PDA

View Full Version : கோயமுத்தூர் ஐக்யூ டெக் கணிப்பொறி டீலருடன் ஒரு பிரச்சினைதங்கவேல்
31-05-2010, 10:44 AM
கிட்டத்தட்ட 35000 ரூபாய்க்கு புதிய கணிப்பொறி ஒன்றினை ஒரு வருடத்திற்கு முன்பு வாங்கினேன். இன்வாய்ஸ் எல்லாம் கொடுத்தார்கள். எனது நண்பர் மூலம் வாங்கினேன். அவசியம் கணிணிப் பாகங்களின் பாக்ஸ்களை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னார். அதன் படியே செய்தேன்.

சரியாக ஒரு வருடம் முடிந்து, நான் வாங்கிய வயர்லெஸ் கீபோர்டு மற்றும் மவுஸ் வேலை செய்யவில்லை. டீலரைத் தொடர்பு கொண்டேன். அதற்கு என்ன சொன்னார் தெரியுமா? ஒரு வருடம் தான் வாரண்டி தர முடியும். ஆகையால் நீங்கள் புதிது வாங்கிக் கொள்ளுங்கள் என்றார். மவுஸ் கீபோர்டுக்கு மூன்று வருடம் வாரண்டி இருப்பதாக படித்த நினைவு. உடனே பெட்டியைத் தேடி எடுத்தால் படித்துப் பார்த்தால், மூன்று வருடம் என்று போட்டிருந்தது. மீண்டும் டீலரை அழைத்தேன். சார் மூன்று வருடம் வாரண்டி இருக்கிறதே என்று கேட்டேன். அதன்பிறகு கொண்டு வாருங்கள் என்று சொன்னார்.

2010, மார்ச் மாதம் 31ம் தேதி ஐக்யூ சிஸ்டம் என்ற கோவையிலிருக்கும் கணிணி விற்பனையாளரிடம் கொண்டு போய் கொடுத்த போது ஒரிஜினல் இன்வாய்ஸ் இருந்தால் தான் சர்வீசுக்கு எடுத்துக் கொள்வோம் என்ற அழிச்சாட்டியத்தை ஆரம்பித்தனர்.இமெயிலில் ஸ்கேன் செய்து அனுப்பி வைத்தேன். ஒரிஜினலை நேரில் கொண்டு வந்து காட்ட வேண்டுமென்று சொன்னார் டீலர். (என்ன ஒரு அயோக்கியத்தனம் பாருங்கள்)

கொடுத்து விட்டு வந்து பத்து நாட்களாகி விட்டது. மீண்டும் தொடர்பு கொண்டேன். டிரை செய்து கொண்டிருக்கிறோம் என்று ஆரம்பித்தார். உடனே லாஜிடெக் வெப் தளத்திற்கு சென்று லாஜிடெக் ஆதரசைடு சர்வீஸ் சென்டர் நம்பர் கொடுத்து இவ்விடத்திற்கு அனுப்பி சர்வீஸ் செய்து அனுப்பி வையுங்கள் என்று சொன்னேன். சரி என்று ஒத்துக் கொண்டார்கள்.

அடுத்த பதினைந்து நாட்கள் கழித்து போன் செய்தேன். நான் கொடுத்த கீபோர்டு மவுஸ் வருவதில்லை என்பதால் புது செட் தருகிறோம் என்று சொன்னார்கள். ஸ்டாக் இல்லை என்பதால் இன்னும் வரவில்லை என்றும் சொன்னார்கள். ஸ்டாக் வந்தவுடன் உடனே தருகிறோம் என்று சொன்னார்கள்.

இதோ இன்றைக்கு காலையில் போன் செய்தேன். நான் புதிய பையன். இன்றைக்குத்தான் வேலையில் சேர்ந்தேன் என்று கதை விட்டார் ஒருவர். இன்னும் அரை மணி நேரத்தில் கீபோர்டும் மவுசும் வரவில்லை என்றால் நாளைக் காலையில் கன்ஸ்யூமர் கோர்ட்டிலிருந்து நோட்டீஸ் அனுப்புவேன் என்று சொல்லி விட்டு எனது வக்கீல் நண்பரை அழைத்து விபரம் சொன்னேன். கவலைப்படாதீர்கள் தங்கம் உங்களுக்கு நிச்சயம் 10,000 ரூபாய் வாங்கித் தருகிறேன் என்று சொல்லி, டீடெயில்ஸை வாங்கிச் சென்றார்.

