PDA

View Full Version : குரங்கினால் ஏன் பேச முடிவது இல்லை?

govindh
05-06-2010, 12:38 PM
எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

குரங்கில் இருந்து பிறந்தவன் மனிதன். மனிதனால் பேச முடிகிறது. குரங்கினால் ஏன் பேச முடிவது இல்லை?

'பிறந்தவன்' இல்லை. பிரிந்தவன்!

வெறும் உறுமல்களோடு லட்சக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்த மனிதனிடம் பேச்சு எப்போது தோன்றியது? சுமார் 50 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். நான்கு கால் பிராணிகளைப்போல நடமாடிய மனிதன் எழுந்து நின்றான். பரிணாம வளர்ச்சி அவனுடைய முதுகெலும்பை நிமிர்த்தியது. அதற்குப் பிறகே மனிதன் மற்ற பொருட்களைச் சுட்டிக்காட்ட ஆரம்பித்தான். ('அதோ தண்ணீர்...', 'அதோ பழம்!') அதற்குப் பிறகே பேச்சு உருவானது. தொண்டையில் இருக்கும் வாய்ஸ்பாக்ஸ்கூட கொஞ்சமாக நகர்ந்து அட்ஜஸ்ட் செய்துகொண்டது என்று சொல்லப்படுகிறது. பேச்சு என்றால் என்ன?

டாக்டர் ரேமண்ட் டாலிஸ் என்கிற தத்துவப் பேராசிரியர் அற்புதமாக அதை விளக்குகிறார். அதாவது, 'மனிதனின் உள்ளே இருந்து வெளியே ஊதப்படும் வெறும் காற்றை (Exhaled Air) தொண்டையும், நாக்கும், உதடுகளும் மின்னல் வேகத்தில் இணைந்து 'பேச்சு' என்கிற ஒலிச் சிற்பமாகச் செதுக்குகின்றன!'

அதற்கு முன்பு விதவிதமாக உறுமுவதன் மூலம் தன் உணர்வுகளை மனிதன் தெரியப்படுத்தினான். பேச்சு உருவான பிறகும் அது தொடர்ந்தது. 'என்ன?' என்கிற ஒரே வார்த்தையை, ஏற்ற இறக்கங்களைப் பயன்படுத்தி, முகபாவங்களை வெளிப்படுத்தி, எத்தனை விதமாகச் சொல்ல முடியும் என்பதை 'பிராக்டீஸ்' செய்து பாருங்கள், புரியும். காற்றில்லாமல் பேச்சு இல்லை. தவிர, நீங்கள் மௌனமாக இருக்கும்போதும் உங்கள் மனசுக்குள் தொடர்ந்து பேசிக்கொண்டேதான் இருக்கிறீர்கள்!

நன்றி : ஆனந்த விகடன் - ஹாய் மதன் கேள்வி-பதில்

nambi
05-06-2010, 02:34 PM
பேச்சு எப்படி தோன்றியது என அறிய தந்த பயனுள்ள தகவல். பகிர்ந்தமைக்கு நன்றி!

அன்புரசிகன்
05-06-2010, 03:31 PM
யார் சொன்னது??? நம்ம ஓவியன் நன்றாக பேசுவாரே... :D :D :D அவர் இதை கேட்டால் எவ்வளவு வருத்தப்படுவார்...

nellai tamilan
05-06-2010, 04:54 PM
குரங்கில் இருந்து பிறந்தவன் மனிதன். மனிதனால் பேச முடிகிறது. குரங்கினால் ஏன் பேச முடிவது இல்லை?

குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என்பது வெறும் கற்பனை அதனை ஆராய்ச்சி என்று நம்மை ஏமாற்றுகிறார்கள்.

குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என்றால்?

1) குரங்கு இனம் முழுவதும் மாறிவிட்டதா? அல்லது
2) குரங்கு இனம் முழுவதும் அழிந்துவிட்டதா?
3) நேற்றுதான் இவர் குரங்கிலிருந்து மாறினார் என்று யாரையாவது கூறமுடியுமா?

