PDA

View Full Version : காதல் சுவாசம்



govindh
01-06-2010, 10:56 PM
மறதி என்பது இல்லை
காதலில் மட்டும் தான்....

மமதை என்பது இல்லை
காதலில் மட்டும் தான்....

மலர் இல்லாமல்
மணம் வீசும்....

மணம் இல்லாமல்
சுவாசம் சுகமாகும்....

காற்று இல்லாமல்
கற்பனைகள் படபடக்கும்

'நேற்று'... கூட
மறுபடி...மறுபடியும் வந்து போகும் ....

நிகழ்காலம்
நீ.....ண்.....டு....போவதும்....

வருங்காலம் வசியப்படுவதும்
காதலில் மட்டும் தான்....

மலர்க காதல்....!
வளர்க காதல்....!

காதலை நேசி....!
காதலை சுவாசி....!

பென்ஸ்
02-06-2010, 01:28 AM
காதல் காதலில் இருக்கையில் தனி சுகம் தான் அல்லவா...

ஆனால் பசி வருகையில் பத்தும் பறந்து போகுதே...!!:D:icon_b:

சிவா.ஜி
02-06-2010, 06:29 AM
காதலின் இலக்கணம் சொல்லும்...மன(ண)ம் வீசும் கவிதை. வாழ்த்துக்கள் கோவிந்த்.

govindh
02-06-2010, 09:12 AM
[QUOTE=பென்ஸ்;473944]காதல் காதலில் இருக்கையில் தனி சுகம் தான் அல்லவா...

ரசித்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி பென்ஸ் அவர்களே...!

govindh
02-06-2010, 09:34 AM
காதலின் இலக்கணம் சொல்லும்...மன(ண)ம் வீசும் கவிதை. வாழ்த்துக்கள் கோவிந்த்.

உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி சிவா.ஜி. அண்ணா.

இலக்கணம் என்று நீங்கள் சொன்னதால்....
கவி வந்த சூழலையும் ....உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

சுடர்விழி அவர்களின்...."வாழும் காதல்"...கவி படித்த போது....காதலுக்கு என்ன வரைவிலக்கணம்...சொல்லுங்கள்...என
என் எடிட்டர் (என் மனைவி தான்) கேட்டவுடன்....
'காத்தல்....காத்திருத்தல்....காக்க வைத்தல்...'என்றேன்.

பின்னர் இக் கவி எழுதிப் பதிப்பித்தேன்

கண்ணன்
02-06-2010, 01:24 PM
நன்று.


நிகழ்காலம்
நீ.....ண்.....டு....போவதும்....

புதிய சிந்தனை...வாழ்த்துக்கள்.
பொதுவாக, காதலியுடன் (அல்லது காதலனுடன்) இருக்கும்போது நேரம்போவது தெரியாது என்பார்கள்.

govindh
02-06-2010, 07:22 PM
நன்று.



புதிய சிந்தனை...வாழ்த்துக்கள்.
பொதுவாக, காதலியுடன் (அல்லது காதலனுடன்) இருக்கும்போது நேரம்போவது தெரியாது என்பார்கள்.

உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

கீதம்
02-06-2010, 10:40 PM
காதலை அக்குவேறு ஆணிவேறாக ஆராய்ந்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது. உங்கள் எடிட்டருக்கு இப்போது பரமதிருப்திதானே! வாழ்த்துகள், கோவிந்த்.

govindh
03-06-2010, 08:54 AM
காதலை அக்குவேறு ஆணிவேறாக ஆராய்ந்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது. உங்கள் எடிட்டருக்கு இப்போது பரமதிருப்திதானே! வாழ்த்துகள், கோவிந்த்.

மிக்க நன்றி...கீதம் அவர்களே.

(இப்போது திருப்தி தான்....எடிட்டர் அடுத்த கேள்வி கேட்டாச்சு....ஆராய்ந்து, விரைவில் பதிப்பிக்கிறேன்)

அக்னி
03-06-2010, 09:57 AM
மறதி என்பது இல்லை
காதலில் மட்டும் தான்....
ஏன் இல்லை...
என்னை மறந்து போக வைத்ததே
காதல்தானே...


மமதை என்பது இல்லை
காதலில் மட்டும் தான்....
ஏன் இல்லை...
நீ கிடைத்த மமதை தந்ததும்
காதல்தானே...

அழகான ஆராய்வு...

பாராட்டு...

govindh
03-06-2010, 10:12 PM
ஏன் இல்லை...
என்னை மறந்து போக வைத்ததே
காதல்தானே...


ஏன் இல்லை...
நீ கிடைத்த மமதை தந்ததும்
காதல்தானே...

அழகான ஆராய்வு...

பாராட்டு...

அழகான விளக்கத்திற்கும்....
அன்பான பாராட்டுகளுக்கும்
மிக்க நன்றி அக்னி அவர்களே....

gans5001
09-06-2010, 09:36 AM
'நேற்று'... கூட
மறுபடி...மறுபடியும் வந்து போகும் ....



"நேற்று மட்டுமே " என்றிருந்தால் மிக சரியாக இருக்கும் என்பது என் கருத்து.




நிகழ்காலம்
நீ.....ண்.....டு....போவதும்....

அருமையான வரியாள்கை

govindh
11-06-2010, 11:32 AM
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி...