PDA

View Full Version : மன்ற மேம்படுத்தலுக்கு ஆலோசனை வழங்குங்கள்.அமரன்
03-06-2010, 05:37 PM
அன்பு சொந்தங்களே!

மன்றத்தின் தோற்றம், பொலிவு, இன்னபிற என மாற்றங்களைக் கொண்டு வர நினைக்கிறோம்.

என்ன மாதிரியான மாற்றங்கள் தேவை என்பதில் உங்கள் ஆலோசனைகளையும் இங்கே தாருங்கள்.

மன்றத்துக்குப் புதிய பெரிய பேனர்,
தலையில் இருக்கும் வெளியை நிரப்ப படங்கள் என உங்கள் கையெண்ணங்களையும் கொடுங்கள் மக்களே்!நன்றி!

பா.ராஜேஷ்
03-06-2010, 05:50 PM
இதோ எனக்கு உதித்தவை..

1 . மன்றத்தில் உலவும் போது, சில சமையம் மெதுவான இணையத்தின் வேகத்தின் பொருட்டு என்னுடைய சில பதிவுகள் இருமுறை பதிவாகி உள்ளன. இவ்வாறான பதிவை தடுக்க குறைந்த பட்ச வினாடி அளவு கோளோடு, அந்த நபரின் கடைசி பதிவையும் சரிபார்த்து பின்னர் பதிவை அனுமதிக்கலாமே!

2 . தளத்தின் முகப்பு பக்கத்தில், அந்த லாகின் செய்த நபர் இது வரை எத்தனை பதிவுகள் செய்துள்ளார், கடசி 30 நாட்களில் எவ்வளவு செய்துள்ளார் என தெரிவித்தால், அவரவரும் முதல் 5 இடத்தில் பங்கு பெற மேலும் பதிவுகள் தொடரலாம் இல்லையா!

3 . நான் திரிகளை வெவ்வேறு டேப்களில் திறந்து படிக்கும் வழக்கம் உடையவன். சில சமையம் திறந்து வைத்து சிறுது நேரம் கழித்து படிக்க நேர்கிறது. அப்போது அந்த திரிக்கு பதில் பதிக்கையில் அதே போன்ற பதிவு ஏற்கனவே வேறொருவரால் பதியப் பட்டிருக்கிறது. இது போன்ற தருணங்களில் பதிவுக்கு முன், இந்த பக்கம் அப்டட் செய்ய பட்டிருக்கிறது என்று செய்தி வந்தால் அந்த அப்டட் செய்யப் பட்ட பதிவுகளையும் பார்த்து பதிவு செய்ய வசதியாய் இருக்குமே!

4 . என்னுடைய அபிமானத்தின் படி, உறுப்பினர்கள் அனைவரும் அனைத்து பகுதிகளின் புதிய திரிகளையும் படிப்பதாக தோன்றவில்லை. முகப்பு பக்கத்தில் தோன்றும் திரிகளை மட்டும் படித்து அவற்றிற்கே பின்னூட்டம் இடுகின்றனர் . அவ்வாறு இல்லாமல், முகப்பு பக்கத்திலேயே ஒவ்வொரு பகுதியிலுள்ள அன்றன்று பதிக்க பட்டவையின் பட்டியலை தெரிய படுத்தினால் (ajax பயன்படுத்தி), அனைவரும் அந்த திரிகளையும் படிக்க கூடும் அல்லவா !!!

இவை எனது எண்ணமே! எவ்வளவு சாத்தியம் என்று தெரியவில்லை!

aren
04-06-2010, 02:35 AM
ராஜேஷ் சொல்வது நல்ல ஐடியாவாகப்படுகிறது, ஆனால் இது எவ்வளவு சாத்தியம் என்று தெரியவில்லை. அவர் சொன்ன மூன்றாவது கருத்து சாத்தியமில்லை என்றே படுகிறது காரணம் நம்முடைய கணிணியை நாம் அப்டேட் செய்தாலே போதுமானது.

aren
04-06-2010, 02:37 AM
60 நாட்களுக்குள் ஒரு முறையாவது மன்றத்தில் பதிவு செய்திருக்கவேண்டும் என்ற விதியைக் கொண்டுவரலாம்.

ஒரு சிலர் ஒரு பதிவுகூட செய்யாமல் வெறுமனே மன்றம் வந்து கதைகளையும் கவிதைகளையும் படித்துவிட்டுச் சென்றுவிடுகிறார்கள். விமர்சனம்தான் ஒரு படைப்பாளனுக்கு மருந்து, அதை செய்யாமல் செல்வதால் எழுதும் ஒரு சிலருக்கும் எழுதவேண்டும் என்ற ஆசை போய்விடுகிறது.

சிவா.ஜி
04-06-2010, 07:16 AM
க்விக் ரிப்ளை பகுதியிலேயே...இன்னும் சில வசதிகளை இணைத்தால் நன்றாக இருக்கும். ஒவ்வொருமுறையும் போஸ்ட் ரிப்ளை அழுத்தி, அது திறக்கக் காத்திருக்க வேண்டியதாய் இருக்கிறது.

இயன்றவரை சில வசதிகளை க்விக் ரிப்ளையில் இணைக்க முடியுமா?

aren
04-06-2010, 07:21 AM
க்விக் ரிப்ளை பகுதியிலேயே...இன்னும் சில வசதிகளை இணைத்தால் நன்றாக இருக்கும். ஒவ்வொருமுறையும் போஸ்ட் ரிப்ளை அழுத்தி, அது திறக்கக் காத்திருக்க வேண்டியதாய் இருக்கிறது.

இயன்றவரை சில வசதிகளை க்விக் ரிப்ளையில் இணைக்க முடியுமா?

நான் க்விக் ரிப்ளையை மட்டுமே உபயோகிக்கிறேன். எதுக்கு போஸ்ட் ரிப்ளை பகுதியை உபயோகிக்கிறீர்கள் என்று தெரியவில்லை.

அக்னி
04-06-2010, 07:23 AM
draft வசதியை மீளக் கொண்டுவருவது அவசியமானதென நினைக்கின்றேன்.
தட்டச்சிவிட்டுப் பதிவிடால் வெளிச்செல்லும் நேரத்திலும், தட்டச்சிடுகையில் குறித்த நேரத்திற்கொருமுறையும் தானாகவே பதிவு செய்து கொள்ளும் வகையில் அவ்வசதியை இணைக்கச் சாத்தியப்பாடுகள் இருப்பின் மிகவும் உதவியாக இருக்கும்.

சிவா.ஜி
04-06-2010, 07:38 AM
நானும் க்விக் ரிப்ளைதான் உபயோகிக்கிறேன் அக்னி. சில வசதிகளுக்காக போஸ்ட் ரிப்ளைக்குப் போக வேண்டியுள்ளது. எழுத்துக்களை மையப்பகுதிக்கு கொண்டுவர, எழுத்தின் அளவைக் கூட்ட...இப்படி சில....

அக்னி
04-06-2010, 07:50 AM
அது கேட்டது ஆரென் ஜி, சிவா.ஜி...
சரி சரி பரவாயில்லை, விளக்கத்தை அவர்கிட்ட சேர்த்துடரேன்...

சிவா.ஜி
04-06-2010, 10:03 AM
ஓ....ஆரெனா....சரி..சரி...கூரியர் சர்வீஸுக்கு நன்றி அக்னி.

nellai tamilan
08-06-2010, 05:24 PM
நண்பர் ராஜேஷ் கூறியது அனைத்துமே தேவையாக இருக்கிறது குறிப்பாக நான்காவது மேம்படுத்துதல்.

எனது சிறிய ஆலோசனை
1) நாம் முன்பு பதிந்த பதிப்பை அல்லது பதிப்பின் திரியை முதல் பக்கத்திலேயே அதன் லிங்கை பெறுவது. (அதிகமான பதிப்பு எனில் சாத்தியம் இல்லை)

இது வெறும் சின்ன புள்ளதனமான ஆலோசனை என்று எண்ணிவிடாதீர்கள் நாங்கள்ளாம் டெடர் பார்த்த பத்து வீடு பத்திக்கும்

பாலகன்
08-06-2010, 05:59 PM
மன்றத்தில் நிர்வாகம் அல்லாத வாசகர்கள் சிறுகதை சவால்போட்டிகளை நடத்தி இணைய பண பரிசுகள் அளிக்க வழிவகுக்க முடியுமா?

ஏன்னா அது ரொம்ப சுவாரஸ்யமா இருக்கும்.... நண்பர்கள் வட்டம் பெரிதாகும், புதியவர்கள் நன்கு பழகிக்கொள்ளவும் மன்றத்தில் ஒரு பிடிப்பு ஏற்படவும் வழிவகுக்கும்.

சிறுகதைகள்
கவிதைகள்
படபோட்டிகள்
சிரிப்பு போட்டிகள்
தொடர் கதைகள்

என வாசகர்களாகிய நம்மில் ஒருவரால் நடத்தப்பட வேன்டும்.

praveen
09-06-2010, 06:27 AM
வனிகம் என்ற பாரத்திலே, உப பாரமாக நுகர்வோர் விழிப்புணர்வு என்ற பாரம் தேவை. இது நமக்குள் விழிப்புணர்ச்சி அல்லது ஒரு பொருள்/தயாரிப்பு நிறுவனம் பற்றி அறிந்து கொள்ள உதவும்.

சமீப காலமாக தங்கவேலு அவர்கள் பதிந்து வருகிறார். வாழ்த்துக்கள் நானும் முன்னர் நிறைய பதிக்க நினைத்தேன். ஆனால் அது சுயதம்பட்டமாக ஆகி விடுமோ என்று கூச்சப்பட்டு பதிக்காமல் இருந்திருக்கிறேன்.

தனி பாரமாக இருந்தால் அனைவரும் பதிக்கலாம். இதனால் அந்த பகுதி பார்ப்பவர் அனைவரும் பயன்பெறுவர்.

சிவா.ஜி
09-06-2010, 07:12 AM
நண்பர் பிரவீன் அவர்களின் ஆலோசனை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. அப்படியொரு தனிப்பிரிவு ஆரம்பிக்கப்பட்டால்..பலரும் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளலாம்.

கலையரசி
10-06-2010, 01:45 PM
"என்னுடைய அபிமானத்தின் படி, உறுப்பினர்கள் அனைவரும் அனைத்து பகுதிகளின் புதிய திரிகளையும் படிப்பதாக தோன்றவில்லை. முகப்பு பக்கத்தில் தோன்றும் திரிகளை மட்டும் படித்து அவற்றிற்கே பின்னூட்டம் இடுகின்றனர் . அவ்வாறு இல்லாமல், முகப்பு பக்கத்திலேயே ஒவ்வொரு பகுதியிலுள்ள அன்றன்று பதிக்க பட்டவையின் பட்டியலை தெரிய படுத்தினால் (ajax பயன்படுத்தி), அனைவரும் அந்த திரிகளையும் படிக்க கூடும் அல்லவா !!!" (பா.ராஜேஷ்)

ராஜேஷ் சொன்னதில் நானும் உடன்படுகிறேன். தமிழ் மன்றம் நுழைந்தவுடன் முகப்புப் பக்கத்தில் கண்ணில் படும் திரிகளை மட்டுமே நானும் படிக்கிறேன். எல்லாப் பகுதிகளுக்குள்ளும் நுழைந்து பார்க்க நேரம் இருப்பதில்லை. அல்லது பொறுமை இருப்பதில்லை.

