PDA

View Full Version : உலக கோப்பை 2010 - கால்பந்து



Mano.G.
10-06-2010, 09:05 AM
http://www.tamilmantram.com/vb/photogal/images/14/large/1_Mandela.jpg


உலக கிண்ண காற்பந்து 2010 போட்டி
நாளை 11ம் நாள் ஜூன் 2010 தென் ஆப்பிரிக்காவில் ஆரம்பமாகிரது 32 நாடுகள் இதில் பங்கு கொள்கின்றனர்.

உலகமெங்கும் இதே பேச்சு , காபிக்கடை, ஆபிஸ், பஸ், உணவகம் எங்கும் எதிலும் காற்பந்து .
இம்முறை யார் இத்ந்த போட்டியில் எந்த அணி வெற்றி கொள்ளும்,

ஜெர்மனியில் கடந்த உலககிண்ண போட்டியில்
இத்தாலி பிரான்சுடன் இறுதி போட்டியில் பங்கெடுத்து வாகை சூடியது


இந்த ஆண்டு எந்த அணி வெற்றி பெரும்
பொருந்திருந்து பார்ப்போம்.

மனோ.ஜி

சிவா.ஜி
10-06-2010, 09:34 AM
இந்தமுறை பிரேசிலுக்கு வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. அர்ஜென்டினாவும் நன்றாகவே இருக்கிறது. நடப்புச் சாம்பியன் இத்தாலிக்கு முதலிடம் கிடைப்பது சிரமம்தான்.

திருவிழா முடியட்டும்...யார் ஜெயிப்பாங்கன்னு சொல்றேன்...ஹி...ஹி...

அறிஞர்
10-06-2010, 03:15 PM
உலக கோப்பை கால்பந்து திருவிழா
தென்ஆப்ரிக்காவில் நாளை தொடக்கம்
ஜோகன்னஸ்பர்க், ஜூன் 10

உலக கோப்பை கால்பந்து திருவிழா தென் ஆப்ரிக்காவில் நாளை கோலகலமாக தொடங்குகிறது. தொடக்க ஆட்டத்தில் தென்ஆப்ரிக்கா & மெக்சிகோ (இந்திய நேரப்படி இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன.
உலகிலேயே அதிக நாடுகள் பங்கேற்கும், அதிகமான ரசிகர்கள் பார்த்து ரசிக்கும் உலக கோப்பை கால்பந்து போட்டி தென்ஆப்ரிக்காவில் நாளை தொடங்கி வரும் ஜூலை மாதம் 11ம் தேதி வரை நடக்கிறது. உலக கோப்பை போட்டி முதல் முறையாக தென்ஆப்ரிக்காவில் நடக்கிறது. இப்போட்டியில் நடப்பு சாம்பியன் இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், பிரேசில், அர்ஜென்டினா உட்பட 32 அணிகள் பங்கேற்கின்றன. இந்த 32 அணிகள் 8 பரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் தலா 4 அணிகள் இடம்பெற்றுள்ளன.

போட்டிகள் முதலில் லீக் முறையில் நடக்கிறது. லீக் சுற்றின் முடிவில் 8 பிரிவிலும் புள்ளிகள் அடிப்படையில் முதல் 2 இடத்தைப் பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு முந்திய சுற்றில் விளையாட தகுதி பெறும். இந்த சுற்று முதல் போட்டிகள் நாக்&அவுட் முறையில் நடக்கும்.
போட்டி நடக்கவுள்ள தென் ஆப்ரிக்காவில் எங்கு திரும்பினாலும் உலக கோப்பை போஸ்டர்களும் பிரமாண்ட பேனர்களும் தான் கண்களை நிறைக்கின்றன. ஜோகன்னஸ்பர்க், டர்பன், கேப் டவுன்...என்று 9 நகரங்களில் 10 புத்தம் புது ஸ்டேடியங்கள் போட்டிகளை நடத்துவதற்கு தயாராக உள்ளது.

உலகம் முழுவதும் இருந்து லட்சக் கணக்கான ரசிகர்களின் படையெடுப்பில் தென் ஆப்ரிக்கா திக்குமுக்காடிக் கொண்டிருக்கிறது. இவர்கள் தங்குவதற்காக ஓட்டல்கள், பிரத்யேக உணவகங்கள், மதுபான பார்கள், உற்சாகமூட்டும் அழகிகள், தீவிரவாத தாக்குதலை சமாளிக்க அதிரடி பாதுகாப்பு என்று எல்லா ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது.
ஐபிஎல் போட்டி போல தங்களுக்குப் பிடித்தமான வீரர் அல்லது அணியை ஆதரிக்க இந்திய ரசிகர்கள் தயாராகிவிட்டனர். உலக அளவில் அதிக ரசிகர்களைக் கொண்ட ஒரே விளையாட்டு கால்பந்துதான். ரசிகர்களை விட வெறியர்கள் எண்ணிக்கை அதிகம். சேம் சைடு கோல் போட்ட வீரரை சுட்டுத் தள்ளிய கொடூரம் எல்லாம் அரங்கேறி இருக்கிறது.

கிளப் போட்டியில் அபிமான அணி தோற்றாலே மைதானத்தை அதகளமாக்கி விடுவார்கள் இந்த ரவுடி ரசிகர்கள். இது வரை நடந்துள்ள 18 உலக கோப்பை போட்டியில் 7 நாடுகள் கோப்பையை வென்றுள்ளன.
பிரேசில் அணி 5 முறை கோப்பையை கொள்ளை அடித்துள்ளது. எல்லா போட்டியிலும் விளையாடிய ஒரே அணி என்ற பெருமையும் அதற்குத்தான். நடப்பு சாம்பியன் இத்தாலி 4 முறையும், ஜெர்மனி 3 முறையும் சாம்பியனாகி உள்ளன.

வழக்கம் போல இந்த முறையும் பிரேசில் அணிதான் பேவரைட். இந்த அணியின் நட்சத்திர வீரர்கள் மைகான், கபு, கார்லோஸ் ஆகியோரின் ஆட்டத்தை பார்க்க ரசிகர்கள் இப்போதே சீட் போட்டு காத்திருக்கிறார்கள். எனினும், நட்சித்திர வீரர் ரொனால்டினோ விளையாடாதது ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது.
மரடோனா பயிற்சியில் அர்ஜென்டினாவும் உறுமிக் கொண்டிருக்கிறது. இந்த அணியின் லயனல் மெஸ்ஸி பெயரைக் கேட்டாலே எதிரணி கோல் கீப்பர்களுக்கு கண்கள் கிறு கிறுக்கும். உலகின் தலைசிறந்த வீரருக்கான பிபா விருதை தொடர்ந்து 2வது முறையாக தட்டிச் சென்றவர்.
பார்சிலோனா அணிக்காக கடந்த சீசனில் 47 கோல் போட்டு அசத்தியிருக்கிறார். கிளப் அணிக்காக காட்டும் சாகசம், தாய்நாட்டு அணிக்காக விளையாடும்போது மிஸ் ஆவது மெஸ்ஸிக்கு பெரிய சாபக் கேடாக இருந்து வருகிறது. இந்த உலக கோப்பையில் அதற்கு விமோசனம் கிடைக்க வேண்டும் என்று அர்ஜென்டினா ரசிகர்கள் தவம் கிடக்கின்றனர்.
இங்கிலாந்தின் வேய்ன் ரூனி, போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, டேவிட் வில்லா (ஸ்பெயின்), டிடியர் ட்ரோக்பா (ஐவரி கோஸ்ட்), மலோவ்டா (பிரான்ஸ்), பாஸ்டியன் (ஜெர்மனி) என்று அணிக்கு ஒரு அசகாய சூரர் இருப்பதால் பரபரப்புக்கு பஞ்சம் இல்லை.
சில சாதா அணிகள் தாதா அணிகளுக்கு தண்ணி காட்டுவதுதான் கால்பந்து உலக கோப்பையில் கவர்ச்சியான அம்சம்.

கேமரூன், கானா, நைஜீரியா அணிகளுடன் மோதும் போது எவ்வளவு பெரிய அணியாக இருந்தாலும் உள்ளூர ஒரு நடுக்கம் இருந்து கொண்டே இருக்கும்.

நள்ளிரவு போட்டி தவிர மாலை 5 மணி, இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டிகளை இந்திய ரசிகர்கள் ரிலாக்சாக பார்க்கலாம். எல்சிடி டிவி, நண்பர்கள், பீர் பாட்டில் என்று கனகச்சிதமாக திட்டமிடும் பார்ட்டிகளும் திருவிழாக் கொண்டாட்டத்துக்கு தயாராகி விட்டனர்.

http://tm.dinakaran.com/pdf/2010/06/10/20100610a_008101002.jpg


http://tm.dinakaran.com/pdf/2010/06/10/20100610a_008101009.jpg
நன்றி - தினகரன்

nambi
10-06-2010, 03:37 PM
இந்த முறை யார் கோப்பையை தட்டிச்செல்லப்போகிறார்கள் என்று பார்ப்போம். பயனுள்ள பதிவு....பகிர்வுக்கு நன்றி!

சிவா.ஜி
10-06-2010, 03:50 PM
பயனுள்ளப் பதிவுக்கு நன்றி அறிஞரே. எல்லா போட்டிகளையும் பார்க்க முடியாது..நள்ளிரவுப் போட்டிகளை பார்க்க முடியும். இந்த நாட்டு நேரப்படி இரவு எட்டு மணி. எனவே பார்க்கலாம்.

பா.ராஜேஷ்
10-06-2010, 08:48 PM
நல்ல தகவல் பகிர்வு... நன்றி அறிஞரே.



உலக கோப்பை கால்பந்து திருவிழா
தென்ஆப்ரிக்காவில் நாளை தொடக்கம்
கேமரூன், கானா, நைஜீரியா அணிகளுடன் மோதும் போது எவ்வளவு பெரிய அணியாக இருந்தாலும் உள்ளூர ஒரு நடுக்கம் இருந்து கொண்டே இருக்கும்.


எல்லாம் சரி ஆனால் நடுக்கம் ஏன்??

அன்புரசிகன்
11-06-2010, 04:01 AM
அழகாக வடிவமைத்துள்ளார்கள். (போட்டிக்கான நாட்காட்டி) (http://www.marca.com/deporte/futbol/mundial/sudafrica-2010/calendario-english.html)

aren
11-06-2010, 04:57 AM
என்னுடைய ஓட்டு பிரேசிலிக்கே

Mano.G.
11-06-2010, 09:23 AM
நானும் பிரேசில் ரசிகனே,

ஆனால் இந்த குழுவில் ரொனல்டின்கொ இல்லாதது
சற்று மனவருத்தம் அளிக்கிரது.

பொருத்திருந்து பார்ப்போம்

தாமரை
11-06-2010, 09:39 AM
அணிகள்
அணிப் பிரிவுகள்
போட்டி கால அட்டவணை
போட்டி நடக்குமிடங்கள்
வீரர்களின் நிழற்படம்
போட்டி நடக்கும் இடங்களின் நிழற்படம்

அனைத்தும் இதில் உண்டு. இதைத் பதிவிறக்கம் செய்து கோப்பை xls கோப்பாக பெயர் மாற்றம் செய்யவும்.


கோப்பை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் (http://www.tamilmantram.com/vb/downloads.php?do=file&id=514)

ஓவியன்
12-06-2010, 10:23 AM
காற்பந்து உலகக் கோப்பை 2010 பற்றி எதுவுமே தெரியாதவர்கள், தெரிந்து கொள்ள இங்கே (http://fifa2010-football-worldcup.blogspot.com/2010/06/beginners-guide-to-world-cup-2010.html) சொடுக்குங்கள்..!! :D:D:D

aren
12-06-2010, 12:46 PM
இந்தியா இந்த விளையாட்டில் ஆர்வம் காட்டாதது கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது.

ஷீ-நிசி
12-06-2010, 01:43 PM
இந்தியாவில் நிச்சயம் திறமையான வீரர்கள் உள்ளனர்.... மிகப் பிரமாதமாக விளையாடக்கூடிய ஆட்டக்காரர்கள் உள்ளனர்... நமக்கு ஏனோ இதுவரை உலககோப்பையில் விளையாடும் அதிர்ஷ்டம் கிட்டவே இல்லை.... இந்திய அரசு முறையாக அவர்களை ஊக்குவித்தால், மீடியாக்களும் தட்டிக்கொடுத்தால்.. நிச்சயம் கால்பந்தில் இந்தியா சாதிக்கலாம்... நான் ஒரு மிக தீவிர ரசிகன் கால்பந்தாட்டத்திற்கு. இந்தியா இல்லாத அட்டவணையைப் பார்க்கும்போது மனம் சங்கடமாகத்தான் உள்ளது..

aren
13-06-2010, 05:21 AM
விளையாடும் மைதானம் கால்பந்து விளையாடுவதற்கு ஏற்றதாக இருக்கவேண்டும். கிரிக்கெட் மைதானத்திற்கு இவ்வளவு செலவு செய்பவர்கள், இதையும் கொஞ்சம் கவனித்தால் நன்றாக இருக்கும்.

அதுபோல் இந்த விளையாட்டை சிறு பிராயத்திலிருந்து விளையாடும்படி நம் பள்ளிகளும் முனைப்பில் இறங்கவேண்டும், அப்படி செய்தால் இன்னும் இருபது வருடத்தில் நாமும் உலகக்கிண்ணத்தில் விளையாடலாம். இது நடக்குமா?

Mano.G.
13-06-2010, 07:01 AM
விளையாடும் மைதானம் கால்பந்து விளையாடுவதற்கு ஏற்றதாக இருக்கவேண்டும். கிரிக்கெட் மைதானத்திற்கு இவ்வளவு செலவு செய்பவர்கள், இதையும் கொஞ்சம் கவனித்தால் நன்றாக இருக்கும்.

அதுபோல் இந்த விளையாட்டை சிறு பிராயத்திலிருந்து விளையாடும்படி நம் பள்ளிகளும் முனைப்பில் இறங்கவேண்டும், அப்படி செய்தால் இன்னும் இருபது வருடத்தில் நாமும் உலகக்கிண்ணத்தில் விளையாடலாம். இது நடக்குமா?

60ம் , 70ம் ஆண்டுகளில் மலேசியா,
தென் கொரியா, ஜப்பான் நடுகளின் விளையாட்டுசம தரத்தில் இருந்தது, அப்பொழுது மலேசிய விளையாட்டாளர்கள் பல இனத்தவர்களை கொண்டிருந்தனர்.
மலேசிய இந்தியர்களும் , சீன இனத்தவர்களும் அதிகம் இருந்தனர், போக போக இனப்பாகுபாடு காரணமாக திறமைக்கு அங்கிகாரம் அளிக்கப்படாமல், இன்நாட்டு விளையாட்டுத்தரம் கீழ்நிலைக்கு தள்ளபட்டுள்ளது. தற்போதைய உலக காற்பந்த்து தர பட்டியலில்
147 வது இடம் மலேசியாவிற்க்கு

govindh
13-06-2010, 10:57 PM
இன்று கானா - செர்பியாவுடன் மோதி (1-0)
வெற்றி பெற்று விட்டது....
இங்கு ஒரே கோலாகலம்....கொண்டாட்டம் தான்....
மக்கள் குழு குழுவாகப் பிரிந்து நகரைச் சுற்றி வந்து
வெற்றியினைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்....

அமரன்
14-06-2010, 05:18 PM
நேற்று நடந்த ஜேர்மனி-அவுரேலியா போட்டியை ஈபிள் கோபுர முன்றலில் ரம்மியமான சூழலில் பார்த்தேன். பாவம்பா அவுட்ஸ்திரேலியா.. சந்து பொந்தெல்லாம் கொண்டு போய் அடிச்ச மாதிரி அடிச்சாலும் என்னமாத் தாங்கினாப்பா..

