PDA

View Full Version : காப்பதற்கு!



சொ.ஞானசம்பந்தன்
09-06-2010, 10:39 PM
“ஆபாச நூலொன்றைப் படித்தாய்” என்றீர்,
மெளனித்தேன் காப்பதற்கு உம்மகளை!
“மோதிரங் காணோம், திருடி” என்றீர்,
மெளனித்தேன் காப்பதற்கு உம்மகனை!
பாட்டிலைப் பார்த்ததால் “குடிகாரி” என்றீர்,
மெளனித்தேன் காப்பதற்கு உம்கணவரை!
அன்றொருநாள் அவரடியைத் தடுத்து விட்டேன்,
வலியினின்று காப்பதற்கு உம்உடம்பை!

என்னசெய்தும் உங்கொடுமை குறையக் காணோம்.
திருந்தாத பிறவிநீர்! தெளிந்து விட்டேன்.
மணவிலங்கை முறிப்பதுதான் தீர்வோ என்றன்
மனநிம் மதிதன்னைக் காப்பதற்கு?

nellai tamilan
09-06-2010, 11:55 PM
பெண்ணின் கொடுமைக்கு அழகான கவிதை.

பெண்ணை மதிக்க கற்றுக்கொடுக்கும் பாடம்

மனநிம்மதியை காக்க மணவிலங்கு உடைப்பதுதான் தீர்வோ?

nambi
10-06-2010, 12:29 AM
கவிதை வரிகள் அருமை! பகிர்வுக்கு நன்றி!
//பாட்டிலைப் பார்த்ததால் “குடிகாரி” என்றீர்,
மெளனித்தேன் காப்பதற்கு உம்கணவரை!//
இது யாரை குறிக்கிறது....? என்று புரியவில்லை.....

சொ.ஞானசம்பந்தன்
10-06-2010, 08:28 AM
பெண்ணின் கொடுமைக்கு அழகான கவிதை.

பெண்ணை மதிக்க கற்றுக்கொடுக்கும் பாடம்

மனநிம்மதியை காக்க மணவிலங்கு உடைப்பதுதான் தீர்வோ?

பாராட்டுக்கு மிக்க நன்றி.

சொ.ஞானசம்பந்தன்
10-06-2010, 08:31 AM
கவிதை வரிகள் அருமை! பகிர்வுக்கு நன்றி!
//பாட்டிலைப் பார்த்ததால் “குடிகாரி” என்றீர்,
மெளனித்தேன் காப்பதற்கு உம்கணவரை!//
இது யாரை குறிக்கிறது....? என்று புரியவில்லை.....

பின்னூட்டத்திற்கு நன்றி. மாமனாரைக் காப்பதற்குக் குடிகாரி பட்டத்தை மருமகள் ஏற்றாள்.

மதி
10-06-2010, 08:36 AM
மாமியார் மருமகளை இவ்வளவு கொடுமைப்படுத்துவாளா?? கவிதை நன்று.

சொ.ஞானசம்பந்தன்
10-06-2010, 08:52 AM
மாமியார் மருமகளை இவ்வளவு கொடுமைப்படுத்துவாளா?? கவிதை நன்று.

பாராட்டியதற்கு மிக்க நன்றி. கொடிய மாமியார்கள் இன்னும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.

சிவா.ஜி
10-06-2010, 09:25 AM
கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்டதுதான்....இருந்தாலும்....கொடுமைகளை அனுபவித்துக்கொண்டு கொத்தடிமையாய் இருப்பதிலும் மேல்...சுதந்திரம் தேடிப் பிரிவது என்று சொன்ன வரிகள் நன்று.

வாழ்த்துக்கள் சொ.ஞா. அவர்களே.

அமரன்
10-06-2010, 09:48 PM
தாலிக்கயிறு
இழுத்தல் போட்டி..
எவருக்கும்
இல்லை வெற்றி ...

கவிதை ஓட்டத்தின் படி
கணவன் ஆதரவு உள்ளதுதானே...

பிறகேன் விபரீத எண்ணம்..

பாராட்டுகள் அய்யா.

govindh
10-06-2010, 09:54 PM
கொடுமைக்கு
சாட்டையடி கொடுக்கிறீர்கள்....
பாராட்டுக்கள்....

சொ.ஞானசம்பந்தன்
11-06-2010, 05:32 AM
தாலிக்கயிறு
இழுத்தல் போட்டி..
எவருக்கும்
இல்லை வெற்றி ...

கவிதை ஓட்டத்தின் படி
கணவன் ஆதரவு உள்ளதுதானே...

பிறகேன் விபரீத எண்ணம்..

பாராட்டுகள் அய்யா.

பாராட்டுக்கு மிக்க நன்றி. கணவனின் ஆதரவு அம்மாவின் அதிகாரத்தின் முன் பலவீனமாகிவிடுகிறது.

சொ.ஞானசம்பந்தன்
11-06-2010, 05:38 AM
பாராட்டியதற்கு அகமார்ந்த நன்றி.
சொ.ஞா.

அக்னி
11-06-2010, 06:59 AM
இங்கு மணவிலக்குத் தேவையில்லை,
தேவை மனைமாற்றமே...

புகுந்தவீட்டிலிருந்து
புதிதாய் வீட்டிற்குச்
செல்லவேண்டிய தருணம்...

முன்னாள் மருமகள்களுக்கும் இந்நாள் மருமகள்களுக்குமிடையேயான பனிப்போர், ஏனெனப் புரியாத ஓர் புதிர்தான்...

சிவா.ஜி சொன்னதைப்போல சற்றே மிகைப்படுத்தல் என்றாலும்,
இதைவிடக்கொடுமைகளும் நம் சமூகங்களில் நிகழ்ந்திருப்பதால்,
அக்கொடுமைகளின் ஆரம்பம் இம்மிகைப்படுத்தல் எனலாம்.

‘நறுக்’ கவிதை.
பாராட்டு சொ.ஞா. அவர்களே...

gans5001
11-06-2010, 10:43 AM
சில வரிகளில் மிக அழுத்தமாக கருத்தை சொல்லியிருக்கீறீர்கள். வாழ்த்துக்கள்

சொ.ஞானசம்பந்தன்
12-06-2010, 12:02 PM
இங்கு மணவிலக்குத் தேவையில்லை,
தேவை மனைமாற்றமே...

புகுந்தவீட்டிலிருந்து
புதிதாய் வீட்டிற்குச்
செல்லவேண்டிய தருணம்...

முன்னாள் மருமகள்களுக்கும் இந்நாள் மருமகள்களுக்குமிடையேயான பனிப்போர், ஏனெனப் புரியாத ஓர் புதிர்தான்...

சிவா.ஜி சொன்னதைப்போல சற்றே மிகைப்படுத்தல் என்றாலும்,
இதைவிடக்கொடுமைகளும் நம் சமூகங்களில் நிகழ்ந்திருப்பதால்,
அக்கொடுமைகளின் ஆரம்பம் இம்மிகைப்படுத்தல் எனலாம்.

‘நறுக்’ கவிதை.
பாராட்டு சொ.ஞா. அவர்களே...
சிக்கலுக்குப் புது தீர்வு சொல்லியிருக்கிறீர்கள். விமர்சனத்துக்கும் பாராட்டுக்கும் உளமார்ந்த நன்றி.

சொ.ஞானசம்பந்தன்
12-06-2010, 12:04 PM
சில வரிகளில் மிக அழுத்தமாக கருத்தை சொல்லியிருக்கீறீர்கள். வாழ்த்துக்கள்

பாராட்டியதற்கு அகமார்ந்த நன்றி.