சரியாக ஒரு மணி நேரம் கழித்து சார், ஸ்டாக் வந்து விட்டது. வந்து வாங்கிச் செல்லுங்கள் என்று சொன்னார் டீலர்.

இதன் பிறகு நடந்த ஒரு கேனத்தனமான செயலால் தான் இந்தப் பதிவு எழுதவே தோன்றியது.

கீபோர்டு மவுஸை இணைத்தால் வேலை செய்யவில்லை. என்னவென்று பார்த்தால் அந்த லாஜிடெக் கீபோர்டு மவுசுடன் வந்த பேக்கில் இருந்த மூன்று பாட்டரிகளை காணவில்லை. உடனே போன் செய்து விபரம் கேட்டால் லாஜிடெக் சர்வீஸ் செண்டர் கொடுக்கும் போதே பேட்டரி இல்லாமல்தான் கொடுத்தார்கள் என்றார் டீலர் சவுந்தர் ராஜன்.

என்ன ஒரு சிறு பிள்ளைத்தனமான கேவலமான செயல் என்று பாருங்கள். மூன்று பாட்டரிகளும் சேர்த்து 60 ரூபாய் வரும். இது தான் ஒரு டீலரும், லாஜிடெக் நிறுவனமும் கன்ஸ்யூமருக்கு கொடுக்கும் மரியாதை.

வாங்கிய பணத்திற்கு சரியான பொருளைக் கொடுக்க வேண்டியது அக்கம்பெனியின் பொறுப்பு. விற்பனையாளருக்கு கஸ்டமருக்கு சேவை செய்ய வேண்டியது கடமை. ஆனால் மேற்படி இருவரும் எப்படியாவது தட்டிக் கழித்து விடவே முயற்சித்தனர். மீண்டும் 1600 ரூபாய் செலவு வைக்க வேண்டுமென்ற ஆவல் போலும். சின்னஞ் சிறிய பேட்டர் மாற்றியதற்கு கூட பணம் வாங்கிக் கொண்டு கஸ்டமருக்கு சேவை செய்கிறார்கள் ஐக்யூ டெக்கில்.

நமது உரிமையை அடைய எப்படி எல்லாம் போராட வேண்டியிருக்கிறது என்பதைப் பாருங்கள். இழப்பும், வேதனையும், செலவும் தான் நமக்கு மிச்சம்.

இந்திய அரசு கன்ஸ்யூமர் ரைட்ஸுக்காக கடுமையான சட்ட விதிகளை உருவாக்குதல் வேண்டும். காலத்தின் அவசியம் கூட.

தாமரை
31-05-2010, 11:03 AM
நுகர்வோர் பாதுகாப்பைப் பற்றி மக்களிடம் இருக்கும் அறியாமையை இவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். மக்கள் இதை அணுகுவதில்லை என்ற தைரியம் மிக அதிகமாக இருக்கு இவர்களிடம்

aren
31-05-2010, 11:39 AM
இது இன்று நேற்றல்ல, தொன்றுதொட்டு நடந்துவரும் திருட்டு. இது இந்தியாவில் மட்டுமில்லை, உலகம் முழுவதும் இருக்கிறது. மக்களுக்கு இதைப் பற்றி அதிகம் தெரியாததே காரணம். அதை விற்பனையாளர்கள் நன்றாகவே உபயோகித்துக்கொள்கிறார்கள்.

பாலகன்
31-05-2010, 12:06 PM
வாரன்ட்டி கேரன்ட்டி என இரு பிரிவுகள் இதில் உள்ளது நண்பரே!

வாரன்ட்டி என்றால் வாங்கிய பொருள் பழுதடைந்தால் அதை சரிசெய்து தரும்வரை தான் அதன் உத்திரவாதம்... ஒருவேளை அது வேலை செய்யவில்லை என்று உறுதியான பட்சத்தில் தான் வேறு புதிய பொருள் வழங்கப்படும் என்று நான் அறிந்தது.