தென்கொரியா அணியினர் கடந்த உலகச் சுற்றுக்கு முந்தைய சுற்றில் காட்டிய விளையாட்டை இம்முறையும் காட்டி உள்ளனரே..

ஓவியன்
16-06-2010, 06:18 AM
நேற்று நடந்த ஜேர்மனி-அவுரேலியா போட்டியை ஈபிள் கோபுர முன்றலில் ரம்மியமான சூழலில் பார்த்தேன். ..

ஓ அப்ப, இந்த போட்டிகள் தென் ஆபிரிக்காவில் நடக்கலையா...??? :icon_ush:

ஈபிள் கோபுர முன்றலில்தானா நடக்குது...??? :confused::confused:

Mano.G.
16-06-2010, 08:03 AM
பிரேசில் வட கொரியா ஆட்டத்தை
நேரடி ஒளிபரப்பில் கண்டேன்,
பிரேசிலின் முதல் கோல் மைக்கோனின்
அபார திறமை, கோல் அடிக்க வாய்பில்லாத
அங்களில் புகுத்திய கோல் அபாரம்.

http://www.youtube.com/watch?v=i16XaIy3gCk

செல்வா
16-06-2010, 07:29 PM
தென் ஆப்ரிக்கா - உருகுவேக்கு இடையான ஆட்டம் இடைவேளையில் இருக்கிறது.
இதுவரை தென் ஆப்ரிக்க கோல் எதுவும் அடிக்கவில்லை. உருகுவே ஒரு கோல் அடித்து முன்னணியில் இருக்கிறது.

பார்க்கலாம் இடைவேளைக்குப் பிறகு தென்ஆப்ரிக்காவின் எழுச்சி எப்படி இருக்கும் என்று...?

செல்வா
16-06-2010, 08:13 PM
தென் ஆப்ரிக்காவுக்கு இடி மேல் இடி. கோல் காப்பாளருக்கே சிவப்பு அட்டை. அதைத் தொடர்ந்த தண்டனை உதை வாயிலாக உருகுவே இன்னொரு கோலைப் பெறுகிறது.
அவ்வளவுதான் ஆட்டத்தைக் கண்டு கொண்டிருந்த தென்ஆப்ரிக்க பார்வையாளர்கள் கலையத்துவங்கிவிட்டனர். ஆடுகளமே இறுக்கமாக இருக்கிறது. இன்னும் 7 நிமிடங்கள் மற்றும் கூடுதல் நேரம் மட்டுமே இருக்க தென் ஆப்ரிக்காவால் ஒரு கோலாவது அடித்து மானத்தைக் காப்பாற்ற முடியுமா என்பதே கேள்வி..?

செல்வா
16-06-2010, 08:30 PM
ஆவ்..........
உதிரியாகக் கொடுக்கப்பட்ட 5 நிமிடங்களில் 4 வது நிமிடத்தின் இறுதியில் உருகுவே மீண்டும் ஒரு கேலை அடித்து 3:0 என்ற கணக்கில் தன் வெற்றியை பதிவு செய்கிறது.

கடுமையாகப் போராடிய தென்ஆப்ரிக்க அணியின் போராட்டம் போதுமானதாக இல்லாத நிலையில் சொந்த மண்ணில் தோல்வியைத் தழுவியது சோகமே...

பல தென்ஆப்ரிக்க இரசிகர்களும் எழுந்து செல்ல மனமின்றி உறைந்து போய் இருக்கையில் இருக்கின்றனர்.

இறுதி நிமிடங்களில் பாதிக்கு மேல் இருக்கைகள் காலியாகி விட்டன. பல இரசிகர்கள் அழுவதையும் பார்க்க முடிந்தது.

முதல் முதலாக உலகக் கோப்பை கால்பந்து விளையாட்டு பார்க்கும் எனக்கு இது ஒரு புதிய அனுபவம்.

கால்பந்து விளையாட்டைப் பற்றி பெரிதாக எதுவும் தெரியவில்லை என்றாலும். பார்ப்பதை அப்படியே எழுதுவது ஒரு இனிய அனுபவமாக உள்ளது.

இணையமும் நேரமும் இருந்தால் தொடர்ந்து எழுதலாம் என்றிருக்கிறேன்.
பார்க்கலாம்.... :)

அமரன்
16-06-2010, 09:44 PM
செல்வா.. அதை விடக் கொடுமை என்ன தெரியுமா.. கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்பெயின் அணி சுவிசிடம் தோல்வியைப் பெற்றதுதான். சிலியுடன் நடக்க இருக்கும் அடுத்த போட்டியில் சுவிஸ் வெல்லுமே ஆனால் அடுத்த சுற்றுக்குத் தெரிவாகி விடும். ஸ்பெயினின் நிலமை கவலைக்கிடம்.

Mano.G.
17-06-2010, 03:23 AM
செல்வா.. அதை விடக் கொடுமை என்ன தெரியுமா.. கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்பெயின் அணி சுவிசிடம் தோல்வியைப் பெற்றதுதான். சிலியுடன் நடக்க இருக்கும் அடுத்த போட்டியில் சுவிஸ் வெல்லுமே ஆனால் அடுத்த சுற்றுக்குத் தெரிவாகி விடும். ஸ்பெயினின் நிலமை கவலைக்கிடம்.

ஐரோப்பா கிண்ண வெற்றிக்குழு இந்த் ஸ்பெயின் அணி, அவர்களின் ஆட்டம் ஆரம்பம் முதல் அவ்வலவாக சுவாரசியமில்லை, பந்தை அதிகம் நேரம் கொண்டிருந்தாலும் நேரத்தை வீணடிப்பதை போல இருந்தது அவர்கள் ஆட்டம். சுவிட்ஷலாந்து கிடைத்த வாய்ப்பை பயன் படுத்தி கொண்டது.

வாழ்த்துக்கள் சுவிட்ஷலாந்.

அமரன்
17-06-2010, 05:30 AM
ஆம் அண்ணா.. நேற்றய போட்டியிலும் ஸ்பெயின் சொதப்பலோ சொதப்பல்.

அய்யா
17-06-2010, 07:45 AM
ஷீ நிசி அண்ணா!

கால்பந்து விளையாட்டுக்கு கிரிக்கெட் போல 3 நிமிடத்துக்கு ஒருமுறை விளம்பர இடைவேளை இல்லீங்களே.. மீடியா எப்படிண்ணே இதைத் தட்டிக் கொடுக்கும்?

நீங்கள் சொன்னதுபோல, இந்தியாவில் திறமைக்குப் பஞ்சமில்லை.. அதைத் தேடி எடுப்பதில்தான் கோளாறு!

nambi
17-06-2010, 09:58 AM
உருகுவே, தென் ஆப்பிரிக்க அணிகள் இரண்டு அணிகளிலும் அதிக.... முறை தவறிய ஆட்டங்கள் இருந்தாலும்....தென் ஆப்பிரிக்க அணியில் பந்தை முன்னெடுத்துச் செல்ல ஆட்களே இல்லை. உருகுவே இலக்கினருகே ஒரு தென்ஆப்பிரிக்க வீரர்கள் (பார்ர்வர்டு) கூட இல்லை.

பந்து பரிமாற்றங்கள் பல இடங்களில் பல முறை தவறி எதிரணியினருக்கு சென்றது தான் தோல்விக்கான காரணம் என்பது என் கருத்து. மாறாக உருகுவே அணியில் பந்தை முன்னெடுத்து (பார்வர்டு) இலக்கு நோக்கி செலுத்துவதற்கு ஆட்கள் தயாராக இருந்தனர். பந்து பரிமாற்றங்கள் அவ்வளவாக எங்கேயும் (சில இடங்களை தவிற) தவறவில்லை, (மிஸ் பாசிங் இல்லை).

தென்னாப்பிரிக்க அணியினரிடம் பந்து கிடைத்தால் உருகுவே மிக இலகுவாக அவர்களிடமிருந்து சில பல வினாடிகளிலேயே பிடுங்கி விடுங்கினர்.

இதுவரை ஆடிய ஆட்டத்திலேயே அர்ஜன்டைனா மட்டும் தான் மிக நேர்த்தியாக விளையாடியது. ஒரு வரைபடம் போட்டது போன்ற ஆட்டம். பந்து பரிமாற்றங்கள் முக்கோணம் மாதிரி அடிக்கடி ஒழுங்குமுறையுடன் மாற்றப்பட்டன. மிக வேகமாக பந்து அடித்தாலும் சரியாக அவருடைய இணை அணி வீரரின் கால்களுக்கே சென்றடையும் படியான பரிமாற்றம். மாரடோனா பயிற்சி வீண்போகவில்லை....

இன்று பார்ப்போம்....

Mano.G.
18-06-2010, 04:49 AM
உலககிண்ண காற்பந்து போடியிலிருந்து பிரான்ஸ்
மெக்ஸிக்கோவிடம் 2 க்கு 0 எனும் கோல் எண்ணிக்கையில்
தோல்விகண்டு இந்த போட்டியிலிருந்து வெளியேறிய முதல் குழுவாகும்.
1998ம் ஆண்டு 3க்கு 0 எனும் கோல் எண்ணிக்கையில் பிரேசிலை தோற்கடித்து உலக கிண்ணத்தை வென்றது. பிரான்ஸின் பிரபல ஆட்டக்காரர் மைக்கல் பிலாட்டினி யாகும்.

அர்ஜெண்டினா 4 க்கு 1 ஒன்று எனும் கோல் எண்ணிக்கையில் தென் கொரியாவை தோற்கடித்து இரண்டாவது சுற்றுக்கு முன்னேற்றியுள்ளது.

இவ்வருடம் சில அதிரடி முடிவுகள் வந்த வண்ணம் உள்ளன,
பார்ப்போம் யார் வெற்றியாளர் என்று.

மனோ.ஜி

அமரன்
18-06-2010, 05:34 AM
பிரான்சின் ஆட்டத்தைப் பார்த்தபோது ஊருல நாம ஊமக்கொட்டையில விளாடிய ஞாபகம் வந்தது.

சொதப்பல் பிரான்சு.. வீட்டில் பலரும் பிரான்சு அபிமானிகள். கவலை தோய்த்த முகத்துடன் தூங்கப்போனாங்க.

அய்யா
18-06-2010, 08:16 AM
பிரான்சு இரசிகர்கள் உறைந்துபோய் அமர்ந்திருந்தது பரிதாபமாக இருந்தது. மெக்சிகோ கடைசிவரை தாக்குதல் பாணியைக் கடைப்பிடித்தது சிறப்பு.

nambi
18-06-2010, 08:26 AM
மெக்சிகோ மிக அபாரமான ஆட்டம்....பிரான்சும் மெக்சிக்கோவிற்க்கு ஈடுகொடுத்தது...ஆனாலும் மெக்சிகோவை சாமாளிக்கமுடியவில்லை....மிக வேகமான ஆட்டம்...தொடக்கத்திலிருந்து இறுதி வரை இரு அணியினரும் மிகவேகமாக ஒடிக்கொண்டே இருந்தது இந்த ஆட்டத்தில் தான்....அதிலும் மெக்சிகோ பேய் மாதிரி சோர்வடையாமல் ஒடி விளையாடியது வியப்பளித்தது....ஈசல் மாதிரி பிரான்சை மொய்த்து பந்தை பிடுங்கி சென்றது அவர்களின் ஆட்ட வெறியை காட்டியது...(மெக்சிக்கோ அரை இறுதியை தொடும்)

(ஆனால் மெக்சிக்கோ வீரர்கள் தோற்றத்தில் பெண்களை போல் உள்ளனர் அங்கு அப்படித்தானோ?)

ஆனால் பிரான்சு வீரரை மோதல் நோக்குடன், கைகலப்புடன் (கைகலப்பு, தாக்குவது அதிக குற்றம்) தள்ளி விட்டும் சிவப்பு அட்டை தராமல் விட்ட நடுவரின் மேல் சந்தேகம் எழுகிறது....நிறவெறி இருக்கிறததோ என்று?

(ஐரோப்பியர்களின் சொத்தாக கருதப்பட்டு வந்த கால்பந்தாட்ட உலக கோப்பை ஆப்பிரிக்கர்கள் கையில் கிடைக்க...............?)

நைஜிரியா கிரிஸ் போட்டியில் நைஜிரிய வீரர் எத்துவது போல் கால் நீட்டினாலும் இருவரும் மோதியதால் வந்தது...அதற்கு நைஜிரிய வீரருக்கு மட்டும் சிவப்பு அட்டை கொடுத்தனர்......இதனால் ஏற்பட்ட சோர்வினால், (11 வீரார்களிலிருந்து 10 வீரர்களாக குறைக்கப்பட்டனர்) நைஜிரியா தோல்வியை சந்தித்தற்கு ஒரு காரணம்....(கிரிஸ் நைஜிரியாவிடம் சற்று திணறித்தான் இருந்தது தொடக்கத்தில்)

ஆனால் பிரான்ஸ் வீரரை தள்ளி விட்ட மெக்சிக்கோ வீரருக்கு மட்டும் வெறும் மஞ்சள் அட்டை....என்ன நடுநிலைமை? சத்தமில்லாமல் நிறவெறி அராஜகம் நடைபெற்றுகொண்டுதானிருக்கிறது.......

இதுவரை (18.06.2010 12.00) வரை ஆடிய ஆட்டம் வரை அதிக மஞ்சள் அட்டைகள் பெற்ற அணி மெக்சிகோ மட்டுமே (4 மஞ்சள் அட்டைகள்).... (செர்பியா 4 மஞ்சள் அட்டைகள் பெற்றாலும் அதில் ஒன்று சிவப்பு அட்டையாக மாறிவிட்டது.)

அதேபோல் அர்ஜென்டினாவும் மிக ஆட்ட நடத்தை விதி மீறல்களை ஏற்படுத்தியது. கொரிய வீரர்களை எதிர்த்து வெளிப்படையாக அர்ஜென்டினா வீரர்கள் திட்டினார்கள். அதில் அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸி வெளிப்படையாக திட்டியதை நடுவர் கண்டித்தார்....இருந்தும் வெளியேற்றப்படவில்லை. கொரியா அர்ஜென்டினாவிடம் ஓரளவுக்கு ஈடுகொடுத்தது.... முதல் அரை ஆட்டத்தின் முடிவில் அளிக்கப்பட்ட கூடுதல் நேரத்தில் கொரிய இலக்கு (கோல்) அடித்தது பாராட்டுக்குரியது. அடுத்த அணியின் திறமையை சாதரணமாக எடைபோட்டதால் அர்ஜென்டினா...இந்த கோட்டையை விட்டிருக்கலாம்.

Mano.G.
19-06-2010, 04:33 AM
நேற்றைய ஆட்டங்கள்
ஜெர்மனி 0- செர்பியா 1
மற்றுமொரு சொதப்பல் ஆட்டம்,

ஸ்லோவேக்கிய 2 - அமெரிக்கா 2

நான்கு கோல்கள் புகுத்தப்படுவதை ரசித்த ரசிகர்கள்.

இங்லாந்து 0 - அல்ஜெரியா 0

மற்றுமொரு சொதப்பல் ஆட்டம்

இந்த வருடம் யார்தன் இறுதி ஆட்டத்திற்கு போவார்களோ,
பொருந்திருந்து பார்ப்போம்.

நான் கனித்தது

பிரேசில்
ஜெர்மனி
அர்ஜென்டினா
இங்லாந்து

இதில் ஏதாவது ஒரு குழு இறுதி ஆட்டத்திற்கு
சென்றால் நலம்.

