PDA

View Full Version : சந்தியாக்காலம்



simariba
14-06-2010, 12:47 AM
இளமஞ்சள் வெயிலும்
இதமாயில்லை
தென்றல் காற்றும்
சுகமாயில்லை

என்னே என் தனித்தீவில்
கையில் புத்தகத்துடன் நான்..


இங்கே வந்தும்
புத்தகமா அம்மா?
சிணுங்கும் என்
செல்லத்தின் குரல்..

இடையே வேறு ஒர் சங்கொலி
அட என்ன இது சத்தம்
படித்துக்கொண்டிருந்த
கவனம் சிதறி
நிமிர்ந்த போது..

நகரும் கட்டடம் போல்
தன் பயணத்தை
துவக்கியிருந்த
ஸ்டார் விர்கோ...

ஆச்சர்யித்தபடி
கண்களை மீண்டும்
புத்தகத்துக்கு
திருப்புமுன்..

ஒரு கனம் விருந்தளித்த
அந்தக் காட்சி...

மேற்கில் அந்திசூரியனின்
சிவப்பு வண்ண அமர்க்களம்..

எதிர்திசையில் வெளிர் நீலம்
வெண்மேகத்தையும்
வான்நீலத்தையும்
சாம்பல் நிறமாக்கி பின்
கருமையாக்கவும்
இரவு படும்
ரசிக்கும்படியான அவசரம்...

நடுவானில் இரண்டும்
கலந்த ஊதா
அதிலும் சிவப்பு வெளிச்சம்
அங்கங்கே கீற்றுகளாய்...

அதுவரை
தூங்கிக்கொண்டிருந்த
விளக்குகளின்
கண்விழிப்பு
ஒவ்வொன்றாய்...

காற்றும் இப்போது
சில்லென்று...

மனதிற்குள்
ரசனை
வரும்போது...

தினமும் நாம்
பார்க்கும்
காட்சிகளும்
கவிதைகளாய்...

பாரதி
14-06-2010, 01:39 AM
கதிரவன் எழும் விழும் காட்சிகள் எல்லோரையும் பரவசப்படுத்தக்கூடியவை.
மிகத்திறமையான கலைஞனும் தீட்ட இயலா ஓவியங்களைப் போல அமைபவை.
ஒவ்வொரு நாளும் ஒரு இடம், ஒவ்வொரு நாளும் ஒரு நிறம் என கலக்கும் இயற்கைக் கலைஞனை எத்தனை வரிகள் கொண்டு கவிதை தீட்டினாலும் போதாது என்றே தோன்றும்!
அழகிய முயற்சியில் வந்த கவிதை.
பாராட்டுகிறேன். இன்னும் எழுதுங்கள்.

simariba
14-06-2010, 03:11 AM
கதிரவன் எழும் விழும் காட்சிகள் எல்லோரையும் பரவசப்படுத்தக்கூடியவை.
மிகத்திறமையான கலைஞனும் தீட்ட இயலா ஓவியங்களைப் போல அமைபவை.
ஒவ்வொரு நாளும் ஒரு இடம், ஒவ்வொரு நாளும் ஒரு நிறம் என கலக்கும் இயற்கைக் கலைஞனை எத்தனை வரிகள் கொண்டு கவிதை தீட்டினாலும் போதாது என்றே தோன்றும்!
அழகிய முயற்சியில் வந்த கவிதை.
பாராட்டுகிறேன். இன்னும் எழுதுங்கள்.

மிக்க நன்றி பாரதி!

பா.ராஜேஷ்
14-06-2010, 03:08 PM
மிக நன்றாக எழுதி உள்ளீர்கள்.. பாராட்டுக்கள் ...

சிவா.ஜி
14-06-2010, 03:24 PM
சந்தியாக்காலம்...எவரையும் ரசிக்க வைக்கும்....கவிஞருக்கோ...கவிதை பிறக்கவைக்கும்.

மாறும் வர்ணஜாலங்களை அழகாய் வார்த்தைகளில் படம்பிடித்துள்ளீர்கள் அபி.

வாழ்த்துக்கள்.

govindh
14-06-2010, 06:21 PM
"மனதிற்குள்
ரசனை
வரும்போது...

தினமும் நாம்
பார்க்கும்
காட்சிகளும்
கவிதைகளாய்..."

சந்தியாக்காலம்-மிக அருமை.
மிகவும் ரசித்து படித்தேன்...
பாராட்டுக்கள்...

அமரன்
14-06-2010, 08:33 PM
காட்சியைக் கவிதையின் அழகாக வார்த்திருக்கிறீர்கள்.

அலுப்புத் தட்டாத அற்புதம் இயற்கை..

பாராட்டுகள் அபிராமி.

simariba
14-06-2010, 11:01 PM
"மிக நன்றாக எழுதி உள்ளீர்கள்.. பாராட்டுக்கள் ... "
நன்றி ராஜேஷ்!!

"சந்தியாக்காலம்...எவரையும் ரசிக்க வைக்கும்....கவிஞருக்கோ...கவிதை பிறக்கவைக்கும்.

மாறும் வர்ணஜாலங்களை அழகாய் வார்த்தைகளில் படம்பிடித்துள்ளீர்கள் அபி.
வாழ்த்துக்கள்."
நன்றி சிவா!

"சந்தியாக்காலம்-மிக அருமை.
மிகவும் ரசித்து படித்தேன்...
பாராட்டுக்கள்...
காட்சியைக் கவிதையின் அழகாக வார்த்திருக்கிறீர்கள்."
நன்றி கோவிந்த்!

"அலுப்புத் தட்டாத அற்புதம் இயற்கை..
பாராட்டுகள் அபிராமி."
நன்றி அமரன்!

கீதம்
15-06-2010, 01:16 AM
சந்தியாக்காலத்தை ரசிக்கவைத்து கவிதையும் எழுதவைத்த உங்கள் செல்லத்தைப் பாராட்டுகிறேன்.

அழகிய கவிதைக்கு அன்பான பாராட்டு, அபி.

simariba
16-06-2010, 12:39 AM
நன்றி கீதம்!!