PDA

View Full Version : சூஃபித் தூரல்(Sufi Drizzle)



நாகரா
13-06-2010, 03:01 PM
1


அகமதுக் கோப்பை என்னில்
அல்லாவின் அருட்பானம்
நிரம்பி வழிகிறது
நிலமிசை தயவாய்!


2


இருதய ஓட்டையில் ஒழுகும்
அருண்மய அல்லாவின் பானம்!
திரு*முகமது* சாட்சி யாகும்!


3


அலைபாயும் மனமது திரும்பி
*அகமது*வே கதியாய் அடங்க
திரும்பும் எங்கும் அல்லாவின்
திரு*முகமது*வே தென்படும்!


4


அல்லா என்னில்
நீ கரைகிறாய்!
எல்லா மாகி
யாம் மறைகிறோம்!


5


அன்பே அகமது
அருளே முகமது
தயவே சையது(செய்யது)


6


அல்லாப் பளிங்கில்
நல்லார் நபிகளாய்
என்னைக் கண்டதும்
பொல்லா உலகின்
என்பொய்ப் பிம்பம்
பொன்மெய் யாகும்!

நாகரா
14-06-2010, 06:34 AM
7

அவனே என்னுள்
நானாய் எழுகிறான்.
நானே அவனுள்
அவனாய் விழுகிறேன்.
எழுவது
அவனது இர(ற)க்கம்.
விழுவது
எனது ஏற்றம்.

8

வெறும் நானாக
அகமே முகமாய்
நான் நிற்க
அவனே நானான
ஒருமையின் ஞாபகம்
முழுதாய் மீள்கிறது

9

என் இருப்பே
அவனென அறிந்து
சும்மா இருக்கிறேன்
நான்!
நானே நீயென
உறுதி கூறித்
தானே செயலாற்றுகிறான்
அவன்!

கீதம்
17-06-2010, 10:52 PM
சுகமாய் நனைக்கின்றன, சூஃபித் தூறல்கள்.
வார்த்தைஜாலம் செய்து வசியம் செய்கிறீர்கள்.
தொடரட்டும் உங்கள் பங்களிப்பு!
பாராட்டுகள் நாகரா அவர்களே!

govindh
17-06-2010, 11:02 PM
"அவனே என்னுள்
நானாய் எழுகிறான்.
நானே அவனுள்
அவனாய் விழுகிறேன்.
எழுவது
அவனது இர(ற)க்கம்.
விழுவது
எனது ஏற்றம்."

விழுந்து எழுவது ஏற்றம்....
நற்கவி....
பாராட்டுக்கள்....!

நாகரா
18-06-2010, 07:44 AM
உம் ஊக்க வரிகளுக்கு நன்றி கீதம் மற்றும் கோவிந்த்

அமரன்
18-06-2010, 10:24 PM
எப்போதும் போல சொல்வி\ளையாட்டுடன் அமுத மழை பொழிகிறது.

தொடருங்கள் நாகாய்யா

பாரதி
19-06-2010, 02:20 AM
தூறலில் நனைவது நன்றாகவே இருக்கிறது நாகரா.
மன்ற வானில் உங்கள் தூறல் என்றும் தொடரட்டும்.

ஒரு சிறிய விண்ணப்பம்: மூன்றாவது தூறல் கண்டு யாரேனும் வருத்தப்பட வாய்ப்பிருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டுகிறேன்.

நாகரா
19-06-2010, 09:36 AM
எப்போதும் போல சொல்வி\ளையாட்டுடன் அமுத மழை பொழிகிறது.

தொடருங்கள் நாகாய்யா
தொடரச் சொல்லும் உம் ஊக்குவிப்புக்கு நன்றி திரு. அமரன்

சிவா.ஜி
19-06-2010, 09:40 AM
தூறல்கள் சுகமாய் நனைக்கின்றன. ஏழாவது தூறல்...இதயத்தில் நிற்கிறது. தொடருங்கள் நாகரா.

நாகரா
19-06-2010, 10:18 AM
தூறலில் நனைவது நன்றாகவே இருக்கிறது நாகரா.
மன்ற வானில் உங்கள் தூறல் என்றும் தொடரட்டும்.

ஒரு சிறிய விண்ணப்பம்: மூன்றாவது தூறல் கண்டு யாரேனும் வருத்தப்பட வாய்ப்பிருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டுகிறேன்.


3


அலைபாயும் மனமது திரும்பி
*அகமது*வே கதியாய் அடங்க
திரும்பும் எங்கும் அல்லாவின்
திரு*முகமது*வே தென்படும்!

அகமதுவே கதியாய் என்றால் நம் அகமதில் உறையும் சற்குரு "அகமது" அவர்களே கதியாய் என்று பொருள்!

அடுத்த இரு வரிகள் புனிதக் குர் ஆனின் திரு வாசகம்

"Whithersoever you turn, there is the Face of Allah"

என்றாலும் வருத்தப்பட வாய்ப்பை ஏற்படுத்தி இருந்தால், வருந்துகிறேன், மன்னிப்பைக் கோருகிறேன் திரு. பாரதி.

10

அல்லாவே வரைந்தான்
அகிலமுள யாவையும்!
உள்ளேபோய் மறைந்தான்
திரு "முகமது"வாய் யாவிலும்!

11

அல்லாவின் திரு முகம்
ஒவ்வொன்றின் உருவெழும்
தென்படா அக முகம்
வரையவொணா மறை முகம்
வரையரைகள் கடந்திருந்தும்
இறைந்திருக்கும் ஒரு முகம்
வரந்தரவே யாவுக்கும்
இற(ர)ங்கும் அருண் முகம்
பவ வினை அறு முகம்(கரும வினைகளை அறுக்கின்ற முகம்)
மன இதம் பழுக்க
அக விழி திறக்கத்
தெரிந்திடும் அவன் முகம்

அமரன்
19-06-2010, 10:35 AM
ஒரு சிறிய விண்ணப்பம்: மூன்றாவது தூறல் கண்டு யாரேனும் வருத்தப்பட வாய்ப்பிருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டுகிறேன்.

வியந்தேன் அண்ணா:icon_b: உங்கள் நுண்ணிய பார்வை கண்டு..

அலைபாயும் சொல் அதிகமாய் அலைபாய வைக்கும் என்பது எந்தன் நிலைப்பாடு..!