பார்ப்போம்

அமரன்
19-06-2010, 10:08 AM
நேற்றய ஆட்டமொன்றில் சரியாக நினைவில் இல்லை.. இங்கிலாந்தாக இருக்க வேண்டும். அடித்த கோல் மறுக்கப்பட்டது. அதுக்கான காரணம் எனக்கு இப்ப வரை விளங்கவில்லை.

nambi
19-06-2010, 02:58 PM
அதற்கு முன்னமே இலக்கு (இல்லீகல் பிளே காரணத்தால்) நோக்கிய பக்கம் (ஆப் சைடு) வெளிக்கோட்டு நடுவரால் (லைன் மேன்) வழங்கப்பட்டுவிட்டதால் இலக்கை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.

அமரன்
19-06-2010, 06:42 PM
அதற்கு முன்னமே இலக்கு (இல்லீகல் பிளே காரணத்தால்) நோக்கிய பக்கம் (ஆப் சைடு) வெளிக்கோட்டு நடுவரால் (லைன் மேன்) வழங்கப்பட்டுவிட்டதால் இலக்கை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.

ஆஃப் இல்லையே அது.....!!!!!!

nambi
19-06-2010, 06:44 PM
ஆட்டம் தொடங்கி பத்தாவது நிமிடத்தில் காமரோன் கேப்டன் ஈட்டோ ஒரு இலக்கை டென்மார்க்குக்கு எதிராக.....மிக விறுவிறுப்பான ஆட்டம்......

அமரன்
19-06-2010, 07:07 PM
டென்மார்க் மட்டும் என்ன சளைத்ததா...

அடிச்சாங்கள்ள ஒன்று.

nambi
19-06-2010, 07:58 PM
''ஏ''பிரிவில் உருகுவே 7 புள்ளிகள் ...முதலிடம்
(மெக்சிகோ, தென்னாப்பிரிக்கா தலா 4 புள்ளிகள் எடுத்து 2 ஆம் இடம், பிரான்ஸ் 1 புள்ளி 3 ஆம் இடம்....)

''பி''' பிரிவில் அர்ஜென்டைனா 9 புள்ளிகள் எடுத்து முதலிடத்தில்...
(கொரியக் குடியரசு 4 புள்ளிகள் 2 ஆம் இடம், கிரீஸ் தலா 3 புள்ளிகள் 3 ஆம் இடம், நைஜிரியா 1 புள்ளி 4 ஆம் இடம் )

''சி'' '' பிரிவில் இங்கிலாந்து, அமெரிக்கா தலா 5 புள்ளிகள் எடுத்து முதலிடத்தில்....
( சுலோவேனியா 4 புள்ளிகள்....2 ஆம் இடம், அல்ஜிரியா 1 புள்ளி 3 ஆம் இடம்)

''டி ''பிரிவில் ஜெர்மனி 6 புள்ளிகள் எடுத்து முதலிடம்....
(கானா, ஆஸ்திரேலியா தலா 4 புள்ளிகள் 2 ஆம் இடம், செர்பியா 3 புள்ளிகள் 3 ஆம் இடம்)

''இ'' பிரிவில் நெதர்லாந்து 9 புள்ளிகள் முதலிடம்....
(ஜப்பான் 6 புள்ளிகள் 2 ஆம் இடம், டென்மார்க் 3 புள்ளிகள் 2 ஆம் இடம்)

''எப்'' பிரிவில் பராகுவே , 5 புள்ளிகள் முதலிடம்....
(ஸ்லோவோக்கியா 4 புள்ளிகள் 2 ஆம் இடம், நியுசிலாந்து 3 புள்ளிகள் 3 ஆம் இடம், இத்தாலி 2 புள்ளிகள் 3 ஆம் இடம்)

''ஜி'' பிரிவில் பிரேசில் 6 புள்ளிகள் முதலிடம்....
(, போர்ச்சுகல் 4 புள்ளிகள் 2 ஆம் இடம், கோட்டிடிவோர் (ஐவரி கோஸ்ட்)1 புள்ளி 3 ஆம் இடம்)

''எச்'' பிரிவில் சிலி 6 புள்ளிகள் முதலிடம், ஸ்பெயின், சுவிட்சர்லாந்து தலா 3 புள்ளிகள் 2 ஆம் இடம்.....

...தகவல் பிபா இணையதளம் 25.06.2010...10.00 நிலவரப்படி

nambi
20-06-2010, 04:13 AM
ஆஃப் இல்லையே அது.....!!!!!!

அப்படித்தான் தொலைக்காட்சியில் சொன்னதாக நினைவு, லைன் மேனும் கொடியை நடுவில் வைத்து காட்டினார்.....அந்த நேரத்தில் இணையத்திலும் வர்ணணை போட்டார்கள்.... அப்பொழுது இந்த இல்லீகல் பிளே என்று இருந்தது....இந்த ஆட்டத்தின் போது ஒவ்வொரு மணித்துளியிலும் என்னென்ன? நடந்தது என்று இணையத்தின் ''பிபா'' தளத்தின் வர்ணணை இங்குள்ளது. (http://www.fifa.com/live/competitions/worldcup/matchday=8/day=1/match=300061464/index.html) அதில் எந்த இடம் என்று குறித்து வைக்க மறந்து விட்டேன்....எனக்கு அவ்வளவாக புரியவில்லை...''(கோல்) இலக்கு அடித்ததை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை'' என்று குறிப்பிட்டால் உலகளவில் ஆதாரமாக போய்விடும், விமர்சனமாக போய்விடும் என்று குறிப்பிடாமல் இருந்திருக்கலாம். நானும் நினைவுபடுத்தி கூறியது தான்....இதில் கண்டுபிடிக்க முடிகிறதா? என்று பார்க்கலாம்....அப்படி அறிந்தால் இங்கு தெரிவிக்கவும்..... (இது பொதுவாக)

நன்றி!

nambi
20-06-2010, 06:59 PM
பிரேசில் வீரர் பேபியானோ 25வது நிமிடத்தில் கோட்டி டிவோருக்கு எதிராக இலக்கு அடித்தார். பிரேசில் 1 இலக்கு..... கோட்டிடிவோர் 0 இலக்கு (இருந்தாலும் நிறைய போங்காட்டம்.... பந்தை.... காலுக்கு இடையில் மடக்கி வைத்து ஆட்டம்......)

அமரன்
20-06-2010, 07:23 PM
நடுவர் நடுக்கராக இருப்பது கூட நகைப்பானதுதான்..

கார்டூன் விளையாட்டப்பா இந்த ஆட்டம்..

nambi
20-06-2010, 07:50 PM
பேபியானா (50வது நிமிடத்தில் )இரண்டாவது இலக்கையும் அடித்தார் ஆனால் இது மிக மோசமான பவுல் பேபியானா கைகளால் பந்தை தடுத்து கோல் அடித்துள்ளார். மிக மோசமான ஒருதலை பட்சம். ஆக்சன் ரிப்ளேயில் மிகத்தெளிவாக காட்டியுள்ளது. ஈ. எஸ். பி, என்.....5 முறை சாம்பியன் என்பதால் ஒரு சின்ன நாட்டை (ஆப்பிக்காவை) ஏமாற்றக் கூடாது. உண்மையில் நடுவர் நடுக்கர் தான்....இதுவரை ஆடிய ஆட்டத்திலேயே இதுதான் மோசமான அழுகுணி ஆட்டம்.....

பிரேசில் வீரர் இளனோ 60 வது நிமடத்தில் 3 வது இலக்கு அடித்தார் பிரேசில் 3.....

nambi
20-06-2010, 08:08 PM
அழுகுணி ஆட்டத்திலும்.... கோட்டிடார் வீரர் டிரோபா 79 வது நிமிடத்தில் பிரேசிலுக்கு எதிராக ஒரு இலக்கு அடித்தார்.
பிரேசில் 3 கோட்டிடார் 1.....

nambi
20-06-2010, 08:17 PM
பிரசில் கோட்டிடார் வீரர்கள் மோதல் பிரசில் வீரர் கக்காவுக்கு இரண்டாவது மஞ்சள் அட்டை தொடர்ந்து சிவப்பு அட்டை வெளியேற்றம்....கோட்டிடார் அப்பீலுக்கு நடுவரின் செயல்பாடு....

ஓவியன்
21-06-2010, 04:46 AM
பிரேசிலின் நட்சத்திர வீரர் காகா வுக்கு இரண்டாவது மஞ்சள் அட்டை கிடைத்தது பிரேசிலைப் பொறுத்த வரை நல்ல செய்தி இல்லைத்தான்...

Mano.G.
21-06-2010, 06:18 AM
பிரேசிலின் நட்சத்திர வீரர் காகா வுக்கு இரண்டாவது மஞ்சள் அட்டை கிடைத்தது பிரேசிலைப் பொறுத்த வரை நல்ல செய்தி இல்லைத்தான்...

http://www.youtube.com/watch?v=-BXhEQwLo3c&feature=related

அந்த ஆட்டத்தின் ஹைலைட்ஸ்

காக்காவிற்கும் பிரேசிலுக்கும் செய்யப்பட்ட சதி போலுள்ளது

கண்டு களியுங்கள்

nambi
21-06-2010, 06:50 AM
பிரேசிலின் இரண்டாவது இலக்கை கணக்கில் எடுத்து கொண்டது கோட்டிடாருக்கு செய்த சதி (ஆப்சைடு வழங்கியிருக்க வேண்டும்).....இது முன்னாள் அர்ஜென்டைனா வீரரும் இன்றைய அர்ஜென்டைனா பயிற்சியாளரும்...1986 ஆம் வருட போட்டியில் கையினால் கோல் அடித்து விட்டு... கண்டுபிடித்தவுடன் கடவுள் வந்து தட்டிவிட்டார் என்று கூலாக சொன்னாரே ''மாரடோனா'' அது போன்றதொரு இலக்குதான் (கோல்தான்).... (நேற்று இரண்டாவதாக பிரேசில் போட்ட இலக்கை கணக்கில் எடுத்து கொண்டது... எதிரணியினருக்கு சோர்வை உண்டாக்கியிருக்கும் வெறுப்பையும் உண்டாக்கியிருக்கும் செயல்..அதன் தொடர்ச்சியாக கூட தாக்குதல்கள் நடைபெற்றிருக்கலாம்).....தனியார் தொலைக்காட்சி காட்டியதால் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லையோ என்னவோ? நடுவரும் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்...தவிர முந்தய ஆட்டத்தில் காமரூன்...டென்மார்க்கு எதிராக கையால் தடுக்கப்பட்ட கோலை அப்பீல் செய்தது போல கோட்டரிட்டா அப்பீல் செய்யவில்லை (அவசரத்தில் கவனிக்காமல் விட்டிருப்பார்கள்...இதை இரவு மறு ஒளிபரப்பு செயதபோதும் காட்டினார்கள். இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சியிலும் இது போன்ற வெளிப்படையான தவறுகள் உலக கோப்பையிலே நடைபெறுவது வேடிக்கையான ஒன்று. அந்த இலக்கை ரத்து செய்திருக்கவேண்டும்.

தொடர்பானா ஆதாரங்கள்....இரண்டாவது இலக்கு அடித்த 52 வது நிமிடத்தில்... (http://www.soccerbyives.net/soccer_by_ives/2010/06/world-cup-brazil-vs-ivory-coast-match-day-commentary.html)
(எனக்கு தெரிந்த வரையில்....சரிதானா? என்று பார்க்கவும்)


தொடர்பான சர்ச்சை செய்திகள்....பிரேசில் வீரர் பிலிப் மெனோ வின் கையில் பட்டு சென்றது...மன்ற உடனடி செய்திகள் (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=476648&postcount=1235)

(இணைய வேகம் குறைவாக இருப்பதால் ஆதாரங்கள், காட்சிகளை அவ்வளவாக தேடமுடியவில்லை...சும்மா சுவாரசியக்காத்தான்...)

ஈ எஸ் பி என்...பேன் ஆப் த மேட்ச் அறிவிப்பின் இடையே வெளியிட்டுள்ள ஹேண்ட பால்.... (http://soccernet.espn.go.com/report?id=264069&cc=4716&ver=global)

Mano.G.
21-06-2010, 09:01 AM
இங்கு மலேசியாவில் அனைத்து ஆட்டங்களும்
HD ஒளிபரப்பில் கண்டு வருகிரோம். தெள்ள தெளிவான
ஒளிபரப்பு காட்சிகள் நடுவரின் மற்றும் ஆட்டகாரர்களின்
தப்புக்களை உடனே மறுகாட்சியில் காட்டிவிடுகின்றனர்.
இருந்தாலும் நடுவரின் முடிவே இறுதியானது.

பார்ப்போம் இன்னும் என்ன லீலைகள் நடகின்றன என.

மனோ.ஜி

nambi
21-06-2010, 12:51 PM
உலக கோப்பை 2010 இன் முதல் முறையாக 29, 53, 56 நிமிடங்களில் மிகக் குறைந்த இடைவெளிகளில் (ஐரோப்பிய நாடு) போர்ச்சுகல் வடகொரியாவை (ஆசிய நாடு) எதிர்த்து 3 இலக்கு அடித்தது. அடுத்து 58 வது நிமிடத்தில் இன்னும் 1 இலக்கு, 82 வது நிமிடத்தில் 1 இலக்கு...87, 89 வது நிமிடங்களில் தொடர்ந்து இரண்டு இலக்கு..அபாரம்...முதன் முறையாக 2010 உலக கோப்பையில் மொத்தம் போர்ச்சுகல் 7...... வடகொரியா 0 இலக்கு.....

அறிஞர்
21-06-2010, 01:47 PM
7-0 ரொம்ப ஓவரு...

ஓட ஓட விரட்டியிருக்காங்க... வீடியோ கிளிப்பை யாராவது சேருங்கள்.

அறிஞர்
21-06-2010, 01:54 PM
பிரேசில் - ஐவரி கோஸ்ட் 3-1 போட்டி...
http://www.youtube.com/watch?v=EO44IKbaTrA

nambi
21-06-2010, 02:36 PM
பெராமி.... சுவிட்சர்லாந்து சிவப்பு அட்டை...சிலி வீரரை தாக்கியது... வெளியேற்றம்....சுவிட்சர்லாந்து...சற்று மூர்க்கம் தாம்...நடுவரையே....

75 நிமிட ஆட்டத்திற்கு பிறகு சிலி வீரர் கோன்சலஸ் 1 இலக்கு சுவட்சர்லாந்துக்கு எதிராக அடித்தார். சில 1....சுவிட்சர்லாந்து 0

(மிக போராட்டம்....போன ஆட்டம் ...அடித்துகிட்டே இருந்தாங்க விட்டா ஒரு டசன் இலக்குகளை அடித்திருப்பார்கள் இந்த மழையிலும்....)