எனவே ஒவ்வொரு மாதமும் மன்றத்தில் பதியப்பட்டுள்ள சிறந்த படைப்புக்களைச் சீர் தூக்கிப் பார்த்து அவற்றுள் சிறந்த படைப்புகளுக்கு (அது கவிதை, கதை, கட்டுரை எது வேண்டுமானாலும் இருக்கலாம்) அவற்றின் தகுதிக்கேற்ப ஸ்டார் அந்தஸ்து கொடுத்துக் கெளரவிக்கலாம்.
சிறந்த படைப்புகளை யார் வேண்டுமானாலும் பரிந்துரை செய்யலாம். பரிந்துரை செய்யப்படும் படைப்புக்களின் இணைப்புக் கொடுக்கப்பட வேண்டும்.
அந்த மாத முடிவில் பரிந்துரை செய்யப்படும் படைப்புகள் வாக்குக்கு விடப்பட்டு மன்ற உறுப்பினர்களைக் கவர்ந்த படைப்புகள் தேர்ந்தெடுக்கப்படவேண்டும்.
எனவே ஒவ்வொரு மாதமும் மனங்கவர் பதிவாளர் தேர்வு போலவே மனங்கவர் பதிவும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். முதல் மூன்று இடங்களைப் பெறும் படைப்புகளுக்கு மேலிருந்து 5,4,3 ஸ்டார் அந்தஸ்து கொடுக்கலாம்.
(தனிப்பட்ட முறையில் ஸ்டார் கொடுக்கும் வசதியை எடுத்து விடலாம்)
இவ்வாறு செய்யும் போது நல்ல படைப்புகளைப் பெரும்பாலோர் படிக்க ஏதுவாகும். பரிந்துரை செய்யப்படும் இந்தப் படைப்புக்களிலிருந்தே நந்தவனம் மின்னிதழுக்குத் தேவையானவற்றை எடுத்துக் கொள்ளலாம்.
ஜீன் மாத மனங்கவர் கவிதை
கட்டுரை
நகைச்சுவை
என்பது போல் மூன்று பிரிவாகவும் பிரித்துத் தேர்ந்தெடுக்கலாம்.
இது என் யோசனை. எந்தளவுக்குச் சாத்தியப்படும் எனத் தெரியவில்லை.
முடிந்தால் பரிசீலனை செய்யுங்கள்.

ஆதி
10-06-2010, 01:59 PM
கலையரசி அக்கா.. சிறந்த படைப்புகள் குறித்து லிங் கொடுக்கவாவது அதை கனிசமானவர் வாசித்திருக்க வேண்டும் அல்லவா..

ஒரு படைப்பு சிறந்ததா இல்லையா என்று நிர்வாக தீர்மானிப்பதில்லை என்பதை நீங்க அறிவீர்கள் தானே. எதையும் ஓட்டேடுப்பு விட்டே தீர்மானிக்கப்படுகிறது..

இப்படி செய்யலாம், ஒவ்வொரு மாதமும் மனங்கவர் பதிவாளர்களாக பரிந்துரைக்கப்படுகிறவர்களின் நல்ல படைப்புகளை பரிந்துரையாளர்கள் கொடுக்கலாம்.. இன்னொரு யோசனை இருக்கு, விவாதிச்சதும் தான் அதுக்கு சீக்கிரத்தில் நானே பிள்ளையார் சுழி போடுறேன்..

கலையரசி
10-06-2010, 02:12 PM

ஒவ்வொருவரும் ஒவ்வொரு பகுதியை விரும்பிப் படிக்கிறார்கள். சிலர் நகைச்சுவை துணுக்குகள், சிலர் கவிதைகள், சிலர் கதைகள், கட்டுரைகள் என்று குறிப்பிட்ட சில பகுதிகளைப் படிக்கிறார்கள். அவர்கள் படித்தவற்றுள் அவர்க்குப் பிடித்தமானவற்றைப் பரிந்துரை செய்யலாமே!

மனங்கவர் பதிவாளராகத் தேர்ந்தெடுக்கப்படும் அனைவருமே ப்டைப்புக்களைக் கொடுப்பதில்லை. எல்லாப் படைப்புக்களையும் படித்துப் பார்த்துச் சிறந்த பின்னூட்டமிடும் உறுப்பினர்களும் சில சமயம் மனங்கவர் பதிவாளராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்களே!

மன்றத்தில் சிறந்த கதை பதியும் உறுப்பினர்கள் கதைப் போட்டி வைத்தால் கலந்து கொள்வதில்லையே! எனவே தான் இங்கு பதியப்படும் சிறந்த பதிவுகள் எல்லாரது கவனத்தையும் பெற வேண்டும் என நான் சொல்கிறேன். என் ஆலோசனை தான் இது. கட்டாயம் அமல்படுத்த வேண்டும் என்பதில்லை.
வேண்டுமானால் மன்றத்தின் சிறந்த மனங்கவர் பதிவாளர்களாக ஏற்கெனவே தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், அவர்கள் படிப்பவற்றுள் சிறந்தனவற்றைப் பரிந்துரை செய்யலாம்.

ஆதி
10-06-2010, 02:18 PM
//மனங்கவர் பதிவாளராகத் தேர்ந்தெடுக்கப்படும் அனைவருமே ப்டைப்புக்களைக் கொடுப்பதில்லை. எல்லாப் படைப்புக்களையும் படித்துப் பார்த்துச் சிறந்த பின்னூட்டமிடும் உறுப்பினர்களும் சில சமயம் மனங்கவர் பதிவாளராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்களே//

ஆமாங்க அக்கா, இதை நானும் ஒரு இடத்தில் சொல்லிருக்கேன், ஆனால் படைக்கிறவர்களின் படைப்பை தரம் தானே..

இன்னொரு யோசனை தோணுது, பின்னூட்டம் மட்டுமே இட்டு சிறந்த மனங்கவர் பதிவாளரா தெரிவு செய்யப்படுகிறவர்கள், தங்களுக்கு சென்ற மாதத்தில் பிடித்த படைப்புக்களை மன்றவர்களுக்கு பரிந்துரைக்கலாம் தானே..

கலையரசி
10-06-2010, 02:21 PM

ஆமாம். இது நல்ல யோசனை ஆதன். ஏனென்றால் அவர்கள் தாம் பெரும்பாலான படைப்புகளைப் படிக்கிறார்கள்.

