PDA

View Full Version : என்னால் முடியும் !!!



பா.ராஜேஷ்
13-06-2010, 02:54 PM
என்னால் முடியாது
என்ற எண்ணம்
என்னுள் வந்துவிட்டால்
என்னால் முடிவதும்
என்னால் முடியாததாகிவிட கூடும் !

என்னால் முடியாதோ என்று
சிந்திப்பதை விட
எப்படி முடிப்பது என்று
சிந்தித்தல் ஏற்றம் தரும் !

govindh
13-06-2010, 10:40 PM
எண்ணித் துணிக கருமம்.....
ஏற்றம் தரும் சிந்தனைத் தூண்டல்....
உங்கள் கவி வரிகள்...
பாராட்டுக்கள்.....

simariba
14-06-2010, 01:20 AM
உங்கள் கருத்து மிகச்சரி!
வாழ்த்துக்கள் ராஜேஷ்!

பா.ராஜேஷ்
14-06-2010, 03:05 PM
எண்ணித் துணிக கருமம்.....
ஏற்றம் தரும் சிந்தனைத் தூண்டல்....
உங்கள் கவி வரிகள்...
பாராட்டுக்கள்.....

நன்றி கோவிந்த்..

பா.ராஜேஷ்
14-06-2010, 03:06 PM
உங்கள் கருத்து மிகச்சரி!
வாழ்த்துக்கள் ராஜேஷ்!

வாழ்த்துக்களுக்கு நன்றி அபிராமி அவர்களே...

சிவா.ஜி
14-06-2010, 04:07 PM
பாசிட்டிவ் எண்னங்களைக் கூட்டும் வரிகள்....

என்னால் முடியாது என நினைப்பதைவிட*
ஏன் முடியாது என எண்ணுவது ஏற்றம் தரும்.

நல்ல சிந்தனைவரிகளுக்கு வாழ்த்துக்கள் ராஜேஷ்.

கலையரசி
14-06-2010, 04:26 PM
எதிர்மறை எண்ணங்களைத் தவிர்த்து பாசிட்டிவ் எண்ணங்களை ஏற்படுத்திக் கொண்டால் முடியாதது இல்லை என்பதை அருமையாக விளக்கும் வரிகள். சுருக்கமாகச் சொன்னால் உள்ளத்தனையது உயர்வு.

வாழ்வில் ஏற்றம் பெற விரும்பும் இளைஞர்க்கு மிகவும் தேவையான கருத்து. பாராட்டுக்கள் ராஜேஷ்!

பா.ராஜேஷ்
14-06-2010, 04:42 PM
பாசிட்டிவ் எண்னங்களைக் கூட்டும் வரிகள்....

என்னால் முடியாது என நினைப்பதைவிட*
ஏன் முடியாது என எண்ணுவது ஏற்றம் தரும்.

நல்ல சிந்தனைவரிகளுக்கு வாழ்த்துக்கள் ராஜேஷ்.

ரொம்ப நன்றி அண்ணா !!!

பா.ராஜேஷ்
14-06-2010, 04:43 PM
எதிர்மறை எண்ணங்களைத் தவிர்த்து பாசிட்டிவ் எண்ணங்களை ஏற்படுத்திக் கொண்டால் முடியாதது இல்லை என்பதை அருமையாக விளக்கும் வரிகள். சுருக்கமாகச் சொன்னால் உள்ளத்தனையது உயர்வு.

வாழ்வில் ஏற்றம் பெற விரும்பும் இளைஞர்க்கு மிகவும் தேவையான கருத்து. பாராட்டுக்கள் ராஜேஷ்!

தங்கள் பாராட்டிற்கு நன்றிகள் கலையரசி மேடம்.

கீதம்
17-06-2010, 05:03 AM
ஏற்றம் தரும் சிந்தனையைத் தூண்டும்
எழில்மிகு வரிகள்!

பாராட்டுகிறேன், ராஜேஷ்.

குணமதி
17-06-2010, 06:25 AM
ஆக்கமான சிந்தனை!

அமரன்
17-06-2010, 04:33 PM
எண்ணால் முடியாதது ஏதுமில்லை
என்பதைச் சொல்லும் நல்ல கவிதை..

பாராட்டுகள் பா.ராஜேஸ்