நான் ஒருமுறை துபாயில் இருந்தபோது இப்படிதான்... வாரன்ட்டி கார்டுடன் ஒரு வாட்சை வாங்கினேன்... அதை விற்ற கடைகாரர் என்னிடம் அந்த கம்பெனியின் அங்கரிக்கப்பட்ட சர்வீஸ் டீலரை அனுகுமாறு ஆலோசனை கூறினார். நான் வாரன்ட்டியை காட்டி கேட்டேன், உடனே வாட்சை பெற்றுகொன்டு ஒரு ரசீது தந்தார் ஒருமாதம் ஆகும் என்றார்... பிறகு இன்னும் வரவில்லை என்றார்..

இப்படியே இழுத்தடித்து பிறகு வேறு ஒரு வாட்சை தந்தார்.. இது எல்லா நாடுகளிலும் நிகழும் கதை தான்.

பகிர்வுக்கு நன்றி

சிவா.ஜி
31-05-2010, 12:17 PM
மகாபிரபு சொல்ற மாதிரி...இந்த வாரண்டி என்றாலே தொல்லைதான். நிறைய அலையவிட்டு...வெறுத்துப்போய் விட்டுவிட வைப்பார்கள்.

கியாரன்டியும்...ஒரு வருடம் கொடுப்பார்கள்...ஆனால் சொல்லி வைத்ததைப்போல...ஒரு வருடம் முடிந்தபிறகுதான் அது மண்டையைப் போடும்...

மக்களுக்கு சரியான விழிப்புணர்வு இல்லாததை...இவர்கள் சரியாகப் பயண்படுத்திக்கொள்கிறார்கள்.

அக்னி
31-05-2010, 01:26 PM
வாரன்ட்டி கேரன்ட்டி என இரு பிரிவுகள் இதில் உள்ளது நண்பரே!
இதைக்கொஞ்சம் விரிவாகச் சொல்லமுடியுமா மகாபிரபு...

*****
அந்நியன் பார்ட் 2 வுக்குத் தங்கவேல்கிட்ட நிறைய அனுபவம் இருக்கும் போலிருக்கே...

பாரதி
31-05-2010, 02:27 PM
“விடா முயற்சிக்கு ஒரு தங்கவேல்” என்று கூறலாம் போலிருக்கிறதே! மக்களில் பெரும்பாலோனோர் உங்களைப் போல முயற்சியைக் கைக்கொண்டால் விற்பனையாளர்களின் மனோபாவம் மாற வாய்ப்பிருக்கிறது.

எனக்கும் இது போன்று ஓரிரு நிகழ்வுகள் நடந்தன. நம்முடைய பொறுமையின் எல்லையை சோதிக்கும் விதமாகவே அவை அமைந்திருந்தன. எப்போதாவது மன்றத்தில் நானும் அதை பகிர்ந்து கொள்வேன் என நினைக்கிறேன்.

பா.ராஜேஷ்
31-05-2010, 04:54 PM
உண்மைதாங்க... எல்லா நாட்டிலும் இப்படித்தான் இருக்குறாங்க. இங்க கூட எனது நண்பர் ஒருவர் டிவிடி கொடுத்து அதை சரி செய்து கொடுக்க முடியாமல் அவருக்கு வேறொரு டிவிடி கொடுத்துள்ளனர்..

nambi
31-05-2010, 06:51 PM
மிகவும் தேவையான பகிர்வு. அனுபவங்களை பகிர்ந்தமைக்கு நன்றி!
வாரன்ட்டி கேரன்ட்டி என இரு பிரிவுகள் இதில் உள்ளது நண்பரே!இதைக்கொஞ்சம் விரிவாகச் சொல்லமுடியுமா மகாபிரபு...

*****
அந்நியன் பார்ட் 2 வுக்குத் தங்கவேல்கிட்ட நிறைய அனுபவம் இருக்கும் போலிருக்கே...

1. வாரன்ட்டி.....பொருள் செயல்பாடு குறித்து வணிகர் தரும் உறுதிமொழி.....கூடுதலாக வரும் உத்தரவாதம் அதாவது கியாரண்டியோடு வருவது. இதனால் பொருள் பழுதடைந்தால் அதை சீர் செய்வதற்கு காசு வாங்குவதில்லை ஆனால் பழுதடைந்த உதிரி பாகங்களை மாற்றும் பொழுது அந்த உதிரி பாகங்களுக்குரிய விலை வசூலிக்கப்படும். (உடைந்து விட்டால் புதியது தான் வாங்க வேண்டும்.)

2. கியாரண்டி......நிச்சயிக்கப்பட்ட உத்தரவாதம்...இது தான் முக்கியம் பொருள் குறிப்பிட்ட காலம்வரை அதன் செயல்பாட்டு குறை அல்லது பழுதடைந்தால் முற்றிலும் மாற்றி புதிய ஒன்றைக்கொடுக்க வேண்டும். அல்லது முழுவதும் இலவசமாக சீர் செய்து தரவேண்டும். ஆனால் பொருள் உடைந்திருக்ககூடாது. (no physical damage). (சில பேர் முந்திக்கொண்டு அதை சீர் செய்கிறேன் என்ற பெயரில் நோண்டி உடைத்து விடுவார்கள். அப்பொழுது மாற்றமுடியாது. (அதற்காக வழக்கு தொடுத்தாலும் முழுப்பலன் கிடைக்காது) இப்படி அந்த குறிப்பிட்ட காலவரைக்குள் மாற்றிப் பெறுவதற்காக எந்த கட்டணமும் வசூலிக்க கூடாது.

சில பொருள்களுக்கு வராண்டி மட்டும் கொடுக்கப்படும். சிலபொருட்களுக்கு கியாரண்டியோடு வாரண்டியும் கொடுக்கப்படும்.

சில பொருள்களுக்கு வெறும் கியாரண்டி மட்டும் கொடுக்கப்படும். அந்த காலவரைக்கப்புறம் பொருளை அந்த தொழில் நுடபம் தெரிந்தவரிடம் கொடுத்து நாம் தான் பழுது பார்த்துக் கொள்ளவேண்டும்.

கியாரண்டியோடு....நீட்டிக்கப்பட்ட ஒன்றாக கொடுக்கப்படுவது வாரண்டி. ஒரளவுக்கு புரிகிறதா?

இன்னும் கூடுதலாக கியாரண்டி என்றால் நிச்சயம்....வாரண்டி அந்தளவுக்கு நிச்சயமல்ல....

(உதாரணத்திற்கு.......ஆயுள் காப்பீட்டு பாலிசியில் இது மாதிரி உண்டு கியாரண்டிட் போனஸ் என்று உண்டு. அது நிச்சயமாக இதே போனஸ் தான் கடைசியிலும், முதிர்விலும் கொடுக்கப்படும். இதற்கு பெயர் கியாரண்டி.........(வாரண்டி இங்கு வராது....இதில் சேவை மட்டுமே வருகிறது. பொருள் வரவில்லை.) காப்பீட்டு நிறுவனங்கள் நடத்தும் அனைவராலும் கியாரண்டிட் போனஸ் மாதிரி நிச்சயமாக பெரும்பாலோரால் தர முடியாது. ஆகையால் தீவிரமாக பரிசீலிக்க வேண்டும்)

இதையெல்லாம் பார்த்து தான் நூகர்வோர் மன்றத்தில் வழக்குத் தொடுக்க வேண்டும். கூடியமட்டிலும் தொலைபேசி உரையாடலை தவிர்ப்பது நலம். அதை ஆதாரமாக எடுத்துச் செல்ல முடியாது. மின்னஞ்சலின் மூலமே பதில் பெருங்கள் அது தான் ஆதாரம். ஆனால் நீங்கள் அனுப்பும் மின்னஞ்சலுக்கு வணிகர் அல்லது அதைச் சார்ந்த தயாரிப்பு நிறுவனமோ அவ்வளவு சீக்கிரத்தில் பதில் தராது. இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம். எல்லோருமே தப்பிக்கத்தான் பார்ப்பார்கள் என்று. அவர் பதில் தராவிட்டாலும் நாம் அனுப்பிய மின்னஞ்சலை ஆதாரமாக காட்டலாம்.


