PDA

View Full Version : தமிழாக்கம் தேவை



இராஜேஷ்
02-06-2010, 08:24 AM
Human Capital Management
India
Training
Training Catalogue
Faculties
Schools
Commercial & Projects
Services
Operations
Technology
Business Excellence
Wnd Farms Promotion & Sales
MADE
Off-Shore
Corporate Functions
Management
Leadership
Skills and Attitudes

இந்த சொர்களுக்கு தமிழாக்கம் தந்தால் மிகவும் உதவியாக இருக்கும்

கண்ணன்
02-06-2010, 01:51 PM
இராஜேஷ்,

என்னுடைய முயற்ச்சி இங்கே!!!
ஆனால், பெரும்பாலானவைகள், பயன்படுத்துகிற வாக்கியங்களுக்கு ஏற்ப வேறுபொருள் தரக்கூடும்.


Human Capital Management

மனிதவள மூலதன நிர்வாகம்
மனிதவள மேம்பாட்டு நிர்வாகம்


India

பாரதம்


Training

பயிர்ச்சி
பயிர்ச்சி பெறுதல்


Training Catalogue

பயிர்ச்சி வகுப்பு அட்டவணை
பயிர்ச்சிப் பட்டியல்


Faculties

ஆசிரியர் குழு
பயிற்றுவிக்கும் குழு


Schools

பள்ளிகள்
கல்விக்கூடங்கள்
பயிற்சிகூடங்கள்


Commercial & Projects

வர்த்தகம் மற்றும் திட்டங்கள்


Services

சேவைகள்


Operations

இயக்குதல்கள்
பணிகள்


Technology

தொழில்நுட்பம்


Business Excellence

மேம்பட்ட தொழில்
உன்னதமான தொழில்


Wind Farms Promotion & Sales

காற்றாலை முன்னேற்றம் மற்றும் விற்பனை


MADE

செய்யப்பட்டது


Off-Shore

கடல்கடந்து
அயல்நாட்டில்


Corporate Functions

நிறுவன செயல்பாடுகள்


Management

நிர்வாகம்


Leadership

தலைமை


Skills and Attitudes

திறமை மற்றும் மனோநிலை


- கண்ணன்

கலையரசி
02-06-2010, 02:04 PM
பயிற்சி (பயிர்ச்சி அல்ல)

nambi
02-06-2010, 02:07 PM
Human Capital Management
India
Training
Training Catalogue
Faculties
Schools
Commercial & Projects
Services
Operations
Technology
Business Excellence
Wnd Farms Promotion & Sales
MADE
Off-Shore
Corporate Functions
Management
Leadership
Skills and Attitudes

இந்த சொர்களுக்கு தமிழாக்கம் தந்தால் மிகவும் உதவியாக இருக்கும்

தோழர் கண்ணன் உருவாக்கியிருப்பார் என்று அறியாததால் நானும் பொருள் தேடி பட்டியலிட்டுள்ளேன். துறை தெரியாததால் சிலவற்றிற்கு அடைப்புக்குறிக்குள் கொடுத்திருக்கிறேன். அது எந்த துறை சார்ந்தது என்று தெரிந்தால் அதை ஒப்பீட்டு அதற்கு ஏற்ற மாதிரி குறிப்பிடலாம். ஆகையால் அதில் எது வேண்டுமோ? அதை எடுத்துக் கொள்ளலாம். தோழர் கண்ண்ணுக்கும் நன்றி!

Human Management Capital மனித மேலாண்மை மூலதனம்
(Human Capital Management மனித மூலதன மேலாண்மை)

India இந்தியா

Training பயிற்சி

Training Catalogue பயிற்சி அட்டவணை

Faculties தொழில் முறை ஆசிரியக் (அ) பேராசிரியக் குழுக்கள்
Schools பள்ளிகள்

Commercial & Projects வாணிகம் மற்றும் திட்டங்கள்
Services ஊழியம் (சேவைகள்)

Operations செயற்பாடுகள்

Technology தொழில்நுட்பம்

Business Excellence வணிக மேம்பாடு

Wnd (Wind) Farms Promotion & Sales காற்றாலை நிலங்களின் வளர்ச்சி மற்றும் விற்பனைகள்
MADE நிலைநாட்டப்பட்டது (அமைக்கப்பட்டது, உருவாக்கப்பட்டது)

Off-Shore கரைக்கு சற்று விலகி (தொலைகடல்)

Corporate Functions கூட்டாண்மை செயல்கள்

Management மேலாண்மை

Leadership தலைமைப் பொறுப்பு

Skills and Attitudes செயற்றிறம் மற்றும் மனப்பான்மை

இணையத்தில் சிலவற்றை இப்படித்தான் குறிப்பிட்டுள்ளார்கள்.

(ஆதாரங்கள் திரட்டப்பட்டது...பால் அகராதி, தமிழ் இணையப் பல்கலைக்கழகம், ஆக்ஸ்போர்டு அகராதி.....)
இதனால் எனக்கும் கூடுதல் பலன். சிலவற்றுக்கு பொருள் அறிய முடிந்தது. நன்றி!

கண்ணன்
02-06-2010, 04:03 PM
பயிற்சி (பயிர்ச்சி அல்ல)

நன்றி.

பாலகன்
02-06-2010, 06:04 PM
தமிழாக்கம் தந்த இருவருக்கும் நன்றிகள்.
பயனுள்ளவை

இராஜேஷ்
04-06-2010, 10:29 AM
மிகவும் நன்றி நன்பர்களே, தமிழ் மொழி தழைக்க நம்மால் முடிந்தது

அன்புரசிகன்
04-06-2010, 01:14 PM
Services ஊழியம் (சேவைகள்)
Off-Shore கரைக்கு சற்று விலகி (தொலைகடல்)


Services என்பதற்கு ஊழியம் சரியல்ல. ஊழியம் பணநோக்கம். சேவை என்பது சரியான பதம் என்று நினைக்கிறேன். ஊழியம் பெறுவது என்பது சம்பளம் பெறுவதற்கு ஒப்பானது...

Offshore என்பது கடல் கடந்துள்ள ஒரு தளம். அது தீவாகவும் இருக்கலாம். ஒரே சொல்லில் புரியவைக்க தெரியவில்லை...

nambi
06-06-2010, 07:12 PM
Services என்பதற்கு ஊழியம் சரியல்ல. ஊழியம் பணநோக்கம். சேவை என்பது சரியான பதம் என்று நினைக்கிறேன். ஊழியம் பெறுவது என்பது சம்பளம் பெறுவதற்கு ஒப்பானது...

Offshore என்பது கடல் கடந்துள்ள ஒரு தளம். அது தீவாகவும் இருக்கலாம். ஒரே சொல்லில் புரியவைக்க தெரியவில்லை...

"services"=......
எது பொருந்துகிறதோ அதை எடுத்துகொள்ளலாம்.

ஊழியம் காசுக்காக மட்டும் அல்ல அதுவும் சேவை தான்.

ஊழியம்= சேவை, தொண்டு......இறைப்பணிக்கு ஊழியம் என்றும் பெயர் சில சமயப்பணிகளில் இதை பயன்படுத்துவதை கண்டிருக்கலாம்.

தமிழ் இணையப்பல்கலைக்கழகம்...பணி, ஊழியம் என்று கொடுக்கப்பட்டுள்ளது. (நிர்வாஈகத்துறைக்கு இதை குறிப்பிட்டுள்ளார்கள ஏனையவற்றிற்கும் குறிப்பிட்டுள்ளார்கள்ர அங்கு சேவை என்று குறிப்பிடவில்லை...சரியான தமிழ் சொல்லாக இல்லாமால் இருக்கலாம்.)

சேவை இரண்டு விஷயங்களுக்கு (உணவு, பணி) பயன்புடுத்தப்படுகிறது. ஆகையால் ஊழியம் என்பதை தனித்து எடுத்துக்கொள்ளலாம். எது பொருந்துகிறதோ...(அரசு ஊழியர்....அரசு ஊழியம்) (பால் அகராதி) (சேவை=free or commercial இரண்டுக்கும் ஒன்று என்றே குறிப்பிடப்பட்டுள்ளது பொதுமக்களுக்காக இருக்கவேண்டும்)

மக்கள் சார்ந்த அரசு துறையில்= சேவையாகும், மக்கள் சாராத தனியார் துறையில் சேவைகள் என்று வராது

இன்னொன்றிற்கும் குறிப்பிடுவது உண்டு ''ராணுவம்''...

இப்படித் துறைக்கு ஏற்ற மாதிரி மாறும்.

"offshore"....

தொலைகடல் என்பது மீனவத்துறையில் குறிப்பிடுவது. தமிழ் பல்கலைக்கழக களஞ்சியத்தில் உள்ளது.

பால் அகராதியில் கரையிலிருந்து சற்று விலகிய, சற்று தொலைவுக்கு அப்பால்....

இடம் பொறுத்தது. ( உ.த...The ship was anchored off shore.... rocky, sandy shore (oxford))

அந்தந்த இடத்திற்கு ஏற்றமாதிரி பொருத்தி பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

kulandaivel
26-09-2011, 11:59 AM
wind mill.........காற்றாலை மின்சார உற்பத்தி பண்ணை
Management ...........ஆளுமை
அன்புடன்
குழந்தை வேல் மு

vseenu
26-09-2011, 03:50 PM
windmill க்கு நாங்கள் காற்றாலை என்றே மொழியாக்கம் செய்வோம்

வெங்கி
27-09-2011, 09:29 AM
காற்றாலை என்பதுதான் சரி நண்பரே...காற்றாலை என்றாலே மின் உற்பத்தி ஆலையைதான் குறிக்கும் ...

குணமதி
29-09-2011, 01:03 AM
offshore - புறக்கடற்கரை என்றும் கூறப்படுகின்றது.
(பார்க்க : தமிழ்ப் பல்கலைக்கழக அருங்கலைச்சொல் அகரமுதலி பக்கம் 691)

Vijisri
16-11-2011, 04:02 AM
Management என்பதற்கு மேலாண்மை சரியாகப் பொருந்தும்

dhilipramki
16-11-2011, 01:29 PM
Management என்ற வார்த்தையின் ஆங்கில பரிணாமங்கள்.
(while business)
நிர்வாகம்
முகாமை
மேலாண்மை
---------------
(while skill)
மேலாண்மைத்திறன்
கையாள்கை
---------------
(while security)
காவந்து


மன்னிக்கவும், ஆங்கிலத்தில் கூறினால், இவ்வார்த்தைகளின் அர்த்தம் சற்று எளிதே விளங்கும் அல்லவா