயேடா பாவி" என்று திட்டினான். சந்துருவுன் அப்பா அவனிடம் " நாங்க இனிமே உன்னை படினு சொல்ல மாட்டோம். உனக்கு வேணுங்கற அல்வாவையும் மசலா தோசையையும் வாங்கி தறேன். வந்து கடையைப் பாத்துக்கோ" என்றார். அவர் அவனிடம் கடையைப் பார்த்துக்க சொன்னது அவனுக்கு பிடித்திருந்தது. கடையில் உட்கார்ந்து கொண்டு போற வர பெண்களை சைட் அடிக்கவும், கடை சிப்பந்திகளை அதிகாரம் செய்து வேலை வாங்குவதும் அவனுக்கு பிடிக்கும் என்று எனக்குத் தெரியும். அவன் அவர் சொன்னதை ஏற்றுக் கொண்டு வர சம்மதிக்க நான் கை கட்டை அவிழ்த்தேன். நாங்கள் மூவரும் மதுரை திரும்பினோம்.

நான் கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆரம்பித்தேன். நான் பள்ளிப்படிப்பை முடித்தவுடனேயே வேலைக்கு சென்றிருக்கலாம். ஆனால் என் தந்தைக்கு அந்த சமயத்தில் சில ட்யூஷன் மாணவர்கள் கிடைக்கவே அவர் என்னிடம் நன்றாகப் படிக்கும் உன் படிப்பை நிறுத்த சங்கடமாக இருக்கிரது. நீ தொடர்ந்து கல்லூரி படிப்பையும் முடித்தானல் நல்ல வேலை கிடைக்கும் என்று என்னை அனுமதித்தார். ஒரு நாள் கல்லூரிக்கு செல்லும் வழியில் எங்கள் தெருக் கோடியில் ஒரு வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி ஒருத்தியின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை சந்துரு கழட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்து வேகமாக அங்கு சென்று " ஏய் சந்துரு என்ன காரியம் பண்ணிக்கிட்டிருக்கே" என்றேன். முகம் வெளிரிப் போன சந்துரு என்னையே முறைத்துக் கொண்டு நின்றான். இதற்குள் சிறுமி அழத் தொடங்க அந்த வீட்டுக்காரர்கள் வெளியே வந்து சந்துருவைத் திட்டி அடிக்க ஆரம்பித்தனர். நான் அவர்களிடம் மன்றாடி சந்துருவைக் காப்பாற்றினேன். ஆனால் சந்துருவுக்கு என் மேல் கோபம் அதிகரித்தது.

மறு நாள் நான் கல்லூரிக்கு செல்லும் வழியில் என் வழி மறித்தான் சந்துரு. " சங்கரா என் விஷயத்தில அடிக்கடி குறுக்கிடற நீ. நீ தான் எனக்கு சத்துரு" என்று சொல்லி விட்டு " அதென்ன கையில் டப்பா" என்று கேட்டான். டப்பாவில் எனக்கு என் அம்மா மதிய உணவிற்காக பழைய சோற்றி மோர் ஊற்றி பிசைந்து தொட்டுக்க ஒரு மாவடுவையும் வைதிருந்தார். பசிக்கு அமிர்தமாகவும் வெயிலுக்கு குளிர்ச்சியாகவும் அது இருந்தது. டப்பாவிலிருந்த சோற்றை பக்கத்து சாக்கடையில் கொட்டிவிட்டு வெறும் டப்பாவை என்னிடம் கொடுத்தான் சந்துரு. "இது தான் உனக்கு நான் தரும் தண்டனை" என்றான்.

தொடரும்...

கீதம்
16-06-2010, 01:06 PM
ஐயோ பாவம்! இப்படிப்பட்டவனுக்கு வேலைக்கு சிபாரிசு! கதையின் நாயகன் படும் பாட்டை உணரமுடிகிறது.

பாராட்டுகள். தொடருங்கள்! தொடர்ந்து வருகிறேன்.

மதி
16-06-2010, 01:07 PM
விறுவிறுப்பாக செல்கிறது.. மேலும் தொடருங்கள் மதுரையாரே..!

பாரதி
16-06-2010, 03:23 PM
சந்துரு... இவ்வளவு தூரம் வன்மம் கொண்டிருந்தானா..!?
அப்புறம் என்ன நடந்தது?

சிவா.ஜி
16-06-2010, 04:32 PM
சந்துரு சரியான வில்லனாய் இருப்பான் போலிருக்கிறதே....படிக்கும்போதே சங்கரனை அத்தனைக் கஷ்டப்படுத்தியவன்....இனி வேலைக்குச் சேர்ந்தால்...என்ன செய்வானோ....

தொடருங்கள் நண்பரே....

govindh
16-06-2010, 06:50 PM
"சந்துரு நீயே உனக்கு சத்துரு"-
இரண்டு அத்தியாயங்களையும் படித்து விட்டேன்...
சங்கரனை இடித்துரைக்கும் நண்பனாக நினைத்து பழகாமல்...
சத்துருவாக நினைத்து பழி வாங்குகிறான்...சந்துரு...
பாவம் சங்கரன்...!

தொடருங்கள்....தொடர்ந்து வருகிறோம்....

மதுரை மைந்தன்
18-06-2010, 09:28 AM
ஐயோ பாவம்! இப்படிப்பட்டவனுக்கு வேலைக்கு சிபாரிசு! கதையின் நாயகன் படும் பாட்டை உணரமுடிகிறது.

பாராட்டுகள். தொடருங்கள்! தொடர்ந்து வருகிறேன்.


உங்கள் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி நண்பரே

மதுரை மைந்தன்
18-06-2010, 09:29 AM
விறுவிறுப்பாக செல்கிறது.. மேலும் தொடருங்கள் மதுரையாரே..!

நன்றி நண்பரே

மதுரை மைந்தன்
18-06-2010, 09:32 AM
சந்துரு... இவ்வளவு தூரம் வன்மம் கொண்டிருந்தானா..!?
அப்புறம் என்ன நடந்தது?உங்கள் பின்னுட்டத்திற்கு மிக்க நன்றி நண்பரே

மதுரை மைந்தன்
18-06-2010, 09:33 AM
சந்துரு சரியான வில்லனாய் இருப்பான் போலிருக்கிறதே....படிக்கும்போதே சங்கரனை அத்தனைக் கஷ்டப்படுத்தியவன்....இனி வேலைக்குச் சேர்ந்தால்...என்ன செய்வானோ....

தொடருங்கள் நண்பரே....


உங்கள் பின்னுட்டத்திற்கு மிக்க நன்றி நண்பரே

மதுரை மைந்தன்
18-06-2010, 09:35 AM
"சந்துரு நீயே உனக்கு சத்துரு"-
இரண்டு அத்தியாயங்களையும் படித்து விட்டேன்...
சங்கரனை இடித்துரைக்கும் நண்பனாக நினைத்து பழகாமல்...
சத்துருவாக நினைத்து பழி வாங்குகிறான்...சந்துரு...
பாவம் சங்கரன்...!

தொடருங்கள்....தொடர்ந்து வருகிறோம்....உங்கள் பின்னுட்டத்திற்கு மிக்க நன்றி நண்பரே

மதுரை மைந்தன்
18-06-2010, 09:37 AM
பாகம் 3

காலையில் வெறும் நீராகாரம் மட்டுமே சாப்பிட்டிருந்ததால் எனக்கு அப்பவே பசிக்க ஆரம்பித்துவிட்டது. சந்துரு எனது மதிய உணவை சாக்கடையில் போட்டுவிட்டடதால் இனி மாலை வீடு திரும்பி சாப்பிடும் வரை கொலை பட்டினி தான் என்று நினைத்தேன். பசியில் சொல்லிக் கொடுக்கப்படும் பாடங்கள் மூளையில் ஏறாது. என்னையே நான் நொந்துகொண்டு மெதுவாக சென்றேன். நாங்கள் வசித்த நீண்ட தெருவிலிருந்து மெயின் ரோடுக்கு திரும்பும் இடத்தில் கடைசி வீட்டின் முகப்பில் நின்றிருந்தாள் மைதிலி. நாங்கள் சிறு வயது முதற்கொண்டு ஒன்றாக விளையாடி ஒரே பள்ளியில் பயின்று எங்களுடைய நட்பு மலர்ந்திருந்தது,

" அந்த சண்டாளன் உங்க சாப்பாட்டை சாக்கடையில் போட்டதைப் பார்த்தேன் அண்ணா. உங்களுக்காக இட்லியும் தயிர் சாதமும் பொட்டலங்களாக இதோ. இதை மறுக்காம வாங்கிக்கணும்" என்று இரண்டு பொட்டலங்களை என் முன் நீட்டினாள் அவள். அவளுடைய அப்பா ஒரு ஓட்டல் வைத்து நடத்துகிறார். எனக்கு தயக்கமாக இருந்தது. ஆனால் பசியும் அவளது பாசமும் என் தயக்கத்தை போக்க நான் அவற்றை வாங்கிக் கொண்டு " உனக்கு எப்படி நன்றி சொல்றதுனே தெரியலை மைதிலி. நீ நல்லாயிருப்பே" என்று சொல்லிவிட்டு கல்லூரிக்கு விரைந்தேன்.

மற்றொரு சமயமும் அவளுக்கு நான் நன்றிக் கடன் பட வேண்டியதாயிற்று. ஒரு நாள் கல்லூரி செல்லும் வழியில் எங்கள் தெருவின் நடுவில் சந்துரு என்னை வழி மறித்தான்.

" எங்கே போறே சங்கரா?" என்று கேட்டான் அவன். " கல்லூரிக்கு" என்று நான் ஈன சுரத்தில் பதிலளித்தேன்.
" கல்லூரிக்கு போய் என்ன பண்ணப் போறே?" என்று என்னை வம்புக்கிழுத்தான் அவன். " கல்லூரியில் போய் படித்து பட்டம் வாங்கப் போறேன்" என்றேன். அவன் பெரிதாக சிரித்து "இங்கே பாருடா நாலணா கொடுத்து பட்டம் கடையில வாங்கறதை விட்டுட்டு கல்லூரில படிச்சு வாங்கப் போறானாம்" என்று சொன்னவன் வெடுக்கென்று என் கையில் இருந்த புத்தகத்தை பிடுங்கி " நீ படிச்ச லட்சணம் போறும். படிச்சவன் பாட்டைக் கிழிச்சானாம் எழுதினவன் ஏட்டை கிழிச்சானாம் நீ ஒண்ணும் படிச்சு கிழிக்க வேணாம்" என்று சொல்லி என் புத்தகத்தை சுக்கு நூறாக கிழித்தெறிந்தான்.

புது புத்தகம் வாங்க பணம் இல்லாமல் அம்மா சிறுவாடு சேர்த்த பணத்தில் நியூ சினிமா பக்கம் இருந்த பழைய புத்தககடையில் அழக்காகி சற்று கிழிந்தும் போயிருந்த அந்த புத்தகத்தை பேரம் பேசி கடைக்காரரின் ஏச்சுக்கு ஆளாகி வாங்கின அந்த புத்தகத்தை அவன் கிழித்தது என்னை அழ வைத்தது. அழுகையை அடக்கிக் கொண்டு

" உனக்கு நான் என்ன கெடுதல் செஞ்சேன் சந்துரு இப்படி என்னை துண்புறுத்தறயே" என்றேன் நான். " என்ன பண்ணினையா? பரீட்சைல எனக்கு உன் பேபரைக் காட்டாம பெஇயில் ஆக வைச்சே. திண்டுக்கல் வரைக்கும் தேடி வந்து எங்க அப்பாகிட்டெ என்னை காட்டி கொடுத்தே. செலவுக்கு பணம் இல்லாத்தால அந்த சிறுமியோட சங்கிலியை எடுக்கப் போன என்னைக் காட்டிக் கொடுத்து எல்லோர் முன்னாலேயும் அவமானப்படுத்தின. இது போறாதா?" என்று ஆக்ரோஷமாக கேட்டான்.

உண்மையில் எனக்கு அவன் மேல் பரிதாபம் ஏற்பட்டது. " சந்துரு நீ அனாவசியமா என் மேல் கோபபடறே. வசதிகளும் அன்பான பெற்றோர்களும் உனக்கு இருக்கு. அதைப் பயன் படுத்தி நல்லா படிச்சு நல்லவனா வாழ முயற்சி செய். சந்துரு நீயே உன் சத்துரு என்பதை உணரு" என்றேன் நான்.

" இதைப் பாருடா, புத்தர் போதிக்க வந்துட்டாரு. பொத்திக்கிட்டு போடா" என்று சொல்லி வேகமாக விரைந்தான் அவன்.

அன்றும் மைதிலி தான் எனக்கு புது புத்தகம் வாங்க பணம் தந்து உதவினாள். நான் வேலைக்கு வந்த்ததும் அந்த பணத்தை திருப்பி தந்துவிடுகிறேன் என்று அவளிடம் உறுதி கூறினேன். ஆனால் அவாறு செய்யவில்லை என்பதை நினைத்து வெட்கினேன்.

" என்ன சார் யோசனைல இருக்கீங்க? வெளியே நேர்முகத்தேர்வுக்கு ஆட்கள் காத்துக்கிட்டு இருக்காங்க. அவங்களை ஒவ்வொருவராக அழைப்போமா?" என்று மேலதிகாரி கேட்க நான் நிகழ் காலத்திற்கு திரும்பினேன்.

தொடரும்...

மதி
18-06-2010, 09:59 AM
ஃப்ளாஷ்பேக் முடிஞ்சு நிகழ்காலத்துக்கு வந்தாச்சு... சந்துரு இப்போது எப்படி? மாறிவிட்டானா... படிக்க காத்திருக்கிறோம்..

சிவா.ஜி
18-06-2010, 10:15 AM
மகா வில்லனான சந்துரு...இப்போது அரசியல்வாதியின் சிபாரிசில் வேறு வந்திருக்கிறான்....என்ன அமர்க்களம் செய்யப்போகிறானோ...

தொடருங்கள் நண்பரே.

govindh
18-06-2010, 01:50 PM
சந்துரு சங்கரனை பார்த்தவுடன் என்ன செய்வான்...?
தொடருங்கள் நண்பரே.

அமரன்
18-06-2010, 06:02 PM
அப்பவே அப்படி எல்லாம் செய்தானே.. இப்ப என்னல்லாம் செய்வானோ..

சுறுசுறுப்பாக எதிர்பார்ப்பைத் தூண்டுகிறது மதுரண்ணா.

மதுரை மைந்தன்
19-06-2010, 06:40 PM
ஃப்ளாஷ்பேக் முடிஞ்சு நிகழ்காலத்துக்கு வந்தாச்சு... சந்துரு இப்போது எப்படி? மாறிவிட்டானா... படிக்க காத்திருக்கிறோம்..

உங்கள் பின்னுட்டத்திற்கு மிக்க நன்றி நண்பரே

மதுரை மைந்தன்
19-06-2010, 06:42 PM
மகா வில்லனான சந்துரு...இப்போது அரசியல்வாதியின் சிபாரிசில் வேறு வந்திருக்கிறான்....என்ன அமர்க்களம் செய்யப்போகிறானோ...

தொடருங்கள் நண்பரே.உங்கள் தொடர்ந்த ஆதரவுக்கு மிக்க நன்றி நண்பரே

மதுரை மைந்தன்
19-06-2010, 06:43 PM
சந்துரு சங்கரனை பார்த்தவுடன் என்ன செய்வான்...?
தொடருங்கள் நண்பரே.

உங்கள் பின்னுட்டத்திற்கு மிக்க நன்றி நண்பரே

மதுரை மைந்தன்
19-06-2010, 06:44 PM
அப்பவே அப்படி எல்லாம் செய்தானே.. இப்ப என்னல்லாம் செய்வானோ..

சுறுசுறுப்பாக எதிர்பார்ப்பைத் தூண்டுகிறது மதுரண்ணா.உங்கள் பின்னுட்டத்திற்கு மிக்க நன்றி நண்பரே

மதுரை மைந்தன்
19-06-2010, 06:51 PM
பாகம் 4

" முதல்ல அந்த மினிஸ்டர் சிபாரிசோட வந்திருக்கவரை பேட்டி கண்டு தேர்வு செஞ்சுடுவோம். அப்புறம் மத்தவங்ககிட்ட ஏற்கனவே இந்த வேலைக்கு ஆள் எடுத்தாச்சு, போயிட்டு வாங்கனு சொல்லிடுவோம்" என்றார் ஒரு மேலதிகாரி. நேர்முகத்தேர்வுக்காக நான் அழைத்திருந்த அந்த 10 நபர்கள் மீது அனுதாபம் ஏற்பட்டது. " சார், மத்தவங்ககிட்ட ஏற்கனவே வேலைக்கு ஆள் எடுத்தாச்சுனு சொல்ல வேன்டாம். அவர்களிடமும் தேர்வு நடத்தி நாம் அவர்களின் லிஸ்டை வைத்துக் கொள்வோம். வேறு வேலைகள் காலியாகும் போது அவர்களிலிருந்து தெரிவு செய்வோம்" என்றேன் நான். நல்லவரான ஒரு மேலதிகாரி இதற்கு ஒப்புக் கொண்டார். முதல் தேர்வாளனாக சந்துரு அறைக்குள் நுழைந்தான். நுழைந்தவன் என்னைப் பார்த்ததும் திடுக்குற்றான். உடனே சமாளித்துக் கொண்டு " சங்கரா, நீயும் இங்கே தான் வேலை பாக்கறையா. நல்லதா போச்சு" என்று சிரித்து தனது இருக்கையில் அமர்த்தலாக அமர்ந்தான்.

" ஏன் சார், இவரை உங்களுக்கு ஏற்கனவே தெரியுமா?" என்று என் காதில் கேட்டார் பக்கத்திலிருந்த மேலதிகாரி. நான் தலையை ஆட்டினேன். மற்றவர்கள் ஒழுங்காக விண்ண்ப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் காப்பியையும் இணைத்திருந்தார்கள். ஆனால் சந்துரு அவ்வாறு செய்யவில்லை என்பதால் நான் ஒரு படிவத்தை எடுத்து என் கடமைப் படி அவனிடம் " உங்கள் பெயர்?" என்று கேட்டேன். அவன் பலமாக சிரித்து மேலதிகாரிகளிடம் " இங்கே பாருங்க எனக்கு இவனை சின்ன வயசில டிரவுசரை இடுப்பில இறுக்கி கட்டிக்கிட்டு மேல சட்டை போடாம மூக்கு ஒழுக இருந்ததிலிருந்து தெரியும். இவனுக்கும் என்னைத் தெரியும். இருந்தும் எங்கிட்ட பேர் என்னனு கேக்கறானே" என்று சொல்லி பலமாக சிரித்தான். என்னுடைய நிலமையைப் புரிந்து கொண்ட மேலதிகாரி " மிஸ்டர் சந்திரசேகரன், அவர் தனது கடமையை செய்யறாரு. உங்க பெயர் சந்திரசேகரன் தானே?" என்று எனது உதவிக்கு வந்தார். சந்துரு பேசாம தலையை மட்டும் ஆட்டினான். நான் அடுத்த கேள்விக்கு சென்றேன். " உங்களுடைய படிப்பு?"