பா.ராஜேஷ்
10-06-2010, 05:49 PM
மனங்கவர் பதிவாளர் ஆவதிற்கு குறைந்தபட்ச பதிப்புகளை இலக்காய் வைக்கலாம். அதே போல், இன்னார் இன்னார் இந்த இந்த கதைகளை அல்லது படைப்புகளை வழங்கி உள்ளனர் என்று கூறுவதன் மூலமாய் வாக்களிப்பவருக்கு சிந்திக்க நேரம் கிடைக்குமே ...

மேலும், மன்ற கேலரியில் GIF file பதிவேற்றம் செய்த பின் அது அசைய மாட்டேன்கிறதே... என்னுடைய தவறான அணுகுமுறையா என தெரியவில்லை.. அந்த பிரச்னை இருந்தால் அதையும் சரி செய்யலாமே..

அமரன்
10-06-2010, 10:17 PM
பலபேரின் கருத்துகளைப் பார்க்கும் போது நிழல்படத்தை தொடர் வேண்டும் போலுள்ளதே..

மதி
11-06-2010, 02:10 AM
பலபேரின் கருத்துகளைப் பார்க்கும் போது நிழல்படத்தை தொடர் வேண்டும் போலுள்ளதே..
அதே அதே..:icon_b:

கலையரசி
12-06-2010, 03:48 PM
பலபேரின் கருத்துகளைப் பார்க்கும் போது நிழல்படத்தை தொடர் வேண்டும் போலுள்ளதே..

அது என்ன நிழல்படம்? புரியவில்லையே?

பாரதி
12-06-2010, 05:21 PM
அது என்ன நிழல்படம்? புரியவில்லையே?

மன்ற மலரும் நினைவுகள் பகுதியை புரட்டிப்பாருங்கள். ஒவ்வொருவரும் தங்கள் பாணியில் ஒவ்வொரு மாதம் வெளிவந்த படைப்புகளை அலசி இருப்பார்கள். அப்படைப்புகளுக்கு நிழற்படம் என மன்றத்தில் பெயர்.

கலையரசி
12-06-2010, 05:31 PM
மன்ற மலரும் நினைவுகள் பகுதியை புரட்டிப்பாருங்கள். ஒவ்வொருவரும் தங்கள் பாணியில் ஒவ்வொரு மாதம் வெளிவந்த படைப்புகளை அலசி இருப்பார்கள். அப்படைப்புகளுக்கு நிழற்படம் என மன்றத்தில் பெயர்.

அப்படியா? நிச்சயம் புரட்டிப் பார்க்கிறேன். தகவலுக்கு மிக்க நன்றி.

ரங்கராஜன்
16-06-2010, 02:52 PM
நல்ல திரி இது, மன்றத்திற்குள் நுழையும் போது இன்று நான் சில புது பகுதிகளை கண்டேன் சூப்பராக இருக்கிறது......... இதை ஆரம்பித்த அமரனுக்கும்,,,,,,,,,, ஆலோசனைகளை வழங்கி வரும் அனைவருக்கும் பாராட்டுகள்

பா.ராஜேஷ்
16-06-2010, 08:17 PM
மன்றத்தில் ஹிஸ்ட்ரி பகுதி ஏதும் உளதா.?? உ.தா. இதற்கு முன் நடந்த போட்டிகள் அதில் வெற்றி பெற்றவர்கள் பட்டிய பட்டியல் அறிய முடியுமா?

அமரன்
16-06-2010, 10:40 PM
வசதிகள் தொழில்நுட்பங்கள் தொடர்பான ஆலோசனைகளுடன் மட்டும் நின்றுவிடாது மன்றத்தின் தோற்றப் பொலிவிலும் கருத்துரையுங்கள் அன்பர்களே. எடுத்துக்கட்டாக மன்றத்தின் தலைப்பகுதியை மாற்ற நினைக்கிறோம். படங்களை வடிமைத்துத் தரலாமே..

அமரன்
16-06-2010, 10:58 PM
மன்றத்தில் ஹிஸ்ட்ரி பகுதி ஏதும் உளதா.?? உ.தா. இதற்கு முன் நடந்த போட்டிகள் அதில் வெற்றி பெற்றவர்கள் பட்டிய பட்டியல் அறிய முடியுமா?

மன்றத்தின் மேல்பட்டியில் இருக்கும் அவார்ட் வின்னசில் உள்ளது ராஜேஷ். மனங்கவர் பதிவாளர் பதிவேடு என்று ஒன்று மன்ற மலரும் பகுதியில் உள்ளது. அதைவிட ானைவரும் ஒத்துழைத்தால் மாதாந்த நிழல்படத்தொகுப்பைத் தொடர்ந்தும் வரலாறு படைக்கலாம்.

இங்கே பாருங்க ராஜேஷ்
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=23779

கலையரசி
27-06-2010, 02:25 PM
வசதிகள் தொழில்நுட்பங்கள் தொடர்பான ஆலோசனைகளுடன் மட்டும் நின்றுவிடாது மன்றத்தின் தோற்றப் பொலிவிலும் கருத்துரையுங்கள் அன்பர்களே. எடுத்துக்காட்டாக மன்றத்தின் தலைப்பகுதியை மாற்ற நினைக்கிறோம். படங்களை வடிமைத்துத் தரலாமே..

ஆலோசனை:1

மன்றத்தின் தலைப்பிலுள்ள காலி இடத்தில் மன்ற உட்பிரிவுகளைக் குறிக்கும் விதத்தில் முல்லை, மல்லி, சாமந்தி, தாமரை, குறிஞ்சி, கதம்பம்(பல மல்ர்களின் கலவை) மலர்களின் புகைப்படங்களை இணைக்கலாம். மலர்களின் வண்ணப்படங்கள் மன்றத்தின் தோற்றப் பொலிவை அதிகமாக்கும்.

2) தமிழில் திருக்குறளுக்கு அடுத்த படியாக சிலப்பதிகாரத்துக்கு முக்கிய இடமுண்டு. வள்ளுவர் சிலை இடது புறம் இருக்கிறது. எனவே கண்ணகி சிலையின் புகைப்படத்தைச் சிறிய அளவில் மன்றத்தின் வலக் கோடியில் வெளியிடலாம் என்பது என் எண்ணம்.

