PDA

View Full Version : நிறப்பாகுபாடு...



simariba
02-06-2010, 01:33 AM
மலர்களையும் விட்டு
வைக்கவில்லை
நிறப்பாகுபாடு...

மனிதர்களிடமிருந்து
இன்னும் முழுமையாய்
விலகாமலே...

பூக்களிடம் தாவிவிட்டது...

உடைக்கேற்ற
வண்ணமென்ற பெயரில்...

கறுப்பு ரோஜா
பச்சை மல்லி
நீலச் சந்தனமுல்லை

எல்லாமே
சாத்தியம் இப்போது...

சில குடும்பங்கள்
வறுமையின்றி வாழ
உதவமுடியுமானால்...

நானும் அணிவேன்
நிறம் மாற்றிய பூக்களை
விருப்பமில்லாமலேயே...

பென்ஸ்
02-06-2010, 01:40 AM
நீங்க சாதி முல்லை கூட வைக்கலாம்....

நிறம் மாறினாலும் அதன் குணம் மாறாமல் இருந்தல் அழகுதானே...

மாற்றம் நல்லதே...

nambi
02-06-2010, 01:43 AM
//சில குடும்பங்கள்
வறுமையின்றி வாழ
உதவமுடியுமானால்...

நானும் அணிவேன்
நிறம் மாற்றிய பூக்களை
விருப்பமில்லாமலேயே... //

இது நெசவுத்தொழிலை குறிப்பிடுகிறதா? பகர்வுக்கு நன்றி!

simariba
02-06-2010, 01:53 AM
நன்றி பென்ஸ்!

நன்றி நம்பி !! இல்லை. 4/6/2010 அவள் விகடனில் வெளிவந்த கலரை மாத்துங்க காசு பாருங்க என்ற கட்டுரை தான் இந்த புலம்பலுக்கு காரணம்.
தாவரங்களின் மேல் அதீத ஈடுபாடும் அன்பும் நிறைந்த என் மனம் இந்த நிறமாற்றத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.

அமரன்
06-06-2010, 12:33 PM
இனி ரோஜா நிறம், மல்லிப் பூ நிறம், சந்தன நிறம் என்றெல்லாம் சொல்ல முடியாது போல உள்ளதே..

மற்றப்படி மணம், குணம் ஒன்றுதானா அந்தப் பூக்களுக்கு..

பாராட்டுகள் அபிராமி!

simariba
07-06-2010, 04:11 AM
நன்றி அமரன்!!

சிவா.ஜி
07-06-2010, 06:14 AM
முகமூடியணிந்த மனிதன்...அதை மலர்களுக்கும் மாட்டிவிட்டான்...
மாற்றங்களை ஏற்றுக்கொள்ளத்தானே வேண்டும்

பாராட்டுக்கள் அபி.

அக்னி
07-06-2010, 06:28 AM
அகராதியில்
பூக்களின் உண்மை நிறம் குறிக்கப்படுமோ...

இல்லையென்றால்,

இலக்கிய வர்ணனைகள்
எதிர்காலத்தில் நிறம் மாறிடுமோ...

ரோஜா நிறப்பெண் வேண்டாம், நாவற் பழ நிறத்திற் பாருங்கள் எனச் சொல்லுவார்களோ...
என்ன கொடுமை இது அபிராமி...

கருத்தோடமைந்த கவிதை...
இறுதிப்பகுதியில், இந்த நிறமாற்றத்தினால் வருமானம் பெறும் குடும்பங்களை எண்ணிப் பூக்கள் சூடியது, உயர்வெளிச்சம் (அதாங்க ஹைலைட்)....

பாராட்டு...

simariba
09-06-2010, 01:36 AM
முகமூடியணிந்த மனிதன்...அதை மலர்களுக்கும் மாட்டிவிட்டான்...
மாற்றங்களை ஏற்றுக்கொள்ளத்தானே வேண்டும்

பாராட்டுக்கள் அபி.

நன்றி சிவா. ஜி

simariba
09-06-2010, 01:37 AM
அகராதியில்
பூக்களின் உண்மை நிறம் குறிக்கப்படுமோ...

இல்லையென்றால்,

இலக்கிய வர்ணனைகள்
எதிர்காலத்தில் நிறம் மாறிடுமோ...

ரோஜா நிறப்பெண் வேண்டாம், நாவற் பழ நிறத்திற் பாருங்கள் எனச் சொல்லுவார்களோ...
என்ன கொடுமை இது அபிராமி...

கருத்தோடமைந்த கவிதை...
இறுதிப்பகுதியில், இந்த நிறமாற்றத்தினால் வருமானம் பெறும் குடும்பங்களை எண்ணிப் பூக்கள் சூடியது, உயர்வெளிச்சம் (அதாங்க ஹைலைட்)....

பாராட்டு...

நன்றி அக்னி! ஹைலைட்டுக்கு உங்கள் தமிழ்ச்சொல் அருமை அக்னி!

ஆதவா
16-06-2010, 01:09 PM
முதல் பத்தியே அடுத்த பத்தியை படிக்கவிடாமல் தடுக்கிறது. உலகில் நிறப்பாகுபாடு இல்லாமல் ஏதுமில்லை. அல்லது ஒற்றை நிறத்தோடு உலகு அமைந்திருக்குமேயானால் நீங்கள் கொஞ்சம் யோசித்துப் பாருங்களேன்.

ஆனால் கடைசியாக நீங்கள் முடித்தவிதம் ஒருமாதிரியாக இருக்கிறது. கொஞ்சம் சரிபாருங்களேன்.

பென்ஸ் அண்ணா... அருமையான பதில்!!

simariba
03-04-2011, 01:24 PM
நன்றி ஆதவா!