என்னுடைய அந்த கேள்விக்கு பதில் சொல்லாமல் என்னையே முறைத்து பார்த்தான் அவன். " எஸ்.எஸ்.எல்.சி. பெயில்?" என்று கேட்டேன். அவன் பதில் சொல்லாமல் தலையை குனிந்து கொண்டான். " உங்களுக்கு முன் அனுபவம் உண்டா?". நான் இந்த கேள்வியைக் கேட்டதும் அவன் மேலதிகாரியிடம் " இதை பாருங்க. இந்த சங்கரன் எனக்கு சத்துரு. அவன் அதான் எடக்கு மடக்கா கேள்விகளைக் கேட்டுகிட்டிருக்கான். என்னால் பதில் சொல்ல முடியாது. நீங்க யாராவது கேளுங்க" என்றான்.

மேலதிகாரி என்னிடம் கண் ஜாடை செய்து விட்டு " சரி, மிஸ்டர் சந்திரசேகரன், உங்களுக்கு இந்த வேலை ஏன் வேண்டும்?" என்றார்.

" இப்போ கேட்டிங்களே அதான் சரியான கேள்வி. நான் என்ன இவனை மாதிரி அன்னக்காவடியா? எனக்கு ஊர்ல 10 ஏக்கரா நஞ்செய்யும் 10 ஏக்கரா புஞ்செய்யும் இருக்கு. இருந்தாலும் வீட்டில பொண்டாட்டிக்காரி நொய்யு நொய்யுனு வேலைக்கு போ வேலைக்கு போனு அழறா. உத்தியோகம் புருஷ லட்சணம்னு சொன்னா. நான் சொன்னேன் புருஷனா லட்சண்மா உனக்கு மூணு புள்ளங்களைக் குடுத்துருக்கேன். அப்புறம் என்ன?. எங்க தலைவருக்கு இது தெரிஞ்சு போய் போடா நமக்கு வேண்டப்பட்ட*வரோட கம்பெனில ஒரு வேலை காலியிருக்கு நான் சொன்னா அவர் என் வார்த்தையைத் தட்ட மாட்டாருனு சொன்னாரு. அதான் இங்கே வந்தேன்" என்று சொல்லிவிட்டு தன் கைகளின் 10 விரல்களிலும் போட்டிருந்த மோதிரங்களால் தாளம் போட்டான்.

மேலதிகாரிகள் மேற்கொண்டு கேட்காமல் " மிஸ்டர் சந்திரசேகரன், இந்த வேலைக்கு உங்களை தேர்ந்தெடுத்திருக்கிறோம். வீட்டுக்கு போங்க. அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரை அனுப்பி வைக்கிறோம்" என்றார்கள். சந்துரு என்னைப் பார்த்து விஷமத்தனமாக சிரித்துக் கொன்டே வெளியே சென்றான். மற்ற தேர்வாளர்களை பேட்டி கண்டு முடிக்க மாலை ஆகிவிட்டது. நான் மேலதிகாரிகளிடம் " சந்திரசேகரனுக்கு கம்பெனியில் வேலை கொடுத்தால் அவன் கம்பெனியின் ஒழுங்கு, கட்டுப்பாடு இவற்றை சீர் குலைத்து விடுவான். ஆகவே அவனுக்கு இந்த வேலையைத் தருவதில் எனக்கு உடன் பாடு இல்லை" என்று ஆணித்தரமாக கூறினேன்.

எனது படிப்பு முடிந்ததும் எனக்கு இந்த கம்பெனியில் வேலை கிடைக்க நாங்கள் வடக்கு மாசி வீதி வீட்டை காலி செய்து ஆரப்பாளையம் பகுதியில் ஒரு மலிவான வாடகை வீட்டில் குடியேறினோம். பாத்திமா கல்லுரியில் எனது கடைசி தங்கை சேர்ந்ததால் ஆரப்பாளையம் பகுதியிலிருந்து சென்று வர வசதியாக இருந்தது. சந்துருவைப் பார்த்தவுடன் அவனுடைய அப்பா அம்மா எப்படி இருக்கிறார்கள் என்று அறிய ஆவலாக இருந்தது. என் மீது அன்பை சொரிந்த அந்த நல்ல மனிதர்களை தரிசிக்க வேண்டும் என்று வடக்கு மாசி வீதிக்கு சென்றேன். சந்துருவுன் வீட்டுக் கதவைத்தட்டினேன்.

அங்கு எனக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. கதவைத் திறந்து கையில் நோஞ்சலான குழந்தையுடன் நினிறிருந்தாள் மைதிலி. வீட்டின் நடுவில் சங்கிலியால் பிணைக்கப்பட்டு படுத்திருந்த சந்துருவுன் அம்மாவைப் பார்த்தது எனக்கு மேலும் அதிர்ச்சியைத் தந்தது.


தொடரும்...

அமரன்
19-06-2010, 07:02 PM
பல திருப்பங்களை தனக்குள் வைத்துக் கொண்டு நகர்கிறது கதை.

எதிர்பார்ப்பை எழ வைக்கும் இடத்தில் முடித்திருப்பது தொடர்கதை இலக்கணம்.

தொடருங்க மதுரண்ணா.

கீதம்
19-06-2010, 11:41 PM
மைதிலியின் வாழ்க்கையையும் பாழாக்கிவிட்டானா அந்தப் பாதகன்? இனி கம்பெனி என்னாகப்போகிறதோ? எப்படியாவது அவனைத் தடுக்கவேண்டுமே! நல்ல விறுவிறுப்புடன் தொடர்கிறீர்கள். பாராட்டுகள்.