நீங்கள் எடுக்கப்போகும் நடவடிக்கைகளையும் (அவர்களுக்கு தரும் முன்தகவலாக) முழுவதும் வெளியிடாதீர்கள். (தெரிவிக்கமல் இருப்பது நலம்). சமயத்தில் இது மிரட்டலாக கூட அந்த நிறுவனங்களால் முன் வைக்கப்படும். ஏனென்றால் நீங்கள் அந்த நிறுவனத்தோடு தொலைபேசியில் உரையாடுகையில் அது பதிவு செய்யப்படுகிறது என்ற அறிவிப்புத் தகவலோடு பதிவு செய்யப்படும். இது நமக்குத்தரும் முன்னெச்சரிக்கையும் கூட நாம் பாதிக்கப்பட்டதினால் உணர்ச்சி வசப்பட்டு வார்த்தைகளை வெளிப்படுத்தி விடாமல் இருக்க நம்மை கட்டுப்படுத்த தரும் வாய்ப்பு என்றும் எடுத்து கொள்ளலாம்.

கியாரண்டி, வாரண்டி விதிகள் நுகர்வோருக்காக தயாரிப்பு நிறுவனங்களால் போடப்படும் ஒப்பந்தங்களாக கருதவேண்டும். இந்த ஒப்பந்தங்களில் உங்களுக்கு உடன்பாடு இல்லையென்றால் அந்த பொருளை வாங்க வேண்டியதில்லை. இதை காட்டித்தான் நுகர்வோர் மன்றத்தில் வழக்கு தொடுக்கமுடியும். (பொருள்களின் தன்மைக்கேற்ப மாறுபடும்)

மேற்கூறியவைகளை அனுபவத்தில் கூறியவைகளாக எடுத்துக்கொள்ளலாம்.

நன்றி!

பாலகன்
31-05-2010, 07:13 PM
நம்பிக்கு பாராட்டுகள். ரெம்ப தெளிவா சொல்லிட்டீங்க

nambi
31-05-2010, 08:01 PM
பாராட்டுக்கு நன்றி தோழரே!

இது பொதுவாக......

கியாரண்டி வாரண்டிகளில் கொடுக்கப்பட்ட வாசகங்களையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படல் வேண்டும்.

ஒரு பொருள் என்றால் அதனுடன் இருக்கும் பல பாகங்களுக்கும் கியாரண்டி கொடுக்க மாட்டார்கள். அதில் உள்ள ஒரு சில பாகங்களுக்கு மட்டுமே கியாரண்டி மற்றும் வாரண்டி கொடுப்பார்கள். ஆனால் அதை கவனத்தில் எடுத்துக்கொள்ள வாய்ப்பு அளிக்காத நிலைகளில் விற்பனை பிரதிநிதிகளால் பொருள்களை நுகர்வோர் தலையில் கட்டி விடும் சூழலுக்கு ஆளாக்கப்பட்டு விடுவோம். ஆனால் உண்மையில் அந்த ஒப்பந்தத்தில் (கியாரண்டி கார்டு) அதில் எல்லாம் தெளிவாக பதியப்பட்டிருக்கும். இதெதற்கு.... மட்டும் தான் கியாரண்டி இதெதற்கு... கிடையாது. பொருள்களை வாங்கும் அவசரத்தில் இதை நாமும் கவனிப்பது கிடையாது.

பொருள்களின் விலை, அது பயன்படும் தன்மைகளை கவனத்தில் கொண்டு இதையெல்லாம் ஆரம்பத்திலேயே ஆராய வேண்டிய கட்டாயமும் உள்ளது.