செல்வா
21-06-2010, 02:44 PM
இந்த ஆப்சைடு இலக்கு (நன்றி நம்பியண்ணா) பத்தி ஒண்ணுமே தெரியல... யாராவது கொஞ்சம் தெளிவா விளக்குங்களேன்....

nambi
21-06-2010, 03:27 PM
ஆப்சைடு.....(off side)....கால்பாந்தாட்டத்தில் ஒரு அணி ஒரு பக்கம் இன்னொரு அணி இன்னொரு பக்கம். இந்த பக்கம் உள்ள அணி எதிர் பக்கம் பந்தை நகர்த்தி கொண்டு செல்கிறது அப்படி நகர்த்தி கொண்டு செல்லக்கூடாது என்று நடுவர் மற்றும் (லைன் மேன்) எல்லைக்கோட்டு நடுவர் இவர்களால் நடுவில் கையை காட்டியோ அல்லது எல்லைக்கோட்டு நடுவர் கொடியை நேர் எதிராக நீட்டினார் என்றால் ஆப் சைடு...(பக்கவாட்டிலும் நீட்டிக் காட்டுவார் அது பந்தை எல்லைக்கோடு தாண்டி அடித்தவுடன் காணலாம்...) அந்த பக்கம் (திசை) நோக்கி பந்தை செலுத்துவது தடைசெய்யப்படுகிறது என்பதாக பொருள். உடனே விளையாடுவதை நிறுத்தி விடவேண்டும். எந்த பக்க அணியினர் பந்தை தொடவேண்டும் என்பதை கொடியின் மூலம் அல்லது சைகையின் மூலம் காட்டுவார்....(பார்த்து கொண்டே வந்தால் எளிதாக புரிந்து விடும்.)

பக்க நிறுத்தம்

பிபிசி விளையாட்டுக் கழகம் காட்சி1 (http://news.bbc.co.uk/sportacademy/bsp/hi/football/rules/offside/html/scenario1.stm)


பிபிசி வி.க. விளக்க காட்சி 2 (http://news.bbc.co.uk/sportacademy/bsp/hi/football/rules/offside/html/scenario2.stm)

பிபிசி வி.க. விளக்க காட்சி 3 (http://news.bbc.co.uk/sportacademy/bsp/hi/football/rules/offside/html/scenario3.stm)

பிபிசி வி.க. விளக்க காட்சி 4 (http://news.bbc.co.uk/sportacademy/bsp/hi/football/rules/offside/html/scenario4.stm)

பிபிசி வி.க. விளக்க காட்சி 5 (http://news.bbc.co.uk/sportacademy/bsp/hi/football/rules/offside/html/scenario5.stm)

பிபிசி வி.க. விளக்க காட்சி 6 (http://news.bbc.co.uk/sportacademy/bsp/hi/football/rules/offside/html/scenario6.stm)

முறை தவறிய ஆட்டங்கள் நடைபெறுமானால் அந்த அணி பந்தை அடிக்க தடை செய்வது...அவர் அடிக்கும் பக்கத்தை நிறுத்துவது. ஆப்சைடு... (பெரும்பாலும் இலக்கின் அருகில்...அணிகளின் கோல் போஸ்ட் அருகில் தான் இந்த ஆப்சைடுகளுக்கான சைகைகள் தெரிவிக்கப்படும்...ஆடுகள நடுவில் இது பிரிகிக் (free kick) என்பதாக மாற்றிகொடுக்கப்படும்... தடுத்தாட ஆளில்லாமல் (எதிரணியினர் உதைக்கும் பொழுது தடுக்க கூடாது..சற்று தள்ளி நின்று கொள்ளவேண்டும்....இது போல பல உண்டு ) பந்தை இடைமறிக்காமல் உதைப்பதற்கான சலுகை...)

இலக்கு.....(goal) என்பதை தான் இலக்கு என்று தமிழ் படுத்தியிருக்கிறேன்....எனக்கு தெரிந்தவரையில்
புரிகிற அளவில் இருக்கும் என நினைக்கிறேன்....பொதுவாக
நன்றி!

nambi
21-06-2010, 06:14 PM
2010 உலக கோப்பை இதுவரை ஆடிய ஆட்டங்களில் அதிகபட்ச இலக்குகள் (கோல்) அடித்த நாடுகளின் தரவரிசை.....



அர்ஜென்டைனா.......10 ......... இலக்குகள்.........முதலாமிடம்


பிரேசில்..................9..........இலக்குகள்..........இரண்டாமிடம்


ஜெர்மனி.................9........இலக்குகள்...........இரண்டாமிடம

நெதர்லாந்து............9.......இலக்குகள்............இரண்டாமிடம்

போர்ச்சுகல்...........7.........இலக்குகள்.........மூன்றாமிடம்..........தொடர்ந்து வரும் பட்டியல்.... (http://www.fifa.com/worldcup/statistics/teams/goals.html)

....பிபா...03.07.2010 09.45

nambi
21-06-2010, 07:53 PM
பெனால்டி கிடைப்பதே அரிதான விஷயம் கிடைத்தும் கோட்டை விட்டார்... ஸ்பெயின் வீரர் டேவிட் வில்லா....
17, 62 வது நிமிடங்களில் ஸ்பெயின் வீரர் டேவிட் வில்லா 2 இலக்குகளை அடித்தார்...
ஸ்பெயின் 2....ஹோன்ட்ராஸ் 0
ஹோன்ட்ராஸ் மிக அதிகமாக கோட்டை விடுகிறது...

செல்வா
21-06-2010, 08:01 PM
ஸ்பெயின் வீரர்களும் வேண்டுமென்றே நேரம் கடத்துவது போல் இருக்கிறதே. ஆரம்பத்தில் இருந்த ஆக்ரோஷம் இருப்பதாகத் தெரியவில்லை. இலக்கைப் பெறுவதற்கான பல வாய்ப்புகளையும் வீணாக்குவதாகத் தோன்றுகிறது. என் பார்வைக்குறைபாடா என்பது தெரியவில்லை...

nambi
21-06-2010, 08:25 PM
உண்மைதான் இது ஒரு போரான ஆட்டம். ஹோன்ட்ராஸ் வீரர்களும் ஈடுபாடு இல்லாத மாதிரி விளையாடினர் அந்த அணி ரசிகர்களும் அதிக கவலை கொள்ளவில்லை....உலக கோப்பை ஆட்டத்தில் பங்கு பெறுவதே பெரியவிஷயம் என்று எடுத்து கொண்டு ஆடியிருக்கலாம்...வேறு காரணங்களும் இருக்கலாம்...கண் முழிச்சது தான் மிச்சம்...

nambi
22-06-2010, 02:57 PM
தென் ஆப்பிரிக்கா எதிர் பிரான்ஸ்....தென்னாப்பிரிக்கா 2 இலக்கு....பிரான்ஸ் 1.

தெ.ஆ..வீரர் குமாலோ 20 வது நிமிடத்தில்..பெலோ 37 வது நிமிடத்தில் பிரான்சுக்கு எதிராக இலக்குகள் அடித்தனர்.

பிரான்சு வீரர் கோவர் கப் சிவப்பு அட்டை வெளியேற்றம். (தாக்குதல்...தெ.ஆ வீரர் சிபயா)

பிரான்சு வீரர் மல்லுடா ஒரு இலக்கு தெ.ஆப்பிரிக்காவுக்கு எதிராக 70 நிமிடத்தில் அடித்தார்.
.......................

மெக்சிகோ எதிர் உருகுவே ஆட்டம்
மெக்சிகோ 0 இலக்கு.....உருகுவே 1 இலக்கு

43 வது நிமடத்தில் உருகுவே வீரர் சுரெஸ் மெக்சிக்கோவுக்கு எதிராக இலக்கு அடித்தார்.

பாலகன்
22-06-2010, 03:27 PM
உலக சாம்பியனுக்கு இந்த நிலையா?

செல்வா
22-06-2010, 08:51 PM
விளக்கத்திற்கு நன்றி அண்ணா...!

அமரன்
22-06-2010, 08:58 PM
உலக சாம்பியனுக்கு இந்த நிலையா?

உலக சாம்பியன் வீரர்களே விளையாடினால் வேறென்ன கிடைக்கும்..:)

இறுதி நேரத்தில் ஆர்ஜண்டீனா அபாரமாக இரு கோல்களை அடித்து கிரீஸை வீட்டுக்கு அனுப்பி விட்டது..

தென்கொரியா ஆர்ஜெண்டீனா அரைக்காலிறுதிக்கு முன்னேற்ற..

நாளைய போட்டிகளில் ஜேர்மனியினதும், இங்கிலாந்தினதும் தலை விதி தெரியும்..

nambi
25-06-2010, 04:17 AM
23.06.2010...12.00 நைஜிரியா எதிர் தென்கொரியா நைஜிரியா 2 இலக்குகள் தென்கொரியா 2 இலக்குகள்.....
கிரிஸ் எதிர் அர்ஜன்டைனா....கிரிஸ் 0 இலக்கு...அர்ஜன்டைனா 2 இலக்குகள்..


23.06.2010..07.30 மணி ஆட்டங்கள்
ஸ்லோவேனியா எதிர் இங்கிலாந்து....ஸ்லோவேனியா 0 இலக்கு....இங்கிலாந்து 1 இலக்கு

அமெரிக்கா எதிர் அல்ஜிரியா ஆட்டத்தில்...அமெரிக்கா 1 இலக்கு...அல்ஜிரியா 0 இலக்கு

24.06.2010 12.00 ஆட்டத்தில் கானா எதிர் ஜெர்மனி....கானா 0 இலக்கு....ஜெர்மனி 1 இலக்கு

ஆஸ்திரேலியா எதிர் செர்பியா ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 2 இலக்குகள்....செர்பியா 1 இலக்கு....


24.06.2010......

07.30 ஆட்டத்தில் ஸ்லோவேக்கியா எதிர் இத்தாலி....ஸ்லோவேக்கியா 3 இலக்குகள்.. இத்தாலி 2 இலக்குகள்

மற்றொரு 07.30 ஆட்டம்...பராகுவே எதிர் நியுசிலாந்து விளையாட்டில் இரண்டுமே 0 இலக்கு பெற்று சமன் (டிரா) செய்தன.



...........................................

இன்றைய ஆட்டம்.....

25.06.2010 07.30 போர்ச்சுகல் எதிர் பிரேசில் மற்றும் வடகொரியா எதிர் ஐவரி கோஸ்ட் (கோட்டிடார்)

26.06.2010 12.00 சிலி எதிர் ஸ்பெயின் மற்றும் சுவிட்சர்லாந்து எதிர் ஹோன்ட்ரஸ்.....

அமரன்
25-06-2010, 05:22 AM
நேற்றய ஆட்டம் விடுபட்டு விட்டதே.....!!!!

இத்தாலி தோல்வியாமே....????!!

aren
25-06-2010, 05:51 AM
இது கொஞ்சமும் நம்ப முடியாத விஷயம். இத்தாலி இப்படி சொதப்பிவிட்டார்கள்.

ஸ்பெயினும் இதே நிலையில்தான் இருக்கிறது. அதுவும் போய்விடுமா.

ஏற்கெனவே பிரான்ஸ் வெளியேறிவிட்டது.

அமெரிக்கா அவர்களுடைய குரூப்பில் முதலிடத்தில் இருக்கிறது.

புதிய நாடுகள் சிறப்பாக ஆடுவது குறித்து சந்தோஷம்.

இந்தியாவுக்கும் ஒரு நாள் சந்தர்பம் கிடைக்கும் என்றே நினைக்கிறேன்.

nambi
25-06-2010, 06:31 AM
நேற்றய ஆட்டம் விடுபட்டு விட்டதே.....!!!!

இத்தாலி தோல்வியாமே....????!!

மறந்துவிட்டேன்! மாற்றியுள்ளேன். நினைவூட்டியமைக்கு நன்றி!

அமரன்
25-06-2010, 05:12 PM
இன்றுடன் அடுத்த சுற்றுக்கு முன்னேறிய நாடுகள் தெரிந்து விடும். நாமும் வாக்கெடுப்பை தொடங்கி விடலாம்.

அமரன்
29-06-2010, 08:55 PM
கிண்ணம் யாருக்கு எண்டும் சொல்லுங்கோ.

செல்வா
30-06-2010, 07:23 AM
நான் பார்த்தவரையில் - அர்ஜென்டினா (அ) பிரேசில். வேற அணிகளைப் பற்றித் தெரியவில்லை.

Mano.G.
30-06-2010, 10:46 AM
ஜெர்மனியின் ஆட்டம்மும் பிரமாதம்
அவர்களின் ஆட்டக்காரர்கள் அனைவரும்
25 வயதிர்குட்பட்டவர்கள், சளைக்காமல் மைதானம் எங்கும்
ஓடுகின்றனர். நல்ல திறமைசாளிகள்.

எனது அபிமான குழு பிரேசில்,
இவர்களே வெற்றி பெறவேண்டும்,

ஆனால் எனது ஓட்டு ஜெர்மனிக்கு

ஓவியன்
30-06-2010, 11:04 AM
கிண்ணம் யாருக்கு எண்டும் சொல்லுங்கோ.

டேவிட் விலா, பயங்கர ஃபோர்மில்...

இந்த தடவை ஸ்பெயினுக்கு சந்தர்பம் அதிகமாகத் தெரிகிறது,
முதல் போட்டியில் சொதப்பினாலும் இப்போது சுதாகரித்து விட்டார்கள்...

ஓவியன்
30-06-2010, 11:07 AM
உலக சாம்பியன் வீரர்களே விளையாடினால் வேறென்ன கிடைக்கும்..:)

நினைத்து, நினைத்து சிரிக்க வைத்து விட்டீர்கள் அமரன் :D,
இத்தாலி செய்த தவறே அதுதான், அந்த தவறினைச் செய்யாததால் பிரேசில் பிளந்து கட்டுகிறது. :)

------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த உலகப் போட்டியில் இன்றைய நிலவரப்படி அதிக தடவை இலக்குகளை நோக்கிப் பந்துகளை அடித்தவர் வரிசையில் ஆர்ஜெண்டினாவின் நட்சத்திர வீரர் `மெஸ்ஸி` முதலில் இருந்தும் (இன்றைய நாள் வரை 23 தடவை முயற்சி செய்திருக்கிறார்..!! :)) இன்னமும் ஒரு இலக்கும் சரி வர அமையாமைக்கு அதிஸ்டமின்மை தான் காரணமோ..??? :icon_rollout:

nambi
02-07-2010, 03:28 PM
முதல் கால் இறுதி அணி...பிரேசில் எதிர் நெதர்லாந்து....

பிரேசில்...ரொபினோ பத்தாவது நிமிடம் நெதர்லாந்துக்கு எதிரான இலக்கு....
அதே பிரேசில் அணி வீரர் பெலிப்பி மெலோ 53 வது நிமிடத்தில் நெதர்லாந்து ஆதரவாக ஒரே பக்க இலக்கு (ஒன் கோல் ) அடித்து இரு அணியின் இலக்குகளை சமன் செய்தார்...

68 வது நிமிடத்தில் நெதர்லாந்து விரர் ஸ்னைடர் ஒரு இலக்கு அடித்தார்....

பிரேசில் 1 இலக்கு....நெதர்லாந்து 2 இலக்குகள்....

பெலிப்பி.... பிரேசில்.... சிவப்பு அட்டை..... வெளியேற்றப்பட்டார்....

அறிஞர்
02-07-2010, 03:51 PM
விறு விறுப்பான ஆட்டத்தில் பிரேசில் தோற்றது

பாலகன்
02-07-2010, 04:25 PM
என்னாது பிரேசில் தோத்துடுச்சா!!! :eek:

nambi
02-07-2010, 07:26 PM
கால் இறுதி இரண்டாவது அணி...கானா எதிர் உருகுவே.....ஆட்டத்தில்...

கானா அணி வீரர் முன்டாரி.. இடைவேளையின் (45+2) கூடுதல் நேரத்தில் உருகுவேக்கு எதிராக ஒரு இலக்கு அடித்தார்.

உருகுவே அணி வீரர் போர்லான் 55 நிமிடத்தில் ஒரு இலக்கு அடித்து சமன் செய்தார்.

கானா 1 இலக்கு....உருகுவே 1

இரண்டும் சமன் செய்ததால்....கால் இறுதிக்குள் நுழைய கூடுதல் நேரம் வழங்கப்பட்டது...
முதல் 15 நிமிட கூடுதல் நேரம் ஆட்டம்.....

