PDA

View Full Version : முகம் தெரியாதவனின் அறிமுகம்...



அலை...
31-10-2003, 06:38 AM
நான்..

இன்னமும் "நான்" ஏன் என்று விளங்கி கொள்ளாமல்,
அலைபாய்ந்து கொண்டிருப்பவன்...
ஒரு சில சமையம் சிறிய அலை என்று நினைத்திருப்பேன்..
பெரிதாய் வந்து ஆகாயத்தில் எறியும்...
ஒரு சில சமையம் பெரிய அலை என்று எதிர்பார்த்திருப்பேன்...
புஸ்வானமாகி விடும்...

"நான்" இருந்தாலும், இல்லாவிட்டாலும்...
அலை அலையாய் அடித்து கொண்டுதான் இருக்கும்...
எப்போதாவது ஒதுங்கி இளைப்பாறுவதும் உண்டு..
அப்படி ஒதுங்கியதுதான் இந்த தமிழ் தீவு..

புதியவன் தான்..ஆனால் உங்களை..புரிந்தவன்...
அலைபாய்ந்த அனுபவத்தை சொல்லுங்கள்...விடிய விடிய கேட்கிரேன்..
ஒரு நிபந்தனை. நானும் சொல்லுவேன்..கொட்டாவி விடக்கூடாது..
என் ஆவி போய்விடும்..

அன்புடன்

அலை...

பி.கு.
தமிழ் என் தாய் மொழி...பயின்ற மொழி அல்ல..
என் பேச்சு தமிழ், அழகு தமிழ்...எழுத்து தமிழ் - பழகு தமிழ்..பிழைகளுக்காக மன்றாடி மண்ணிப்பு கோருகிரேன்..

இளசு
31-10-2003, 07:22 AM
வருக வருக நண்பரே

தேடலின் ஆதங்கத்தைப் பதித்து
ஆரம்பித்த தமிழ்த்தங்கத்தை
தமிழ்மன்றம் சார்பில் முதல் ஆளாய் வரவேற்க
ஆலாய்ப் பறந்துவந்து என் அவசரப் பதிவு இது....

ஒரு நீண்ட உறவாடலுக்கு அச்சாரம் உங்கள் முதல் மடல்..
தமிழ்மன்றம் - நம் ஆவி இருக்கும்வரை அலைப்பேச்சு ஓயாத தமிழ்க்கடல்!!

chezhian
31-10-2003, 11:53 AM
நண்பர் அனில் அவர்களை வருக வருக என வரவேற்க்கிறேன்.

முத்து
31-10-2003, 04:59 PM
அனில் அவர்களே .. வருக .. வருக ...
தங்கள் வரவு நல்வரவாகுக ....

poo
31-10-2003, 05:59 PM
அன்பான அனிலுக்கு.. ஆதரவான உறவுகள் நிறைந்த மன்றம் சார்பாய் வாழ்த்தி வரவேற்ப்பதில் மகிழ்கிறேன்!!

நிலா
01-11-2003, 12:23 AM
உங்களை வாழ்த்தி வரவேற்கிறேன்!

suma
01-11-2003, 01:15 AM
சிறு அணில் தான் ராமருக்கு இலங்கைக்கு செல்ல பாதை அமைக்க உதவியது..
உங்க ஆர்வம் இங்கு மிகும் என எதிர்ப்பார்க்கிறேன்...
உங்களை வரவேற்பதில் மகிழ்கிறேன்.

Emperor
01-11-2003, 06:17 AM
உங்கள் வரவு நல்வரவாகட்டும் அனில் அவர்களே.

பாரதி
01-11-2003, 05:17 PM
"அலை"பாய்ந்திருக்கும் அனிலை வரவேற்பதில் உவகை கொள்கிறேன்.

Nanban
04-11-2003, 02:19 PM
மன்றம் வந்த நண்பருக்கு நல்வாழ்த்துகள்!

நல்ல பங்காற்றலுடன் சிறந்து விளங்க நல்வாழ்த்துகள்!!!

அன்புடன்........

அலை...
06-11-2003, 02:09 AM
நன்றி நண்பர்களே..

மீண்டும் அலையோடு போனதால்..சற்றே தாமதம்..
மீண்டு..வந்து விட்டேன்..
வாழ்த்திய அனைவருக்கும் நன்றி..

அலை...

சேரன்கயல்
06-11-2003, 02:56 AM
வாங்க அனில்...
அலையோடு அசைந்தாடிக்கிட்டே அப்பப்ப வந்து போங்க...
உங்களை அன்போடு வரவேற்கிறேன்...

இக்பால்
06-11-2003, 06:58 AM
'அலை...' அனிலுக்கு என் அன்பு கலந்த வணக்கங்கள்.

வரவேற்கின்றேன்.-அன்புடன் அண்ணா.

Narathar
07-11-2003, 06:27 AM
அலையடிக்குது
அலையடிக்குது
அனிலை சுத்தி
அலையடிக்குது

கொடி பறக்குது
கொடி பறக்குது
தமிழ் மன்ற
கொடி பறக்குது

அலை...
08-11-2003, 07:23 PM
அலையடிக்குது
அலையடிக்குது
அனிலை சுத்தி
அலையடிக்குது

கொடி பறக்குது
கொடி பறக்குது
தமிழ் மன்ற
கொடி பறக்குது

அஹா அருமை...அருமை...

நன்றி நன்றி நன்றி..

அன்புடன்

அலை...