Mano.G.
01-06-2010, 03:54 AM
கியாரண்டி வாரண்டி, அதிலும் மெனுஃபெக்சரர் வாரண்டி (உற்பத்தியாளர் உத்ரவாதமும்), சொப் கியாரண்டி (விற்பனையாரளர் உத்ரவாதமும்) என இரண்டு வகையும் உண்டு, அடுத்து மெனுஃபெக்சரர் டிஃபெக்ட் என்றும் என்ட்யூசர் மிஸ் ஹெண்டலிங் என்றும் வகைபிரிக்க பட்ட பழுதுகளும் உள்ளது. இதை எல்லாம் கடந்து சண்டை போட்டு, நாம் போட்ட பணத்துக்கு வாங்கிய பொருள் சரியில்லை என்றால், அதற்காக செலவழிக்கும் நேரம், தொலைபேசி அழைப்புக்களினால் ஏற்படும் செலவு, போக்குவரத்து அசௌகரியம் இதை எல்லாம் எண்ணி பார்த்து போனா போவுது புதுசா வாங்கிடுவோம். இதானே நடக்குது. மனோ.ஜி

தங்கவேல்
01-06-2010, 08:15 AM
இதைக்கொஞ்சம் விரிவாகச் சொல்லமுடியுமா மகாபிரபு...

*****
அந்நியன் பார்ட் 2 வுக்குத் தங்கவேல்கிட்ட நிறைய அனுபவம் இருக்கும் போலிருக்கே...

ஏகப்பட்ட அனுபவங்கள் இருக்கின்றன. ரிலையன்ஸ் கூட நடந்த சம்பவம் தான் ஆரம்பம். மும்பையிலிருந்து ஒரு பெண்ணை அனுப்பி வைத்து சமரசம் பேசினார்கள். அதன் பிறகு ஏதாவது பிரச்சினை என்றால் சரியானபடி முயற்சிப்பேன்.

குணமதி
01-06-2010, 09:20 AM
வாரன்ட்டி கேரன்ட்டி என இரு பிரிவுகள் இதில் உள்ளது நண்பரே!

வாரன்ட்டி என்றால் வாங்கிய பொருள் பழுதடைந்தால் அதை சரிசெய்து தரும்வரை தான் அதன் உத்திரவாதம்... ஒருவேளை அது வேலை செய்யவில்லை என்று உறுதியான பட்சத்தில் தான் வேறு புதிய பொருள் வழங்கப்படும் என்று நான் அறிந்தது.

நான் ஒருமுறை துபாயில் இருந்தபோது இப்படிதான்... வாரன்ட்டி கார்டுடன் ஒரு வாட்சை வாங்கினேன்... அதை விற்ற கடைகாரர் என்னிடம் அந்த கம்பெனியின் அங்கரிக்கப்பட்ட சர்வீஸ் டீலரை அனுகுமாறு ஆலோசனை கூறினார். நான் வாரன்ட்டியை காட்டி கேட்டேன், உடனே வாட்சை பெற்றுகொன்டு ஒரு ரசீது தந்தார் ஒருமாதம் ஆகும் என்றார்... பிறகு இன்னும் வரவில்லை என்றார்..

இப்படியே இழுத்தடித்து பிறகு வேறு ஒரு வாட்சை தந்தார்.. இது எல்லா நாடுகளிலும் நிகழும் கதை தான்.

பகிர்வுக்கு நன்றி

சவுதியில் நிலை வேறு.

'வாரன்டி' காலத்திற்குள் பழுது நேர்ந்து, அதைச் சரிசெய்து தராவிட்டால் அங்குக் கடை நடத்தவே முடியாது.
சில ஆண்டுகளுக்கு முன் நடந்ததைச் சொல்கிறேன்.
என் நண்பர் ஒரு தொலைக்காட்சிப் பெட்டி வாங்கினார். வாங்கிய சில நாட்களில், பயன்படுத்திவிட்டு நிறுத்தும் (சுவிட்ச் ஆப்) போது நடுவில் வெள்ளை ஒளி நிலையாக நிற்கும்.
இதைக் குறித்துக் கடைக்காரரிடம் கேட்டபோது சரியான பொறுப்பான விடை கிடைக்கவில்லை.
நண்பர், அவர் அலுவலகத்தில் இருந்த சவுதிக்காரரான அன்பர் ஒருவரின் உதவியோடு அரபியிலும் ஆங்கிலத்திலும் மடல் எழுதி உரிய அதிகாரியிடம் சேர்ப்பித்தார்.
இரண்டாம் நாளே அந்தக் கடைக்காரர் நண்பரைத் தொலைபேசியில் அழைத்து உடனே வந்து புதிய தொலைக்காட்சிப் பெட்டியை வாங்கிச் செல்ல வற்புறுத்தலாக அழைத்தது நன்றாக நினைவில் இருக்கிறது.