இந்த கேள்விக்கு பதில் கிடைத்தால்தானே.. மனிதன் குரங்கிலிருந்து பிறந்தான் என்று கூற முடியும்?

காற்றில்லாமல் பேச்சு இல்லை.

காற்று இருப்பது நிஜம் என்று எல்லோராலும் நம்பப்படுகிறது. அப்படியெனில் குரங்கு ஏன் பேசவில்லை?

பாலகன்
05-06-2010, 05:01 PM
ஒருவேளை குரங்கு பள்ளிக்கூடம் போச்சுன்னா பேசியிருக்குமோ? :)

சிவா.ஜி
06-06-2010, 09:57 AM
குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என்பது வெறும் கற்பனை அதனை ஆராய்ச்சி என்று நம்மை ஏமாற்றுகிறார்கள்.

குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என்றால்?

1) குரங்கு இனம் முழுவதும் மாறிவிட்டதா? அல்லது
2) குரங்கு இனம் முழுவதும் அழிந்துவிட்டதா?
3) நேற்றுதான் இவர் குரங்கிலிருந்து மாறினார் என்று யாரையாவது கூறமுடியுமா?

இந்த கேள்விக்கு பதில் கிடைத்தால்தானே.. மனிதன் குரங்கிலிருந்து பிறந்தான் என்று கூற முடியும்?

நெல்லைத் தமிழன் அவர்களே....உங்கள் கேள்விக்கான விடை தாமரை பதில்களில் இருக்கிறது.
அதுதான் மதன் அவர்கள் தெளிவாய் சொல்லியிருக்கிறாரே...பிறந்தவன் அல்ல...பிரிந்தவன் என்று.
இந்த பதிலைப் (http://tamilmantram.com/vb/showthread.php?t=17359&page=25)படியுங்கள் தெளிவாகும்.

பா.ராஜேஷ்
06-06-2010, 11:21 AM
நல்ல தகவல்தான். பகிர்ந்தமைக்கு நன்றி கோவிந்த்.

tamizhan_chennai
06-06-2010, 11:26 AM
அருமையான தகவல் தந்த நண்பர் கோவிந்த் அவர்களுக்கு மிக்க நன்றி..

தாமரை
07-06-2010, 04:40 AM
பேசுவது என்பது மூன்று வகைப்படும்..

உணர்வுகளை வெளிப்படுத்துவது என்பது ஒருவகை..

ஒலிகளை எதிரொலிப்பது என்பது இன்னொரு வகை.

குரங்குகளுக்கு அவைகளின் பாஷை போதுமானதாக இருக்கிறது. அவையும் பேசுகின்றன.

குரங்குளுக்கு கீச், கொர், உர்... போன்ற சில சத்தங்கள் அவை எண்ணுவதை வெளிப்படுத்தப் போதும்.

இதை வாயும், தொண்டையும், நுரையீரலும் கொண்ட அனைத்து உயிரினங்களும் செய்கின்றன.

காகங்கள் போன்றவை மோர்ஸ் கோடில் எப்படி டிட் டாட் டிட் டிட் டாட் என பேசுகிறோமோ அப்படி.. ஒரு ஒலியையே பலவாறாக உப்யோகிக்கின்றன.

ஆனால் மனிதனுக்கு இவையெல்லாம் போதவில்லை. அவனுக்கு மனம் என்பது ஜஸ்ட் ஒரு ஹார்ட் டிஸ்காக இல்லாமல், மைக்ரோ பிராஸஸர் கொண்ட எக்ஸிகியூஸன் யூனிட்டாக இருக்கிறது. அதனால், மனதில் உண்டாகும் எண்ணங்கள் பல கோடிக் கணக்கில் உள்ளன.

எனவே மேலும் மேலும் புதிய ஒலிகள், வார்த்தைகள் போன்றவற்றை உண்டாக்க வேண்டிய அவசியம் உண்டாகிறது..

இதனால்தான் மனிதனின் மொழி மிகவும் வளர்ச்சி அடைந்தது...

