PDA

View Full Version : மின்னஞ்சல் கதைகள் 12: குளமாய் இரு



பாரதி
12-06-2010, 09:11 AM
குளமாய் இரு.


குரு கவலையுடன் இருந்த அந்த சீடனைப்பார்த்தார்.

கை நிறைய உப்பும் ஒரு குவளையில் நீரையும் கொண்டு வந்தார்.

உப்பை அந்த குவளை நீரில் இட்டு கலக்கினார். அதைக்குடிக்குமாறு சீடனைப் பணித்தார்.

"எப்படி இருக்கிறது?" என்று அவனிடம் வினவினார்.

"உவ்வே... வாயில் வைக்கவே முடியவில்லை. உப்புக்கரிக்கிறது" என்றான் சீடன்.

முன்பு கொண்டு வந்த அதே அளவு உப்பை கையில் எடுத்துக்கொண்டு சீடனையும் அழைத்துக்கொண்டு அருகில் இருந்த குளத்திற்குச் சென்றார்.

கையிலிருந்த உப்பை குளத்திலிட்டார்.

"இப்போது குளத்து நீரைக்குடி" என்றார்.

சீடனும் குளத்து நீரைப்பருகினான்.

"எப்படி இருக்கிறது?" என்று வினவினார் குரு.

"நன்றாக இருக்கிறது" என்றான் சீடன்.

"உப்பின் சுவையை உணர்ந்தாயா..?" என்றார் குரு.

"இல்லை" என்றான் சீடன்.

அவனது கைகளை மெதுவாகப் பற்றிக்கொண்டு "வாழ்க்கையில் வரும் துன்பம் என்பது உப்பைப்போன்றது. அதை விட சற்றுக்கூட கூடுதலாகவோ குறைவாகவோ இல்லை. அதே போல வாழ்வில் வரும் துன்பத்தின் அளவு கூடவோ குறையவோ போவதில்லை. அது ஒரே அளவாகத்தான் இருக்கிறது. நாம் எவ்வளவு துன்பத்தை அனுபவிக்கிறோம் என்பது அதை எதில் இட்டுப்பார்க்கிறோமோ அதைப் பொருத்தது. ஆகவே துன்பத்தில் இருக்கும் போது நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். நமது பார்வையை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும்" என்றார்.

சீடன் அமைதியாக கவனித்தான்.

"சுருக்கமாக சொன்னால் குவளையாய் இருக்காதே... குளமாய் இரு. புரிகிறதா? " என்றார்.

கதையின் மூலம்: தெரியவில்லை.
நன்றி : கதை ஆசிரியருக்கும், ஆங்கிலத்தில் கதையை மின்னஞ்சலில் அனுப்பிய நண்பருக்கும்.

சிவா.ஜி
12-06-2010, 10:06 AM
மிக அருமையான தத்துவம். கடுகை கண்ணுக்கு மிக அருகில் வைத்துப் பார்க்காமல்...தள்ளி வைத்துப் பார்த்தலில்...கடுகு, கடுகாய் மட்டுமே தெரிவதைப் போல...மனதை விசாலமாக்கிக் கொண்டால்....சோதனைகளும், துன்பங்களும்...குளத்தில் கரைத்த உப்பாய் மாறிவிடும்.

பகிவுக்கு நன்றி பாரதி.

govindh
12-06-2010, 10:45 AM
விளக்கம் நன்று....நல்ல போதனை...
பகிர்வுக்கு நன்றி....

என் நண்பன் சொல்வான் :
"மழையில் நனைந்தால் ....உடல் ஈரமாகி ....குளிர்ந்து....
அதன் எதிர் விளைவாக...(சூடு) காய்ச்சல் வருகிறது....
அது போல்...துன்பம் நம்மைத் தொடர்ந்து தாக்கி...
அதன் எதிர் விளைவாக இன்பத்தை ஏற்படுத்தும்...
கலங்க வேண்டாம்.. "

aren
12-06-2010, 12:54 PM
மற்றவர்களுக்குச் சொல்லும்போது நன்றாகவே இருக்கிறது இந்த போதனைகள். நமக்கு பிரச்சனை என்று வரும்போது அது பூதாகரமாகவேத் தெரிகிறது, என்ன செய்வது. இதுதான் பிரச்சனையே.

ஷீ-நிசி
12-06-2010, 01:36 PM
அட! அட! உண்மையாகவே நல்ல கருத்தினை தாங்கிக்கொண்டிருக்கிறது கதை! பாரதி அவர்களே! :)

பாரதி
12-06-2010, 03:48 PM
மிக அருமையான தத்துவம். கடுகை கண்ணுக்கு மிக அருகில் வைத்துப் பார்க்காமல்...தள்ளி வைத்துப் பார்த்தலில்...கடுகு, கடுகாய் மட்டுமே தெரிவதைப் போல...மனதை விசாலமாக்கிக் கொண்டால்....சோதனைகளும், துன்பங்களும்...குளத்தில் கரைத்த உப்பாய் மாறிவிடும்.

நல்ல விளக்கம் சிவா. நன்றி.


விளக்கம் நன்று....நல்ல போதனை...
என் நண்பன் சொல்வான் :
"மழையில் நனைந்தால் ....உடல் ஈரமாகி ....குளிர்ந்து....
அதன் எதிர் விளைவாக...(சூடு) காய்ச்சல் வருகிறது....
அது போல்...துன்பம் நம்மைத் தொடர்ந்து தாக்கி...
அதன் எதிர் விளைவாக இன்பத்தை ஏற்படுத்தும்...
கலங்க வேண்டாம்.. "
எல்லாம் நன்மைக்கே..! நன்றி கோவிந்த்.


மற்றவர்களுக்குச் சொல்லும்போது நன்றாகவே இருக்கிறது இந்த போதனைகள். நமக்கு பிரச்சனை என்று வரும்போது அது பூதாகரமாகவேத் தெரிகிறது, என்ன செய்வது. இதுதான் பிரச்சனையே.
எல்லோருக்கும் தம் கவலைதான் பெரிது என்ற எண்ணம் இருப்பதென்னவோ உண்மைதான் ஆரென். நன்றி.


அட! அட! உண்மையாகவே நல்ல கருத்தினை தாங்கிக்கொண்டிருக்கிறது கதை!
ஊக்கத்திற்கு நன்றி ஷீ.

கலையரசி
12-06-2010, 04:28 PM
"குவளையாய் இருக்காதே... குளமாய் இரு."

வாழ்வுக்குத் தேவையான தத்துவம். அருமையான பகிர்வு. நன்றி பாரதி அவர்களே!

பா.ராஜேஷ்
12-06-2010, 09:20 PM
நல்ல தத்துவமிகுந்த கதை பகிர்ந்தமைக்கு நன்றி பாரதி அண்ணா.

பாரதி
13-06-2010, 03:35 AM
நன்றி கலை, நன்றி இராஜேஷ்.

த.ஜார்ஜ்
13-06-2010, 02:40 PM
நல்ல போதனை பொதிந்த கதை பாரதி. ஆரென் சொன்னது போல அறிவுரை அனுபவப்படும்போது எதிர்கொள்வதில்தான் சிரமம் இருக்கிறது. ஒரு பேராசிரியர் மாணவர்களை பொறுமையாக கையாள்வது பற்றி ஆசிரியர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.கோபம் கொள்ளாமல் அவர்கள் போக்கிலேயே சென்று வழிக்கு கொண்டுவர உபதேசித்துக் கொண்டிருந்தார். ஒரு ஆசிரியர் அவர் சொல்லும் ஒவ்வொரு உத்திக்கும் குறுக்கே புகுந்து உப கேள்விகள் கேட்டுக்கொண்டெயிருந்தார். பொறுமையாக பதில் சொல்லிக்கொண்டிருந்தவர் ஒருகட்டத்தில் இவரது தொணதொணப்பு தாங்காமல் கத்தினார்:'வில் யூ பிளீஸ் ஷட அப்'

பாரதி
14-06-2010, 09:09 AM
நன்றி ஜார்ஜ்.
ஜென் கதைகளில் வருவதைப்போல சிலரின் இயல்பை நாம் மாற்ற முடியாது. அப்படி மாற்ற வேண்டுமெனில் நமக்கு துறவு மனப்பான்மை வேண்டும் போலும்.
ஏற்பதும் மறுப்பதும் அவரவர் விருப்பம். இல்லையா..?

அன்புரசிகன்
14-06-2010, 10:49 AM
சிறந்த நீதியை கூறியிருக்கிறார் அந்த குரு.

பகிர்வுக்கு நன்றிகள் அண்ணா.

பாரதி
14-06-2010, 10:53 AM
நன்றி அன்பு.

xavier_raja
24-06-2010, 09:44 AM
சிறிய கல்லை கூட கண் கிட்டே கொண்டு வந்து பார்த்தல் அது பார்வையை மறைத்துவிடும்.. அதுபோலதான் துன்பங்களும்..