சிவா.ஜி
01-06-2010, 03:10 PM
வாரண்டி மற்றும் கியாரண்டியைப் பற்றி விளக்கமாய் சொன்னதற்கு மிக்க நன்றி நம்பி.

இதில் சில பொருட்களுக்கு நீட்டிக்கப்பட்ட வாரண்டியைப் பணம் கொடுத்து வாங்கிக்கொள்லலாம். பழுது பெரிதாய் இருந்தால்...அதைவிடக் குறைந்த தொகையாக அந்த நீட்டிப்புக்குக் கொடுக்கவேண்டியிருந்தால்...அதனை வாங்குவதே நல்லது.

விகடன்
21-06-2010, 07:27 AM
வியாபாரம் என்றால், ஏமாளிகளிடமிருந்து பணத்தைப் பிடுங்குவது என்றொரு கருத்தும் வைத்துப் பார்க்கலாம் போலிருக்கிறது. நமக்கும் விடயம் தெரியும் என்று காட்டினால்த்தான் பலர் தப்புத்தண்டா செய்ய முனைவதை யோசிக்கின்றனர்.

உங்களைப்போல் ஓர் சிலர் இருப்பதால்த்தான் இந்தளவிலாவது நடக்கிறது. இல்லாது போனால் இன்னும் எவ்வளவு கீழ்த்தரமான சேவையை வழங்குவார்களோ?

வெற்றி
25-06-2010, 10:47 AM
நான் பொதுவாகவே வாரண்டி & கேரண்ட்டி என்றால் காத தூரம் ஓடுவேன்,,
அவ்வகை சடங்கு, சாஸ்திர சம்பிரதாயங்களில் நம்பிக்கை இல்லை.. ( விற்பனர்கள் 1 வருடம் கேரண்டி என கொட்டை எழுத்தில் போட்டால் நிச்சயம் 400 வது நாளில் பொருள் டமார் தான் :) )
மலிவான பொருள் தான் என் சாய்ஸ் . இதைச்சொல்ல நான் கூச்சப்படுவதில்லை.. எனெனில் வெட்டி பந்தாவை விட என் காசு எனக்கு பெருசு...
அசெம்பிள் கம்யூட்டர் . இந்திய/சைனா மெபைல்கள், ஏன் வீட்டுக்கான யூபிஎஸ் ஆக இருந்தால் கூட இன்வேட்டர் செகண்ட், மலிவான பேட்டரி என தான் போடுவேன்..
கூட்டிக்கழித்து பார்த்தால் எனக்கு மன நிம்மதி மிச்சம்... நான் சொன்னது தப்பா ??

தங்கவேல்
03-07-2010, 07:05 AM
மொக்கச்சாமி நீங்கள் சொல்வது ஒரு வகையில் சரியானது தான்.

nambi
03-07-2010, 07:38 AM
ஆமாம்...வணிகக்குறியுள்ள (பிராண்டட்) பொருள்கள் அனைத்துமே ஒரே நிறுவனத்தில் தயரிக்கப்படுபவைகள் அல்ல....எல்லா பொருட்களுக்கும் அப்படித்தான்...அதன் உதிரிபாகங்கள் பல துணை, சிறு நிறுவனங்கள் தயாரிப்பவைகள் தான்....அவைகள் எல்லா வாங்கப்பட்டு வணிகக்குறியுள்ள நிறுவனம் ஒன்றிணைத்து தருகிறது...பிசிபி போர்டே பல நிறுவனங்கள் தயரித்த ஐசி, ரெசிஸ்ட்டர் என....பல துணைநிறுவனங்கள் தயாரித்தவைகள் தான்...இது அனைத்துமே வணிகக்குறியுள்ள நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டவைகள் அல்ல... வணிக முத்திரைக்காக (பிராண்டட் அயிட்டம்) மட்டுமே அந்தளவுக்கு பணம் வாங்குகின்றன...வணிகக்குறியுள்ள நிறுவனத்திற்கு இருமடங்கு லாபம்...இவற்றை ஒப்பிட்டு பார்க்கும்பொழுது பொருளின் அசல் விலை மற்றும் அடக்க விலை எங்கேயோ இருக்கும்...

தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் (சிறிதளவு தெரிந்தாலும் போதும்) பெரும்பாலும் இம்மாதிரி வணிகக்குறியுள்ள பொருள்களை அதிகளவு செலவு செய்து வாங்குவதில்லை.....

இது எல்லா பொருட்களுக்கும் பொருந்தும்....இருசக்கர வாகனம்...என்று எல்லாமே துணை நிறுவனங்கள் தயாரிக்கும் உதிரி பாகங்களை கொண்டுதான் முழுப்பொருளாக உருவாக்கித்தருகின்றன. அந்த முழுப்பொருள் உற்பத்தியில் வணிகக்குறி நிறுவனத்தின் பங்கு வெகு குறைவு தான். தொழில் நுட்பம் தெரிந்தவர்கள் (பொறியாளர்கள்) அவர்களுக்காக சொந்தமாக கணிணி உருவாக்கும் பொழுது மிகக்குறைவான செலவில் தங்களுக்குத் தேவையான வசதிகளுடன் கணிணிகளை உருவாக்கி கொள்வார்கள். அப்படி உருவாக்கப்பட்டவைகள் பெரும்பாலும் எந்த பிரச்சினையும் உண்டாக்குவதில்லை. தொழில்நுட்பம் பற்றி (மெக்கானிக்) அவ்வளவாகத் தெரியாதவர்கள் இந்த வாரண்டிகளை நம்பித்தான் வாங்கவேண்டியதாயிருக்கிறது.

அக்னி
14-02-2012, 01:34 PM
நம்பிக்கும், தங்கவேலுக்கும், ராம்குமாருக்கும் (மாலை வணக்கம் போடாட்டி இந்தப்பதிவு மேலெழுந்திருக்காதே... ;)) நன்றி...

மலிவு விலையான பொருட்கள் என்று வருகையில், அதனைக் கணக்கிற்கொள்வதில்லை.
பற்றுச்சீட்டைப் பத்திரமாக வைத்திருக்கும் பழக்கம் என்னிடமிருந்தும்கூட, அதனைப் பயன்படுத்தி உரிமையைப் பெற்றுக்கொள்வதில்லை. அதாவது விலை குறைவான பொருட்களுக்கு... இந்தக்க்காசுக்காக போய் நிற்கவேண்டுமா என்ற அலட்சியம்தான்...

அண்மையில் 10யூரோ பெறுமதியான ஒரு பொருள் பழுதுபட்டுவிட, எறிந்துவிடப்போன நான், பின்னர் மனதை மாற்றிப் பற்றுச்சீட்டோடும் பழுதடைந்த பொருளோடும், குறித்த விற்பனை நிலையத்துக்குச் செல்ல, திருத்த முடியாத நிலையிலிருந்ததால் உடனடியாகவே அதனை மாற்றித் தந்தார்கள். ஏறத்தாழ ஒரு வருடம் பாவித்திருந்தேன். அடுத்த வருடம் அடுத்ததும் பழுதடைந்தால் நன்றாயிருக்குமே என்ற எண்ணத்துடன் திரும்பி வந்திருந்தேன்... :cool:

தங்கவேல்
01-03-2012, 04:01 AM
அடியேனின் மனையாள் இது போன்ற பில்களுக்கு என்று தனியான ஃபைல் ஒன்றும், சின்னச் சின்ன பில்களுக்கு தனியான பாக்ஸ் ஒன்றினையும் வைத்திருக்கிறார். பத்து வருடங்களுக்கு முன்பு வாங்கிய ஃப்ரிட்ஜின் பில்லைக்கூட வைத்திருக்கிறார். மிகச் சமீபத்தில் புது ஃப்ரிட்ஜ் வாங்கும் போது கிட்டத்தட்ட 6000 ரூபாய் கம்மியாய் (பிரபல கடைகளில் விலைகள்) முன்பு வாங்கிய கடையிலே வாங்கினோம். அவர்களின் பழைய கஸ்டமர் என்பதற்காக 500 ரூபாய் ஸ்பெஷல் தள்ளுபடி வேறு கொடுத்தார்கள்.