மதி
20-06-2010, 04:10 AM
ஆஹா.. நல்ல திருப்பங்களுடன் பயணிக்கிறது கதை... தொடருங்கள் அன்பரே

சிவா.ஜி
20-06-2010, 09:00 AM
அடடா....நல்லப் பெண் மைதிலி...இந்த முரடனிடம் மாட்டிக்கொண்டாளே....அம்மாவை ஏன் சங்கிலியால் கட்டி வைத்திருக்கிறார்கள்....எதிர்பார்ப்பை எகிற வைத்துவிட்டீர்கள்.

தொடருங்கள் நண்பரே....

govindh
20-06-2010, 10:55 AM
திடீர் திருப்பம்....
அடுத்த பகுதியை அறிந்து கொள்ள
ஆவல் அதிகரிக்கிறது....

தொடருங்கள்...தொடர்கிறோம்....

பா.ராஜேஷ்
20-06-2010, 11:00 AM
மிக அருமையாக விறுவிறுப்புடன் செல்கிறது கதை... தொடருங்கள் நண்பரே..

samuthraselvam
21-06-2010, 05:05 AM
சந்த்ரு சரியான யமகாதகன் தான்... பாவி நல்ல பெண்ணையும் கல்யாணம் என்ற பெயரில் கெடுத்தானா? அம்மாவையும் சங்கிலியால் கட்டி வைத்துவிட்டான். அப்பாவை என்ன செய்தானோ?

தொடருங்கள் மைந்தரே...

மதுரை மைந்தன்
21-06-2010, 11:49 AM
பல திருப்பங்களை தனக்குள் வைத்துக் கொண்டு நகர்கிறது கதை.

எதிர்பார்ப்பை எழ வைக்கும் இடத்தில் முடித்திருப்பது தொடர்கதை இலக்கணம்.

தொடருங்க மதுரண்ணா.

உங்கள் தொடர்ந்த ஆதரவுக்கு மிக்க நன்றி நண்பரே

மதுரை மைந்தன்
21-06-2010, 11:51 AM
மைதிலியின் வாழ்க்கையையும் பாழாக்கிவிட்டானா அந்தப் பாதகன்? இனி கம்பெனி என்னாகப்போகிறதோ? எப்படியாவது அவனைத் தடுக்கவேண்டுமே! நல்ல விறுவிறுப்புடன் தொடர்கிறீர்கள். பாராட்டுகள்.

உங்கள் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி நண்பரே

மதுரை மைந்தன்
21-06-2010, 11:52 AM
ஆஹா.. நல்ல திருப்பங்களுடன் பயணிக்கிறது கதை... தொடருங்கள் அன்பரே


உங்கள் பின்னுட்டத்திற்கு மிக்க நன்றி நண்பரே

மதுரை மைந்தன்
21-06-2010, 11:53 AM
அடடா....நல்லப் பெண் மைதிலி...இந்த முரடனிடம் மாட்டிக்கொண்டாளே....அம்மாவை ஏன் சங்கிலியால் கட்டி வைத்திருக்கிறார்கள்....எதிர்பார்ப்பை எகிற வைத்துவிட்டீர்கள்.

தொடருங்கள் நண்பரே....

உங்கள் தொடர்ந்த ஆதரவுக்கு மிக்க நன்றி நண்பரே

மதுரை மைந்தன்
21-06-2010, 11:54 AM
திடீர் திருப்பம்....
அடுத்த பகுதியை அறிந்து கொள்ள
ஆவல் அதிகரிக்கிறது....

தொடருங்கள்...தொடர்கிறோம்....


உங்கள் பின்னுட்டத்திற்கு மிக்க நன்றி நண்பரே

மதுரை மைந்தன்
21-06-2010, 11:55 AM
மிக அருமையாக விறுவிறுப்புடன் செல்கிறது கதை... தொடருங்கள் நண்பரே..


உங்கள் பின்னுட்டத்திற்கு மிக்க நன்றி நண்பரே

மதுரை மைந்தன்
21-06-2010, 11:56 AM
சந்த்ரு சரியான யமகாதகன் தான்... பாவி நல்ல பெண்ணையும் கல்யாணம் என்ற பெயரில் கெடுத்தானா? அம்மாவையும் சங்கிலியால் கட்டி வைத்துவிட்டான். அப்பாவை என்ன செய்தானோ?

தொடருங்கள் மைந்தரே...

நன்றி நண்பரே

மதுரை மைந்தன்
21-06-2010, 11:59 AM
பாகம் 5

" மைதிலி நீ எப்படி.......? அம்மாவுக்கு என்ன ஆச்சு?" என்று கேள்விகளை அடுக்கினேன். " உள்ளே வாங்க அண்ணா, ரொம்ப நாளாச்சு உங்களைப் பார்த்து. நீங்க கேட்ட கேள்விகளுக்கெல்லாம் விரிவா சொல்றேன். முதல்ல நீங்க இந்த சேர்ல உக்காருங்க. நான் போய் காபி போட்டு கொண்டாறேன்" என்றாள் அவள். " காபியெல்லாம் வேண்டாம். முதல்ல நீ சொல்ல வந்ததை சொல்லு" என்றேன்.

" எனக்கும் சந்துருவுக்கும் நடந்த கல்யாணம் கட்டாய கல்யாணம். எங்க அப்பா நடத்தி வந்த ஓட்டல் நஷ்டத்தில போக ஆரம்பிச்சது. அதை சரிக்கட்ட அப்பா சந்துருவோட அப்பா கிட்ட கடன் வாங்க ஆரம்பிச்சார். கடன் மலை மாறி ஏறிடுச்சு. இந்த நேரத்தில சந்திருவோட அப்பா ஹார்ட் அட்டாக்ல இறந்துட்டார். அவர் இறந்ததற்கப்புரம் சந்துரு எங்க அப்பாகிட்ட கடனை திருப்பிக் கேட்டு தொந்தரவு பண்ணினார். சந்துருவுக்கு என் மேல ஒரு கண் இருப்தது. அதனால ஒரு நாள் அப்பாகிட்ட உங்க பொண்ணை எனக்கு கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டா கடனை அடைக்க வேண்டாம் என்றார். எனக்கு அதைக் கேட்டு அதிர்ச்சி ஆயிடுச்சு. ஆனா அப்பாவொட நிலமை ரொம்ப மோசமா போயி தற்கொலை முயற்சிக்கு போயிட்டார். நான் அவரைத் தடுத்து கல்யாணத்துக்கு சம்மதித்தேன். ஓட்டலை வித்து அந்த பணத்தில கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டு அப்பாவும் அம்மாவும் கிராமதுக்கு போய் அங்கே இருக்கிற எங்க பழைய வீட்டில் வாழ்ந்துகிட்டுருக்காங்க. ஓட்டல் வித்த பணத்தில கல்யாண செலவு போக மீத தொகையை பாங்கில போட்டு அதில் வரும் வட்டில காலம் தள்ளிக்கிட்டுருக்காங்க.