இரண்டாவது 15 நிமிட கூடுதல் நேரம்......
உருகுவே அணி வீரர் சூரஜ் கானா வீரர் அதியா அடித்த இலக்கை கையால் தடுத்ததால் சிவப்பு அட்டை கொடுத்து வெளியேற்றப்பட்டார்....

பெனால்டி வழங்கப்பட்டும் கானாவால் அடிக்க முடியவில்லை....

பெனால்டி ஷூட் அவுட் (5 இலக்குகள் வாய்ப்பு)... (டை பிரேக்கர்)
முறையில் கானா 2 இலக்குகள்.... உருகுவே 4 இலக்குகள் என்ற இலக்கில் அரை இறுதிக்குள் உருகுவே நுழைந்தது.

அமரன்
02-07-2010, 08:14 PM
கானாவுக்கும் உருகுவேக்கும் இடையான ஆட்டம் பரபரப்பாகப் போகிறது. ஈரணிகளும் அடுத்த கட்டத்துக்குப் போக எல்லா யுக்திகளையும் பயன்படுத்துகின்றன. குறிப்பாக தப்பாட்டம்.

அமரன்
02-07-2010, 09:05 PM
அபாரமாக ஆடும் கானா. எத்தனை எத்தனிப்புகள்!!!!!!!!!!

அதிஷ்டம் கை கொடுக்கவில்லை..

உணர்வுகளும் உணர்ச்சிகளும் அணி அமைத்து ஆடும் ஆட்டம். இதுவரை நடந்த இந்த உலகக் கிண்ணப் போட்டிகளில் என்னைக் கவர்ந்த போட்டி இதுதான்.

கானா ஜெயிக்கனும் என்று மனசு விரும்புது.

அமரன்
02-07-2010, 09:16 PM
உருகுவே 4-2 என்ற அடிப்படையில் அரையிறுதிக்குள் நுழையும் வாய்ப்பைப் பெற்றது.

govindh
02-07-2010, 10:14 PM
கானா வெற்றி வாய்ப்பை இழந்து விட்டதால்...
நாடே சோகத்துடன் சோர்வாகி விட்டது.

nambi
03-07-2010, 04:20 AM
அரை இறுதி போட்டிகள்.......

07.07.2010....இரவு 12 மணி (இ.நே)...உருகுவே எதிர் நெதர்லாந்து

08.07.2010.....இரவு 12 மணி (இ.நே).....######........#######

nambi
03-07-2010, 05:09 AM
உலக கோப்பையில் அதிக முறை பந்துகளை இலக்கு நோக்கி அடித்தவர்களில் முதலிடத்தில் இருப்பவர்...கானா நாட்டு வீரர் ''அசமோ கியான்''.....33 முறை பந்தை இலக்கு நோக்கி செலுத்தியுள்ளார்....அடுத்த இடத்தில் ''லியோனல் மெஸ்ஸி'' அர்ஜன்டைனா 23 முறை....

http://www.fifa.com/imgml/flags/reflected/m/GHA.png

http://www.fifa.com/imgml/tournament/worldcup2010/players/xl/208353.png


அசமோ கியான்

ஓவியன்
03-07-2010, 05:57 AM
ஸ்பெயின் - பரகுவே போட்டியினைப்பற்றி இலங்கை ஊடகவியலாளர்களில் ஒருவரான லோஷன் (http://loshan-loshan.blogspot.com/) இப்படி எதிர்வு கூறுகிறார் :)....


இந்தக் காலிறுதிப் போட்டிகள் நான்கில் ஒரு போட்டியைத் தவிர மற்ற மூன்று போட்டிகளிலுமே வெற்றியாளரை ஊகிப்பது சிரமமானதே..


டேவிட் வியா (David Villa) என்ற கோல் குவிப்பு எந்திரத்தைக் கொண்டுள்ள ஸ்பெய்ன் அணி ஒரு முழுமையான அணியாகத் தெரிகிறது.
முன்வரிசை முதல் மத்திய களம்,பின் வரிசை என்று சகல பகுதிகளும் மிகப் பலம் வாய்ந்ததாகவே இருப்பதோடு இகர் கசியாசின் கோல் காப்பு அபாரம்.
எனவே ஸ்பெய்ன் அணி பரகுவேயை வீட்டுக்கு அனுப்பி வைக்கும் என்று உறுதிபட இப்போதே சொல்லிவைத்துவிடலாம்.

அமரன்
03-07-2010, 08:16 AM
பரகுவே வீட்டுக்குப் போவது நிச்சய் செய்யப்பட்ட ஒன்றாகவே எனக்கும் தென்படுகிறது.

அதனால் அந்த ஆட்டத்தில் பெரிய ஆர்வமில்லை. என்னார்வம் எல்லாம், இறுதிப் போட்டியில் மோதுவார்கள் என நான் எதிர்பார்த்த ஆர்ஜன்ரீனாவும், ஜேர்மனியும் மோதும் இன்றைய காலிறுதிதான்.

போற இடங்கள்ளயாவது போட்டுப் பாத்துடுவம்ல.

ஓவியன்
03-07-2010, 08:24 AM
ஒவ்வொரு நாளும் நடக்கும் உலகக் கிண்ணப் போட்டிகளில் இரண்டாவது போட்டியினை நேரடி ஒளிபரப்பாக என்னால் இங்கே பார்க்க முடிவதில்லை, ஏனென்றால் நானிருக்கும் நேரப்படி கிட்டத்தட்ட நள்ளிரவில் இரண்டாவது போட்டி நடைபெறுவதால், மறு நாளைய பணி (:D) கருதி, அதனைத் தவிர்ப்பது வழமை. :icon_rollout:


ஆனால், ஆர்ஜெண்டீனா - ஜேர்மனி போட்டி முதலாவது போட்டியென்பதால், பாத்துடுவோமிலே... :rolleyes:

shibly591
03-07-2010, 10:16 AM
தாங்களின் தகவல்களுக்கு நன்றிகள்..

எனக்கென்றால் ஜேர்மனிதான் இம்முறை கிண்ணம் பெறும் என்று தோன்றுகிறது..

பார்க்கலாம்

nambi
03-07-2010, 02:50 PM
மூன்றாவது அணி கால் இறுதி....ஜெர்மனி எதிர் அர்ஜென்டைனா


ஆட்டம் தொடங்கிய 3 வது நிமிடம் ஜெர்மனி வீரர் தாமஸ் முல்லர் அர்ஜென்டைனாவிற்கு எதிராக ஒரு இலக்கு....

ஜெர்மனி 1 இலக்கு.......அர்ஜென்டைனா..0



...36 வது நிமிடத்தில் அர்ஜென்டைனா வீரர் டிவஸ் அடித்த இலக்கு கணக்கில் எடுத்துக்கொளவில்லை...பக்க நிறுத்தம்....நடுவர் அறிவிப்பு (ஆப் சைடு)....பயிற்சியாளர் மாரடோனா சோகம்....

அரைமணி நேர ஆட்டம் வரை....

68 வது நிமிடம்...ஜெர்மனி வீரர் குளோஸ் .....ஒரு இலக்கு...அபாரம்.
74 வது நிமடம் (ஜெர்மனி) பிரெட்ரிக்........1 இலக்கு

89 வது நிமிடம் குளோஸ் இரண்டாவது இலக்கு...அபாரம்....
ஜெர்மனி 4 இலக்குகள்...அர்ஜென்டைனா 0....

தென் அமெரிக்கா நாட்டிற்கும் கோப்பை இல்லையா? ஐரோப்பியர்களுக்குத்தான் போலிருக்கிறது........அர்ஜென்டைனா சரியான பந்து பரிமாற்றம் ஜெர்மனியை விட....அர்ஜென்டைனா வீரர்கள் சோர்ந்துவிட்டனர்.
ஜெர்மனி அரையிறுதிக்குள்........

ஓவியன்
03-07-2010, 03:48 PM
துரத்தி, துரத்தி அடிக்கிறதென்பது இதுதானா...??? :eek::eek::eek:

ஆர்ஜெண்டினா, ஜென்மத்துக்கும் மறக்காது இந்த தோல்வியை....

அமரன்
03-07-2010, 03:57 PM
பாவம்யா மரடோனா. முகத்தில் ஈயாட்டமே இல்லை.

இந்தமாதிரி தோத்திருக்க வேண்டாம்.

ஓவியன்
03-07-2010, 04:06 PM
உண்மையாக பாவம்தான் மரடோனா...

குடும்ப அரசியல் மாதிரி, குடும்ப விளையாட்டு நடத்தியவராச்சே..!! :D:D:D
கும்மியடிக்க மொத்த ஆர்ஜெண்டினாவே காத்திருக்கு... :eek:

சிவா.ஜி
03-07-2010, 04:33 PM
தென் அமெரிக்க நாடுகளோட நிலைமை இப்படியாகிடுச்சே.....இனி இருக்கிறது ஒரு அணிதான்...பாப்போம்...செமியில என்ன பண்றாங்கன்னு

பா.ராஜேஷ்
03-07-2010, 06:44 PM
ஜெர்மனி இன்று அர்ஜென்டினாவை நான்கிற்கு பூச்சியம் என்று தோற்கடித்தது.. பாவம் அர்ஜென்டினாகாரர்கள், அவர்கள் அடித்த ஒரு கோலையும் ஆப் சைடு என்று கூறி மறுத்து விட்டனர். ஜெர்மனியின் வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது..

nambi
03-07-2010, 07:53 PM
ஆளாளுக்கு பெனால்டிலேயே விளையாடி கொண்டிருக்கிறார்கள்...இன்றைக்கும் தூங்க விடமாட்டார்கள் போலிருக்கே..... (ஸ்பெயின்...பராகுவே)
அடிக்கிறாங்க...இலக்கு இல்லை என்று சொல்றாங்க....நடுவர் ரொம்ப ரொம்ப (ஸ்ட்ரிக்ட்)...

நடுவர் ஒரு மூட்டை நிறைய மஞ்சள் அட்டைகளை கொண்டு வந்திருப்பார் போலிருக்கிறது...மானாவரியாக கொடுத்துகிட்டே இருக்கிறாரே....

அப்பாடா! ஒரு இலக்கு ஸ்பெயின் 83 வது நிமிடத்தில்... டேவிட் வில்லா அடித்தார்.... (தூங்கப் போகலாம், ஒரே அமர்க்களம்...)

பராகுவே 0 ஸ்பெயின் 1

ஸ்பெயின் அரையிறுதிக்குள் நுழைந்தது...

அமரன்
03-07-2010, 08:43 PM
கிண்ணம் ஐரோப்பாவுக்கு என ஏறத்தாழ உறுதியாகிவிட்டது.

ஸ்பெயின் வீரர் ஒருவர் அடித்த பந்து கம்பத்தில் பட்டு இலக்கை அடையாமல் திரும்பி வந்து அதை மீளவும் ஒருவர் உதைக்க மீ|ண்டும் கம்பத்தில் பட்டு உட்பக்கமாகத் திரும்பி இலக்கை அடைந்தது.. சில கணங்கள் இதயத்துடிப்பை எகிற வைத்த நிகழ்வு!

Mano.G.
04-07-2010, 12:47 AM
இளம் ஆட்டகாரர்களை கொண்ட
ஜெர்மனி முக்கால் கடலை தாண்டிவிட்டார்கள் கோப்பையை வெள்வது
அடுத்த கட்ட வேலையே, நேற்று விளையாடியது போல விளையாடினால்
கோப்பை அவர்களுக்கே

aren
04-07-2010, 04:24 AM
நெதர்லாந்து கோப்பையை வெல்லும் என்று நினைக்கிறேன்.

பாலகன்
04-07-2010, 05:32 AM
அதிக எதிர்பார்ப்புகள் ஏற்படுத்திய அர்ஜன்டீனா அம்பேல் ஆன கதை சிரிப்பாக இருக்கிறது. மீடியாக்கள் என்ன ஒரு தூக்கு தூக்குனாங்க இவங்களை.

பாபா.ஜி
04-07-2010, 06:45 AM
உருகுவே ஜெயிக்க வாய்ப்பிருப்பதாக ஒரு கணிப்பும் இருக்கு. 1930 மற்றும் 1950 வென்றது போன்று இந்த முறையும் முடியலாம் (ச்சும்மா கணிப்புதான்)

யாருமே ஓட்டு போடாத உருகுவேக்கு என் வாக்கு - வாக்கு பலிக்குதா இல்லையா, பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். :)

ஓவியன்
06-07-2010, 05:34 AM
இன்று அரையிறுதியில் உருகுவேயை எதிர்கொள்கிறது, நெதர்லாந்து....

நெதர்லாந்து உருகுவேயை வெல்லுமென நம்புகிறேன், கானாவை ஏமாற்றி உள்ளே வந்த உருகுவே வெளியே போகுமா...?? :rolleyes:

அமரன்
06-07-2010, 05:38 AM
அதெல்லாம் தெரியாதுப்பா..

வேலை முடிஞ்சு வெளிய அலையுற நான் வேளைக்கு வீட்டுக்கு வந்திடுவேன்.அது மட்டும்தான் இப்போதைக்குத் தெரியும்.:lachen001:

ஓவியன்
06-07-2010, 05:49 AM
வேலை முடிஞ்சு வெளிய அலையுற நான் வேளைக்கு வீட்டுக்கு வந்திடுவேன்.அது மட்டும்தான் இப்போதைக்குத் தெரியும்.:lachen001:

கால்பந்து என்றாலும் வீட்டுக்கு நேரத்தோட வாராங்க...
கால் கட்டு போட்டாலும் நேரத்தோட வீட்டுக்கு வாராங்க....

இந்த காலுக்கும், வீட்டுக்கு நேரத்தோட வாறதுக்கும் ஏதோ சம்மந்தம் இருக்கு. :D

nambi
06-07-2010, 06:55 PM
அரை இறுதி


18 வது நிமிடம் நெதர்லாந்து வீரர் பிராங்கொஸ்ட் உருகுவேக்கு எதிராக அபாரமான இலக்கு...30 மீட்டர் தொலைவில் இருந்து சரியாக இலக்கு நோக்கி.....

41 வது நிமிடம் உருகுவே போர்லான் அபாரமான இலக்குகள் நெதர்லாந்துக்கு எதிராக...
70 வது நிமிடம் நெதர்லாந்து வீரர் ஸ்நைடர் உருகுவேக்கு எதிராக அபாரமான இலக்கு...

73 வது நிமிடம் நெதர்லாந்து வீரர் அர்ஜென் ரொபென் உருகுவேக்கு எதிராக அபாரமான இலக்கு...

92 வது நிமிடம் (கூடுதல் நேரத்தில்) உருகுவே வீரர் பெரைரோ நெதர்லாந்துக்கு எதிராக ஒரு இலக்கு அபபாரம்...இருந்தாலும்...

நெதர்லாந்து 3 இலக்குகள்....உருகுவே 2 இலக்கு

இறுதிக்குள் நுழைந்தது நெதர்லாந்து

உருகுவே மூன்றாவது இடப்போட்டிக்குள் நுழைந்தது..

Mano.G.
07-07-2010, 04:25 AM
நெதர்லாந்து கோப்பையை வெல்லும் என்று நினைக்கிறேன்.

ஆரேன்,
இங்க நெதர்லாந்துக்கு சப்போர்ட் பண்ணிட்டு
ஓட்டு போடாம விட்டுடிங்கலே,
பாவம் நெதர்லாந்து யாருமே ஓட்டு போடல

shibly591
07-07-2010, 05:06 AM
தாங்களின் தகவல்களுக்கு நன்றிகள்..