3) இது தமிழ் மன்றமாக இருப்பதால், முகப்பிலுள்ள ஆங்கில வார்த்தைகளுக்குப் பதிலாக (எ.கா:- welcome, User CP, ebooks, FAQ,
Gallery etc.) அதற்கிணையான தமிழ்ச் சொற்களைக் கண்டறிந்து சேர்க்கலாம்.

virumaandi
28-06-2010, 11:29 AM
நமது தளத்தின் யுனிகோடு கன்வர்டர் வேலை செய்யவில்லை சரி செய்யுங்கள் நிர்வாகத்தினரே..

சிவா.ஜி
28-06-2010, 01:48 PM
ஓ...உங்களுக்குமா....நான் எனக்கு மட்டும்தானென நினைத்தேன். ஆமாம் கொஞ்சம் சரிசெய்யுங்களேன் என்னைப்போல உள்ளவர்களுக்கு உதவியாக இருக்கும்.

அமரன்
28-06-2010, 10:16 PM
சரி செய்யப் பட்டு விட்டது அன்பர்களே!

சிவா.ஜி
29-06-2010, 01:04 PM
நன்றி அமரன். அங்கிருந்துதான் இந்தப் பதிவை தட்டச்சிப் பதிகிறேன்.

அமரன்
30-06-2010, 07:59 PM
இராஜேஸ்1 . மன்றத்தில் உலவும் போது, சில சமையம் மெதுவான இணையத்தின் வேகத்தின் பொருட்டு என்னுடைய சில பதிவுகள் இருமுறை பதிவாகி உள்ளன. இவ்வாறான பதிவை தடுக்க குறைந்த பட்ச வினாடி அளவு கோளோடு, அந்த நபரின் கடைசி பதிவையும் சரிபார்த்து பின்னர் பதிவை அனுமதிக்கலாமே!ஒருவரின் இரு இடுகைக!ளுக்கு இடையான கால வெளி 40 வினாடிகளாக்கப்பட்டது2 . தளத்தின் முகப்பு பக்கத்தில், அந்த லாகின் செய்த நபர் இது வரை எத்தனை பதிவுகள் செய்துள்ளார், கடசி 30 நாட்களில் எவ்வளவு செய்துள்ளார் என தெரிவித்தால், அவரவரும் முதல் 5 இடத்தில் பங்கு பெற மேலும் பதிவுகள் தொடரலாம் இல்லையா!

இதை அப்படியே இணைப்பதில் சிக்கல் நிலவியதால் ஒத்த வசதி இணைக்கப்பட்டது.

3 . நான் திரிகளை வெவ்வேறு டேப்களில் திறந்து படிக்கும் வழக்கம் உடையவன். சில சமையம் திறந்து வைத்து சிறுது நேரம் கழித்து படிக்க நேர்கிறது. அப்போது அந்த திரிக்கு பதில் பதிக்கையில் அதே போன்ற பதிவு ஏற்கனவே வேறொருவரால் பதியப் பட்டிருக்கிறது. இது போன்ற தருணங்களில் பதிவுக்கு முன், இந்த பக்கம் அப்டட் செய்ய பட்டிருக்கிறது என்று செய்தி வந்தால் அந்த அப்டட் செய்யப் பட்ட பதிவுகளையும் பார்த்து பதிவு செய்ய வசதியாய் இருக்குமே!

இதற்கு மன்ற மென்பொருள் ஒத்துழைக்கவில்லை4 . என்னுடைய அபிமானத்தின் படி, உறுப்பினர்கள் அனைவரும் அனைத்து பகுதிகளின் புதிய திரிகளையும் படிப்பதாக தோன்றவில்லை. முகப்பு பக்கத்தில் தோன்றும் திரிகளை மட்டும் படித்து அவற்றிற்கே பின்னூட்டம் இடுகின்றனர் . அவ்வாறு இல்லாமல், முகப்பு பக்கத்திலேயே ஒவ்வொரு பகுதியிலுள்ள அன்றன்று பதிக்க பட்டவையின் பட்டியலை தெரிய படுத்தினால் (ajax பயன்படுத்தி), அனைவரும் அந்த திரிகளையும் படிக்க கூடும் அல்லவா !!!

இதனை இணைத்து நடைமுறைப்படுத்திய போது மன்றத்தின் வேகம் மந்தமானதால் நிறுத்தி வைத்திருக்கிறோம்.

அமரன்
30-06-2010, 08:01 PM
க்விக் ரிப்ளை பகுதியிலேயே...இன்னும் சில வசதிகளை இணைத்தால் நன்றாக இருக்கும். ஒவ்வொருமுறையும் போஸ்ட் ரிப்ளை அழுத்தி, அது திறக்கக் காத்திருக்க வேண்டியதாய் இருக்கிறது.

இயன்றவரை சில வசதிகளை க்விக் ரிப்ளையில் இணைக்க முடியுமா?

ஆச்சே..!!

அமரன்
30-06-2010, 08:02 PM
draft வசதியை மீளக் கொண்டுவருவது அவசியமானதென நினைக்கின்றேன்.
தட்டச்சிவிட்டுப் பதிவிடால் வெளிச்செல்லும் நேரத்திலும், தட்டச்சிடுகையில் குறித்த நேரத்திற்கொருமுறையும் தானாகவே பதிவு செய்து கொள்ளும் வகையில் அவ்வசதியை இணைக்கச் சாத்தியப்பாடுகள் இருப்பின் மிகவும் உதவியாக இருக்கும்.

அப்படியே ஆகிட்டுது அக்னி,

அமரன்
30-06-2010, 08:03 PM
நண்பர் ராஜேஷ் கூறியது அனைத்துமே தேவையாக இருக்கிறது குறிப்பாக நான்காவது மேம்படுத்துதல்.