ஆப்பிள் என்று சொன்னால்தான் உணவு கிடைக்கும் என்றால் குரங்குகள் ஆப்பிள் எனச் சொல்லக் கற்றுக் கொண்டுவிடும்...

வேணும்னா முயற்சி செய்து பாருங்க.... ஹி ஹி

nellai tamilan
07-06-2010, 04:45 PM
குரங்குகளுக்கு அவைகளின் பாஷை போதுமானதாக இருக்கிறது. அவையும் பேசுகின்றன.

ஆக... குரங்குகள் வளர்ச்சி அடையவேண்டிய அவசியம் இல்லை பிரியவேண்டிய அவசியமும் இல்லை அப்படித்தானே?
அதாவது வளர்ச்சி அடையாமலே அல்லது மனிதனாக பிரியாமலே அவைகள் வாழ்ந்துவிட முடியும் என்றால்.. ஏன் அவைகள் மனிதன் என்ற வளர்ச்சியை அடைய முற்படவேண்டும்.

இதையேத்தான் நீங்களும் கூறியிருக்கிறீர்கள் நண்பா..
(என் எழுத்து சுமையை குறைத்தமைக்கு நன்றி)

ஆனால் மனிதனுக்கு இவையெல்லாம் போதவில்லை.

ஆப்பிள் என்று சொன்னால்தான் உணவு கிடைக்கும் என்றால் குரங்குகள் ஆப்பிள் எனச் சொல்லக் கற்றுக் கொண்டுவிடும்...
வேணும்னா முயற்சி செய்து பாருங்க.... ஹி ஹி
நான் குழந்தையாய் பிறந்த மனிதன். ஆப்பிள் என்று சொல்லத்தேவையில்லை.
இது ஆப்பிள்தான் என்று உணரவும் முடியும்
மனிதன்தான் முயற்சி செய்யச்சொல்கிறான் என்று புரியவும் முடியும்
காரணம்
எனக்கு பகுத்தறிவு இருக்கிறது

தாமரை
08-06-2010, 01:47 AM
ஆக... குரங்குகள் வளர்ச்சி அடையவேண்டிய அவசியம் இல்லை பிரியவேண்டிய அவசியமும் இல்லை அப்படித்தானே?
அதாவது வளர்ச்சி அடையாமலே அல்லது மனிதனாக பிரியாமலே அவைகள் வாழ்ந்துவிட முடியும் என்றால்.. ஏன் அவைகள் மனிதன் என்ற வளர்ச்சியை அடைய முற்படவேண்டும்.

இதையேத்தான் நீங்களும் கூறியிருக்கிறீர்கள் நண்பா..
(என் எழுத்து சுமையை குறைத்தமைக்கு நன்றி)

நான் குழந்தையாய் பிறந்த மனிதன். ஆப்பிள் என்று சொல்லத்தேவையில்லை.
இது ஆப்பிள்தான் என்று உணரவும் முடியும்
மனிதன்தான் முயற்சி செய்யச்சொல்கிறான் என்று புரியவும் முடியும்
காரணம்
எனக்கு பகுத்தறிவு இருக்கிறது

அத்தனை குரங்குகளும் ஒரேடியா மனுஷனா மாறாத காரணம் இதுதாங்க அப்பனே.. நீங்க பரிணாம வளர்ச்சியை புரிந்து கொண்டதை வச்சிப் பார்த்தா... மனுஷன் மட்டும்தான் உலகத்தில் இருக்கணும், அப்படி இல்லைதானே..

மீட்டோகாண்ட்ரியல் என்ற ஒரு ஜீன் எப்படியோ சில குரங்குகளின் ஜீன் அமைப்பில் ஜீன் மாற்றத்தால் உண்டானதால், அதன் வழி மனித இனம் உண்டானது... மற்ற குரங்குகள் எல்லாம் குரங்குகளாக இருக்க,இவைகள் மனிதர்களாக மாறின..

சர்க்கஸில் விலங்குகளை எப்படி பழக்கினாங்களாம்? யோசிச்சுப் பாருங்க.. நாய்களுக்கு கூட கம், கோ, சிட், ஸ்டே போல சில வார்த்தைகளுக்கு கீழ் படிய கற்றுக் கொடுக்கிறோமே எப்படி?

சில கிளிகள் மைனாக்கள் குட்மார்னிங், டெலிஃபோன் மணி ஒலி.. இப்படி பலவற்றைச் சொல்ல யார்கிட்ட கத்துகிச்சி?

மனிதன் கற்றுக் கொள்ள மட்டும் அல்ல.. கற்றுக் கொடுக்கவும் கற்றவன் ஆவான்.

அதைப் புரிஞ்சிக்கலையே,,,:lachen001::lachen001::lachen001:

சொ.ஞானசம்பந்தன்
08-06-2010, 04:54 AM
எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

குரங்கில் இருந்து பிறந்தவன் மனிதன். மனிதனால் பேச முடிகிறது. குரங்கினால் ஏன் பேச முடிவது இல்லை?

'பிறந்தவன்' இல்லை. பிரிந்தவன்!

வெறும் உறுமல்களோடு லட்சக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்த மனிதனிடம் பேச்சு எப்போது தோன்றியது? சுமார் 50 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். நான்கு கால் பிராணிகளைப்போல நடமாடிய மனிதன் எழுந்து நின்றான். பரிணாம வளர்ச்சி அவனுடைய முதுகெலும்பை நிமிர்த்தியது. அதற்குப் பிறகே மனிதன் மற்ற பொருட்களைச் சுட்டிக்காட்ட ஆரம்பித்தான். ('அதோ தண்ணீர்...', 'அதோ பழம்!') அதற்குப் பிறகே பேச்சு உருவானது. தொண்டையில் இருக்கும் வாய்ஸ்பாக்ஸ்கூட கொஞ்சமாக நகர்ந்து அட்ஜஸ்ட் செய்துகொண்டது என்று சொல்லப்படுகிறது. பேச்சு என்றால் என்ன?

டாக்டர் ரேமண்ட் டாலிஸ் என்கிற தத்துவப் பேராசிரியர் அற்புதமாக அதை விளக்குகிறார். அதாவது, 'மனிதனின் உள்ளே இருந்து வெளியே ஊதப்படும் வெறும் காற்றை (Exhaled Air) தொண்டையும், நாக்கும், உதடுகளும் மின்னல் வேகத்தில் இணைந்து 'பேச்சு' என்கிற ஒலிச் சிற்பமாகச் செதுக்குகின்றன!'

அதற்கு முன்பு விதவிதமாக உறுமுவதன் மூலம் தன் உணர்வுகளை மனிதன் தெரியப்படுத்தினான். பேச்சு உருவான பிறகும் அது தொடர்ந்தது. 'என்ன?' என்கிற ஒரே வார்த்தையை, ஏற்ற இறக்கங்களைப் பயன்படுத்தி, முகபாவங்களை வெளிப்படுத்தி, எத்தனை விதமாகச் சொல்ல முடியும் என்பதை 'பிராக்டீஸ்' செய்து பாருங்கள், புரியும். காற்றில்லாமல் பேச்சு இல்லை. தவிர, நீங்கள் மௌனமாக இருக்கும்போதும் உங்கள் மனசுக்குள் தொடர்ந்து பேசிக்கொண்டேதான் இருக்கிறீர்கள்!

நன்றி : ஆனந்த விகடன் - ஹாய் மதன் கேள்வி-பதில்
பகிர்வுக்கு நன்றி.

sunson
09-06-2010, 02:50 PM
நல்ல தகவல் பகிர்வு,நல்ல விவாதம், ஆரோக்கியமான கலந்துரையாடல்...அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

பாரதி
09-06-2010, 03:20 PM
குரங்குகளோ மற்ற விலங்குகளோ பேசுவதை நாம் இன்னும் அறியாமல் இருக்கிறோமோ..? அல்லது நமக்கு புரியாமல் இருக்கிறதா?