எனக்கென்றால் ஜேர்மனிதான் இம்முறை கிண்ணம் பெறும் என்று தோன்றுகிறது..

பார்க்கலாம்

எப்போதோ நான் கூறிய ஆரூடம் பலிக்கும்போதுள்ளது...

இனி நானும் ஒரு ஜோசியர் ஆகலாம்போலுள்ளது...ஸோ...இன்ரனெற் ஜோசியர் என்று பெயர் மாற்றினால் கலெக்சன் கல்லாக்கட்டும்போல...

aren
07-07-2010, 06:01 AM
ஆரேன்,
இங்க நெதர்லாந்துக்கு சப்போர்ட் பண்ணிட்டு
ஓட்டு போடாம விட்டுடிங்கலே,
பாவம் நெதர்லாந்து யாருமே ஓட்டு போடல

ஓட்டு போடவில்லையென்றால் என்ன, அவர்கள் ஜெயித்தால் எனக்கு சந்தோஷமே.

நேற்றைக்கு அவர்கள் ஆடிய ஆட்டம் எனக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை. இப்படி ஆடினால் இறுதி ஆட்டத்தில் தேறுவது கடினம். அவர்களுடைய ஆட்டத்தை இன்னும் சிறப்பாக்க வேண்டும்.

aren
07-07-2010, 06:04 AM
எப்போதோ நான் கூறிய ஆரூடம் பலிக்கும்போதுள்ளது...

இனி நானும் ஒரு ஜோசியர் ஆகலாம்போலுள்ளது...ஸோ...இன்ரனெற் ஜோசியர் என்று பெயர் மாற்றினால் கலெக்சன் கல்லாக்கட்டும்போல...

முதலில் இன்றைய ஸ்பெயினுடன் ஆடவேண்டிய ஆட்டத்தை ஜெயிக்கட்டும், பின்னர் இறுதி சுற்று வேறு உள்ளது. அதுக்கப்புறம் உங்கள் தொழிலை மாற்றிக்கொள்ளலாம்.

நாங்களும் இப்படி பல சமயங்களில் ஃப்ளூக்கில் சொல்லி அந்த அணி ஜெயித்திருக்கிறது, ஆனால் அதுக்காக நாங்களெல்லாம் ஜோசியத் தொழிலுக்கா போய்விட்டோம்.

சிவா.ஜி
07-07-2010, 06:10 AM
கடைசி நிமிடங்களில் ஆரென் சொன்னதைப்போல நெதர்லாந்தின் விளையாட்டு அவ்வளவு சரியில்லை......இறுதிப்போட்டியில் இன்னும் திறமையாக விளையாட வேண்டும்.

இன்றைய போட்டியில் ஸ்பெயின் ஜெயிக்குமென்று நினைக்கிறேன்....(ஜெர்மனி படு ஸ்ட்ராங்கா இருக்கு...ஆனாலும் ஒரு நம்பிக்கை....நான் ஓட்டுப் போட்ட அணியாச்சே ஸ்பெயின்)

ஓவியன்
07-07-2010, 06:51 AM
ஜேர்மனி பலமான அணியாக இருப்பது உண்மைதான், ஆனால் இதுவரை ஜேர்மனி அமோகமாக ஜெயித்தமைக்கு ஒரு காரணம் கூறுகிறார்கள், அது `ஜபுலானி` பந்து. இந்த உலக கிண்ணத்தில் பயன்படுத்தப்படும் ஜபுலானி பந்துகளே பல காற்பந்து தலைகளை உருட்டியதாக பலர் கருதுகிறார்கள் (மெஸ்ஸி இலக்குகளை நோக்கி அடித்த 30 தடவைகளில் ஒரு தடவையேனும் பந்து இலக்கினுள் விழவில்லை), அதேவேளை ஜேர்மெனியின் வெற்றிக்கும் இதே ஜபுலானி தான் காரணமென்றும் கிசு கிசுக்கிறார்கள், அதாவது ஜேர்மெனியின் உள்ளூர் போட்டிகளில் உபயோகிக்கும் பந்துக்கும் ஜபுலானிக்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறதென்கிறார்கள்....

ஆனால், இதே ஜபுலானியை `டேவிட் விலா(யா)` இப்போது திறமையாக கையாளத்தொடங்கியிருப்பதால் ஜேர்மெனிக்கு இலகுவில் வெற்றி கிடைக்காதென்பதே என் கணிப்பு. விலாவைக் கட்டுப்படுத்தவே ஜேர்மெனிக்கு போதும், போதுமென்றாகி ஸ்பெயின் ஜெயிக்குமென நான் எதிர்பார்கின்றேன்.

சிங்கத்துக்கு அடிடாஸ் தங்க காலணி மீதும் ஒரு கண் இருப்பதனாலும், பார்சிலோனா கழகத்துடன் அண்மையில் கையெழுத்திட்ட 40 மில்லியன் யூரோ ஒப்பந்தம் தந்த உத்வேகமும் இணைய இன்றைய போட்டியில் அசத்துவாரென நினைக்கின்றேன்.

aren
07-07-2010, 07:05 AM
இன்றைய போட்டியில் ஸ்பெயின் ஜெயிக்குமென்று நினைக்கிறேன்....(ஜெர்மனி படு ஸ்ட்ராங்கா இருக்கு...ஆனாலும் ஒரு நம்பிக்கை....நான் ஓட்டுப் போட்ட அணியாச்சே ஸ்பெயின்)

மதுரை இந்தியாவின் தலைநகரம் என்று யாரோ எழுதியது மாதிரி, இல்லையா?

ஓவியன்
07-07-2010, 07:12 AM
மதுரை இந்தியாவின் தலைநகரம் என்று யாரோ எழுதியது மாதிரி, இல்லையா?

என்னவேணா சொல்லுங்க, இன்னைக்கு ஸ்பெயின் தான் ஜெயிக்கும்..!! :aetsch013:

விகடன்
07-07-2010, 07:13 AM
எனக்கென்னவோ ஜேர்மனிக்குத்தான் என்று படுகிறது.
பார்க்கலாம்.

செல்வா
07-07-2010, 07:29 AM
இன்னிக்கி வெற்றி பெறக்கூடிய அணிக்கு கோப்பைனு சிவா அண்ணா தலையில அடிச்சி சத்தியம் செய்யலாம் :)

nambi
07-07-2010, 07:34 AM
இன்றைய போட்டியில் ஸ்பெயின் ஜெயிக்குமென்று நினைக்கிறேன்....(ஜெர்மனி படு ஸ்ட்ராங்கா இருக்கு...ஆனாலும் ஒரு நம்பிக்கை....நான் ஓட்டுப் போட்ட அணியாச்சே ஸ்பெயின்)

அவ்வளவு தானே! ஜெர்மனிக்கு சூன்யம் வைத்துவிட்டால் போகிறது. அப்புறம் அவர் இலக்கு சூன்யம் தான். இப்போதே வைத்துவிடுகிறேன்.

ஓவியன்
07-07-2010, 07:36 AM
அவ்வளவு தானே! ஜெர்மனிக்கு சூன்யம் வைத்துவிட்டால் போகிறது. இப்போதே வைத்துவிடுகிறேன்.

அவ்வ்வராஆ நீங்கக.........??? :eek: :eek: :eek:

சிவா.ஜி
07-07-2010, 08:36 AM
ஆஹா....நம்பி....நம்பியார் ஆகிட்டாரே....(ஜெர்மனிக்குத்தாங்க....!!!)

சிவா.ஜி
07-07-2010, 08:39 AM
இன்னிக்கி வெற்றி பெறக்கூடிய அணிக்கு கோப்பைனு சிவா அண்ணா தலையில அடிச்சி சத்தியம் செய்யலாம் :)

ஏன்....ஏன் செல்வா...........ஏன்...இப்படி....????

ஓவியன்
07-07-2010, 09:58 AM
இங்கே பாருங்க, ஒரு ஆக்டபஸ் கூட சொல்லிருச்சு, இன்னைக்கு ஜேர்மனி ஜெயிக்காதுனு...!! :cool: :) :D :lachen001:


http://news.bbc.co.uk/today/hi/today/newsid_8795000/8795363.stm

:icon_rollout: :icon_rollout: :icon_rollout: :icon_rollout:

http://www.youtube.com/watch?v=nJYv5rul11M

மதி
07-07-2010, 10:05 AM
இதெல்லாம் விடுங்க...
இப்போ ஒரு புது கணக்கு.. இது மெயிலில் வந்தது...
1. பிரேசில் உலகக் கோப்பையை ஜெயித்தது 1970, 1994. இரண்டையும் கூட்டினால் 3964.
2.. அர்ஜெண்டினா ஜெயித்தது 1986, 1978, கூட்டினால் 3964.
3. பிரேசில் உலகக் கோப்பையை ஜெயித்த வேறு வருடங்கள் 1962, 2002. இரண்டையும் கூட்டினால் 3964.
4. ஜெர்மனி ஜெயித்த வருடங்கள் 1990, 1974.. அதே 3964.
2010=ஐ எடுத்துக் கொள்வோம். 3964-லிருந்து கழித்தால் 1954. அந்த வருடம் ஜெயித்தது ஜெர்மனி..
எப்படியெல்லாம் கணக்கு போடறாங்கப்பா..

ஓவியன்
07-07-2010, 10:12 AM
2010=ஐ எடுத்துக் கொள்வோம். 3964-லிருந்து கழித்தால் 1954. அந்த வருடம் ஜெயித்தது ஜெர்மனி..
எப்படியெல்லாம் கணக்கு போடறாங்கப்பா..

அதுசரி, இந்தக் கணக்கு ஃபோல் ஆக்டபஸ்ஸூக்கு தெரியலை போல... :lachen001:

__________________________________________________________________________________________

பேசாம, போட்டிகளை நடாத்தி கிண்ணத்தைக் கொடுக்காமல், கணக்குப்பார்த்தே வெற்றியாளரைத் தீர்மானிக்கலாம் போலிருக்கே...

பணமும் நேரமும் மிச்சமாகும்... :icon_b:

மதி
07-07-2010, 10:13 AM
அதுசரி, இந்தக் கணக்கு ஃபோல் ஆக்டபஸ்ஸூக்கு தெரியலை போல... :lachen001:

__________________________________________________________________________________________

பேசாம, போட்டிகளை நடாத்தி கிண்ணத்தைக் கொடுக்காமல், கணக்குப்பார்த்தே வெற்றியாளரைத் தீர்மானிக்கலாம் போலிருக்கே...

பணமும் நேரமும் மிச்சமாகும்... :icon_b:
அதே அதே....:icon_b::icon_b:

விகடன்
07-07-2010, 10:18 AM
இதுக்குத்தான் ஓவியனிட்ட ஐடியா கேக்கணுமெங்கிறது :mini023:

nambi
07-07-2010, 01:10 PM
இதெல்லாம் விடுங்க...
இப்போ ஒரு புது கணக்கு.. இது மெயிலில் வந்தது...
1. பிரேசில் உலகக் கோப்பையை ஜெயித்தது 1970, 1994. இரண்டையும் கூட்டினால் 3964.
2.. அர்ஜெண்டினா ஜெயித்தது 1986, 1978, கூட்டினால் 3964.
3. பிரேசில் உலகக் கோப்பையை ஜெயித்த வேறு வருடங்கள் 1962, 2002. இரண்டையும் கூட்டினால் 3964.
4. ஜெர்மனி ஜெயித்த வருடங்கள் 1990, 1974.. அதே 3964.
2010=ஐ எடுத்துக் கொள்வோம். 3964-லிருந்து கழித்தால் 1954. அந்த வருடம் ஜெயித்தது ஜெர்மனி..
எப்படியெல்லாம் கணக்கு போடறாங்கப்பா..

இதை நானும் செய்தியில் வாசித்தேன்....வசூல் ராஜா எம் பி பி எஸ் திரைப்படத்தில் கமல் சொன்ன நகைச்சுவை தான் நினைவுக்கு வந்தது....''10 லிருந்து 3 கழிச்சா....7.....வரும்..... ஏன்?....27 லிருந்து 20 கழிச்சா கூடதான் 7 வரும்...''

ஜெர்மனி இதுவரையில் கிழக்கு, மேற்கு ஜெர்மனிகளாக பிரிந்திருந்தபொழுது தான் வெற்றி பெற்றிருக்கிறது என நினைக்கிறேன். அதுகூட மேற்கு ஜெர்மனிதான் வெற்றி பெற்றிருக்கிறது. சேர்ந்த பிறகு இரண்டாமிடம் தான் பார்க்கலாம் எப்படியிருக்கிறது... என்று?

சிவா.ஜி
07-07-2010, 01:50 PM
எப்புடியெல்லாம் கணக்குப் போடறாங்கப்பா....!!!

அறிஞர்
07-07-2010, 02:17 PM
நேற்று நெதர்லாந்து ஆட்டத்தை ரசித்தேன்...

இன்று சரியான போட்டி..

உங்க கணக்கை பார்த்தா... ஆக்டோபஸ் கணக்கு காலி போல.

ஜெர்மனி வெற்றி பெற்றால்.. ஆக்டோபஸ் கறியாக போகிறது...

அமரன்
07-07-2010, 06:02 PM
இரு அணிகளும் சம பலத்தில் உள்ளன. ஐரோப்பாக் கிண்ணத் தொடரில் இருந்த ஜேமனிய அணியை விட உலகக் கிண்ண தொடரில் விளையாடும் அணி சிறப்பானது. ஆனால் நடப்பு ஐரோப்பியச் சம்பியனான ஸ்பெயினில் எந்த முன்னேற்றமும் இல்லை. அந்த வகையில் ஜேர்மனிக்கு என் பக்கச்சாய்வு.

இணையத்தில் போட்டியைக் காண சுட்டி கொடுத்தீர்களேயானால் நன்றாக இருக்கும்.

அறிஞர்
07-07-2010, 06:28 PM
தனி மடலில் இலவச தளத்தை.... கொடுத்துள்ளேன்.

அமரன்
07-07-2010, 06:31 PM
வீட்டை விட்டு வெளியே இருப்பதால் கேட்டேன்.

உங்கள் உதவியால் இப்போது போட்டியைப் பார்த்துக்கொண்டு இருக்கிறேன்.

நன்றிங்கண்ணா.

nambi
07-07-2010, 06:59 PM
25 நிமிடம் விளையாடி ஒரு தப்பாட்டம் (பவுல்) கூட இல்லை, மஞ்சள் அட்டை கூட இல்லை....அபாரம் ஸ்பெயின் சரியான பந்து பரிமாற்றம்.....மிகவும் மெதுவான நேர்த்தியான விளையாட்டு

nambi
07-07-2010, 08:01 PM
அபாரம் 73 வது நிமிடம் புயோல் (ஸ்பெயின்) இலக்கு....

nambi
07-07-2010, 08:19 PM
ஜெர்மனி 0 இலக்கு...ஸ்பெயின் 1 இலக்கு

ஸ்பெயின் இறுதிக்குள் நுழைந்தது...

ஜெர்மனி மூன்றாமிடத்திற்கான போட்டிக்குள் நுழைந்தது....

அமரன்
07-07-2010, 08:23 PM
ஆக்டோபஸ் வாக்குப் பலிச்சிடுச்சு.

nambi
07-07-2010, 08:27 PM
அப்படியே! நம்ம சூன்....பலிச்சிடுச்சே!.....எனக்கும் சக்தி இருக்குது....?