எனது சிறிய ஆலோசனை
1) நாம் முன்பு பதிந்த பதிப்பை அல்லது பதிப்பின் திரியை முதல் பக்கத்திலேயே அதன் லிங்கை பெறுவது. (அதிகமான பதிப்பு எனில் சாத்தியம் இல்லை)

இது வெறும் சின்ன புள்ளதனமான ஆலோசனை என்று எண்ணிவிடாதீர்கள் நாங்கள்ளாம் டெடர் பார்த்த பத்து வீடு பத்திக்கும்

இதை ஒத்த வசதி சேர்க்கப்பட்டது நெல்லைத்தமிழன்.

அமரன்
30-06-2010, 08:03 PM
வனிகம் என்ற பாரத்திலே, உப பாரமாக நுகர்வோர் விழிப்புணர்வு என்ற பாரம் தேவை. இது நமக்குள் விழிப்புணர்ச்சி அல்லது ஒரு பொருள்/தயாரிப்பு நிறுவனம் பற்றி அறிந்து கொள்ள உதவும்.

.

உருவாக்கப்பட்டது பிரவீன்

அமரன்
30-06-2010, 08:05 PM
மேலும், மன்ற கேலரியில் GIF file பதிவேற்றம் செய்த பின் அது அசைய மாட்டேன்கிறதே... என்னுடைய தவறான அணுகுமுறையா என தெரியவில்லை.. அந்த பிரச்னை இருந்தால் அதையும் சரி செய்யலாமே..

இதை ஆல்பம் பகுதியில் சேர்த்துள்ளோம். கேலரியில் இந்த வசதி இல்லை.

அமரன்
30-06-2010, 08:07 PM
ஏனைய ஆலோசனைகள் குறித்து விரைவில் முடிவு செய்கிறோம் அன்பர்களே.

அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி,

பா.ராஜேஷ்
30-06-2010, 08:08 PM
என்னுடைய கருத்துகளையும் பரீசீலனை கொண்டதில் மகிழ்ச்சி. நன்றி அமரன்.

ஸ்ரீதர்
06-07-2010, 08:21 AM
வழிநடத்துனர் அவர்களே !,,

வணக்கம் . Quick Reply வசதி மிக உபயோகமாக உள்ளது. இதை மேலும் உபயோகமுள்ளதாக ஆக்க , அதிலேயே நேரடியாக தமிழில் (அ) ஒருங்குறியில் தட்டச்ச வசதி இருந்தால் மிகவும் உபயோகமாக இருக்கும்.

தற்போது குகிள் தட்டச்சு மூலம் தட்டச்சு செய்து பின் அதை quick reply பகுதியில் ஓட்ட வேண்டியுள்ளது.

நேரடியாக அதிலேயே தமிழில் தட்டச்சு செய்ய வசதி இருந்தால் குகிள் தட்டச்சு வசதி மற்றும் தனியாக மென்பொருள் ஏதும் தேவையில்லை அல்லவா?

இதை செயல்படுத்த முடியுமா பாருங்களேன் !!!

நன்றி ...

ஆதி
06-07-2010, 09:45 AM

இந்த வசதி முன்பே உள்ளதே ஸ்ரீதர்,

User CP -----> Edit Options ------> Message Editor Interface

Basic Editor - A simple text Box என்று மாற்றிக் கொள்ளவும்..

ஸ்ரீதர்
06-07-2010, 10:11 AM
ஓ !! இதோ மாற்றி விட்டேன். நன்றி. மிக நல்ல வசதி..

Narathar
24-09-2010, 07:33 AM
மன்றத்தின் முகப்பு பக்கத்திலுள்ள "Latest Posts" சமீபத்திய பதிவுகள் பகுதி, நம் மன்றத்தின் உட்பக்கங்களிலும் இருந்தால் வசதியாக இருக்கும் என்று கருதுகின்றேன்.......

அமரன்
24-09-2010, 11:49 AM
மன்ற வேகம் மந்தமாகாது விட்டால் நடைமுறைப்படுத்துகிறோம் நாரா.

நன்றி.

Nivas.T
24-09-2010, 01:04 PM
நாரா.

:D:D:D:D:D

joy001
30-09-2010, 01:50 PM
நேரடியாக மறு மொழியிட வசதியாக தமிழ் மென்பொருள் நிறுவினால் நன்றாக இருக்கும்...

அக்னி
30-09-2010, 02:01 PM
அன்பரே...
இந்தச் சுட்டியின் வழியே சென்று பாருங்கள்...
புதிய தமிழ் ரைட்டர் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13959)

nhm செயலியை உங்கள் கணினியில் நிறுவிக் கொண்டால்,
நேரடியாகவே தமிழிற் தட்டச்சிடலாமே...

joy001
30-09-2010, 02:26 PM
அன்பரே...
இந்தச் சுட்டியின் வழியே சென்று பாருங்கள்...
புதிய தமிழ் ரைட்டர் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13959)

nhm செயலியை உங்கள் கணினியில் நிறுவிக் கொண்டால்,
நேரடியாகவே தமிழிற் தட்டச்சிடலாமே...

மிக்க நன்றி நண்பரே ..:aktion033::aktion033:

நாஞ்சில் த.க.ஜெய்
11-11-2010, 06:20 AM
இன்று பங்கு வணிகம் எனப்படும் ஊக வணிகம் பற்றிய தகவல்கள் என் போன்று பலருக்கு தெரிவதில்லை அது சமந்தப்பட்ட ஒரு பிரிவு துவங்கினால் நன்றாக இருக்கும் .

தாமரை
11-11-2010, 06:23 AM
வணிகம் மற்றும் பொருளாதாரப் பிரிவில் அவை உள்ளன.

http://www.tamilmantram.com/vb/forumdisplay.php?f=77

ஆன்டனி ஜானி
11-11-2010, 02:53 PM
இந்த மன்றத்தில் , உள்ள அனைத்து முந்தய பதிப்புக்கள் எல்லாத்தையும் 2 பேஜில போட்டு விட்டு இன்று வரக்கூடிய பதிப்புக்கள் அனைத்தும் முதல் பேஜில இருக்கிற போல வைத்தால் இன்னும் நல்லா இருக்கும்

நாஞ்சில் த.க.ஜெய்
23-01-2011, 08:46 PM
இணைய தொகையினை பிழைகளற்ற தமிழுக்கென்று ஒருதொகை ,பிழைகளுடன் கூடிய தமிழுக்கு ஒரு தொகை ,ஆங்கில கலப்புக்கு ஒரு தொகை என்று கொடுக்கலாம் .இவ்வாறு செய்வதன் மூலம் பிழைகளை களைய முடியும்...தற்போது என்ன முறையில் இணைய தொகை வழங்கபடுகிறது என்று கூறமுடியுமா நண்பர்களே ?...