கல்யாணம் ஆன புதிசில சந்துரு என்கிட்ட அன்பாகத்தான் இருந்தார். அவரோட அப்பாவின் கடையை பார்த்துகிட்டு அதில் வரும் வருமானத்தில நாங்க சந்தோஷமா இருந்தோம். அடுத்தடுத்து மூணு பசங்க பிறந்தாங்க. கடல்சி பையன் பிறந்த சமயம் தான் சந்துருவுக்கு ஆளும் கட்சில செல்வாக்குள்ள ஒரு தாதாவோட சகவாசம் ஆர்ம்பமாச்சு. அதற்கப்புறம் தினசரி குடிச்சிட்டு வந்து என்னையும் அம்மாவையும் அடிக்க ஆரம்பிச்சுட்டார். ஒரு நாள் ஏதோ தகராறு முற்றிப் போய் தாதாவோட ஆட்கள் அரிவாளை எடுத்து இவரை வெட்ட வந்துட்டாங்க. அவங்ககிட்ட இருந்து தப்பிக்க வீட்டுக்குள் ஓடி வந்து அம்மாவுக்கு பின்னால ஒளிஞ்சுக்கிடார். நான் பதறிப் போய் செய்வதறியாமல் நின்றேன். குழந்தைகள் அழ ஆரம்புச்சுட்டாங்க. அம்மா கல்லாய் சமைந்துட்டாங்க. அம்மவுக்கு பின்னால் இருந்த அவரை இழுத்து வெட்ட அரிவாளை ஓங்கிய போது அம்மாவுக்கு எங்கிருந்துதான் பலம் வந்ததோ, பக்கத்தில் இருந்த அம்மன் குத்து விளக்கினால் ஒருவன் வயிற்றில் குத்திவிட்டு மற்றவர்களை நோக்கி முன்னேறினார். அவர்கள் காயம் பட்டவனை இழுத்துக் கொண்டு தப்பி ஓடி விட்டார்கள். இந்த நிகழ்ச்சியில் அம்மாவுக்கு புத்தி பேதலித்து விட்டது. ஆனா அந்த தாதாவோட ஆட்கள் கடையை உடைத்து சாமான்களுக்கு தீ வச்சிட்டாங்க. அதனால கடையை மூடிட்டு வீட்டில வெருமுனே உக்காந்திருந்தாரு. வெளியே போகவும் பயம். அப்பத்தான் சந்துருவை ஆளும் கட்சித் தலைவர் அழைச்சு புத்திமதி சொல்லி அவருக்கும் அந்த தாதாவுக்கும் சமாதானம் செஞ்சு வைத்தார். அதோட அவருக்கு தெரிஞ்ச கம்பெனியில் வேலையும் வாங்கி தரேன்னு சொன்னார்." என்று சொல்லி நிறுத்தினாள் மைதிலி.

" ஏன் அம்மாவை சங்கிலியால் கட்டி போட்டிருக்கு?" என்று கேட்டேன் நான். " ஒரு நாள் சந்துரு சாப்பாடு சரியில்லை என்று சாப்பாட்டுத் தட்டை என் மேல் எறிந்தார். நான் தற்செயலாக குனிய அது என்னோட பையன் தலையைத் தாக்கி ரத்தம் கொட்டியது. அதைக் கண்ட அம்மா குத்து விளக்கினால் சந்துருவைத் தாக்க வந்தார். சந்துரு அவரை மடக்கி ஒரு துண்டால் அவர் கைகளைக் கட்டி போட்டார். அதற்கப்புரம் ஒரு சங்கிலியால் அவரை கட்டி போட்டு விட்டார். நான் அம்மாவை தினம் துண்டால் துடைத்து விடுவேன். அவருடைய இயற்கை உபாதைகளையும் நான் சுத்தம் செய்வேன். சாப்பாட்டை ஊட்டி விடுவேன். அவருக்கு எந்தவித உணர்ச்சியும் கிடையாது. சில சமயங்களில் அவர் கண்க்ளிலிருந்து கண்ணீர் வரும்." என்றாள் மைதிலி.

சுருண்டு படுத்திருந்த அம்மாவைப் பார்த்து நான் ரத்தக் கண்ணீர் விட்டேன். " நீ எதற்கும் கவலைப் படாதே மைதிலி. உனக்கு ஆதரவாக நான் என்றும் இருப்பேன். அம்மாவை மருத்துவ மனையில் சேர்த்து குணப்படுத்த என்னாலான எல்லா முயற்சிகளையும் செய்கிறேன்" என்று சொல்லிவிட்டு பர்சிலிருந்து கைவசம் இருந்த பணத்தை கொடுத்து " மஞ்சள் குங்குமத்துக்கு வச்சிக்கோ" என்றேன். அவள் அதை வாங்க மறுத்தாள். " மைதிலி நீ எனக்கு பல தடைவகள் உதவியிருக்கே. முக்கியமா சந்துரு என் உணவை சாக்கடையில் எறிஞ்சப்போ நீ தந்த உணவு உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் என்பது போல இருந்தது. ஆகவே கட்டாயம் வாங்கிக் கொள்" என்று கூறி ஒரு தீர்மானத்துடன் அங்கிருந்து கிளம்பினேன்.அடுதத பாகத்தில் நிறைவு பெறும்

மதி
21-06-2010, 12:24 PM
நல்லா போய்கிட்டு இருக்கு... இவ்வளவு கொடியவனா சந்துரு...??? அடுத்து என்ன ஆகப்போகுதோ...?!

தொடருங்கள் சார்..

சிவா.ஜி
21-06-2010, 12:36 PM
என்ன மனுஷன் இவன் என வெறுப்பு வருகிறது. பாவம் மைதிலி. தனக்காக அருவாள் எடுத்த அம்மாவையே சங்கிலியால் கட்டி வைத்திருக்கிறானே....பாவி.

அருமையாய் போகிறது. வாழ்த்துக்கள் நண்பரே.

govindh
21-06-2010, 02:03 PM
கதையோட்டம்....அருமை...
தொடருங்கள் நண்பரே...

பா.ராஜேஷ்
21-06-2010, 08:05 PM
அதுக்குள்ளே சந்துரு திருந்த போறனா என்ன!? அடுத்த பாகத்திற்காக காத்திருக்க வேண்டியதுதான்.. சீக்கிரம் தொடருங்கள் ..

அன்புரசிகன்
22-06-2010, 04:24 AM
பல பெற்றோர் செய்யும் தவறை சந்துருவின் பெற்றோரும் செய்ய வந்த வினை இன்று மைதிலி வரை பாதிக்கப்பட்டிருக்கிறது. அழகாக கதையை நகர்த்துகிறீர்கள். யாதார்தமான கரு.
தொடருங்கள். முடிவுக்காக நண்பர்களுடன் நானும்...

samuthraselvam
22-06-2010, 05:05 AM
சந்த்ரு உறவுகளுக்கு சரியான சத்ருதான்.... மனித பிறவியா இல்லை படைக்கும் போது ஏதேனும் தவறு நிகழ்ந்திருக்குமா? என்ற சந்தேகம் வருகிறது.... தொடருங்கள் மைந்தரே....

மதுரை மைந்தன்
24-06-2010, 11:57 AM
இறுதி பாகம்

மைதிலியைப் பார்த்து விட்டு வந்தவுடன் இரண்டு கடிதங்களைத் தயார் செய்து கொண்டு மேலதிகாரியை சந்திக்க சென்றேன்.

" வாங்க சங்கர். பணியாளருக்கான நேர்முகத் தேர்வின் இறுதியில் நீங்கள் சொன்னதை யோசித்துப் பார்த்தோம். அமைச்சரின் சிபாரிசில் வந்த சந்திரசேகரனை கம்பெனியில் சேர்த்தால் மற்ற பணியாளர்களிடையே கட்டுப்பாடு, ஒழுங்கு சீர் குலைந்துவிடும் அபாயம் பற்றி சிந்தித்தோம். அவரை பணியில் அமர்த்தாவிட்டால் அவருக்கு பரிச்சயமான தாதாவின் ஆட்களால் நமது நிம்மதி குலைந்துவிடக்கூடும் என்பதையும் அதே நேரத்தில் அமைச்சரின் கோபாத்திற்கும் ஆளாக நேரிடும் என்றும் தோன்றியது. இதுக்கு ஒரே முடிவு நம்ம நிர்வாகியின் கையில் தான் இருக்கிறது. நாம அவரை சந்திச்சு எல்லா விவ்ரங்களையும் கூறி முடிவை அவரிடம் ஒப்படைப்போம்" என்றார் அந்த மேலதிகாரி.

" அதற்கு அவசியமில்லை சார். நீங்க இந்த இரண்டு கடிதங்களைப் படியுங்கள்" என்று அவரிடம் கடிதங்களை நீட்டினேன்.

முதல் கடிததத்தைப் படித்துவிட்டு " என்னா சார் நீங்களே சந்திரசேகரனுக்கு இந்த வேலை அவசியம் தரவேண்டும்னு சிபாரிசு செஞ்சிருக்கீங்க?" என்று வியப்புடன் கேட்டார்.

" சந்துரு என்னுடைய சகோதரியின் கணவர் என்பதை சமீபத்தில் அறிந்தேன். அந்த தாதாவுக்கும் அவனுக்கும் ஏற்பட்ட சண்டையில் ததாவின் ஆட்கள் அவனோட கடையை தீக்கிரையாக்கி விட்டார்கள். அவனோட அம்மாவுக்கு புத்தி பேதலித்து பரிதாப நிலையில் இருக்கிறார்கள். அவனுக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள். இந்த நிலையில் அவனுக்கு இந்த வேலை உதவியாக இருக்கும். அவனுக்காக இல்லாவிட்டாலும் என் சகோதரிக்காக இந்த வேலையை தயவு சய்து அவனுக்கு கொடுங்கள்." என்றேன் நான்.

" அது சரி, ஆனா அவருக்கு வேலை கொடுத்தா கம்பெனியின் ஒழுங்கு கெட்டுவிடும்னு சொன்னீங்க. நாங்களும் நேர்முகத்தேர்வின் போது பார்த்தோம் அவரின் பந்தாவை, தான் வேலை செய்ய வேன்டிய அவசியம் இல்லை என்ற திமிரை. உங்கள் மீது அவருக்கு இருக்கும் காழ்ப்பு உணர்ச்சியையும் அறிந்தோம். இருந்துமா அவருக்கு சிபாரிசு செய்கிறீர்கள்" என்றார் அவர்.

" தயவுசெய்து எனது இரண்டாவது கடிதத்தையும் படியுங்கள்" என்றேன் நான்.

கடிதத்தைப் படித்துவிட்டு " என்ன சார் இது, உங்க வேலையை ராஜினாமா செய்கிறீர்கள்" என்று பதட்டத்துடன் கேட்டர் அவர்.

" சிறு வயது முதல் அவனோட பெற்றோர்களால் என்னுடன் ஒப்பிடப்பட்டு நான் நன்றாகப் படிக்கிறேன், நல்லவனாக இருக்கிறேன் என்பதை சுட்டிக் காட்டியதில் மிகவும் செல்லமாக வளர்க்கப்பட்ட சந்துருவுக்கு அவற்றிற்கு எதிர் மாறாக இருப்பது என்று இருந்துவிட்டான். காலப் போக்கில் இந்த மனப்பான்மை மாறி இருக்கும் என எதிர் பார்த்தேன். ஆனால் நேர்முகத் தேர்வின் போது அது இன்னும் மாறவில்லை என அறிந்தேன். நேர்முகத் தேர்வு அறைக்குள் நுழைந்த அவன் உங்களைக் கண்டதும் கைகூப்பி சிரித்தவன் என்னைக் கண்டதும் முகம் மாறியதைக் கண்டேன் நான். நான் ஒரு அதிகாரியாக வேலை பார்க்கும் இடத்தில் அவனும் வேலை பார்த்தால் நிச்சயம் கட்டுப்பாடு ஒழுங்கு ஆகியவற்றை அவன் மீறக்கூடும். எனக்கும் அவனைக் கண்டிப்பது சிரம்மாகிவிடும்.ஆகவே தான் நான் என் வேலையை ராஜினாமா செய்கிறேன். படிதத எனக்கு வேறு கம்பெனியில் வேலை கிடைக்க நல்ல வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால் அவனுக்கு இந்த வேலையை விட்டால் வேற வேலை கிடைப்பது கடினம்.

இயக்குனர் சிகரம் பாலசந்தர் சொன்ன மாதிரி ஒரு சின்ன கோடை பெரியதாக்குவதற்கு அதன் பக்கதிலிருந்த பெரிய கோடை அழித்து சின்னதாகுவதுதான் வழி. கெட்டவனாக இருக்கும் அவனைத் திருத்த ஒரே வழி நல்லவனாக இருக்கும் என்னை அவன் பார்வையில் கெட்டவனாக மாறுவதுதான். பயப்படாதீர்கள். நான் கெட்டவனாகப் போவதில்லை. நான் இங்கிருந்து சென்ற பிறகு அவனிடம் என்னைப் பற்றி குறை கூறுங்கள். நான் பொய்யன் பித்தலாட்டக் காரன் ஏமாற்றுப் பேர்வழி என்பதை அறிந்து என்னை வேலையிலிருந்து நீக்கி விட்டதாக கூறுங்கள். நான் இங்கில்லாததாலும் எனக்கு அவப்பெயர் ஏற்பட்டதையும் கேட்டு அவன் தன்னை மாற்றிக் கொள்ளலாம். வீட்டிலும் வேலையிலும் அவன் அக்கறை காட்டினால் என்னை விட மகிழ்ச்சியானவர்கள் இருக்க முடியாது".

" உங்க உயர்ந்த குணத்தையும், தியாக மனப்பான்மையையும் சகோதர பாசத்தையும் எண்ணிப் பார்த்து பெருமை அடைகிறேன். ஆனால் நீங்க எங்களை விட்டு பிரிஞ்சு போறதை நினைச்சு வருத்தமா இருக்கு. கடவுள் நிச்சயம் உங்களுக்கு நல்லதே செய்வார்" என்று உணர்ச்சி வசப்பட்டு என்னை கைகூப்பி வணங்கினார் அந்த மேலதிகாரி.

முதியோர் நல அமைப்பு ஒன்றை அணுகி அவர்கள் மூலமாக சந்துருவின் அம்மாவை மருத்துவ மனையில் சேர்த்து சிகிச்சைக்கு ஏற்பாடுகள் செய்தேன். இதில் நான் சம்பத்தப்பட்டிருப்பது சந்துருவுக்கு தெரியாமல் கவனித்துக் கொண்டேன். தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்பதைப் போல அம்மாவை ஆம்புலன்சில் ஏற்றுவதற்கு சந்துரு உதவியதைப் பார்த்து நிம்மதி அடந்தேன். பல நாட்கள் கழித்து சந்துரு மாறிவிட்டதை பழைய அலுவலக நண்பர்கள் மூலம் அறிந்து மகிழ்ந்தேன். எனது அடுத்த வேலைக்காக நேர்முகத் தேர்வுக்கு காத்திருக்கிறேன்.நிறைவு பெற்றது.

சிவா.ஜி
24-06-2010, 12:19 PM
தான் கஷ்டப்பட்ட நேரத்தில் உதவிய மைதிலிக்காக...இந்த காரியத்தை செய்தாலும்.....ஒரு முரடனை....கெட்டவனை திருந்தவைக்கவும் உதவியதே.

சங்கரனின் செயல் உண்மையிலேயே பாராட்டப்படவேண்டியது. நல்ல கருத்து சொன்ன கதைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மதுரை மைந்தன் அவர்களே.

பாரதி
24-06-2010, 01:05 PM
வித்தியாசமான முடிவுதான்!
பாராட்டுகிறேன் நண்பரே.

மதி
24-06-2010, 01:21 PM
எதிர்பார்க்காத முடிவு.. ஆனாலும் நன்றாக இருந்தது... !!!
பாராட்டுக்கள் மைந்தரே!!!

govindh
24-06-2010, 01:27 PM
கதை அருமை.
பாராட்டுக்கள்.

செல்வா
24-06-2010, 02:08 PM
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.

நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி
என்று தருங்கோல் என வேண்டா - நின்று
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான்தருத லால்.
1


என்ற குறளுக்கும் ஒளவையின் மூதுரைக்கும் அருமையான விளக்கம் இந்தக் கதை.

தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள்.

அமரன்
24-06-2010, 07:44 PM
நல்ல முடிவு!

சந்துரு மீது இடையில் பாசம் படர்வதைத் தடுக்க முடியவில்லை.

பாராட்டுகள் மதுரண்ணா.

பா.ராஜேஷ்
24-06-2010, 09:23 PM
நல்ல கதை... சீக்கிரம் முடிந்து விட்டது..;(... பாராட்டுக்கள்...

அன்புரசிகன்
27-06-2010, 12:19 PM
கதையின் முடிவில் ஒரு நீதியை உணரமுடிகிறது. தவமிருந்து பெற்றபிள்ளை என்று பிள்ளையை ஊதாரியாக்கியதற்கு முக்கியபங்கு பெற்றாரில் உள்ளது. கதையாக இருந்தாலும் உண்மையில் சந்துரு மீது குறை காண என்னால் இயலவில்லை. நண்பனாக இருந்து அவனது மனப்பான்மையை படித்து அதற்கேற்றாற்போல் தன்னை மாற்றியமைத்தவன் சந்துருவுக்கு பிடிக்காமல் போனதிலும் ஆச்சரியம் இல்லை. உண்மையில் பெருந்தன்மை தான்.

வாழ்த்துக்கள் மதுரையண்ணா...

கீதம்
27-06-2010, 09:44 PM
நீரோட்டம்போல் தெளிவான கதையமைப்பு. சந்துருவுக்காக மட்டுமில்லாமல் மைதிலிக்காக, அவளது எதிர்காலத்திற்காக இந்த முடிவெடுப்பது உண்மையில் நன்று. நல்ல கதை. மனமார்ந்த பாராட்டுகள்.