ஜெர்மனி மேல எக்கச்சக்கமா பணம் கட்டியிருக்காங்களே! அவங்க நிலைமை....? (சூதாட்டம்)

அமரன்
07-07-2010, 08:32 PM
என் நண்பர் ஒருத்தர் வீட்டுக்குள்ளவே பெட்டுக் கட்டி இருந்தார். 50 ஈரோக்கள். அம்பேல்தான். அதே போல வேலைத்தளத்திலும் கட்டி இருந்தார். அங்கே தப்பிச்சார். ஏனெனில் நஷ்டம் வந்தால் மேலாளருக்கு. இலாபம் வந்தால் இவருக்கும் மேலாளருக்கும் என்பதுதானே டீல். இதுதான்யா சூப்பர்ச் சூதாட்டம். ஹஹ்ஹ்ஹா.

அமரன்
07-07-2010, 08:33 PM
அப்படியே! நம்ம சூன்....பலிச்சிடுச்சே!.....எனக்கும் சக்தி இருக்குது....?

அப்போ நம்ம ஷிப்லிக்கு சக்தி இல்லை என்கிறீங்களா.

நாராயணா!!!!!

அறிஞர்
07-07-2010, 08:34 PM
அப்ப ஆக்டோபஸ் ஜோசியம் எங்கும் செல்லும்....

ஆக்டோபஸ் கறியாகலையோ...

என் கணிப்பு.. நெதர்லாந்து

ஓவியன்
08-07-2010, 05:28 AM
ஹா, ஹா ஆக்டோபஸ் வாக்கு உண்மையாகி என் கணிப்பும் உண்மையாகிட்டுதே... :)

____________________________________________________________________________________________________

பிரேசிலின் பயிற்றுவிப்பாளர் டூங்கா கூறினார் ‘Beautiful Game' என்று, ஆனால் பிரேசிலினால் அதனைத் தர முடியவில்லை. நேற்று ஸ்பெயினும் ஜேர்மெனியும் அதனை ஆடிக் காட்டியிருந்தன.

ஒருவேளை ஜேர்மெனியின் ‘முல்லர்’ ஆடியிருந்தால் நிலமை மாறியிருக்குமோ...?? :cool:

ஸ்பெயின் போட்டியின் ஆரம்பத்திலிருந்தே அட்டகாசமாக பந்து பரிமாறிக் கொண்டிருந்தது. ஜேர்மெனியின் அதிரடி ஆட்டத்தை உடைக்க அவர்கள் கள் போட்ட வியூகம் அவர்களுக்கு வெற்றியைக் கொடுத்திருந்தது. ஜேர்மனி வீரர்கள் இந்த வியூகத்தை உடைக்க திணறியது உண்மைதான், போட்டியின் இறுதியில் ஜேர்மனி வீரர்கள் அதிக உத்வேகத்துடன் விளையாடினாலும், அந்த வேளையில் சரியான வீரர்களை மாற்றி தம் பின்புலத்தைப் பாதுகாத்து வெற்றியினைத் தக்க வைத்துக் கொண்டது ஸ்பெயின்.

சிவா.ஜி
08-07-2010, 06:18 AM
ஆமாம் ஸ்பெயினின் தற்காப்பு ஆட்டம்...ஜெர்மேனிய வீரர்களை திணற வைத்தது உண்மைதான். ஆனாலும்...ஜெர்மேனிய கோல்கீப்பரை பாராட்டியே ஆகவேண்டும். நிறைய கோல்களை சாமர்த்தியமாய் தடுத்தார். இல்லையென்றால்...அர்ஜென்டினாவைப் போல ஜெர்மனியின் கதி ஆகியிருக்கும்.

பா.ராஜேஷ்
08-07-2010, 06:27 AM
ஆம், ஸ்பெயின் ஆட்டம் மிக அருமையாக இருந்தது... வீரர்கள் அனைவரும் தமது பங்களிப்பை மிக அழகாக வெளிப் படுத்தினர்...

ஓவியன்
08-07-2010, 08:25 AM
ஜெர்மேனிய கோல்கீப்பரை பாராட்டியே ஆகவேண்டும். நிறைய கோல்களை சாமர்த்தியமாய் தடுத்தார்.

உண்மைதான், அதே போல ஸ்பெயின் அணியின் தலைவரும் பந்து காப்பாளருமான Iker Casillas உம் திறமையாக விளையாடியிருந்தார். எந்த நேரமும் கழுகுக் கண்களுடன் பந்துகளை இலக்குகளாக மாற்றும் எண்ணத்துடனிருந்த வியாவையும், குளோசையும் இந்த இருவரும் சமாளித்ததே பெரிய விடயம் தான்.

Mano.G.
08-07-2010, 09:09 AM
இந்த 2010ம் ஆண்டு உலக கிண்ண கால்பந்து
போட்டி பல அதிர்ச்சிகளை ஏற்படுத்தியுள்ளது,
முக்கியமாக எதிர்பார்த்த குழுக்கள் பாதியிலேயே அவுட்.

அர்ஜென்டினா, பிரசில், ஜெர்மனி, இங்லாந்து, இத்தாலி
முன்னாள் வெற்றி குழுக்கள் இப்படி காலை வாரிவிட்டன.

ஒரு வழியாக இறுதிக்கு வந்துட்டோம்.

எங்க நாட்டுல இந்த உலக காற்பந்து போட்டியினால , வேலைக்கு மட்டம் போடுவது
கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு இல்லைன்னு
தேசிய தொழிற்சங்கம் அறிவித்திற்கு.

ஓவியன்
08-07-2010, 12:38 PM
எங்க நாட்டுல இந்த உலக காற்பந்து போட்டியினால , வேலைக்கு மட்டம் போடுவது
கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு இல்லைன்னு
தேசிய தொழிற்சங்கம் அறிவித்திற்கு.

நல்ல விடயம், ஆனால் இந்த தடவை போட்டிகள் உங்கள் நாட்டிலுள்ளவர்களுக்கு இரவாக இருக்கையில் நடைபெறுவதே காரணமாக இருக்கலாம், வேலைக்கு மட்டம் போடாமல் இருக்கிறவர்கள் வேலை நேரத்தில் தூக்கம் போடாமல் இருக்கிறார்களா எனவும் கவனித்தால் உண்மை நிலை விளங்கும். :)

பால்ராஜ்
09-07-2010, 02:22 PM
முப்பது வர்ணங்களில் (ஆரஞ்சு) திகைக்க வைத்தவர்கள் தொடர வாழ்த்த்டுக்கள்..

ஏதோ ஒரு அக்டோபஸ் சொல்வதை (!) ஐரொப்பாவில் மூட நம்பிக்கையாளர்கள் தலையில் வைத்துக் கொண்டு ஆடுவதை ஏற்றுக் கொள்ள பகுத்தறிவு தடை சொல்லுகிறது..

பாபா.ஜி
09-07-2010, 06:20 PM
உருகுவே அப்பீட் ஆனதை தொடந்து, கும்பலோடு கோவிந்தாவாக, ஸ்பெயினுக்கு மாறிட்டேன் (ஆக்டோபஸ் காப்பாத்து !)

அறிஞர்
09-07-2010, 10:39 PM
ஆக்டோபஸ் vs. கிளி

ஆக்டோபஸ் தேர்வு - ஸ்பெயின்
கிளியின் தேர்வு - நெதர்லாந்து...

அமரன்
09-07-2010, 10:43 PM
வாங்கய்யா... வாங்க..

கிண்ணத்தை அலேக்காத் தூக்கப் போறது யாருன்னு கரெக்டாச் சொல்லி இ-காசை அள்ளிட்டுப் போங்க.

அறிஞர்
09-07-2010, 10:46 PM
எவ்வளவு இ-காசு சார்..

அமரன்
09-07-2010, 10:49 PM
எவ்வளவு இ-காசு சார்..


நான் ஸ்பெயின் மேல 50 இ-காசளவு நம்பிக்கை வைச்சிருக்கேன்.

நீங்க? எதன் மேல? எந்தளவில?

ஓவியன்
10-07-2010, 04:12 AM
பிரேசிலும், ஆர்ஜெண்டினாவும், போர்த்துகல்லும் போட்டியினை விட்டு வெளியேறிய பின்னர் நான் நம்புவது ஸ்பெயினைத்தான்...

ஸ்பெயினில் அனைவரும் நன்றாகத்தான் ஆடுகின்றனர், ரோரஸ் ஒருவரைத்தவிர, இன்னமும் நல்ல ஃபோர்முக்கு அவர் வரவில்லையென்றே தோன்றுகிறது.

Mano.G.
10-07-2010, 04:31 AM
இப்ப எல்லோரும் காற்பந்தை விட்டுட்டு "போல்" எனும் ஆக்டோபஸையும் (கணவாய்) , மணி எனும் கிளியையும் பற்றி பேசிகிட்டு இருக்காங்க, எங்க போனலும் இதுதான் பேச்சிஅதோட "போல்"லுக்கு கொளை மிரட்டல்ன்னு தினசரிகளில் செய்திகள் வேறு. இது எங்க போய் முடியுமோ???????

aren
10-07-2010, 09:45 AM
ஆக்டோபஸ் vs. கிளி

ஆக்டோபஸ் தேர்வு - ஸ்பெயின்
கிளியின் தேர்வு - நெதர்லாந்து...

ஒரு அறிஞராக இருந்துகொண்டு நீங்களும் ஜோசியத்தின் மீது நம்பிக்கை வைக்கிறீர்களே, இது நியாயமா?

சிவா.ஜி
10-07-2010, 10:10 AM
அறிஞர் எங்கேங்க ஆரென் நம்பறாரு....நம்பறவங்களைப் பத்தி சொல்றாரு...!!!

மதி
10-07-2010, 10:39 AM
இன்னிக்கு யாரு ஜெயிக்கப் போறாங்க? மூன்றாம் இடத்துக்கு...!

nambi
11-07-2010, 04:46 AM
மூன்றாமிடம் ஜெர்மனி....
இரவு நடந்த ஆட்டத்தில் உருகுவே 2 இலக்குகள்...ஜெர்மனி 3 இலக்குகள்...

உருகுவே....

28 வது நிமிடம் கவானி, 51 வது நிமிடம் போர்லான் தலா ஒரு இலக்கு....(உருகுவே இரண்டு இலக்குகள்)

ஜெர்மனி.....
19 வது நிமிடம் முல்லர், 56 வது நிமிடம் ஜேன்சன், 82 வது நிமிடம் கெதிரா...(ஜெர்மனி 3 இலக்குகள்)

சிறந்த ஆட்டக்காரர் ஆக முல்லர் (ஜெர்மனி) மூன்றாமிட ஆட்டத்தில் ரசிகர்களால் தேர்வு.....

ஓவியன்
11-07-2010, 09:59 AM
கால்பந்தாட்ட உலகக்கிண்ணம் 2010 ஒரு வழியாக தன் இறுதிக் கட்டத்தை அடைந்து விட்டது. ஒருவழியாக உலகக் கிண்ணத்தை முதன் முதலில் வெல்லும் அணி நெதர்லாந்தா, ஸ்பெயினா என்பது தெரிய இருப்பதுடன், அதிக இலக்குகளை பெற்றவர், தொடர் நாயகன், சிறந்த பந்து காப்பாளர், சிறந்த இளம் வீரருக்கான விருதுகளை யார், யார் பெறப் போகின்றார்களென்றெல்லாம் தெரியப் போகிறது.

அதிக இலக்குகளைப் பெற்றவர்கள் வரிசையில் இதுவரை ஜேர்மனியின் முல்லர், ஸ்பெயினின் வியா மற்றும் ஹாலாண்டின் ஸ்னைடர் மூன்று பேரும் 5 இலக்குகளைப் பெற்று முன்னணியில் இருந்தாலும் இன்றைய இறுதிப் போட்டியில் டேவிட் வியா அல்லது வெஸ்லி ஸ்னைடர் இருவரில் யாராவது ஒரு இலக்கையோ அதற்கு அதிகமாகவோ பெற்றால் அவருக்கே தங்கக் காலணி செல்வதுடன், ஏற்கனவே தொடர் நாயகனுக்கான தெரிவிலும் இவர்கள் இருவரது பெயர்களே முன்னணியில் இருப்பதால் அந்த விருதையும் தமதாக்கிக் கொள்ளலாம்.

சிறந்த இளம் வீரருக்கான விருது ஜேர்மெனியின் முல்லர் பெற்றுக் கொள்ளும் வாய்ப்புக்கள் அதிகமாகக் காணப்படுகிறது.

அதேவேளை சிறந்த பந்து காப்பாளருக்கான விருதை ஸ்பெயினின் பந்து காப்பாளரும் அணித்தலைவருமான ஐகர் காசிலாஸ் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது. இதுவரை நடந்த போட்டிகளில் இரண்டு இலக்குகளை மாத்திரம் இவர் எதிரணிகளைப் பெற அனுமதித்துள்ளார். அதிலும் ஒரு இலக்கு இவரது காதலி (sara carbonero) மைதானத்து அருகே உலவியதால் வந்த வினை என்கிறார்கள். :D

nambi
11-07-2010, 06:28 PM
உலக கோப்பை வரலாற்றிலேயே 1954 க்கு பிறகு 1 முதல் 11 வரை ஒரே தொடர் வரிசையில் வீரர்கள் பங்கு பெற்றது இப்போது தான். நெதர்லாந்து வீரர்களின் வரிசை 1 லிருந்து 11 எண் வரையுள்ள வீரர்கள் ஒரே தொடர் வரிசையில் அணிவகுத்துள்ளனர் இந்த இறுதி ஆட்டத்தில்........

nambi
11-07-2010, 06:29 PM
பூவா தலையா ஸ்பெயின் வென்றது.....

nambi
11-07-2010, 06:45 PM
ராபின் பெர்சி நெதர்லாந்து முதல் மஞ்சள் அட்டை.......

nambi
11-07-2010, 06:47 PM
புயோல் ஸ்பெயின் இரண்டாவது மஞ்சள் அட்டை....

nambi
11-07-2010, 06:54 PM
பொம்மல் நெதர்லாந்து 3 வது மஞ்சள் அட்டை....

ராமோஸ ஸ்பெயின் 4 வது மஞ்சள் அட்டை.... அரைமணி நேர ஆட்டத்திற்குள் அதிகப்படியான மஞ்சள் அட்டைகள்...

nambi
11-07-2010, 06:59 PM
டி ஜொங்க் நெதர்லாந்து 5 வது மஞ்சள் அட்டை....

ஓவியன்
11-07-2010, 07:04 PM
டி ஜொங்க் நெதர்லாந்து 5 வது மஞ்சள் அட்டை....

இந்த தவறுக்கு மஞ்சள் அட்டை போதுமானதாகத் தெரியவில்லையே, கிட்டத்தட்ட வீரரின் நெஞ்சினை நோக்கிய உதை அது... :eek:

nambi
11-07-2010, 07:31 PM
ராபின் பெர்சி (நெதர்லாந்து), புயோல் (ஸ்பெயின்) . பொம்மல் (நெதர்லாந்து), ராமோஸ (ஸ்பெயின்), டி ஜொங்க் (நெதர்லாந்து)....அடுத்த 45 நிமிட விளையாட்டில் எச்சரிக்கையுடன் விளையாடக்கூடிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்....இல்லையேல் வெளியேறக்கூடிய நிலை ஏற்படும்...

nambi
11-07-2010, 07:39 PM
1994 க்கு பிறகு இறுதி ஆட்டத்தில் இலக்கு அடிக்காத நிலை இன்று வரை ஏற்படவில்லை...அன்று இத்தாலி, பிரேசில் கூடுதல் நேரம் கொடுக்கப்பட்டும் இலக்கு எதுவும் அடிக்கவில்லை...பெனால்டியில் வெற்றிபெற்றது தென்அமெரிக்க நாடான பிரேசில்...அதற்கு பிறகு இன்று.....?

nambi
11-07-2010, 07:42 PM
புரோங்கஸ்ட் நெதர்லாந்து அணித்தலைவர் மஞ்சள் அட்டை....

nambi
11-07-2010, 07:44 PM
ஹைட்டிங்கா நெதர்லாந்து மஞ்சள் அட்டை....