அமரன்
23-01-2011, 09:38 PM
அன்பரே..!

தங்களுடைய நல்லாலோசனைக்கு மென்பொருள் ஒத்துழைத்தால் செயல்வடிவம் கொடுக்கிறோம்.

ஓவியா
10-03-2011, 01:01 PM
முன்பு நான் செப்பிய சில நல்ல விசயங்களை தயவுகூர்ந்து சிரமம் பாராமல் ஆல சிந்தித்து அமல் படித்திய மன்றத்திற்க்கு என் முத்தமிழ் வணக்கங்கள்.

ஒரு புது ஆலோசனை.

ஒருவரின் பதிவு நம்மை மிக கவர்த்திருக்கும் வண்ணம் அவரின் பதிவிற்க்கு நேரம் இல்லாமையால் பதில் எழுதாமல் நம்மில் சிலர் நகர்வது அனைவருக்கும் பொருந்தும்.

அது போன்ற விசயங்களுக்காக, ஒருவரின் பதிவு நம்மை கவரும் பொழுது அவருக்கு ஒரு + மார்க் கொடுக்க ஏதேனும் வசதி செய்தால் நன்மையாக இருக்கும்.

- மைனஸ் இல்லாமல் வெரும் + மட்டும் வைத்தால் நன்றாக இருக்கும். காரணம் கைத்தூக்கி விட மட்டும் வழி செய்வோம். பிழையை தனி மடலில் சுட்டிக்காட்டலாம்.

நன்றி.

ஆதவா
10-03-2011, 02:57 PM

நீங்கள் பேஸ்புக்கில் இருக்கும் லைக் பொத்தானைப் போன்று சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன்!!! சரியா?

-ஆய்வுக்கு எடுத்துக் கொள்கிறோம்!!

அமரன்
10-03-2011, 05:17 PM
முகநூலில் உள்ளது போன்ற விரும்பும் வசதி சோதனையில் உள்ளது. விரைவில் மன்றமெங்கும் பாவனைக்கு வரும் என்று நம்புவோம்.

ஓவியா
10-03-2011, 06:39 PM
நீங்கள் பேஸ்புக்கில் இருக்கும் லைக் பொத்தானைப் போன்று சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன்!!! சரியா?

-ஆய்வுக்கு எடுத்துக் கொள்கிறோம்!!

அதே அதே சபாபதே. :icon_b::icon_b:
முகநூலில் உள்ளது போன்ற விரும்பும் வசதி சோதனையில் உள்ளது. விரைவில் மன்றமெங்கும் பாவனைக்கு வரும் என்று நம்புவோம்.

நன்றி.

அமீனுதீன்
08-05-2012, 06:24 PM
அய்யா, பண்பட்டவர் அனுமதி உள்ளவர்கள் கூட இ-புத்தகம் தற்போது பதிவேற்றம் செய்ய இயலவில்லை, இக்குறை சரி செய்ய பட வேண்டும்.

Hega
27-07-2012, 01:59 AM
பதிவை தட்டச்சிட்டு விட்டு இரு வரியையோ முழு பதிவையுமோ வண்ணமிட்டு, போல்ட் செய்து, என முயலும் போது முன்னர் ஒரு முறை மார்க் செய்து விட்டு ஒரே தடவையில் போல்ட் செய்வதோ வண்ணமிடுவதோ,எழுத்தை பெரிதாக்குவதோ செய்திட இயலும்.

இப்போது ஒவ்வொரு முறையும் க்ளிக் செய்து மார்க் செய்ய வேண்டி இருக்கிறது. எனக்கு மட்டும்தானா இப்படியாகிறது என அறிந்திட ஆவல்..

அன்புரசிகன்
27-07-2012, 02:27 AM

என்னால் இயல்கிறதே ...

நீங்கள் தெரிவுசெய்துவிட்டு தடித்தஎழுத்துக்கு அழுத்தியதும் தெரிவு இல்லாமல் போனது போல் உங்களுக்கு தெரிந்தாலும் அது தெரிந்தபடியே தான் உள்ளது. நீங்கள் மீள தெரியாது அப்படியே சரிவு நிறம் அளவை மாற்றலாம். அது தானாக மாறிக்கொண்டிருக்கும்.

முயன்று கூறுங்கள்.

கலைவேந்தன்
27-07-2012, 05:41 AM
மன்றமேம்படுத்தல் என்னும் வகையில் எனது சிறிய எண்ணமொன்றை வைத்திட நினைக்கிறேன். இது எனது கருத்துதான். எவருக்கும் ஏற்பில்லை என்னும் போது விட்டுவிடலாம்.

என்ன என்றால் முன்பெல்லாம் இல்லாத வகையில் தற்சமயம் ஓரெழுத்து ஈரெழுத்து மூவெழுத்து என எண்ணிக்கை வரிசையில் சொற்கள் விளையாட்டு கூடுதலாகி வருகின்றன.

இதனால் ஏதேனும் பயனுண்டு என எண்ணுகிறீர்களா..?

ஒரு காலத்தில் சிந்திக்க கருத்துமாற்றம் பரிமாற்றங்கள் என ஆழ்ந்த சிந்தனை உடைய மன்றமாயிருந்தது. நான் வியந்திருக்கிறேன். தற்சமயம் அது பொழுது போக்கு கேளிக்கை கூடம் போல ஆகி விட்டதோ எனத் தோன்றுகிறது.

இவ்வெண்ணம் எனக்கு மட்டும் தானெனில் விட்டுவிடுங்கள். பெரும்பாலோர் கருத்தெனில் சிந்தியுங்கள்.

விளையாட்டுகளுக்கு எதிரி இல்லை நான். அதில் கொஞ்சம் சிந்திக்க வகையிருப்பின் நல்லது தானே..?

பள்ளிக்குழந்தைகள் இம்போசிஷன் எழுதுவது போல இது என்ன விளையாட்டு என்பது புரியவில்லை.

ஏனையோரும் இது குறித்து கருத்தினை வழங்குங்கள். நல்லதெனில் தொடரட்டும். அல்லதெனில் தவிர்க்கலாம்.

நன்றி.

மதி
27-07-2012, 06:02 AM
கலைவேந்தரே..

உங்கள் எண்ணம் எனக்கும் ஏற்பட்டதுண்டு. ஆயினும் விளையாட்டையும் மீறி வேறு சில காரணங்கள் இருக்கலாமில்லையா..? உதாரணத்திற்கு எல்லோருக்கும் தமிழில் தட்டச்ச வராது. எண்ணங்கள் நிறைய இருக்கும் ஆயினும் தயக்கங்கள் தடுக்கும். தமிழில் தட்டச்சிப்பழகவும் சபை கூச்சத்தைப்போக்கவும் இம்மாதிரியான திரிகள் பயன்படுமல்லவா. இத்திரிகள் கட்டாயம் வேண்டுமென்று சொல்லவில்லை. விருப்பமிருக்கும் சிலர் மட்டுமே அத்திரிகள் பக்கம் செல்கின்றனர். ஏனையோர் எதைத் தேடி வந்தனரோ அந்த திரிகள் பக்கம் செல்கின்றனர். என் தனிப்பட்ட கருத்திது

அமரன்
27-07-2012, 06:42 AM
முற்றாகத் தவிர்க்க இயலாது கலை.. முன்பு இருந்தது போல முதற்பக்கத்தில் தோன்றாமல் செய்யலாம்..

ராஜா
27-07-2012, 06:45 AM
கலைவேந்தன் கருத்தில் எனக்கும் மாறுபாடு உண்டு..

எல்லாவித சுவைகளையும் உறுப்பினர்களுக்கு தருவதே ஒரு சிறந்த தளத்தின் இலக்கணம்.. ஏனெனில் பல்வேறு விருப்பத்தெரிவுகள் கொண்டோர் வருகைதரும் இடம் இது..

மிகப் பேராளரான மதுரையண்ணாகூட தன்னை இளக்கம் செய்துகொள்ள விளையாட்டுத்திரிக்கு வந்துசெல்வதை மன்றம் அறியும்..

”பள்ளிக்குழந்தைகள் இம்போசிஷன் எழுதுவது போல இது என்ன விளையாட்டு என்பது புரியவில்லை” என்பதெல்லாம் சரியல்ல..

Hega
27-07-2012, 09:45 AM
முற்றாகத் தவிர்க்க இயலாது கலை.. முன்பு இருந்தது போல முதற்பக்கத்தில் தோன்றாமல் செய்யலாம்..

இதை குறித்து எழுதிட வேண்டுமென சில வாரங்கள் முன்னால் நினைத்திருந்தேன். ஏனோ தயக்கம் விட்டு விட்டேன்.
விளையாட்டு திரிகள் மன்ற முகப்பில் தெரிய ஆரம்பித்த பின் ஏனைய திரிகள் முகப்பிலிருந்து சீக்க்கிரமாய் மறைய ஆரம்பிக்கிறது. எந்த பதிவையும் நான் பெரும்பாலும் பதிவிடுவது இரவில் தானெனினும் காலை மன்றம் வந்து பார்த்தால் அந்த திரி யாரோ ஒருவரின் பார்வைக்காவது முன்னர் பட்டு இருக்கும். மன்ற முகப்பில் கடந்த 24 மணி நேரப்பதிவில் சிலமணி நேரங்களாவது நிலைத்தே பின்செல்லும்.

இபோதெல்லாம் அப்படி இல்லை. விளையாட்டு திரிகள் மேலே எழும்புவதால் பல பதிவுகள் சில நிமிடங்களில் பின் செல்ல பல நல்ல பதிவுகளை தேடிசென்றுதான் படிக்க வேண்டி இருக்கிறது. நேரம் கொடுக்கும் இம்சையை எல்லோரும் அறிவர்தானே.. பல பதிவுகள் பின்னூட்டம் இன்றியோ பார்வையில் படாமலோ போகாதிருக்க விளையாட்டு திரிகள் முன்னை போல் முகப்பில் வராது போனால் நல்லதே..

Hega
27-07-2012, 09:51 AM
என்னால் இயல்கிறதே ...

நீங்கள் தெரிவுசெய்துவிட்டு தடித்தஎழுத்துக்கு அழுத்தியதும் தெரிவு இல்லாமல் போனது போல் உங்களுக்கு தெரிந்தாலும் அது தெரிந்தபடியே தான் உள்ளது. நீங்கள் மீள தெரியாது அப்படியே சரிவு நிறம் அளவை மாற்றலாம். அது தானாக மாறிக்கொண்டிருக்கும்.

முயன்று கூறுங்கள்.

ம்ம்ம் முயன்று பார்க்கிறேன்.

இப்படித்தான் ஆகிறது. ஒரு முறை மார்க் செய்த பின் என்னால் தடித்த எழுத்துக்கு மட்டுமே மாற்ற முடிந்தது. மீண்டும் எழுத்தை பெரிதாக்கிவ்ட மீண்டும் மார்க் செய்து விட்டே அழுத்த வேண்டும். அல்லாது போனால் இப்படிதான் ஆகிறது அன்பு ரசிகன் சார்.

முயன்று பார்க்கிறேன் என நான் போல்ட் செய்திருப்பதைமேற்கோளிட்டு பாருங்கள். ஒரே நேரத்தில் கிளிக் செய்தாலும் ] [/SIZE] சேராம்ல் முன்னால் தனித்தே இருக்கிறது.