ஓவியன்
11-07-2010, 07:45 PM
இலக்கு ஏதும் கிடைக்காத நிலையில் மஞ்சள் அட்டை மட்டும் தாராளமாகக் கிடைக்கின்றது...:D

nambi
11-07-2010, 07:52 PM
1966 இல்.... இங்கிலாந்துக்கு பிறகு இதே வண்ண ஆடையுடன் இறுதியாட்டத்திற்குள் நுழைந்த ஒரே அணி ஸ்பெயின் மட்டும்தான்....

nambi
11-07-2010, 08:12 PM
ராபென் நெதர்லாந்து 9 வது மஞ்சள் அட்டை....நெதர்லாந்து மொத்தம் 6 மஞ்சள் அட்டைகள்...

nambi
11-07-2010, 08:22 PM
வழக்கமான ஆட்ட நேரம் முடிந்தது....கூடுதல் நேர வாய்ப்பு தொடர்கிறது....

nambi
11-07-2010, 08:42 PM
முதல் கூடுதல் நேரம் (15 நிமிடங்கள்) இலக்கேதுமின்றி முடிந்தது...2 வது கூடுதல் நேரம் தொடர்கிறது....

nambi
11-07-2010, 08:49 PM
ஹைட்டிங்கா நெதர்லாந்து 2 வது மஞ்சள் அட்டை தொடர்ந்து சிவப்பு வெளியேற்றம்...

nambi
11-07-2010, 08:51 PM
வாண்டர் வெய்ல் நெதர்லாந்து மஞ்சள் அட்டை.....

nambi
11-07-2010, 08:56 PM
அபாரம் இலக்கு ஸ்பெயின் முதல் முறையாக கோப்பையை வென்றது......

nambi
11-07-2010, 08:58 PM
அண்டரஸ் இனியஸ்தா ஸ்பெயின் வீரர் அபாரமான இலக்கு! நெதர்லாந்துக்கு எதிராக....முடிவுக்கு வந்தது உலக கோப்பை.......

ஸ்பெயின் 2010 உலக கால்பந்து சாம்பியன்......

nambi
11-07-2010, 09:10 PM
http://www.fifa.com/imgml/tournament/worldcup2010/players/xl/183857.png

ஆட்டநாயகன்.... ஆன்டராஸ் இனியெஸ்தா

nambi
11-07-2010, 09:14 PM
ஸ்பானிஷ் மக்கள் மகிழ்ச்சியில் திளைக்கின்றனர்...டச்சு மக்களின் (நெதர்லாந்து) கண்ணீர் துளிகளுக்கிடையே!....

nambi
11-07-2010, 09:24 PM
இந்த உலக கோப்பையில் மொத்தம் 63 ஆட்டங்கள் நடைபெற்றன.

அமரன்
11-07-2010, 10:00 PM
ஸ்பெயின் கோலை அடித்ததும் ஓஃவ் சைட் என்றேன். பாத்துக் கொண்டிருந்த மற்ற ஐந்து நண்பர்களும் இல்லவே இல்லை என்றார்கள். ரீ பிளேயைப் பாத்து விட்டு

ஓஃவ் இல் நின்று மேலே ஏறி பந்துடன் இறங்கி விதிமீறாமல் அடித்த கோல் என்றார்கள். எதுவுமே பேசவில்லை நான். சற்றைக்கு எல்லாம் கொமன்றியில் அடிக்கடி ஓஃப் சைட் கோல் என்று சொல்லிக் கொண்டே இருந்தார்கள்.

ஒரு கட்டத்தில் டேவிட் வில்லா வெளியே எடுக்கப்பட்டு பதில் வீரர் அனுப்பப்பட்ட பொது அதிர்ந்தேன்.

நெஞ்சில் உதைத்தவருக்கு சிவப்பு அட்டை காட்டாத போதும்.

வாழ்த்துகள் ஸ்பெயினுக்கு

அன்புரசிகன்
12-07-2010, 01:01 AM
ஒரு விடையம் சொன்னார்கள். இந்த முறை எவருடனும் தோல்வியடையான அணியாக நியூசிலாந்து திகழ்கிறதாம். :D

மதி
12-07-2010, 04:59 AM
ஸ்பெயின் முதல்முறை கோப்பையை வென்றுள்ளது.. வாழ்த்துக்கள்..

ஓவியன்
12-07-2010, 05:32 AM
எல்லாம்சரி, ஆனால் எனக்கு ஒரு விடயம் மட்டும் புரியலை....
அதாவது ஸ்பெயின் வெற்றி பெற்ற பின் ஸ்பானிஷ் அணியின் தலைவர் `ஐகர் காசிலாஸ்` தாரை, தாரையாக கண்ணீர் விட்டு அழுதது ஏன்...??? :D

ஓவியன்
12-07-2010, 05:37 AM
ஒரு கட்டத்தில் டேவிட் வில்லா வெளியே எடுக்கப்பட்டு பதில் வீரர் அனுப்பப்பட்ட பொது அதிர்ந்தேன்.

உள்ளே வந்தது`ரோரஸ்`தானே, பாவம் அவருக்கும் இறுதிப் போட்டியில விளையாட ஆசை இருக்கும் தானே :cool:, மனுஷன் இப்பத்தான் காயங்களில் இருந்து குணமாகிட்டு இருக்கிறார்...;):

மதி
12-07-2010, 05:38 AM
எல்லாம்சரி, ஆனால் எனக்கு ஒரு விடயம் மட்டும் புரியலை....
அதாவது ஸ்பெயின் வெற்றி பெற்ற பின் ஸ்பானிஷ் அணியின் தலைவர் `ஐகர் காசிலாஸ்` தாரை, தாரையாக கண்ணீர் விட்டு அழுதது ஏன்...??? :D
ஆனந்த கண்ணீர்...அது:D:D

ஓவியன்
12-07-2010, 05:48 AM
ஒரு விடையம் சொன்னார்கள். இந்த முறை எவருடனும் தோல்வியடையான அணியாக நியூசிலாந்து திகழ்கிறதாம். :D

ஆமாம், நாட்டுக்கு திரும்பியுள்ள நியூசிலாந்து வீரர்கள் ``நாம மோசமா ஆடுவோம்னு நினைச்சா, பெரிய பெரிய உதை பந்து விளையாட்டு வீரர்களென நாம நினைச்சிட்டு இருக்கிறவங்க எல்லாம் நம்ம விட கேவலாமாக விளையாடுறாங்கனு``பத்திரிகைகளுக்கு பேட்டி வேற கொடுக்கிறாங்களாம்... :D:D

மச்சான்
12-07-2010, 05:55 AM
ஜெயிச்சது ஆக்டோபஸ்சா....... கிளியா....?:smilie_abcfra:

ஓவியன்
12-07-2010, 06:04 AM
ஜெயிச்சது ஆக்டோபஸ்சா....... கிளியா....?:smilie_abcfra:

இன்னைக்கு சிங்கபூர் சரங்கூனில `கிளி(மணி) பிரியாணி` ஸ்பெஸல்னு கேள்வி... :D:D:D

சிவா.ஜி
12-07-2010, 06:19 AM
மதுரை இந்தியாவின் தலைநகரம் என்று யாரோ எழுதியது மாதிரி, இல்லையா?

இப்ப மதுரையை இந்தியாவின் தலைநகரம்ன்னு சொல்லலாமா....ஆரென்...ஹி...ஹி...

ஆக்டோபஸ் சொல்றதுக்கு முன்னாடியே நாங்க சொல்லிட்டமில்ல...ஸ்பெயின்தான்னு...

ஓவியன்
12-07-2010, 07:03 AM
ஆக்டோபஸ் சொல்றதுக்கு முன்னாடியே நாங்க சொல்லிட்டமில்ல...ஸ்பெயின்தான்னு...

:icon_b::icon_b::icon_b::icon_b:

aren
12-07-2010, 09:21 AM
இப்ப மதுரையை இந்தியாவின் தலைநகரம்ன்னு சொல்லலாமா....ஆரென்...ஹி...ஹி...

ஆக்டோபஸ் சொல்றதுக்கு முன்னாடியே நாங்க சொல்லிட்டமில்ல...ஸ்பெயின்தான்னு...

நடுவரும் ஸ்பியின் கூட சேர்ந்து மொத்தம் 12 பேர் ஸ்பெயினுக்கு ஆடினா ஜெயிப்பது சுலபம்தானே.

ஒரு பெனால்டி ஸ்டிரோக் ஹாலந்திற்கு கொடுத்திருக்கவேண்டும். நடுவர் சொதப்பிவிட்டார்.

சிவா.ஜி
12-07-2010, 09:28 AM
எப்படியோ ஜெயிச்சிட்டாங்க...!!!

ஆனா ரெண்டு டீமுமே ரொம்ப நல்லா விளையாடினாங்க...ரொம்ப தள்ளுமுள்ளும் நடந்தது. நடுவருக்கு மஞ்சள் அட்டைக் குடுக்கறதுக்கே நேரம் சரியா இருந்தது.....

ஓவியன்
12-07-2010, 09:28 AM
நடுவரும் ஸ்பியின் கூட சேர்ந்து மொத்தம் 12 பேர் ஸ்பெயினுக்கு ஆடினா ஜெயிப்பது சுலபம்தானே.

நடுவர் சொதப்பியது உண்மைதான் அண்ணா, ஆனால் அந்த சொதப்பல்களால் பாதிக்கப்பட்டது நெதர்லாந்து மாத்திரமல்ல, ஸ்பெயினும் கூடத்தான்.....

போட்டியின் ஆரம்பத்தில் நெதர்லாந்து வீரர் ஒருவர் காலினால் ஸ்பெயின் வீரரின் நெஞ்சில் உதைத்த உதைக்கு மஞ்சள் அட்டைக்குப் பதில் சிவப்பு அட்டை காட்டியிருந்தால் அப்போதே போட்டியின் நிலை மாறியிருக்க சந்தர்பம் கிடைத்திருக்குமே...

aren
12-07-2010, 09:30 AM
எப்படியோ ஜெயிச்சிட்டாங்க...!!!

ஆனா ரெண்டு டீமுமே ரொம்ப நல்லா விளையாடினாங்க...ரொம்ப தள்ளுமுள்ளும் நடந்தது. நடுவருக்கு மஞ்சள் அட்டைக் குடுக்கறதுக்கே நேரம் சரியா இருந்தது.....

எப்படியோ உங்க மதுரைக்காரரைப் (அதாங்க நடுவர்) பிடித்து மதுரை இந்தியாவின் தலைநகரம் என்று சொல்ல வைத்துவிட்டீர்கள்.

நான் நெதர்லாந்து பிக்சர்லையே இல்லாதபோது அவர்கள் ஜெயிப்பார்கள் என்று சொன்னேன், அவர்கள் ஜெயிக்க முடியவில்லையென்றாலும் இதுவரைக்குமாவது வந்து சிறப்பாக ஆடினார்களே, அதுவே எனக்குப் போதும்.

யாரோ ஜோசியர் ஆகலாமா என்று யோசிப்பதாகச் சொன்னாரே, அவர் எங்கே இங்கே காணவேயில்லை, ஓடிட்டாரா (அதாங்க ஷில்பி).

ஓவியன்
12-07-2010, 09:33 AM
நான் நெதர்லாந்து பிக்சர்லையே இல்லாதபோது அவர்கள் ஜெயிப்பார்கள் என்று சொன்னேன்.

இப்பத்தானே சிங்கபூர் கிளி மணிக்கும் உங்களுக்குமிடையே உள்ள தொடர்பு நமக்கெல்லாம் புரியுது...??? :D:D

சிவா.ஜி
12-07-2010, 09:40 AM
ஹா...ஹா...ஹா....
ஆரென் தான் அந்தக் கிளியை வளர்த்தவரோ....!!!

சிவா.ஜி
12-07-2010, 09:41 AM
ஆமாம் ஆரென்...நெதர்லாந்து மிகச் சிறப்பாகவே விளையடினார்கள். இறுதிப் போட்டிவரை வந்ததே அவர்கள் திறமையால்தான்.

Mano.G.
12-07-2010, 09:42 AM
எனக்கென்னமோ இங்கு கால்பந்து
சூதாட்டகாரர்களின் ஈடுபாடு இருக்குமோன்னு
சந்தேகமா இருக்கு,நெதர்லாந்து 2 ஓப்பன் கோலை
அநியாயமாய் தவறவிட்டவரை என்ன சொல்ல

ஓவியன்
12-07-2010, 09:44 AM
ஹா...ஹா...ஹா....
ஆரென் தான் அந்தக் கிளியை வளர்த்தவரோ....!!!


Join Date: 01 Apr 2003
Location: Singapore

நெதர்லாந்து...

கிளி மணி ப்ரம் சிங்கபூர்...


இதுக்கு மேலெ நான் என்ன சொல்ல....??? :icon_rollout::D:D

aren
12-07-2010, 10:50 AM
நெதர்லாந்து...

கிளி மணி ப்ரம் சிங்கபூர்...


இதுக்கு மேலெ நான் என்ன சொல்ல....??? :icon_rollout::D:D

எங்கள் வீட்டில் ஜாக்கி இருக்கும்போது மணி வரமுடியுமா (நம்ம தலை மணியா அவர்களை சொல்லவில்லை, அவரை இங்கே இழுக்கவேண்டாம் என்று தயவுசெய்து கேட்டுக்கொள்கிறேன்), சான்சே இல்லை.

சிவா.ஜி
12-07-2010, 12:13 PM
மணி(கிளி) வெளியிலருந்து வந்தாத்தானேங்க பிரச்சனை...ஜாக்கியும், மணியும் சேர்ந்தே வளர்ந்திருந்தா...ஏது பிரச்சனை....ஹி...ஹி...

(உங்களைக் கிளிக்கு சொந்தக்காரராய் ஆக்கியே தீரனும்...)

அறிஞர்
12-07-2010, 04:40 PM
ஸ்பெயினுக்கு வாழ்த்துக்கள்... ஸ்பெயின் வெற்றி பெறும் என கணித்த இருவருக்கு தலா 500 இ-காசு அன்பளிப்பு.

ஓவியன்
13-07-2010, 08:50 AM
எங்கள் வீட்டில் ஜாக்கி இருக்கும்போது மணி வரமுடியுமா ?

ஜாக்கிதானே இருக்கு, ஏதோ `ஜாக்கிசான்`இருக்கிற மாதிரிலே பயமுறுத்துறீங்க... :sauer028:

ஜாக்கிதான் எல்லோருடனும் இலகுவில் ப்ரண்ட் ஆயிடுமென்பது நமக்குத் தெரியாதா என்ன....??? :D:D:lachen001:

(உங்களைக் கிளிக்கு சொந்தக்காரராய் ஆக்கியே தீரனும், ஹீ, ஹீ...:icon_b:)

________________________________________________________________________________________________________________


http://2.bp.blogspot.com/_NWU1yvNYa2Y/TDv4SlaKtRI/AAAAAAAAKso/vG82mRqJJZY/s1600/cartoon.jpg

ஓவியன்
31-07-2010, 05:24 AM
எத்தனை நாள் ஆனாலும், தியரி ஹென்றியை ஐரீஸ் காரங்க விட மாட்டாங்க போலிருக்கே...!! :cool:

http://www.youtube.com/watch?v=GxprvrFQpiE

:lachen001: :lachen001: :lachen001: :lachen001: :D :D :D :icon_rollout: